அலை🌊 11🌊

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆங்காங்கே சிவந்து கலைந்திருந்த,  மேகக்கூடத்துக்கு  மத்தியில்  நெற்றிப் பொட்டை போல் வட்டமாய் பளிச்சென்று மின்னிய,  ஆரஞ்சு நிற சூரிய பந்து மெல்ல மெல்ல தன் சிவந்த நிறத்தை விடுத்து தங்க நிறத்திற்கு உருமாற  , மணி காலை ஆறை தொட்டிருந்தது. ஜன்னல் திரைகளுக்கு மத்தியில் ஊடுருவிய  சூரிய கதிர்களின் வெப்பத்தில் கண்களை  மெல்ல சிமிட்டி தூக்கத்தில் இருந்து எழுந்தான் கார்த்திக்.

நேற்று இருந்ததிற்கு,  இப்போது சற்று தெளிந்து காணப்பட்டது காரத்திக்கின் முகம். அவனது காலை நேர ஓட்டபயிற்சி மட்டும் தடைபட்டு விட, சோம்பலை முறித்தபடி‌ எழுந்தவன் இரு கரங்களையும் சூடுபறக்க தேய்த்து முகத்தில் ஒத்தி‌ எடுக்க, அதே நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. எழுந்துக்கொள்ள மனமில்லை ஆனால் எழுந்துக்கெள்ள வேண்டிய கட்டாயமிருந்தது. சென்று கதவை திறக்க வேண்டுமே,

மெல்ல எழுந்து நிலை கண்ணாடியின் முன் தன்னை முதலில் சரிப்படுத்திக்கொண்டவன் கலைந்திருந்த தலைமுடியை இரு கை கொண்டு கோதியபடியே  "வரேன் வரேன்" என  கூறிக்கொண்டே கதவினை திறக்க எதிரே சுட சுட காபியுடன் நின்றிருந்தார் கல்யாணி.

அம்மாவை பார்த்தும் உதட்டில் புன்னகை எட்டி பார்த்தாலும் "ம்மா… என்னம்மா… பேஷண்டாவே ட்ரிட் பண்றிங்களே…"சலித்தபடி கதவினை திறந்துவிட்டு அறைக்குள் திரும்பி விட்டான்.

அவனை தொடர்ந்து உள்ளே வந்த கல்யாணி அங்கிருந்த மேசையில் ட்ரேயை வைத்துவிட்டு "நேத்து நீ இருந்த நிலைமைய பாத்தும் நீ பேஷண்ட் இல்லன்னு என்னை நம்ப சொல்றியா… கார்த்தி… ? சாதாரண காய்சலுக்கே உன் உடம்பு தாங்காது…  இதுல ட்ரிப்ஸ் வேற‌… ஏன் டா… சொல்ற பேச்சை கேட்கவே மாட்டியா…? நேத்தே ஒரு இன்ஜக்ஷன் போட்டிருந்தாலோ இல்ல கஷாயம் குடிச்சிருந்தலோ  இவ்வளவு பெரிய பிரச்சினை வந்து இருக்காதில்ல சொல்ல சொல்ல கேட்காம ஆபீசுக்கு போய் என்ன நடந்தது பாத்தியா" கல்யாணி பேசிக்கெண்டே  மகனின் படுக்கையை சரிசெய்ய, அவர் பேச ஆரம்பிக்கும் போதே குளியலறைக்குள் புகுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான்.

"ம்மா பாத்துக்க கூடாதுன்னு இல்லமா.... டேப்லெட்டு போட்டு தான் ஆபீஸ் போனேன் இப்படி நடக்குமுன்னு யாருக்கு தெரியும்…   அதுவும் இல்லாம சைட்ல ஒரு பிரச்சனை அதுல என்னை பாத்துக்க மறந்துட்டேன்…  சரி… அதான் நீங்க இருக்கிங்களே என்னை பாத்துக்க " செல்லமாக தாயின் கன்னத்தை  பிடித்து கொஞ்சியவன் அவர் கொடுத்த காபியை வாங்கி அதன் மணத்தை நுகர்ந்தான்.

ஆழ்ந்து மூச்செடுத்து வெளியே விட்டவன் "என்ன இருந்தாலும் எங்கே போனாலும் நீங்க போடுற காபியோட டேஸ்ட்டே தனிதாம்மா" அன்னையின் காபியை சிலாகித்தவாறு ஒரு மிடறு விழுங்க, கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் சுஜி.

"என்னண்ணா கொஞ்சும் படலம் ஓடிக்கிட்டு இருக்கு போல...? அண்ணனையும் தாயையும் ஓருசேர கிண்டலடித்தவள் "இப்போ எப்படி இருக்கு ணா கையை காட்டு" அவன் ட்ரிப்ஸ் ஏறிய கையை எடுத்து முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள்.

"கிண்டலு… உன்னை…" என வலிக்காமல் அவள் தலையில் செல்லமாய் கொட்டியவன் இப்போ ஓகே… தான் நோ ப்ராப்ளம் சுஜி ஹெல்த் கூட ஓகே தான் ஆனா என்ன உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கு…" தன் கையை மறுகையால் அழுத்தியபடி கூறினான்.

"இன்னைக்கு நீ எங்கேயும் போகக் கூடாது கார்த்தி…. வீட்டுல தான் இருக்கனும் புரியுதா…  ஒரு நாள் புல்லா ரெஸ்ட் எடுத்த தான் கொஞ்சமாச்சும் உடம்பு சரியாகும் " கட்டளையை போல் கூறிட அவன் எங்கே கேட்பது அழையா விருந்தாளியாக நிஷாவின் இருப்பை மூளை அவனுக்கு செய்தி அனுப்ப

" நோ வே மா இன்னைக்கு சுத்தமா முடியாது நான் கிளம்புறேன்... நைட் முழுக்க ரெஸ்டல தான் இருந்தேன்"  சட்டென கார்த்திக் மறுத்து விட்டான்.

"நீ சொன்னா கேக்குற ஆளா எங்க உங்க அப்பா சுஜி அப்பாவை வரச்சொல்லு"  சுஜியிடம் கூறியவர்,  கார்த்திக்கின் நடவடிக்கையில் அவனை முறைத்துக் கொண்டு நின்றார்.

சுஜாதாவிற்கு அந்த வேலை வைக்காமலேயே கார்த்திக் என அழைத்துக்கொண்டு அவன்‌ அறைக்குள் வந்தார் தேவராஜ்.

"வாங்க உங்கள தான் கூப்பிட சொன்னேன்... நீங்களே வந்துட்டிங்க  ஆபீஸ் ஆபீஸ் ஆபீஸ்... அப்படியே உங்கள ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்து இருக்கான்… ஒரு நாள் கூட வீட்டுல தங்கமாட்டானா...?   அப்படி உடம்பை கூட கவனிக்காம‌ எதுக்கு வேலையை செய்யனும்… நீங்க என்ன ஏதுன்னு அவனை கேக்க  மாட்டிங்களா...?" மகன் மேல் உள்ள கோவத்தை எல்லாம் கணவரிடம் கொட்ட ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவர்

"என்ன கார்த்தி இதெல்லாம்.. உங்க அம்மா என்ன சொல்றாளோ அதை கேளேன் டா " மனைவியின் அர்ச்சனையில் சற்று சத்தத்தை கூட்டி சொல்லியதும், சுஜி சத்தமில்லாது வாயிக்குள் சிரித்துக்கொள்ள
காத்திக்கோ செல்ல முறைப்புடனே  அவர்களைப் பார்த்தான்‌.

"அப்பா நீங்களுமா…?" சலிப்பாக தந்தையை பார்த்தான்.

"என்னடா அவருமா… இப்போ தான் ஒரு அப்பாவா பேசுறாரு ஒழுங்க வீட்டுல இரு… நான் உனக்கு டிபனை ரெடி பண்றேன்….  ம் பச்ச தண்ணில குளிச்சிட போற ஹீட்டர் போட்டு விட்டு குளி புரியுதா சுஜி நீ என்ன இங்கேயே நின்னுட்டு இருக்க காலேஜ் கிளம்பலையா…? மகளையும் ஒரு பார்வை பார்க்க,

"இதோ மா கிளம்பனும் அண்ணனை பார்த்துட்டு போலாமேன்னு வந்தேன்.. இதோ கிளம்பிட்டே இருக்கேன்"  மான்  போல் துள்ளிக்கொண்டு செல்ல இருந்தவளை

"சுஜி நில்லு " கல்யாணி அழைத்ததும் சட்டென நின்று விட்டவள் "என்ன அம்மா ?" என்றாள்.

"ஏதோ பார்த்டே பார்ட்டி இருக்குன்னு சொல்லிட்டு இருந்த எத்தனை மணிக்கு...? 

"ஈவினிங் ஆறு மணிக்கு மா நாங்க எல்லாம் புவி வீட்டுக்கு போய் அங்கிருந்து அப்படியே கிளம்பி போகலாம்னு ப்ளான் மா" சுஜி கூறியதும்  "நிஷாவையும் கூட்டிட்டு போறியா சுஜிமா...? வந்ததுல இருந்து நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் அவளை கூட்டிட்டு போகலையே அவ உன் நாத்தனார வரப்போறவ அவளை விட்டுட்டு நீ மட்டும் தனியா பங்கஷன் போன நல்லா இருக்குமா..? " மகளுக்கு நிலைமையை  தன்மையாகவே விளக்கிட

முகத்தை சுழித்து தனக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிவித்துவிட கல்யாணியின் முறைப்பில் எல்லாம் அடங்கி விட்டது. "சரி சரி நீங்களே கேளுங்க வராங்களான்னு அப்புறம் சொல்லுங்க… இப்போ நான் காலேஜ் கிளம்புறேன் அண்ணா பாய் அப்பா பாய் அம்மா வரேன் " பொறுப்பை அன்னையிடம் தள்ளிவிட்டவள் சிட்டாய் பறந்து விட்டு போகும் அவளையே கவலையுடன் பார்த்தார் கல்யாணி.

"கல்யாணி… கல்யாணி..."  கணவரின் அழைப்பில் "என்னங்க..?" என கல்யாணி தேவராஜை பார்க்க

"நேரம் ஆகுதும்மா சீக்கிரம் டிபனை வை இன்னைக்கு கார்த்திக்கும் வரல நானும் லேட்டா போனா எப்படி… ரகு மட்டும் மேனேஜ் பண்ண முடியாது " அவரது கடமையை நினைவுப்படுத்த

"இந்த பொண்ணுகிட்ட பேசினாலே வேலை கெட்டுப் போகுதுங்க... வாங்க.. வாங்க... எல்லாம் ரெடி பண்ண சொல்லிட்டு தான் வந்தேன் கார்த்தி நீயும் ப்ரெஷ் ஆகிட்டு வாப்பா சாப்பிடுவ" மகனுக்கும் ஒரு குரலை கொடுத்தவர் அறையில் இருந்து வெளியேறி விட்டதும்,

தேவராஜ் மகனை பார்த்தார். ரெஸ்ட் எடு கார்த்திக் நான் பாத்துக்குறேன்…  நேத்து ஆக்ஸிடன்ட் ஆனதுமே என்கிட்ட சொல்லி இருந்தா உன்னை அங்க இருக்க விட்டுருக்கவே மாட்டேன்…" ஆதங்கத்துடன்  கூறினார்.

"சொல்லக் கூடாதுன்னு இல்லப்பா ஆக்ஸிடன்ட் ஆனதும் உங்களுக்கு ஷாக் கொடுக்க கூடாதுன்னு நினைச்சேன்... நான் இருக்கும் போது நீங்க அலையனுமான்னு தான் யோசிச்சேன்... அதுவரையும் அடிப்பட்டவருக்கு ஒன்னும் ஆகலை காட் கிரேஸ் தான்" அவன் நிம்மதியுடன் விழிகளை மூடிக்கொள்ள..

மகனின் தோலை தட்டிக்கெடுத்தவர்  "எப்படியும் நிலமையை நீதான் கார்த்திக் சமாளிச்ச குட்… ஆனா உன் ஹெல்த்தும் முக்கியம் கேர்லஸா இருக்காத…‌" அக்கறையாக கூறியவர்

"இனி உங்க அம்மா சொல்றாப்போல வச்சிடாத கார்த்திக் பேசறதை கேட்க முடியல எங்க ஆரம்பிச்சாலும் என்கிட்டதான் முடிக்கிறா " மனைவியின் அர்ச்சனைகளை மகனிடம் கிண்டலடித்தவர் அறையை விட்டு வெளியேறிவிட அதுவரையிலும் இதழில் பூத்த மென்புன்னகை துணிக்கொண்டு துடைத்தார் போன்று காணாமல் போய்விட, இறுகிய முகத்துடன்  தானும் குளித்துவர குளியலறைக்குள் சென்றான்.

…..

"எல்லாம்‌ எடுத்து வச்சிட்டியா சிவா…" முதுகில் வழிந்த முடியை முன் பக்கம் சரித்து விட்டு பின்னிக்கொண்டே தம்பியை பார்த்தாள் ரேவதி.

"ம் கா... எதுவும் மறக்கல எல்லாம் எடுத்துட்டேன்... பாடம் கூட ஓரளவு கவர் பண்ணிட்டேன் கா…" ஸ்கூல் பேகில் பாட புத்தகத்தை எடுத்து வைத்தபடியே சிவாவும் பதிலை கூறிட

"சரி டா.. நீ இரு... நான் ஆட்டோ  கூட்டிட்டு வரேன்... அதுக்குள்ள சாப்பிட்டுடு..."  சிறிய வட்ட வடிவ ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒற்றியபடியே வெளியே பார்த்தாள்.  காஞ்சனா துணிகளை கொடியில் உலர்த்தி கொண்டிருப்பது தெரிந்தது. தம்பிக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டையிட்டு நான்கு‌ நாட்களாக முகம் கொடுத்து பேசாத அன்னையை  நினைத்து பெருமூச்சை விட்டவள், அடுப்படிக்கு சென்று இரண்டு தோசையை வார்த்து தம்பியிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றாள்.

"அக்கா…"  வெளியே செல்ல இருந்தவளை அழைத்தான் சிவா,

"என்னடா‌…?  ஏதாவது வேணுமா…? வாங்கிட்டு வரனுமா…?"  தன் வேக நடையை நிறுத்தி வாசலில் இருந்தே கேட்டாள்.

" அதெல்லாம் ஒன்னுமில்ல ஆட்டோ வேண்டாம்னு சொல்ல தான் கூப்பிட்டேன்…  இப்போ என் கால் பரவாயில்லை நடந்தே போகலாம்… இன்னும் ரெண்டு நால்ல சைக்கிளை எடுத்துக்கிட்டு போயிடுவேன் " நீயும் வா உட்காந்து சாப்பிடு" குடும்ப நிலை அறிந்து கூறியதோடு மட்டும் அல்லாமல் அக்காவின் வயிற்றை வாடாமல் பார்த்துக்கொள்ள,

செல்லமாய் அவன் தலையை கலைத்து விட்டவளோ "ரொம்ப பெரியவனா வளரந்துட்டு வரன்னு அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்துறடா…?"  பெருமையும் பூரிப்புமாய் தம்பியை பார்த்தாள்.

மூக்கை சுருக்கி  தலையை இடது கையால் சரிசெய்துக்கொண்டே  "அக்கா நீ பாராட்டுறேன்ற பேர்ல தலைய கலைச்சி கலைச்சி விடுற..."  சிணுங்கிணாலும் முகம் பளிச்சென்று பிரகாசித்தது அவனுக்கு.

"சரிங்க சார்..." குனிந்து அவனை பார்த்து அடக்கமாக வணக்கம் வைத்திட,

"போ கா… கிண்லடிச்சிக்கிட்டே இருக்க" செல்லமாய் முறுக்கிக் கொண்டவனோ  உணவில் கவனமானான்.

ரேவதியும் அவனை வம்பு செய்யாது சாப்பிட்டவள்  மதிய‌ உணவை எடுக்க, சமயலறைக்கு சென்றாள். திண்டில் இருந்த  உணவு டப்பாவை தூக்கி பார்க்க பயமாகவே இருந்தது. தன் மேல் உள்ள கோவத்தை காஞ்சனா சாப்பாட்டில் காட்டிவிடுவரோ என்ற சந்தேகத்துடனே டப்பாவை கையிலெடுத்தவள்  அதன் கணம் கண்டு நிம்மதியானாள்.

"அப்பாடா இந்த அம்மா எங்கே நம்ம மேல இருக்க கோவத்துல சமைக்காம விட்டுறுவாங்களோன்னு பாத்தேன். நல்ல வேலை சமைச்சி வைச்சிட்டாங்க.."  மானசீகமாக மனதில் நினைத்தவளின் பார்வை   சமையலறை ஜன்னல் வழியே தெரிந்த தாயிடம்  சென்றது.

"இந்த நாலு நாளா ரொம்பத்தாம்மா பண்ற… எவ்வளவு பட்டாலும் புரியாது… உன் தம்பி மேல வைச்ச பாசத்தை கொஞ்சம் குறைச்சிக்க அப்பத்தான் அந்த ஆளு பண்றது உன் கண்ணுக்கு தெரியும் காஞ்சனா… உண்மை தெரியும் போது ரொம்ப கஷ்டம்…"  அதிக சத்தமின்றி  முகத்தை சுருக்கி உதட்டை சுழித்து முனுமுனுத்தவளின் வார்த்தைகள் அவரது செவிப்பாறையை சென்றடைந்ததோ என்னவோ  துணியை‌ உலர்த்திக் கொண்டு இருந்தவர் மகளை பார்க்க  அவளோ ஏதும் அறியாதது போல சட்டென முகபாவத்தை மாற்றிக்கெண்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.

"என்னமோ சொன்னா மாதிரி இருந்தது இவ கூப்பிட்டாலா... இல்லையா...? நாம தான் கோவத்துல இருக்கோம் வந்து இவளா பேசினா என்ன  அம்மாங்குற எண்ணம் இருக்கா… வர்றது என்னமோ… போறது என்னமோ… அவ இஷ்டமா இருக்கு…" தன்னை கண்டும் காணாத மகளின் மேல் இருந்த வருதத்தையெல்லாம் முனுமுனுப்பாக காஞ்சனா வெளியேற்றிக் கொண்டிருக்க,

"அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்" சிவாவின்  குரல் கேட்டு நிமிர்ந்தவர் முன், "நானும் வேலைக்கு கிளம்புறேன்... இன்னைக்கு ப்ரோகிரம் இருக்கு வர லேட்டாகும்" தாயை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு கூறியவளின் செய்கையில் கோவம் துளிர்த்த போதும், வேலைக்கு கிளம்பும் மகளிடம் அதை வெளிக்காட்ட முடியாது முகத்தை வேறு பக்கம் திரும்பி கொண்டார்.

ஒருவர் மீது ஒருவர் மலையளவு அன்பு, அக்கறை,  கொண்ட போதும் கோபம் என்னும் மாய திரையிட்டு அதை வெளியே காட்டாமல் தங்களுக்குள்ளே புழுங்கிக் கொண்டனர். அம்மா மகள் இருவருமே….

தம்பியை பள்ளியில் விட்டுவிட்டு ஆயிரம் பத்திரங்களை சொல்லி  பேருந்து நிறுத்தம் வந்த ரேவதிக்கோ இந்த பஸ் சீக்கிரமே வந்து தொலையாதா என்று இருந்தது. நேரம் வேறு போய் கொண்டிருக்க, இன்னும் அரைமணி நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும். இல்லை  உரலில் அரைபடுவது போல் தணிகாசலம் வாயில் அரைபட நேரிடுமே என்ற தவிப்பில் பேருந்திற்கு காத்திருக்க  ஸ்கூட்டியுடன் அவள் முன் வந்தாள் திவ்யா.

"ஹேய் திவி இன்னைக்கி வேலைக்கு போகல..?" அவளை‌ப் பார்த்த திகைப்பில் ரேவதி கேட்க

"இல்ல ரேவதி.... கொஞ்சம் வீட்ல வேலை இன்னைக்கு அம்மா அப்பா ஊருக்குப் போறாங்க அக்காவுக்குத் துணையா இருக்க சொல்லிட்டாங்க" திவ்யா காரணத்தைக் கூறிட ஓ… என்ற சத்தத்துடன் அமைதியானாள் ரேவதி.

"சரி நீ என்ன இங்க நிக்குற ராகவைப் பாக்க ஹாஸ்பிடல் போகல..? " போகிற‌ போக்கில் ரேவதியின்‌ மனதில் கல் எறிய, 

"ம் போகனும்..." சுரத்தேயின்றி ஒலித்தது அவளது குரல். எப்போதும் ராகவின் காதலை எண்ணி குழம்பும் மனம் இப்போது திவ்யா எறிந்த கல்லில்  மேலும் குழம்பி தத்தளித்தது.

"என்ன ஆச்சி ரேவதி..? வீட்டுல ஏதாவது..? அவள் சந்தேகமாக இழுக்க,

திவ்யாவிடம் தன் மனதை அரிக்கும் தவிப்பை கூற இயலாது "அதெல்லாம் ஒன்னுமில்லை திவி" என தன் முகபாவத்தை சட்டென மாற்றிக் கொண்டவள் தொண்டையை செறுமி "சரிடி நீ கிளம்பு... அதோ பஸ் வேற வந்துடுச்சி நானும் கிளம்புறேன்..." மின்னலாய் அங்கிருந்து செல்ல போகும் அவளையே ஆராயும் பார்வை பார்த்தாள் திவ்யா.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro