5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அங்கே கல்லூரியில் சேர்ந்தவனிற்கு ஒரு தனி பட்டாளமே உருவானது .அவன் திருநாவுக்கரசு ,சுந்தரவேல் மூவரும் ஒரே அறையை பகிர்ந்து கொள்வதிலும் குறும்புகள் செய்வதிலும் ஒன்றாக இணைந்தவர்கள் .மாறனின் குறும்புகளோ சொல்லவே தேவை இல்லை ஒரு வழி செய்துவிடுவான் அங்கு பயிலும் மாணவர்களையும் அவனுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் . 

ஆனால் படிப்பில் முதலாவதாக திகழ்வதாலும் அங்கிருக்கும் வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் சரி சமமாக பழகுவதாலும் இவர்கள் மூவரும் அந்த கல்லூரியின் செல்லப்பிள்ளைகள் .

நாட்களும் நன்றாக தான் நகர்ந்தது அவன் இரண்டாம் ஆண்டு முடித்திருக்க அவனது அண்ணன் முருகனுக்கு திருமணம் முடிவாகி இன்னும் இரண்டு வாரத்தில் நடக்க விருந்தது .

இரண்டாமாண்டு முடித்து ஊரிற்கு வந்தவன் தன் அன்னையிடம் சற்று நேரம் பேசி விட்டு தன் தம்பியுடன் ஒரு அறையில் ஐக்கியமாகி விட மாறன் இல்லாது ஒரு கை ஒடிந்ததை போல் இருந்த ராஜாவும் அண்ணனிடம் இந்த நான்கு மாதக்கதையையும் பேசிக்கொண்டிருந்தான் .

அப்பொழுது உள்ளே வந்தார் அவனின் தந்தை சத்யமூர்த்தி "மாறா "என்றபடி உள்ளே வந்தவர் அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை தடவியபடி கேட்டார் "என்னடா இப்டி எளச்சு போய்ட்டா அங்க ஹாஸ்டல் சாப்பாடு ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா ?"என்று கேட்க

அவனோ மனதில் தோன்றிய சிறு வலியுடன் முகத்தில் உடனே அதை மறைத்தவன் மறுப்பாய் தலை அசைத்து "அப்டி எல்லாம் இல்லப்பா நல்ல தான் இருக்கேன் உங்களுக்கு ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால அப்டி தெரியுது "என்று கூற அவனின் முகமாற்றத்தை அவன் தந்தை கவனிக்க வில்லை எனினும் ராஜா கவனித்து விட்டான் .

சத்யமூர்த்தி"நல்லா படுச்சு நல்ல உத்யோகத்துக்கு வரணும் மாறா உன் அண்ணன் உன்ன படிக்கச் வைக்குறதுக்காக பணம் அனுப்புறதால இப்போ இங்க வீட்டுக்கு பணம் தருவது இல்லை .அப்பா உன்ன பார்க்க வரலயேன்னு தப்பா நெனச்சுக்காத சாமி .தினம் தைய்யக்கடைக்கு போகலேனா இங்க அடுப்பு ஏரியாதுய்யா "என்று கூற

அவனோ அவரின் கையை பிடித்தவன் "நா ஒன்னும் நெனச்சுக்கலப்பா எனக்கு வீட்டு நெலம புரியுது. இன்னும் மூணு வருஷம் தான்ப்பா நல்ல உத்யோகத்துக்கு போயிருவேன் "என்று கூற அவரும் தன் மகனை அன்பொழுக பார்த்து விட்டு சென்றார் .

அது வரை பேசாமல் இருந்த ராஜா அவர் சென்ற பின் "அப்பா சாப்பிடுறது இல்லையானு கேட்டப்போ ஏன் அண்ணா ஒரு மாறி வருத்தப்பட்ட "என்று கேட்க

மாறனோ "அது... அதெல்லாம் ஒண்ணுமில்லடா அங்க சாப்பாடு அவ்ளோ நல்ல இருக்காது அதான் எப்படி அப்பா கிட்ட சொல்றது வருத்தப்படுவாருல்ல "என்று கூற

அவனோ அவன் கையை பிடித்தவன் அதில் நான்கு விரல்களும் காச்சுப்போய் அதிகமாய் தட்டச்சு செய்ததன் அடையாளத்தை காட்ட "டாக்டருக்கு படிக்குற உன் கைல எப்படி இப்டி type writing மார்க்ஸ் இருக்கு ?"என்று கேட்க மாறனோ தலை குனிந்தான் .

ராஜா "என்ன எப்படி சொல்றதுன்னு தெரிலயா நா சொல்லவா ?அண்ணன் உனக்கு காசு தறதா சொல்லிட்டு தனியா சம்பளப்பணத்தை சேர்த்து வச்சு தன் பேருல வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க .அதுனால நீ typewriting பார்ட் டைம் ஜாப் போய் உன் ஹாஸ்டல் பீஸ் கட்டிக்கிட்டு இருக்க .மெஸ் பீஸ் கட்ட காசு இல்லை அதுனால நீயும் உன் roommatesum பத்தியும் பத்தாம பக்கத்துல messla காலைல சாப்பிடாமையும் மத்தியானம் ஒரு சாப்பாடு வாங்கி மூணு பேரு சாப்டுட்டும் நைட் ஆளுக்கு ரெண்டு இட்லியும் சாப்பிட்டு படுச்சுக்கிட்டு இருக்கீங்க "என்று கூற மாறனிற்கோ இவனுக்கு எப்படி தெரிந்ததென்று அப்பட்டமான அதிர்ச்சி முகத்தில் தெரிந்தது .

ராஜா "என்ன இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு பாக்கறியா? அன்னைக்கு commerce students இண்டஸ்ட்ரியல் விசிட் போயிருந்தோம். அப்போ தான் நம்ம அண்ணன் ஒரு முக்காவாசி கட்டி முடுஞ்ச வீட்டுக்கு முன்னால நின்னு ஒரு காண்ட்ராக்டர் கிட்ட காசு கொடுத்ததை பாத்தேன் .அந்த காண்ட்ராக்டர் என் நண்பனோட அப்பா. விசாரிச்சப்போ தான் இப்டி ஒரு விஷயம் நடக்குதுன்னும் அதுக்கு நம்மள பெத்த அந்த புண்ணியவதியும் கூட்டுண்ணும் தெரியும் . அப்பறோம் உன் friend திரு அண்ணாவோட தம்பியும் என் நண்பன் தான் அவன் தான் இந்த கதை எல்லாம் நடக்குறத சொன்னான்.

உனக்கு கொஞ்சம் கூட புத்தியே இல்லயாண்ணே இங்கயே இன்ஜினியரிங் படிக்குறேன்னு சொன்னதையும் அந்தாளு கெடுத்து ஆளு ,பேரு தெரியாத ஊருக்கு அனுப்சு விட்டுட்டான் .அங்கேயும் உனக்கு ஒழுங்கா பணத்தை கட்டாம இப்டி பாதி நேரம் பட்டினியா இருக்க விட்ருக்கான்? இன்னும் அந்தாள தூக்கி தலை மேல வச்சு கொண்டாடிகிட்டு இருக்க. "என்க

மாறன் "அவர் சம்பளம் அவருக்காக அவர் வீடு கட்டுறாரு கூட பொறந்ததுக்காக என்ன படிக்க வைக்கணும்னு அவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லையே ராஜா "என்க

ராஜா "நீ எல்லாம் திருந்தவே மாட்ட எப்டியோ போ. ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ நீ இந்த குடும்பம் உடைய கூடாது உடைய கூடாதுனு பண்ற ஒவ்வொரு விஷயமும் உனக்கு பெரிய பாதிப்பை தான் குடுக்க போது "என்று கூறி விட்டு செல்ல

மாறனோ வழக்கம் போல் சிரித்தபடி அவன் தோளில் கையை போட்டவன் "அடேய் தம்பி அடங்கு டா அண்ணனே ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்கேன் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணி இருக்கேன் நீ என்னனா இப்போவும் சண்டையை போடுற? பொறுப்பா நல்ல தம்பியா அண்ணனோட இப்போ வா ஊரு சுத்த போலாம் "என்று அவன் தோளை இறுக்கியபடி வெளியே இழுத்து செல்ல ராஜாவோ இவன் திருந்த மாட்டான் என்பதை போல் தலையில் அடித்துக்கொண்டு அவனுடன் ஊர் சூத்ரா சென்றுவிட்டான் .

நாட்களும் அதன் போக்கில் செல்ல கல்யாண வேலைகள் எதையாவது ஷாந்தி ராஜாவிடம் சொன்னால் அவன் பொறந்ததே ஒரு சாபக்கேடு இதுல அவனுக்கு கல்யாணம் ஒரு கேடு என்று மனதில் நினைத்துக்கொண்டு ஏதாவது காரணம் சொல்லி நழுவி விடுவான் .எனில் மாறனோ தன் அண்ணனின் திருமணம் என்று வரிந்து கட்டிக்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான் .

அன்று வீடு வாசலில் தோரணம் கட்டிக்கொண்டிருந்தவனின் காலை யாரோ சுரண்ட கீழே பார்த்தவனின் முகம் அதீத மகிழிச்சியில் பிரகாசிக்க ஒன்பது வயதான இளவரசியை என்றும் போல் "பாப்பா "என்று அவன் அள்ளி தூக்கிக்கொள்ள

அவளும் வழக்கம் போல் அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள் "மாமா "என்ற கூவலுடன் .

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் "அம்மா வரலையாடா ?"என்று கேட்க அவள் பின்னே மகாலட்சுமியின் குரல் கேட்டது "டேய்ய் மாறா அவ என்ன சின்ன புள்ளையா டா இன்னும் அவளை தூக்கி வச்சுக்கிட்டு இருக்க "என்று கேட்க அவள் கையிலிருந்த சிவாவும் கையை உருவிக்கொண்டு மாறனின் காலை கட்டிக்கொண்டான் .

அவனோ அவளை நன்றாக தூக்கி வைத்தபடி இன்னொரு கையில் ஷிவாவை தூக்கிக்கொண்டவன் "எவ்ளோ வயசானாலும் அவ எனக்கு குழந்தை தானக்கா"என்று கூற

முதல் முறையாய் தம்பியின் கூற்றில் துணுக்குற்றாள் மகா .மகா "அதெப்படி டா வயசு பொண்ணானா அது அதுக்கான உறவுகளும் மாறும்ல "என்று மறைமுகமாக தன் எண்ணத்தை சொல்ல

அவனோ "அக்கா அவளுக்கு எவ்ளோ வயசானாலும் ....."என்று ஏதோ கூற வர

அதற்குள் வெளியே வந்த ஷாந்தி "அடியை மகா புள்ளய வச்சுக்கிட்டு வாசலிலேயே என்ன பேச வேண்டி கெடக்கு உள்ள வா" என்றவர் பின் மாறனிடம் திரும்பி "ஏலேய் மாறா இந்தா கல்யாண பத்திரிக்கையை புடி .முருகனோடு ஸ்நேகிதங்களோட முகவரிலாம் இதுல இருக்கு போய் பத்திரிக்கை வச்சுட்டு வா உன் ஸ்நேஹிதன் மோகனுக்கும் ராமனுக்கும் அப்டியே வச்சுட்டு வந்துரு "என்றவர் வாய்க்குள்ளேயே வேலை பார்க்க ஆளு வேணும்ல .என்று முனங்கிவிட்டு செல்ல

மாறனோ அவர் கூறியது தெளிவாக காதில் விழுந்தாலும் இது பழகிய ஒன்றே என்பதை போல் அதை கையில் வாங்கிக்கொண்டு இளவரசியையும் ஷிவாவையும் கீழே இறக்கி விட இளவரசியோ "மாமா பொருட்காட்சி போட்ருக்காங்க மாமா இந்த அம்மா என்ன கூடிட்டே போக மாட்டேங்குது என்ன இப்போ கூட்டிகிட்டு போயேன் "என்று அடம்பிடிக்க சிவாவும் சேர்ந்து அடம்பிடிக்க அவனோ ராஜாவை அழைத்து பணத்தையும் கொடுத்து அவளையம் ஷிவாவையும் அழைத்து செல்லுமாறு கூற

அவனோ வழக்கம் போல் அவளை தலையில் கொட்டி"ஒரு நாள் வீட்ல பொம்பள புள்ள மாறி அடங்கி உக்காருரியா வாலு வாலு "என்று கையை பிடித்து அவள் தம்பியான ஷிவாவையும் மண்டையில் ஒரு கொட்டு வைத்து இருவரையும் சேர்த்து அழைத்து சென்றான் .

மஹாவிற்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் மனதில் தோன்றிய சஞ்சலம் கானல் நீராய் மறைந்து விட அவள் அன்னையின் பின்னே சமயற்கட்டில் வேலை பார்க்க சென்று விட்டாள்.

மாறன் அதிலிருந்த முகவரிகள் அனைத்திலும் பத்திரிக்கை வைத்து விட்டு மோகன் வீட்டிற்கு செல்ல கல்லில் அமர்ந்திருந்த மோகனோ மாறனை கண்டதும் முகம் மலர்ந்தவன் "டேய்ய் மாறா எவ்ளோ நாள் ஆச்சுடா உன்ன பார்த்து "என்க

மாறனோ "என்னடா பண்றது காலேஜ் ஆறு மாசத்துக்கு ஒரு தடவ தான் லீவு விட்றானுங்க .நேத்து தான் வந்தேன் அதான் அப்டியே இன்னும் ரெண்டு வாரத்துல அண்ணனுக்கு கல்யாணம் பத்திரிக்கை குடுத்துட்டு போலாம்னு வந்தேன் "என்று பத்திரிக்கையை கொடுக்க மோகனோ அதை வாங்கி மேஜையில் வைத்தவன் சற்று நேரம் அவரவரின் கல்லூரி வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டே இருந்தனர் .

பின் மாறன் "ஏன் டா இந்த ராமன் குண்டான பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல !அவனுக்கும் பத்திரிக்கை வைக்கணும் டா ."என்க

மோகனோ " மாறா சொல்லனும்னு நெனச்சேன் டா .அவன் மிலிட்ரில airforcela வேற செலக்ட் ஆய்ட்டானாம் நேத்து பார்க்க வந்தப்போ சொன்னான் .இன்னும் ரெண்டு வாரத்துல கெளம்பிருவானாம் உன்ன பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான் போகுறதுக்கு முன்னாடி ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருவோமா ?"என்று கேட்க இவனும் ஆமோதிக்க இருவரும் கிளம்பினர் ராமனின் வீட்டை நோக்கி.

அங்கு அவனின் இருப்பிடம் இருக்கும் சந்து வரை அங்கே தண்ணீர் குழாயில் நீர் இறைத்துக்கொண்டிருந்த பெண்களில் நீல நிற பாவாடையும் சம்மந்தமே இல்லாமல் மஞ்சள் நிற சட்டையும் அடர் நீல தாவணியும் அணிந்து ரெட்டை ஜாடை போட்டிருந்தவளை கண்டு கொண்ட மோகன் மாறனிடம் திரும்பி "மாப்ள இப்போ வேடிக்கைய மட்டும் பாரேன் "என்று

அந்த பெண்ணை பார்த்து "ஒய் நீச்ச தொட்டி "என்று கூப்பிட ரெட்டை சடையில் மான்விழிக்கு மை தீட்டியபடி திரும்பியவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.நியாயமாக அவள் தோற்றத்தை கண்ட அனைவருக்கும் அச்சத்தையே கொடுக்க மாறனிற்கோ புன்னகை தான் அரும்பியது .

அவனுக்கு அவள் யாரென்று அடையாளம் தெரியாமல் அவளையே தான் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க அவளோ அதற்குள் மோகனை திட்டி தீர்த்துவிட்டு குடத்தை தூக்கி சென்றிருந்தாள்.

சிரித்தபடி மாறனிடம் திரும்பிய மோகனோ மாறன் குழப்பமாய் அவளை பார்ப்பதற்கு நினைத்துக்கொண்டு "டேய்ய் மாறா என்ன யாருனு தெரிலயா? அதான நீ தான் ஒன்பது வயசுக்கப்ரோம் அவங்க வீட்டு பக்கமே போகலையே! உன்ன பாக்கணும்னா நானும் ராமனும் உன் வீட்டுக்கு வருவோம் சோ தெரிய வாய்ப்பில்லை.இது ராமனோட கடைசி தங்கச்சி இலக்கியாடா சின்ன பிள்ளைல உன் கூடவே சுத்துவாளே "என்று கூற

மாறனோ "இலக்கியாவா இது இப்டி வளந்துட்டா! "என்க

மோகனோ "பத்தாவது போய்ட்டாங்கள்ல மேடம்.நீச்சதொட்டினு கூப்டுட்டா அப்டி கோவம் வரும்டா மூக்கு மேல அப்போ நல்லா வாடா போடா அவனே இவனேனு திட்டிட்டு அடுத்த தடவ பார்கேள வாங்க மோகன் அண்ணானு நல்ல புள்ள மாறியே கூப்டுவா"என்று கூறி சிரிக்க தானும் சிரித்த மாறனின் பார்வை வேக எட்டுக்களுடன் குடம் ஏந்தி செல்பவளிடம் நிலைத்து நின்றது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro