தாரகை 7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவன் சில உடைகளுடன் வந்தவன் அவளுக்கு கையில் இருந்த பருத்தி சட்டையை (சுவெட்டர் )போட்டு விட்டவன் அவளுக்கு தலையில் ஒரு துணியையும் கட்டி விட அவளோ அவனை பொய் கோபமுடன் முறைத்து கொண்டிருந்தாள்...
"அபி இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரா தெரியல..."

"தெரியல..." இறுகிய குரலில் கூறியவன் "உனக்கு இதெல்லாம் வேண்டாம்னா கார்டன் போறத மறந்துரு" எனவும் கண்களை மேலும் கீழும் உருட்டியவள் "சரி வா போகலாம்" என்றாள் உதட்டை சுழித்து...

அவனோ அவளை பார்த்து லேசாக நகைத்தவன் அவளை அழைத்து கொண்டு அவர்கள் வீட்டு தோட்டத்திற்கு சென்றான்..

அபிநயன் வீட்டின் முன் புறம் பலவகையான மரங்களும் வண்ண செடிகளும் நிறைந்த பசுமையான தோட்டம் அமைக்கபட்டு அந்த தோட்டத்தில் பூங்காவும் அமைக்க பட்டிருந்தது...

அவர்கள் வீட்டு தோட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாவலர்கள் நாயுடன் நடந்து கொண்டிருப்பது வழக்கம்....அபிநயன் அவர்களை தன்னவளின் பாதுகாப்பிற்காக வேலைக்கு வைத்திருக்கிறான்..

அவளோ அவனிடம் அவர்களை அங்கிருந்து போக சொல்லுமாறு கூற அவனோ மறுத்தவன்
"ஜானு அவங்க நம்ம செக்யூரிட்டிக்காக இருக்காங்க.."எனவும்

"எனக்கு புரியுது அபி... ஆனா நீ என் கூட இருக்கும் போது எனக்கு எந்த பிரச்சனையும் வராது.." என்றாள் அவள் முகமலர்ச்சியுடன்..

அவள் இடையை பற்றி தன்னிடம் இழுத்தவன் "அதெல்லாம் சரி தான் ஜானு ஆனா என்னால சமாளிக்க முடியாத நிலைமைக்கு போய்டுச்சுனா நான் என்ன பண்ணுவேன், என்னால அத நினச்சு கவலை பட முடியாது..கடைசி முறை நான் இதே மாதிரி பண்ண தப்பால என் அப்பாவும் நம்ம... " என அவன் வார்த்தைகளை பாதியிலேயே நிறுத்த.... அவளின் விழியில் முத்துக்கள் துளிர்த்தது....

ஜானவி சட்டென அவனை கட்டி கொண்டாள்..அவனும் அவளை அணைத்து கொள்ள "அபி என்னால புரிஞ்சிக்க முடியுது ஆனால் அது முடிஞ்சு போனது இனிமேல் அத பத்தி பேச வேண்டாம்... நான் உன் கிட்ட இங்க ஒன்னு காட்டணும்" மெல்லிய குரலில் அவள் கூறவும் அவன் கண்களில் தேங்கிய நீரை துடைத்து கொண்டவன் "சொல்லு ஜானு என்ன காட்டனும் " எனவும்

"ஓகே நான் காட்றேன் ஆனால் அவங்கள பர்ஸ்ட் இங்கிருந்து அப்படி போக சொல்லு" எனவும் அவனும் அவர்களை சற்று தொலைவில் அனுப்பி வைத்தான்..

அவளோ அவனை தன்னுடன் இழுத்து கொண்டு ஊஞ்சல் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அவனை அந்த ஊஞ்சலில் அமரவைத்து விட்டு அவளும் அவன் அருகில் அமர்ந்தாள்..

"ஜானு சொல்லு உனக்கு என்ன காட்டணும்.."என்றவன் கையை இறுக பற்றியவள் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவனும் அவன் ஒரு கரத்தை அவள் இடையில் சுற்றி வளைத்தவன் தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

"அபி அங்க பாரு" என வானில் உள்ள நட்சத்திரங்களை அவள் காண்பிக்க அதை பார்த்தவன் "வாவ் பியூட்டிபுல்" என்றான் அவன் ரசனையுடன்....

"முக்கியமா அந்த ரெண்டு நட்சத்திரங்கள்" என ஒரு பெரிய நட்சத்திரத்திரத்தையும் அதன் அருகில் இருந்த சிறிய நட்சத்திரத்திரத்தையும் அவனுக்கு அவள் காண்பிக்க ..

அவனோ சற்று குழம்பியவன் "ஜானு எனக்கென்னமோ எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கு எல்லாமே பிரைட்டா தான் இருக்கு" எனவும்

"அபி அந்த ரெண்டு நட்சத்திரமும் நமக்கு நெருக்கமானவங்க" என்றவளை பார்த்து குழம்பியவன் "யாரு?" என்க..

"அந்த பெரிய நட்சத்திரம் உன் அப்பா அந்த குட்டி நட்சத்திரம் நம்ம பாப்பா " என்றவுடன் அவன் விழியில் நீர் தேங்கியது... அவனோ அதையே உற்று நோக்கினான்.

...........
இரண்டு வருடங்களுக்கு முன்
ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு மதிக்கதக்க வயதுடையவர் உடல் நலக்குறைவால் அனுமதிக்க பட்டிருக்க.. அவரது தோழரோ அவர் அருகில் அமர்ந்து அவருக்கு தைரியம் கூறி கொண்டிருந்தார்..

சில நிமிடங்களில் அவருக்கு ஆபரேஷன் தொடங்கியது...அவர் தோழர் வெளியில் வந்து ஒருவருக்கு கைபேசியில் அழைப்பு விடுக்க அந்த நபரும் அங்கு வந்து சேர்ந்தார்..

அந்த நபர் மருத்துவமனை உள்ளே நுழைந்தவர் "டேட் என்ன ஆச்சு" பதட்டமுடன் வினவவும் அருகில் நின்றிருந்தவர் "அபிநயன் என் நண்பன என்னால இந்த நிலைமைல பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு பா.. உனக்கே தெரியும்ல எனக்கு இருக்க ஒரே பிரண்ட் அவன் தான்னு ..." என்றார் அவன் தந்தை பிரசாத் கண்ணீருடன்..

"எனக்கு தெரியும் டேட் அங்கிள்க்கு எதுவும் ஆகாது.. நீங்க கவலை படாதீங்க.." என ஆறுதல் கூறினான் அபிநயன்.

"அபிநயன் எனக்கு தெரியும் நீ ரொம்ப மெட்ச்சூடான பையன்.. நீ தான் அவன் மகளுக்கு ஆறுதல் சொல்லனும்.. என்னால அந்த பிள்ளை மனசொடஞ்சி போயிருக்கிறத பார்க்க முடியல.. அவளும் உன்னை போல தாயில்லா பிள்ளைப்பா .. அவளுக்கு அவ அப்பா மட்டும் தான்...அவன விட்டா அவளுக்கு யாரு இருக்கா சொல்லு"

"சரி டேட் .. நான் பாத்துக்குறேன் நீங்க கவலை படாதீங்க" என்றான் அபிநயன் எரிச்சல் நிறைந்த குரலில்..

"ஜானவி இங்க வாடா .." பிரசாத் அவளை உள்ளே அழைத்தார்..

ஜானவி உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஷேக்கரின் ஒரே மகள்....அவர்கள் கிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியில்  கடைசி வருடம் படித்து கொண்டிருப்பவள்...

அந்த கிராமத்தில் வசிக்கும் அழகிய பெண் என்றாலும் அவளின் கனவு லட்சியம் அனைத்தும் ஒரு பெரிய பட்டதாரி பெண்மணியாக வேண்டும் என்பது மட்டுமே..

அவள் தாய் இறந்ததற்கு பின் தந்தை தான் உலகம் என வாழ்ந்து கொண்டிருப்பவள் ஜானவி.

சிறு வயது முதலே அவள் மிகவும் அமைதியான பெண்,பொய் கூறும் பழக்கம் சிறிதும் இல்லாதவள் எதையும் முகத்திற்கு நேராக சொல்லிவிடுவாள்.

ஷேக்கரும் பிரசாத்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரும் உறவினர்கள் போல பழகி வந்தனர்.
அபிநயன் சிறு வயதில் குறும்புகார சிறுவன், அவன் எது செய்தாலும் ஜானவி பிரசாத்திடம் கூறி விடுவாள்.. இதனாலேயே அபிநயனுக்கு ஜானவியின் மீது வெறுப்பு உண்டாகியிருந்தது.அது இப்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது...

அபிநயன் அவளை கண்டவன் சற்று தயக்கமுடன் நீண்ட நாட்களுக்கு பின் அவளை மறுபடியும் பார்க்க போகிறோமே என்று நினைத்துக்கொண்டு நிற்க.

"டேய் அபி எப்படி டா அவளை பாக்காம தப்பிகிறது..எனக்கு அங்கிள் குணமாகனும்..எதுவா இருந்தாலும் நான் பொறுத்து போய் தான் ஆகணும் இன்னும் கொஞ்சம் நாள் தான.. " என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அவன் நிற்கவும் ..

ஜானவி அங்கு வரவும் அபிநயனோ முகத்தை திருப்பி கொண்டு நின்றான்..பிரசாத் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தார்..

ஷேக்கர் கடைசி நிலையில் இருப்பதால் அவரால் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.. அவரை மகிழ்ச்சியாக பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு மருத்துவர் அங்கிருந்து சென்று விட்டார்..

பிரசாத்தும் ஜானவியும் தலையை அசைத்தவர் ஷேக்கர் அனுமதிக்கப் பட்டிருந்த அறைக்கு செல்ல ஜானவி ஓடி சென்று மட்டும் அரை மயக்கத்தில் படுத்திருந்த தன் தந்தையின் மேல் சாய்ந்து கதறி அழுதாள்...

சேகர் அவளை கண் விழித்து பார்த்தவர் ஏதோ கூற அவளால் அதை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினாள் ஜானவி...ஆனால் பிரசாத் ஷேகர் என்ன கூறுகிறார் என்பதை புரிந்து கொண்டார்...

பிரசாத் அபிநயனை அழைக்க அவனும் உள்ளே சென்றவன் ஜானவியை பார்க்க... ஜானவியும் அவனை பார்த்தவள் வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.. அவனும் அவளை முறைத்தவன் வேறு புறம் முகத்தை திருப்பினான்..

பிரசாத் சிறிது குங்குமத்தை அபிநயனிடம் நீட்ட அவன் அவனின் தந்தையை புரியாமல் பார்க்கவும் இத ஜானவி நெத்தியில வெச்சு விடு.... இனிமே ஜானவி தான் நம்ம வீட்டு மருமக என்றார் பிரசாத் உரக்க குரலில்..

அபிநயன் தலையில் இடி விழுந்ததை போன்று உணர்ந்தவன் ஒரு நிமிடம் சிலையாகி நின்றான்...

அவரது பேச்சில் ஜானவியும்  பேரதிர்ச்சி அடைந்தவள் விழி விரித்து நின்றாள்...

அபிநயன் ஜானவியை எரிச்சலுடன் பார்த்தவன் அவன் தந்தை அருகில் சென்றான்..

டேட் நீங்க என்ன சொல்றிங்க எனக்கு புரியல.... நான் இவள கல்யாணம் பண்ணிக்கணுமா நோ டாட்.... என்னால முடியாது என்று கத்தியவனின் புறம் திரும்பி நின்றவர்

நீ தான் ஜானவிய கல்யாணம் பண்ணிக்கணும்...ஷேக்கர விட்டா ஜானவிக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமே இல்லை...
ஜானவி மாதிரி ஒரு பொண்ணு மருமகளா வரணும்ன்னு தான் எனக்கும் ஆசை... ஷேக்கரோட ஆசையும் அது தான்..இதுக்கு நீ சம்மதிச்சு தான் ஆகணும் அபி...என்று அவர் உறுதியாக கூறவும்

ஜானவி ஏதோ கூறும் முன் ஷேக்கர் அவள் கையை பிடித்து கொள்ள அவளால் எதுவும் பேச இயலாமல் கண்ணீர் மல்க நின்றிருந்தாள் ஜானவி..

அபிநயனின் விழிகளில் கண்ணீர் திரண்டன...பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் நின்றவனால் தன் தந்தையின் சொல்லுக்கு மறுபேச்சும் பேச முடியவில்லை அதே நேரத்தில் அவளை திருமணம் செய்து கொள்ளவும் மனம் வரவில்லை..

டேட் அவளோட சுவிட்ச்வேஷன் எனக்கும் புரியாம இல்லை அவளுக்கு நம்ம வேற விதத்துல ஹெல்ப் பண்ணலாம்... அத விட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்ன அர்த்தம் சொல்லுங்க...என்று அபிநயன் அவன் தந்தைக்கு எடுத்து கூற முயற்சித்தான் அபிநயன்...

அபிநயன் உனக்கு உண்மையிலேயே உன் அப்பா மேல பாசம் இருந்தா நான் சொல்றத செய் இல்லனா என்ன மறந்துடு... உன் அப்பாவோட வார்த்தையை என்னைக்கும் மீற மாட்டேன்னு நான் நம்புற... 

அப்பா ஆனா...என்று அபிநயன் கூறும் முன்

அபிநயன் என்னைக்குமே உன் வாழ்க்கை கெட்டு போகணும்னும் நான் நினைக்க மாட்டேன்பா ... ஜானவி ரொம்ப நல்ல பொண்ணு நீ அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை ரொம்ப சந்தோசமா இருக்கும்....நான் சொல்றத கேளுபா ...ஜானவி எப்படி இருந்தாலும் ஒரு வீட்டுக்கு மருமகளா போக போறவ ஏன் நம்ம வீட்டுக்கு மருமகளா வர கூடாது... அபி உனக்கு கொஞ்ச நேரம் டைம் தரேன் யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு என்று பிரசாத் தன் மகனுக்கு அவர் முடிவை எடுத்து கூறி சிறிது நேரம் அவகாசமும் கொடுத்தார்...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro