அத்தியாயம் (15)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதி: இந்த படத்துல எல்லாம் வருமே நான் அவளை பார்க்கறதுக்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தா உன்னை தான் லவ் பண்ணி இருப்பேன்னு..... நான் உன்னை தான் ஆரு முதல்ல பார்த்தேன். ஆனால் காதல் என்னமோ முதல்ல அவ மேல தான் வந்திச்சு.... இந்த காதலே அப்படித் தானே ஆரு. எப்ப யார் மேல வரும்னே தெரியாது. ஆனா எப்ப யார் மேல வரவே கூடாதோ அப்ப அவங்க மேல கரெக்ட்டா வந்துரும். அப்ப அவ மேல வந்ததும் bad timing இப்ப உன்கிட்ட வாரதும் bad timing!! நான் என்ன இப்படி ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடிட்டு இருக்கேன்னு நீ நினைச்சாலும் சரி தான். ஆனால் எப்பவும் நீ எங்க இருந்தாலும் ஒன்னே ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. இந்த காதல் உன்னை விட 100 மடங்கு வலியை எனக்கு குடுக்குது....

ஆரு: நான் இதுலாம் உன்கிட்ட இது வரை கேட்டதில்லை. ஆனால் இன்னைக்கி என்னமோ எல்லாமே கேட்டு தெரிஞ்சிக்கணும் போல தோணுது ஆதி. சொல்லு நீ எப்படி அவ மேல காதல்ல விழுந்த???

ஆதி: பொண்ணுங்க கொஞ்சம் smart ஆ, Bold ஆ இருந்தா எனக்கு பிடிக்கும். வெக்கப்பட்டுட்டு, லூசு மாதிரி ஆக்டிங் கொடுக்குற பொண்ணுங்கன்னா செட்டே ஆகாது. வசு ரொம்ப Smart. Cut and right ஆ இருப்பா. அவகிட்ட நெருங்க எனக்கு கொஞ்சம் time எடுத்தது. Not easily approachable. Life ல எதுவுமே அவ்வளவு சீக்கிரம் கிடைச்சிடக் கூடாது. அந்த சுவாரசியம் எனக்கு பிடிச்சு இருந்தது. அவளை எப்படியாச்சும் நம்ம பக்கம் பார்க்க வைக்கணும்னு தோணிச்சு. அப்படி தான் நான் அவ கிட்ட attract ஆனேன். கொஞ்ச கொஞ்சமா அவகிட்ட நெருங்கி போனேன். அப்பறமா we mutually fell in love. தன் circle க்குள்ளயே அவ்வளவு சீக்கிரமா யாரையும் allow பண்ணாத வசு என்னை நம்பி தானே ஆரு அவளையே எனக்கு குடுத்து இருக்கா... அது தான் அந்த நம்பிக்கைக்கு துரோகம் பண்ணக் கூடாதுங்கற ஒரு எண்ணம் தான். எனக்கு life partner ஆ வரப் போற பொண்ணு எப்படி இருக்கணும்னு கண்ணை மூடி யோசனை பண்ணி பார்த்தா எனக்கு அவ தான் தெரியிறாளான்னு கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியல. உன்கிட்ட எனக்கு இப்ப தோணிட்டு இருக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள்லாம் எப்பவுமே அவகிட்ட தோணினதே இல்லை. இது ரெண்டுல எது லவ்வுன்னு கேட்டாலும் எனக்கு பதில் சொல்ல தெரியல. ஆனால் I'm committed. அந்த வார்த்தைக்கு என்னால முடிஞ்ச அளவு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன் ஆரு....

ஆரு: நான் easily approachable ஆ இருந்தது. I mean எப்பவும் உன் கண் முன்னாடியே இருந்தது தான் உன்னை என்னை பார்க்க விடாத படி பண்ணிடிச்சில்ல ஆதி?

ஆதி: ஹ்ம்ம்... எப்பவுமே கிடைக்காத பொருளுக்கு தானே விலை அதிகம். வசுவை என்னால அவ்வளவு சீக்கிரமா நெருங்க முடியல. அது தான் என்னை அவகிட்ட கொண்டு போச்சு. அதே மாதிரி தான் நீயும். நீ என்கூடவே இருக்கும் வரை எனக்கு எதுவுமே தோணிணதில்லை. நீ இனி இல்லைனும் போது தான் நீ எனக்கு வேணும்னு தோணுது.

ஆரு: இப்ப சொல்லு ஆதி. நீ நேத்திக்கு நைட் கேட்டது சரியா? ஒரு பிரச்சினைக்கு எப்பவுமே தற்காலிக தீர்வு பதில் ஆகிடாது. எதுக்குமே ஒரு நிரந்தர தீர்வு வேணும். நீ ஒரு முடிவு எடுக்கணும். அதுல தெளிவா இருக்கணும். உறுதியா இருக்கணும். அப்ப தான் மீதி வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். வசுக்கு என்ன நடந்தாலும் பரவாலைன்னு என்னாலயும் உன்கூட அப்படி ஓடி வந்துற முடியாது.... I don't want to steal you from another woman's life. எங்களோடது affair கிடையாது. அவளை நம்ம ஏமாத்திட்டு ஓடிப்போக.. இதை நான் காதலுக்கும் அப்பாற்பட்ட ஒரு புனிதமான உறவா நினைச்சிட்டு இருக்கேன். You know what I mean?

ஆதி: ஹ்ம்ம்... உன்னோட இந்த பொறுமை, இந்த அமைதி, இந்த தெளிவு, இந்த மனசு இதெல்லாம் தான் என்னை மறுபடி மறுபடியும் உன்கிட்டயே அழைச்சிட்டு வருது!! எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சதே நீ இப்படி Subtle ஆ இருக்கது தான். இதெல்லாம் தேவதைங்களோட qualities ல தான் சேரும். நீ கோடில ஒருத்தி... நான் ஒரு ஆர்டினரி பையன்.

இந்த உரையாலலோடு அந்த கார் ஶ்ரீரங்கத்திலிருந்து அடையார் வந்து சேர்ந்தது. ஆதியின் கார் வீடு சென்று சேரும் முன்னரே ராமின் கார் வீடு சென்று சேர்ந்து இருந்தது. ஆரு காரில் இருந்து இரங்கிக் கொண்டாள். ஆதி உள்ளேயே அமர்ந்து இருந்தான்.

ஆரு: என்னடா? வீட்டுக்குள்ள கூட வராமல் அதுக்குள்ள எங்கடா கிளம்பிட்ட?

ஆதி: ஆபீசுக்கு கொஞ்சம் போய் தலையை காட்டிட்டு வாரேன். நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு.

ஆரு: சரி உள்ள வந்து கொஞ்சம் fresh ஆயிட்டு ஏதாச்சும் சாப்பிட்டு போடா....

ஆதி: அதுக்கெல்லாம் நேரம் இல்லை. நைட்டுக்கு உன் கையால ஏதாச்சும் பண்ணி வை. வந்து ஒரு பிடி பிடிக்கிறேன். பை!

ஆதி வண்டியை ரிவர்ஸ் செய்து கொண்டு ஆபீசுக்கு சென்றான். அவன் வாய் விட்டு அவளை சமைத்து தரும் படி கேட்டது அவளுக்கு அத்தனை சந்தோஷமாக இருக்க. பயணக் களைப்பை மறந்து அவனுக்கு என்ன சமைத்துக் கொடுக்கலாம் என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள் ஆரு. ஆதி ஆபீசுக்கு சென்றான். அவன் எதிர்பார்த்ததை விட வேலை தலைக்கு மேல் இருந்தது. எல்லாவற்றையும் பார்த்து முடிக்க மாலை 8:30 மணிக்கு மேல் ஆகி விட்டது. வேலை முடிந்து களைப்பாக வீட்டுக்கு சென்று ஆரு கையால் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்க வேண்டும் போல இருந்தது. பாட்டி வீட்டில் மூன்று நாள் தரையில் படுத்தது எல்லாம் இப்பொழுது தான் இடுப்பை பதம் பார்த்தது. லாப்டாப்பை அணைத்து பைக்குள் போடும் போது தான் அவனது ஆபீஸ் மேசையில் இருந்த அந்த போட்டோ அவன் கண்ணில் பட்டது. அவனும் வசுவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை frame போட்டு அவன் தன் மேசை மீது வைத்து இருந்தான். ஶ்ரீரங்கம் சென்ற இந்த மூன்று நாளில் அவன் வசுவை முற்றிலுமாக மறந்து போயிருந்தான். அவள் ஊரில் ஏதோ இடத் தகராறு என்று சொல்லி விட்டு சென்றாலே அது பற்றி அவன் ஒரு முறை கூட எடுத்து அவளிடம் விசாரிக்கவில்லையே என்று நினைத்த போது அவனுக்கே மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவளும் தான் அவனை தொடர்பு கொள்ளவே இல்லை! ஒரு வேளை அவனே கூப்பிட்டு விசாரித்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அவன் மீது கோபமாக இருப்பாளோ... தன் போனை எடுத்து அவள் நம்பருக்கு அழைத்தான். இரண்டு ரிங்கில் லைன் கட் செய்யப் பட்டது. மறுபடியும் அழைத்தான் பதில் இல்லை. அடுத்த அடுத்த முறைகளில் செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. நிச்சயமாக அவள் அவன் மீது கோபமாகத் தான் இருக்க வேண்டும். வீட்டுக்கு செல்லும் முன்பதாக ஒரே ஒரு முறை சென்று அவளை பார்த்து விட்டு போய் விடலாம் என்று முடிவு செய்து கொண்டான். ஆபீசில் இருந்து வண்டியை எடுத்துக் கொண்டு நேராக வசுவின் Flat நோக்கி சென்றான். காருக்குள் ஏறியதுமே அருகில் ஆரு அமர்ந்து இருப்பதைப் போல உணர்ந்தான். அவள் செல்லும் இடமெங்கும் அவள் வாசனையை விட்டு விட்டு சென்று இருந்தாள். ஆருவின் பின்னாள் சென்ற மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வசுவை பார்க்க சென்றான். அப்பார்ட்மண்ட் வாசலில் பழக்கமான வாட்ச்மேன் நின்று கொண்டு இருந்தார். ஆதி ஷட்டரை திறந்து,

"மேடம் ஊர்ல இருந்து வந்தாச்சா?" என்றான்.

"இன்னைக்கி காலைல தான் சார் வந்தாங்க." என்றார்.

காரை பார்க்கிங்கில் விட்டு விட்டு lift இல் இலக்கம் 11 இனை அழுத்தி வசுவின் வீட்டுக்கு சென்றான். பல முறை காலிங் பெல் அடித்தும் யாரும் திறக்கவில்லை. 'வசு காலையிலேயே வந்து விட்டதாய் வாட்ச்மேன் சொன்னானே.. ஒரு வேளை வெளில எங்கயாச்சும் போயிருப்பாளோ?'வாசலில் நின்று கடைசியாக ஒரு முறை அவள் நம்பருக்கு ட்ரை செய்து பார்த்தான். ஸ்விட்ச்ட் ஆப் என்று வந்தது. வாட்ச்மேனிடம் தகவல் தெரிவித்துக் கொண்டு கிளம்பலாம் என்று நினைத்தவன் என்ன நினைத்தானோ திரும்பி வந்து தன்னிடம் இருந்த Spare key ஐ பயன்படுத்தி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். வீட்டில் லைட் எறிந்து கொண்டு இருந்தது. வீட்டுக்குள் ஆள் இருப்பதைப் போல இருந்தது. வசு அவன் மீதுள்ள கோபத்தில் தான் இதை எல்லாம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வரவே தான் அவன் அவனாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். வசு அவள் ரூமுக்குள் தான் இருக்க வேண்டும் என்று ரூமுக்கு சென்றான். கதவு பாதி திறந்து இருந்தது. ஆனால் வசுவின் படுக்கை அறையில் அவன் கண்ட காட்சி அவனை அப்படியே தூக்கி வாரிப் போட்டது.

வசு வேறு ஒரு ஆணுடன் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் ஒன்றாக இணைந்து இருந்தாள். அவன் கண் முன்னே நடப்பது கனவா நிஜமா என்று ஆதிக்கு புரியவில்லை. அவன் அந்த கோலத்தில் இதுவரை யாரையும் கண்டதில்லை. அங்கு வேறு ஒரு ஆணுடன் சல்லாபித்து இருப்பது அவனது காதலி என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அப்பொழுது ஆதிக்கு தோன்றியது கோபமா, கவலையா, அருவருப்பா, ஆற்றாமையா எதுவென்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. கை முஷ்டி தானாக இறுகியது. தரையை பிளந்து கொண்டு அவன் அப்படியே உள்ளே சென்று விடுவானோ என்று இருந்தது. அந்த ஏமாற்றத்தை அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் கண்கள் அனிச்சையாய் சிவந்து கண்ணீரை வரவழைத்தது. வந்த வேகத்தில் வெளியே திரும்பினான் ஆதித்யா. கதவில் காலை இடித்துக் கொண்டு தவறி விழப் பார்த்தான். அந்த சத்தத்தில் தான் வசுந்தாராவும் அவள் மீது இருந்தவனும் அங்கு வேறு ஒருவர் நின்று கொண்டு இருப்பதையே கண்டு கொண்டனர். அவனை அங்கு கண்டதும் இருவருக்குமே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அந்த அதிர்ச்சி வசுந்தராவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவள் மீது இருந்தவன் ஒதுங்கி அவளுக்கு இடம் விட தன் உடலை போர்வை கொண்டு மறைத்துக் கொண்டாள். ஆனால் தன்னை அவர்கள் கண்டு விட்டார்கள் என்பது ஆதியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவன் பாட்டுக்கு வெளியே பார்த்து நடந்தான். எப்படி மாடியில் இருந்து கார் பார்க்கிற்கு வந்தான் என்று அவனுக்கே தெரியாது. வண்டியில் ஏறி அமர்ந்து சற்று முன் ஆரு அமர்ந்து இருந்த இருக்கையைப் பார்த்ததும் இத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்து கொட்டியது. தன்னை நினைத்து அழுதானா, வசுவை நினைத்து அழுதானா, ஆருவை நினைத்து அழுதானா அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவன் ஏமாற்றப் பட்டு இருந்தான், வசு எத்தனை நாளாக அவனை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாள் என்பது கூட அவன் அறிய மாட்டான், மொத்தத்தில் அவள் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு ஒன்றாக இருந்து இருக்கிறாள். அதில் ஒருவன் அவன் என்பதை நினைத்துப் பார்த்த போதே அவனுக்கு அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருந்தது. தன்னையே அழுக்கு போல உணர்ந்தான் அவன். இது வெளியில் தெரிந்தால் எவ்வளவு பெரிய அசிங்கம். அவள் அவனையும் சேர்த்தல்லவா கேவலப்படுத்தி விட்டாள்! அவனுக்கு அவன் மேலேயே கோபம் வந்தது. ஸ்டீரிங்கை ஓரிரு முறை ஓங்கிக் குத்தினான். பின்னர் ஸ்டீரிங்கின் மீது சாய்ந்து அதன் மேல் தன் தலையை வைத்து அழுதான். அப்பொழுது தான் அவன் Shirt Pocket இல் இருந்து ஆருவின் கொழுசு வெளியில் வந்து விழுந்தது.

"ஆரு நான் எப்படிடி உன் முகத்துல முழிக்கப் போறேன்? யாரை காரணமா காட்டி நான் உன்னை வேண்டாம்னு சொன்னேனோ அவ என்னை ஏமாத்திட்டான்னு நான் எந்த மூஞ்சிய வெச்சிட்டு உன்கிட்ட சொல்லப் போறேன்? என்னால முடியாது ஆரு இதை உன்கிட்ட சொல்ல என்னால முடியவே முடியாது. இந்த உண்மையை தெரிஞ்சிக்காமலேயே நீ போய்டு. இவ ஏமாத்திட்டான்னு உன்கிட்ட வரதுக்கு நீ ஒன்னும் யாருக்கும் செக்கெண்ட் ஆப்ஷன் கிடையாது ஆரு. நீ ஒரு தேவதை, நீ ஒரு அதிசயம். I don't deserve you a bit. இது நானா தேடிக்கிட்டது I will deal with it. நீ போய்டு ஆரு. நான் மனசார சொல்றேன். எனக்கு நீ வேண்டாம். எனக்கு நீ வேண்டங்கறதுல இப்போ தான் நான் ரொம்ப உறுதியா இருக்கேன். இந்த மூணு நாளா நீ உனக்கான ஞாபகங்களை சேர்க்கறதா நினைச்சிட்டு எனக்கான ஞாபகங்களை விட்டுட்டு போயிருக்க. அது போதும் எனக்கு!"

அவன் முடிவு செய்து விட்டான். வண்டியை Bar ஐ நோக்கி செலுத்தினான். ஒரு புறம் அவனுக்கு நேர்ந்த துரோகம், மறுபுறம் சற்று முன்பு வரை அவன் அருகில் அமர்ந்து வந்தவளின் நினைவுகள் என இரண்டும் மாறி மாறி வந்து அவனை கூறு போட்டது! துரோகத்தின் வலியும் காதலின் வலியும் அவனை ஒரு சேர வந்து தாக்கியது! இரண்டு கைகளும் ஸ்டீரிங்கின் மீது இருக்க, ஸ்டீரிங் பிடித்து இருந்த ஒரு கைக்குள் அவள் கொழுசை வைத்து அழுத்தியபடி ஸ்டீரிங்கை பிடித்து இருந்தான் அவன். அவன் நெஞ்சம் ஆருவின் மடியில் சாய்ந்து கதறி அழ வேண்டும் என்று துடித்தது. அவன் மூளை அதைத் தடுத்தது!

நேற்று நான் உன்னைப் பார்த்த
பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக
ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன
தூரம் யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக
அலையாய் இங்கு மிஞ்சுதே
நூலருந்த பட்டம் போல
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேட்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்
கதைப்போமா கதைப்போமா
நீ பேச பேச
காயம் ஆறுமே
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro