epilogue

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நீலகாந்தனின் கதையை முடித்து சம்ஹித்த வம்சத்தை வேரறுத்து அதர்மத்தினை அழித்திட்ட நால்வரும் ஆதிரா மற்றும் ஆராதனாவின் பாட்டியையும் அழைத்துக்கொண்டு தமது ராஜ்யத்திற்கு வந்து சேர்ந்தனர் .

அவர்கள் வரும்வரை வேதித்யாவும் அஜயும் அந்த ராஜ்யத்திலேயே இருக்க வைக்கப்பட்டிருக்க அவர்கள் வெற்றி வாகை சூடி வருகை புரிந்ததை அந்த ராஜ்யமே கொண்டாடியது .

இத்தனை நாட்களாய் பூட்டி இருந்த ஆதவகுலத்தின் குலதெய்வக் கோவிலிற்கு அந்த குல மக்களோடு சென்று வழிபட்டவர்கள் இதற்கு பின் தனியாய் காட்டிற்குள் வசிப்பதை விட ஊருடன் கூடி வாழ்வதே சாலச்சிறந்தது என்று முடிவு செய்து அந்த மக்கள் அனைவரும் மங்கலாபுரியிலேயே குடில்கள் அமைத்து விவசாயமும் இன்ன பிற தொழில்களும் புரிய ஆரம்பிக்க ஆதிராவும் ஆதேஷும் குடும்பத்துடன் வேதித்யா மற்றும் அஜயுடன் தமது ஊரிற்கு கிளம்பினர்.

கல்லூரி ரிப்போர்ட்டில் அங்கே நடந்த சில சம்பவங்களை மக்களாகவே ஜோடித்து பெரும் அசம்பாவிதம் நடப்பதாக ப்ரம்மையில் வாழ்ந்து வந்ததாகவும் ,அங்கே எந்த பிரெச்சனையும் இல்லை என்றும் ரிப்போர்ட் கொடுத்தவர்கள் அடுத்து சென்று நின்ற இடம் ஆதிராவின் வளர்ப்பு பெற்றோரான மீனாட்சி சொக்கலிங்கத்தின் வீட்டில்.

ஆதேஷுடன் அவள் வருவதை கண்ட இருவரும் அவளிற்கு உண்மை அனைத்தும் தெரிந்திருக்கும் இனி அவள் தம் மகள் இல்லை என்று கவலையுடன் நோக்க அவளோ அவர்களின் எண்ணத்தை பொய்யாக்குவதை போல் luggageay வாசலிலேயே போட்டவள் ஓடி சென்று பாய்ந்து அணைத்துக்கொண்டாள் இருவரையும் "பாப்ஸ் மீ எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா ரெண்டு பேரையும்."என்று இருவரின் கன்னத்திலும் இதழ் பதிக்க அவர்கள் நம்பமுடியாது ஆனந்த அதிர்ச்சியில் இருந்தனர் .

இருவரின் முகத்தையும் பார்த்து குறும்பு பொங்க சிரித்தவள் "என்ன பாப்ஸ் மீ நா இல்லாத நேரத்துல ரொம்ப சந்தோஷமா இருந்த மாறி இருக்கு ஏன்டா வந்தன்ற மாறி பாக்குறீங்களே "என்றவள் பின் பயந்ததை போல் பாவனை காட்டி "பாப்ஸ் ப்ளீஸ் ப்ளீஸ் தம்பி பாப்பா வர போகுதுன்னு மட்டும் சொல்லிறாதீங்க "என்க

இருவருமோ சிரித்தவர்கள் அவளின் தலையில் கொட்டு வைத்து தன்னோடு அணைத்துக்கொள்ள அவளோ சிரித்தவாறு இருவரையும் அணைத்துக்கொண்டவள் "நா எப்போவும் உங்க பொண்ணு தான் "என்று பொதுவாய் கூற அவர்களும் அதற்கு மேல் எதுவும் பேச வில்லை .

இவர்களின் பாசப்போராட்டத்தில் வாசலில் ஒரு குடும்பம் வந்து நின்றதையே கவனிக்காது நிற்க வாசலில் இருந்த ஆதேஷ், வந்தியத்தேவன், அருள்மொழிவேந்தன் ,ஆராதனா நால்வரும் சிறு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர் .

ஆதிராவின் தமக்கை அல்லவா ஆராதனா ஆதிராவின் குரும்பைவிட இரண்டு மடங்கு குறும்புக்காரி அவள் .மூவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்பதை பார்த்து சிரித்தவள் பின் ஓடி சென்று அவர்களின் முன் கையை இடுப்பில் வைத்து நின்றவள் "அப்போ நா உங்க பொண்ணில்லையா ?"என்க அப்பொழுதே அவளை கவனித்தனர் இருவரும் .

ஆதிராவின் ப்ரதிபிம்பமாய் சேலையில் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு உதட்டை பிதுங்கிக்கொண்டு ஐந்து வயது சிறுமி போல் பொய் கோபத்தில் நிற்பவளை பார்த்ததுமே தெரிந்து விட்டது அது ஆராதனா என்று .

ஒருவர் முகத்தை பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டு தம்பதியர் ஒருமிதக்குரலில் "நீயும் தான்டா" என்று அவளையும் அணைத்து கொள்ள

ஆதிராவோ உதறி விலகியவள் "எது இதெல்லாம் செல்லாது நா தான் உங்க செல்லம் "என்க

ஆராதனா அவளின் முன் நின்றவள் "அதெல்லாம் இல்ல நான் தான் "என்க இருவரும் சிறு வயதில் ஒற்றுமையாய் இருந்துவிட்டு இப்பொழுது பால்வாடி பிள்ளை போல் அடித்துக்கொண்டிருந்தனர் யார் செல்லமென்று.இவர்களின் செல்ல சண்டையை பார்த்து வந்தியத்தேவரும் மீனாட்சி சொக்கலிங்கம் தம்பதியரும் சிரித்துக்கொண்டிருக்க .

பொறுத்து பொறுத்து பார்த்த அருள்மொழியும் ஆதேஷும் பின் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை விலக்கியவர்கள்"போதும் போதும் "என்க

அவர்கள் மீண்டும் இவர்கள் இருவரிடமும் வாதத்தை வைக்க பொறுமை இழந்த சகோதரர்களோ "இப்போ வாய மூடல மறுபடி காட்டுக்குள்ள கூட்டிட்டு போய் விட்ருவோம்" என்க அதற்கு பின் இருவரும் வாயை திறப்பார்களா கப் சிப்பென்றாகி விட்டனர் .

அவர்கள் இருவரையும் புரியாது பார்க்க வந்தியத்தேவரோ முன்னே வந்து கை கூப்பியவர் "வணக்கம் என்னை நினைவில் உள்ளதென்று நினைக்கிறன் நான் ஆருத்ராவின் அண்ணன் வந்தியத்தேவன் .:என்று அருள்மொழியின் புறமும் ஆதேஷின் புறமும் திரும்பியவர் "இது என் புதல்வர்கள் அருள்மொழி மற்றும் ஆதேஷ் "என்க

அவரை கண்ட மாத்திரமே இவர்கள் யாராய் இருப்பார்கள் என்று உணர்ந்துகொண்டவர்கள் "உள்ள வாங்க உள்ள வாங்க "என்று உள்ளே அழைக்க அனைவரும் வீட்டிற்குள் சென்று அமர்ந்தனர் .

பின் குடும்பம் மொத்தமும் அமர்ந்து கலகலப்பாய் பேசத்துவங்க ஆராதனா மற்றும் ஆதிராவின் குறும்பில் அந்த வீடே ரெண்டாகி விட்டது .பின் சற்று நேரம் கழித்து வந்தியத்தேவன் "அது நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியை பற்றி கலந்தாலோசிக்கவே வந்தோம் "என்று ஆதேஷிற்கும் அருள்மொழிக்கும் கண்காட்ட இருவரும் வந்தியத்தேவரின் புறம் வந்து நிற்க ஆதிராவும் ஆராதனாவும் மீனாட்சி மற்றும் சொக்கலிங்கத்தின் பின் சென்று நின்றனர் .

அவர்கள் கேள்வியாய் நோக்க வந்தியத்தேவரோ "உங்கள் மகள்கள் ஆராதனாவையும் ஆதிராவையும் எமது புதல்வர்கள் அருள்மொழிக்கும் ஆதேஷிற்கும் மணமுடித்துத்தர தமக்கு சம்மதமா ?"என்று கேட்க உமது புதல்விகள் என்று அவர்களை குறிப்பிட்டதிலேயே உள்ளம் குளிர்ந்து போன தம்பதியர் மறுயோசனை இன்றி தமது சம்மதத்தை வழங்க ஆராதனாவின் முகமும் ஆதிராவின் முகமும் முதலில் பிரகாசமாய் ஒளிர்ந்து பின் அடுத்த நொடியே ஏனோ திடீரென சோகத்தை பூசிக்கொள்ள இருவரின் கண்களும் ஏக்கமாய் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டது .

பின் தமது முகத்தை சீர் செய்துகொண்டவர்கள் சபையில் மேற்கொண்டு திருமண தேதி குறிக்கும் வைபவம் நடப்பதால் அமைதியாய் இருக்க அவர்களின் கண்ணசைவையும் படிக்கும் மன்னவர்கள் இருவருக்கும் அந்த ஏக்கப்பார்வையின் பரிமாற்றமா புரியாமல் போகும்.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஒரு மௌனச்சிரிப்பை சிந்தியவர்கள் பின் எதும் தெரியாதாதை போல் முகபாவத்தை மாற்றிக்கொண்டனர் .

ஒரு மாதத்திற்கு பின் திருமணம் ஆதவகுலத்தின் குலதெய்வ கோவிலில் ஜோடிய
ர் இருவருக்கும் ஒரே நாளில் நடப்பதற்கு முடிவு செய்யப்பட அதுவரை ஆராதனாவும் ஆதிராவும் இங்கே தங்கவைக்கப்படுவதாய் முடிவு செய்யப்பட்டு அருள்மொழியும் வந்தியத்தேவரும் ஊரிற்கு திரும்பிச்செல்ல ஆதேஷ் தனது வீட்டிற்கு சென்றான் .

ஒரு மாதமும் உருண்டோட அன்றைய இனிய நாளின் உதயத்தில் ஆதவகுலத்தின் கோவில் அன்று தெய்வீக அம்சத்தையும் தாண்டியதொரு சந்தோஷ அலையில் தத்தளித்திருக்க.மக்கள் தமது இளவரசர்கள் மற்றும் இளவரசிகளின் மணநாளிற்காக மங்கலமாய் தயாராகி முகம் நிறைந்த புன்னகையுடன் வலய வர ,வந்தியத்தேவரும் மீனாட்சி,சொக்கலிங்கம் தம்பதியரும் அஜய் வேதித்யாவும் வந்தோரை வரவேற்க கோவிலின் உள்ளே இரு மனைகள் அமைக்கப்பட்டிருக்க வெள்ளை நிற வேஷ்டியில் மணமகனுக்கே உரிய கம்பீரத்தில் சகோதரர்கள் இருவரும் தமது மனம்கவர்ந்த ஏந்திழைகளின் எழில் முக தரிசனத்திற்காக தவம் கிடந்தனர் .

இருவரையும் அதிகம் சோதிக்காமல் இரு பெண்களையும் வேதித்யாவுடன் மற்ற பெண்கள் துணையோடு அன்ன நடையிட்டு அழைத்துவர சிகப்பு நிற பட்டில் தலை நிறைய பூச்சூடி  இடை தாண்டிய கூந்தலை பின்னி, உச்சி முதல் உள்ளங்கால் வரை பூட்டிய பொன் ஆபரங்களாலும் அதை தாண்டி தமது கண்ணாலனாகளின் தொடர்பார்வையில் சிவந்த கன்னங்களாலும் தேவ சிற்பமென வந்தவர்களை கண்களாலேயே விழுங்கினர் சகோதரர்கள் .

மணப்பெண் அலங்காரத்தில் வந்த தம் பேத்திகளை கண்ணில் நிறைத்துக்கொண்ட விஷாகனின் தாயார் இருவரையும் நெற்றிமுறித்தவர் நெற்றியில் இதழ் பதித்து அனுப்பி வைக்க பின்

மனையில் இருவரும் தத்தம் துணையின் அருகில் அமரவைக்கப்பட்டனர் .

அருள்மொழியும் ஆராதனாவும் ஒரு முறை கண்ணோடு கண் பார்த்துக் கொண்டவர்கள் பின் சிறு சிரிப்போடு மந்திரங்களை உச்சரிக்க துவங்க ஆதேஷோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் ஆதிரா அருகில் அமர்ந்த பின்னும் வெகுநேரமாய் அவளையே பார்த்துக்கொண்டு மந்திரத்தை உளறிக்கொட்டினான் .

அதை கவனித்த ஆதிரா அடிக்குரலில் "டேய்ய் கருவாயா திரும்பி தொலைடா எல்லாரும் பாக்குறாங்க "என்க ஆதேஷ் இன்னும் அப்படியே இருக்க

பின்னே நின்றிருந்த அஜயோ நங்கென்று அவன் தலையிலேயே கொட்டியவன்"எனக்கு நீச்சல் தெரியாதுடா கோவிலை வெள்ளக்காடாக்கிடாதடா வளிஞ்சு வளிஞ்சு ஒழுங்கா மந்தரத்தை சொல்லுடா "என்க ஈ என்று இளித்தவன் பின் மந்திரத்தை ஒழுங்காய் உச்சரிக்க சற்று நேரத்திற்கெல்லாம் பொன் தாலி பூட்டிய மங்கள நாணை தத்தம் துணையின் கழுத்தில் பூட்டி இருவரையும் முழுதாய் தன்னவளாய் உயிரின் சரிபாதியாய் ஏற்றுக்கொண்டனர் அருள்மொழியும் ஆதேஷும் .

பின் இன்ன பிற சடங்குகள் முடிந்து ஊரிற்கு கிளம்பும் நேரம் வர அதுவரை சந்தோஷத்தின் பூரிப்பில் இருந்த சகோதரிகள் இருவருக்கும் சோகம் வந்து முகத்தில் அப்பிக்கொள்ள இருவரும் கோர்த்த கையை விடவே இல்லை .அனைத்தும் முடிய மாலை மங்கும் நேரம் ஆதிராவின் அருகில் வந்து அவள் கையை பற்றிய ஆதேஷ் "நேரமாச்சு ஆரா.வண்டி வெளிய நிக்குது வா போலாம் "என்க ஆதிராவோ மௌனமாய் தலை அசைத்தவள் கண்ணீர் திரை இட ஆராதனாவை பார்த்தவாறே நடந்து வெளியே சென்றாள்.

மூன்று வண்டிகள் வரிசையாய் நிற்க முதல் வண்டியில் வேதித்யா அஜய் மற்றும் ஆதிராவின் வளர்ப்பு பெற்றோர் அமர்ந்துகொள்ள ரெண்டாவது வண்டியில் ஆதிராவின் லக்கேஜை எடுத்து வைத்த ஆதேஷ் அவளுடன் சென்று உள்ளே அமர்ந்துகொள்ள ஜன்னல் புறம் அமர்ந்து ஆராதனாவின் முகத்தையே பார்த்தவாறு கையை இறுக்கி பற்றியபடி அமர்ந்திருந்தாள் ஆதிரா .

வண்டி கிளம்ப அவர்கள் இருவரின் கையும் பிரியும் நேரம் இருவருக்கும் கண்ணில் மீண்டும் பிரியும் நிதர்சனம் புரிய கண்களில் கண்ணீர் திரையிட இருவரின் கையும் பிரிந்து வண்டி அவளை தாண்டி சென்றிட அழுகையுடன் திரும்பி நடக்க போனவள் சிந்தையை கலைத்தது இன்னொரு காரில் இருந்த அருள்மொழியின் குரல் ."ஓய் மனைவியாரே கிளம்பும் எண்ணம் இல்லையா ?"என்க

அவளிற்கோ ஒன்றுமே புரியவில்லை .மலங்க மலங்க விழித்தவளை தோள் பற்றி உள்ளே அமர வைத்து ஓட்டுநர் இருக்கையில் தான் அமர்ந்து அவள் கையை கோர்த்தபடி "இனி உன் சகோதரியை நீ என்றும் பிரிய வேண்டாம் "என்று கூற

அவள் புரியாது பார்க்க அருள்மொழியோ சிரித்தவன் "நாமும் அவர்களுடன் அவர்கள் வாழும் ஊரிற்கு செல்கிறோம் ."என்க அவளிற்கோ ஆனந்த அதிர்ச்சி .முகம் கொள்ளா சிரிப்புடன் அவனை பார்க்க

அங்கே ஆதிராவோ இதை கேட்டு நூறுமுறை ஆதேஷிடம் வினவிவிட்டால் "நிஜமாவா நிஜமாவா "என்று

அவளை இழுத்து ஒற்றை கையால் வண்டி ஒட்டிக்கொண்ட ஒற்றை கையால் தன்னோடு அணைத்த ஆதேஷ் "ஆமாடி பொண்டாட்டி அப்பா இதுக்கு முன்ன போற வண்டில இருக்காரு .எதிரி வம்சத்தால நம்ம வம்சத்துக்கு எப்போ ஆபத்து வரும்னே தெரியாம இருந்ததால தான் பாதுகாப்புக்காக அங்க இருந்துத்திருந்தாங்க. இப்போ தான் அந்த வம்சமே கூண்டோட அழுஞ்சு மக்களும் மத்தவங்களோட சேர்ந்து விவசாயம் தொழில்னு இந்த காலத்தோட ஒன்றி வாழ ஆரம்பிச்சுட்டாங்க.இனி எதுக்கு தேவை இல்லாத பிரிவு அதான் அப்பாவையும் அண்ணனையும் உன் பாட்டியையும் பேக் பண்ணியாச்சு அங்க. "என்று கண்ணடித்து கூற

இங்கே அருள்மொழியின் வண்டியிலோ"அங்கே ஓர் வீட்டை ஆதேஷ் மற்றும் எனது பெயரில் வாங்கி விட்டோம் பின் திருமணம் குறித்து பேசிய அடுத்த நாளே அங்கே விற்கும் நிலையில் இருந்த ஒரு தற்காப்பு கலை கற்றுக்கொடுக்கும் பள்ளியை வாங்கிவிட்டோம் .ஒரு மாதமாய் நான் அங்கே இருந்து தான் அப்பள்ளியை நிர்வகித்து வருகிறேன் ."என்று கூற

ஆதேஷின் வண்டியில் இதை கேட்டு குதிக்காத குறையாய் சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த ஆதிரா வண்டியில் கண்ணாடி மூடி இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு பின் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு "ஐ லவ் யு "என்க

அவனோ அனந்த அதிர்ச்சியாய் அவளை பார்த்தவன் பின் நெற்றியில் முத்தமிட்டு "லவ் யு டூ"என்று கூற இங்கே அருள்மொழியின் வண்டியிலும் அதே நிலை தான் ,

இப்படியே இரண்டு ஜோடிகளும் தமது காதலிலும் சகோதர பாசத்திலும் திளைத்து நிறைவான வாழ்க்கை வாழ வேண்டி விடைபெறுவோம் .

சுபம்

Konjam next partayum padingo pls

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro