அத்தியாயம் (18)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காதலும் காதல் சார்ந்த இடமும் என அழைக்கப்படும் கண்ணைக் கவரும் காதல் நகரம் பாரிஸ். இது காதல் நகரம், வெளிச்ச நகரம், காலத்தால் அழியாத கட்டடக் கலைக்கும், நாவை சப்புக் கொட்டச் செய்யும் காண்ட்டினண்ட்டல் உணவுகளுக்குமான நகரம். ராதாமோகன் ஒரு பிஸினஸ் மேன். பணக்காரரும் கூட. மனைவி பிரிந்து சென்ற பொழுது பிள்ளைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பதாக பாரிஸுக்கு வந்து குடியேறிய தமிழன். ஆரோஹியின் தந்தை கிருஷ்ணனுக்கு பால்யத் தோழன். அவர்களின் வீட்டில் தான் ஆரோஹி தங்கி அவளது internship ஐ பாரிஸில் தொடங்க இருக்கிறாள். இப்பொழுது ராதாமோகனும் அவரது மகள் பல்லவியும் ஆரோஹியை welcome பண்ணுவதற்காகத் தான் ஏர்ப்போர்ட்டிற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இது பல்லவி

ராதாமோகனும் பல்லவியும் எந்தவித சிரமமுமின்றி ஆரோஹியை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

"Welcome to Paris ஆரோஹி" என்று சொல்லி ஆருவோடு கை குழுக்கி அவளை வரவேற்றார் ராதாமோகன்.

"Welcome" என்று சொல்லி ஒரு குட்டி ஹக்கோடு அவளை வரவேற்றாள் பல்லவி.

அனைவரும் காரில் ஏறி வீடு நோக்கி புறப்படுகின்றனர். கார் பயணத்தின் போது,

"நான் தான் ஆரோஹின்னு எதை வச்சு கண்டு பிடிச்சிங்க? எங்கப்பா என் photo அனுப்பி இருந்தாரா?" பல்லவியை கேட்டாள் ஆரு.

"இல்லை... Arrival வழியா வந்த ஒரே நம்ம ஊர்ப் பொண்ணு நீங்க தான், ஒரே அழகான பொண்ணும் நீங்க தான். பார்த்ததுமே முடிவு பண்ணிட்டேன். நீங்க ஆரோஹியோ இல்லையோ, வீட்டுக்கு கிளம்ப்பிப் போகும் போது உங்க கூட தான் போறதுன்னு...." சொல்லி விட்டு கலகலவென சிரித்தாள் பல்லவி.

ஆருவுக்கும் பல்லவியை பார்த்த மாத்திரத்தில் பிடித்து விட்டது. பல்லவியைப் பார்த்து சினேகமாக சிரித்தாள் ஆரோஹி. வீடு போய் சேர்ந்தார்கள். அதை வீடு என்று சொல்ல முடியாது அது ஒரு பங்களா. அந்த பகுதியில் எல்லா வீடுமே பார்வைக்கு பங்களாப் போல தான் தோன்றியது. பழைய கட்டடக்கலை கொண்டு கட்டப்பட்ட தோட்டங்களுடனான அழகான வீடுகள். ராதாமோகனும் பல்லவியும் ஆருவை மிக அன்பாக தங்கள் வீட்டுக்கு வரவேற்றனர்.

"ஆரோஹி இதை உன் வீடு போல நினைச்சிக்கோ. Comfortable ஆ இரு. உனக்கு ஏத்தாச்சும் வேணும்னா என் பசங்களைக் கேழு. பல்லவி.. அக்காவை மாடிக்கு அழைச்சிட்டுப் போம்மா...நான் கொஞ்சம் வெளியில போய்ட்டு வாரேன்.." என்று சொல்லி விட்டு கிளம்பிப் போனார் ராதாமோகன்.

"வாங்கக்கா மாடிக்கு போகலாம்." என்றாள் பல்லவி.

"பல்லவி என்னை நீ ஆரோஹினு பேர் சொல்லியே கூப்பிடு." என்றாள் ஆரு.

"நான் உங்களை ஆருக்கான்னு கூப்பிடட்டுமா?" என்றாள்.

"உன் இஷ்டம்" என்றாள் சிரித்து விட்டு.

"எனக்கு அக்கா இல்லை. உங்களை பார்த்தா அக்கான்னு கூப்பிடணும் போல தோணுது..." என்றாள்.

அந்த வீட்டின் படுக்கை அறைகள் எல்லாம் மாடியில் தான் இருந்தன. பல்லவி ஆருவுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு ஆருவை அழைத்துக் கொண்டு சென்றாள். அறை பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. ஆருவுக்கு பார்த்த உடனேயே பிடித்து விட்டது.

"ஆருக்கா நீங்க குளிச்சிட்டு கீழே வாங்க. நான் போய் dinner எடுத்து வைக்கிறேன். உங்க things எல்லாம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நாளைக்கி சாவகாசமா எடுத்து உள்ள வச்சிக்கலாம்." என்று சொல்லி விட்டு கீழே சென்றாள்.

ஆரு அறையை சுற்றிப் பார்த்தாள். பால்க்கனி கதவைத் திறந்து விட்டு அந்த பனிக்கற்றைக் கொஞ்சம் சுவாசித்தாள். அந்த பனிக் காற்று மேலே பட்டதும் உடல் சிலிர்த்தது அவளுக்கு. கொஞ்ச நேரம் பால்கனியில் நின்று தூரத்தில் தெரிந்த இயற்கையையும் அந்த பனியையும் ரசித்தாள். இரவு நேரத்து பாரிஸ் நகரம் கொள்ளை அழகாக இருந்தது. அப்பொழுது அந்த வீட்டு வாசலில் ஒரு கறுப்பு நிறக் கார் வந்து நின்றது. உள்ளே இருந்து ஒரு சம வயதுப் பையன் இறங்கினான். எதேர்ச்சையாக பால்கனியில் நின்று கொண்டு இருந்தவளைக் கண்டவன். ஒரு முறை நின்று அவளை நன்றாக விழித்துப் பார்த்தான். "கண்ணா லட்டு திண்ண ஆசையா" அவனுக்கு background இல் கேட்டது. பின்பு வீட்டுக்குள் சென்றான். ஆருவும் பால்கனிக் கதவை சாத்தி விட்டு குளிக்கச் சென்றாள்.

ப்ரித்வி. ராதா மோகனின் பையன்

ப்ரித்வி வீட்டுக்குள் வந்த போது பல்லவி டைனிங் டேபிளில் உணவுகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தாள். ப்ரித்வியைக் கண்டதும் "ஹாய்ண்ணா.." என்றாள்.

பல்லவியின் அருகில் வந்து ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் "என்னடி நடக்குது இங்க? Fridge லயும் Micro wave லயும் மாத்தி மாத்தி போட்டு பழைய சோத்தை தான் ஒரு வாரத்துக்கு ஓட்டுவிங்க.. இன்னைக்கி என்னன்னா இத்தனை ஐட்டம் இருக்கு டேபிள் மேல??பால்கனியில வேற ஒரு சம்ம பிகரு நிக்குது யார்டி அது???" என்றான் குழப்பமாக.

"ஷ்.... ஏண்டா கத்துற? அவங்க காதுல விழுந்து வெக்க போகுது!! அவங்களை பிகரு அது இதுன்னெல்லாம் சொன்ன பார்த்துக்கோ...." ப்ரித்வியை எச்சரித்தாள் அவள்.

"சரிடி சொல்லல.. நீ அது யாருன்னு சொல்லு மொதல்ல..??" ஆர்வம் தாங்கவில்லை அவனுக்கு.

"ஆரோஹி.. சென்னைல இருந்து வந்திருக்காங்க. அப்பாவோட friend பொண்ணு. Le Cordan Bleu ல internship கிடைச்சிருக்கு. நம்ம வீட்ல தான் தங்கப் போறாங்க"

"என்ன Chef ஆ?? நம்ம வீட்ல தங்கப் போறாளா??" அதிர்ச்சியாகக் கேட்டான் அவன். "கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா?" மறுபடியும் background இல்.

"என்னடி? இதெல்லாம் எப்போ நடந்திச்சு? என்கிட்ட யாரும் சொல்லவே இல்லையே?" என்றான் அவன்.

"நீ வீடு தங்கினா தானே சொல்றதுக்கு... நினைச்சா வார.. நினைச்சா காணாமல் போயிடுற" அண்ணனை முறைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் அவள்.

அவள் பின்னால் போய் அவள் மீது கையைப் போட்டுக் கொண்டு "என்னையும் introduce பண்ணி வையேன் பல்லவி..." என்றான்.

"அடச்சீ வழியாத.." என்றாள் அவள்.

ஆரோஹி வந்து கிச்சன் வாசலில் நின்றாள். அவள் அங்கு வந்த போது ப்ரித்வி பல்லவியின் மேல் கையைப் போட்டுக் கொண்டு அவளோடு சேட்டை செய்து கொண்டு இருந்தான்.

"வாங்கக்கா... குளிச்சிட்டிங்களா? ஆருக்கா இது என்னோட அண்ணா ப்ரித்வி.." என்று சொல்லி அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

"ஹாய் ஐ ஆம் ஆரோஹி" அவனோடு கை குழுக்கினாள் அவள்.

"ஹாய்... ப்ரித்வி.." என்றான்.

"ஆருக்கா நீங்க வாங்க சாப்பிடலாம். அண்ணா நீ போய் குளிச்சிட்டு வா" என்று அவனைத் துரத்தினாள் பல்லவி.

"இல்லை பரவால்லை. அவரும் குளிச்சிட்டு வந்துரட்டும். எல்லாரும் ஒன்னா உட்கார்ந்தே சாப்பிடலாம்" என்றாள் ஆரு.

"10 மினிட்ஸ்.." என்று சொல்லி நான்கு கால் பாய்ச்சலில் மாடிக்கு சென்றான் ப்ரித்வி.

ப்ரித்வி வரும் வரை ஆருவும் பல்லவியும் டைனிங் ரூமில் அமர்ந்து கொண்டனர்.

"எங்க வீட்டுல. நான் அப்பா அண்ணா மட்டும் தான். எனக்கு ஒரு வயசு இருக்கும் போதே அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சுட்டாங்க. அம்மா பத்தி எந்த தகவலும் இல்ல. நாங்க பாரிஸ் வந்துட்டோம். அப்பா கிட்ட வேண்டிய அளவு பணம் இருக்கு. சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு தேவையானதை நாங்களே பண்ணிக்க பழகிட்டோம்" அவளாக கூறினாள் பல்லவி.

தன்னை பார்த்த உடனேயே தன்னை தன் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்ட பல்லவியை ஆருவுக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது.

"நீ என்ன பண்ணிட்டு இருக்க?" என்றாள்.

"High School" என்றாள்.

"அண்ணா?"

"அண்ணா... நல்ல பையன் தான். என்மேல ரொம்ப பாசம். ஆனால் இன்னும் life ஓட seriousness தெரியாமலேயே இருக்கான். நினைச்சா அப்பா factory க்கு போவான். நினைச்சா பணத்தை எடுத்துக்கிட்டு Friends ஓட ஊரை விட்டே போய்டுவான்." அண்ணனுக்கு அம்மாவாக பேசினாள் அந்த அம்மா இல்லாமல் வளர்ந்த பெண்.

"எத்தனை வயசு அவனுக்கு?" கேட்டாள் ஆரு.

"23" என்றாள்.

"பசங்க தானே இந்த வயசுல இப்படி தான் இருப்பாங்க. நமக்கு வயசுக்கு வந்ததுமே வர்ர பக்குவம் அவங்களுக்கு இந்த வயசுல கூட வர்ரது கிடையாது. சரியான நேரம் வர்ர போது அவனே மாறிப்பான். நீ ஒன்னும் யோசிக்காத என்ன.." என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளினாள் ஆரு.

அதற்குள் மேலே சென்றவன் குளித்து உடை மாற்றி விட்டு வந்து விட்டான். மூவரும் சாப்பிடுவதற்கு அமர்ந்தனர்.

"யார் குக்கிங் இதெல்லாம்?" சாப்பிட்டவாறு கேட்டாள் ஆரு.

"எல்லாம் வெளில ஆர்டர் பண்ணது தான். இங்க எங்களுக்கு தேவையானதை நாங்க தான் மாத்தி மாத்தி ஏதாவது சிம்பிளா பண்ணிப்போம். இல்லன்னா வெளில தான்." என்றாள் பல்லவி.

"எங்களுக்கு இந்த ஊர் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கெல்லாம் செத்துடிச்சு. நீங்க என்னன்னா இந்த ஊர் சமையல் கத்துக்க வந்திருக்கிங்க..." என்றான் ப்ரித்வி.

"இந்த ஊர்ல என்ன என்ன சாப்பாடெல்லாம் ஸ்பெஷலோ நீங்க ரெண்டு பேரும் என்னை அங்க எல்லாம் கூட்டிட்டு போங்க. உங்க ரெண்டு பேத்துக்கும் என்னல்லாம் சாப்பிடணும் போல இருக்கோ இனி மேல் உங்க வீட்டு கிச்சனை நான் டேக் ஓவர் பண்றேன். என்ன டீலா?" என்றாள் ஆரு.

"சூப்பர்க்கா..." என்றாள் பல்லவி.

சாப்பிட்டு முடிந்ததும் எல்லாவற்றையும் எடுத்து கழுவி வைக்க ப்ரித்விக்கும் பல்லவிக்கும் உதவினாள் ஆரோஹி. சாப்பாட்டுக்குப் பின்னர் வீட்டு லான் ஏரியாவுக்கு சென்று ஒரு சிகரட்டை எடுத்துப் பற்றினான் ப்ரித்வி. ஆருவின் வரவு அவன் மனதுக்கு பிடித்து இருந்தது. ஆருவும் லானுக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்கும் ஒரு puff வேண்டுமா என கூலாக ஜாடையில் கேட்டான் அவன். அவள் ஒரு மென் புன்னகையுடன் தலையசைத்து மறுத்து விட்டாள்.

"உங்க ஊர் ராத்திரில ரொம்ப அழகா இருக்கு..." என்றாள்.

"நீங்க கூட ரொம்ப அழகா இருக்கிங்க" என்றான்.

"உங்க ஊர்ல இப்படி தான். ஒரு பொண்ணை பார்த்ததுமே சொல்லிடுவிங்களா?" என்றாள்.

"அழகா இருக்கிங்கன்னு சொல்றதுக்கு நாள் கிழமைலாம் பார்க்கணுமா என்ன?" என்றான்.

சிரித்தாள்.

"எப்போ காலேஜ் ஜாய்ன் பண்ணனும்?" என்றான்.

"எனக்கு நெருக்கமானவங்க எல்லாரும் என்னை ஆருன்னு தான் கூப்பிடுவாங்க" என்றாள்.

"நான் அந்த எல்லாரும் இருக்க circle க்குள்ள வர விரும்பல" என்றான்.

"நல்லா பேசுற" என்றாள். கண்களால் சிரித்தாள். பின்னர் "இன்னும் ஒரு வாரம் இருக்கு" என்றாள்.

"அப்போ ஒரு வாரம். பாரிஸ் சுத்தி பார்க்கலாமா?" என்றான்.

"கண்டிப்பா" என்றாள்.

"அப்பறம் ஆரோஹி உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்கலாம்" என்றான்.

"என்ன சொல்லணும்? உனக்கு என்ன தெரிஞ்சிக்கணுமோ கேளு சொல்றேன்." என்றாள்.

"வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?"

"அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, அண்ணன் பசங்க, அப்பறம் நான்"

"எங்க வீட்ல நானும் பல்லவியும் அப்பாவும் தான். அம்மா இல்லை." என்றான் அவனும்.

"என்னை விட்டுட்டியே. இப்போ தான் நானும் உங்க வீட்ல ஒரு மெம்பர் ஆகிட்டேனே" என்றாள்.

சிரித்தான். "ஊர்ல பாய் ஃபிரெண்ட் எல்லாம் இருக்கா?" என்றான்.

"ம்ஹூம்" என்றாள்.

"இவ்வளவு அழகான பொண்ணுக்கு பாய் ஃபிரண்ட் கிடையாதுனு சொன்னா நம்பும் படியாவா இருக்கு?"

"இல்லைனா இல்லைனு தானே பின்ன சொல்லணும்"

"ஏன் ஆரோஹிக்கு பிடிக்கிற மாதிரி யாரையும் சென்னைல ஆரோஹி சந்திக்கலையா?"

"ஹ்ம்ம்... அப்படி கிடையாது. சென்னைல யாருக்குமே ஆரோஹியை பிடிக்கலை போல"

"Bloody country fellows. நம்ம ஊர் காரணுங்க அப்படி தான் முட்டாப் பசங்க. Paris is gonna take good care of you"

ஆரு எதையோ எண்ணி சிரித்தாள்.

"Good night Prithvi. I'm gonna go get some sleep. ரொம்ப டயர்டா இருக்கு..." என்றாள்.

"குட் நைட் ஆரோஹி"

ஆரு உள்ளே செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தாள்.

"ஆரோஹி ஒரு நிமிஷம்.." என்றான்.

என்ன என்பதைப் போல திரும்பிப் பார்த்தாள்.

"நீங்க தப்பா எடுத்துக்கலன்னா ஒன்னு சொல்லட்டுமா?" என்றான்.

"என்ன?" என்றாள். அவனை சந்தித்தது முதல் ஒரு மெல்லியப் புன்னகை அவள் உதட்டோரத்தில் ஒட்டியே இருந்தது.

"உங்க கழுத்து ரொம்ப அழகா இருக்கு..." என்றான். சிகரட் அவன் உதட்டில் இருந்தது. அவன் பார்வை அவள் கழுத்தில் இருந்தது.

அவள் விக்கித்துப் போய் நின்றாள். அவள் யாரை மறக்க முயன்றாலோ அவன் மீண்டும் அவள் ஞாபகத்தில் வந்தான்.

நீந்தி வரும் நிலாவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீங்கா நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலா மழையா வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro