தென்றல் 27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஷாக்சி தன் காதலை மித்ரனிடம் கூறியதை அவனால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதே நேரம் அதை மறுக்கவும் முடியவில்லை. ஷாக்சிக்கு நடந்த கொடுமை அவன் அறிந்திருந்தாலும் அவன் என்றுமே அவளை பரிதாபக் கண் கொண்டு பார்த்தது கிடையாது. அதே நேரம் அவனால் அவளின் காதலை தட்டிக்கழைக்கவும் முடியவில்லை. எது எப்படியாயினும் அதன் போக்கிலேயே சில நாட்கள் விட்டுவிடலாம் என எண்ணினான்.

அடுத்த வந்த  நாட்களில் மித்ரனின் டிரீட்மென்ட்டுக்காக யூ எஸ் செல்ல தேவையான ஒழுங்குகளை தயார் செய்தனர். ஒரு மாதத்தில் டிரீட்மென்டை முடித்து வந்துவிடலாம் என்றிருந்தாலும் கம்பனி இப்போது விரிவாக்க நிலையில் இருப்பதால் பொறுப்புக்களை ஒருவரிடம் கொடுத்தே ஆக வேண்டிய நிலையில்   மித்ரனின் தந்தை தனது கம்பனி பொறுப்புகளை கம்பனியில் 15% செயர் வைத்திருக்கும் தனது நண்பனுக்கு கொடுக்க அவரோ தனது மகன் ரோஹித்திடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார். ஜானவியிடம் 20% மான செயர்கள் இருந்த போதிலும் விஷ்வனாத் மீது கொண்ட நல்லெண்ணம் காரணமாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மித்ரன், ஷாக்சி, திவ்யா மற்றும் விஷ்வனாத் நால்வரும் யூ எஸ் சென்றனர். அங்கு அவர்களை திவ்யாவின் வகுப்புத்தோழன் தீபக் (அதாங்க நம்ம "என் உயிரினில் நீ" ரேனுவோட ஆளு ) ரிசீவ் செய்ய வந்திருந்தான். அவர்கள் எல்லோரையும் அழைத்துக்கொண்டு அவனின் வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.

அடுத்த நாள் ஹாஸ்ப்பிடல் சென்று மித்ரனின் சிகிச்சையை ஆரம்பித்தனர். நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க ஒரு நாள் பார்மசியில் மருந்து வாங்க சென்ற ஷாக்சி அங்கிருந்த நபரை கண்டதும் அதிர்ச்சியில்

"ஹேய் சதீஷ் எப்படி இருக்க? எவ்வளவு நாளாச்சி உன்ன பார்த்து" என்று கூற அவனோ சந்தோசத்தில்

"ஹேய் ஷாக்சி எப்படி இருக்க. காலேஜ்ல பார்த்ததுப்பா எப்படி இருக்க? ஆமா எப்போ யூஎஸ் வந்த ?ஏதும் ஜாப் பண்றியா ?" ஏன்று கேட்க அவள் தாங்கள் யூ எஸ் வந்த காரணத்தை கூறியவள் ஜானவிதான் இதற்கு காரணம் என்பதை கூறாமல் மறைத்துவிட்டாள். ஷாக்சி கூறியவற்றை கேட்டவன் தான் உடனே மித்ரனை பார்க்க வேண்டும் என்று கூறி அவன் இருந்த ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர்.

ஷாக்சியுடன் வரும் சதீஷை கண்ட திவ்யாவின் மனதில் ஏதோ ஒரு கவலை தோன்ற அதை கண்ட சதீஷ் 

"ஹேய் திவ்யா எப்படி இருக்க? சுகமா இருக்கியா?" என்றவன் மித்ரன் இருக்கும் நிலையை கண்டு ரொம்பவும் வருத்தப்பட்டான். என்னதான் இருந்த போதும் தனது உயிர் நண்பனாச்சே.சதீஷை கண்ட மித்ரன் கண்கள் கலங்க அவனை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டான்.  

இருவரும் தங்கள் காலேஜ் நாட்களைப்பற்றி பேசிகொண்டிருக்க கடைசியில் மித்ரன் சதீஷையும் அவனது அண்ணனையும் வெளுத்து வாங்கிய சீன் வரவும் திவ்யா அவ்விடத்தில் இருந்து நகரப்பார்த்தவளை சதீஷ்

"ஹேய் திவ்யா, என்ன கில்டியா பண்றியா? எங்கண்ணன் ஒன்னும் உன்னை நினைச்சிக்கிட்டு தேவதாஸ் மாதிரிலாம் சுத்தலப்பா. உனக்கு ஒன்னு தெரியுமா. அந்த சண்டைக்கு அப்புறமா நாங்க எல்லோரும் யூ எஸ் கு வந்துட்டோம். அப்பா அதுக்கு முன்னாடி இருந்தே யூ எஸ் ல க்றீன் காட்கு டிரை பண்ணிட்டு இருந்தாரு. திடீரென்று அது கிடைக்கவும் அண்ணன தவிர மத்த எல்லோரும் யூ எஸ் கிளம்பிட்டோம். அண்ணன் ஊருல தனியா இருக்க வேணாம்னு எங்க மதுரைல இருக்குற எங்க பெரியம்மா வீட்ட போயிட்டான். ஏன்னா அவனோட ரிசேர்ச் பேபர் ஒன்னு பெண்டிங்க் இருந்திச்சி. சோ அதை முடிக்காம அவன் யூ எஸ் வரல்லன்னு சொல்லிட்டான். மதுரைலயே ஒரு காலேஜ்ல பார்ட்டைமா ஜாப் பார்த்துக்கிட்டான். இது எல்லாம் தெரியாத நம்ம காலேஜ்ல எவனோ நாங்க மித்ரன் எங்கள அடிச்சதாதலதான் அவமானம் தாங்க முடியாம ஊர விட்டு வந்துட்டோம்னு புரளிய கிளப்பிவிட்டிருச்சி" என்று கூற திவ்யா அவன் கூறியதை நம்பாமல்

"சதீஷ் நீ சொல்ரது நிஜமா?" என்று கேட்க அவனோ அவளை கலாய்க்க எண்ணி

"இல்லப்பா எங்கண்ணன் இப்பவும் உன்னத்தான் லவ் பண்றான்" என்று கூறி சத்தமிட்டு சிரிக்க தொடங்கியவன் தன் மொபைலை எடுத்து யாருக்கோ கால் செய்தவன்

"ஹலோ அண்ணி எங்க இருக்கீங்க? அண்ணன் என்ன பண்றாரு?" என்று கேட்டவனை எதிர்முனையில் இருந்த பெண்

"ப்ரொபசர் சார் பையனுக்கு பெம்பர்ஸ் மாத்திக்கிட்டு இருக்காருப்பா. ஆமா நீ எப்போ இந்தியா வரே?" என்று கேட்க சதீஷோ

"அண்ணி சீக்கிரமாவே வந்துடுவேன். அண்ணனையும் பாப்பாவையும் கவனமா பார்த்துக்கோங்க" என்று கூறி காலை கட் செய்தவன் திவ்யாவை பார்த்து

"யாருன்னு யோசிக்கிறியா எல்லாம் உன்ன காதலிச்ச என் அருமை அண்ணன்தான். பயபுள்ள மதுரைக்கு போய் சரியா ஒரு மாசத்துள அங்க ஒரு பொண்ண கரக்ட் பண்ணிட்டான். கரக்ட் பண்ணிட்டான்னு கொஞ்சம் தப்பா இருக்கும் ஹ்ம்ம் லவ் பண்ணிட்டான். எனக்கு ஏகப்பட்ட கடுப்பு. இவனுக்காக நம்ம ப்ரெண்ட் கூட சண்டை போட்டோமே இவன் இப்படி பண்ணிட்டானேன்னு. ஏண்டா இப்படி பண்ணேன்னு கேட்டதுக்கு சொன்னான் பாரு ஒரு பதில் 'திவ்யா என்ன பிடிக்கலன்னு சொல்லிட்டா. அதுக்குன்னு நான் சாமியாராவா இருக்க முடியும். இந்த காலத்துல சாமியாருங்களே சும்மா இருக்கானுங்க இல்லை. நான் எப்படிடா இருப்பேன். அதுவும் இந்த பொண்ணு திவ்யாவ விட ரொம்ப அழகுடா. அதான் ப்ளாட் ஆகிட்டேன். ஆனா தயவு செய்து அவகிட்ட திவ்யா மேட்டர சொல்லிடாத. அப்புறம் என்ன அடிச்சே கொன்னுடுவா. ஏன்னா உங்கண்ணி கொஞ்சம் டெர்ரர் பீசு'னு சொல்ரான். சரி பயபுள்ள பிழைச்சி போகட்டும்னு விட்டுட்டேன்"  என்று கூறினான். இதை கேட்டுக்கொண்டிருந்த மித்ரனும் ஷாக்சியும் விழுந்து விழுந்து சிரித்தனர். பல நாட்களின் பின் அவர்கள் எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்.

அதே நேரம் விஷ்வனாதின் கம்பனியில் புது எம் டி யை அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய மீட்டிங்கிற்கு ஜானவி அழகுப்பதுமை என வந்தாள். 

எல்லோரும் புதிதாக வரப்போகும் எம்டியை எதிர்பார்த்து காத்திருக்க கம்பீரமான தோற்றத்துடன் பாலிவூட் ஹீரோ போல உள்ளே வந்த ரோஹித் யாரையும் சட்டை செய்யாமல் தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன்

"குட் மார்னிங்க், டேக் யுவர் சீட் ஆள். நான் தேவையில்லாம பேச விரும்பல. நம்ம கம்பனியோட எல்லா feasible ஸ்டடீசும் படிச்சிட்டுதான் வந்திருக்கேன். சோ யாரு யாரு என்னன்ன செய்யனும்னு உங்களுக்கு ஈ மெயில் வரும். சோ அத மட்டும் பாலோ பண்ணுங்க நௌ ஆல் யூ ஆர் கோடு யுவர் சீட் அண்ட் இன்வெஸ்ட்டர்ஸ் மட்டும் இருங்க நம்ம டிஸ்கஸ் பண்ணலாம்" என்று கூறி வியாபாரம் சம்பந்தமாக அவன் கரைத்து குடித்திருந்தவற்றை செயல்படுத்த ஒரு கம்பனி தனக்கு கிடைத்து விட்டது என்ற திமிறில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசிய எல்லாமே தியரிட்டிக்கலாக சரியாக இருந்த போதிலும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாக காணப்பட அங்கிருந்தவர்கள் லேசாக தங்களுக்கு பேசிக்கொள்ள திடீரென்று ஜானவி

"நம்ம எதுக்கு இப்போ தேவையில்லாம டென்சன் ஆகனும். விஷ்வனாதன் சார் தன்னோட பொறுப்புக்களை ரோஹித் கிட்ட கொடுக்கிறேன்னு சொன்னப்போ நீங்க யாருமே எதிர்ப்பு தெரிவிக்கல்ல. சரி மிஸ்டர் ரோஹித் புதுசா ஏதோ டிரை பண்ணலாம்னு சொல்ராரு. செஞ்சிதான் பார்ப்போமே. அதுவும் நம்ம கம்பனி இப்போ பிஸ்னஸ் எக்ஸ்டன்ட்ல (வியாபார விரிவாக்கம்) இருக்கு. சோ இந்த நேரத்துல செயார் ஹோல்டர்ஸ் நம்ம சில ரிஸ்க் எடுத்துதான் ஆகனும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல ரோஹித் சொல்ரத செஞ்சி பார்க்கிறதுக்கு" என்று கூற அங்கிருந்தவர்கள் ஒரு பெண்ணே பயப்படாமல் கூறும் போது தாங்களும் அதை ஆமோதிக்கலாம் என்று தங்களுக்குள் பேசி 80% மான ஆதரவுடன் கம்பனியை ஸ்டாப் ரீ ஸ்ட்ரக்க்சரிங்கிற்கு (staff re structuring)அனுமதி அளித்தனர்.

கூந்தல் அலைபாய காந்தமென கவர்ந்திழுக்கும் கண்களுடன் ஜானவி பேசியதை கேட்டுக்கொண்டிருந்த ரோஹித் முதல் பார்வையிலேயே மனதுக்குள்

'என்னா பொண்ணுடா'என்று நினைத்துக்கொண்டான். மீட்டிங் முடித்து எல்லோரும் வெளியேற ஜானவி அருகில் வந்தவன் 

"மிஸ் ஜானவி, இந்த staff re structuring கு உங்க உதவி தேவப்படும்னு நினைக்கிறேன். ஏன்னா இங்க இருக்குற பல பேரு சம்பளத்த வாங்கிகிட்டு வேலை செய்யாம இருக்காங்க" என்றவனை கேள்வியுடன் நோக்கியவளை 

"எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறீங்களா. நான் கம்பனிக்கு வர முன்னாடி ஐடி டிபார்ட்மண்ட்ல சொல்லி எல்லோரோடயும் ப்ரொவ்சர் ஹிஸ்டரி எடுத்து பார்த்துட்டேன். ஆபீஸ் டைம்ல எவன் எவன் பேஸ்புக் போயிருக்கான், எவனெல்லாம் கிறிக்கட் மெட்ச் பார்த்த்ருக்கான் என்ற எல்லா டீடைல்சும் இருக்கு. ஆனா அத மட்டும் வெச்சி நம்ம டிசிசன் எடுக்க முடியாது. ஏன்னா இது ஒரு பெரிய ரிஸ்க்கான விசயம். நீங்க ஒரு 2 மாசமா கம்பனில இருகுறதால உங்களுக்கு இங்க இருக்குற ஸ்டாப்ஸ் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. சோ கொஞ்சம் ஹெல்ப் பண்ண் முடியுமா"  என்று கேட்டவனை ஜானவி சரி என்று தலை அசைத்தவள் மனதுக்குள்

'கம்பனிய எப்படி இழுத்து மூடவைக்கலாம்னு நம்ம ப்ளான் போட்டப்போ கடவுளா பார்த்து இவன அனுப்பியிருக்காரு. இவனோட அவசர புத்தி ஒன்னே போதும் கம்பனிய நஷ்டத்துல கொண்டு போக, இதுல staff re structuring கு நம்ம ஹெல்ப் வேற வேணுமாமே. எல்லா இடத்துலயும் நம்ம் ஆளுங்கள போட்டா சரி' என்று நினைத்துக்கொண்டாள்.

மறுபக்கம் ரோஹித்துக்கு இந்த அழகிய பதுமையுடன் தனியாக வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சந்தோசப்பட்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro