KADHAL 30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


இங்கு இவ்வளவு கலவரம் நடந்துகொண்டிருக்க, இது எதுவும் தெரியாத உமையாள், சமோசா வேண்டும் என்று கார்த்திக்கின் உயிரை வாங்கிக்கொண்டிருந்தாள்.

மூவரும் காரில் ஏறி, வீடு நோக்கி செல்ல, செல்லும் வழியிலே உமையாள் வயிறு சத்தமிட்டது. அப்போது தான் அவளுக்கு நினைவில் வந்தது, கார்த்திக்கை அடிக்க அவள் வீணாக்கிய இரண்டு சமோசாக்கள். "டேய். தடிமாடு. நீ எனக்கு ரெண்டு சமோசா வாங்கிக்குடுக்கணும்" என்று அடாவடியாக கேட்க, "நான் எதுக்கு டி வாங்கி குடுக்கணும்" என்று நியாயமான கேள்வி ஒன்றை கேட்டான் அவன்.


"உன் மூஞ்சி மேல தூக்கி போட்டு தானே வேஸ்ட் ஆ போச்சு. அதனால நீ தான் வாங்கி குடுக்கணும்" என்றால் உமையாள். "தூக்கி போட்டது நீ? அது உன் தப்பு" என்றான் கார்த்தி. இதற்கு மேல் என்ன சொல்லுவது என்று தெரியாமல், பின் சீட் இல் அமர்ந்த படி, கார் ஒட்டி செல்லும் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் அவள். "எனக்கு சமோசா வேணும்....." என்று கேட்க, "சரி வாங்கி தந்து தொலையுறேன். கடை எங்க இருக்கு?" என்று அவன் கேட்க, பக்கத்தில் இருந்த ஒரு ஐஸ் கிரீம் பார்லரை காமித்து "அங்கேயே சமோசா வும் இருக்கும்" என்று அவள் குழந்தை போல சொல்ல, அவனும் அந்த கடை வாசலில் காரை நிறுத்தி விட்டு மூவரும் உள்ளே சென்றனர்.

பறந்து பறந்து உமையாள் இரண்டு சமோசாக்கள் ஆர்டர் செய்ய, கார்த்திக் மிருணாளினி இருவரும் ஆளுக்கு ஒரு ஜுஸ் மட்டும் வாங்கிக் கொண்டு அமர்ந்தனர்.

" சொல்லு மிருணாளினி. யாரு அவன்?" என்று கார்த்திக் பேச்சைத் துவங்க, "அண்ணா..." என்று இழுக்க, "சொல்லும்மா.. அந்த விக்ரமன் உடைய பையனுக்கு உன்னை கட்டி வைக்க எனக்கும் இஷ்டம் இல்லை தான். சொல்லு" என்று அவன் பொறுமையாக பேச, "அண்ணா. எங்க கம்பெனி MD அபிமன்யுவை நான் லவ் பண்றேன். அவரு தான் முதலில் ப்ரொபோஸ் பன்றாரு. நானும் நம்ப குடும்ப நிலைமையை புரிஞ்சி, காதலில் விழ கூடாதுனு நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா..." என்று மிருணாளினி நிறுத்த, "யாருக்கு யாருனு கடவுள் முடிவு பண்ணி இருப்பாரு மா. நீ அந்த வீடு பையனை கட்டிக்க கூடாதுனு அம்மா எவளோ உறுதியா இருந்தாங்க தெரியுமா. உனக்காக இல்லனாலும் அம்மாவுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தணும் பாப்பா" என்று கூறினான் அவன். இவர்கள் இருவரும் இங்கு பாசமலர் கணக்காக பேசிக்கொண்டிருக்க, உமையாள் அந்த இரண்டு சமோசாக்களையும் சாப்பிட்டு முடித்து இருந்தாள். "இதுங்க ரெண்டும் இப்போதைக்கு பேசி முடிகிற மாதிரி தெரியல. என்ன பண்ணலாம்..." என்று யோசித்து, வெயிட்டர் ஐ அழைத்து ஒரு ஐஸ் கிரீம் ஆர்டர் செய்தாள்.

"அப்போ எதுக்கு என்னை கூட்டிட்டு போக வந்த?" என்று மிருணாளினி கேட்க, "உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு எனக்கு தெரியாது. அதான் அந்த பெரிய மனுஷனுங்க கூட்டிட்டு வர சொன்னாங்கனு நானும் வந்துட்டேன். நீ வர மாட்டேன்னு அடம் பிடிச்ச. உன்னை கூட்டிட்டு தனியா போயி என்னனு கேக்கலாம் னு பாத்தேன். அதுக்குள்ள தான் இந்த ராக்கம்மா வந்து என்னை போலீஸ் ல புடிச்சி குடுத்துடுச்சு" என்று இருவரும் அவளை திரும்பி பார்க்கும் போது ஐந்து ஐஸ் கிரீம்களை காலி செய்திருந்தா உமையாள். "என்னடி. ரெண்டு சமோசா தானே கேட்ட. இப்போ என்ன? அஞ்சு காலி கப் கெடக்குது" என்று கார்த்திக் ஆச்சர்யமாக கேட்க, "ஹ்ம்ம். ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தா, அவளுக்கு போர் அடிக்கும் ன்னு ஏதாவது பேசணும். அதை விட்டுட்டு நீங்க ரெண்டு பேருமே பேசிட்டு இருக்கீங்க. நீங்க கம்பெனி கொடுக்கல. அதான் நான் ஐஸ் கிரீம் கம்பெனி ஐ தேடி போய்ட்டேன்" என்று அவள் கூற, "அடிங்க. ரொம்ப தான் பேசுற" என்று கார்த்திக் தொடங்கும்போதே, "மிஸ்டர் காட்டுமிராண்டி. நான் யாரு தெரியும் ல. உங்க தங்கச்சி உடைய நாத்தனார். இப்போ என்ன ஏதாவது பண்ணா, நான் எதிர்காலத்துல உங்க தங்கச்சிக்கு நாத்தனார் கொடுமை பண்ணுவேன்" என்று கூறினாள்.

"நீ உயிரோடு இருந்தா தானே டி" என்று விளையாட்டாக கழுத்தை நெறிப்பது போல கைகளை கொண்டு செல்ல, "ஆஆஆஆஅ ....அம்மாஆ ஆஅ " என்று கத்த தொடங்கினாள் உமையாள். மொத்த கடையும் இவர்களை தான் திரும்பி பார்த்தது. சட்டென்று கைகளை கீழே இறக்கிய கார்த்திக், "ஹே நண்டு. வாய மூடு டி" என்று கூறுவதை பொருட்படுத்தாமல், கத்திகொண்டே இருந்தாள். "இவளை வாய மூட வைக்கறதுக்கு என்ன பண்றது?" என்று கார்த்திக் யோசித்துகொண்டே இருக்கும் போது அதற்கு அவளே விடை அளித்தாள். "நீ எனக்கு கட்லெட் வாங்கி குடு. அப்போ வேணா நான் அமைதியா இருக்கேன்" என்று சொல்ல, "வாங்கி தொலை. அதுக்கும் சேர்த்து நானே அழுகுறேன்" என்று தலையில் அடித்துக்கொண்டான் கார்த்திக்.

கட்லெட் வந்த பிறகு, அவள் சாப்பிடுவதை பார்த்து, "உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப பாவம் டி. உனக்கு திங்குறதுக்கு சாப்பாடு வாங்கி குடுத்தே அவன் சொத்து எல்லாம் அழிஞ்சுடும் போல" என்று கூற, "வேவ்வேவ்வெ. நீ ஒன்னும் அதுக்கு கவலை பட தேவை இல்ல. மிஸ்டர் நாட்டுப்புறத்தான். என்னை கட்டிக்க போகிறவன் அதெல்லாம் பாத்துப்பான். ஏதோ உங்க சொத்து அழிஞ்சி போகிற மாதிரி பீலிங் வேற. ஆனா உன்னை கட்டிக்க போறவ பாவம் தான். சாப்பாடே போடாம, கஞ்ச தனம் பண்ணி அவளை சாவடிச்சிடுவ போலருக்கே. பாவம் யாரு பெத்த பொண்ணோ. சோ சேட்" என்று அவள் உச்சிக்கொட்ட, "உன்னை கட்டிக்க போறவன் தான் டி பாவம். உனக்கு சோறு போடுறது மட்டும் இல்லாம. நீ பேசுறது எல்லாத்தையும் கேட்டு வேற தொலைக்கும் ல" என்று கூற, "உன் பொண்டாட்டி அதுக்கு மேல பாவம். பாவம் உன்ன மாதிரி உமனா மூஞ்சிய கட்டிக்கிட்டு அவ என்ன பாடு பட போறாளோ. பேச்சு துணைக்கு கூட ஆளு இருக்காது. கல்யாணம் ஆகி ஒரு மாசத்துல அம்மா வீட்டுக்கே ஓடி போய்டுவா. அப்புறம் நீ மட்டும் ஒண்டி கட்டையா இருக்க வேண்டியது தான்" என்றும் நாலு வாசங்கள் உமையாள் பேசி முடிக்க, "உன் புருஷன் முதல் இரவுக்கு முன்னாடியே ஓடி போயிடுவான் டி ராக்கம்மா" என்று அவன் கூற, "அய்யயோ..இப்போ எதுக்கு முதல் இரவு பத்தி எல்லாம் பேசுற. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருதே" என்று அவள் கூற, "ச்சை. இங்க கருமத்தை பாக்கவா இவளோ தூரம் கெளம்பி வந்தேன்" என்று அவன் கூறினான்.
"அப்புறம் மிஸ்டர் சந்தனக்கட்டை....சாரி நாட்டுக்கட்டை... உங்க கிட்ட பேசுனதுனால எனக்கு ரொம்ப tired ஆயிடுச்சு. கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் கிடைக்குமா" என்று அவள் கேட்க, "சோத்துமாடு. இவ்ளோத்தையும் தின்னுட்டு, இன்னும் ஜூஸ் வேறயா. த்தூ" என்றான். "நான் சோத்துமாடு. நீ தடிமாடு. அவளோ தான் வித்தியாசம். ஹான். அது மட்டும் இல்ல. இப்படி துப்புறதுக்கு எல்லாம் கவலை படுற ஆளு நான் இல்ல. துப்புனா தொடச்சிக்குவோம்" என்று கூற, "இப்படி ஒரு மானம்கெட்ட பொழப்புக்கு....." என்று ஆரம்பித்து, அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க, "அதான் என்ன சொல்றதுன்னு தெரியல ல. சும்மா ஒரு ஜூஸ் வாங்கி குடுத்துட்டு போவியா. அதை விட்டுட்டு இந்த உமையாளுக்கு சமமா பேசணும் னு நெனச்சா முடியுமா தம்பி" என்று இல்லாத காலர் ஐ தூக்கி விட, "கருமம். மிரு. நான் கார் கு போறேன். நீ இந்த தீனிமாடு கு ஒரு ஜூஸ் வாங்கி குடுத்துட்டு வா மா. இதை போயி முதல வீட்டுல தள்ளி உடனும்" என்று கூறி விட்டு எழுந்து சென்றான்.

நேராக கார்க்கு சென்றவன், டிரைவர் சீட் இல் அமர்ந்து கொண்டு, தனியாக புலம்பி கொண்டு இருந்தான். "நண்டு நண்டு. என்னமா வாயாடுது பாரு. இதெல்லாம் பெத்தாங்களா? இல்ல பாண்டி பஜார் ரோடு கடைல இருந்து தூக்கினு வந்தங்களானு தெரியல" என்று புலம்பிக்கொண்டிருந்தான். இதுவரை இப்படி ஒரு அதிசய பிறவியை பார்த்ததே இல்லை. அவனிடம் இப்படி யாரும் வாயாடியது இல்ல. அவனிடம் பேசியவர்கள் எல்லாம் மரியாதையாக மட்டுமே பேசியுள்ளனர். அனால் நம் உமையாள் ஒரு வார்த்தை கூட மரியாதையுடன் பேச வில்லையே. 'தடிமாடு, காட்டுமிராண்டி, நாட்டுப்புறத்தான் என்று டிசைன் டிசைன் டிசைன் ஆகா பெயர் வேறு.

எங்கு தேடியும் ஊர்வியை பற்றி எதுவும் தகவல் கிடைக்காமல் அபி வீட்டிற்கு வந்து சேர, அதே நேரத்தில் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான்.

இவர்கள் இருவரும் வருவதைக் கண்ட கிருஷ்ணன், அவர்களிடம் ஓடி வந்தார். "ஜானகிக்கு ஊர்வி தொலைந்து போனது தெரியாது. தெரிந்திருந்தால் தாங்கிக்க மாட்டாள். அவ பிசினஸ் விசயமாக வெளியூர் போயிருக்கான்னு சொல்லிருக்கேன். நீங்களும் அப்படியே சொல்லுங்க பிளீஸ்" என்று அவர் கண்களால் கெஞ்ச "ம்ம்ம்" என்பது போல தலை அசைத்தான் சித்தார்த்.

இருவரும் உள்ளே செல்ல,"வாங்கடா ரெண்டு பேரும். முதலில் வந்து சாப்பிடுங்க" என்று ஜானகி வாசலிலே வந்து அழைக்க," சாப்பாடு வேணாம் ஜானு. பசியில்லை" என்று சித்தார்த் கூற," அடிவாங்குவ படவா. சாயந்திரம் கூட ரெண்டு பேரும் ஒன்னும் சாப்பிடல. ஏதோ காலுல சுடுதண்ணீர் ஊத்துன மாதிரி எங்கையோ ஓடுநீங்க. இப்பவும் சாப்பாடு வேணும்னா எப்புடி " என்றார் ஜானகி. "சாப்பிடு சித்தார்த்" என்று அபி கூற, அவனை ஒரு வினோத பார்வை சித்து பார்க்க, "சாப்பிடு மச்சான் " என்று மீண்டும் சொல்ல, அவனை கட்டிக் கொண்டான் சித்து.

"என்ன புள்ளைங்ளா அங்க கட்டி புடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க. சாப்பிட வாங்க" என்று ஜானகி அழைக்க, சாப்பிட அமர்ந்தனர் இருவரும்.

"இந்த ஊர்வியை பாருடா சித்து. சாயந்திரம் ஏதோ பிரண்டைப் பார்க்க போறேன்னு சொல்லிட்டு போனா. எங்க ஆள காணோம்ன்னு கேட்டா வெளியூர் போயிருக்கான்னு சொல்லாரு. இன்னேரம் சாப்பிட்டாலோ இல்லையோ. இப்படி தான் இந்த பொண்ணு பிஸினஸ் அதுஇதுன்னு சுத்திட்டு இருக்கும். நீ வந்ததுக்கு பிறகு தான் கொஞ்சம் சிரித்து பாக்குறேன். எனக்கு ஒரு சத்தியம் பண்ணு. ஊர்வியை இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா பாத்துக்குவேண்ணு சத்தியம் பண்ணு" என்று ஜானகி கேட்க, கண்ணெல்லாம் கலங்கியது சித்துக்கு.

அந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்க, அது ஊர்வியாக இருக்குமோ என்று அவசரமாக வாசலுக்கு ஓடினான் சித்து.

as usual vote and comments pannitu ponga darlings...


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro