தாரகை 8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவன் தன் தந்தையின் சொல்லிற்க்காக மட்டுமே ஜானவியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தவன் விருப்பம் இல்லாமல் தன் தந்தையின் கையிலிருந்த குங்கமத்தை வாங்கி ஜானவியின் நெற்றியில் சூடினான்...

ஷேகரும் பிரசாத்தும் இன்பம் பொங்க தங்கள் பிள்ளைகளை பார்த்து கொண்டிருக்க ஷேக்கர் விழிகளில் மகிழ்ச்சியின் நீர் துளிர்த்தது...

பிரசாத் நிம்மதி பெருமூச்சு விட்டவர் "ஷேகர் நீ இனிமே ஒன்னும் கவலை பட வேண்டாம் ஜானவி என் மருமகள்... அவள என் பொண்ணு மாத்திரி பாத்துக்குறேன்.... நீ எதுவும் வருத்தப் படவோ கவலை படவோ வேண்டாம்" என்று ஆறுதல் கூறினார் பிரசாத்...

ஜானவியின் விழிகள் முத்துக்களை துளிர்க்க அவளால் அவள் மன நிலையை சிறிதும் உணர முடியவில்லை...

அபிநயனோ சொல்ல முடியாத துயரத்துடன் அவளை பார்த்தவன் பார்வையின் வெப்ப அனலை தாங்க முடியாமல் நின்றிருந்தவள் வாழ்நாள் முழுவதும் அவனுடன் எப்படி இணைந்து வாழ்வது என புரியாமல் தவித்து நின்றாள்...

"டேட் இப்போ உங்களுக்கு ஹாப்பியா" என்று வெறுப்பு நிறைந்த குரலில் கேட்கவும் "ரொம்ப சந்தோசம் பா" என்றார் பிரசாத் மகிழ்ச்சி முகமாய்...

அவன்  தந்தையின் பேச்சில் வெறுப்படைந்தவன் அவரை இயலாமையுடன் பார்த்து நின்றான் ஓரு நிமிடம் ..

"நான் வெளிய வெயிட் பண்றேன்"  என்று வெளியில் சென்றவன் ஜானவியை திரும்பி கூட பார்க்க வில்லை...

"ஜானவி..." என்று ஷேகர் அவளை அழைக்கவும் "அப்பா சொல்லுங்கப்பா" என்ற ஜானவி தன் விழி நீரை துடைத்தாள்...

"ஜானவி இது எல்லாமே உன் நல்லதுக்கு தான் மா... நான் இப்படி படுத்துட்டேனே... இனிமே உன் வாழ்க்கை என்ன ஆகும்ன்னு நான் ரொம்ப பயந்தேன் ஆனா இனிமே அந்த கவலை எனக்கு இல்லை... நீ ஒரு நல்ல குடும்பத்துக்கு மருமகளா போக போற மா...அந்த தம்பி ரொம்ப தங்கமான பிள்ளை... அது நான் சொல்லி தான் உனக்கு தெரியணும்ன்னு இல்லை... நீ சின்ன வயசுலருந்து பார்த்து வளந்தவன் தான அபிநயன்... இனிமே நீ அந்த வீட்டு மருமகளா பொறுப்பா நடந்துக்கனும் ... நீ நல்லா இருக்கனும் மா அது தான் அப்பாவோட ஆசை" என்று கூறியவரின் கையை பிடித்து கொண்டு மனம் உடைந்து அழுத ஜானவி "உங்க விருப்பபடியே நான் நடந்துக்குவேன் பா" உதட்டில் வார்த்தை வராமல் கூறினாள் ஜானவி...

பிரசாத் ஷேகர் அருகில் சென்றவர் "சரி சேகர் நேரம் ஆகுது கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணனும் நாங்க கிளம்புறோம்.. நான் நர்ஸ் கிட்ட சொல்லிட்டு போறேன்...என்றவர் ஜானவி வா மா" என்றவர் அங்கிருந்து விடை பெற்று சென்றார்...

ஜானவியும் அங்கிருந்து தன் தந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றாள்..

அபிநயன் வெளியில் கார் அருகில் நின்று கொண்டிருக்க ஜானவியும் பிரசாத்தும் அவன் அருகில் செல்ல அபிநயன் ஜானவியை திரும்பி பார்த்து முறைத்தவன் வேகமாக காரில் ஏறி அமர்ந்தான்...

"ஜானவி கார்ல ஏறு மா வீட்டுக்கு போகலாம்" என்று பிரசாத் காரின் பின் இருக்கையின் கதவை திறந்தார் "சரி" என்று தலை அசைத்த ஜானவி காரில் ஏறி அமர பிரசாத்தும் முன் இருக்கையில் அமர்ந்துவிட அபிநயன் காரை ஓட்ட தொடங்கினான்....

தன் முழு வெறுப்பையும் சாலையில் காண்பித்தவன் மின்னல் வேகத்தில் பறந்தான்...

அவன் கார் ஓட்டும் வேகத்தில் பயந்த ஜானவி இருக்கையை இருக்கமாக பிடித்து கொண்டாள் சற்று அழுத்தமுடன்...

பிரசாத் அபிநயனை தலையை திருப்பி பார்த்தவர் "டேய் மெதுவா போ" என்று அதட்டினார்...

அபிநயன் அவர் பேச்சை செவியில் வாங்கி கொள்ளாதவன் சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு விரைந்தான்..

அவர்கள் கார் வீட்டை நெருங்கியதுமே அந்த வீட்டின் பெரிய இரும்பு கதவு திறந்து அந்த காருக்கு வழி விட கார் நேராக உள்ளே சென்றது..

அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய மாளிகை வீட்டின் முன் ஒரு சில நிமிடங்களில் சென்று நின்றது...

வீட்டை சுற்றி தோட்டம் அமைக்கப்பட்டு இயற்கை அமைப்புடன் அழகாகவே இருந்தது..

அபிநயன் முதலில் காரில் இருந்து கீழே இறங்கி வீட்டிற்குள் செல்லும் முன் பிரசாத் காரில் இருந்து வேகமாக கீழே இறங்கியவர் அபி நில்லு என்று கத்தினார் அவர் சத்தமாக..

அபிநயன் சட்டென அங்கேயே நின்றவன் எரிச்சலுடன் கண்களை மூடி பற்களை கடித்து கொண்டு நிற்க..

ஜானவியும் காரில் இருந்து கீழே இறங்கி நின்றாள்...

தனலட்சுமி என்று பிரசாத் சத்தமாக குரல் கொடுக்கவும் ஆரத்தி தட்டுடன் ஓடி வந்தார் அவர்கள் வீட்டு பணியாளர் தனலட்சுமி...

தம்பி...என்ற தனலட்சுமி அம்மாடி என்று ஜானவியை பார்த்தவர் "ரெண்டுபேரும் சேந்து  நில்லுங்க" என்று  கூறவும் இருவரும் வேண்டா வெறுப்புடன் சேர்த்து நின்றனர்..

அபிநயன் வேறுப்புறம் முகத்தை திருப்பி கொண்டு நிற்க..தனலட்சுமி அவர்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே வரவேற்றார்..

அபிநயன் வீட்டின் உள்ளே நுழைந்தவன் ஒரே ஓட்டமாக அவன் அறைக்கு ஓடி விட்டான்..

நீண்ட நாட்களுக்கு பின் அந்த வீட்டிற்கு வந்திருந்த ஜானவி அந்த வீட்டை தன் கண்களால் அளவெடுத்தாள்..

அந்த வீட்டின் பெரிய மரக்கதவு பல வேலைப்பாடுகளுடன் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

அவள் அந்த பிரம்மாண்டமான நுழைவறைக்கு சென்றவள் அந்த வீட்டை சுற்றும் முற்றும் பார்த்து நின்றாள்...

மிகப்பெரிய வெண்ணிற படிக்கட்டும் இரண்டு பெரிய தூண்களும் அமைக்கப்பட்டிருந்தது... அதன் அருகிலேயே பெரிய பெரிய குஷன் சிவப்பு நிற ஷோபா போட பட்டிருந்தது..

பெரிய பெரிய ஜன்னல்கள் திறைகளால் மூடப்பட்டு பகலிலும் ஆதவன் இல்லாமல் பிரம்மாண்ட மின்விளக்குகள் மின்னி கொண்டிருந்தன...

ஜானவி வீட்டின் அழகை ரசித்து கொண்டிருக்க பிரசாத் அவள் முன் வந்து நின்றவர் அம்மாடி ஜானவி என்று அழைக்கவும் ஜானவி திரும்பி அவரை நோக்கி "சொல்லுங்க அங்கிள் எனவும் இன்னைக்கு நைட் மட்டும் நீ கெஸ்ட் ரூம்ல தங்கிக்கோமா ஏதாவது வேணும்னா தயங்காம கேளு.. தனலட்சுமி பாத்துக்கோமா எனவும் சரிங்கய்யா நான் பாத்துக்கிறேன்" என்றார் தனலட்சுமி..

தனலட்சுமி ஜானவியை கெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்றவர் "அம்மா உங்களுக்கு நைட் சாப்பிட என்ன வேணும் இட்லியா தோசையா சப்பாத்தியா" என்று அவர் வினவவும் ஜானவி சற்றே தயங்கியவள் "எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே தான்" என்றாள் மென்மையான குரலில்..

"சரி மா" என்ற தனலட்சுமி அங்கிருந்து சென்று விட்டார்..

அபிநயன் வேகமாக அறைக்கு ஓடியவன் அவன் கைபேசியை வேகமாக கட்டிலில் வீசி எரிந்தவன் "ச்ச...என் லைப்பே போச்சு...எப்படிலாம் என் லைப்ப பத்தி நான் கனவு கண்டேன் ஆனா இன்னைக்கு அந்த ஜானவியால எல்லாமே போச்சு.... என் அப்பாவும் என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு முடிவெடுப்பாருனு நிச்சயமா நான் நினைக்கல...." என்று புலம்பியவன் சென்று கட்டில் மேல் அமர்ந்தான்....

மறுநாள் அழகிய விடியலுடன் ஆதவன் வருகை தந்திருந்தான்...

பிரசாத் அதிகாலையிலே எழுந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்....

ஜானவி அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியில் வர பிரசாத் அவளை நோக்கியவர் "ஜானவி எழுந்துட்டியமா.... சரி நீ போய் சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆகிவாமா.... பூஜைக்கு நேரமாகுது..." எனவும் ஜானவி சரி என்று தலை அசைத்தவள் மீண்டும் கெஸ்ட் ரூம்க்கு செல்லும் முன் நில்லுமா என்று தடுத்தார் பிரசாத்..

ஜானவி அவரை புரியாமல் பார்க்கவும் "ஜானவிமா நீ அபி ரூம்க்கு போ இனிமே அது தான் உன்னுடைய ரூம் நீ அங்க தான் இருக்கனும்" என்று அவர் அவளை அனுப்பி வைக்க ஜானவியும் சற்று தயக்கமுடனே சென்றாள்...

அவள் மாடிக்கு சென்றவள் ஒரு பெரிய நுழைவு அறைக்கு அருகில் இருக்கும் அபிநயன் அறைக்குள் சென்றாள்...

நீண்ட நாட்களுக்கு பின் அந்த அறையை பார்த்தவளுக்கு அவர்களின் சிறு வயது நினைவிற்கு வந்தது...

"ம்ம் பரவாயில்லயே முன்னவிட இப்போ ஏதோ பரவாயில்ல..." என்று அவள் எண்ணிக் கொண்டு நிற்கவும் அபிநயன் குளித்து முடித்து இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வெற்று மார்புடன் குளியல் அறையில் இருந்து வெளியில் வரவும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்த ஜானவி "அபிநயன்" என்று கத்திவிட்டு கண்களை மூடிக்கொண்டு வேறு புறம் திரும்பி நின்றாள் வெட்கமுடன்...

அவனும் அவளை அங்கு சற்றும் எதிர்பாராதவன் திகைத்து போய் கட்டில் மேல் வைக்கப்பட்டிருந்த அவனது சட்டையை எடுத்து போட்டுக் கொண்டான்...

அவன் அவளை எரிச்சலுடன் பார்த்து நின்றவன் "ஏய் அறிவில்ல.. என் தைரியம் இருந்தா என் பெர்மிஷன் இல்லாம என் ரூம்குள்ள வருவ.... பிசாசு" என்று அவன் கத்தினான் சிடுசிடுப்பு காட்டி..

அவனை கோபப்பார்வை பார்த்து நின்றவள் "என்ன கேள்விக்குற வேலைஎல்லாம் வெச்சுக்காத... நான் ஒன்னும் பிசாசு இல்லை நீ தான் பிசாசு... உனக்கு தான் அறிவில்ல.... இந்த ரூம்ல எனக்கும் உரிமை இருக்கு... உன் கிட்டலாம் பெர்மிஷன் கேக்கணும்னு எந்த அவசியமும் இல்லை... மிஸ்டர் சிடுமூஞ்சி..." என்று அவனை திட்டி கொண்டு நின்றாள் ஜானவி...

கை விரல்களை மடக்கி கொண்டு "ஏய் என்ன டி ஓவரா பேசுற... உன்னை என் அப்பா சொன்னதுக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணிருக்கேன்.. இன்னும் உன் கழுத்துல தாலி கூட கட்டல அதுக்குள்ள என் ரூம்க்கு உரிமை கொண்டாடிட்டு வந்துட்ட...இங்க பாரு எனக்கு உன் மேல எந்த விருப்பமும் இல்லை நல்லா ஞாபகம் வெச்சுக்கோ... கடைசி வரைக்கும் நீ தனியா தான் வாழனும்..." என்றவனை கேலியாக பார்த்து சிரித்தவள்

"தேங்க்ஸ் நான் அப்படியே இருந்துகிறேன்... நானும் உன்னை விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல சரியா... சாரி இன்னும் நமக்கு முறையா கல்யாணம் கூட ஆகல...இது ஜஸ்ட் பார்மலிட்டுக்காக தான்.. என் அப்பாவுக்காகவும் மாமாவுக்காகவும் மட்டும் தான் உன்னை போய் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை ஆகிருச்சு" என்றாள் அவள் அலட்சியமுடன்....

"அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை" என்று அவன் வினவ...

"இல்லை" என்றாள் ஜானவி ஒரே குரலில்...

"எனக்கு தெரியும் டி உன் டேஸ்ட்டே கேவலமா இருக்கும்னு... உனக்கு சோடா புட்டி போட்ட புத்தக புழுவா இருக்கணும் அது தான உனக்குலாம் பிடிக்கும்" என்று நக்கலாக சிரித்தவன் "பாக்க என்ன மாதிரி அழகா ஹேண்ட்சமா இருக்க பையன கல்யாணம் பண்ணுவேன்னு  நீ நினைச்சு கூட பாத்துருக்க மாட்ட... உனக்கு தெரியுமா எத்தனை பொண்ணுங்க என் பின்னாடி சுத்துறாங்கன்னு...அவங்களாம் உன்னை மாதிரி பட்டிகாடு இல்லை எல்லோரும் மாடர்ன் கேர்ல்ஸ்..." என்று கேலியாக அவன் சிரித்து கொண்டு நின்றான்...

ஜானவி அவனை நோக்கி உதட்டை சுழித்தவள் "டேய் டேய் போதும் உன்னை பத்தி நீயே ஓவரா கனவு காணாத தாங்க முடியல... எனக்கு தெரியாதா உன்னை பத்தி... உனக்குலாம் அரைகுற டிரஸ் போட்டுக்கிட்டு பப் பார்னு திறியிறவள தான பிடிக்கும்... அத வேற மாடர்னு சொல்லுவீங்க.. எனக்கு அதெல்லாம் பிடிக்காது நான் விலேஜ் கேள் தான் நான் ட்ரெட்டிஷனல் தான் அதுக்காக என்னை யாருக்கும் பிடிக்காதுனு அர்த்தம் இல்லை...என்ன மாதிரி உண்மையான மனசுக் காரங்க இந்த உலகத்துல உருவத்தை பாத்தும் ட்ரெஸ பாத்தும் வாழல மனச பாத்து வாழுறோம்..." என்றவளின் பேச்சில் இருந்த உண்மை தன்மையை அவன் புரிந்து கொண்டிருந்தாலும் அவன் ஈகோ அதை ஏற்க மறுத்தது...

"இப்போ நீ என் ரூம்ல இருக்க கூடாது..." என்றவனை பார்த்து முறைத்தவள் "நான் இங்க வந்தது உன் கூட சேந்து வாழ இல்லை... மாமா சொன்னதுக்காக மட்டும் தான் புரிஞ்சுக்கோ.." என்றவள் அங்கிருந்து குளியல் அறைக்கு செல்ல அவன் அவளது கையை இறுக்கமாக பிடித்து கொண்டு நின்றான்..

அவள் அவனை திரும்பி பார்த்து "டேய் என்ன பண்ற கையை விடு" என்று கத்த அவனோ விட முடியாது டி... எனவும்..

"ஐயோ மாமா பாருங்க மாமா" என்று ஜானவி அந்த அறையின் வாயிலை பார்த்து கத்தினாள்...

அபிநயன் சட்டென அவள் கையை விட்டு விட்டு திரும்பி "இல்லை டேட்" என்று வாசலை பார்க்க அங்கு யாரும் இல்லை...

ஜானவி அவள் எடுத்து வந்த உடைகளை எடுத்து கொண்டு ஒரே ஓட்டமாக குளியல் அறைக்குள் ஓடி விட்டாள்...

தொடரும்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro