அலை🎼12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அலை 🌊12🌊

கருமை நிறத்தை  பூசியது போல  மையிருட்டை உடையாக தரித்திருந்தாள் வானமகள். அதில்  கைநிறைய அள்ளி தெளித்த வைரங்களை போல்  ஒளி வீசிய நட்சத்திர சிதறல்கள் அவள் உடையெங்கும் பளப்பளத்திருந்தது..  அன்று வெள்ளிக் கோடாய் பிரகாசித்த பிறைநிலவு   இன்று பூரண நிலவாய்  ஜொளித்து வான மகளின் நெற்றியை அலங்கரிக்கும்  அழகிய இரவு நேரம்.

அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாத இடம் என்பதால்  அந்த இடமே நிசப்தமாக இருந்தது.  சர் சர் என காற்றை கிழித்துக்கொண்டு வாகனங்கள் ஒன்றிரண்டு அவளை கடந்து சென்றதில், இருக்கும் இடம் அவள் இதயத்தில் சற்று பயத்தை உற்பத்தி செய்திருந்திருக்க,

'சரி இனி பஸ்ஸிற்கு நின்று இருப்பதை காட்டிலும் வரும் ஏதாவது ஒரு  ஆட்டோவில் ஏறி  சென்று விடலாம்  என முடிவெடுத்தவள் அதன் வருகைக்காக காத்திருந்தாள்.

தூரத்தில் ஒரு பைக் வருவது தெரிந்தது பச் இப்பவும் பைக்கா மனதில் சலித்து போனவள் நிழற்குடை பக்கம் ஓதுங்கி நின்று விட்டாள்.  இதற்கு மேலும் நிற்க அவளுக்கு தெம்பில்லை... ஆடியதில் களைத்து வேறு போயிருந்தவளுக்கு, கைகால்கள் எல்லாம் வலி எடுத்து ஓய்வுக்கு கெஞ்சிட, மெல்ல சாலையை பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.

அவளை கடந்து தான் பைக் சென்றது. இருளை விரட்டியடிக்கும் தெருவிளக்குகளின் உபயத்தில் பைக் பின்னால் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்தது போல இருந்தது. பைக்  ஓட்டும் ஆசமியோ கோணலும் மாணலுமாய் ஓட்டிக்கொண்டு சென்றான். ஒரு கட்டத்தில் பைக்கின்  பின்புறம்  அமர்ந்திருந்த நபர் எதையோ தூக்கி போடுவது போல இருந்தது. அதற்கு அடுத்த நிமிடமே  அந்த நபரும்‌ பைக்கில் இருந்து கீழே விழுவதை பார்த்த ரேவதி அய்யோ என்ற அலறலோடு அவ்விடம் விரைந்தாள். 

கீழே விழுந்ததில் கைமுட்டி கால் எல்லாம் சிராய்ந்து எழ முடியாமல் இருந்த அந்த உருவத்தின் அருகில் செல்லும் முன்பே பைக் ஆசாமி அவளிடம் ஏதோ தவறாக நடந்துக் கொள்வது போல் தோன்றியது.

அவன் தூக்க முயல்வதும் அந்த பெண் அவனிடமிருந்து தன்னை விடுவிக்க போறாடுவதும் நன்றாகவே தெரிய நொடியில்  அங்கு நடப்பதை புரிந்துக் கொண்டவள் தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அந்த பைக் ஆசாமியை‌ ஓரே தள்ளாக கீழே தள்ளி விட்டவள் "என்னங்க என்ன ஆச்சி ஏதாவது அடிப்பட்டுச்சா...? கேட்டுக்கொண்டே அந்த பெண் எழ உதவி செய்தாள்.

சோடியம் லைட் வெளிச்சத்தில் தெரிந்த ரேவதியின் முகத்தை பார்த்ததும்  சட்டென அவளை கட்டிக்கொண்டு அழுதாள்  அந்த பெண்…

இவ்வளவு நேரமும் அந்த பைக் ஆசாமியிடம் மாட்டிக் கொண்டது பிறந்த நாள் விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சுஜாதா தான்.

அரைமணி நேரத்திற்கு முன் இதெல்லாம் நடக்கும் என்று நினைத்து  பார்த்திருக்க கூட மாட்டாள். எல்லாம் கண் இமைக்கும் நொடியில் நடந்து விட்டதில் அரண்டு போய் இருந்தாள். அழுகையில் உதடு விம்மியது. தாயை அணைத்த சேயை போல ரேவதியை அணைத்துக் கொண்டு நின்றாள் சுஜி.

இரண்டு மணி நேரத்திற்கு முன்.

அந்த ஐந்து நட்சத்திர உணவகமே  பலவர்ண விளக்குகளால் சொர்கலோகம் போல காட்சியளிக்க அங்கே சுஜி மட்டும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து நின்றிருந்தாள்.

"சுஜி….  கொஞ்ச நேரம் இருக்கலாம்ல… வந்தவுடனே போறேன் போறேன்னு சொன்னா எப்படி டி.. இன்னும் கொஞ்ச நேரம் டி ப்ளீஸ் டி" தோழிகளில் ஒருத்தி சுஜியின் தாடையை பற்றி  கெஞ்சலாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கும் ஆசை தான் இது தோழிகளுடன் கலகலக்கும் கடைசி பொக்கிஷ தருணங்கள் அல்லவா இதன்‌ பிறகு நினைத்தாலும் இது போன்ற சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அமையுமா என்பது சந்தேகம் தான்.

வாட்சை பார்க்க மணி எட்டை நெருங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. அம்மா சம்மதிப்பாரா என்று தெரியாது இருந்தும் மனதில் சிறு நப்பாசை  இருக்கத்தான் செய்தது ஒருவேளை சம்மதித்தால் இன்னும் நிமிடங்களை நீட்டிக்கலாமே என நினைத்தவள்,

"சரி சரி இருங்க ஒரு போன் பண்ணிட்டு வரேன் அம்மா இரண்டு முறை கால் பண்ணி கிளம்பிட்டிங்களான்னு கேட்டாங்க இப்போ என்ன சொல்வாங்களோ தெரியல..."  அரை  மனதாகவே போனை எடுத்து தனியே சென்றாள் சுஜாதா.

"இரு சுஜி... நீ கேட்டா மட்டும் ஆண்டி விடுவாங்களா..? நானும் வந்து கேக்குறேன் எல்லாரும் இருக்கோம்னு சொன்னா சரி சொல்லிடுவாங்கல்ல" புவி என்பவள் யோசனை கூறிட,

அவளது யோசனையும் சரியென பட "கரெக்ட் தான் சரி வா கேட்போம்" புவியை அழைத்துக்கொண்டு சத்தம் வராத திசையை நோக்கி சென்றாள் சுஜாதா.

கல்யாணி , "நிஷாவை  சுஜியுடன் பர்த்டே பார்ட்டிக்கு போகிறாயா..?" என்றதற்கு

"இல்ல அத்தை  எனக்கு பார்டிக்கு போற மூட் இல்லை,... நான் வேணும்னா
கார்த்திக் கூட இருக்கேனே பாவம்  அவருக்கு உடம்பு வேற சரியில்லை…" முகத்தை  பாவமாக வைத்து கண்களை சுருக்கி கேட்ட விதத்தில் கல்யாணியின் மனதில் மணல் கோட்டை எழுந்திட,

"அதுக்கென்னம்மா  தராளமா கூட இருந்து பாத்துக்கோயேன்" சிரித்தபடியே உரைத்தவர் சுஜியிடம் நிஷா பார்த்டே பார்ட்டிக்கு வரவில்லை என்பதை மட்டும் கூறி அவளை அனுப்பி வைத்து விட்டு இதோ இப்போது மகளிடம் மல்லுக்கட்டி கொண்டு இருக்கின்றார்.

"முடியவே முடியாது… என்ன சுஜி விளையாடுறியா...? அவ்வளவு தூரம்‌ உன்னை தனியா அனுப்பினதே உங்க அப்பா என்ன சொல்வார்னு பயமா இருக்கு இதுல இன்னும் லேட் ஆகும்னு சொன்னா எப்படி முதல்ல கிளம்பி வீட்டுக்கு வா"கல்யாணி கண்டிப்புடன் சம்மதிக்க மறுத்தார்.

"அம்மா ப்ளீஸ்" இவள் கெஞ்சிக் கொண்டு இருக்க, அவளிடமிருந்து போனை பறித்தாள் புவி

"ஆண்டி நான்  புவி பேசுறேன் சுஜியை நாங்க பத்திரமா வீட்டுல விட்டுட்டு வரோம் ஆண்டி… ப்ளீஸ் ஆண்டி… இன்னைக்கு ஒரு நாள் தானே அப்புறம் அவளுக்கு எங்கேஜ்மெண்ட் நடந்தா எங்கேயுமே எங்க கூட அனுப்ப மாட்டிங்க…  இன்னைக்கு ஒரு நாளைக்கு எஸ்கீயூஸ் பண்ணுங்க ஆண்டி" அவள் நயமாய்  காரணங்களை அடுக்கினாள்

இவ்வளவு தூரம் கெஞ்சிய பிறகும் மறுக்க முடியமல் "ஓகே புவி  ஆனா இன்னும்‌ ஒருமணி நேரம் தான் டைம்.. கார் அனுப்புறேன் ஒன்பது மணிக்கு அங்கிருந்து கிளம்பிடனும் அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அங்க தங்க கூடாது புவி…  அவளை சேஃபா அனுப்பி வைங்க சொல்றது எல்லாம் புரிஞ்சுதா" ஒரு முறைக்கு இருமுறை கண்டிப்போடு எச்சரித்தார் கல்யாணி.

"ஆண்டி எதுக்கு கார் எல்லாம் நாங்க எல்லாம்‌ ஒன்னா தான் வந்தோம் அதே மாதிரி  நாங்களே சேஃபா கூட்டிட்டு வந்து விடுறோம்  ஆண்டி நீங்க கவலைப்படாதிங்க… நீங்க பொத்தி பொத்தி வைக்கிறதால தான் இவ ரொம்ப பயப்புடுறா கொஞ்சம் ஃப்ரியா விடுங்க ஆண்டி" சுஜியின்  ஆசையை அறிந்து  புவி சுஜிக்காக பேசியதும்,

"இல்லம்மா அது இந்த நேரத்துல சேஃபா இருக்காது நான் வண்டியை அனுப்புறேன் ஒழுங்கா கிளம்பி வர சொல்லுங்க நீங்க வீடு போய் சேருங்க" புவியிடமும் கண்டிப்புடன் கூறினார்.

போனை புவியிடமிருந்து பறித்தவள் "ம்மா ப்ளீஸ் மா… நானே வரேனே எப்போ இதெல்லாம் கத்துக்குறது… கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்ல ப்ளீஸ் மா...?" கெஞ்சி கொஞ்சி ஆயிரம் ப்ளீஸ்களை சொல்லி தனியாக வர சம்மதம் வாங்கினாள் சுஜாதா. இருந்தும் கல்யாணியின் மனது நெறுடத்தான் செய்தது.

"சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும் அப்பப்போ அண்ணா கூட பேசிட்டே இரு எந்த இடம் எங்க இருக்க எல்லாத்தையும் சொல்லு புரியுதா..." பெண்ணிற்கு பாடம் எடுத்தவர் போனை வைத்துவிட குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் அவள்.

"ஏய் அம்மா பர்மிஷன் கொடுத்துட்டாங்க டி…. நானும் இன்னைக்கு நைட்  தனியா டிராவல் பண்ண போறேன் செம த்ரில்லிங்கா இருக்க போகுது …"  தோழியின் கைபிடித்து ஆர்பாட்டம் செய்தவளை  ஒரிருவர் வினோதமாக பார்த்துக்கொண்டே கடந்திட, அசட்டு சிரிப்புடன் நல்ல பிள்ளையாக அங்கிருந்து நழுவி விழா  நடக்கும் இடத்தை அடைந்தாள்.. இதில் வேடிக்கை என்னவென்றால் அவள் இருந்த அதே ஹோட்டலில் வேறு ஒரு ஹாலில் ரேவதியின் நடன நிகழ்ச்சி நடைப்பெற்று கொண்டிருந்தது.

…..

அம்மா சுஜிக்கு கால் பண்ணிங்களா லேப்பில் கண்ணை பதித்தபடி தாயிடம் வினவினான் கார்த்திக்.

ம் பண்ணிட்டேன் கார்த்தி இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க.... ஆமா… நிஷா உனக்காக பாத்து பாத்து காலையில் இருந்து செய்யுற எல்லாத்தையும் ஏன் அவாய்ட் பண்ற" மனதில் அரித்த விஷயத்தை மகனிடம் கேட்டார் கல்யாணி.

அம்மா....  அவங்க கெஸ்ட்.... அந்த லிமிட் ல இருந்தா எல்லாருக்கும் நல்லது... எனக்கு இது எல்லாம் சுத்தமா பிடிக்கல ப்ளீஸ் இதை நீங்களும் அலோ பண்ணாதிங்க திட்டவட்டமாக மறுத்தவனின் பேச்சில் மனம் சுணங்கினாலும்  மெல்ல பேசி மகனுக்கு புரிய வைத்து கொள்ளலாம் என நினைத்து சகஜமாக்கியவர்,

சரி கார்த்திக்... நீ கோவப்படாத நான் அதை பாத்துக்குறேன்.... அது இருக்கட்டும் நீ என்ன இன்னும் லேப்பை தட்டிக்கிட்டு இருக்க  கொஞ்சம் ரெஸ்ட்‌ எடுக்கலாம்ல  மகனை கேட்டுக்கொண்டே அறையில் இருந்த சலவை செய்யும் துணிகளை எடுத்துக் கொண்டார்.

"கொஞ்சம்  டிசைனிங் வேலை பென்டிங் இருக்குமா....  இன்டிரியர் முடிக்கனும்… அடுத்த ப்ராஜக்ட் வேற உடனே ஆரம்பிக்கனும்." கல்யாணிடம் பேசிக்கொண்டே வேலையை தொடர்ந்தான் கார்த்திக்.

"சொல்லுறதை எப்போதான் கேட்பியோ… முதல்ல அதை மூடி வைச்சிட்டு இந்த பாலை குடி… கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க கூட முடியல என்னமோ பண்ணுங்க"  சலித்தபடியே பாலை அவன் கையில் திணித்தவர் சுஜியை பற்றி அவனிடம் உரைத்து விட்டு மகளுக்காக காத்திருக்க ஹாலுக்கு சென்று விட்டார்.

தானும் ஒரு முறை‌ தங்கைக்கு அழைத்து  சுஜி எங்கே இருக்கிறாள்  என இடத்தை  கேட்டு தெரிந்துக் கொண்டவன் அவளிடம் பேசிவிட்டு வேலையை தொடர்ந்தான்.
….

"செமையா என்ஜாய் பண்ணேன் புவி... ரொம்ப தேங்க்ஸ் டி உன்னால தான் இங்க இவ்வளவு நேரம் இருக்க முடிஞ்சது..." தோழியை அனைத்து தன் நன்றியை கூறிட,

" ஹலோ மேடம்‌ உனக்காக ஒன்னுமில்லல… எல்லாம்‌ என் க்ரஷ் கார்த்திக்காகத் தான்…"   புவி செல்லமாய் சுஜியின் தோளில் இடித்து கண் அடித்தாள்.

"ஹா…ஹா… ரொம்ப வழியாதிங்கடி அவன் சுத்தமா உங்க யாரையும் ஏறெடுத்து கூட பாக்க மாட்டான் அவன் ரேஞ்சே வேற" அண்ணனுடன் சேர்த்து  தோழிகளையும் கிண்டலடித்தாள் சுஜாதா.

"போதும் டி உன் அண்ணன் புகழ் பாடினது எங்களை பார்க்க தான் அவருக்கு கொடுத்து வைக்கலன்னு சொல்லு..." பதிலுக்கு பதில் நக்கலடித்தவர்கள்  வண்டிக்கு புக் செய்து கொண்டிருந்தார்கள்.

"என்னடி ஏதாவது கிளிக் ஆச்சா..?" தோழிகளிடம் கலகலத்துக் கொண்டே மற்றொரு தோழியிடம் வண்டியை பற்றிக் கேட்டு கொண்டிருந்தாள் சுஜாதா. அவளுடன் புவியும் வீடுவரை வந்து விட்டுவிட்டு வருவதாக இருந்தது.

"பச் என்னன்னு தெரியலடி இரண்டு மூனு வண்டி புக் ஆகி கேன்சல் ஆகுது... இரு இன்னொரு டைம் புக் பண்றேன்"  செல்லை எடுத்துக்கொண்டு சற்று நகர்ந்து புக் செய்ய ஆரம்பித்தாள்.

அதே நேரம்  அந்த ஐந்து நட்சத்திர உணவகத்தின்‌ மற்றொரு ஹாலில் இருந்து நடன நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தாள் ரேவதி.

தோழிகளுடன் சுஜாதா  பார்க்கிங் இடத்தில் ‌திரும்பி நின்று பேசி சிரித்து கொண்டு இருக்க அதை ஏக்கமாக பார்த்தாள் ரேவதி. அவளும் சுஜியை பார்க்கவில்லை சுஜியும் அவளை கவனிக்கவில்லை

திரும்பி நின்றிருந்த சுஜாதாவை கவனியாத ரேவதி 'திவி இருந்தா ஏதாவது பேசிட்டு வந்துருப்பா அவ இல்லாதது ஒரு மாதிரி வெறுமையா இருக்கு... என்ன பண்ணிக்கிட்டு இருப்பா..?' யோசித்தபடியே  போனை எடுத்துப் பார்த்தாள்.

நேரம் ஒன்பதை கடந்துவிட்டது  'மேடம் இந்நேரம் மூக்கு பிடிக்க சாப்பிட்டு இழுத்து போத்திக்கிட்டு படுத்து இருப்பா போன் பண்ணாலும் வேஸ்ட் …  அட இந்த போன்ல வேற‌சார்ஜ் குறைஞ்சிடுச்சே பேட்டரி வேற நிக்க மாட்டுங்குது நாளைக்காவது போனை‌ எடுத்துப் போய் ரிப்பேருக்கு கொடுத்துட்டு வரனும்' தனக்குள்ளயே பேசியபடி மெயின் ரோட்டுக்கு வந்தாள். இரண்டு பேருந்து ஏறி தான் அவள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்றவள் ஷேர் ஆட்டோவில் ஏறி வேறு ஒரு பஸ்ஸ்டாப்பில் இறங்கினாள். அங்கிருந்து அதே ஆட்டோவில் பயணிக்க கேட்க அந்த‌ டிரைவரோ "இல்லமா இதோட வீட்டுக்கு தான்... இனி சவாரிலாம் வர முடியாது" என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

பத்து பதினைந்து நிமிடங்களாக பார்க்கிறாள் ஒரு பேருந்தோ ஷேர் ஆட்டோவோ வந்தபாடில்லை 'சே… இந்த நேரம் பாத்து ஒரு வண்டியும் வர மாட்டங்குது…' மனதில் தோன்றிய வெறுப்புடன் தன்னை கடந்து போகும் நான்கு சக்கர வாகனங்களை பார்வையிட்டபடி நின்றிருந்தாள் ரேவதி. குளிர்ந்த காற்று மேனியை நடுங்க வைக்கும் முயற்சியில் இருந்தது.

ராகவ்   விபத்தின் காரணமாக வராமல் போக திவ்யா அக்காவின் துணைக்காக வீட்டில் இருக்க வேண்டி அவளும்‌ இன்று வராதிருக்க தனியாய் நிற்கும் நிலையில் எரிச்சல் தான் வந்தது. அவளுடன் ஆடுபவர்கள் சிலர் பைக்கில் வந்திருந்தாலும் இருவர் மூவர் என தொத்திக்கொண்டு செல்ல இவள் எங்கே போய் அவர்களிடம் உதவியை கேட்பது. சூடு பறக்க கையை பரபரவென தேய்த்துக்கொண்டு கன்னத்தில் வைத்து சாலையை பார்த்தாள்.

குளிர் அதிகமாக மேல் துப்பட்டாவை
சால்வை போன்று தன்னை சுற்றி போர்த்தி குளிரை விரட்டியடிக்க முயன்றவள்  ஒரளவு அதில் வெற்றியும் கண்டாள்.

"ஏய் சுஜி என்னன்னு தெரியலடி லேட்டுன்றதுனால வண்டி கேன்ஸல் ஆகுதோ என்னவோ மணி வேற பத்து ஆகப்போகுது நான் ஒன்னு பண்றேன் ரேபிடோல வண்டி புக் பண்றேன் அது பைக்ன்றதுனால இங்க நிறைய கிடைக்கும் என்ன சொல்ற நீயும் நானும் முன்ன பின்ன தானே போக போறோம் நானும்  துணைய தானே வரப் போறேன்" யோசனை கூறினாள் புவி.

"பைக்கா...?"  வாயை பிளந்தாள்  சுஜி

"ஏண்டி பைக்கான்னு பயப்புடுற... இப்போலாம் இது சாதாரணமா எல்லாரும் யூஸ் பண்றாங்க... ஒன்னும் பயம் இல்ல... நானே இரண்டு‌மூனு முறை போயிருக்கேன்.." புவி சமாதானம் செய்ய

"அது வந்து... அம்மா..." அவள் தயக்கமாக இழுத்தாள்.

"இங்க பாரு சுஜி இதெல்லாம அம்மாகிட்ட சொல்லிட்டா இருப்ப... சொன்னா... அவங்க திட்டத்தான் செய்வாங்க...  அதுக்காக...  நாம  பயப்பட பயப்புட தான் எல்லாரும் நம்ம தலைமேல ஏறுவாங்க... நம்மலை மிறி என்ன நடந்துடும்... தைரியமா போ டி..

நானும் உன் கூடவே தான் வரப்போறேன்...  இங்க பாரு இவங்களும் அதை தான் யூஸ் பண்ண போறாங்க... நான் எனக்கும் புக் பண்ணிட்டேன்… உனக்கும் புக் பண்றேன் கையில போன் இருக்குல அப்புறம் இந்த பயம் தேவை இல்லாதது…   பொண்ணுங்களுக்கு தைரியம் முக்கியம் டி"  ஏதேதோ பேசி சுஜியை சமாதானம் செய்து வண்டியிலும் ஏற்றி விட்டிருநதனர், அவளது தோழிகள் கூட்டம். அவர்களும் தாங்கள் புக் செய்த வண்டிகளில் கிளம்பி விட்டனர். புவியின் வாகனம் முன்னே சென்று விட இவள் வாகனம் பின் தங்க துவங்கியது.

அதன் பிறகு தான் அவளது போறாத காலமே ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சாதரணமாக ஓட்டிக் கொண்டிருந்தவன்  அடிக்கடி பிரேக் போட்டு அவளை  தன் மேல் மேனி உரசுவது போல இடிக்க வைப்பதும் வாய்க்கு வந்த கிளர்ச்சியூட்டும் பாட்டை பாடுவது குழளறாக கொஞ்சி  பேசுவது போன்ற கீழ்தரமான செயல்களை செய்து வந்தவன் ஒரு கட்டத்தில் எல்லை மீற ஆரம்பித்து இருந்தான்.

தோழிகளின் பேச்சை கேட்டு அசட்டு தைரியத்தில் இதில் மாட்டிக் கொண்டோமே என மிரண்டு போனவளுக்கு பயத்தில் நெஞ்சை அடைத்துக் கொண்டது. தைரியம் இருக்கிறது தான் ஆனால் உடல் பலம்…?  ஆஜானபகுவாக இருப்பவனிமிருந்து எப்படி தப்பிப்பது மூச்சே நின்று விடும் அளவுக்கு பயம் அவளை நிலைகுலைய செய்திருந்தது.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை புவியின் வாகனம் எங்கும் தட்டுப்படவில்லை  பயம் அவளை கொல்லாமல் கொன்றது.

இதற்கு மேலும் தாமதித்தால் அவன் இச்சைக்கு இறையாவது உறுதி என மூளை விழித்துக்கொள்ள தான் குதிப்பதற்கு இடையூறாக இருந்த பேகை முதலில் கீழே எரிந்தவள் நொடியும் தாமதிக்காது வண்டியில் இருந்து குதித்து விட்டவளுக்கு ரேவதியை பார்த்த பிறகுதான் உயிரே வந்தது.

தன்னை அனைத்து அழும் சுஜியை சாந்தப்படுத்த முனைய "ஏய் யாருடி நீ... என்னைய அடிக்குற தள்ளி போடி... ஏய் நீ வா..." என நா குழறியபடி தள்ளாடியவன் ரேவதியை அடித்து தள்ளி விட்டு சுஜியின் கையை பிடித்து அணைக்க முயன்றான்.

"டேய் விடுடா... விடுடா கையை.." அவன் கைகளில் இருந்து சுஜியை மீட்க போராடினாள் ரேவதி.

"ரேவதி ப்ளீஸ்... என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்...  அவனிடமிருந்து விடுபட முயன்றபடியே ரேவதியை பார்த்து அழுதாள் சுஜாதா.

இரண்டு மூன்று வாகனங்கள் இவர்களை கடந்து தான் சென்றது ஒருவர் கூட ஏன் என்ன சண்டை என வண்டியை நிறுத்தி பார்க்கவில்லை… அவர்கள் வேலை அவர்களுக்கு என சென்று விட்டனர். சுற்றி முற்றி திரும்பி பார்த்தாள் அடிக்க கட்டையோ கல்லோ ஏதாவது கிடைக்குமா என தேடியவள், பேருந்து நிறுத்தத்தின் பக்கத்தில் உடைந்த பாதி கல்லை பார்க்க அவன் மண்டையில் நங்கென்னு ஓங்கி ஒன்றை வைத்தாள்.

மண்டையில் ரத்தம் வழிந்திட,. வலியில்  ஏறிய போதையெல்லாம் இறங்கிவிட்டது அவனுக்கு,  சுஜியை அனுபவிக்க விடாமல் செய்த ரேவதியின் மேல்  தன்  மொத்த கோபத்தையும் திருப்பியவன்,  அவள் தலைமுடியை கொத்தாய் பிடித்து தரதரவென இழுக்க அவன் கைகளில் இருந்து  விடுபட போராடிய ரேவதி தன் பற்களைக் கொண்டு அவன் கரங்களை கடித்தாள். பாதுகாப்பிற்காக அவன் உயிர் நாடியில் தன் முட்டியை வைத்து பலமாக தாக்கிட,  வலியை தாங்க முடியாதவன் ரேவதியை வேகமாக  ஓங்கி அறைந்ததில் உதடு கிழிந்து ரத்தம் கசிய மயக்கத்தில் கீழே விழ இருந்தவளை தாங்கியது கார்த்திக்கின் கரங்கள்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro