தாரகை 9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"ஏய் என்னயேவா டி ஏமாத்துற..." என்று சிடுசிடுத்தவன் பால்கனிக்கு சென்று விட்டான்...

ஜானவி குளித்து முடித்து ஈர தலை முடியுடன் வெளியில் வந்தாள்...

பால்கனியில் இருந்து அறைக்கு வந்த  அபிநயன் கட்டில் அருகே செல்ல அவன் வருவதை அறியாத ஜானவி சட்டென பின்னால் திரும்ப இருவரும் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு கீழே விழுந்தனர்..

அபிநயனின் மீது விழுந்த ஜானவியின் இடையை அவன் அழுத்தமாக பற்றியிருந்தவன் அவள் விழியுடன் தன் விழிவைத்து பார்த்து கொண்டிருந்தான் சில நொடி...

இருவரின் விழியும் ஒரு கணம் இமை அசையாமல் பார்த்து கொண்டிருக்க அவர்களின் பார்வையின் ஈர்ப்பில் அவர்களை அறியாமல் இருவரும் சிக்கிக்கொண்டு உலகை மறந்திருந்தனர் ஒரு நிமிடம்..

அவளின் கேசத்தின் நீர் அவன் முகத்தில் இரு துளியாய் சிந்த....
இருவரும் சட்டென தங்கள் நினைவில் இருந்து வெளியில் வந்தவர்கள் தயக்கமுடன் வேகமாக எழுந்து நின்றனர்..

ஜானவியின் இதயம் படபடவென பட்டாம் பூச்சியின் சிறகாய் துடித்து கொண்டிருந்தது....முதன் முதலில் ஒரு ஆணின் நெருக்கத்தை மிக அருகாமையில் உணர்ந்தவள் முகம் குங்குமமாய் சிவந்து போனது..

அவளின் கூந்தலில் இருந்த நீர் சிறிது தரையில் சிந்தியிருக்க...
அபிநயனும் அந்த சூழ்நிலையில் தயக்கமுற்று நின்றவன் அங்கிருந்து செல்ல நினைத்தவன் அங்கிருந்து நகர சடாரென கால் வழுக்கி மீண்டும் அவள் மீது விழ அவளும் தடுமாறியவள் கீழே விழுந்தாள்...

அபிநயன் அவள் பின் தலையின் தன் ஒரு கை வைத்து பிடித்து கொண்டவனின் மற்றோரு கை அவள் இடையை அழுத்தமாக பற்றியிருந்தது... அவளோ பயத்துடன் அவன் சட்டையை பிடித்திருந்தாள் இறுக்கமாக...

அவன் அவளை கண்ணிமைக்காமல் கண்டு கொண்டிருக்க அவளும் அவனது பார்வையை உணர்ந்து அவன் விழியை நோக்கினாள்.

சில நிமிடங்களுக்கு பின் வேலையாட்கள் கதவை தட்டவும் இருவரும் தங்கள் பழைய நிலைக்கு திரும்பியவர்கள் வேகமாக எழுந்து நின்றனர்..

அவர்கள் இருவரையும் பிரசாத் கீழே அழைத்ததாக கூற இருவரும் சில நிமிடங்களில் தயாராகி கீழே சென்றனர்.

இருவரும் சென்று பூஜையில் அமர அங்கு வந்திருந்த ஐயர் மந்திரத்தை கூறி அபிநயன் கையில் தாலியை கொடுத்து அவள் கழுத்தில் கட்டுமாறு கூறவும் அதிர்ச்சியுடன் தந்தையை பார்த்தவன் அதை கையில் வாங்க தயங்கினான் அவன்.

"அபிநயன் என்ன பாக்ற வாங்கி அவ கழுத்துல கட்டு" என்றார் பிரசாத் அழுதமான குரலில்

முகத்தை சுளித்து கொண்டு அதை கையில் வாங்கியவன் அவள் கழுத்தில் கட்டி   மூன்று முடிச்சு போட்டவன் அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான்...

சில நிமிடங்களில் இருவருக்கும் அவர்கள் வீட்டிலேயே திருமணம் முடிந்தது...

அன்று இரவு அவர்கள் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்திருக்க அவனோ கோபமுடன் பால்கணியில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

பிரசாத் அவனை உள்ளே செல்லுமாறு கூற அவனும் கோபமுடன் அவன் அறைக்குள் நுழைந்தான்..

அந்த அறை முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்க பட்டிருக்க அதை எரிச்சளுடன் பார்த்தவன் அந்த மலர்களை பிய்த்து எரிந்து சில பொருட்களை  எடுத்து கீழே போட்டு உடைத்தான்...

ஜனாவியோ இது அனைத்தையும் பார்த்து புன்னகைத்தபடி கட்டிலில் அமர்ந்து கை பேசியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தாள்...

அவளை கண்டு கோபம் அடைந்தவனோ அவள் அருகில் சென்று நின்று முறைக்க அவளோ அவனை அவள் அருகில் பார்த்தவள்  மேசை  மீதிருந்த பூ ஜாடியை எடுத்து அவன் கையில் கொடுக்க அவனோ அதை பிடிங்கி கீழே வீசினான் கோபமுடன்..

"👌... கடைசி பிளவர் வாஷ்ஷையும் உடச்சாச்சா.." என்றவாறே கைபேசியில் விளையாட்டை தொடர்ந்தாள்.

அவளை பார்த்து முறைத்து கொண்டு நின்றவனுக்கு அவள் மீது எரிச்சல் அதிகமாக வேகமாக அவள் கையில் இருந்த கைபேசியை பிடுங்கி கீழே வீச அது சுக்கு நூறாக உடைந்தது..

அவளை பார்த்து அவன் சத்தமாக சிரிக்க கீழே இருந்த கைபேசியை கையில் எடுத்தவள் அதை அவனிடம் நீட்டினாள் கள்ள சிரிப்புடன்..

அவளை புரியாமல் பார்த்தவன் "ஏன் என் கிட்ட கொடுக்குற" என்று வினவ

"இது உன் போன் தான்... நான் எப்படி  நீ என் போன உடைக்கிற நேரம் சும்மா இருப்பேன்னு நினச்ச.."என்றாள் புருவத்தை உயர்த்தி.

"ஐயோ என் போன்..."என்று அவன் கைபேசியை அவளிடமிருந்து பிடுங்கி கொண்டான்..

அவள் கைபேசியை அவனிடம் காண்பிக்க அவனோ அவள் மீது தீப்பார்வை வீசினான்.

"என்ன தைரியம் இருந்தா என் போன எடுப்ப..பிசாசு.."

"எனக்கு தெரியும்டா உன்னை பத்தி.... இன்னொரு முறை என் கூட இப்படி விளையாடாத அப்புறம் அவ்ளோ தான்.."

"ஆமா டி வேற வேலை இல்லாம உன் கூட தான் இப்போ நான் விளையாடிட்டுருக்கேன் பாரு.. மூஞ்சியும் மொகரையும்...சி பே..."

"ஏய் நீ போ... உன் மூஞ்ச பஸ்ட் பாருடா எரும..."

"ஏய் நீ தான் டி எரும பன்னி எல்லாம்.."

"ஏய் உனக்கு அவ்ளோ தான்டா மரியாதை.."

"ஏய் நீ யாருடி எனக்கு மரியாதை கொடுக்க... எனக்கு உன்னை பாத்தாலே பிடிக்கல.. என் அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...என்னை மாதிரி உனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை தான அப்போ இந்த முடிவு தான் கரெக்ட்..நான் உனக்கு டைவஸ் கொடுக்குறேன்.."

"உன் விருப்பம்.. எனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்ல"

"ஓ சரி அப்படினா அத என் கிட்ட குடு.."என்ற அபிநயன் அவள் அருகே செல்ல..

"என்ன?" என்று வினவிக்கொண்டே  பின்னால் சென்றாள் ஜானவி..

"உன் கழுத்துல இருக்க தாலி.. அது உன் கழுத்துல இருந்தாதான நீ என் பொண்டாட்டி அத என் கிட்டயே கொடுத்துரு" என்றவன் அவள் கழுத்திலிருக்கும் தாலியை கழட்ட முயற்சிக்க அவளோ அவனை தடுத்து தள்ளி விட்டவள் அவனை முறைத்தாள்...

"நீ என்ன பேசுற உனக்கென்ன பைத்தியம் பிடுச்சுருக்கா.. " என்று சீறினாள்..

"உனக்கு தெரியுமா இது ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியம்னு" என்றவள் கண்களில் கண்ணீர் தேங்கியது.

அப்போது தான் அவள் உணர்ந்தாள் அவள் என்ன கூறினாள் என்று... "என்ன ஆச்சு எனக்கு ஏன் எனக்குள்ள இந்த தாலி ஒருவித உணர்வ ஏற்படுத்துது" என எண்ணி கொண்டு நின்றாள் ஜானவி ....

"ஏய் பிசாசு உனக்கு தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைல அப்புறம் எதுக்கு அர்த்தம் இல்லாத இந்த கல்யாணத்துக்கும் தாலிக்கும் முக்கியதத்துவம் கொடுக்குற.. நீயும் ஒரு சராசரி பொண்ணுனு நிரூபிச்சிட்ட... இதனால தான் எனக்கு இந்த ட்ரெடிஷனல் கேர்ல்ஸ் மேல இன்ட்ரெஸ்ட்டே இல்லை" என்றவன் அவளை பார்த்து கேலியாக சிரிக்க

"மிஸ்டர் சிடுமுஞ்சி நான் முன்னாடியே சொல்லிட்டேன் எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை.. நான் இந்த தாலிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரே காரணம் என் அப்பாவும் மாமாவும் தான் தவிர நீ இல்லை..
இப்போ இத நான் கழட்டிட்டா அவங்கள அவமதிக்கிறா மாதிரி ஆகிடும்.. என் சுயநலத்துக்காக அவங்கள எப்பவும் நான் காய படுத்த மாட்டேன்".என்றாள் அவள் முகத்தை திருப்பி கொண்டு.

ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நின்றனர்.

"எது எப்படியோ நான் தூங்க போறேன்.."

"அது உன் இஷ்டம் அத ஏன் என் கிட்ட சொல்ற.."

"ஹலோ பிசாசு நீ மறந்துட்டனு நினைக்கிறன்.. இது என் ரூம் நீ இங்கிருந்து போறியா ப்ளீஸ்" எனவும்

"ஓ அப்படியா நான் மறந்துட்டேன்ங்க" என்றவளை  அவன் குழப்பமுடன் பார்த்து நிற்கக அவளோ அவன் மீது தலையனையை தூக்கி எரிந்தாள்..

"ஞாபகபடுத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் இதுக்கப்புறம் இது என்னுடைய ரூம்கூட எனக்கும் இந்த ரூம்ல உனக்கிருக்க அதே உரிமை இருக்கு.."என்றவாறே கட்டிலில் படுத்து கொண்டாள்..

அவன் அவளை அனல் பார்வை பார்த்தவன் "என்னால இத ஒத்துக்க முடியாது.."

"எனக்கு அத பத்தி கவலை இல்லை
எனக்கு தூக்கம் வருது."

"சரி நீ இங்கயே தங்கிக்கோ ஆனா உன் பில்லோவையும் போர்த்திக்கயும் எடுத்துகிட்டு ஷோபால போய் படு
எனக்கு என் பெட்ட விடு.."

"என்னால முடியாது உனக்கு வேணும்னா நீ போய் தூங்கு.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்றவளை கோபமுடன் பார்த்து நின்றவன் ".நீ உண்மையாவே சரியான பிசாசு.. ஐ ஹேட் யூ..."

"ஹஹஹா" என சத்தமாக நகைத்தவள் "தேங்க் யூ சோ மச் அபிநயன் சார்... குட் நைட்..ஐ ஹேட் யூ டூ மிஸ்டர் சிடுமூஞ்சி" என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்..

அவளை முறைத்து நின்றவன் தலையனையை எடுத்து கொண்டு ஷோபாவிற்கு சென்றான்..

"என் டேட் க்காக நான் என்னவெல்லாம் தியாகம் பண்ண வேண்டியதா இருக்கு..." என அவன் புலம்பவும்

தலையனையை கட்டிலின் நடுவில் வைத்தவள் அவனை கட்டிலில் வந்து படுக்குமாறு அழைத்தாள்..

"ஒன்னும் தேவையில்லை.. உன் அக்கறைக்கு தேங்க்ஸ்..பிசாசு.."

"அப்படினா போ..."

அவன் சென்று ஷோபாவில் படுத்தவன்
அவன் எதிர்காலத்தை
நினைத்து புலம்ப தொடங்கினான்..

மறுபுறம் ஜானவியோ உறங்காமல் படுத்திருந்தவள் அவள் கூறியதையே நினைத்து கொண்டிருந்தாள்...

"என்ன ஆச்சு ஜானவி உனக்கு.. ஏன் நீ அவன தடுத்த எதுக்கு அவன தாலிய கழட்ட விடல..என்று மனம் அவளிடம் கேள்விஎழுப்பியது

எனக்கு தெரியும் அவன தடுக்க தான் நான் அப்படி சொன்னேன்.. ஆனால் என் அப்பாவுக்காக அவன தடுக்கல..அது மட்டும் தெரியும் ஓ காட் ஜானவி நீ என்ன யோசிச்சுட்டிருக்க ஒழுங்கா கண்ண மூடி தூங்கு" என தனக்கு தானே கூறி கொண்டவள் நித்திரையில் ஆழ்ந்தாள்.

அபிநயனோ ஷோபாவில் படுத்திருந்தவன் வாட்டமில்லாமல் திரும்பி திரும்பி படுத்து கொண்டிருந்தான்.

மறுநாள் அழகாக விடிந்திருந்தது..

அபிநயன் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்க ஜானவி பால்கனியில் நின்று கொண்டிருந்தவள் "உன் லட்சியம் எல்லாமே வேஸ்ட்டாகிருச்சு ஜானவி அப்பாவோட ஹெல்த்தே என் படிப்புக்கு ஒரு புல் ஸ்டாப் ஆகிருச்சு" என நினைத்து கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது..

அபிநயன் அவள் பால்கனியில் கண்ணீர் பெறுக நின்றிருப்பவளை பார்த்தவன் அவளுக்கு ஆறுதல் கூற நினைக்க அவள் அவனுக்கு நேற்று இரவு செய்தவை நினைவில் எட்டி பார்க்க அவனோ அவள் அருகில் செல்லாமல் நின்றவன் அங்கிருந்து கீழே சென்று விட்டான்..

நுழைவு அறையில் அமர்ந்து சேகரும் பிரசாத்தும் பேசிக்கோண்டிருக்க பிரசாத் அபிநயனை பார்த்தவர்
"அபிநயன் எங்க பா கிளம்பிட்ட". என வினவ அவனோ "டேட் காலேஜ்க்கு" என கூற "ஜானவி" என சத்தமாக அழைதார் பிரசாத்..

கண்களை துடைத்து கொண்டவள் அங்கிருந்து கீழே சென்றாள்.
கல்லூரிக்கு கிளம்பியிருந்தவனை பார்த்தவள் மணம் துடித்தது..

"ஜானவி என் கூட வா டா" என்ற பிரசாத்தை பார்த்தவள் "எங்க மாமா " என்று அவள் வினவ....

"நான் உனக்கு அப்புறம் சொல்றேன் நீ வா" என அவர் அழைக்கவும்

அபிநயனோ குழப்பமுடன் நின்றான்...

"இந்த பிசாச டேட் எங்க கூட்டிட்டு போக போறாரு.. எப்படியோ நான் காலேஜ் போறேன்" என அவன் நினைத்து கொண்டு நிற்க்க...

"அபிநயன் நீயும் தான்" என்றார் பிரசாத்..

"ஆனால் டேட் எனக்கு காலேஜ் இருக்கே.."

"நான் சொன்னத செய்" எனவும் சரி என தலை அசைத்தான் அவனும்..

அபிநயன் ஓட்டுநர் இருக்கையில் அமர பிரசாத் ஜானவியை அவன் அருகில் அமருமாறு கூற அவளும் தயக்கமுடன் அவன் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்.

பிரசாத் பின்னிருக்கையில் அமர அபிநயன் காரை ஓட்ட ஆரம்பித்தான்..

அபிநயன் படிக்கும் கல்லூரிக்கு அவர்கள் மூவரும் சென்றனர்..

"டேட் இது நான் படிக்கிற காலேஜ். உங்க ரெண்டு பேருக்கும் இங்க என்ன வேலை?" என்றான் குழப்பமுடன்..

"என் கூட வா" என்றவர் முன்னே செல்ல இருவரும் ஒன்றும் புரியாமல் அவர் பின்னே சென்றனர்.

மூவரும் கல்லூரி முதல்வரின் அறைக்கு சென்றனர்..

அப்போது வரை அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவன் தந்தை அவனுக்கு எதிராக எதுவும் செய்து விட கூடாது என நினைத்து யோசித்து கொண்டிருந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro