6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


தன்னை அறியாமலே அவள் மீது பார்வையை நிலைத்தவன் பின் மோகனின் தோளில் கையை போட்டுக்கொண்டு ராமனின் இல்லத்தை நோக்கி சென்றான் .தனது உடமைகள் அனைத்தையும் சீராக அடுக்கி வைத்திருந்த ராமன் அதை மீண்டும் சேரி பார்த்தபடி இருக்க வாசலில் "டேய்ய் குண்டா "என்ற இருவரின் குரலில் திரும்பியவன் அங்கே நின்றிருந்த மாறனையும் மோஹனையும் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்து ஓடி சென்றவன் அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டான் .

அவர்கள் சத்தம் கேட்டு தாமரை,சௌபாக்கியவாதி முற்றத்திற்கு வர தாமரையின் மகளோ மோகனிடம் ஓடியவள் அவன் என்றும் அவளிற்காக வாங்கி வரும் மிட்டாயை கேட்க அவனோ அன்று ஏதோ ஒரு நினைவில் மிட்டாய் வாங்க மறந்திருந்தான் .

அவள் உதட்டை பிதுக்க மாறனோ தன் சட்டை பையில் இளவரசிக்காக வாங்கி வைத்திருந்த மிட்டாயை எடுத்தவன் போகும் வழியில் மற்றொன்று வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தவன் ஒற்றை காலில் மண்டியிட்டு அவள் முன்னே அந்த மிட்டாயை நீட்ட அவனை குழப்பமாய் பார்த்தவள் பின் தன் அன்னையை பார்த்தாள்.

தாமரை வாங்கிக்கொள் என்று கூற வாங்கிக்கொண்டவள் அவனிடம் "thank யூ மாமா "என்க

அவனோ சிரிப்புடன் அவள் தலையை அழுத்தியவன் "உங்க பேர் என்ன குட்டி மேடம் ?"என்று கேட்க

அவளோ "மை நேம் இஸ் சுஜாதா studying செகண்ட் ஸ்டாண்டர்ட் உங்க பேர் ?"என்று கேட்க

அவனோ சிரிப்புடன் "மாறன் "என்றான் .

அவனிடம் "நைஸ் நேம் "என்றவள் பின் இலா சித்தி என்று அவள் பெயரை ஏலம் விட்டுக்கொண்டே சென்று விட்டால்.

அவள் செல்வதை சிரிப்புடன் பார்த்த தாமரை "சித்தி இல்லாம ஒன்னையும் சாப்பிடாது இந்த வாண்டு என்றவாறு அவன் புறம் திரும்பியவர் "என்னடா உனக்கு இப்போ தான் வீட்டுப்பக்கம் வர வழி தெருஞ்சுதா ?ஏன் வெளியவே நிக்குற வந்து உக்காரு காபி எடுத்துட்டு வரேன் "என்று கூறி உள்ளே செல்ல உள்ளே வந்து அமர்ந்தனர் மூன்று நண்பர்களும் .

ராமன் "மச்சான் எப்பிடிடா காலேஜ் போகுது ?என்ன திடீர்னு வீட்டுக்குலாம் வந்துருக்க ?"என்க

மாறனோ "அண்ணனுக்கு கல்யாணம் அடுத்த வாரம் வருது டா அதான் பத்திரிக்கை வைக்கலாம்னு வந்தேன் .அப்பா அம்மா எங்கடா?"என்க

அங்கே வந்த ராமனின் அப்பா சங்கரன் "வாப்பா மாறா என்ன திடீர்னு "என்க

மாறனோ எழுந்து நின்று அவரிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் பின் தன் தமையனின் கல்யாண பத்திரிக்கையை தர அவரோ ரொம்ப சந்தோஷம் பா வந்துருறோம் என்றவர்

பின் மோகனிடம் திரும்பி "என்ன மோகா வந்து இவ்ளோ நேரமாச்சு இன்னும் இலக்கியாவை வம்பிழுத்து வாங்கி கட்டிக்காம இருக்க "என்க

ஒரு கையில் சுஜாதாவை பிடித்தவாறு வந்த இலக்கியாவோ "அதெல்லாம் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே நல்லா வாங்கிட்டான்ப்பா "என்றவள் பின் சமையற்காட்டிற்கு சென்று அடுப்படி மேடை மேல் அமர்ந்துகொண்டவள் ஒரு கேரட்டை பாதியாய் உடைத்து ஒன்றை தான் உண்டவாறு சுஜாதாவிற்கு ஒன்றை கொடுத்தவள் "யாருக்கா அது ?"என்க

தாமரையோ கொதித்த பாலை டம்ப்ளரில் ஊற்றியவாறே "யாரை கேக்குற ?"என்க

அவளோ "அதான் புதுசா ஒருத்தன் வந்துருக்கானே மோகனோட நல்லா நெடு நெடுனு மாநிறமா வீரப்பன் வம்சம் மாறி மீசை வச்சுக்கிட்டு அவன் தான் "என்க

காபியை கலக்கி முடித்து ட்ரேயில் வைத்தவாறு அவள் கையில் கொடுத்த தாமரை அவள் தலையில் கொட்டியவாறே "யாருக்கும் மரியாதை தர்றதில்ல எல்லாம் உங்க மாமா குடுக்குற செல்லம் .அது ராமனோட இன்னொரு friend இளமாறன். சின்ன வயசுல அவனோட தான் நல்லா விளையாடுவ நீ .இப்போ வெட்னரி சயின்ஸ் படிக்கிறான்.போதுமா தகவல் போய் காபீ குடு "என்று கூறி அனுப்பி வைக்க அவளோ தலையை தேய்த்தவாறே வந்து அனைவருக்கும் காபியை கொடுத்தாள்.

மாறன் காபியை எடுத்தவாறு தேங்க்ஸ் என்று கூற அவளும் ஒரு சிறு புன்னகையுடன் விடைபெற்றாள்.

மோகன் சும்மாய் இராமல் "ஏய்ய் நீச்ச தொட்டி காபி குடுத்துட்ட பிஸ்கட் எவன் குடுப்பான் ?"என்று கேட்க

அவளோ "அச்சச்சோ நீ வருவன்னு தெரியாம நாய் பிஸ்கட் எல்லாத்தையும் மணிக்கு போட்டுட்டேனே வேணுனா அதுகிட்ட கேட்டு வாங்கிக்கோயேன் "என்று விட்டு உள்ளே செல்ல

ராமனோ "தேவயாடா இது உனக்கு "என்று கூறினான் .பின் சற்று நேரம் மூவரும் பேசியபடி இருக்க அவ்வப்பொழுது அவன் அறியாமலே அங்கு சுஜாதாவுடன் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருக்கும் இலக்கியாவின் புறம் சென்று வந்தது .

பின் விடைபெற்றவன் தன் வீட்டிற்கு வந்து அவனின் அன்னை கொடுத்த வேலை அனைத்தையும் முடித்துவிட்டு இரவு உணவை ராஜாவுடன் உண்ண அமர்ந்தான்.இளவரசிக்கு ஊட்டிக்கொண்டே அவன் சாப்பிட அந்த நேரமே முருகன் உள்ளே வந்தான் .

உள்ளே வந்த முருகன் உண்ணும் இடத்தில அமர அது வரை சிரித்த முகமாய் இருந்த ராஜாவின் முகமோ நொடியில் கடு கடுவென்று ஆகி விட்டது.முருகன் மாறனிடம் திரும்பியவன் "அப்பறோம் மாறா படிப்புலாம் எப்படி போது?"என்க

மாறனோ இளவரசிக்கு ஊட்டிக்கொண்டே "நல்லா போகுதுண்ணே"என்க

அடுத்து அவன் "குடுக்குற பணம் பத்தலேன்னா சொல்லு மாறா இன்னும் கொஞ்சம் அனுப்புறேன் "என்று கூற மாறனிற்கு ஒரு நொடி கைகள் இறுக ராஜாவோ அதற்கு மேல் சாப்பிட முடியாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு அதை கொண்டு அடுப்படியில் போட்டு விட்டு சென்று விட்டான்.

மாறனோ தந்தையின் முகத்தில் தெரியும் நிறைவை கெடுக்க வேண்டாமென்று நினைத்தவன் "இல்லண்ணா போதும்"என்றவன் இளவரசி சாப்பிட்டு முடிக்க தானும் பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டான் .

முருகனோ இது எதையும் கண்டு கொள்ளாமல் அன்னை பரிமாறுவதற்கு விழுங்கிக்கொண்டிருந்தான் .இளவரசி உண்ட மயக்கத்தில் அவன் தோளிலே தூங்கிவிட அவளை மஹாவின் அறையில் படுக்க வைத்தவன் மேலே கோபமாய் சென்ற தம்பியை தேடி வந்தான் .

நினைத்ததை போலவே அந்த வீட்டின் மாடியில் அந்த சுவற்றை பிடித்தவாறே அம்மாவாசை இரவில் வானில் எதையோ தேடிக்கொண்டிருந்தான் ராஜா.அவன் நின்ற தோரணையே அவனின் கோபத்தின் அளவை சொல்ல மாறனோ இவனை எப்படி சமாளிக்க போகிறோமோ என்று பெருமூச்சு விட்டவாறே அவன் அருகில் சென்று அவன் தோளில் கையை வைத்தான் .

தொழில் படிந்த கையை தட்டி விட்ட ராஜா மீண்டும் வானை வெறிக்க அவனை தோளோடு அணைத்துக்கொண்டு மாறா "ஏன்டா இவ்ளோ கோபப்படுற ?"என்க

ராஜாவோ "கொஞ்சம் உன் சாப்பாட்டுல உப்பு நிறைய சேர்த்துக்கோ உன்னை மாதிரி சூடு சொரணை இல்லாமலாம் என்னால இருக்க முடியாது .வாய் கூசாம அந்த ஆளு பொய் சொல்றான் நீயும் போதும்ணே வேணாம்னு ஒத்து ஊதுற அவனுக்கு "என்க

மாறனோ "டேய்ய் டேய்ய் அண்ணன் பண்றது தப்பு தான்டா ஆனா கொஞ்சம் யோசுச்சு பாரேன் சும்மாவே அக்காவோட புருஷன் அக்காக்கு தெரியாம மாசா மாசம் அப்பா கிட்ட இப்போ வரைக்கும் காசு வாங்கி கிட்டு தான் இருக்கான் .அந்த மனுஷன் இந்த வயசுலயும் மாடா ஒழைக்குறது தன் புள்ளைங்க நல்லா வந்தாவாச்சும் நம்ம நெலம முன்னேராதான்னு தான் .

அவரு சந்தோஷப்பட்டு நிம்மதியா இருக்குற ஒரே விஷயம் என் படிப்பு.அக்கா நிம்மதியா இருக்க காரணம் அது புருஷன் பண்றத அப்பா அது கிட்ட இருந்து மறைக்குறதால தான் .சில விஷயங்களை மறைக்குறதால குடும்பம் உடையாம இருக்கும்னா அதை பண்றது தப்பில்லடா."என்க

ராஜாவோ சற்று கோபம் தணிந்தவன்"என்னவோ சொல்றண்ணே உன் வார்த்தைக்கு மரியாதை குடுத்து தான் அமைதியா போறேன். ஆனா நீ என்ன சொல்லு இந்தாளு பண்றத என்னால ஏத்துக்கவே முடிலண்ணே இதுக்கு நம்மள பெத்தவளும் கூட்டா இருக்காளே ச்ச "என்க

மாறனோ சிரித்தவன் "சரி விடு டா இதை இப்டி எடுத்துக்கோயேன் அண்ணன் சொந்த வீடு கட்டிருச்சுன்னா அப்பாக்கு தன் ஒரு புள்ள செட்டில் ஆய்ட்டான்னு ஒரு நிம்மதி இருக்கும்ல ஏன் அவங்க ரெண்டு பேரையும் அண்ணன் கூட வச்சுக்கிட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல "என்க

ராஜாவோ மறுப்பாய் தலை அசைத்தவன் "நம்ம வருங்கால அண்ணியாரை நீ பார்த்ததில்லையே அதான் இப்டி பேசுற .ஜாடிக்கேத்த மூடி எனக்கு தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வந்து ஒரு மாசம் கூட குடும்பத்தோட சேர்ந்து இருக்க மாட்டானுங்க ."என்க

மாறனோ "நடக்குறது நடக்கட்டும்டா நாம நம்மாலான முயற்சியை பண்ணுவோம் அவ்ளோ தான் ."என்க ராஜாவோ மனதில் தன் அண்ணனின் வெள்ளை உள்ளதை கண்டு மனம் மகிழ்ந்தாலும் ஒரு புறம் கலக்கமாகவே இருந்தது இதே குணம் இவனுக்கு எத்தனை பிரெச்சனைகளை தரப்போகிறதோ என்று .பின் இருவரும் அவர்களின் அறைக்கு செல்ல ராஜாவோ படுத்தவுடன் தூங்கி விட்டான் .மாறனோ உறக்கம் வராமல் உலாத்திக்கொண்டிருந்தவன் தனது டைரியை எடுத்து இன்றைய நிகழ்வுகளை எழுதினான் .இலக்கியா மோகனின் சண்டையை எழுதும்போது அவனை அறியாமல் இதழ்கள் விரிந்துவிட மிச்சத்தை எழுதியவன் டைரியை மூடி எடுத்து வைத்தான் .

டைரியை அங்கிருந்த ஷெல்ப்பில் வைத்தவனின் கண்ணில் ஒரு சிறிய மரப்பெட்டி தென்பட அதை யோசனையோடு பார்த்தவன் அதை கையில் எடுத்து அதை திறந்து பார்க்க அதிலோ ஒரு சிறிய வெள்ளி வலயம் இருந்தது .அதை பார்த்ததும் அது யாருடையது என்று நினைவு வந்துவிட அதை கையில் எடுத்து சுண்டி பார்த்தவன் "ரொம்ப வளந்துட்ட லயா பாப்பா"என்று முணுமுணுத்தவன் ஏதோ தோன்ற அதை தன் பையில் போட்டு வைத்துக்கொண்டான் கல்லூரி செல்கையில் தன்னோடு எடுத்து செல்ல .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro