உயிர் 46

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கடந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது..

எழில் சொன்னது போலவே ஐசுவிற்கு பெண்பிள்ளை பிறந்து விட, அவன் சந்தோசத்தின் உச்சியில் திளைத்துப் போனான்..,
தலைப்பிரசவம் ஐசுவிற்கு சற்று சிக்கலாகிப் போக ஐசுவின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அவன் தனது மனையாளை சிரமேற்கொண்டு கவனித்துக் கொண்டு,
தனது தம்பியிடமே தனது குழந்தையை பராமரிக்கும் பொருப்பைக் கொடுத்துவிட்டான்.. தேவியும் சாரதாவும் உடனிருந்தாலும் தனது தங்கத்திற்கு தேவையாக அனைத்தையுமே அவனே ஆசையாக செய்தான்..
இனியாவை தனது உள்ளங் கையில் வைத்து பொத்தி பொத்தி பாதுகாத்தான்.

அசோக்கின் கவனிப்பால் ஐசு தேறிவிட, குழந்தையை அவளேப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாலும் அவர்கள் பாசம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..

படிப்பை முடித்தவுடன் எழில் தேவாவுடன் இணைந்து தானியங்கி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினான்.. அவனுக்கு அவன் படித்த படிப்பும் இயந்திரங்களின் தன்மையை ஆராயும் அவனது நுண்ணறிவும் அவனை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல, தனக்கான சொந்த முயற்சியில் யாரையும் சாராமல் வெற்றிக் கனியைப் பறித்தான்..இதற்கிடையில் கனிமொழியை காலையும் மாலையும் கல்லூரிக்கு அழைத்து செல்லவும் மறக்கவில்லை.. அதுவும் இனியா பிறந்ததில் இருந்து வாரத்தில் நான்கு நாட்கள் எழிலின் இல்லத்தில்தான் கழித்தாள்.. அவளுக்கு அந்தக் குட்டி தேவதை இனியாவை காண்பது எவ்வளவு பிடிக்குமோ அதைவிட தனது
எழில் அந்த பிஞ்சினை கொஞ்சுவதைப் பார்க்க அவ்வளவு பிடிக்கும்.. அவளை விட்டால் நாள் முழுதும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்.. அவளுக்கும் சமத்துக் குட்டியான இனியாவை வம்பிழுப்பதில் அளாதிப் பிரியம்.. தன்னைப் போலவே இருக்கும் குண்டு கன்னங்களை குழந்தைக்கு வலிக்காத வண்ணம் அடிக்கடி கிள்ளிக் கொண்டே இருப்பாள்..

எழிலுக்கோ பிறந்த குழந்தையை கொஞ்சுவதா வளர்ந்த குழந்தையை கொஞ்சுவதா என்ற குழப்பமே வந்துவிடும்.. சில சமயம் குழந்தையின் கன்னத்தோடு தனது திம்ஸுவின் கன்னத்தையும் கடித்து வைத்துவிட்டு ஓடி விடுவான்..

அநத சமயம் அவள் கண்ணில் யார் பட்டாலும் அவர்கள் கதை முடிந்தது என்னும் அளவிற்கு அவர்களிடம் அவன் மீது பெரிய பஞ்சாயத்தையே நிகழ்த்தி விடுவாள்.. ஆரம்பத்தில் அவள் பேச்சை ஙே என்று வியந்து கேட்டுக் கொண்டிருந்த செல்வராஜூக்கும் சாரதாவுக்கும் கூட இந்தப் பாடு பழகிப் போய்விட்டது..
அது என்ன மந்திர மாயமோ தெரியாது சாரதாவிற்கு ஐசுவைக் காட்டிலும் அவ்வளவு ஏன் தனது மகன்களைக் காட்டிலும் கனிமொழி மேல் தனிப் பிரியம்தான்.. அவளை யாரும் ஒரு வார்த்தை சொல்லி விடக் கூடாது..செல்வராஜ் மட்டும் என்ன..மியூசியம் போல் இருந்த மாளிகையை கிளிகள் கொஞ்சும் வண்ணப் பூங்காவாக மாற்றிய தங்கள் மருமகள்களை மகள்களாக பாவித்தார்.. அப்படியே அந்த வீட்டில் சண்டை என்று வந்தால் அது கண்டிப்பாக கனிக்கும் அசோக்குக்கும் தான் இருக்கும்.. ஆனால் அந்தோ பரிதாபம்
அந்த மாமன் மச்சினிச்சி சண்டையை விலக்கி விடக் கூட யாரும் முன் வர மாட்டார்கள்.. யாரேனும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள நினைப்பார்களா.. அப்படியே சமாதானம் பேச வந்தாலும் அவர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் நழுவி விடுவார்கள்.. கடைசி வரை எதற்காக அவர்கள் சண்டை கட்டுகிறார்கள்..எதற்காக சமாதானம் ஆகிறார்கள் என அவர்களுக்கே புரியாது..

மூத்தவள் இனியா எழிலுக்கு செல்லப் பிள்ளையாய் சமத்துக்குட்டியாக இருக்க, மூன்று வருடங்களுக்குப் பிறந்த இளையவன் இனியன் ஐசுவை படாதபாடு படுத்தவே தனது சித்தியின் மறுஉருவமாய் வந்து பிறந்தான்.. அவன் கையில் புல்லாங்குழலும் தலையில் மயிலிறகும் மட்டுந்தான் இல்லை..மத்தபடி அவனும் மண்ணை உண்டு வித்தை காட்டிய அந்தப் பரந்தாமனுக்கு சளைத்தவன் இல்லை..
அவனை அடக்கி ஆள அசோக் மற்றும் கனியால் மட்டுமே முடியும்..

சில சமயம் இனியாவின் சொல்லுக்கு கூட இணங்குபவன் மறந்தும் ஐசுவிடம் அடங்குவதில்லை..
பார்ப்பவர்கள் எல்லாம் கனிதான் அவனுக்கு சொல்லி கொடுக்கிறாள் என நினைத்துக் கொண்டிருக்க, அவனோ கனிக்கே சொல்லிக் கொடுக்கப் பிறந்தவன் போல இம்சை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தான்.
அதுவும் தனது சித்தப்பா எழில் தனது சித்தியிடம் நெருங்கினால் போதும் எங்கிருந்து தான் அவன் வருவானோ தெரியாது.. பொக்கை வாய் பிளக்க சத்தமாக சிரித்துக் கொண்டே தத்தி தத்தியாவது அவர்கள் முன் வந்து நிற்பான். மொத்தத்தில்
அசோக் ஐசுவின் காதலுக்கு அடையாளமாக பிறந்த ஐந்து வயது இனியாவும் இரண்டு வயது இனியனும் தங்கள் பிஞ்சு மொழியால் செல்வராஜின் இல்லத்தினை ஆட்சி செய்யத் துவங்கினர்.. உழைத்து உழைத்து ஓய்ந்து போன தங்களது தாத்தா பாட்டிகளின் உலகமென மாறிப் போயினர்..

பார்வதியின் இல்லம்:

அபிமன்யூ - பிரியதர்ஷினி திருமணம் முடிந்த பின்னர் கதிரின் வீட்டிற்கு அருகிலே தனிவீடு ஒன்றினை வாங்கி குடிபெயர்ந்து விட்டான்.. தர்ஷுவின் தந்தையையும் வற்புறுத்தி தங்களோடு தங்க வைத்துக் கொண்டான்.
தர்ஷுவுக்குமே தன் மனதில் உள்ளதை அறிந்து நடந்து கொள்ளும் அபியை எண்ணி பெருமையாகத் தான் இருந்தது.

திருமணம் முடிந்த நான்கு மாதங்களில்தான் தர்ஷுவின் தந்தைக்கு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு உள்ளது என்பதையும் அதற்கு தர்ஷுவிற்கு தெரியாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டான்.. அதனால்தான் அவள் வெளியூருக்குச் செல்லும்போது அதனை மறுக்காமல் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்தது.. அறுவை சிகிச்சை செய்தால் 50 சதவீதம் பிழைப்பதற்கு வாய்ப்பு இருந்தாலும் தனது மகளினை தனியாக விட்டு சென்றுவிடுவோமே என்கிற பயத்தில் இத்தனை நாள் அதனை தள்ளி வைத்திருக்கிறார்..தற்போதும் வீடு மாற்றி வரும்போது கண்ட அவரது மருத்துவ அறிக்கையை படித்துத் தான் தெறிந்து கொள்ள முடிந்தது..

அவரை வற்புறுத்தி தலைசிறந்த இதய வல்லுனரை வைத்தே அறுவை சிகிச்சை செய்ய வைத்து அவரை குணமாக்கினர்.. தர்ஷுவிற்கு அப்போதுதான் தனது வேலைக்கு அவர் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது புரிந்தது..ஒரு வேளை தனக்கு எதாவது ஆனாலும் தன் பிள்ளை தனியாக சரியான வேலை இல்லாமல் வருந்தக்கூடாதே என்பதற்காகத் தான் அரசாங்க உத்தியோகம் வேண்டும் என தலைப்பாடாக அடித்துக் கொண்டார் என்பதை தெரிந்து கொண்டாள்..

முதல் வருடம் அவரது சிகிச்சையில் சென்றுவிட, இரண்டாவது வருடத்தில் தான் சிலர் குழந்தையைப் பற்றி கேட்க ஆரம்பித்தனர்.. ஆரம்பத்தில் அவர்களும் தங்களுக்கு வயதொன்றும் ஆகவில்லையே என தங்களை தாங்களே ஆறுதல் படுத்திக் கொண்டாலும் நாட்கள் நகர நகர, அவர்களுக்கும் குழந்தை ஏக்கம் அதிகமானது.. தர்ஷுவிற்கு கருமுட்டை
உற்பத்தி ஆவதில் பிரச்சினை இருந்ததால் தொடர்ந்து இரண்டு வருட தீவிர சிகிச்சைக்குப் பின்னரே கருவுற்றாள்..
தவமாய் தவமிருந்து ஒரே பிரசவத்தில் இரட்டைச் செல்வங்களைப் பெற்றனர் அபி தர்ஷு தம்பதியினர். ஊட்டச்சத்துக் குறைவாகவே பிறந்த குழந்தைகளை அம்மா, அப்பா,
துளசி அத்தை, பாட்டி, தாத்தா இவர்களோடு கதிர் மாமா என அனைவருமே தங்கள் அரவணைப்பில் தேற்றினர்..

தர்ஷுவும் அபியுமே மறுபிறப்பு எடுத்து வந்ததைப் போல உணர்ந்தனர்.. காதல் மட்டுமே வாழ்க்கை என்பதை நினைத்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், திருமணத்திற்குப் பின்பு தான் வாழ்க்கையே தொடங்குகிறது என்பதை அறிந்து கொண்டனர். அதற்கடுத்து அவர்கள் வாழ்க்கை நிற்க நேரமில்லாமல் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் தங்கள் காதலையும் வளர்த்தனர்..

தற்போது....

நகரத்தின் மத்தியிலிருந்த அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் வாசலில் செல்வராஜ் மற்றும் கந்தன் தம்பதியினர் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

அபி தனது மூன்று வயது மகன் பிரித்வியை கையில் ஏந்திக் கொண்டு அரக்கப் பறக்க சமையல் வேலைகள் முடிந்ததா என உறுதிப் படுத்திக் கொண்டிருந்தான்.. கனியின் அண்ணனாய் அனைத்து வேலைகளையும் வரிந்து கட்டிக் கொண்டு அவன்தான் செய்து கொண்டிருக்கிறான்..
தர்ஷுவும் ஐசுவும் ஐயர் கேட்கும் பூஜைப் பொருட்களை அருகில் இருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. பார்வதி தனது பேத்தி பிரித்விகாவை மடியில் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார்..

சியாமளா தனது கணவனுடன் திருமணத்திற்கு வந்திருந்தாள்.
கனியின் திருமணத்திற்கு அவளை பரம எதிரியாக நினைத்த இரதி கூட வந்திருந்தாள். துளசியினால் தன் முதலிடம் பறிபோன ஆத்திரத்தில் இருந்தவள் கனி தனது மாமாவுக்காக படாதபாடு பட்டு படிப்பில் முன்னேறியதைக் கண்டதுமே தானும் படித்துத் தான் முன்னேற வேண்டுமே தவிர சூழ்ச்சியால் அல்ல என்பதை தெரிந்து கொண்டு திருந்தி துளசியிடமும் கனியிடமும் மன்னிப்புக் கேட்டு அவர்கள் குழுவுக்குள் இணைந்து விட்டாள்..

அசோக் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை நலம் விசாரித்துவிட்டு அவர்கள் இருக்கையில் அமர்வதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தான்..
அங்கே மணமகன் அறையில் எழில் பட்டு வேட்டிச் சட்டையில் மணமகனாக தயாராகிக் கொண்டிருந்தான்.. அவனுக்கு துணையாக அவனது நண்பன் தேவாவும் அசோக் ஐசுவின் ஐந்து வயது செல்லப் புதல்வி இனியாவும் இரண்டு வயது இனியனும் உடன்இருந்தனர்..

தேவாவின் கையிலிருந்த அந்த குட்டி வாண்டு தனது செல்ல சித்தி திம்ஷும்மா தேவாவை எப்போது பார்க்கும்போது அவன் தலையை கொட்டுவதை நினைவில் வைத்து அவனும் தேவாவின் தலையிலிருக்கும் முடியினை பிடித்து இழுத்து இம்ஷை செய்ய,
" டேய் மச்சான் காப்பாத்துடா டேய்..உன் குடும்பத்துல இருக்குற எல்லோருக்கும் என் மண்டை தான் கெடச்சதா.. இவனுக்கு எங்கயாச்சும் அவுங்க அம்மா குணம் இருக்கா.. அப்படியே அவுங்க சித்தியோட ஜெராக்ஸ் மாதிரியே இருக்கான்.. ராஸ்கல் " என செல்லமாக கன்னத்தில் இடித்துவிட்டு தலையை வார அவன் மீண்டும் அதனைக் கலைத்துவிட்டு அவனை அப்பாவி போல பார்த்து வைக்க ' வருங்காலத்துல இவன் பெரிய நடிகனா வருவான்டோய் ' என அங்கலாய்த்துக் கொண்டான்.

குழந்தையை அவனிடமிருந்து வாங்கிய எழில் " பொறந்ததிலிருந்து என் திம்ஸுதான இவன உள்ளங் கையிலயே வெச்சு தாங்குறா..அப்போ அவள மாதிரி தான இருப்பான் என் செல்லம் " என குழந்தையின் பிஞ்சுக் கன்னத்தில் முத்தம் வைத்தவன் தன் இன்னொரு கையில் இனியாவையும் தூக்கி வைத்து தான் பேச்சுலராக இருக்கின்ற இந்த கடைசி நிமிடத்தை தன் நண்பனின் உதவியால் புகைப்படத்தால் சேமித்துக் கொண்டான்..
இனியா தனது சித்தாவின் கன்னத்தில் முத்தம் இடுவதும்
இனியன் தன் பால்பற்கள் தெரிய சிரித்தவாறே
ஒரு கையால் இனியாவின் உச்சிக் குடுமியை பிடித்து இழுக்க முயற்சித்த வண்ணம் இருக்க எழில் இருவாண்டுகளையும் இரசித்தவாறு இருப்பது போல அழகாய் பதிவாகியது அந்தப் புகைப்படம்..

அனைவரும் சந்தோசத்தில் திளைத்துக் கொண்டிருந்த தருணம் ஒரு ஜுவன் மட்டும் உள்ளுக்குள் நொந்து கொண்டிருந்தது.. அது வேறும் யாரும் இல்லைங்க நம்ம மணமகள் கனிமொழிதான்.. அழகுக்கலை நிபுணர் அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருக்க,
அவள் கல்லூரித் தோழிகளும் அவள் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் அலுவலக தோழிகளும் அவளுடன் துணையிருக்க,
அவள் வாயோ ஓயாமல் இரண்டு ஜீவன்களையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.. இந்த மண்டபத்துல
கதைக்கு முக்கியமான இரண்டு பேரை காணாமே..
அவுங்க இரண்டு பேர் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சுதா..
.
.
.
.

தனது திருமணத்தில் தன் வாழ்வில் முக்கியமாக கருதும் தனது மாமனும் தனது உயிர்த் தோழி துளசியும் இன்னும் திருமணத்திற்கு வந்து சேரவில்லை என்றால் அவள்தான் என்ன செய்வாள்.

ஆம் தன் கனிம்மாவின் கல்யாணத்திற்கு இன்னும் கதிர் வரவில்லை..
தவிர்க்க முடியாத தடுக்க கூடாத ஒரு சந்தர்பத்தில் அவன் மாட்டிக் கொண்டான்..

துளசியிடம் சொன்னது போலவே ஆறு மாதத்தில் திரும்பி வந்து புதிய தொழிலைத் துவங்கியவன் தனக்கிருந்த முன் அனுபவத்தாலும் திறமையாலும் ஒரே ஆண்டில் தனது கம்பெனியை முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டான்.. மேலும் துளசியின் மேலுள்ள காதலாலும் கடைசி செமஸ்டர் வெறும் புரோஜெக்ட் மட்டுமே என்பதாலும் அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னமே திருமணம் செய்து கொண்டான்..

துளசிக்கும் தனது இத்தனை வருட காதல் நிறைவேறியதில் அத்தனை ஆனந்தம்.. அதுவும் நெற்றியில்
குங்குமம், கழுத்தில் தாலிச்சரடோடு அவன் மனைவியாக
உரிமையாக பைக்கில் அவன் பின் அமரந்து கல்லூரிக்கு வருவதை ஏதோ பெரிய விருது கிடைத்ததைப் போல பெருமையாக நினைப்பாள்..
கதிர் மட்டும் என்னவாம்.. திருமணத்திற்கு முன்..திருமணத்திற்கு பின் என அவனது மாற்றங்களைப் பற்றி பெரிய புத்தகமே எழுதலாம் என்ற வகையில் மாறியிருந்தான்..
துளசியை கதிர் கவனித்துக் கொள்ளும் நிலைமாறி அவள் அன்பால் அவனை தன் குழந்தையாக மாற்றிவிட்டாள் துளசி.. தந்தை தாயை இழந்தபின் இளம்வயதிலிருந்தே அவன் தன்னை முதிர்ச்சி பெற்றவனாவே மற்றவர்களிடத்தில் காட்டிக் கொண்டிருக்க, அவனது குறும்புத் தனத்தை, அடம்பிடித்தலை, செல்ல கோபத்தை என அவனது புதிய பரிமாணங்களை வெளிக் கொணர்ந்து விட்டாள் அவனவள்..அவனும் அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாய் அவளது இத்தனை வருட ஏக்கங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றினான்.. நிறைவேற்றிக் கொண்டே இருப்பான்..

அவன் அவளை அத்தோடு மட்டும் நிறுத்தாமல் மேற்படிப்பையும் படிக்க வைத்தான்..
அவள் வழக்கம்போல இதிலும் தங்க பதக்கத்தை வென்று தனது கணவனின் சொல்லினை காப்பாற்றி விட்டாள்..

நாட்கள் அதன்போக்கில் சென்று கொண்டிருக்க துளசியின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது அவளது புராஜெட்.. மனித மலக்கழிவுகளை முழுக்க முழுக்க இயந்திரத்தை வைத்தே மனிதர்களின் உதவியின்றி அப்புறப்படுத்தும் எந்திரத்தையும் அதனைக் கட்டுப்படுத்தும் சாப்ட்வேரையும் குறைந்த செலவில் வடிவமைத்திருந்தாள்.. மார்க்கெட்டில் உள்ள மற்ற எந்திரங்களை விட அது மிகவும் விலை குறைந்தும் இருந்தது..

துளசி திருமணம் ஆன புதிதில் தனது புராஜெக்டிற்கு ஏதேனும் யோசனை சொல்லேன் என நச்சரிக்க கதிரின் சிந்தனையில் உருவானதுதான் இந்த யோசனை..
சிறுவயதில் தனது பள்ளித் தோழியின் தந்தை கழிவுகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடும்போது வெளிப்பட்ட நச்சுவாயுவினால் உயிரிழந்தார்.
அந்த நிகழ்வு அவன் ஆழ்மனதில் பதிந்துவிட, எதற்கெதற்கோ மெசின்கள் தயாரிக்கும்போது நம் நாட்டில் இன்னும் செலவிற்கு பயந்து மனித கழிவுகளை மனிதனை வைத்தே அள்ள வைக்கும் கொடுமையிலிருந்து விடுபடவும் நச்சு வாயுவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் ஒரு வழி கண்டுபிடித்தால் என்ன என அவன் கேட்ட கேள்வியை அடித்தளமாக வைத்து தனது புராஜெக்ட் வழிகாட்டியையும் இன்னும் வேறுத் துறை பேராசிரியர்களையும்
கசக்கிப் பிழிந்து உருவானதுதான் அந்த இயந்திரம்..

கதிரின் தொழில்செல்வாக்கையும் அதனால் உருவான அரசியல் நட்புக்களையும் வைத்து அதனை இனிமேல் நாடெங்கும் பயன்படுத்துவதற்கு அனுமதியும் வாங்கியாகி விட்டது.. உண்மையாகவே ஏழை மக்களிடத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது.. பார்ப்பதற்கு சின்ன விசயம் போல தெரிந்தாலும் அதன் மதிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் தெரியும்..

விண்வெளியில் செலுத்தும் ஏவுகணையும் செயற்கைக் கோள் மட்டுந்தான் கண்டுபிடிப்பா.. சதாராண மனிதனுக்கு உதவும் இந்த இயந்திரமும் அறிவியல் கண்டுபிடிப்பே..
அந்த வகையில்
மத்திய அரசால் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது இந்த வருடம் துளசிக்கு கிடைத்துவிட,
அதனை பெறுவதற்காகத் தான் டெல்லி சென்றிருக்கின்றனர் கதிரும் துளசியும்.. அவனுக்கு பார்வதிக்கு கொடுத்த வாக்கை சிறப்பாக நிறைவேற்றிவிட்ட சந்தோசம் ஒருபக்கம், இன்னும் நான்கு மாதத்தில் தன்னவள் சுமக்கின்ற தன்னுயிர் பூமிக்கு வந்தடைந்திவிடும் பூரிப்பு இன்னொரு பக்கம்..

விருது வழங்கும் விழா முடிந்தவுடன் புருசனும் பொண்டாட்டியும் அவசர அவசரமாக, கனியின் திருமணத்திற்கு கிளம்பி வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பற்றி புரிந்தும்
திட்டிக் கொண்டே இருந்தாள் கனிம்மா..

" எங்கம்மா அப்பவே சொன்னாங்க.. உம்மாமேன் கனிம்மா கனிம்மான்னு உருகுறது எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான்.. கல்யாணம் மட்டும் ஆகட்டும் பொண்டாட்டி தாசனா மாறிடுவானு..அது சரியாத்தான் இருக்கு.. அவ மட்டும் என்னவாம்.என்னவோ அவ மட்டுந்தான் படிக்குறவ மாதிரி என்னை தனியா விட்டுட்டு படிக்க போனவ என்னை மறந்தே போயிட்டா.. இனி அவுங்களோட பேசவே கூடாது" எனத் திட்டிக் கொண்டே இருக்க,
முகூர்த்திற்கு பெண்ணை வரச் சொல்லியும் அழைத்தாயிற்று.. அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை.. இதுவரை இருந்த கோபம் வருத்தமாய் கண்ணீராய் மாறி வெளி வரும் சமயம் கதவை பட்டென்று திறந்து ஒருத்தன் வேகவேகமாக மூச்சுகளை விடும் சத்தம் கேட்டு திரும்ப, கதிர் அவளைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்..
அவளை மணக்கோலத்தில் கண்டதும் அவனுக்குள் அப்படி ஒரு பேரானந்தம்..
கண்கள் கலங்க அவன் அப்படியே நிற்க, அவனை முரைத்தவள் முகத்தை திருப்பிக் கொள்ள,
" கனிம்மா " என்று அவன் அழைத்ததும் இதுவரை கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் வழியத் துவங்கியது.. அவன் அவளை சமாதனம் செய்யவும் இல்லாமல் அவளையே பார்த்திருக்க, தனது மேடிட்ட வயிறைத் தாங்கியபடி வந்த துளசிதான் இருவரையும் அதட்டி சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள்..

பல்லி மிட்டாயாய் இருந்தவள் தாய்மையின் செழுமையால் எடைகூடி சிரித்த முகமாய் நின்றிருந்தவளைப் பார்த்ததும் கனியின் கோபம் காற்றில் பறந்தது.. அவளை ஓடிச் சென்று கட்டிக் கொண்டவள் இருவரின் கையினையும் பிடித்துக் கொண்டே மேடைக்கு வந்தாள்..
ஏழு வருடம் காத்திருந்து தனது காதலியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி மனையாளாக மாற்றிக் கொண்டான் எழில்.. கனியும் எழிலும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே தங்கள் காதலைப் பகிர்ந்து கொண்டிருக்க,
இடப்புறத்தில் செல்வராஜ், சாரதா, அசோக், ஐசு அவர்கள் கையில் இனியனும் இனியாவும் இருக்க,
வலப்பக்கத்தில் கந்தன், தேவி, பார்வதி, கதிர், துளசி,தர்ஷுவின் தந்தை, அபிமன்யூ ,தர்ஷு, அபியின் செல்வங்கள் பிரித்விகாவும் பிரித்விராஜனும் அர்ச்சதை தூவி ஆசி வழங்க கனி-எழில் திருமணம் இனிதே நிறைவுபெற்றது..

அத்துடன் நாமும் இவர்களிடமிருந்து விடைபெறும் தருணமும் ஒருவழியாக வந்தாகிவிட்டது..
நாமும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என மணமக்களை வாழ்த்தி விடைபெறுவோமாக!

💜💜💜சுபம் 💜💜💜

Makkale..epdiyo naduvula pala masangal na kanama poitu thirumbi vanthalum intha kadhaiku thodarnthu support panna unga nalla ullangaluku kodana kodi nandri friends.. Nijama ninga next update eponu kekum pothu tha evlo problems irunthalum ungalukgavachum story complete pannaumnu tha try pannen..
Eee.. Adikadi kanamalum poiten..
But unga supportnala tha successful ah ( intha story success
Ah nu ninga tha solnum ) complete panniten.. ( apro romance illainu nirata per ketinga.. Sathyama naanum try pannen.. But suthama varala.. Pachapullaya mannichukonga)

Oru valiya ennoda rendavathu storyum mudichiten.intha epdisode eh epilogue maari tha irukuthu.. Ungaluku epilogue venumnu thonuchuna sollunga mudinja alavuku sikrama thara try panren..

Romba romba romba nandri makkalee 💞💞💞💞💞💞💞💞💞💞

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro