தென்றல் 13

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எல்லோரும் ஒவ்வொருவராக மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் மலை ஏற ஆரம்பிக்க ஆரம்பத்தில் ஆண்கள் ஒவ்வொருத்தராக ஏறி அங்கு பெண்களையும் கவனமாக ஏற்றி கேம்ப் இருக்கும் இடத்தை அடைந்தனர்.ஆண்களுக்கு தனி டெண்ட் மற்றும் பெண்களுக்கு தனி டெண்ட் அமைக்கப்படிருந்தது.எல்லோரும் வந்து  சேர்ந்ததும் அன்றைய நாள் மிகவும் ஜாலியாகவும் விளையாட்டுக்கள் நிறைந்ததாகவும் போய்க்கொண்டிருந்தது.

பகல் நேரம்  வரை விளையாடியவர்கள் கலைப்பாக உணர பகல் உணவை உண்ண ஆயத்தமாகினார்கள்.எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்ண ஆரம்பிக்கும் போது திவ்யாவின் அருகில் அர்ஜுன் உட்கார வர அவனை முந்திக்கொண்டு அவினாஷ் திவ்யாவின் அருகில் உட்கார்ந்தான்.இதை கண்ட அர்ஜுனுக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது.சாப்பிடும் போது திவ்யாவின் காதில் அவினாஷ் ஏதோ கூற அவளுக்கு புரை ஏறியது.இதை எல்லாம் கவனித்துகொண்டிருந்த அர்ஜுனுக்கு கோபம் தலைக்கேறி எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் அவினாஷ் திவ்யாவுக்கு கண் ஜாடை காட்டி செல்ல அவளும் சத்தமில்லாமல் பூனை போல அவன் பின்னால் சென்றாள். இதை எல்லாம் அவதானித்துக்கொண்டிருந்த அர்ஜுன் இவர்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிய ஆவல் கொண்டு பின்னால் செல்ல வந்த வேலை இடையில் ஜானவி அவனை மறித்து

"அண்ணா,அந்த சேப்டி டூல்ஸ்லாம் எங்க இருக்கு.என்னோட இந்த ஹேங்கிங் க்ளிப்ப அங்க வைக்கனும் " என்று கூற அர்ஜுன் அவளுக்கு அந்த இடத்தை காட்ட அழைத்து சென்றான். அர்ஜுனின் முக வாட்டத்தை அவதானித்த ஜானவி

"டேய் அண்ணா என்ன முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு.க்ளைமேட் ஒத்துக்கலயா?ஏதும் டாப்லட் போடுறியா ?"என்றவளைஅவனோ

"கொஞ்சம் வாய மூடிக்கிட்டு வா ஜானவி.நானே கடுப்புல இருக்கேன்"என்றவவனை அவள் மனகுக்குள்

'அண்ணா எப்பவும் இப்படி எரிஞ்சி பேசமாட்டானே.சம்திங்க் ராங்.என்னவென்று கண்டுபிடிக்கலாம்'என்று எண்ணிக்கோண்டால்.ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த சேப்டி டூல்ஸில் அவரவர் பெயர் இருக்க ஜானவியும் தனது பெயரை ஸ்டிக்கரில் எழுதி ஒட்டி அவ்விடத்தில் வைத்துவிட்டு வந்தால்.

தனியாக சென்ற அவினாஷையும் திவ்யாவையும் காணாமல் அர்ஜுன் தவிக்க அவனை தவிப்பை இன்னும் அதிகமாக்கும் வகையில் அவர்கள் இருவரும் தனிமையில் ஏதோ சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்கள்.அவினாஷ் பேசுவதை கேட்ட அர்ஜுனுக்கு இதயமே நின்றுவிடும் போல இருந்தது.

"எனக்கு உன்னோட பாஸ்ட் லைப் பத்தி எல்லாம் முக்கியமில்ல.இனிமே இந்த நிமிசத்துல இருந்து எனக்காக மட்டும்...இல்ல நான் தப்பா சொல்லிட்டேன் நம்ம காதலுக்காக மட்டும் வாழனும்.நீ  வாழ்க்கையில இவ்வளவு நாளும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சேன்னு தெரியும்.இந்த கம்பனில வந்து சேர்ந்ததுக்கு அப்புறமாத்தான் உன் லைப்ல ஒரு நல்ல மாற்றம் வந்திருக்குதுன்னும் தெரியும்"என்று கூறிய அவினாஷை திவ்யா

"வேற"என்று புன்னகை மாறாமல் கேட்டாள்.

"ஆரம்பத்துல உன் மேல உன் அழக பார்த்து மட்டும்தான் காதல் வந்தது.அதுவும் அந்த காதோரத்துல இருக்குற மச்சம் இருக்கே.அதை கடவுள் எப்படித்தான் படைச்சாரோ தெரியல.கடைசியா சொல்ரேன் நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சினிமா டயலாக்லாம் பேசமாட்டேன்.ஆனா நீ கிடைச்ச என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.நீயும் அதையே நினைச்சின்னா என் வாழ்க்கைய நல்லதாக்க வா" என்று பேசி முடித்தவனை திவ்யா புன்னகையுடன்

"நீ ஒன்னும் யோசிக்காத அவினாஷ்.உன் வாழ்க்கை அழகா மாற இந்த திவ்யா என்னைக்குமே உனக்கு உதவியா இருப்பா. பட் இது நம்ம ரெண்டு பேரும் சம்பந்தப்பட்ட விசயம் இல்ல.நான் அண்ணாகிட்டயும் ஷாக்சிகிட்டயும் பேசிட்டு என்ன பண்ணலாம் என்று சொல்ரேன்" என்றவளை அவினாஷ் கண்களில் நன்றியுடனும் உதட்டில் புன்னகை ததும்ப பார்த்தான்.இவர்கள் இருவரும் பேசியதை கேட்ட அர்ஜுனின் மனமோ தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்தினான்.என்று அவளை முதன் முதலாக அழுத முகத்துடன் ஹாஸ்பிடலில் பார்த்தானோ அன்றே அவள் அவனின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது இப்போதுதான அவனுக்கு அது காதல் என்று புரிந்தது.அமர்ந்தது மட்டுமின்றி அந்த இடத்தை  வேறு எவரும் நிரப்ப முடியாத அளவுக்கு அவனை பித்துக்கொள்ள செய்து விட்டாள் என்பது அவனுகு இந்த சில நாட்களாகத்தான் தெரிந்தது.இந்த டிரிப் முடியும் முன்னரே அவளிடம் தன் காதலை சொல்லலாம் என நினைத்தவனுக்கு இவர்களின் இந்த பேச்சு ஒரு பெரிய இடியாகவே இருந்தது.

அர்ஜுனின் மூளையில் ஒரு விசயம் மட்டும் நன்றாக ஓடியது.அவினாஷ் தெளிவாகவே கூறிவிட்டான்.திவ்யா இல்லாவிட்டால் தன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுப்பேன் என்று.ஆனால் தன்னால் அப்படி இருக்க முடியாது என்றும் தன் வாழ்க்கையில் திவ்யாவை விட்டால் வேறு பெண்ணுக்கு இடமில்லை என்பதையும் உணர்ந்துகொண்டான்.

திவ்யாவிடம் வந்த ஷாக்சி

"ஹேய் திவ்ஸ் இங்க மூனு லவ் சீன் ஓடுதுடி" என்றவளை திவ்யா

"ஷாக்ஸ் என்ன சொல்ர?யாரு யாருடி ?"என்றவளை ஷாக்சியோ
"ரெண்டு பசங்க , ஒரு பொண்ணு" என்றால்.இவள் யாரை குறித்து பேசுகின்றால் என்று புரியாமல் ஷாக்சியை திவ்யா பார்க்க

"அது வேற யாருமில்லை.நம்ம கீர்த்தி கண்டிப்பா எனக்கு வில்லியா வருவா போல.அவ கண்ணுல சும்மா காதல் அள்ளுது.அப்புறம் இந்த அவினாஷும் அர்ஜுனும்.பய புள்ளைங்க முழியே சரி இல்லை.கடப்பாரைய முழுங்கினவங்க மாதிரி திரியுரானுங்க.எல்லோரும் என்கிட்ட மாட்டாமலா போவாங்க.அப்ப இருக்கு" என்றவளை திவ்யா புன்னகையுடன் கேட்டுக்கொண்டாலும்

"உனக்கெல்லாம் கீர்ர்த்தி வில்லியா வர மாட்டா.அதுக்கு நான் உத்தரவாதம்" என்றவள் மனதுக்குள்

'அவினாஷ் பய மேட்டர் நமக்கு தெரியும்.இவ என்ன புதுசா அர்ஜுனையும் இதுல சேர்க்குறா.ஹ்ம்ம்ம் அவன் கிட்ட போட்டு வங்கினா சரி' என்று நினைத்துக்கொண்டாள்.

எல்லோரும் உண்டு முடித்ததும் ஷாக்சியை நோக்கி மித்ரன் வரப்போக இடையில் வந்த ஜானவி

"ஹாய் மித்ரன் எப்படி இருக்கீங்க.பார்த்து ரொம்ப நாளாச்சு உங்க எல்லாரையும்" என்று கூறினால்.மித்ரனும் புன்னகைத்கு சகஜமக  அவளிடம்

"ஆமா காலேஜ் படிக்கும் போது ப்யூட்டி குயீனா சுத்திக்கிட்டு இருந்த ,ஆமா இப்பவும் அதே அமைதியன பொண்ணுதானா? "என்றவனை ஜானவியோ

'என்னடா காலேஜ்ல எவளையும் பார்த்து ஒரு  வார்த்தை பேசாதவன் ப்யூட்டி குயீன் அது இதுன்னு பேசுரான்.ஹ்ம்ம் பார்க்கலாம் நம்ம  வேல ஈசி ஆகுதா இல்லயான்னு'எனறு எண்ணியவள்

"இப்பதான் ஸ்டடீஸ் முடிச்சிட்டு வந்தேன்.அப்பாவாளையும் இப்போலாம் முன்ன மாதிரி பிஸ்னஸ் பார்த்துக முடியல.அண்ணாக்கு அவரோட பிஸ்னஸ்ச  பார்த்துக்க இஸ்டமில்ல.கோடிக்கணக்குல அப்பாவோட பிஸ்னஸ் இருந்தும் இவன் ஏதோ தனக்கு  மனசுக்கு பிடிச்ச பிஸ்னஸ்தான் பண்ணுவேன்னு இத பண்றான்.அதுவும் பேங்க்ல லோன் எடுத்து.நல்லவேலை சூரிட்டிக்கு வெளி ஆளுங்க கிட்ட போகாம அப்பாகிட்ட வந்தானே அது வரைக்கும் பரவாயில்லை" என்றவளை

"வாவ் செம்ம ஜானவி.காலேஜ்ல சுட்டி பொண்ணா திரிஞ்ச நீ இனிமே மல்டி மில்லியன் டேர்ன் ஓவர் ஆகுற பிஸ்னச பார்த்துக்க போற.உங்க அப்பா பிஸ்னஸ பார்த்துக்க போறேன்னு சொன்னதும் ரொம்ப ஹாப்பியா இருக்கு.செம்ம.அப்படியே கண்டினியூ பண்ணு.ஏதும் ஹெல்ப் வேணும்னா கேளு" என்று கூறிய மித்ரனிடம் ஜானவி

"எந்த மாதிரி ஹெல்ப் வேணும்னாலும் செய்வீங்களா மித்ரன்?"என்று தலையை சாய்த்து கேட்க அவள் கேட்டதில் ஒரு நிமிடம் தடுமாறிய மித்ரன்

"நீ என்ன என் கம்பனியவா எழுதி கேட்க போற.உனக்கு எப்போ என்ன ஹெல்ப் வேணுமோ அப்போ கேளு.ஐ அம் ஆல்வேஸ் ரெடி டு ஹெல்ப் யு" என்று கூற அவளும் புன்னகைத்து சரி என தலை அசைத்தால்.அவள் அவனிடம் இருந்து கொள்ளை அடிக்க போவது எது என்று அறியாமல்.

இங்கு ஷாக்சியின் மனநிலையோ எது என்று சொல்ல தெரியாமல் அலைக்கழிந்து கொண்டே இருந்த்தது.சில நேரங்களில் மனம் அமைதியாக இருந்தாலும் பல நேரங்களில் தன் வாழ்க்கை கடைசியில் எங்கே செல்லும் என்பது புரியாத புதிராகவே இருந்தது அவளுக்கு.

எல்லோரும் மலையில் இருந்து அன்றைய நாளை முடித்துக்கொண்டு கீழே இறங்கும் வேலை அவரவர் சேப்டி கிட் ஐ (safety Kit) எடுத்துக்கொண்டு கீழே இறங்க ஆரம்பிக்க திவ்யாவை தேடிய மித்ரன் அவள் தூரத்தில் அவினாஷுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.எல்லோரும் கீழே இறங்க அவினாஷையும் திவ்யாவையும் நோக்கி மித்ரன்

"நீங்க ரெண்டு பேரும் இப்போ இறங்குங்க.நானும் அர்ஜுனும் லாஸ்ட்டா இறங்குறோம்" என்றவனை திவ்யா

"அண்ணா என்னோட சேப்டி கிட் உள்ள இருக்கு இரு நான் எடுத்துட்டு வரேன் "என்றவளை மித்ரன்

"வேணாம் நீ என்னோடத போட்டுக்க.நான் உன்னோடத எடுத்து வரேன்.டைம் ஆச்சு.முதல்ல நீங்க ரெண்டு பேரும் இறங்குங்க "என்றான்.முதன் முதலாக அர்ஜுனுக்கு மித்ரன் மீது ஆத்திரம் வந்தது.இவனே எங்கு இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடுவானோ என்று.

கடைசியில் மித்ரனும் ,அர்ஜுனும் இறங்க மித்ரனின் சேப்டி க்ளிப் விலகி தரைக்கு ஒரு 20 அடி இருக்கும் போது கீழே விழுந்தான்.

——————-
im_dhanuu புதிய கதை ஒன்று ஆரம்பித்துள்ளார்கள்.
"என் காதல் நீயல்லவா" கண்டிப்பா படிச்சிட்டு சப்போர்ட் பண்ணுவமா?
அப்படியே "நினைத்தேன் வந்தாயடா"வையும் முடிச்சிடிங்க.இல்ல அவ்ளோதான்..ஆஆஹ்.

tharakannan சகோவின் "நெஞ்சமெல்லாம் காதல்" ஸ்டார்டிங்கே சும்ம் அள்ளுது..கண்டிப்பா எல்லோரும் படிங்க..
narznar இன் "பச்சை மண்ணுடா" சூப்பரா இருக்கு..அதையும் படிச்சிடுங்க மக்காள்ஸ்...

bhagiyalakshmi அக்காவின் "நின் முகம் கண்டேன்" எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று.சூப்பரா இருக்கும்.படிக்காதவங்க படிங்க..

வேற ஏதும் புது கதைகள் இருந்தாள் இன்பொக்ஸ் செய்ங்க..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro