தீண்டல் 31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இன்று .............................

காலையில் விடிந்ததும் வருணுக்கு முன் உறக்கத்தில் இருந்து விழித்த நித்யா தன் கணவன் உறங்குவதை பார்த்து புன் முறுவல் பூத்தாலும் அவளால் எதுவும் சரியாக யோசிக்க முடியவில்லை.தன் வாழ்கையில் மட்டும் ஏன் இவ்வளவு twist and turns என்று அவள் யோசிக்க யோசிக்க அவளுக்கு காலையிலேயே தலை வலிக்க ஆரம்பித்தது.இவள் எழுந்து குளித்து முடித்துவிட்டு தூங்கும் வருணை எழுப்பாமல் மெதுவாக கதவை திறந்து வெளியில் செல்ல கிட்சனில் பர்வதமும் அதிதியும் காலை உணவை சமைத்துக்கொண்டிருக்க சத்தமிடாமல் இவர்கள் பின்னாள் வந்தவளை அதிதி

"என்னடி பன்னி,,,சாரி சாரி அண்ணி"என்று கூற பர்வதம் கையில் இருந்த கரண்டியாலேயே அதிதிக்கு அடித்தார்.உடனே

"அதானே உனக்கு உன் மருமகள ஏதும் சொன்னா பிடிக்காதே"என்றவளை நித்யா

"ஆமா அதிதி அருணும் வசுவும் எங்க.ஆளவே காணோம்.காரியம்லாம் முடிச்சிட்டு இன்னைக்கு வரேன்னு சொன்னாங்கலே"என்றவளை அதிதி

"அட உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காப்பா.நான் இருந்தேன் உனக்கு கல்யாணத்துக்கு அப்புறமா  பர்ஸ்ட் நைட் ஞாபகத்துல எல்லாமே மறந்திருக்கும்னு"என்று நித்யாக்கு மட்டும் கேட்கும் விதமாக கூற நித்யாவோ அவளை முறைத்து சைகையால் வாயை முடு என்றால்.

எல்லோரும் காலை உணவுக்காக டைனிங்க் டேபிளில் இருக்க அருணும் வசுந்ராவும் வந்து சேர்ந்தனர்.

வந்ததும் வராததுமாக அருண்

"ஓய் நித்ஸ்..எங்க நம்ம மாப்பு.ஆளவே கானோம்.நல்லா தூங்குறானோ"என்றவனை

"ஏன் சார்,உங்க கல்யாணத்து அன்னைக்கு என்ன பண்ணீங்க"என்றவளை அவன்

"ஆமா நான் என்ன பண்ணேன்.நான் காலைலயே எழுந்துட்டேன்பா"என்று கூற அவளோ பர்வதம் கிட்சனுக்குள் உணவு எடுக்க சென்றதை உறுதிப்படுத்திகொண்டு மெதுவாக அவனுக்கும் வசுந்ராக்கும் மட்டுமே கேட்கும் விதமாக

"ஆமாம கல்யாணம் முடிச்ச அன்னைக்கே பொண்டாட்டி கூட இருக்காம வீட்டுல அம்மா தேடுவாங்க எண்டு வந்த ஒரே குட்டி பையன் இவருதாம்பா.அதான் காலைல விடியிரதுக்கு முன்னாடியே அக்காவ பார்க்க ஓடிட்டாரு"என்றவளை வசுந்ரா

"ஏய் நீ வாயாடின்னு தெரியும்,ஆனா இவ்வளவு பேசுவேன்னு நான் நினைக்கவே இல்லை.வழக்கமா கல்யாணம் ஆன அடுத்த நாள் கல்யாண பொண்ணதான் எல்லோரும் கலாய்ப்பாங்க.இங்க என்னடான்னா எல்லாமே தலைகீழா நடக்குது.பாவம்பா நம்ம வருண்"என்று நித்யாவை அவளின் ஓரகத்தி வாரிவிட அவள் எதுவும் பேசாமல் மாடிப்படியை பார்க்க வருண் முழுக்கை டீ சேர்ட் அணிந்து கீழே வந்தான்.அவன் கண்களில் ஒரு களைப்பை கண்ட அதிதி

"என்ன அண்ணா நைட் தூங்கவே இல்ல போல "என்று மெதுவாக கேட்க வசுந்ராவும் அருணும் சிரித்துவிட்டனர்.உணவை எடுத்துக்கொண்டு பர்வதம் வந்து டேபிளில் வைக்க எல்லோரும் அமைதியாக உண்ண ஆரம்பித்தனர்.அவர்களுடன் வந்து அசோகனும் சேர்ந்து கொள்ள அவ்விடம் அமைதியாக மாறியது. அந்த அமைதியை கலைக்க விரும்பிய அதிதி

"இரண்டு மருமகள் இருந்தும் மாமியாரும் நாத்தனாரும் சமைச்சி டைனிங்க் டேபிலுக்கு சாப்பாடு கொண்டு வந்த கொடுமை இந்த வீட்டுல மட்டும்தான் நடக்கும்"என்று கூற

அருணோ "மாமியார் சமைச்சாங்கன்னு சொல்லு.ஆனா நாத்தனார் சாப்பாட தூக்கி வந்தா சரியா.சும்மா இடைல உன் பேரையும் சமைச்சாங்க எண்ட லிஸ்ட்ல சேர்க்காத ஓக்கே"என்றவனை

"ஏண்டா பக்கி சொல்ல மாட்டே"என்றவளை பர்வதம்

"அதிதி வார்த்தைய பார்த்து பேசு.அண்ணாவ இப்படித்தான் பேசுவியா"என்றரை தன் முன்னால் அருணை அவள் இப்படி பேசுவதை தான் விரும்பமாட்டேன் என்றுதான் பர்வதம் அதிதியை கண்டிக்கின்றார் என புரிந்து வசுந்ரா

"அட விடுங்கத்தை.இவளாச்சும் கொஞ்சம் அவர கன்றோல் பண்ணட்டும்.ஏன்னா ஐயா போலீஸ் வேலய விட்டாலும்தான் விட்டாரு ,வாலுத்தானம் அதிகமாகிடுச்சு"என்று கூற அருணோ

"என்ன வசு இப்படி சொல்ர.வாலுத்தனம் எனக்கு அதிகமாக இல்ல உனக்கா.நைட் என்ன நடந்ததுன்னு சொல்லவா...."என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக காதில் குசு குசுத்தவனை வசுந்ரா வெட்கப்பட்டு

"கொஞ்சம் சும்மா இருக்கீங்களா"என்று கூற அதிதியோ

"அட புதுசா கல்யாணமான ஜோடியே சும்மா இருக்குதுங்க.இந்த இரண்டும் பண்ணுற அலப்பற தாங்க முடிலப்பா"என்று அதிதி போலியாக சலிப்புடன் கூற பர்வதமோ

"அதிதி உள்ள வா.கொஞ்சம் வேல இருக்கு "என்று அழைத்தார்.

"ஹ்ம்ம்ம்.இந்த அம்மாக்கு நம்ம கொஞ்ச நேரம் ப்ரீயா இருந்தா பிடிக்காதே"என்று கூறி உள்ளே சென்றால்.நித்யாவும் வசுந்ராவும் கார்டனில் உலாவ வெளியில் வந்தனர்.

"ஏன் நித்யா ,உனக்கு மனசுல கவலையே இல்லையா?"என்று கேட்ட வசுந்ராவை கேள்வியாக பார்த்தவளை வசுந்ரா

"இல்லடா ,எனக்கு அருண் எல்லாமே சொன்னாருப்பா.நீ அவர காதலிச்சது,அவருக்கு இப்படி ஒரு குறை இருக்குறது தெரிஞ்சும் நீ கல்யாணம் பண்ணிக்க கேட்டது, எல்லாமே சொன்னாரு.உன் கல்யாணமான அடுத்த நாள் இப்படி கேட்குறது சரி இல்லைதான்.இருந்தாலும் நீயும் வருணும் காலைல சாப்பிட்டத பார்க்கும் போது நீங்க ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸா கூட பழகிக்கல்லைன்னு தெரியுது.நீ அத்தையோட ஆசைக்காகத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னும் தெரியுது"என்றவளை பார்த்து நித்யா சிரித்தவள்

"நான் உங்கள அக்காண்ணே கூப்பிடட்டா.ஏன்னா எனக்கு தங்கச்சி இருக்கா அக்கா இல்லை"என்று கூற வசுந்ராவோ

"உனக்கு எப்படி வேணுமோ அப்படியோ கூப்பிடுப்பா "என்றாள்.

நித்யா தொடர்ந்து "வசுக்கா நான் அருண லவ் பண்ணது உண்மைதான்.ஆனா அவரு எங்கிட்ட பேசினத நாந்தான் தப்பா நினைச்சுட்டேன்.ஆரம்பத்துல மனசுல ஒரு ஆசை வந்தது.அத ஆசைன்னு கூட சொல்ல முடியாது ஜஸ்ட் இன்பாக்சுவேசன்.ம்ம்ம் என்னவென்று தெரிலக்கா.ஆனா கரண் கூட கொஞ்ச நாள் பழகினப்போ அவரு கூட வாழ்ந்தா நல்லா இருக்கும்னு தோனிச்சு.ஆனா கடவுள் யாருக்கு யாருனு எப்பவோ எழுதி வெச்சிருப்பாருக்கா.நம்ம தலைவிதிதான் முன்னாடியே நிர்னயிக்கப்பட்ட ஒன்னாச்சே"என்று பெரிய ஒரு சொற்பொழிவை ஆற்ற வசுந்ரா

"நீ விளையாட்டு பிள்ளை மாதிரி பேசினாலும் உனக்குள்ளா இவ்வளவு மெச்சூரிட்டி இருக்கும்னு நான் நினைக்கலப்பா" என்றவளை

"அக்கா போதும்,வேணாம் ,அழுதுடுவேன்"என்று கலாய்க்க இருவரும் சிரித்து பேசி வீட்டுக்குள் வந்தனர்.

நாட்கள் நகர நகர வருண் வேலைக்கு செல்வதை முழுமையாக விட்டிருந்தான்.தனக்கு சில நாட்கள் இந்த ஐடி வேலை செய்ய பிடிக்கவில்லை என்றும்,கம்ப்யூட்டர் பக்கமே கொஞ்ச நாளைக்கு தலை வைக்க மாட்டேன் என்று கூற எல்லோருக்கும் சந்தோசமாக இருந்தது.ஏனென்றால் வருணும் நித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என நினைத்தவர்கள் அவனை அவன் போக்கிலேயே விட்டார்கள்.

இந்த நாட்களில் அதிதிக்கு ஒரு நல்ல வரன் அமைய அவளின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டு ஒரு நல்ல நாளில் அவளின் திருமணமும் நடந்தது.பெண்ணுக்கே உரிய அழுகையுடன் தன் பெற்றோரையும் தன் வீட்டையும் விட்டு அதிதி பிரிந்து செல்வதை எல்லோரும் கனத்த இதயத்துடன அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.அதிதியின் கணவன் சுரேஷ் அவளை ராணி போல பார்த்துக்கொள்வதாக எல்லோரிடமும் வாக்கு கொடுத்து கூட்டி சென்றான்.

இரண்டு மாதம் கழித்து பர்வதமும் அசோகனும் அதிதியை பார்க்க அவளின் வீட்டிற்கு சென்றிருக்க ,தன் போலீஸ் வேலையை விட்ட பின் அருணும் வசுந்ராவும் சொந்தமாக ஒரு சிறிய ஐடி சப்போர்ட் கம்பனி ஒன்று தொடங்குவது தொடர்பாக பெங்களூருக்கு சென்றிருந்தனர். வீட்டில் வருணும் நித்யாவும் தனியாக இருக்க இது சந்தர்ப்பமாக அமைந்தது.

(இந்த லூசுப்பய வருண் பேசுறத கேட்டு நீங்க யாரும் டென்சன் ஆக கூடாது.கண்டிப்பா ரைட்டர திட்ட கூடாது..ஹீ இஸ் பச்ச மண்ணு)

சில நாட்களாக வருண் சமையல் கற்றுக்கொள்கிறேன் என்று இவன் செய்த அலப்பறைகளை யாராலும் தாங்க முடியவில்லை.ஆனால் சில நாட்களிலேயே அவன் நன்றாக சமைக்க கற்றுக்கொண்டான்.வீட்டில் இப்போது மூண்று நேர சமையலும் நம்ம கிங்க் ஆப் ஐடி மிஸ்டர் வருண் தான்.

வீட்டில் யாருமில்லை என்பதால் நித்யாவிடம் வருண்

"நித்யா வீட்ல யாருமே இல்லையே.உனக்கு போர் அடிக்கும்பா.சோ நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வா.எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை" என்று கூற அவளோ

"சரி வருண்,நான் போயிட்டு ரெண்டு நாள்ள வரேன்"என்று கிளம்பினால்.ஆனால் அவள் அம்மாவுக்கு கால் செய்யாமல் சென்று விட்டால்.அவள் கிளம்பியதும் வருண் புதிதாக ஒரு டிஷ் டிரை பண்ணுகிறேன் என்ற பெயரில் கிட்சனை தலைகீழாக புரட்டிக்கொண்டிருந்தவனுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

கடைசியில் டிஷ் நன்றாக வர வருண் தனக்குதானே

"சூப்பர்டா வருண்,நீ ஐடில மட்டுமில்லடா சமையல்லயும் நீதான் கிங்க் "நின்று நிமிர்ந்தவன் அவன் முன் கை கட்டி சத்தமில்லாமல் நித்யா நிற்பதை கண்டவன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல்

"ஏண்டி வெள்ளக் குள்ளச்சி ,நிஜத்துலதான் என்கூட பக்கத்துல இருந்து என்ன கொல்ரேன்னு பார்த்தா மறுபடியும் வந்துட்டியா.இரு உன்ன என்ன பண்றேன் "என்றவன் அவள் அருகில் சென்று அவளை அணைக்க முயன்றவன் திடீரென்று அவள் விலகப்பார்க்க அவன் நித்யா அணிந்திருந்த சேலையை பிடிக்க இருவரும் எதிர்பாராமல் அவளின் சேலை அவிழ்ந்ததில் நித்யா தன்னிலை மறந்து வருணை அறைந்தால்.

-------

சகோதர சகோதரிகளே கதை கொஞ்சம் ஸ்பீடாகும்.ஏனென்றால் இன்னும் 2 வாரத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் ஆரம்பமாகவுள்ளது.இன்னும் ஒரு 7-9 எபிசோட்ஸ் இருக்கு..ஆனால் நிறைய விடயங்கள் எழுத வேண்டியுள்ளது..இல்லை என்றால் வழமையாக எழுதுவது போல எழுதி ரமழான் கடந்த பின்னர் தொடரட்டுமா இல்லை கொஞ்சம் ஸ்டோரிய ஸ்பீட் பண்ணட்டுமா?கருத்துக்களை சொல்லவும்...ரமழானில் எழுதமாட்டேன்.ஏனென்றால் அந்த மாதத்தை நான் முழுமையக பயன்படுத்த விரும்புகிறேன்.அதற்காக வாட்பெட் பக்கம் வரமாட்டேன் என்று இல்லை.வருவேன் மற்ற சகோதர சகோதரிகளின் கதை மற்றும் கவிதைகளை படிக்க..
எழுத்து பிழைகளை சுட்டிகாட்டிய Niranj4794 jasmineathil கு நன்றிகள்.

புதுகதை அறிமுகம் --
RockingStar3 பரிந்துரை செய்த agaran3 இன் வித்தியாசமான முயற்சி.. படிச்சிட்டு முழு ஆதரவும் கொடுப்போம்...
https://my.w.tt/t8OuLiUmEM

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro