தென்றல் 25

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரவு தூங்க வந்த திவ்யாவிடம் ஷாக்சி

"ஏன் டி உனக்கு தாலின்னா அவ்வளவு இலக்காரமா போச்சா? ஒன்னா தாலிய நீயாவேகட்டிக்கிற, இல்லயா நீயே கழட்ற என்ன டி நினைச்சிக்கிட்டு இருக்க ? " என்று கோபத்தில் பேசியவளை திவ்யா சிரித்துக்கொண்டே

"லூசு உனக்குத்தான் தாலி சென்டிமெட்ன்லாம். எங்க அம்மா பேருவினோதினி. எங்கப்பா பெயர கேட்டியா? " என்றவளை

"சரி அதையும் நீயே சொல்லு" என்று ஷாக்சி காட்டமாக கேட்டாள்.

"அட ஷாக்சி செல்லமே எங்கப்பாரு சார்ல்ஸ். நாங்க க்ரிஸ்டியன்ஸ்டி" என்று கூற ஷாக்சி நிஜமாகவே வாய்விட்டு சிரித்தவள்

"ஹேய் பாவம் டி அர்ஜுன், நீ க்ரிஸ்டியன்னு தெரியாம அவரு கட்டின தாலிய கழட்டி கொடுத்ததும் அவரு முகத்தை பார்க்கனுமே ரொம்ப பாவம் டி. ஆமா நீ என்னதான் ப்ளான் பண்ணிருக்க? உனக்கு அவர பிடிக்கும்னு தெரியும். அவரும்உன்ன நிஜமாத்தான் லவ் பண்றாரு. ஜானவிதான் இப்படி பண்றான்னு நீ அவர தப்பா நினைக்காத" என்று கூற இப்போது திவ்யாவின் கண்கள் கலங்கியதை கண்ட ஷாக்சி

"ஹேய் என்னடா, எதுக்கு நீ இப்போ கண் கலங்குற?" என்று கேட்க

"காலேஜ்ல எவ்வளோ பேரு என் பின்னாடி காதல்னு சுத்தினாங்க. அவங்க எல்லோரையும் ரொம்ப ஈசியா ஹேன்டில் பண்ணேன்டி. ஆனா அர்ஜுன் என்கிட்ட பேசும்போதெல்லாம் என் மனசுக்குள்ள் ஒரு குறுகுறுப்பு வரும். அது எனக்கு ரொம்பபிடிச்சிருந்தது. ஆனா அன்னைக்கு நீ சொன்னேல்ல அவினாஷ் கூட அர்ஜுன் சண்டை போட என்மேல உள்ள காதல்தான் காரணம்னு. அத கேட்டதும் எனக்கு ரொம்ப ஹேப்பியாஇருந்திச்சு. என் மனசுல ஆயிரம் பட்டாம் பூச்சி பறந்த மாதிரி இருந்திச்சு. இதுதான் காதல்னு அப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா என் காதல் பாதியிலேயே முடிஞ்சிடும்னு நினைக்கலடி" என்று அழுதவளை என்ன கூறுவதென்று தெரியாமல் ஷாக்சி அணைத்துக்கொண்டு

"ஹேய் திவ்யா என்ன உளர்ர ? அர்ஜுன் உன்ன லவ் பண்றதுக்கும் ஜானவி இப்படி நடந்திக்கிறதுக்கும் சம்பந்தமில்லடி. சும்மா உன் மனச போட்டு குழப்பிக்காத. முதல்ல அர்ஜுன் கிட்ட பேசு. பேசினாத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்" என்றவளை திவ்யா ஒரு உலர்ந்த புன்னகையுடன்

"அட போ ஷாக்சி இதென்ன சினிமாவா இல்ல ரியாலிட்டியே இல்லாம வர்ர கதைன்னு நினைச்சியா. அர்ஜுன் தங்கச்சி ஜானவி, அவ என்மேல ஏதோ தீர்க்க முடியாத ஒரு கோவத்துல இருக்கா. அது என்னான்னே எனக்கு தெரியல. இப்படி இருக்கிறப்போ நான் அர்ஜுன கல்யாணம் பண்ணி அவங்க வீட்டுல போய் வாழ்றது லாஜிக்கே இல்லாம வர்ர கதைலயோ இல்லன்னா சினிமாலயோ வரலாம். ரியல் லைப்ல இதெல்லாம் நடக்குமா. அப்படியே ஒன்னு ரெண்டு இடத்துல நடந்தாலும் என் வாழ்க்கைய நான் பகடையாக்க விரும்பல. என்னடா இவ இப்படி சுயநலமா யோசிக்கிறாலேன்னுநினைக்காத. என் வாழ்க்கைய முதல்ல நான் பார்த்துக்கலைன்னா வேற யரு பார்த்துப்பா. சோ எனக்கு என்னோட லைப் முக்கியம்" என்று கூறிய திவ்யாவை ஷாக்சி

"அப்போ உன் லைப் என்னத்துக்கு ஆகிறது திவ்யா. நீ வேற அர்ஜுன மனசுல நினைச்சிட்டேன்னு சொல்ர" என்றவளை திவ்யா நக்கலாக

"நான் சொல்ரேன்னு தப்பா எடுத்துக்காத ஷாக்சி. நீ ரவிய காதலிச்சிட்டு மித்ரன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல்ல. எனக்கு பண்ண சத்தியத்தாலதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்னு மட்டும் சொல்லாத. நீ மனசு சஞ்சலப்பட்டு கஷ்டத்துல இருந்தப்போ எப்படி ரவி உன்னை விட்டு தூரமா இருந்து உன் காதலை இழந்தானோ அதே போல ஜானவி என்ற தங்கச்சியால அர்ஜுனும் என் காதலை இழக்க போறான். அதுக்காக நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இருப்பேன்னு நினைக்காத. எனக்குன்னு ஒருத்தன் வருவான் அவன நான் திகட்ட திகட்ட லவ் பண்ணி, டார்ச்சர் செஞ்சி, எதுக்குடா இவளை லவ் பண்ணோம்னு பீல் பண்ண வெச்சி கல்யாணம் பண்ணிக்குவேன்" என்றவளை ஷாக்சி மலர்ந்த முகத்துடன்பார்த்தாலள். ஆனால் திவ்யாவோ மனதுக்குள்

'சாரி ஷாக்சி, என்னால வாழ்க்கைல அர்ஜுன மறக்க முடியும்னு தோணல. என் மனச முதன் முதலா பறிகொடுத்தது அர்ஜுன் கிட்டதான். என்னால அவன விலகி இருக்க முடியுமே தவிர அவன மறந்து ஒரு வாழ்க்கை வாழ முடியாது. நான் நினைக்கிறது சினிமாத்தனமான லாஜிக் இல்லா, நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராத விசயாமா இருக்கலாம். ஆனா சினிமா கூட யாரோடதோ நிஜவாழ்க்கைய வெச்சிதானே எடுக்குறாங்க' மனதுக்குள் ஷாக்சியிடம் மன்னிப்பு கேட்டாள். ஆனால் திவ்யா ஒன்றை மட்டும் மறந்துவிட்டால், கடவுள் நம்மிடம் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டால் அதைவிட சிறந்த ஒன்றை நமக்கு பரிசளிப்பார் என்று, அர்ஜுன் இல்லை என்றால் நாகர்ஜுன் வருவான் என்பதை அவள் மறந்து விட்டால் (ரைமிங்பா).

மறு நாள் காலை ரவி கால் செய்ய அதை எடுத்து பேசிய ஷாக்சி அவன் அழைத்த பக்கத்தில் இருக்கும் காபி சாப்பிற்கு செல்ல தயாராகினாள். அவள் வெளியில் செல்ல தயாராகுவதை கண்ட திவ்யா

"ஹேய் ஷாக்ஸ் எங்க போக போற? ஏதோ பெரிய ஒரு மீட்டிங்க்கு போகப்போறவ மாதிரி டென்சனா இருக்க?" என்று கேட்க ஷாக்சி எதுவும் பேசாமல் இருந்தாள்.

"ஏய் என்னடி பேசாம இருக்குற, என்னான்னு சொல்லு" என்றவளை ஷாக்சி மெதுவாக

"ரவி கால் பண்ணாண்டி. பக்கத்துல இருக்குற காபி சாப்பிற்கு வரசொல்லிருக்கான். எனக்கு என்ன சொல்ரதுன்னே தெரியலடி. போகவும் முடியல, போகாம இருக்கவும் முடியல" என்று கூற திவ்யா

"ஷாக்சி உண்மைய சொல்லு, நீ இப்போ மித்ரன் அண்ணாவ லவ் பண்றியா இல்லையா?" என்று கேட்க அமைதியாக இருந்த ஷாக்சியை கண்டவள்

"எனக்கு தெரியும் ஷாக்சி உனக்கு அண்ணாவ ரொம்ப பிடிச்சிருக்குன்னு. உனக்கு இப்போ பிடிச்சிருக்குன்னு சொன்னா நான் உன்ன மோசமானவளா நினைப்பேன்னு சொல்லாம மறைக்குறேன்னும் தெரியும்" என்றவளை ஷாக்சியோ

"நீ சொல்ரது நிஜம்தான் திவ்யா, எனக்கு மித்ரன இப்போலாம்பிடிக்கும். எனக்கு நடந்த கொடுமை எவனுக்கு தெரிஞ்சாலும் ஒன்னு பரிதாபத்தோட என்ன பார்ப்பானுங்க. இல்லைன்னா ஒரு தரம் கெட்டு போனவ இன்னொரு தரம்நம்மகிட்டவும் கெட்டு போகட்டும்னு நினைப்பானுங்க. ஆனா மித்ரன் அதை பத்தி எல்லாம் அலட்டிக்காம என்கிட்ட சாதாரனமா பேசினப்போ எனக்கு அவரு மேல ஒரு நல்ல எண்ணம் வந்திச்சு. என்னைக்கு அந்த கனவு வந்திச்சோ அன்னைல இருந்துஎனக்கு ஒரே யோசனைதான். அது என்னான்னா மித்ரன் என்ன பத்தி தப்பா நினைச்சா எனக்கென்ன? நான் எதுக்கு மித்ரன் என்ன தப்பா நினைக்ககூடாதுன்னு கனவுலநினைச்சேன் ?அதுக்கு என்ன காரணமாக இருக்கும்னு உனக்கே தெரியும் திவ்யா" என்று கூற திவ்யாவோ

"அடிக்கள்ளி, அப்புறம் எதுக்குடி ஜானவி வந்து கேட்டதும் பெரிய தியாகி மாதிரி விட்டு கொடுத்த" என்று கேட்க

"இல்லை திவ்யா, நானே கெ......." என்றவள் திவ்யா முறைப்பதை கண்டு தன் கரங்களால் கன்னத்தை மறைத்துக்கொண்டு

"சின்னப்பொண்ணு பாவம், ஏதோ தெரியாம சொல்லிட்டேன். அடிச்சிடாதம்மா" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூற திவ்யா சிரித்துவிட்டால்.

"ஷாக்ஸ் நீ தனியா போக வேணாம். ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம் சரியா. அங்க என்ன நடந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிட்டு வந்துடலாம்" என்று கூற ஷாக்சியும் சரி என தலையசைத்தாள்.

இருவரும் காபி சாப்பை அடைய ரவி யாரிடமோ காதில் ப்ளுடூத் ஹெட்செட்டுடன் போனில் பேசிக்கொண்டிருந்தவன் இவர்கள் வருவதை கண்டு மலர்ந்த முகத்துடன் வரவேற்றவன் நேரடியாக திவ்யாவிடம்

"நான் ஷாக்சி கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் சோ.." என்று இழுத்தவனை ஷாக்சி

"எதுவா இருந்தாலும் பரவாயில்லை. திவ்யா இங்கேயே இருக்கட்டும்" என்று கூற ரவியால் எதிர்த்து எதுவும் கூற முடியாமல் சரி என்று அமர்ந்தான். முதலில் ஷாக்சியே பேசியவள்

"சொல்லு ரவி எப்படி இருக்க. ரொம்ப நாளாச்சில்ல உன்ன பார்த்து. அப்புறம் உன் ஆன்சைட் டிரிப்லாம் எப்படி இருந்திச்சி" என்று கேட்க ரவியோ

"அத ஏன் கேட்குற ஷாக்சி யூ எஸ் போய் அடுத்த நாளே எனக்கு ஆக்சிடண்ட் ஆச்சு. என்னால எந்திரிச்சி நடக்கவே முடியல. அதான் உன்கிட்ட கூட என்னால பேசமுடியல. எல்லாம் சரி ஆகி உனக்கு கால் பண்ணா உன் போன ரீச் பண்ணமுடியல. அதான் இந்தியா வந்ததும் எப்படியோ உன்ன தேடி கண்டுபிடிச்சிவந்துட்டேன்" என்றவனை ஷாக்சி

"சரி இப்போ எதுக்கு என்ன தேடி வந்தீங்க" என்று கேட்க ரவி கொஞ்சம் எரிச்சலுற்று

"இங்க பாருமா, உனக்கு நடந்த விசயம் எல்லாம் எனக்கு தெரியும்.அதை நினைச்சி நீ ரொம்ப கவலைப்படாதடா. அது உன் சுய நினைவில்லாம நடந்தது. உனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லம்மா" என்றவனை ஷாக்சி ரவியின் மன ஓட்டத்தை புரிந்து

"இல்ல ரவி என்னால.." என்று ஏதோ கூற வர அவளை இடை மறித்த ரவியோ

"இங்க பாரு ஷாக்சி, உங்க அப்பா இறந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டு நான் ரொம்ப வேதனைப்பட்டேன். என்னால அந்த நேரத்துல உன்கூட இருக்க முடியலைன்னு. ஆனா இப்போ சொல்ரேன் இனி உன் வாழ்க்கைல எது நடந்தாலும் நான் உன்கூடதான் இருப்பேன். இனிமே நீ தான் எனக்கு எல்லாமே" என்று உணர்ச்சி வசப்பட்டு பேச திடீரென்று திவ்யா கேட்ட கேள்வியில் ரவி நிலை தடுமாறினான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro