தென்றல் 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அம்மா "என்று அலறிக்கொண்டு கீழே விழுந்த மித்ரனை எல்லொரும் ஓடிச்சென்று பார்க்க அவனோ மிகவும் வலியில் துடிப்பது எல்லோருக்கும் புரிந்தது.அர்ஜுனும் ,instructor உம் கீழே வந்து ஸ்ட்றெச்சரில் மித்ரனை துக்கி வைத்தபின் உடனே ஆம்ன்யூலன்ஸிற்கு கால் செய்து  மித்ரனை ஹாஸ்பிடல் அழைத்து சென்றனர். இவை எல்லாவற்றையும் பிரமை பிடித்தவள் போல் திவ்யா பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் எதுவும் பேசாமல் இருப்பதைக்கண்ட ஷாக்சி

"ஹேய் திவ்யா,இங்க பாரு "என்று அவளை உலுக்க அதிர்ச்சியில் இருந்து மீண்டவள்

"அண்ணா......அண்ணாக்கு எப்படி..ஐயோ எல்லாமே என்னாலதான் முதல்ல அப்பா ,அப்புறமா அம்மா இப்போ அண்ணன்..."என்று வாய்க்கு வந்ததை உளரியவளை ஷாக்சி இருக்கி அணைத்து

"இங்க பாரு திவ்யா, அண்ணாக்கு எதுவுமே இல்ல.லேசா அடிபட்டிருக்கு அவ்லோதான், குணமாகிடும் ஒக்கே.நம்ம முதல்ல ஹாஸ்பிடல் போய் பார்க்கலாம்சரியா"என்றவளை அவளும் சரி என்று தலை அசைத்தவள்

"ஷாக்சி அண்ணாக்கு ஏதும் ஆச்சின்னா நான் உயிரோட இருக்கமாட்டண்டி.இது எங்க அண்ணா மேல சத்தியம்"என்றவளை ஷாக்சி இப்போது எதற்காக திவ்யா  இப்படி பிரமை பிடித்தவள் போல உளரிக்கொண்டிருக்கின்றால் என்று புரியாமல் யோசனையாக இருந்தவளை ஜானவி

"சரி ரெண்டு பேருமே வாங்க ,நம்ம ஹாஸ்பிடல் போலாம்" என்று கிளம்பினர்.

ஹாஸ்பிடலை அடையும் வரை திவ்யா எதுவுமே பேசவில்லை.ஏதோ பேச எடுத்த ஜானவியையும் ஷாக்சி கண்காளாலேயே எதுவும் பேச வேண்டாம் என தடுத்தால் .ஹாஸ்பிடல் உள் நுழைந்ததும் அர்ஜுனை கண்டவர்கள் அவனிடம் சென்று டாக்டர் ஏதும் சொன்னார்களா? என்று கேட்க அவனோ செக் அப் முடிந்த பின்னே எதுவும் கூறுவார்கள் என்று கூறி அமைதியாக இருந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து மித்ரனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் வெளியில் வர எல்லோரும் அவர்களை சூழ்ந்து கொள்ள இருவரை மட்டும் உள்ளே வர சொல்லிவிட்டு டாக்டர்கள் அவர்களின் அறைக்குள் சென்றனர்.யார் உள்ளே செல்வது என்றிருக்க அர்ஜுனும் ஷாக்சியும் சென்றனர்.

"டாக்டர் இப்போ எப்படி இருக்கு, ஏதும் ப்ராப்ளம் இல்லையே"என்ற அர்ஜுனை பார்த்து சீப் டாக்டர் பேச ஆரம்பித்தார்.

"இங்க பாருங்க,அவரு உயரத்துல இருந்து விழுந்ததுல ஸ்பைனல் காட் ல பலமா அடி விழுந்திருக்கு.அவரால இனிமே எந்திரிச்சி நடக்க முடியுமான்னு தெரியாது,அப்படியே நடந்தாலும்...சரி அதல்லாம் பிறகு உள்ள விசயங்கள்.இப்ப அவசரமா ப்ளட் தேவைப்படுது "என்ற டாக்டரை அர்ஜுன்

"டாக்டர், அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல.நாங்க ப்ளட் டொனேட் பண்றோம் நீங்க மேற்கொண்ட ஆக வேண்டியத பாருங்க" என்று கூற டாக்டரோ

"அதுலதான் சிக்கலே இருக்கு.அவரோட ப்ளட் க்ரூப் ரொம்ப ரெயார் ஆனது.எங்க கிட்ட அந்த ப்ளட் இப்போ ஸ்டாக் இல்லை.அதே க்ரூப்ல உள்ள எந்த டோனரும் எங்க ப்ளட் டோனர்ஸ் லிஸ்ட்லயும் இல்ல"என்றார்.

"அப்போ வேற ஏதும் வழி இல்லையா"என்று ஷாக்சி கேட்க டாக்டரோ

"வேற ஏதும் வழியே இல்லமா.இன்னும் 2 மணி நேரத்துத்துக்குள்ள் ப்ளட் கிடைச்சாகனும்.இல்லன்னா அவர காப்பாத்த முடியாது"என்று நிஜமான கவலையுடன் கூறியவரை இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் .

டாக்டரிடம் பேசிவிட்டு வெளியில் வந்த இருவரையும் எல்லோரும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது என்று கேட்க திவ்யாவோ இருவரும் அமைதியாக இருப்பதைக்கண்டவள் கோவம் வந்து ஷாக்சியை உலுக்கி

"என்னடி எதுவும் பேசாம இருக்க.அண்ணாக்கு என்னாசி?டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று சத்தமிட அவளை அமைதி செய்த ஜானவி அவளும் இவர்களிடம் இதையே கேட்டாள்.உள்ளே நடந்தவற்றை அர்ஜுன் கூறியதை கேட்ட பொழுது அழுது கொண்டிருந்த திவ்யா உடனே தனக்கும் மித்ரனுக்கும் ஒரே ப்ள்ட் க்ரூப்தான் என்று கூற எல்லோரும் ஆச்சரியமடைந்தனர்.ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது.வழமையாக ஒருவரிடம் இருந்து இரத்தம் எடுத்து குறைந்தது 4 மாதங்களுக்குள் மறுபடியும் இரத்தம் எடுக்க மாட்டார்கள்.அதுவும் திவ்யா 2 வார்ங்கள் முன்புதான் அவசரமாக ஒருத்தருக்கு இரத்தம் தேவை என டொனோட் பண்ணியிருந்தால்.இது ஷாக்சிக்கும் ,மித்ரனுக்கும் மட்டுமே தெரியும்.இது தெரிந்த ஷாக்சி திவ்யாவை பார்த்து

"ஏண்டி நீ 2 வாரம் முன்னாடிதானே ப்ளட் டொனேட் பண்ண.இப்போ எப்படி மறுபடி பண்ண போறே.அதுவும் இப்போ 2pint ( பொதுவாக ஒரு pint தான் ஒரு தடவையில் ஒருவரிடம் இருந்து எடுப்பார்கள்) தேவைப்படுது.லூசு மாதிரி பேசாத.நம்ம வேற ஏதும் டிரை பண்ணலாம்" என்றவளை திவ்யா பளார் என்று அறைந்தாள்.

"நீ யாருடி எங்கண்ணனுக்கு ப்ளட் கொடுக்க வேண்டாம்னு சொல்ரதுக்கு.நான் செத்தாலும் பரவாயில்லை .என் உசுர கொடுத்தாச்சும் எங்க அண்ணன நான் காப்பாத்துவன்"என்றவளை அப்போதுதான் அங்கு வந்த மித்ரனின் தந்தை திவ்யாவை அணைத்துகொண்டார்.மெதுவாக அவள் தலையை வருடிக்கொடுத்தவர்

"இங்க பாரும்மா யாரோட வாழ்வையும்,யாரோட சாவையும் மனிசன் நம்ம முடிவெடுக்க முடியாது.மித்ரனோட தலை எழுத்து என்னவோ அது அப்படியே நடக்கட்டும்.ஆனா தெரிஞ்சே உன்னையும் இழக்க எனக்குவிருப்பமில்லடா"என்றவரை விட்டு விலகி முறைத்த திவ்யா

"எல்லோருக்கும் ஒன்னு சொல்ரேன் கேட்டுக்கோங்க.டாக்டர்ஸ் கொடுத்த 2 மணி நேரத்துல 15 நிமிசம் போயிடிச்சி.இன்னும் 20 நிமிசம் போனதுக்கு அப்புறம் யாரும் ப்ளட் டொனேன் பண்ணாலும் பிரயோசனம் இல்லாம போயிடும்.இப்போ நீங்க யாராச்சும் இதுக்கு இடைல வந்திங்க அப்புறமா என்ன உயிரோட பார்க்கவே முடியாது" எனறு உணர்ச்சி மிகுதியால் கூறியவளை தடுக்க யாருக்குமே மனம் வரவில்லை.

திவ்யா இன் அருகில் வந்த அவர்களின் தந்தையோ அவளின் தலையை வருடி

"உனக்கு அப்படியே உங்க அம்மா மனசுடா.நமக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல ஆனா தனக்கு பிடிச்சவங்க நல்லா இருக்கனும்னு நினைக்கிற பாரு.இதே போலதான் உங்க அம்மாவும்" என்றவரை அவள் அணைத்து

"அப்பா உங்களுக்கு எப்படி"என்றவளை

"எனக்கு எல்லாமே தெரியும்டா.நீ யாரு ,எதுக்கு இங்க இப்படி வந்த,மித்ரன்கிட்ட எதுக்காக இப்படி பழகின எல்லாமே எனக்கு தெரியும்.இத நாம பிறகு பேசலாம்.நீ பயமே இல்லாம உள்ள போ.என் மகளுக்கும் மகனுக்கும் எதுவுமே ஆகாது சரியா.கடவுள் எப்போமே நம்ம பக்கம் இருப்பாரும்மா"என்று கூறி ப்ளட் டொனேட் செய்யும் அறைக்குள் திவ்யாவை அனுப்பிவைத்தார்.

சரியாக 5 மணி நேர போரட்டத்தின் பின் வெளியில் வந்த டாக்டர்கள் விஷ்வனாத்திடம்

"சார் உங்க பையன் உயிர காப்பாத்தியாச்சு.ஆனா..." என்று இழுக்க

"என்ன டாக்டர் எதுவா இருந்தாலும் சொல்லுங்க"என்றவரை டாக்டரோ

"முள்ளந்தண்டுல பலமா அடிபட்டிருப்பதால அவரால இப்போ நடக்கமுடியாது.அதுக்கு ஸ்பெசல் டிரீட்மண்ட் ஜேர்மனிலதான் இருக்கு.அந்த டிரீட்மண்ட் நீங்க எடுத்துக்கிட்டாலும் அவராள பழைய மாதிரி நடக்க முடியும்னு 100% உறுதியா கூற முடியாது" என்றவரை மித்ரனின் தந்தையோ

"டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல.என் பையன் தான் எனக்கு முக்கியம்.ஆகவேண்டிய காரியத்த பார்ப்போம்.அதுக்கு மேல கடவுள் விட்ட வழி"என்று கூற டாக்டரோ

"இப்ப இருக்குற அவரோட கண்டிசனுக்கு குறைந்தது 3 மாசம் டிராவல் பண்ன முடியாது.மூனு மாதம் கழிச்சி நீங்க டிரீட்மெண்ட்கு போறதுக்கு தேவையான ஹாஸ்பிடல் அண்ட் டாக்டர் அப்பாய்ன்மண்ட் நான் ஏற்பாடு பண்றேன்.ஆனா காசுதான் கொஞ்சம் அதிகமா செலவாகும்"என்றவரை விஷ்வனாத்தோ

"அப்ராக்சிமேட்டா எவ்வளவுன்னு சொல்ல முடியுமா "என்று கேட்க டாக்டர் கூறிய தொகையை கேட்டு அவருக்கு கொஞ்சம் அதிர்சியாக இருந்தது.டாக்டரை பார்த்துவிட்டு திவ்யாவின் அறைக்குள் அவளை பார்க்க சென்ற விஷ்வனாத் அவளின் தலையை வருடி

"இப்ப எப்படிம்மா இருக்க "என்று கேட்டார்.திவ்யாவோ

"நான் நல்லா இருக்கேன்பா.அண்ணா எப்படி இருக்காங்க.ஆமாம் டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க.?எனக்கு இப்பவே அண்ணாவ பார்க்கனும" என்றவளை மெதுவாக அணைத்தவர் டாக்டர் கூறியவற்றை கூறியதும் அதைக்கேட்டவள் கதறி அழ துவங்கினால்.இவளின் அழுகையை கண்டு எல்லோரும் உள்ளே வந்து என்னவென்று கேட்க அவர் டாக்டர் கூறியவற்றை கூறினார்.எல்லோரும் இன்னும் 3 மாதம் இருப்பதால் எப்படி சரி பணத்தை ஏற்பாடு செய்யலாம் என்று ஆறுதல் கூற விஷ்வனாதனக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது தன் மகனை காப்பாற்ற தன் கம்பனியை விற்றால் மாத்திரமே முடியும் என்று.

———————-
முடிவுற்ற கதைகள் ...

சிலர் கதைகள் முடிவுற்ற பிறகே படிக்க ஆரம்பிப்பார்கள்.அப்படி யாரும் உங்கள் நண்பர்கல் இருந்தாள் அவர்களுக்கு
Nivethamagathi இன் "காதலின் மொழி" ஒரு சூப்பரான ஸ்டோரி.
பாண்டஸி,பிக்சன் பிரியர்களுக்கு priyadharshini12 இன் "மந்திர தேசம்" ரொம்ப அழகா இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இது இரண்டும் முக்கியமானது.
அடுத்து dharshinichimba வின் "உன் விழிச்சிறையில்" மிகவும் பிரமாதமாக இருக்கும்.மணிரத்னம்மின் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் சிரப்பாக இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை .நான் அக்காவை கூப்பிடுவது லேடி மணிரத்னம் என்று.அதிலேயே நமக்கு விளங்கும் ரொமான்ஸ் காட்சிகளை எவ்வளவு அழகாக வைப்பார்கள் என்று.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro