அனிச்சம் பூ 38

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

லரில் வேயப்பட்ட மணம் பரப்பும் பிருந்தாவனமென இருந்த அந்த மணமேடையில் தலையாட்டிக் கொண்டிருந்த பூங்கொத்துக்கள் போட்டி,போட்டு எட்டிப் பார்கிறது .. யாரவன் ?

தேவதைகளும் ரசிக்கும் தேன்மனம் கொண்டானவன் ,

தேக்கில் ஆன ஆறடித் தேகம் அதில் , ஒரு குவளைப்பாலில் ஒரு சொட்டுத்தேன் கலந்த தாழம்பூ நிறத்தைத் தன்னிறமாய் கொண்டானவன் ,

ஜனகனின் வில்வடிவமாய் மீசை கொண்டான் , அம்பையோ கால்வட்டமாக்கி புருவம் கொண்டானவன் ,

கருங்காந்தம் உருட்டி கண்மணி
கொண்டானவன் ,

தும்பைமலர் தந்த வெண்மை நிறத்தில் , பட்டு பூச்சிகள் மகிழ்ந்தளித்த ஆடை கொண்டானவன் ,

தென்றல் காற்றில் அசைந்தே ஆடும்
வயல் வெளியென அடர்ந்த கேசமதை கொண்டானவன்..

ஏனோ ? தன் கரம் கொண்டு சிகை கோதும் பேரழகுச் செயல் அதைக்கூடச் செய்ய மறந்துவிட்டான் அவன் ,

மழலையும் மயங்கும் குறுநகை கூட ஒளித்து வைத்தான் அவன் ,

மிகையில்லா நடை வேகம் கொண்டே மிடுக்கையும் மறைத்துவைத்தான் அவன் ,

உறவுகள் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று உறுத்தலுடனே மேடைவந்தான் அவன் ,

" காதலித்தவள் கரம் தரவில்லை என்றானதும் , பெரியவர்கள் கை காட்டியப் பெண்ணை மணக்க இருக்கும் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் இவர்கள் " , இப்படி ... தவித்தான் அவன் ...

" அவள் இல்லையென்றானதும் இவள் , என்று இங்கே நிற்கிறேனே , இது முறையா ? இது சரியா ? எனக்கு ஏன் இந்த நிலைமை ? மனதில் விரக்தியும் , குற்ற உணர்ச்சியுமாய் , மணமேடையில் வந்தமர்ந்தானவன் , அவன்தான் செந்தூரன் ,

இவனுக்காய் காத்திருந்த அய்யர் , ஹோமம் வளர்த்துப் பிடித்துவைத்த மஞ்சள் பிள்ளையாரை வணங்கி , சிவன் பார்வதி பூஜை முடித்து , நேர்மறை சக்திபெருக வேண்டி பூஜை செய்த மஞ்சள் காப்பை செந்தூரனின் வலக்கையில் கட்டிவிட்டு ,

தத் புருஷாய வித்ம ஹே ,.... என்று பிள்ளையார் வணக்கத்திலிருந்து மந்திரங்களைக் கூறி , செந்தூரனை வழிமொழியச்செய்து கொண்டிருந்தார் ,

செங்காந்தளென எரியும் அக்னியை வெறித்த வண்ண்ம் மந்திரங்களைக் கூற ஆரம்பித்திருந்த இந்த ஆதியானவனின் சரிபாதியாகப் போகிறவளின் சேதி தான் என்னவோ ?

இதோவந்து விட்டாள் , ஜீவிகா
பாந்தமாய் உடுத்திய பட்டுப்புடவையில் ,

சாந்தமாய் நடந்துவரும் பேரழகு
காந்தமென ஈர்த்தது ... காண்போரின் கண்களை ...

கனக மலர்களும் மல்லிகையும்
இணைந்து பேசி கலந்து
தந்த அவைகளின் நிறமதுவே
அவள் தேகத்தின் வண்ணம் .

வெண்சங்கினாலான விழிப்படலம் , அதில் கண்ணின் மணியோ கருங்குவளைத் திரட்டிச் செய்ததோர் நீலப்புஷ்பராகம் .

அவள் கொண்ட நாசி நிறமோ
பன்னீர் ரோஜா வண்ணம் , அதன் வடிவமோ தலை கவிழ்ந்த தங்க அரளி ,

அவள் பெற்ற அதரங்களோ
தேனில் தோய்த்த அல்லி மலர் ,
அதன் வண்ணமோ செங்கமலம் ,

ஆனால் ,
அவளின் அனிச்சம் பூ மனமோ ..
வேற்றிடம் கண்டே பயந்து ,
தாயின் முந்தானையில் ஒளியும்
சிறு பிள்ளையென மிரண்டது ,
ஆனாலும் மிரண்ட மனத்தை
அமைதி படுத்தி ,

சிவனில் உமையொரு பாதியெனவே ,
அவனில் அவளொருபாதியாக செந்தூரனின் வலப்புறம் வந்தமர்ந்தாள்.

அவனருகில் அவள் வந்தமர்ந்ததும் ,
அவன் இதயம் ஏனோ
அதிர்ந்து துடிக்கிறது ,
அவன் நிமிர்ந்து பார்க்கிறான்
அந்த ஹோமப் புகையினூடே
அவள் முகம் மேகத்தில்
ஒளிந்து விளையாடும் ,
நெற்றிச் சுட்டி வைத்த
நிலவெனத் தோன்றியது ..

அதிர்ந்து துடிக்கும் அவன் இதயத்தின் மொழி அவன் உணர்ந்தானில்லை ..

ஏனோ முதன் முறையாய் ரஷ்மியின் மீது கோபம் வந்தது ,

" ஏன் பெண்ணே ! எனை ஏமாற்றினாய் ,
இன்னல் உன்னோடும் என்னோடும் முடியாமல் ,
இதோ இவளோடும்
தொடர்கிறதே ! " ,
என் ஜீவி தவிக்கிறாள் பாவம் , என்றே எண்ணியது அவன்மனது ..

மஞ்சள் பிள்ளையாரைப் பூஜை செய்து வணங்கியவள் , அய்யர் கட்டிய மஞ்சள் காப்பைத் தன் இடக்கையில் ஏற்று , மந்திரங்களை வழிமொழிய ஆரம்பித்தாள் ,

கன்னிகாதானத்திற்க்காய் அய்யர் மணமக்களின் பெற்றோரை அழைக்க ...
ஜெயராமோ செந்தூவிற்காய் , கார்த்திக் ரேவதியை தாரைவார்தலுக்காய் நிற்கச்செய்தார் ...

ஜீவியின் அருகே பாலாவும் தேவியும் நிற்க அவர்களுக்குப் பாத பூஜை செய்தாள் ...

செந்தூவும் கார்த்திக் ரேவதிக்குப் பாத பூஜை செய்தான் ...

கார்த்திக்கும் ரேவதியும் , பாலாவுக்கும் தேவிக்கும் , சந்தனமும் குங்குமமும் வைத்துத் திலகமிட ,

அதேபோல் , பாலாவும் தேவியும் கார்த்திக் ரேவதிக்குத் திலகமிட்டனர்

பாலா , வெற்றிலை பாக்கு , பழம் , நாணயம் வைத்து மூன்று தலைமுறைப் பெயர்கள் கூறி ... தன் செல்வமகள் ஜீவிகாவை செந்தூவிற்க்குத் தாரைவார்க்கும் பொருட்டு , தன் கரங்களில் ஜீவியின் கரங்களை வைத்துப் பதினாறு செல்வங்களும் பெற்றுத் தழைத்தோங்க வேண்டுமாய் கூற , தேவி அதில் நீர்விட்டு செந்துவிற்க்குத் தாரை வார்த்தாள் ...

செந்தூவும் , தன் உயிரென மதிக்கும் தாய்மாமன் பாலா மற்றும் தேவியின் மாசில்லா பாசத்திற்கும் , ஜீவியின் அலாதிப் பேரன்பிற்க்கும் , முன்னால் ரஷ்மியிடம் அவன் கொண்ட காதல் ஏனோ ஒதுங்கியே நின்றது ,

ஒற்றை மகளைப் பெற்று , அவளையும் தன் குடும்ப கெளரத்திற்க்காய் தாரைவார்க்கும் , தன் மாமனின் கலங்கிய கண்களில் தெரியும் கலக்கத்தின் முன்னால் , அவன் பொய்யாய் மந்திரம் சொல்லி போலியாய் உறுதிகொடுக்க ஏனோ மனம் இடங்கொடுக்க வில்லை ... ஜீவிக்கு யாதொரு குறையில்லா வாழ்வளிப்பதாய் மனதாற சங்கற்பம் கொடுத்தான் . அதன் பின் கார்த்திக்கும் ரேவதியும் செந்துவின் கரங்களின்மீது தன் கரங்களை வைத்துக் கன்னிகாதானம் ஏற்றுக் கொண்டனர் ...

மங்களநாணதற்குப் பூசை செய்து , மஞ்சள் குங்குமமிட்டு , நுனைமுறியா பச்சைஅரிசியில் மஞ்சள் சேர்த்தக் காப்பரிசையை , தாம்பூலத்தில் பரப்பி அதில் மலர்கள் தூவித் திருமாங்கல்யமதை மஞ்சள் கும்குமமிட்ட தேங்காயில் வைத்து , அதை வணங்குவதற்காக அனைவரிடமும் தந்து , அட்சதைக்காய் அனைவருக்கும் காப்பரிசி மலர்கள் கொடுத்த பின் , இதோ இப்பொழுது செந்தூரனின் கரங்களில் அந்த மங்கள நாண் ..

அவள் முகம் பார்த்தான்
அவள் உடுத்திய பச்சை
வண்ணமாய் ஓர் பட்டு
அதன் நிறத்திலேயே
வட்டமாய் நெற்றிப் பொட்டு
மரகதத்தில் ஓர் மூக்குத்தி
மை தீட்டீய நயனங்கள்
அல்லி மொட்டென்ற அதரங்கள்
அத்தனையும் தாண்டி
அவளின் மருண்ட விழிகள்
அவை சொல்லும் மொழிகள் ...

செந்தூரன் மனது தவித்தது ...
இது உனக்கு எதிர்பாரத்தருணம் !
என்னால் உனக்கு இன்னல் ....
மன்னிப்பாயோ பெண்ணே !

ஜீவியின் மனமும் அதே
தவிப்பில்தான் இருந்தது ...
உன் அனுமதி இன்றியே
உன் வாழ்வில் ஏனோ
நுழைந்து விட்டேன் ,
மன்னிப்பாயா மனமே ?..

கெட்டி மேளம் ... கெட்டி மேளம்...

இருவரின் சிந்தனையும் கலைந்தது ...
இருவரின் இதயத்துடிப்பும்
கெட்டிமேளத்தைத் தாண்டியும்
ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது ....

" மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம்
சஞ்சீவ சரத சதம் "

தன் கரங்களை அவளின்
தோளில் மாலையாக்கியே ,
மங்கள நாணை அவளின்
மணிக் கழுத்தில் அணிவித்து ,
முதல் முடிச்சிட்ட அத்தருணம் ,
மந்திரத்ததின் உச்சரிப்பில் ,
கொட்டுகின்ற அர்ச்சதைகளில் ,
மேளச்சத்தத்தின் அதிர்வில் ,
இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று ,
உனக்கானவன் இவன் ..
உனக்கானவள் இவள் ..
என்றே கூறுவதாய்த் தோன்ற
இதயம் அசைத்து இசைந்தாலும்
மூளை இசையாமல் ஆழம்பார்த்தது ..

செந்தூரனிட்ட முதல் முடிச்சைத் தொடர்ந்து .. செந்தூரி மங்கள நாணின் மற்ற முடிச்சுக்களை இடவே ....

அவளின் கழுத்தேறிய
கர்வமோ ? என்னவோ ?
மாங்கள்யமும் கம்பீரமாய்
வீற்றிருந்தது அவளிடத்தில்...

செந்தூரன் தான் கட்டிய
மாங்கல்யம் அதில்
மஞ்சள் குங்குமம் வைத்து
அவளின் தோள் சேரந்தே
தன் வலக்கரம் அவளின்
பின் சுற்றி முன் வந்தே

பிறை நெற்றியின்
வகிடில் நெற்றிச்சுட்டியை
ஒதுக்கிக் குங்குமமிட்டான்...
கோபம் கொண்ட
நெற்றிச்சுட்டியிடம் ,
அவன் விரல் தொட்டு
அவளின் நெற்றியில்
குடியேறிய களிப்பில்
குங்குமம் பேசியது ..
நான் நிரந்தரமாய் அங்கே வீற்றிருப்பேன்
நீயோ சில மணிகளில்
நீக்கப்படுவாய் , என்று ..

செந்தூரனும் ஜீவியும் மாலை மாற்றும் நிகழ்வில் ,
இவனது மாலை அவளுக்கு அணிவிக்க
அவளது மாலை இவனுக்கு அணிவிக்க
இவ்வாறாக மூன்று முறை மாலை மாற்றிக் கொண்டனர்
இடம் மாறியது மாலைகள் மட்டுமல்ல அவர்களின் மன உணர்வுகளும்தான் ...

பின் செந்துவும் ஜீவியும் , தாய்மாமன்களின் மனைவியர் கொண்டுவந்து கொடுத்த மங்களப் பொருட்களை ஏற்று அதிலிருந்த கண்ணாடியில் இருவரும் கணவன் மனைவியாக முகம் பார்த்தனர் , அந்தக் கண்ணாடியில் தம்பதி சகிதமாக அதுவும் மணக்கோலத்தில் தான் கண்டகாட்சியில் , செந்தூரன் கட்டிய மங்கள நாணும் , அவன் வைத்த நெற்றிப்பொட்டும் , அவ்வளவு தயக்கங்களுக்கிடையிலும் , ஏனோ ஒரு சிறிய மகிழ்ச்சியைத் தரவே செய்தது ஜீவிக்கு ,

ஜீவியும் செந்தூவும் அக்னிவலம் வருவதற்கு முன் , ஜீவி எடுத்துவைக்கும் ஏழு அடிகளில் வலதுகால் வைக்கும் ஏழடிகளையும் செந்து தன் வலது கரங்களில் அவளது பாதம் தாங்கி எட்டாவது அடியை அம்மியில் வைத்து வலது காலின் மெட்டி அணிவிக்க வேண்டும் ..

ஏனோ இது ஜீவிக்கு உறுத்தலாகவும் , சற்றே நெருடலாகவும் இருக்க , தவிர்க்கவே நினைத்தாள் , இதே செந்து தனை மனம் விரும்பி ஏற்றுக்கொண்டால் இந்த சம்பிரதாயங்களை மகிழ்ச்சியாகச் செய்யலாம் , ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை , பாவம் செந்து மாமா அவர் இருக்கும் கவலையில் இது வேறா ? என்றே எண்ணினாள் , ஆனால் பெரியவர்கள் முன் மறுப்பது மரியாதையாக இருக்காதே ... என்ன செய்வது ... கண்டிப்பாக மெட்டி அணியாமலும் விடமாட்டர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கொண்டிருக்கும் போதே , அய்யர் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க ...

ஜீவிகா முதல் அடி எடுத்துவைக்க ,
இரண்டாவது அடி வைக்கும் போது ஜீவி சற்றே தடுமாறி விழப் போனவளைச் செந்து , தன்வலக்கையை அவளின் இடையைச்சுற்றித் தாங்கிப் பிடித்தான் ,

என்னடா என்னாச்சு ?
ஒன்னும் இல்ல மாமா என்றவாறு தலையசைக்க ...

" இன்னும் ஐந்து அடிதான் , பராவாயில்லை டா ,அடுத்த அடிஎடுத்துவைக்க அவன் கையை நீட்டினான் .

மீதம் உள்ள ஐந்தடிகளையும் முடித்து , ஆறாவது அடியில் தன் இளவம் பஞ்சென்ற பாதத்தை , அம்மியில் வைத்தாள் , வலம் இடம் என இரண்டு விரல்களுக்கும் மெட்டி அணிவித்தான் ..

விரலுக்கு மெட்டியை மாட்டிய
அவனுக்கோ ஒர் சந்தேகம் ...
இவை கால் விரல்களா அல்லது மனோரஞ்சித மலர்களா ?

இதைத் தொடர்ந்து செந்தூரனின் வலக்கரத்தின் சுண்டு விரலும் , ஜீவியின் வலக்கரத்தின் சுண்டு விரலும் கோர்த்து அதன் மேலே பட்டுத்துணியினால் கட்டி அக்னியை மூன்று முறை வலம் வந்தனர் ..


கோர்த்தது இவர்களின்
விரல்கள் மட்டும் மல்ல
அதில் ஓடும் இருவரின்
இதய நாடிகளும்தான் ..

மூன்றாம் முறை சுற்றிவந்த பிறகு , கணையாழி கண்டெடுத்தல் நிகழ்வு வேண்டாமென இருவரும் மறுக்க ..

அங்கிருந்த பெரியவர்களோ , இதுமட்டும் தான் ஒரு நிமிடம் ஆகும் இதையும் செய்து விடுங்கள் எனக் கூற ...

மஞ்சள் நீர் நிறைந்த
குடத்தில் இருந்த மோதிரத்தை
அவன் எடுக்கட்டும் என்று அவளும்
அவள் எடுக்கட்டும் என்று அவனும் இருவருமே விட்டுக்கொடுத்து
எடுக்காமல் காலம் தாழ்த்த ..

கடுப்பான செந்தூரி .. நானே எடுத்து வைத்துக்கொள்கிறேன் , நீங்க ரெண்டு பேரும் அருந்ததி பார்த்திட்டு , இடத்தைக் காலி பண்ணுங்க , என்று அவள் குடத்துக்குள் கரத்தை விடப் போக ... அங்கே சிரிப்பொலி சிறிதாய் ஆரம்பிக்க சூழ்நிலை இலகுவானது இருவருக்கும்... அருந்ததி பார்த்தபின், கையிலிருந்த காப்புக்களை நீக்கிவிட்டு , அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் தம்பதிசகிதமாக இருவரையும் வணங்கச் செய்தனர் ..

அன்பு... அன்பு.... அன்பு...
அன்பென்ற ஒன்றை மட்டுமே
இதையத்தில் நிறைத்திருந்த
இருமனங்களின் இசைவின்றியே
திருமணம் நடந்தேறியது ...

பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் பொருட்டு , முதலில் ராஜங்கம் லீலாவதி தம்பதியரின் காலில் விழுந்து வணங்க , இருவரும் மனம் குளிர்ந்து ஆசிவழங்கினர் , ஆனால் செந்துவின் முகமோ இறுகி இருந்தது , அதைப்பார்த்த ராஜங்கத்திற்க்கும் லீலாவதிக்கும் உள்ளே வருத்தமாக இருந்தாலும் திருமணம் நடந்ததே அவர்களுக்கு ஆகச்சிறந்த மகிழ்ச்சியாக இருந்தது ....

அதன் பின் அருணாச்சலம் , ஜெயாரமன் ஜெயந்தி , கார்த்திக் ரேவதி , பாலா தேவி , செந்தில் சுரபி , கணேஷ் ப்ரியசகி வினயின் தாய் தந்தை சக்திவேல் ராஜாத்தி என அனைவரின் ஆசிர்வாதங்களையும் பெற்றவுடன் ,

மணமக்கள் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து , இருவரையும் ஒருவருக்கொருவர் , ஊட்டிக் கொள்ளச் சொல்லவும் , இருவரு
ம் ஊட்டிக்கொண்டபின் ,

மணமக்கள் இருவரையும் சற்றே ஓய்வுக்கு நேரம் ஒதுக்கி மணமேடையில்அவர்களுக்களுக்கான இருக்கையில் அமரச் செய்ய , செந்தூரன் அவன் அருகிலிருந்த நண்பன் தினேஷிடம் ,

" முடியலடா சடங்கு சம்பிரதாயம்னு ஒருமணிநேரமா போதும் போதும்னு ஆகிடுச்சுடா , ஆனா இனி எதாவது அதப்பண்ணுங்க இதபண்ணுங்கன்னு சொன்னா என்னால பொறுமையா இருக்க முடியாதுடா ..... " என்பதைக் கேட்ட தினேஷ் , மனதளவில் வருந்திக் கொண்டிருந்தான் ,

" பாவம் செந்து , காதலித்தவளைக் கரம் பிடிக்க முடியாத இயலாமையில் திருமணச் சடங்குகளை வெறுத்துப் பேசுகிறான் " என்று மனதில் நினைத்து முடிக்கும் முன்பே .. அந்த நினைப்பில் நெருப்பு வைத்தான் செந்து,

தினைஷிடம் " பாவம்டா ஜீவி இரண்டுநாளாத் தூங்கவே இல்லை காலைல இருந்து சாஸ்திரம் சம்பிரதாயம்னு போட்டுப் படுத்துறாங்கடா , மெட்டி மாட்டும் போது கூட தடுமாறி விழப்பார்த்துட்டா " என்று வாயிலைப் பார்த்தபடி , புலம்பிக்கொண்டிருந்தான் .

அதைக்கேட்ட தினேஷ் அவனை மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தான் , அடப்பாவி ... அங்க ஒருத்திய லவ் பண்ணி, அவ மேரேஜ்கு வர முடியாமப் பிரச்சனைல மாட்டிட்டு இருக்கா , என்னாச்சு ஏதாச்சுன்னு தெரியாம , இங்க என்னடான்னா ஜீவிக்கு உருகீட்டு இருக்கான் , நீயல்லா நல்லா வருவடா ...என்றான் மைன்ட்வாய்ஸில் , மைன்ட் வாய்ஸ் முடிப்பதற்க்குள் ... மீண்டும் செந்து ஆரம்பித்தான் ,

" இருக்கட்டும் மறுபடியும் ஏதாவது சொன்னாங்கன்னா எனக்குப் பயங்கரமா கோபம் வரும் .." என்றான்.

ஹம்ம்...உனக்கு பயங்கரமா கோபம் வருதா ? ...
எனக்கும்ந்தான் பயங்கரமா வாயில வருது ...என்றான் மைன்ட் வாய்ஸில்

என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ எதுவும் பேசமாட்டேன்ற ..

ஹம்ம்... நீ ரொம்ம ஃபீல் பண்ணத , உங்க அப்பா மண்டபத்தில உங்க இரண்டு பேரையும் இருக்க வைக்கக் கூடாதுன்னு என்னிடம் சொல்லி இருக்கார் , வர்றவங்க எல்லாரும் ஏடாகூடமா எதாவது கேட்பாங்களாம் , அதனால ஜஸ்ட் இரண்டு நிமிஷம் உங்களை மேடைல உட்காரவச்சுட்டு , கோயம்பத்தூருக்கு பேக் பண்ண சொல்லீட்டார் உங்களுக்கு மதிய விருந்தே கோயம்பட்டூர்லதான் , நீங்க ரெண்டுபேரும் ரெடியா இருங்க என்றவன் ,

அங்கு வந்த நிர்மலிடம் " அங்கிள் நல்ல நேரம் முடியரதுக்குள்ள கோயம்பட்டூர் போகனும்னு சொல்றார்டா ,யார் யார் கோவை வர்றாங்கன்னு கேட்டு அரேஞ் பண்ணுடா என்றவனிடம் ,

நிர்மல் " ஹம் செந்தூரி அக்கா வந்தா கிளம்பிடலாம் " என்றவன் , தினேஷிடம " டேய் செந்து எதுவும் ஃபீல் பண்ணினானா? அங்கிள் இன்றைக்கு முழுதும் அவனிடம் ஃபோன் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிஇருக்கார் .. என்றான் ,

அதைக்கேட்ட தினேஷ் , ஆமான்டா ரொம்ம்ம்பப ஃபீல் பண்றான்டா , அவன் பொண்டாட்டி டயர்டா இருக்காங்க , ரெஸ்டே இல்லனு ..
என்றவனை ...

நிர்மல் புரியாமல் பார்க்க ...

தினேஷ் " அவன் என்னடான்னா ஜீவி பாவம்னு உருகீட்டு இருக்கான் நீ என்னவோ ரஷ்மியப்பத்தி பேசிட்டு இருக்க .. என்றான் ..

அதற்க்கு நிர்மல் சிரித்துவிட்டு , ஃபேம்லிக்காக ஜீவி இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கா , நம்ளால பாவம் அவளும் பாதிக்கப்பட்றாளேன்னு , ஒரு நினைப்பு , அவ்ளோதான் ,

இப்பவும் அவனோட மூளைக்குள்ள ரஷ்மி நெனப்புத்தான் ஓடிட்டு இருக்கும்.... ரஷ்மிக்காக வீட்ட விட்டுப் போறேன்னு சொல்லி இருக்கான்... ஆனா அவன் இடத்தில வேற யாரவது இருந்தா ஒரு நிமிஷத்துல தூக்கி எரிஞ்சுருப்பாங்க ...

அக்காவுக்கும் , அவங்க ஹஸ்பன்டுக்கும் ஆக்ஸிடன்டு , அக்கா குடும்பத்தையும் பிஸ்னஸையும் , நான் தான் பார்க்க வேண்டும் , நீ வேண்டாம் , என்ன விட்ருன்னு சொன்னதுக்குப் பிறகும் , இவன் கொஞ்சம் கூட கோவப்படாம அவளைப் புரிஞ்சுக்கிட்டு , கல்யாணத்தை நிறுத்துங்கன்னு ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் எதிர்த்து நின்னான் , இத்தனைக்கும் ஆண்டி ," ஜஸ்ட் முகூர்த்தம் டைம்க்கு வந்து அவன் கைல தாலி மட்டும் கட்டிக்க , நாங்க எல்லாரும் உன்கூட இருக்கோம்னு " சொல்லியும் அவ கேட்கல ...

இவன் இடத்துல நீயோ நானோ இருந்திருந்தா சரித்தான் போடி , என்னவிட உனக்கு உனக்கு , பிஸ்னஸிம் உங்க அக்காவும் , அவங்க ஹஸ்பன்டும் முக்கியமான்னு கேட்டு அவள நோகடிச்சுருப்போம் .... ஆனா கடைசி வரைக்கும் கொஞ்சம் கூடக் கோபப்படாம , அவளுக்காகத்தான் வீட்ல பேசினான் , பாவம் டா அவன் ... என்னைப் பொருத்த வரைக்கும் கூடிய சீக்கிரம் செந்து , ரஷ்மிய மறந்துட்டு ஜீவியோட வாழ ஆரம்பிக்கனும் , ஆனா இவன் அப்படி செய்வானான்னு தெரில .. பார்கலாம் ...என்றான் ...

*****************************

Hi friends ,

story படிச்சுட்டு எப்படி இருக்குன்னு ,மறக்காம comment பண்ணுங்க , கதை , கவிதை ? கவிதைன்னு தனியா எழுதுனா UD போட இன்னும் late ஆகும் அதுதான் கதையோட ஓட்டத்தில வர்ற வரிகளையே frame போட்டுட்டேன் , புரியுது உங்க மைன்ட் வாய்ஸ் (🤔ஓ... அப்போ இத்தன நாளா நீ போட்ட மொக்கையெல்லாம் கவிதைன்னு சொல்லவர்றியா ? ன்னு 😃) story , poem , memes , story status ன்னு , எல்லாம் சேர்ந்து கொடுக்கலாம்னு நினைச்சேன் ...(marriage spl😉) அதோனோட விளைவுதான் இது

👇

இந்த video clip , video நல்லாருக்குமா என்னனு தெரியல , but, video ல வர்ற song voice செம்ம்மயா இருக்கும் try with Head set ,

https://www.youtube.com/watch?v=70hoTTtjMCw


வினய் .... நான் என் செய்வேன் ? 😄 all r fate 😣


ShainiSiya this memes for u

👇


vijay Reaction 👇

👆 this particular image edit by my sissy Maayanila

Thankyou da ...😍

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro