கற்பனை 34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சந்தியாவின் திருமண செய்தி கேள்விப்பட்ட அவளின் பெற்றோர் உடனே இந்தியா வந்தனர்.போனில் அவர்களுக்கு தகவல் கூறும் போது மாப்பிள்ளை யார் என்று கூறவில்லை.நந்தினியின் வீட்டிற்கு வந்து சந்தியாவுக்கு பார்த்திருக்கும் மாபிள்ளை கதிர் என்று கூற அவர்கள் உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளாகினர் .

"ஏன் நந்தினி அன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கைன்னா என்னான்னு பாடம் எடுத்துட்டு நீ இப்படி தப்பான முடிவை எடுத்திருக்கியேமா. சந்தியாக்கு கல்யாணம் ஆக போகுது என்ற சந்தோசம் இருந்தாலும் எங்க இன்னொரு பொண்ணான உன்னோட வாழ்க்கைய கேள்விக்குறியாக்கிட்டு அவ கல்யாணத்த பண்ண எங்களுக்கு இஷ்டமில்லமா" என்று சந்தியாவின் தாய் கூற சிறிது புன்னகைத்தவள்

"நான் உங்ககிட்ட என்ன பேசினேன்னு எனக்கு ஞாபகமில்லமா. ஆனா சந்தியா அன்னைக்கு எனக்கு அட்வைஸ் பண்ணும் போது சொன்னா நான் உங்க ரெண்டு பேருக்கும் சில விசயங்கள் புரிய வெச்சேன்னு. அவ என்கிட்ட சொன்னது எல்லாம் நிஜமா இருந்தா" என்று இழுத்தவள் சந்தியாவை முறைத்து

"ஏன் நான் நிஜமா இருந்தான்னு சொல்றேன்னு பார்க்குறீங்களா. மேடம் என்ன கதிர் கூட சேர்த்துவைக்க இல்லாத தில்லாலங்கடி வேலைல்லாம் பார்த்தாங்க. அதான் இப்போ மேடம் எது சொன்னாலும் நான் நம்புறது இல்லை. அப்படியே அவ சொன்னது நிஜமா இருந்தா உங்க நிலைமை வேற என்னோட நிலைமை வேறமா.உங்க ரெண்டு பேருக்கும் வேலையையும் குடும்ப வாழ்க்கையையும் ஈகுவலா கொண்டு போக தெரியல ஆனா உங்க வாழ்க்கையில் ஒரு காதல் இருந்திச்சு. எங்க லைப்ல அந்த காதல் மிஸ்சிங்க்மா.காதல் இல்லாம 10 வருசம் என்ன மரணிக்கிற வரைக்கும் சேர்ந்து வாழலாம். ஆனா கொஞ்சம் நம்ம வாழ்க்கைய திரும்பி பார்த்தோம்னா அதுல எந்த ஒரு பிடிப்புமே இருக்காது. இப்போ சொல்லுங்கமா நாங்க எடுத்த முடிவு சரியா தவறா?"என்று கேட்க அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தனர்.

"ஆனா ப்ரெண்டோட ஹஸ்பண்ட கல்யாணம் பண்ணிக்கிட்டா என் பொண்ண பத்தி சமூகம் என்ன பேசும்"என்று கேட்க 

"வெளிப்படையா சொல்றதுன்ன சமூகம் என்பது ஒரு நாயை போல.. என்னடா இவ இப்படி சொல்றான்னு நினைக்காதீங்க  அதுதான் நிஜம்.. நம்ம நல்லது பண்ணாலும் குரைக்கும் கெட்டது பண்ணாலும் குரைக்கும்.. சின்னதா ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. மது குடிக்காதீங்கன்னு யாரும் ஒரு கூட்டம் போட்டு பேசினா உடனே சமூகம் பாரு பப்ளிசிட்டிக்காக பன்றான், இவன் குடும்பத்துல இருக்குறவங்க யோக்கியமா?' அப்படின்னு சொல்லும். அதுவே அவன் குடிச்சி குடிச்சி அவன் உடம்ப கெடுத்துக்கிட்டா 'இவனை எல்லாம் திருத்த ஒருத்தன் வர மாட்டானா' அப்படின்னு சொல்லும். ஏன்னா சமூகத்துக்கு தேவை ஏதாச்சும் சென்சேசனல் நியூஸ். இந்த கல்யாணத்த பத்தி 2 வாரம் பேசும். அதுக்கு அப்புறம் இன்னொரு விசயம் வந்ததும் இதை மறந்துடும்"என்று கூற இப்போது நந்தினியின் தாய் தந்தையருக்கு கூட அவர்களின் மகளை எண்ணி பெருமையாக இருந்தது.. கடைசியில் சந்தியாவின் பெற்றோர்

"நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனா உன் வாழ்க்கை" என்று இழுக்க அவள் புன்னகையுடன்

"எனக்குன்னு ஒருத்தன் வராமலா போக போறான்.கண்டிப்பா வருவான்"என்று கூற சந்தியாவின் தாய்

"அவன் வந்ததுக்கு அப்புறம் சந்தியா கதிர் கல்யாணத்தை வச்சிக்கலாம். உன் கல்யாணம் நடக்காம சந்தியாக்கு கல்யாணம் நடந்தா கண்டிப்பா அது எங்க விருப்பம் இல்லாம நடந்ததா இருக்கும்" என்று கண்டிப்பாக கூற நந்தினி எதுவோ பேசும்  முன் சந்தியா

"ஆமா இதுதான் என்னோட முடிவும் உனக்கு கல்யாணம் ஆகாம எங்க கல்யாணம் நடக்காது"என்று உறுதியாக கூறினால்.முன் என்றால் அவளை நந்தினி மிரட்டியே சம்மதிக்க வைத்திருப்பாள். ஆனால் இப்போது சந்தியாவுக்கு சப்போர்ட்டாக அவளது பெற்றோர் இருக்கும் தைரியத்தில் இவ்வாறு கூறினால். இவர்களின் கூற்றுக்கு பதில் எதுவும் கூறாமல் நந்தினி தனது அறைக்குள் செல்ல அவள் பின்னாலேயே சந்தியாவும் சென்றால்.

தன் பின்னால் வந்த சந்தியாவை முறைத்த நந்தினி

"இப்போ சந்தோசமாடி, என் வாழ்க்கைய கெடுக்குறதுக்குன்னே வந்திருக்கியா" என்று கேட்க புன்னகையுடன் சந்தியா

"ஹேய் உனக்கு இது செட்டே  ஆகல. எனக்கு தெரியும் நான் எது பண்ணாலும் உன்ன ஹேர்ட் பண்ணாதுன்னு.சும்மா எதுக்கு இப்போ சீன போடுற"என்று கேட்க தான் கோவமாக இருப்பது போல நடிப்பது  சந்தியாவுக்கு தெரிந்துவிட்டது என்று வருந்தி அவளை அணைத்தவள்

"உனக்கே தெரியும்டி நாங்க எதுக்காக டிவோர்ஸ் பண்ணிக்கிட்டோம்னு.கதிருக்கு அவரு விருப்பப்பட்ட பொண்ணோட வாழ்க்கை அமையனும்னும் எனக்கு என்னை மட்டுமே காதலிக்கிற ஒருத்தன்கூட வாழனும்னு ஆசை இருந்திச்சு. கதிர் வாழ்க்கை இப்போ சரியாகிடிச்சு. ஆனா என்னோட வாழ்க்கை..."என்று இழுக்க அவளை முறைத்த சந்தியா

"எத்தனை வாட்டி நான் சொல்றது உன்கிட்ட ராஜீவ் உன்ன மட்டும்தான் இன்னைக்கு வரை காதலிக்கிறாருன்னு"என்று கூற விரக்தியாக புன்னகைத்தவள் ராஜீவிற்கும் தனக்கும் இடையில் நடந்த சந்திப்பை கூற கோவம் கொண்ட சந்தியா

"நீ என்ன லூசாடி, உனக்கு அவன் ப்ரெண்ட்னா என்ன அவன் உன்ன காதலிக்கிறான் தானே. சரி இப்போ காலேஜ்ல இருந்தே வேறொரு பையன் உன் ப்ரெண்டா இருந்து காதலிச்சா என்ன பண்ணுவ. ஏன் பொண்ணுங்கள காதலிக்கிறவன் எல்லோருமே காதலனாத்தான் பொண்ணுங்க வாழ்க்கைக்குள்ள வரணுமா. ப்ரெண்டா வந்து காதலனா மாறினா என்ன தப்பு. நீயும் லூசுத்தனமா ப்ரெண்ட  என்னால காதலிக்க முடியாதுன்னு சொன்ன  உன்ன கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போக வேண்டிவரும்" என்று கூற கண்கள் கலங்க

"இல்லடி, நிஜமா எதனால நான் ராஜீவ் கிட்ட அப்படி பேசினேன்னு தெரியல. ஒரு பையன் ஒரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்லும் போது பொண்ணுங்க எப்போதுமே கொஞ்சம் கெத்து காட்டுவாங்கள்ள. அப்படித்தான் நானும் பண்ணேன்னு நினைக்கிறேன்.ஒரு வேலை கல்யாணம் ஆகி செகண்ட் ஹேண்ட்டா வர போறவளுக்கு இவ்வளவு திமிரு இருக்க கூடாதுன்னு அவரு நினைச்சாரோ தெரியல ஆனா....."என்று நந்தினி கூற 

"இங்க ஆனாவும் இல்லை ஆவன்னாவும் இல்லை.ராஜீவ் கிட்ட நான் பேசுறேன். நீ லூசுத்தனமா  பண்ண மாதிரி அவனும் ஏதும் யோசிச்சிருப்பான்" என்று கூறி அவனது மொபைலுக்கு கூப்பிட அவனது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

நாட்கள் நகர நகர நந்தினிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. கடைசியில் கதிர், நந்தினியின் திருமணம் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து பெற கோர்ட் சென்ற போது ஆரம்பத்தில் ஜட்ஜ் இவர்களுக்கு 6 மாதம் கெடு கொடுத்து அதன் பின்னும் அவர்கள் இதே முடிவுடன் இருந்தால் மீண்டும் வரும்படி கூறியிருந்தார். இந்த 6 மாதத்திற்குள் ராஜீவிடம் இருந்து எவ்வித அழைப்பும் நந்தினிக்கு வரவில்லை.

6 மாதத்திற்கு  பின்பின்...

"இந்த வழக்கின் தீர்ப்பு எதிர் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று நீதிபதி கூற வெளியில் மக்களோ

"என்ன காலம்டா இது. கல்யாணம் பண்ணிகிட்டு மனசு பொருந்தி வாழுவாங்கன்னு பெரியவங்க கல்யாணத்த பண்ணி வெச்சா இதுங்க 2 வருசத்துலயே மனசு பொருந்தி விவாகரத்துக்கு வந்து நிக்குதுங்க.இதெல்லாம் என்ன ஜென்மங்களோ" என்று இவர்களின் காது படவே பேசினர்.அப்போது நந்தினி சமூகம் பற்றி கூறியதுவே இவர்கள் எல்லோருடைய மனதில் வந்தாலும் நந்தினியின் பெற்றோருக்கு தங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து ஒரு அச்சம் எழவே செய்தது.அடுத்த வெள்ளிக் கிழமை பெற்றோர் யாரும் கோர்ட்டுக்கு வராமல் இருக்க நந்தினியும் கதிரும் தங்களின் விவாகரத்து சான்றிதழை பெற்றுக்கொண்டு வீடு திரும்ப எத்தனித்த வேலை பார்க்கிங்கிள் ராஜீவ் புன்னகையுடன் நந்தினியை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்களிடம் வந்த ராஜீவ்

"கதிர் எனக்கு நந்தினிக்கிட்ட கொஞ்சம் பேசனும்.நீங்க போறதுன்னா போங்க நான் அவங்கள வீட்டுல டிராப் பண்ணிடுறேன் "என்று கூற அவனும் புரிந்துகொண்டு  புன்னகையுடன் நந்தினியை நோக்க அவள் சரி என்று தலை அசைத்தாள்.. கதிர் சென்றதும்

"இந்த நாளுக்காகத்தான் நான் வெயிட் பண்ணேன் நந்தினி. இன்னைக்கு நீ ஜஸ்ட் நந்தினி அவ்ளோதான். உன் வாழ்க்கை இனி முதல்ல இருந்து ஆரம்பிக்க போகுது.உன்னோட இந்த வாழ்க்கைல என்னையும் உன்கூட சேர்த்துக்கிரியா? உன் கை பிடிச்சி காலம் பூரா நீ சொல்றத மட்டுமே கேட்டு வாழனும்னு ஆசையா இருக்கு. உன் கண்ண பார்த்து கண்களாலேயே காதல் பேசி என் காதல் வசனங்களுக்கு உன் மான்விழிகள் கூற போகும் பதிலுக்கு காத்திருக்க ஆசையா இருக்கு. இன்னும் என்னென்னமோலாம் யோசிச்சி வெச்சேன் உன்ன ப்ரபோஸ் பண்ணும் போது சொல்லனும்னு ஆனா உன்ன பார்த்ததும் எல்லாமே மறந்துடிச்சி" என்று கூற முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் நந்தினி

"நான் அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் ராஜீவ்.நல்லா கவிதை புக் மாதிரி இருந்திச்சு  நீங்க ப்ரபோஸ் பண்ணது. ஆனா அத நீங்க கல்யாணமாகாத  வேறொரு பொண்ணுக்கு சொன்னா இன்னும் நல்லா இருக்கும்.நான் இப்போ கதிரோட எக்ஸ் வைப்பா இருக்கலாம். ஆனா நான் செகன் ஹேண்ட்தானே"என்றவளை அடுத்து அவன் கேட்டது அவளை கோபத்துக்கு உள்ளாக்கியது.



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro