தென்றல் 26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பலர் என்னிடம்‌ கேட்டது கிறிஸ்த்தவர்கள்‌ தாலி கட்டுவார்களே என்று.ஒரு சிலர் கட்டினாலும்‌ அதில் அதிகமானவர்கள் தாலிக்கு இந்துக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.அதை ஒரு மாலையாகவே நோக்குவார்கள்.அதிலும் குறிப்பாக‌ இலங்கை கிறிஸ்த்தவர்கள் தாலி கட்டுவது மிக மிக அறிது. என் கிறிஸ்த்தவ நண்பர்களிடம் கேட்ட போது அவர்களுக்கு தாலி கட்டும் வழக்கமே தெரியவில்லை.மோதிரம்தான்‌ அவர்களின் வழமை என கூறினார்கள்.
தாலி சம்பந்தமான‌உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளேன்‌ என்‌ என்னுகிண்றேன்.
----_------_-----------------------_

"எல்லாம் சரி ரவி , ஷாக்சிக்கு இப்படி ஆச்சின்னு உனக்கு யாரு சொன்னா?" என்று கேட்க கொஞ்சம் தடுமாறியவன்

"ஆ..அது...நம்ம ஆபீஸ்லதான் சொன்னாங்க"என்று உளர தன்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாத திவ்யா

"ரவி சொல்ர பொய்ய கொஞ்சம் பொருந்த சொல்லுப்பா.இவளுக்கு நடந்தத்து எதுவுமே ஆபீஸ்ல யாருக்குமே தெரியாது.அப்புறம் நீ ஸ்டைல்லா இந்த டேபிள்ள வெச்சிருக்கியே ஐபோன்.அது உன்கூட யாரு இப்போ கால் பேசிக்கிட்டு இருக்காங்கன்னு தெளிவா காட்டிடிச்சி.இதுக்குதான் சொல்ரது ஐபோன்லாம் யூஸ் பண்ண தெரியாம பண்ண கூடாது.அப்புறம் இப்படி பல்பு வாங்க வேண்டி வரும்"என்றவள் கொஞ்சம் குரலை உயர்த்தி

"அம்மாடி குலவிளக்கே உன்னோட இந்த ரவி ப்ளான் ப்ளாப் ஆச்ச்சு.இனிமே புதுசா ஏதும் டிரை பண்ணும்மா"என்று கூற ரவி பேசிக்கொண்டிருந்த கால் தானாகவே கட் ஆகியும் அவனது மொபைலின் திரை ஒரு முறை ஒளிர்ந்து அணைந்தது.ரவியின் பக்கம் திரும்பிய திவ்யா

"நீ எப்படி மாட்டினேன்னு பார்க்குறியா அதி ரொம்ப சிம்பல் பா.நீ எங்க கிட்ட பேசும் போது யாரு கூடவோ கால்ல இருக்கேனு எனகு சந்தேகமா இருந்திச்சி.அதுவும் நீ புதுசா ஐபோன பார்க்கூறியா ,ஐபோன்ல பேசிக்கிட்டு இருக்கும் போது மெசேஜ் ஏதும் வந்தா ஸ்க்ரீன் ஆன் ஆகும்.ஆனா உனக்கு உடனே மெசேஜ காட்டாது.லாஸ்ட்டா நீ பேசிகிட்டு இருக்குற கால்தான் லாக்ஸ்க்றீன்ல இருக்கிறப்போ டிஸ்ப்ளே ஆகும்.என்னோட நல்ல நேரம் உனக்கு மெசேஜ் ஒன்னு வந்திச்சா அது உனக்கு தெரியல.என்னோட மேசையில வெளிச்சம் வருதேன்னு பார்த்தேன்.அது ஜானவின்னு இருந்திச்சி.நீ மாட்டிக்கிட்ட.நல்ல வேலைப்பா நீ இப்படி பண்ணே.ஒரு வேலை நீ நல்லவனா இருந்திருந்தா எங்கண்ணனுக்கு நான் ஷாக்சிய கல்யாணாம் பண்ணி வைக்க முடியாதுள்ள.ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்"என்று கூற ரவியோ 

"என்ன திவ்யா  ரொம்ப ஓவரா பேசுற.ஷாக்சி இங்க பாருடா, உன்ன பத்தி எல்லாமே ஜானவிதான் சொன்னா.ஆனா நான் அவ பேச்ச கேட்டு ஆடுற ஆள் இல்லம்மா புரிஞ்சிக்க.அவ எந்த நோக்கத்துல சொன்னான்னு எனக்கு தெரியாது.ஆனா அவ பண்ணதுல ஒரே ஒரு நல்லது நீ எனக்கு கிடைக்க போற.ப்ளீஸ் புரிஞ்சிக்கோமா"என்று கூற இப்போது ஷாக்சியை விட அதிகம் திவ்யா குழம்பி போனால்.தான் ஏதோ ஒன்று நினைக்க கடைசியில் அது தனக்கே பாதகமாகும் என்று நினைக்கவில்லை.இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த நினைத்த ரவி

"இங்க பாரு திவ்யா இப்பவும் நான் ஷாக்சிய லவ் பண்றேன்.உனக்கும் ஜானவிக்கும் இடைல என்ன பகைன்னு எனக்கு தெரியாது.வீனா உங்க பிரச்சினைல ஷாக்சிய இழுத்துவிட வேண்டாம்.நாங்க எங்க லைப்ப பார்த்து போய்க்கிறோம்.உங்க லைப்ப நீங்க பார்த்துக்கோங்க"என்று கூற இப்போது ஷாக்சி

"என்ன சொன்ன ரவி நம்ம வாழ்க்கையா.அன்னைக்கு மட்டும் திவ்யா இல்லைன்னா இன்னைக்கு என்ன புதைச்ச  இடத்துல புல்லு முளைச்சிருக்கும்.நீ அவள என்ன விட்டு போக சொல்ரேல்ல.ஹாஹா"என்று சிரித்தவள்

"இங்க பாரு ரவி , நீ நிஜமாவே என்ன இப்போ காதலிச்சிக்கா கூட என்னால உன்ன ஏத்துக்க முடியாது.ஏன்னா இப்போ நீ பேசுரது எல்லாமே போலியா இருக்கு.எனக்குதெரியும் ரவி உன்ன பத்தி.உனக்கு மத்தவங்க யூஸ் பண்ண எதையுமே யூஸ் பண்ண பிடிக்காதுன்னு.ஆமா எதுக்காக உன்னோட  கொள்கைகளை விட்டுக்கொடுக்குற.எனக்கு இப்படி ஆச்சின்னு பரிதாபம் பார்க்குறியா.உன் பரிதாபக் காதல நீயே வெச்சிக்கோ"என்று கூற உன்மையில் கோவம் கொண்ட ரவி அதை வெளிக்காட்டாமல்

"இங்க பாரு ஷாக்சிம்மா பரிதாபமோ இல்லை அன்போ எப்படி வந்தாலும் நமக்குள்ள இருகுறது காதல்தானேடா.அது ஏன் புரியமாட்டேங்குது.அப்புறம் திவ்யாவ விட்டு நீ விலகினா ஜானவி உன் வீட்ட நமக்கு மீட்டுத்தர்ரேன்னு சொல்லிருக்காடா"என்று என்று கூற இப்போது கோவம் கொண்ட ஷாக்சி

"ஓஹ் அப்போ அந்ஹ வீட்ட அவ நமக்கு , ஐ மீன் உனக்கும் எனக்கும் தர்ரேன்னு சொன்னதாலதான் நீ என்ன தேடிவந்திருக்க அப்படித்தானே.ஆமா யாரு வீட்ட யாரு சொந்தம் கொண்டாடுறது"என்று சத்தமிட எரிச்சலுற்ற ரவி

"என்ன விட்டா ரொம்ப ஓவரா போற.ஆமா உன் வீட்ட அடைய ப்ளான் பண்ணிதான் நான் உன்ன காதல் பண்ணேன்.உன் வீட்டோட வேல்யூ தெரியுமா உனக்கு.சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு.என்னைக்கு நான் உங்க வீட்ட பார்த்தேனோ அன்னைக்கே உனக்க் ஸ்கெட்ச் போட்டு உன்ன காதலிக்க வெச்சேன்.ஆமாடி உன் வீட்டுக்காகத்தான் நான் காதலிச்சேன்.எவ்வளவு நாள்தான் நானும் வாழ்க்கைல கஷ்டபடுறது.உன்னை வெச்சே வாழ்க்கைல செட்டில் ஆகலாம்னு ப்ளான் பண்ணேன்.இப்போ கூட நான் இதெல்லாம் ஏன் தெரியுமா சொல்ரேன் உனக்கு இன்னும் 2 வாரம் டைம் இருக்கு.அதுக்குள்ள நம்ம கல்யாணம் பண்ணிகிட்டு நீ திவ்யாவ விட்டு விலகி இருக்குறதுன்னா நம்ம லைப் சேப் அண்ட் செக்கியூர் ஆஹ் இருக்கும்.நட்பு அப்படின்னு சொல்லி உன் வாழ்க்கைய வீனாக்கிடாத ஷாக்சி.நல்லா யோசிச்சி பாரு"என்று கூற புன்னகை மாறாமல் எல்லாவற்றையும் கேட்டுகொண்டிருந்த ஷாக்சி

"நல்ல வேல ரவி நீ இத இப்பவே சொல்லிட்ட.நான் கூட உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லி உன் மனச காயப்படுத்தனுமே என்று ஒரே யோசனையா இருந்திச்சி.ஆனா இப்போ அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இல்லை.நீதான் தெளிவா சொல்லிட்டியே நீ எதுக்கு என்ன காதலிச்சேன்னு.அப்புறமா எனக்கு எங்க வீடு ஒரு விலை மதிக்க முடியாத பொக்க்கிசம்தான்.ஆனா அது நான் திவ்யாவோட ப்ரெண்ட்சிப்ப இழந்ததுதான் கிடைக்கனும்னா எனக்கு அது வேண்டாம்.கடைசியா நீ பண்ண எல்லாத்துகுமே தாங்க்ஸ்.இப்போ நம்ம போகலாமா "என்று கூற திவ்யா ஷாக்சியை பெருமையாக பார்த்துக்கோண்டிருந்தாள்.ஷாக்சி பேசியதை கேட்டு ஆத்திரம் கொண்ட ரவி

"என்ன பெரிய மகாராணினு நினைப்படி உனக்கு.ஏதோ எவன்கூடயோ இருந்து கெட்டு போயிட்டியே பாவம் உனக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு பார்த்தா ரொம்பதான் பேசுர.உன்ன மாதிரி வாழ்க்கைல இழக்க கூடாதத இழந்துட்டு நிற்கிறவள கல்யாணம் பண்ணிக்கிறதே பெருசு இதுல உனக்கு திமிரு வேறயா"என்று கூறியதை கேட்டு கோபம் கொண்ட திவ்யா

"இங்க பாரு ரவி இப்போ நீ என்ன சொன்ன கெட்டுப்போனவளா? அவளுக்கு நடந்தது அவளுக்கே தெரியாதுடா.நீயெல்லாம் ஒரு ஆம்பள.த்த்தூ.மரியாதையா இங்கிருந்து போயிடு இல்லைன்னா எங்க கிட்ட தப்பா பேசினேன்னு உன்ன போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்.இப்போ நாட்டுல இருகுற நிலமைக்கு போலீஸ் என்ன ஏதுன்னு விசாரிக்காம உன்ன நல்லா கவனிப்பாங்க"என்று கூற திவ்யா கூறியதை செய்தாலும் செய்வால் என பயந்தவன் அவ்விடத்தை விட்டு நகர 

"ஹேய் ஷாக்சி ப்ராப்ளம் சால்வ்ட்.இதுக்கா நீ அவ்வளவ்உ பயப்பட்ட.இப்போ பாரு எவ்வளவு ஈசியா முடிஞ்சது"என்று கூற ஷாக்சி கண்களில் கண்ணீருடன் 

"ஏன் திவ்யா என் வாழ்க்கைல இனி யாரு என்ன பார்த்தாலும் கெட்டு போனவ என்ற பேரு மாறாதுல.நான் என்ன பாவம் பண்ணேன் திவ்யா.எதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனை"என்று அவள் கைகைளை பிடித்துக்கொண்டு அழ திவ்யா

"லூசு சும்மா சும்மாலாம் அழாதடி.குருடன் கையில கல்லு கிடைச்சாலும் மரகதம் கிடைச்சாலும் அவனுக்கு ரெண்டுமே ஒன்னுதான்.ரவி கண் இருந்தும் ஒரு குருடன்.உன்ன மாதிரி ஒரு பொண்ண அவன் வாக்கைல மிஸ் பண்ணதுக்கு காலம் பூரா பீல் பண்ணுவான்.சும்மா போட்டு உன் மனச குழப்பிக்காத"என்று கூறி இருவரும் வீடு சென்றனர்.

வீட்டிற்கு வந்தவர்கள் மித்ரனிடம் எல்லாவற்றையும் கூற அவனோ

"ஷாக்சி எங்கள விட்டு போயிடு.ஜானவி எதுக்காக இப்படி பண்றான்னுலாம் தெரியல.ஆனா அவ எங்கள் எந்த லெவல்கும் போய் பழி வாங்குவான்னு தோனுது.சம்பந்தமே இல்லாம நீ இதுல மாட்டிக்காத.உன் வீட்ட மீட்டுகிட்டு நீயாச்சும் சந்தோசமா இரு "என்று கூற ஷாக்சி

"என்ன மித்ரன் ரொம்ப தியாகி மாதிரி பேசுரீங்க"என்றவளை திவ்யா

"இங்க பாருண்ணா அவ யாரோலாம் இல்ல.என்னோட அண்ணிய நீ எப்படி நமக்கு சம்பந்தமில்லாதவன்னு சொல்லலாம"என்று கூற மித்ரனோ 

"அதில்ல திவ்யா என்ன இருந்தாலும் ஷாக்சி...."என்று ஏதோ கூற வர திவ்யா

"அண்ணா நீயும் ரவி சொன்னே அதே வார்த்தைய சொல்லிடாதன்னா ப்ளீஸ்"என்று கூற மித்ரனோ

"ஹேய் அது இல்லம்மா , என்ன மாதிரி ஒரு முடத்த கட்டிக்கிட்டு இவ என்ன பண்ண போறா.அதுக்கு அவ என்ன கல்யாணம் பண்ணிக்காமலே இருக்கலாமே"என்று கூற திடீரென்று ஷாக்சி மித்ரனின் அருகில் வந்து 

"ஐ லவ் யூ மித்ரன்.இதுக்கு அப்புறம் நீங்க உங்கள பத்தி ஏதும் தரக்குறைவா பேசினே அவ்வளவுதான் என்ன மனுசியாவே பார்க்க மாட்டீங்க"என்று கூற என்ன நடக்கின்றது புரியாமல் நின்ற திவ்யாவும் மித்ரனையும் பார்த்து ஷாக்சி

"ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க.எனக்கு மித்ரன பிடிக்கும்னு திவ்யா உனக்கு நல்லா தெரியும்ல.அந்த பிடிக்கும் என்ற வார்த்தை இப்போ காதல்னு ஆகிடிச்சு.நான் மித்ரன காதலிப்பேன் அவருக்கும் என்ன பிடிக்கும்னா காதலிக்கட்டும்.கல்யாணம் பண்ணிகிறதா இல்லையான்னு அப்புறமா யோசிக்கலாம்"என்று கூற திவ்யா 

"அடிக்கடி நீ வாட்பெட்ல ஸ்டோரி படிக்கும் போது நான் நினைச்சேண்ட.இப்படி லூசுத்தனமா ஏதும் பேசுவேன்னு.அதுவும் அந்த லூசு ரைட்டர் ஆஷிக்மோ ஸ்டோரி படிக்காதன்னு எத்த்னை வாட்டி சொல்ரது.அவந்தான் லிவ் இன் அது இதுன்னு லூசு மாதிரி சொன்னான் அவனோட  'சில்லென தீண்டும் மாய விழி'ல.அத நீ படிச்சிட்டு இப்போ இப்படி சொல்ரியா"என்று கேட்க

"ஹேய் லூசு நான் எங்கடி லிவ் இன் னு சொன்னே.காதல் மட்டும் பண்ணனும்னா அத இப்போ பண்ணிக்கலாம்.கல்யாணம் வேணும்னா கொஞ்ச நாள்ள பண்ணலாம்னு சொல்ல வந்தேன்.அதுக்குள்ள நீ அந்த அண்ணாவ ரொம்ப திட்டிட்ட"என்று கூற 

"ஆமா பெரிய நொண்ணன். ரெமோன்னு நினைப்பு அவருக்கு "என்று கூற மூவரும் சேர்ந்து சிரித்தனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro