KADHAL 29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மயக்க நிலையில் இருந்த ஊர்வியை நாற்காலியில் காட்டி வைத்து, அவள் முன்னாள் நின்று சிரித்து கொண்டிருந்தான்.

"என்ன எப்படி அசிங்க படுத்தின நீ. அதுக்கெல்லாம் சேர்த்து இப்போ அனுபவிக்க போற" என்று மயக்கத்தில் இருந்தவள் கன்னம் தடவி கூறினான் மயூரன்.

அவள் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவள் படுத்திய அசிங்கம் தான் நினைவிற்கு வந்தது. சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் ஊர்வி MBA படிக்கும் போது அவள்உடன் படித்தவன் மயூரன்.

அம்மா பிள்ளை. அம்மா குணமும் அப்படியே வந்துவிட்டது. பணம் இருந்தால் போதும், எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை கொண்டவர்கள்.

கல்லூரி முதல் நாளே ஊர்வியை பார்த்து மயக்கம் கொண்டான் அவன். அவளிடம் அவன் விருப்பத்தை தெரிவிக்க, இஷ்டம் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் மறுப்பு தெரிவித்தாள் அவள்.

அவள் சொல்லியும் கேட்காதவன், அவள் பின்னால் சுத்துவது, அவள் கான்டீன் செல்லும் போது அவள் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து காதல் மொழிகள் பேசுவது. காகிதத்தில் காதல் கவிதை எழுதி கிளாஸ் கவனிக்கும் ஊர்வி மீது எறிவது என்று பல குரங்கு சேட்டைகள் அவன் செய்து வந்தாலும் கண்டும் காணாதது போல இருந்தாள் அவள்.

கல்லூரியில் உள்ள அனைவரிடமும் ஊர்வியும் அவனும் காதலிக்கிறார்கள் என்றும், அதனால் தான் அவன் செய்வது எதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறிவந்தான் அவன்.

இவள் பள்ளி முதல்வரிடம் சென்று முறையிட, "இதெல்லாம் ஸ்டுடென்ட்ஸ் விஷயம் மா. நாங்க தலையிட முடியாது. அதுவும் நம்ப காலேஜ் ல கட்டிட்டு இருக்க புது பிளாக் க்கு அவங்க அம்மா நெறைய நன்கொடை குடுத்துருக்காங்க. அவங்களையே எப்படி முறைச்சிக்க முடியும்" என்று அவர் கூற, அவரை ஒரு கோவ பார்வை பார்த்து விட்டு வெளியில் வந்துவிட்டாள்.

அவள் பொறுமையை சோதிக்குமாறு வந்தது அந்த வருடத்தின் கல்லூரி ஆண்டு விழா. 

கல்லூரி ஆண்டு விழாவுக்காக மாணவர்கள், ஆசிரியர்கள், முக்கிய விருந்தாளிகள் அனைவரும் திரண்டிருக்க, ஆடல் பாடல், என்று மாணாக்கள் அவர்கள் திறமையை வெளிக்காட்ட, அங்கு அவன் திட்டத்தை செயல் படுத்த துடங்கினான் மயூரன். திடீரென அரங்கில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைய அரங்கம் எங்கும் சலசலப்பால் நிறைந்தது.

திடீரென மேடையில் மாறும் சிகப்பு நிறத்தில் லைட் எரிய, அனைவர் கவனமும் மேடையின் பக்கம் திரும்பியது. பியானோ வில் இருந்து இனிமையான ஒரு இசை எழ, அரங்கம் அமைதியாய் அந்த இசையை கவனிக்க தொடங்கியது.

மேடையின் இருபக்கமும் வெள்ளை உடை அணிந்து, கையில் வயலின் உடன் சிலர் வரிசையாக வந்து நிற்க, அரங்கம் எங்கும் சிகப்பு நிறத்தில் ஆர்ட்டின் வடிவத்தில் பலூன்கள் பறக்க விட பட்டன, எல்லாரும் அந்த பலூன்களை வாய் பிளந்து பார்க்க, இனிய குரலில் மேடையில் பாட ஆரமித்தான் மயூரன்.

உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன் இளமை
இளமை பாதித்தேன் கொள்ளை
கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே...

என்று மயூரன் பாட கரகோஷம் எழுந்தது. ஊர்வியும் கண்டுக்காமல் அமைதியாக இருந்தாள். அவன் பாடிக்கொண்டிருக்க, மேடையில் உள்ள LED திரையில் ஊர்வின் புகைப்படம் திரையிட பட்டது. போட்டோவுக்கு கீழே, "ஐ லவ் யு" என்று இருக்க, பொறுமை இழந்தாள் ஊர்வி. இருந்தாலும் அனைவர் முன்னிலையிலும் எதுவும் செய்ய கூடாது என்று அமைதியாக இருந்தாள். "பாரு டா. இதுவே நம்ப இப்படி ஏதாவது பண்ணி இருந்தா செருப்பால அடிச்சிருப்பா. அவன் பண்ண கம்முனு இருக்கா. பணம் இல்லாதவன் பண்ண அதுக்கு பேரு abuse ன்னு சொல்லுவாங்க. அதுவே பணக்காரன் பண்ணா அதுக்கு பேரு flirt . இந்த பொண்ணுங்களே இப்டி தான் டா" என்று அவள் பின்னல் அமர்ந்திருந்த ஒருவன் கூற, இதற்கு மேலும் அமைதியாக இருப்பது சரி இல்லை என்று நினைத்து எழுந்தாள் அவள். பின்னல் அமர்ந்திருந்த அந்த பையனை அவள் முரைத்து விட்டு, "எல்லா பொண்ணுங்களும் அப்டி கெடையாது" என்று கூறி விட்டு மேடை நோக்கி நடக்க, தலை குனிந்தான் அவன்.

அவள் மேடையை நோக்கி செல்ல, அவள் அவன் ப்ரோபோசல் ஐ ஏற்று கொள்ள தான் வருகிறாள் என்று நினைத்த மயூரன், ஒரு ரெட் ரோஸ் மலர் சிண்டு ஐ கையில் எடுத்து கொண்டு மேடையிலே மண்டியிட்டான். இதை கண்ட கூட்டமும் அவள் அவன் காதலை ஏற்று கொள்ள தான் போகிறாள் என்று நினைத்து ஆரவாரம் கிளப்பியது.

மேடைக்கு சென்றவள் அவன் கையில் இருந்த மலர் சிண்டை பிடுங்கி கீழே எறிய, கோவமானான் அவன். "என்ன டி? திமிரா?" என்று அவன் கேட்க, "அது நான் கேட்க வேண்டிய கேள்வி. உனக்கு என்ன திமிரா? நான் புடிக்கலைனு சொன்னதுக்கு அப்புறமும் இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க?" என்று கேட்டாள் அவள். "சும்மா நிறுத்து டி. உனக்கு என்ன புடிக்கலைனா ஏன் நான் உன் பின்னாடி சுத்திகிட்டு இருந்தப்போ, உன் மேல பேப்பர் தூக்கி போட்டப்போ எல்லாம் சும்மா இருந்த. என் பணத்துக்காக தானே. இப்போ என்னமோ ஓவர் ஆ பேசுற. நாலு கட்டு காசு தூக்கி போட்டாலே வந்துருப்ப. ஏதோ உன் மேல இருக்க ஆசைல இவளோ அழகா ப்ரொபோஸ் பண்ணா. இப்படி தூக்கி போடுற. என்னடி சீன் போடறயா?" என்று அவன் கேட்க, பளார் என்று அவன் கன்னத்தில் பதிந்தது அவள் கைகள். "நீ ப்ரொபோஸ் பண்ணும் போதே நான் இஷ்டம் இல்லைனு பொறுமையா சொன்னேனா இல்லையா?" என்று அவள் சீற, சற்று தடுமாற்றத்துடன் கேட்டான் அவன், "புடிக்கலைனா ப்ரொபோஸ் பண்ற அப்போவே திட்டிருப்ப. ஆனா நீ அமைதியா தானே புடிக்கலைனு சொன்ன. அதுக்கு காரணம் பணம். ஏன்னா பணம் இருந்தா போதும். எந்த பொண்ணா இருந்தாலும் பின்னாடி வருவா" . "ஆமா. அமைதியா தான் சொன்னேன். ஏன்னா உனக்கு என்ன பிடிச்சிருக்கு. அதை என் கிட்ட சொல்றதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனா அதை மறுப்பதற்கு எனக்கும் உரிமை இருக்கு. நான் பிடிக்கவில்லை ன்னு சொன்னதுக்கு அப்புறமும் என் பின்னாடி அலைந்தது தப்பு. அப்பயும் நான் எதுவும் சொல்லாம தான் இருந்தேன். Because silence is the best response to a fool . அப்புறம் கடைசியா சொன்னியே. பணம் இருந்த பொண்ணு பின்னாடி வருவான்னு. அப்டி பின்னாடி வரவ பேரு காதலி இல்ல. அப்டி பணத்துக்காக பின்னாடி வந்தால், அதுக்கு வேற பேரு இருக்கு. நான் அப்டி கெடையாது" என்று கூறி கல்லூரி முதல்வர் பக்கம் திரும்பினாள் அவள். "அவன் அம்மாவோட பண பலத்துக்காக அவன் மேல நடவடிக்கை எதுவும் எடுக்கலைனா, என் அப்பா உடைய பண பலத்த வச்சி இந்த காலேஜ் மேல நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்" என்று மிரட்டி விட்டு, மேடையை விட்டு 

இறங்க, "நில்லு. என்னை விட பெட்டெர் ஆ உனக்கு ஒருத்தவன் கெடைச்சிடுவானா?" என்று அவன் கேட்க, "உன்னை விட பணக்காரன் கெடைப்பானான்னு தெரியல. ஆனா பணத்தை விட பாசத்தை அதிகமா மதிக்கறவன் கண்டிப்பா கிடைப்பான்" என்று கூறிவிட்டு செல்ல, "பாக்கறேன் டி. உனக்கு யாரு கெடைக்கறானு" என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் அவன். 

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, காலேஜ் இல் மன்மதனாக சுத்தி வந்தவன், எல்லோர் கண்களுக்கும் காமெடியனாகவே தெரிந்தான். அவன் முன்னாள் பேசா விட்டாலும், அவன் முதுகுக்கு பின்னால் சிரிக்கவே செய்தார்கள். ஊர்வி பிரின்சிபால் ஐ மிரட்டிவிட்டு சென்றதால், அவர் மயூரனை அழைத்து இனிமேல் காலேஜ் கு வரவேண்டாம், தேர்வுகளுக்கு மட்டும் வந்தால் போதும் என்று கூற, அவனும் சரி என்று கூறிவிட்டான்.

காலேஜ் செல்லாததற்கு அவன் அன்னை காரணம் கேட்க, "செல்ல பிடிக்கவில்லை" என்றான் அவன். சின்ன வயதில் இருந்தே செல்லமாக வளர்த்த பிள்ளையை வேற எதுவும் கேட்காமல் நகர்ந்தார் அந்த தாய். அவனும் ஒரு பெண்ணிடம் இப்படி மேடையில் அடிவாங்கி வந்ததை அசிங்கம் என்று நினைத்து தாயிடம் சொல்லாமல் விட்டான்.

அதன் பிறகு அவன் அவளை நேராக சென்று காண வில்லை என்றாலும், அவள் நடவடிக்கைகளை கவனிக்க ஆட்கள் வைத்திருந்தான். உதாரணத்திற்கு அவள் அலுவகத்தில் இவன் ஆட்கள் சிலரை பணியில் இருக்குமாறு செய்தான்.

சமீப காலமாக சித்து ஊர்வி இருவரும் ஒன்றாக சுத்துவதை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டான்.

அவனுக்கு தான் ஆசைப்பட்டவள் கிடைக்கவில்லை. அதே போல ஊர்விக்கும் அவள் ஆசைப்பட்டவன் கிடைக்க கூடாது என்று நினைத்தான் அவன்.அதனால் ஊர்வியை கடத்தினான். சித்துவை மாட்டி விட நினைத்தவன், அவன் கடத்திய கார் உடைய நம்பர் போர்டு ஐ மாற்றி, சித்து காரின் நம்பர் ஐ வைத்தான். வேண்டும் என்றே CCTV இல் மாட்டுமாறு செய்தான்.

 மயங்கி இருந்த ஊர்வியை பார்த்து சிரித்து கொண்டு, "எவ்ளோ அழகா இருக்க டி. இவளோ அழகா இருக்குறவ, அவளோ திமிற இருக்கறது தப்பு இல்ல. ஆனா என் கிட்ட உன் திமிற காட்டினது தான் தப்பு. உன் திமிற நான் அடக்கறேன்" என்று பேசிவிட்டு, "டேய். என் தங்கம் எழுந்த ஒடனே போன் பண்ணு டா" என்று அங்கு இருந்த அடியாளிடம் கூறி விட்டு சென்றான் அவன்.

அபி அவ்வாறு பிரித்து பேச, உடைந்து போனான் சித்தார்த். நேராக வீட்டிற்கு சென்றவன், கிருஷ்ணன் இருக்கும் அறைக்கு சென்றான். சென்றவன் அவர் சாட்டையை பிடித்து உகுக்கி, "எங்கயா ஊர்வி? அவளை கடத்திட்டு போயி எங்க வச்சிருக்க?" என்று கேட்க, "என்னது. ஊர்விய நான் கடத்திட்டு போனேனா?" என்று கேட்டார் கிருஷ்னன். "நடிக்காதையா? எங்க வச்சிருக்க அவள?" என்று அவன் பிடியை இன்னும் இருக்க, "எடுடா. கைய. சாத்தியமா. நான் கடத்தல. வேற யாரோ பண்ணிருக்காங்க. என் மேல சந்தேக பட்டு டைம் வேஸ்ட் பண்ணாத" என்றார் கிருஷ்ணன். அவர் கண்களில் உண்மை இருப்பது போன்று தான் தோன்றியது சித்துக்கு. வேற யார் செய்திருக்க கூடும் என்று கிருஷ்ணனிடம் கேட்டும் பயன் இல்லை. யாரு கடத்தி இருப்பார்கள் என்று தெரியாமல் தெரு தெருவாக சுற்றி திரிந்தான் அவன். 

எதிலும் பயன் இல்லாமல் போக, அவளை எப்படி கண்டுபிடிப்பது என்று புரியாமல் தவித்தான் அவன். அங்கு அபியும் இனியனும் தொழில் முறை எதிரிகள் எவரேனும் செய்திருக்க கூடும் என்று எண்ணி விசாரிக்க, அதிலும் பயன் இல்லாமல் போனது. மகளை காணாமல் தவித்து போனார் கிருஷ்னனும்.


umayaal ilaama enaku bore adikudhu...ungaluku?

urvi avan kita irundhu thapipaala? epdi thapipaa? yaaru kapaathunvaanga? indhellam next ud la pakalaam...

and 2 or 3 days once ud podren paa..

Votes & comments pannnitu ponga...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro