அத்தியாயம் (16)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதித்யா காரை கிளப்பிக் கொண்டு பாருக்கு சென்றான். மனதில் இருந்த பாரம், சோகம், கோபம் எல்லாம் தீரும் வரை குடித்தான். ஆணுக்கோ பெண்ணுக்கோ இது ஒரு பலத்த அடி!மறக்கவே மறக்க முடியாத காயம். துரோகம் ஒரு வலி என்றால் அதை தன் கண் எதிரிலேயே காண நேர்வது அதை விட பெரிய வலி! எவ்வளவு குடித்தான் என்பது அவனுக்கே தெரியாத அளவுக்கு, சுயநிலை மறக்கும் அளவுக்கு குடித்தான். இது எதையும் அறியாத ஆருவோ ஆதித்யாவுக்காக சமைத்து வைத்து அவன் வரும் வரை காத்திருந்தாள். இரவு உணவுக்கு வந்து விடுவதாக சொல்லி விட்டு சென்றவன் இரவு 11 மணி ஆகியும் வீடு திரும்பாததால் அவனுக்கு கால் செய்தாள். எத்தனை முறை அழைத்தும் அவன் Phone ஐ தூக்கவில்லை. ஒரு வேலை வீட்டுக்கு வருவதாக தன்னிடம் கூறி விட்டு வசுவை பார்க்க சென்றிருப்பானோ என அவள் மனம் சோர்ந்தாள். இரவு 12 மணியை நெருங்கியது ஆதி இன்னும் வீடு வந்து சேரவில்லை. இதற்கு மேல் அவன் வர மாட்டான் எனத் தோன்ற எழுந்து தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். இத்தனை நாளாக அவன் வசுவின் வீட்டுக்கு சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பிய போதெல்லாம் வலிக்காத மனது இப்பொழுது எதை எதையோ வீணாக கற்பனை செய்து கொண்டு வலித்தது. இதற்கு மேல் தன்னால் அவனை வசுவோடு பங்கு போட முடியாது என்று தோன்றியது. இரவு 2 மணிக்கு மேல் ஆதி வீடு திரும்பினான். எப்படி வண்டி ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் என்று தெரியாத அளவுக்கு குடித்து இருந்தான். ஆருவின் குடும்பம் ஶ்ரீரங்கம் கிளம்பிச் சென்ற இரண்டு நாட்களில் அவன் வீட்டில் தனியாக இருந்ததினால் அவனிடத்தில் தான் கேட் சாவி இருந்தது. தள்ளாடி வண்டியை விட்டு இரங்கி வந்து கேட்டை திறந்தான். ஆனால் அதற்குள் சத்தம் கேட்டு ஆரு வெளியே வந்து விட்டாள். யார் கண்ணில் படாமல் சென்று விட வேண்டும் என்று நினைத்தானோ அவளே எதிரில் வந்து நின்றாள்.

ஆதி எவ்வளவு குடித்தாலும் ஸ்டெடியாக இருப்பான். அவன் இப்படி நடை தள்ளாடும் படி குடித்து அவள் இதுவரை கண்டதில்லை. அதிர்ச்சியாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள். அவனோ அவளை சட்டை செய்யாமல் வண்டிக்குள் தள்ளாடி எறி அமர்ந்து வண்டியை உள்ளே பார்க் செய்தான். பின்பு அவள் அங்கு நிற்பதையே கண்டு கொள்ளாமல் மாடிப்படி ஏறினான். என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆருவும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். படி ஏற முடியாமல் அவன் கால் தடுமாறி விழ முயல ஓடிப் போய் அவனைப் பிடித்துக் கொண்டாள்.

"No No No Don't touch....." என்று அவளை தடுத்து நிறுத்தினான்.

"என்னடா இப்படி பண்ற?" என்றாள் புரியாமல்.

"I'm good. I'm alright. நீ போ... போய் தூங்கு" என்றான். அவள் தன் மேல் படாமல் தள்ளி நின்று கொண்டான்.

ஏதோ சரி இல்லை என்று மட்டும் அவளுக்கு புரிந்தது ஆனால் என்னவென்று தான் புரியவில்லை. புத்தி பேதளிக்கும் அளவிற்கு குடித்து இருப்பவனிடம் என்னத்தை கேட்பது என்று விட்டு விட்டாள்.

"சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா?" என்றாள்.

தலையை மட்டும் வேண்டாம் என ஆட்டி விட்டு தட்டுத்தடுமாறி படியேறி கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான் அவன். அவளும் அதை பெரிது படுத்தாமல் போய் படுத்து தூங்கி விட்டாள். ஆதித்யாவால் தான் எவ்வளவு முயன்றும் தூங்கவே முடியவில்லை. வசுந்தராவின் வீட்டில் கண்ட காட்சி அவன் கண் முன்னே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது. விடிந்த பின்னர் தான் அவன் கொஞ்சம் கண் உறங்கினான். மறுநாள் காலை 9 மணியாகியும் அவன் வேலைக்கு கிளம்பாதிருக்க ஆரு மேலே சென்று பார்த்தாள். நேற்று அணிந்திருந்த உடையையோ, ஷூவையோ கலட்டாமல் அப்படியே மல்லாக்காக விழுந்து படுத்து இருந்தான். ஆரு தான் ஷூவை கலட்டி விட்டாள். அப்பொழுதும் அவன் எழுந்திருக்காது இருக்க அவனுக்கு காபி, டிப்பனை மேசை மீது வைத்து விட்டு அவனை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு போய்விட்டாள். மதியம் 2 மணிக்கு அவன் நித்திரை விட்டு எழுந்தான். பயங்கரமாக தலையை வலித்தது. போய் குளித்து விட்டு வந்து சாப்பிட்டான். ஆபீசுக்கு போக முடியாது என்று தோன்றியது. Phone ஐ எடுத்துப் பார்த்தான் வசுந்தராவிடம் இருந்து 7 மிஸ்ட் கால் காட்டியது. ஆபீசில் இருந்தும் சில கால்கள் வந்திருக்க. தன் பர்சனல் செக்கட்ரியை அழைத்து பேசினான். ஆபீசுக்கு வசுந்தரா வந்து இருப்பதாக சொன்னார்கள். இன்று அவன் லீவு என்று மட்டும் சொல்லி விட்டு போனை வைத்து விட்டான். பின்பு தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அதற்குள் ஆரு மீண்டும் மேலே வந்து விட்டாள்.

"என்னடா ஆச்சு உனக்கு? நேத்து அப்படி குடிச்சிட்டு வந்திருந்த? இப்போ தான் எழுந்தியா? சாப்பிட்டியா? ஆபீஸ் போகல? என்ன பண்ணுது உனக்கு? ஏதாச்சு வேணுமா? எலுமிச்சம் பழம் ஒன்னு பிளிஞ்சு தரட்டுமா?" என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டு அவன் சாப்பிட்டு வைத்திருந்த பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

"ஆரு அதெல்லாம் வச்சிட்டு வந்து இப்படி கொஞ்சம் உட்காரு" என்றான்.

அவளும் அவன் முன்பு வந்து அமர்ந்து கொண்டாள்.

ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு விட்டு "let me tell this to you straight ஆரு... நேத்திக்கு நைட் எனக்கும் வசுவுக்கும் பெரிய சண்டை. நான் இப்பல்லாம் அவகிட்ட சரியாவே பேச மாட்டேங்கிறேன், அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டேங்கிறேன். உன் பின்னாடியே போய்ட்டு இருக்கேன்னு அவ நேத்திக்கி ப்ரேக் அப் வரை போய்ட்டா. நான் அவளுக்கு எவ்வளவோ எடுத்து சொல்ல ட்ரை பண்ணிட்டேன். அவ நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ள எதுவுமே இல்லைன்னு. (இந்த இடத்தில் ஆரு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ அவள் முகத்தை பார்க்க திராணியில்லாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தான்) அவ புரிஞ்சிக்க மாட்டேங்கிறா... இது எல்லாம் இன்னும் இரண்டு நாளைக்குத் தான். இரண்டு நாள்ல நீ Paris போய்டுவ அதுக்கு அப்பறம் எல்லாம் back to normal ஆகிடும்னு அவளுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஆனால் No use. இனி மேல் உன்கிட்ட நான் பேசவே கூடாதுன்னு அவ புடிச்ச புடியில நிற்குறா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இனி மேல் உன்கிட்ட பேசுறதில்லைனு அவளுக்கு ப்ராமிஸ் பண்ணி குடுத்துட்டேன்....." என்று தயங்கி தயங்கி சொல்லி முடித்தான்.

இதை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவன் மேலே பேச பேச அவள் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. அவனுக்கு பதிலுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று கூட அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவனே முடிவு செய்து விட்ட பின்னர் அவள் என்னத்தை சொல்வது!

"ஓஹோ... இப்போ நான் என்ன பண்ணனும்?" என்று கேட்டாள் மெதுவாக.

"நீ.. நீ இங்க இருந்து போகும் வரை என்னை பார்க்கவோ, என்கிட்ட பேசவோ முயற்சி பண்ணாத ஆரு ப்ளீஸ்...." என்றான்.

"ஹ்ம்ம்ம்.... அப்போ என்னை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ண வர மாட்டியா ஆதி?" என்றாள். அவனும் அவளும் மட்டும் தனியாக ஏர்ப்போர்ட் போகலாம் என்று அவர்கள் இருவரும் ஏற்கனவே முடிவு செய்து இருந்தார்கள். ஆதி அவளை எப்படி Send off பண்ணுவான், அவள் அவன் கண்ணை விட்டு மறையும் அந்த நொடி எப்படி இருக்கும் என்று அவள் ஆயிரம் கனவுகள் கண்டு வைத்திருந்தாள்.

"இல்லை" என்றான் ஒற்றை வார்த்தையில். அந்த 'இல்லை' அவளை விடவும் அவனுக்கு வலித்தது.

"ஓஹோ.. சரி நான் கிளம்புறேன்." என்று சொல்லிவிட்டு சட்டென்று எழுந்து சென்று விட்டாள்.

'ஆரு நான் சொன்னதெல்லாம் பொய். என்னை விட்டு போய்டாதே' என்று கத்த வேண்டும் போல இருந்த மனதை அவன் பெரும் பாடு பட்டு அடக்கிக் கொண்டான். அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது என்று தோன்ற. காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். ஆரு வீட்டுக்கு சென்று பாத்ரூமுக்குள் போய் கதவைடைத்துக் கொண்டாள். ஷவரை திறந்து விட்டு அதன் கீழ் அமர்ந்து ஓவென்று அழுதாள். ஆதித்யா பேசிய வார்த்தைகளை அவளால் இன்னுமும் நம்ப முடியாமல் இருந்தது. 'அவன் என்ன சொன்னான்? என்ன சொல்ல வந்தான்? அவனுக்கும் எனக்குமான உறவு முடிந்து விட்டது என்று சொன்னானா? இடையில் வந்த ஒருத்திக்காக பிறந்த நாள் முதல் அவன் கூடவே இருந்த அவளை வேண்டாம் என்று சொல்லி விட்டானா? அவனது ஆருவை அவன் வசுவுக்காக விட்டுக் கொடுத்து விட்டானா? எல்லாமே முடிந்து போய் விட்டதா?' அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அன்றைய நாளை அழுகையோடே கடந்தாள் அவள்.

அவன் வழமையாக செல்லும் பாருக்கு சென்று அமர்ந்தான். நேற்று துரோகம் தந்த வலிக்காக குடித்தவன் இன்று காதல் தந்த வலிக்காக குடித்தான். ஆதியை ஆபீசுக்கு தேடிச் சென்று அவன் அங்கு இல்லை என்றதும் வசுந்தரா அவனைத் தேடி அவன் வழமையாக செல்லும் பாருக்கு சென்றாள். அவன் தனியாக அமர்ந்து குடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டவள் தயங்கித் தயங்கி அவன் அருகில் சென்று அவனருகில் அமர்ந்து "ஆதி...." என்றாள்.

அவளை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அவன் தன் பாட்டில் அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்தான்.

"ஆதி we need to talk" என்றாள் வசுந்தரா.

"உன்கிட்ட பேசுறதுக்கு எனக்கு எதுவுமே இல்லை. தயவு செஞ்சு என்னை டிஸ்ட்டர்ப் பண்ணாமல் இங்க இருந்து போயிடு...." என்றான்.

"No ஆதி I can explain...." என்றாள்.

"It's ok வசு. நான் அதை நேத்திக்கே மறந்துட்டேன். You go on with your life. உன் கூட அது பத்தி argue பண்ற மன நிலைல நான் இப்போ இல்லை. தயவு செய்து இங்க இருந்து முதல்ல கிளம்பு....."

"இல்லை ஆதி நான் என்ன சொல்ல வாரேன்னு ஒரு வாட்டி காது குடுத்து கேளு ப்ளீஸ்...."

"ஏய்.... நல்லா சொன்னா உனக்கு புரியாது??? அதுதான் சொல்றேன்ல நீ எவன் கூட வேணா போய் படுடி... எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. என்னை ஆளை விடுன்னு...." சத்தமாக கத்தினான் அவன்.

"இது தான் ஆதி உன்னோட பிரச்சினையே. உன்னால எப்போதுமே டீசண்ட்டா நடந்துக்க முடியாது. என்ன ஏதுன்னு தெரியாமலேயே காச் மூச்ன்னு கத்த வேண்டியது...."

"ஆமாடி... நான் தான் இண்டீசண்ட்டா நடந்துக்குறேன். நீ நேத்திக்கு ரொம்பவே டீசண்ட்டா நடந்துக்கிட்டிருந்த. நீ என்னை இண்டீசண்ட்னு சொல்ற? இதுக்கு வேற எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்குறேன்னு என் முன்னாடியே வந்து உட்கார்ந்து வேற இருக்க.. ச்சீ... வெட்கமா இல்ல உனக்கு?"

"ஏன் நீ தப்பு பண்ணதில்லை? நீ எனக்கு உண்மையா தான் இருந்து இருக்கியா? ஒரே வீட்ல இருக்க, நடு ராத்திரில அவ உன் ரூமுக்கு வாரா.. நீ ஆரு கூட தப்பு பண்ணதில்ல???"

ஆருவின் பேரை அவள் உச்சரித்தது தான் தாமதம் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான் ஆதி. அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன.

"நீ எத்தனை பேர் கூட வேணா படு. என்னை பத்தி வெளில என்ன வேணா போய் சொல்லு, என்னை ஆம்பளையே இல்லைனு கூட சொல்லு. I just don't give a f**k. ஆருவை பத்தி ஏதாவது பேசின அப்பறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...." அவள் சட்டையை இழுத்து பிடித்து கூறினான் அவன்.

"கையை விடுடா சைக்கோ.. நான் இல்லை, ஆரு இல்லை.. உனக்கெல்லாம் எந்த பொண்ணும் செட் ஆகவே மாட்டா... நீ கடைசி வரை தனிக் கட்டையா தான் இருந்து சாகப் போற... என்று சொல்லி அவனுக்கு சாபம் கொடுத்து விட்டு கோபமாக அங்கு இருந்து எழுந்து சென்றாள் வசுந்தரா.

அவள் அப்படி சொல்லி விட்டு சென்றதும் அவன் சத்தமாக சிரித்தான். ஆருவோடு நெருங்கி பழகுவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் ஏற்பட்டு இருந்த போதும் வசுந்தராவுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற காரணத்துக்காகவும், ஆருவை ஆசை காட்டி ஏமாற்றி விட்டு விடக் கூடாது என்ற காரணத்துக்காகவுமே அவன் ஆருவினிடத்தில் தன்னால் முடிந்த வரை கண்ணியமாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறான். அப்பேர்ப்பட்டவனை அவள் இண்டீசண்ட் என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அவன் ஆருவை தொட்டு இருந்தால் அவளும் அதை ஏற்றுக் கொண்டு இருப்பாள் தான். ஆனால் பின்னாளில் அவன் அவளுக்கு இல்லை என்று ஆனால் கூட அவனிடத்தில் அவள் தன்னைக் கொடுத்து இருந்தாள் கடைசி வரை வேறு ஒருவனை அவள் தன் வாழ்வில் திரும்பியும் பார்த்திருக்க மாட்டாள். அப்படிப் பட்டவள் தான் அவனது ஆரோஹி. ஆனால் அதை எண்ணித் தான் அவன் பயந்தான். அப்பேர்ப்பட்ட தேவதை ஒருகாலும் யாருக்கும் செக்கெண்ட் ஆப்ஷன் ஆகி விடக் கூடாது. அவளை மட்டும் நேசிக்கும் ஒருவன், அவளை பைத்தியக் காரத்தனமாய் நேசிக்கும் ஒருவன் அவளுக்காக எங்கேயாவது பிறந்திருப்பான். விதி அவளை பத்திரமாக அவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கட்டும் என்று அவன் ஆர்த்மார்த்தமாய் ஆசைப் பட்டான்.

"உன்னைப் போல ஒருத்தியை இனி மேல் நான் என் வாழ்க்கைல சந்திப்பேனான்னு தெரியல ஆரு! நீ என் பக்கத்துலயே இருந்தும் நான் உன்னை தொலைச்சிட்டேன் ஆரு! உன்னோட வாழ்க்கை இனி தான் ஆரம்பம் ஆகப் போகுது. நீ சந்தோஷமா கிளம்பிப் போ ஆரு....." அவன் தனியாக பேசிக் கொண்டு இருந்தான்!

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
போ நீ போ
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro