கற்பனை 33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இன்றைய நாள் கதிர், நந்தினியின் வாழ்க்கையில் மீண்டும் சந்தோசத்தை கொண்டு வரும் என்று நினைத்த எல்லோரும் இப்படி ஒரு குழப்பம் ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சந்தியாவின் நிலைமையோ மிகவும் மோசமாக இருந்தது. தன் தோழிக்கு நன்மை செய்வதாக எண்ணி அவள் செய்த காரியம்  தனக்கே தற்பொழுது திரும்பி வந்திருப்பதை நினைத்து அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

கதிருக்கு தனது ஆகாஷனா கிடைத்த மகிழ்ச்சி அவன்  முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ராஜீவிற்கும் நந்தினியை கரம்பிடிக்க  தனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் சந்தோசமாகவே இருந்தான். நந்தினிதான் இவர்கள் எல்லோரை விடவும் மிகவும் சந்தோசமாக இருந்தால். காரணம் தன் தோழியின் வாழ்க்கை இப்படி‌‌ தடம் மாற அவள் அன்று ஸ்கூட்டியை கவனக்குறைவால் ஓட்டியது என்று அவள் தாய் கூறியதை கேட்டதில் இருந்து எப்படியாச்சும் தன் தோழியின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தால். இருந்தாலும் அது சந்தியாவை மிகவும் நேசிக்கும் ஒருவன் மூலமே நடக்கும் என்பது கனவிலும் நினைக்கவில்லை. 

நந்தினியின் மன ஓட்டத்தை அறியாத மற்றவர்கள் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று குழம்பியிருக்க கதிர்

"எல்லோரும் முதல்ல வீட்டுக்கு போகலாம். அப்புறமா மீதிய பேசிக்கலாம்" என்று அங்கு நிலவிய அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்தான். எல்லோரும் வீடு வந்து சேர சுமனும் வீணாவும் உணவு வாங்கி வருவதாக கூறி அவர்கள் நால்வரையும் தனிமையில் விட்டு சென்றனர்.

யார் பேச்சை ஆரம்பிப்பது என்று எல்லோரும் மெளனமாக இருக்க கதிர்

"சத்தியமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நந்தினியும் நானும் பிரிஞ்சி போக முடிவெடுக்க காரணம் மீதி இருக்குற எங்க வாழ்க்கைய நாங்க எங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழனும்னுதான். ஆனா சந்தியா பண்ண விசயம் நடந்திருந்தா இன்னைக்கு நாங்க சந்தோசமா இருந்திருந்தாலும் நாளைக்கு ஒரு வேல நந்தினிக்கு ஞாபகம்லாம் திரும்ப வந்து அவ ஆகாஷனா இல்லைன்னு தெரிஞ்சா அவ மனசு எவ்வளவு வேதனைப்படும்" என்றவன்‌ நந்தினியை நோக்கி

"நந்தினி ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்க சந்தியா உன்ன  ஏமாத்தனும்னு எதுவுமே பண்ணல. உன் லைப் நல்லா இருக்கனும்னுதான் இதெல்லாம் பண்ணியிருப்பா என்பது பார்க்குற எல்லோருக்குமே தெரியும்" என்று கூற நந்தினி புன்னகைத்து

"என்ன கதிர் உங்க ஆளுக்கு இப்பவே சப்போர்ட்டா?" என்றவள்

"எனக்கு அவ மேல கோவம் இருக்கு. ஆனா அந்த கோபம் இல்லாம போகனும்னா உங்கள அவ மனசால  ஏத்துக்கனும்.வேற எதுவும் எனக்கு வேண்டாம்" என்று கூற சந்தியா உடனே

"நீ எது சொன்னாலும் நான் கேட்குறேன் நந்தினி!" என்று கூற அவளை முறைத்தவள் உடனே புன்னகைத்து

"எனக்காக நீ ஒன்னும் பண்ண வேண்டாம், உன்ன ஐ மீன் ஆகாஷனாவ எவ்வளவு அவருக்கு பிடிக்கும்னு நீ சுமன் கிட்ட  கேட்டு தெரிஞ்சிக்கோ" என்று கூற சரியாக அங்கு சுமனும் வீணாவும் கைகளில் உணவுப்பொதிகளுடன் வர கதிரின் அலப்பறைகளைப் பற்றி பேசிக்கொண்டே உணவு உண்டு முடித்தனர். நந்தினியின் வார்த்தையை தட்ட முடியாமலேயே ஆரம்பத்தில் சந்தியா கதிரை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டாலும் சுமன் கூறிய விசயங்களை கேட்டதில் இருந்து அவன் மீது நிஜமாகவே ஒரு பிடிப்பு வர தொடங்கியது. எல்லோரும் பேசி முடித்தபின் அவரவர் வீட்டுக்கு செல்ல தயாராக சந்தியாவை நந்தினி அழைத்து சென்றால்.

சந்தியாவுக்கு ராஜீவ் நந்தினியிடம் தன் காதலை பற்றி எதுவும் பேசாதது ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தாலும் அவள்

"நந்தினி நிஜமாவே உன்ன ராஜீவ் காதலிக்கிறாருடி. நீ  ம்ம்னு ஒரு வார்த்தை சொன்னா போதும். அவரு உங்க வீட்ல வந்து பேசுவாரு "என்று கூற நந்தினி 

"ஆமா நீதான் அவரு என்ன காதலிக்கிறாருன்னு சொல்லிக்கிட்டே இருக்க. ஆனா அவரு என்கிட்ட எதுவுமே சொல்லலயே" என்று கூற சந்தியா சந்தோசமாக 

"அப்போ அவரு உங்கிட்ட சொன்னா உனக்கு ஓக்கேயா"என்று கேட்டவளை முதலில் முறைத்தவள் 

"முதல்ல அவரு என்கிட்ட வந்து சொல்லட்டும். அப்புறமா என்ன செய்றதுன்னு நான் முடிவு பண்றேன்" என்று கூறினால்.

வீட்டுற்கு வந்த தோழிகளை வித்தியாசமாக பார்த்த நந்தினியின்  பெற்றோர்

"ஏய் சந்தியா என்ன நீ யூ எஸ் போறேன்னு சொல்லிட்டு மறுபடி வந்திருக்க?" என்று கேட்க அவள் கதிரின் விசயத்தை எப்படி கூறுவது என்று யோசிக்கையில் நந்தினி

"இல்லம்மா அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆச்சி. மாப்பிள்ளை யாரு தெரியுமா? எல்லாம் உங்க மருமகன் ஐ மீன் அப்பாவோட தங்கச்சி பையன் கதிர்தான் என்று கூறி முழுக்கதையையும் அவர்களிடம் கூறினால்.அவர்களின் கதையை கேட்ட நந்தினியின் பெற்றோர் முதலில் ஆச்சரியப்பட்டாலும் தங்கள் மகளின் வாழ்க்கை இப்படி அந்தரத்தில் நிற்பதை எண்ணி மன  வேதனை அடைந்தனர்.இருந்தாலும் நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு நந்தினியின் தந்தை

"சரி நந்தினி நெக்ஸ்ட் நீ என்ன பண்ண போறே?" என்று கேட்க அந்த கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தால்.

அடுத்த நாள் நந்தினிக்கு கால் செய்த ராஜீவ் அவளை தனியாக பார்க்கவேண்டும் என்று கேட்க அவளும் ஏன் எதற்கு என்று தேவையில்லாத கேள்வி கேட்காமல் அவனை சந்திக்க சென்றால்.

"ஹாய் நந்தினி எப்படி இருக்க" என்று கேட்க அவளும் உற்சாகமாக 

"சூப்பரா இருக்கேன் ராஜீவ். அப்புறம் நான் ஒன்னு உங்க கிட்ட கேட்கனும்"என்றவளை அவன் ஆச்சரியமாக பார்த்து

"என்ன கேளு என்றான்".

"நீங்க என்ன காலேஜ்ல இருந்தே காதலிச்சதா சந்தியா சொன்னா. ஆனா நான் உங்களை இப்போ கொஞ்ச நாளா நல்ல ப்ரெண்டா பார்க்குறேன்.உங்க கூட என் வாழ்க்கைய பகிர்ந்துக்க முடியுமான்னு தெரியல. இப்ப கூட நீங்க என்ன ப்ரபோஸ் பண்ணத்தான் வந்திருக்கீங்கன்னு தெரியுது. அதான் நீங்க எதுவும் சொல்லி அதை நான் ரிஜக்ட் பண்ண முன்னாடி நானே உஙக் கிட்ட இது பத்தி பேசிடலாம்னு இருந்தேன்" என்று கூற அவளை புன்னகையுடன் பார்த்த ராஜீவ்

"இட்ஸ் ஓக்கே நந்தினி, என்னோட வேலைய ரொம்ப இலகுவாக்கிட்டீங்க. சரி இனிமே நம்ம ப்ரெண்ட்சாவே இருக்கலாம்" என்று கூறி அவளின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அங்கிருந்து சென்றான். ராஜீவின் இந்த செயல் நந்தினிக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. தான் இப்படி கூறியதும் அவன் தன்னை கன்வின்ஸ் செய்ய முயற்சிப்பான் என்று நினைத்தவளுக்கு அவன் நடந்து கொண்ட விதம் ஆச்சரியமாகவே இருந்தது. நந்தினி ராஜீவை சந்திக்க சென்றது சந்தியாவுக்கு தெரியாது என்பதால் நந்தினியும் அவளிடம் எதுவும் கூறவில்லை.

வீட்டிற்கு வந்தவன்  தன் தாயிடம் 

"அம்மா நான் ஒரு பொண்ண விரும்புறேன்மா, அவளத்தான் கட்டிக்கனும்னு இருக்கேன். நீங்கதான் அவ வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கனும்"என்று கூற  வீட்டில் இருந்த ராஜீவின் தங்கை ராகவியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள அவனின் தாய்

"யாருப்பா அது, சொல்லு நம்ம உடனே அவங்க வீட்டில் போய் பேசலாம்"என்று கூறியவருக்கு நந்தினி பற்றி கூறத் தொடங்கினான்.முழுக்கதையையும் கேட்ட ராகவி ராஜீவை அணைத்து 

"அண்ணா சூப்பர்னா"என்று கூற அவர்களின் தாய்

"ரெண்டு பேரும் கொஞ்சம் வாய மூடுறீங்களா.என் பையனுக்கு ஏற்கனவே கல்யாணமான ஒரு பொண்ணுகூட கல்யாணம் பண்ண நான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன்"என்றவரை ராகவியும் ராஜீவும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

உடனே தன் தாயிடம் வந்த ராகவி

"என்னம்மா  சொல்ற, நீயும் ஒரு சாதாரண  சீரியல் அம்மா மாதிரி இருக்காத,எனக்கும் இப்படி ஏதும் ஆகி நாளைக்கு உன்ன மாதிரி ஒருத்தங்க சொன்னா உன் மனசு எவ்வளவு கவலைப்படும்னு யோசிச்சி பாரு" என்று கேட்டதற்கு அவர் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக நின்றார். மேலும் தொடர்ந்த ராகவி

"அம்மா அண்ணா அந்த பொண்ண காலேஜ்ல இருந்தே காதலிச்சாரு.அது நம்ம வீட்டுல எனக்கு மட்டும்தான் தெரியும். அக்காவோட கல்யாணம், என்னோட படிப்பு இதெல்லாம் யோசிச்சி அவரு காதல மனசுக்குள்ளயே தோண்டி புதைச்சிட்டாருமா. இப்போ கடவுளா பார்த்து அண்ணாக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்காரு அவரு ஆசைப்பட்ட பொண்ணு கூட சேர. இப்போ நீ இப்படி சொல்றீயேமா. அன்னைக்கு அண்ணா நம்ம குடும்பத்த பத்தி யோசிக்காம அவரோட காதல்தான் பெருசுன்னு நினைச்சி அந்த பொண்ணுகூட போயீருந்தா நம்ம நிலைமை என்னன்னு கொஞ்சம் யோசிச்சி பாரு"என்று கூறியும் தன் தாய் எதுவும் பேசாமல் இருப்பதை கண்டவன் ராகவியை பார்த்து

"இதுக்கு மேல  எதுவும் பேசாத ராகவி. அம்மா என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்" என்று கூறி அவனின் அறைக்குள் சென்றான். சிறு வயதில் இருந்தே தனி ஒருவராக தங்கள் எல்லோரையும் வளர்க்க அவனின் தாய் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் அவன் கண்முன் வர அந்த கஷ்டங்களுக்காக தன் தாய் எதை கேட்டாலும் செய்யலாம் என்று முடிவு செய்தவன் தன் குடும்பத்துக்காக மீண்டும் தன் காதலை இழக்க தயாரானான். 90% மான மிடில் கிளாஸ் ஆண்களின் காதல் கடைசியில் நிராசையாகி போவதை போல் அவனின் காதலும் காற்றில் கரைந்த சருகாக ஆகிக் கொண்டிருந்தது..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro