உறவு 45

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

துளசியின் நினைவுகளுடன் வீட்டிற்கு வந்தவனுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.. பந்தியில் தன்னைப் பற்றி பேசிய வாயாடிக் கிழவி இங்கே வந்தும், துளசியின் உரையாடலை ஒன்றுக்கு இரண்டாக போட்டுவிட்டுச் சென்றதால் இதுவரை தான் மறைத்து வைத்திருந்த தனது காதல் இரகசியம்
அனைவருக்கும் தெரிந்திருந்தது..
கந்தன் அபியின் நிச்சயத்துடன் கதிருக்கும் நிச்சயமாவது நடந்தே ஆக வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்க, அவனோ துளசியின் படிப்பை காரணம் காட்டி முன்னிருத்த, பார்வதியே இதற்கு சம்மதித்து விட்டார் என்று கூறியும் அவன் அதற்கு ஒப்பவில்லை..

ஐசுதான் கடைசி ஆயுதமாக அவனது காலில் நிறைமாத கர்ப்பினி என்றும் பாராது விழுந்து கெஞ்சிக் கேட்க, வேறு வழியில்லாமல் ஒற்றுக் கொண்டான்.. 

அபியிடம் நேராகச் சென்று தனது நிலையை எடுத்துக் கூறி நிச்சயதார்த்தம் மட்டும்தான் தற்போது திருமணம் துளசி படிப்பை முடித்த பிறகுதான் என உறுதி கொடுத்தப் பின் தான் நிம்மதியாக மூச்சே விட்டான்.

நிச்சயத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே என்ற நிலையில்
எழிலும் அசோக்கும் போட்டிப் போட்டுக் கொண்டு நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்யத் துவங்கினர்..
கனிக்குத் தான் கதிரைப் போலவே துளசிக்கு விரைவாக இந்த நிச்சயம் தேவையா என்று தோன்றியது.. ஆனால் கந்தனும் தேவியும் அவனது வயதைக் காரணம் வைத்தே சீக்கிரமாக நடத்தியே ஆக வேண்டும் என உறுதியுடன் இருந்தனர்.

எழிலை ஊரைச் சுற்றி காண்பிக்கிறேன் எனக் கூட்டி வந்த கனி தனது தந்தையின் பழைய டிவிஎஸ் எக்ஸெலில் அவனை பின்னால் அமர வைத்துவிட்டு ஊரையே ஒரு வலம் வந்தாள்.. அந்த வண்டியின் கடமுடா வண்டிச் சத்தத்தையும் விடாது அடிக்கும் அவளது ஹாரனையும் கேட்டதுமே வாசலில் அமர்ந்திருந்த சில வயதான கிழவிகளும், தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறு வண்டுகளும் இருந்த இடம் தெரியாமல் இடத்தைக் காலி செய்ய ஆரம்பித்தனர்..

அவள் பின்னால் அசௌகரியமாக அமர்ந்து வந்து கொண்டிருந்த எழில் கூட தங்களை பூதம் போல் கருதி அனைவரும் தலைதெறிக்க ஓடுவதை புரியாமல் " ஓய் திம்ஷு..என்னடி இது.. இப்படி ஓடறாங்கஎன பயந்தவாறு கேட்கவும்

" ஹஹாஹஹா..பின்ன இந்த ஊரோட
அல்லி ராணினா சும்மாவா.. அதான் இந்த ராஜமரியாதை" என அங்காலாய்க்க, அவனுக்கு அது சரியாகப் படவில்லை..

அவனை கோயிலின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட பழைய தேரின் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றாள்.

" ஓய் திம்ஷு.. என்னடி ஊரச் சுத்தி காமிக்குறேனு..இந்த தேரச் சுத்திக் காட்டுற.. அட்லீஸ்ட் உன் சிறு வண்டு பிரண்ட்ஸயாச்சும் இன்ட்ரோ பண்ணுடி..போரடிக்குது"

" என் பிரண்ட நீங்க பார்த்தது இல்லையா "

" இல்லயே "

" எனக்கிருக்க ஒரே பிரண்ட்டு என் துளசி மட்டுந்தான்..

அதே மாதிரி எனக்கு ரொம்ப பிடிச்ச பிளேஸ் இந்த தேர் முட்டி தான்..இங்க தான் நானும் துளசியும் எப்பவும் ஒன்னா உக்கார்ந்து கதை பேசுவோம்.. இங்க வெயிலே அடிக்காது..மர வீட்டுக்குள்ள இருக்குற எபெக்ட் கிடைக்கும் தெரியுமா.. " என உற்சாகத்துடன் கூற,

" ஏன் இப்படி " என்றான் மொட்டையாக

" ஏன்னா என்ன சொல்ல முடியும் "

" உனக்கு ஏன் பிரெண்ட்ஸ் இல்ல..காலேஜ்ல கூட நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க தான..  "

" அதொரு மொக்க ஸ்டோரி..சொன்னா உங்க கண்ணுக்கு வில்லி மாதிரி தெரிவேன்"

" அட..சொல்லு திம்ஷூ"

" ம்ம்.. எல்லாம் உங்க அண்ணினால தான்"

" அவுங்க என்ன பண்ணாங்க"

" என்ன பண்ணாங்களா.. எல்லார்கிட்டயும் நல்ல பேரை வாங்கி வெச்சிக்கிட்டு எனைய டார்ச்சர் பண்ணா..
என்ன இருந்தாலும் தங்கச்சிய விட ஐசுதான் அழகு..
ஐசுதான் நல்லா படிக்குறா..
அவதான் நல்லவ..
பொறுமைசாலின்னு எனக்கு முன்னாடி பென்ச் மார்க் பிக்ஸ் பண்ணி வெச்சுடுவா..நான் அதை பீட் பண்ண முடியாம திணருவேன்..அதுனால அவ பேரை எடுத்தாலே நான்
புல்லா சைக்கோ ஆகிடுவேன்..
ஸ்கூலயும் அப்படித்தான் என் பிரண்ட்ஸ் கூட அவதான் அழகு..நான் குண்டு பூசணிக்கானு கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க.. அதான் அவள புகழ்ந்த யாரையும் எனக்கு புடிக்காது.. நான் வளர்ந்த பின்னாடி கூட என்னை விட சின்ன வாண்டுகளுக்கு டியுசன் சொல்லித்தரேனு ஓசில சாக்லெட்டும் பிஸ்கட்டும் கொடுத்து அவுங்களையும் கரெக்ட் பண்ணிட்டா.. அதுனாலயே அந்த பூனைக் குட்டிங்களோட சகவாசம் எனக்கு ஆகாது"

" ஏய் திம்ஷு..என்னடி உன்னை ஏஞ்சல்னு நினைச்சா இப்படி டெவில் மாதிரி, எங்க அண்ணி மேல பொறாமை படற"

" ஏங்க.. நீங்க கேட்ட ஒரு காரணத்துக்காக என் மனசுல இருக்குறத எல்லாத்தையும் சொல்லிட்டு இருந்தா நீங்க என்னை
கிண்டல் பண்றீங்க"

" என்னது கிண்டல் பண்றனா..ஏன்டி நிஜமா நீ பேசறதுல எதாச்சும் லாஜிக் இருக்கா.. அண்ணி நல்லா படிச்சாங்கனா அது அவுங்களோட திறமை.. அதுக்கு அவுங்கள குறை சொல்றதுல்ல என்ன நியாயம்.. இப்படி சின்னப் புள்ளைத்தனமா உன்னோட குறை எல்லாத்துக்கும் அவுங்களையே தப்பு சொல்ற..
ஏய் பேச பேச எங்க போற.. திம்ஷு..நில்லுமா"

" கைய விடுங்க.. நீங்க சொன்னதுதான் சரி.எங்கிட்ட தான் எல்லா குறையும் இருக்கு சரியா.. " என்றவள் அவனது கையை உதறி விட்டு அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டே போனாள்..

கடைசில எல்லாரும் மாதிரி நீங்களும் அவளுக்கே சப்போர்ட் பண்றீங்க.. நான் தான் முட்டாள்..பைத்தியம்..கிறுக்கு எல்லாமே..போங்க..என் முகத்துலயே முழிக்காதிங்க "

அவளை பின் தொடர்ந்தவாறே நடந்து வந்தவன் " இப்போ நான் என்ன சொல்லிட்டனு கோவிச்சிட்டு போற.. என்னனு சொன்னாதான தெரியும்" எனக் கேட்டுக் கொண்டே வர,அவள் அப்படியே நின்றாள்.. கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருகியது..

அவள் அழுகையில் பதறி " .திம்ஸு.. நான் தப்பா சொல்லிட்டேன்..உன்மேல எந்த தப்பும் இல்ல..அழுகாத " என சமாதனப்படுத்த

" அப்போ திறமை கம்மியா இருந்தா அவுங்கள ஒதுக்கி வெச்சருனுமாங்க.. அவுங்களால எதுமே சாதிக்க முடியாது..திறமை இருக்கவுங்க தான் நல்லவங்கனு அவுங்கள மட்டுந்தான் பாராட்டுனுமாங்க.. எனக்கு நீங்க கூட துணையா இருக்க மாட்டீங்களா..  நான் என்னோட குடும்பத்துமேல கோபமா இருந்ததே அந்த தப்பாலதான்..
போட்டில ஜெயிச்சிட்டு கப்போட வர அவள பாராட்டி பாயசம் செஞ்சு கொடுக்கறவுங்க ஏற்கனவே தோத்துட்டு சோகமா இருக்கற என்னை
இன்னும் கஷ்டப் படித்தற மாதிரி கண்டுக்க கூட மாட்டாங்க..  எத்தனை நாள் இதே மாதிரி நடந்துருக்கும் தெரியுமா.. நான் சில சமயம் கோபப்பட்டு சண்டை போட்டா கூட அதை கூட புரிஞ்சிக்காம நீங்க சொன்ன மாதிரி தான் நான் அவ மேல பொறாமை படறேன்னு சொல்வாங்க..
அதைக் கேட்கும் போது எவ்ளோ கஷ்டமா இருக்கும் தெரியுமா..அவுங்க என்னை மதிக்காததால நானும் அவுங்கள மதிக்கல அவ்ளோ தான்..
என்கிட்ட இருக்கிற குறைய கூட நிறையா பார்த்தது என் துளசியும் என்னோட மாமா மட்டுந்தான்.. நீங்களும் அவுங்கள மாறி என்னை புரிஞ்சிப்பீங்கனு நான் நினைச்சேன்.. ஆனா உங்களுக்கும் நான் தப்பா தான் தெரியறேன்" என்றவள் குரல் உடைந்திருந்தது..

" நான் உன்னை கிண்டல் பண்ணதான் அப்படி சொன்னேன்..சாரிடா..உன் மனச காயப்படுத்திட்டேன்.. ஏன்  வில்லின்னு பெரிய பேச்சு பேசுற.. உனக்கு திறமை இல்லைனு யார் சொன்னா.. உண்மைய சொல்னும்னா எல்லோரயும் பாசத்தால கட்டிப்போடறயே அதை விட வேற என்ன திறமை வேணும்..
உங்க மாமா சொன்னது போல அவரோட வாழ்க்கையையும் அவ்ளோ ஏன் உன்னை எல்லாத்தலயும் ஜெயிச்ச
அண்ணியோட வாழ்க்கையையும் திருப்பித் தந்தது யாரு.. நீதான..
என் திம்ஷுதான் எப்பவுமே பெஸ்ட்.. அவ்ளோ ஏன் அழகுல கூட நீதான் பர்ஸ்ட்..  " என அவளை சமாதானம் செய்ய சொல்ல, அழகில் கனி ஐசுவின் அருகே வர முடியாது என்பது தெரிந்தும் அவன் பொய் சொல்வது அவளுக்குப் பிடித்திருந்தது..

" போதும்..நான் சமாதனமாகிட்டேன்..வாங்க போலாம் ..லேட்டா போனா எங்கம்மா பாட்டு பாட ஆரம்பிச்சிடுவாங்க"

" அப்போ எம்மேல கோபம் இல்லையே"

" இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்..ஆனா அத அப்போ அப்போ உங்ககிட்ட காமிச்சிக்கிறேன்"

" என் நிலைமை ரொம்ப கஷ்டம் போலயே"

" என்னது "

" அம்மா நான் ஏதோ பேச்சுக்குத் தான் தாயே சொன்னேன்.. உங்கள என் மனைவியா அடைய நான் தான் புண்ணியம் பண்ணிருக்கனும் "

" ம்ம்..அது.. சரி சரி வந்து வண்டியில ஏறுங்க "

"ப்ளீஸ் ப்ளீஷ் கடைசியா ஒரு கேள்வி"

" ம்ச் என்ன? "

" இல்ல..இங்க இருக்கற சின்னப் பசங்கள கூட கடிச்சு வெச்சு பயப்படுத்தறதா கேள்விப் பட்டேன்.."

" அதுக்கு "

" அதுவந்து உங்க அக்காக்கு கூட பாப்பா பொறக்க போதே..அதை ஒன்னும் பண்ண மாட்டல்ல "

அவன் வயிற்றில் ஒரு குத்து குத்தியவள் " என்னங்க என்னைப் பார்த்தா புள்ளை புடிக்கறவ மாறி தெரியுதா." என முரைத்தவள் அவனை வண்டியில் ஏற்றாமலே புறப்பட்டுவிட்டாள்..

தனியாக வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை.. வீட்டின் கொல்லைப் புறத்தில் அமர்ந்து அவனைத் திட்டிக் கொண்டே இருந்தாள்.. அந்த சமயம் தேவி அவளை வாசலிற்கு அழைக்க அங்கே எழிலுடன் ஊரில் கனி சண்டை வளர்த்த பாட்டிகளும் அடித்து வைத்த சிறார்களும் நின்றிருந்தனர்..
அவனை என்ன என்று கேள்வி கேட்டவளிடம் அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் அவளிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி அவளது உரிமையான சண்டைப் பேச்சுக்களை புகழ்ந்துவிட்டே சென்றனர்..
வந்தவர்கள் ஒவ்வொருவரும் அவளுக்கு நியாபகமாக ரோஜா பூ, வீட்டில் செய்த பலகாரம் என ஏதோ ஒன்றை கொடுத்து சமாதானமும் படுத்தினர்..

அதில் ஒரு வாண்டு அவளை குனிய வைத்து " எக்கோவ்..நான் டியூசன் வந்ததே உங்கள சைட் அடிக்கத்தான்...நல்லா கொளுகொளுன்னு நெய் பொம்மை மாதிரி இருக்க உங்க கன்னத்த தொட்டுப் பார்க்கனும்னு ரொம்ப ஆசைக்கா..
உங்க கிட்ட பேசனும்னு தான் உங்கள கேலி செய்வேன்..ஆனா நீங்க உங்க அக்கா கொடுக்குற சாக்கிய மட்டும் புடிங்கிட்டு துரத்தி விட்ரூவிங்க.. சில நாள் வீட்ல இருந்து கூட உங்களுக்காக
தீனிலா எடுத்துட்டு வருவேன் தெரியுமா " என்று சொல்லி அவள் அசந்த நேரத்தில் அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு சிட்டாக பறந்தான் அந்த
நான்காம் வகுப்பு படிக்கும் வாண்டு.. அவள் அதிர்ச்சியாய் கண்களை அகல விரிக்க, எழில் ' அடப்பாவி இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ' என வாயைப் பிளந்தான்..
வந்தவர்கள் அனைவரும் கிளம்பிய பின் கனியும் எழிலும் மட்டும் வாசலிலியே நிற்க,
அவனையே விழி அகற்றாது பார்த்தவள் " நான் அப்போ ஹீரோயின் தான"என சந்தோசமாக கேட்க,
எழில் " இந்த உலகத்துல அவுங்கவுங்க கதைக்கு அவுங்கவுங்க கதைநாயகர்தான்.. அது அவுங்க மனச பொறுத்தது..எனக்கு நான் ஹீரோதான்பா.. அப்போ நீ " என கேள்வியாய் வினவ,
அவனிம் நெருங்கி வந்தவள் அவன் கன்னத்தை மெதுவாக வருடியவாறே

" ஹான் உங்க மனசுக்கு மட்டுமில்ல..என்னோட மனசுக்கும் நீங்கதான் ஹீரோ" என்றவள் அவனது கன்னத்தை வலிக்குமாறு நன்றாக கில்லி வைத்துவிட்டு ஓடி விட்டாள்..

' அடியேய்.உனக்காக அந்த பொக்கை வாய் கிழிவிங்க கிட்டலாம் கால்ல விழுகாத குறையா கெஞ்சி கூத்தாடி கூட்டியாந்தனே என்னை சொல்லனும் ' என வலித்த கன்னத்தை தடவியவாறே அசோக்கிற்கு உதவ சென்றான்..ஆனால் அவனுக்குத் தெரியும் அவன் செய்த செயல் கனிக்கு எவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்திருக்கும் என்று..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

வாசலில்
ஐசு ஏதோ யோசனையுடன் அமர்ந்திருக்க அவளுக்கு பழரசம் கொண்டு வந்த அசோக் அதை அவளிடம் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து,
" என்னாச்சு ஐசு..காலைல இருந்தே ஒரு மாதிரியா இருக்க"

" அப்படிலா ஒன்னு இல்ல "

" எனக்குத் தெரியும்..ஐசு.. நம்ம கல்யாணமும் பெரியவுங்க சம்மதத்தோட நடந்திருந்தா இதுமாதிரி பங்சன்லா வெச்சிருப்பாங்கனுதான ப்பீல் பண்ற.. "

" "

" சாரி ஐசு..எல்லாம் என்னாலதான்.. நான் மட்டும் கொஞ்சம் நல்லவனா இருந்திருந்தா நீ இப்போ கஷ்டப்பட தேவை இல்லல.. நான் மட்டுந்தான் பெரிய இவன்ங்கிற நினைப்புலே இருந்திட்டு இருந்தனால தான் உறவுகளோட அருமையும் விட்டுக் கொடுத்தா கூட சந்தோசம் கிடைக்கும்னு தெரியாம போயிடுச்சு.. எங்கப்பா என்னை கதிர் மாதிரி நல்லவனா இருக்கனும்னு அவனப் பத்தி பெருமையா சொல்றதை எல்லாம் என்னை மட்டந்தட்றதா நினைச்சு கதிருக்கு நிறைய கஷ்டத்த கொடுத்திருக்கேன்.. ஆனா இப்போ அதெல்லாம் நினைக்கறப்ப ரொம்ப குற்ற உணர்வா இருக்கு."

" ஹேய்..என்ன அசோக் நீ..திரும்ப நீ ஆரம்பிச்சிட்டியா..எத்தனை தடவை தான் இதையே சொல்வ.. தப்பு பண்றது மனுச இயல்பு.. நீதான் திருந்திட்டதான.. பழச விடு.. நீ எப்படி இருந்தாலும் என் அசோக் தான்.. கதிா் மாமா விசயத்துல நீ மட்டும் இல்ல நானும்தான் தப்பு பண்ணி இருக்கேன்.. அவர் கல்யாண விசயத்துல நாம பண்ணது தப்புதான்..ஆனா அவரோட காதல் தெரிஞ்சு  நாம ரெண்டு பேரும் காதலிக்கலயே.. விடுடா..எல்லாம் விதி.
அவர் நம்பள
மன்னிச்சிட்டாரு.. அதும் இல்லாம அவரோட லைஃப்ல மூவ் ஆன் ஆயிட்டாரு..அதுபோதும்.. "

" ஆனா "

" ஆன்னாவும் வேணா..ஆவான்னாவும் வேனா.. நான் என் புருசனோட சந்தோசமா தான் இருக்கேன்.. போதுமா.." என சிரிக்க அவனுக்கு அவள் புன்னகையே போதுமானதாக இருந்தது..

" அசோக்"

" சொல்லு ஐசு"

" கதிர் மாமா புதுக் கம்பெனி ஆரம்பிக்க போறார்னு அம்மா சொன்னாங்க. உனக்கு அதுனால எதும்"

" ஹேய்.. இதுல என்ன இருக்குடி..
உண்மையா கதிர் என் இடத்துல இருந்திருந்தா இந்நேரம் நம்ம கம்பெனி இப்போ இருக்குறத விட ரெண்டு மடங்கு முன்னேறி இருக்கும்.. அவனோட திறமை நம்ம கம்பெனிக்கு வேணும்தான்..நான் இல்லைனு சொல்லல..ஆனா அதுக்காக நாம அவர் முன்னேற்றத்த தடுக்க கூடாதுல்ல.. அதான் என்கிட்ட கேட்டப்ப எந்த எதிர்ப்பும் சொல்லல.... என்னடி என்னை இப்படி பார்க்குற"

" இல்ல நம்ப ஆள இப்படி அடுத்தவுங்கள அதும் உனக்கு பிடிக்காத கதிர் மாமாவ பெருமையா பேசறதுன்னு ஆச்சரியமா இருக்கு.. அதான்"

" போடி நான் தான் திருந்திட்டேனு சொல்றேன்..மறுபடியும் என்னை அப்படியே நினைக்கிறியே "

"ஐயோ சாரிடா.. உன்னைய பழச நினைக்கவேனானு சொல்லிட்டு நானே பேசிட்டேன்.. "

" பரவாலை என் ஐசுதான் பேசுனா..அதுல எந்த தப்பும் இல்லை"
என்றவன் அவள் எழுவதற்கு உதவி செய்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

வெள்ளிக்கிழமை முருகன் கோவிலில்
ஊரே மெச்சும்படி இனிமையாக இரு ஜோடிகளுக்கும்   நிச்சயதார்த்தம் நன்முறையில் நடக்கத் துவங்கியது.
பார்வதிக்குத் தான் தனது இரு செல்வங்களுக்கும் ஒரே நாளில் நிச்சயம் என்ற சந்தோசத்தில் மிகுந்த உற்சாசமாக காணப்பட்டார்.

அபியும் தர்ஷுவும் உலகம் மறந்து காதலில் கட்டுண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, இங்கே கதிர்தான் வீராப்பாக துளசியை முரைத்துக் கொண்டிருந்தான்.. துளசியை அவன் எதாவது லெகாங்கா அல்லது சுடிதார் மாதிரி உடையணிந்து வர சொல்லியிருக்க, அவளோ தனது தாயின் பேச்சைக் கேட்டு பட்டுப் புடவையில் வந்திருந்தாள்.

அவள் சராசரி உயரம் இருந்தாலும் அவளது எடையால் ஒட்டடைக் குச்சி போல்தான் காட்சியளித்தாள்.. அவளை விட புடவை கனமோ என்பது போல் அவள் நடக்க முடியாமல் நடந்துவர, அவனுக்கு அவள் இன்னும் சிறுபிள்ளை போல்தான் தோன்றியது..
மனம் கனக்க இந்த ஏற்பாட்டை நிறுத்தி விடலாம் என எண்ணினாலும் துளசியின் முகத்தில் இருக்கும் புன்சிரிப்பைக் கண்ட பிறகு அதனைக் கலைக்கவும் தோன்றவில்லை..

அவன் என்ன சொல்லிவிடுவானோ என்கிற பயத்தில் அவள் தலை நிமிரவே இல்லை.. ஆனால் அதனை அறியாத கனியோ அவள் வெட்கம் கொள்வதாக எண்ணி அவளை இன்னும் தன் சொற்களால் கேலி செய்து அவளை உண்மையாகவே வெட்கப்பட வைத்து விட்டாள்.... அவளுக்கு எப்படியாகினும் தனது தோழியின் சந்தோசமே போதுமானதாக இருந்தது..

அடுத்து அபியிடம் சென்றவள் அவனின் பார்வை சென்ற இடத்தை கவனித்து அவனையும் வாரி அவனிடம் செமத்தையாக அடி வாங்கிக் கொண்ட பின்னர்தான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

அபியும் தர்ஷுவும் யார் என்னக் கூறினாலும் தங்களது தாயையும் தந்தையையுமே முன்னிருத்தி அனைத்து சம்பிராதாயங்களையும் அவர்கள் கைகளாலயே செய்ய வைத்தனர்..தங்களை சீராட்டிப் பாராட்டி வளர்த்தவர்களை சாங்கயம் எனக் கூறி தள்ளி வைப்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை.. பெற்றவர்களை விட தங்கள் பிள்ளைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என எண்ணுபவர் வேறு யாராக இருக்கக் கூடும்..

தர்ஷுவின் தந்தையுமே தான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை தனது மகளுக்கு சரியான ஜோடிதான் என்பதில் சற்று தலை நிமிர்வுடனே நின்றிருந்தார்..
கதிருக்கு கந்தனும் தேவியும் தாய் தந்தை சார்பில் அனைத்தும் செய்ய தயாராக நிற்க, அவனோ சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டவாறே இருந்தான்.. அவன் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்த கந்தன் யாரை தேடுகிறாய் என வினவ, அதைக் கூட கவனிக்காமல்  தேடலை தொடர்ந்த கண்கள் கோவில் தூணில் சாய்ந்து நின்று தன்னையே ஆனந்தக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த கனியிடம் நிலைப் பெற்று நின்றது.. 

அவளை வாவென்று கண்களாலே அழைக்க, மந்திரத்திற்கு உட்பட்டவள் போல ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.. அவள் தலையில் கைவைத்து ஆதரவாய் வருடியவன் அவளை அருகில் நிறுத்திக் கொண்டு
" மாமா உங்களை தடுக்குறேனு நினைக்க வேணாம்.. என்னோட சார்பா 
என்னோட அம்மாவும் அப்பாவுமா கனிம்மாவே தட்டை மாத்தட்டும் மாமா " என்றான் உணர்ச்சிப் பூர்வமாக, கந்தனுக்கு அவனது வார்த்தை தன் மகள் மேல் அவன் கொண்ட பாசத்தைக் காட்ட அவர் தட்டை கனியிடம் கொடுக்க நினைக்க, தேவி " என்னங்க அவன் தான் பைத்தியக்காரனாட்டம் பேசறானா நீங்களும் அவனுக்கு துணையா இருக்கிங்களே.. கனி என்னதான் நம்ப பொண்ணா இருந்தாலும் அவ வாழவே தொடங்கலைங்க.. அவளப் போயி" என இழுக்க,
" அக்கா இந்த உலகத்துல நான் இப்போ மனுசனா உங்க முன்னாடி நிக்கறேனா என் கனிம்மா தான் அதுக்கு காரணம்.. அவள விட நான் நல்லா இருக்கனும்னு நினைக்கற ஜீவன் வேற யாரா இருப்பா.. இது அவள் மேல வெச்சிருக்கிற பாசத்துனால மட்டும் பேசல.. எங்களுக்கு இருக்குற உறவ எல்லோருக்கும் உறுதிப் படுத்தத்தான் சொல்றேன்..  எனக்கும் கனிம்மாவுக்கும் இருக்குற உறவு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இருக்குற உறவு கிடையாது.. எனக்கும் அவளுக்குமான உறவு
தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள
உறவு.. நான் அவள என்னோட தாய் ஸ்தானத்துலதான் வெச்சு பார்க்குறேன்..அவ என்னோட தேவதை..நான் முடிஞ்சு போச்சுனு நினைச்ச என் வாழ்க்கைய மறுபடியும் புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வெச்சு எனக்கு மறு பிறப்பு கொடுத்த என் அம்மா..அவளே என் திருமண வாழ்க்கையையும் அவ கையாலே தொடங்கி வைக்கட்டும் " என்றதும் தேவி கூட அமைதியாகி விட்டார்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரும் கூட அவர்கள் அன்பைக் கண்டு பிரமித்துத்தான் போனார்கள்..
ஆனால் அவர்களைப் பற்றி முன்னரே அறிந்திருந்த குடும்பத்தினருக்கு அது மிகவும் சாதாரணமாகத் தான் இருந்தது..

நிச்சயம் தொடங்கும் நேரத்தில் கதிரின் கவனமின்மையும் கனி ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டதும் ஊர்க்காரர்களுக்கு வாயில் அவலைக் கொடுத்தது போல இருக்க, அவர்கள் வேலையைத் துவங்குவதற்கு முன்னமே கதிரின் விளக்கம் அவர்களின் வாயினை அடைத்தது..

கனி சந்தோசத்துடன் தாம்பூலத் தட்டை பார்வதியின் கைகளில் கொடுத்து மாற்றிக் கொண்டாள்..
நிச்சயம் முடிந்தவுடன் விருந்தினர்கள் சாப்பிட சென்றுவிட அவர்களது குடும்பத்தவர்கள் மட்டும் அங்கிருந்தனர்..

துளசி கடைசியில் அவன் எதாவது சொல்லி நிச்சயத்தை நிறுத்தி விடுவானோ என்கிற பயத்தில் இருந்தவள் அனைத்தும் நல்லபடியாக முடிந்ததில் சற்று நிம்மதிப் பெருமூச்சு ஒன்றினை விட்டாள்.. அவள் செய்கையை கவனித்த கனி மனதுக்குள் சிரித்துக் கொண்டு
" என்ன பார்வதியம்மா.. உங்க பொண்ணுக்கு நல்லது கெட்டது எதும் சொல்லிக் கொடுக்கலயா? " என்று எல்லாம் முடிந்த பிறகும் தன்னால் முடிந்தளவுக்கு கலகத்தை துவக்க ஆரம்பித்தாள்..

தேவி என்ன பேச்சு இது என்று அவளை அதட்ட ஆரம்பிக்க, பார்வதியோ கனியை பற்றி முழுவதுமாக நன்கு உணர்ந்து அவளை ஒரு காலத்தில் மருமகளாக்க கூட நினைத்தவர் அல்லவா.. அவளது குணத்தைப் புரிந்து கொண்டு
" இருங்க தேவி.. என்னோட சம்பந்தியம்மா என்ன சொல்ல வராங்கனு தெரிஞ்சிக்க வேணாமா.. சட்டப்படி அவுங்க தான இப்போதைக்கு என்னோட சம்பந்தி..
நீங்க அவுங்கள திட்டி அவுங்கப் பாட்டுக்கு கோவப்பட்டு அவங்க பையன வெச்சு கல்யாணத்த நிறுத்திட்டா..என் பொண்ணோட வாழ்க்கை என்னாகிறது" என ஏற்ற இறக்கத்தோடு சொல்ல, அவர் புரிதலை மெச்சுதலாக பார்த்த கனி பறக்கும் முத்தத்தை மனதுக்குள் கொடுத்து விட்டு
" என்னங்க மாப்பிள்ளை வீட்டை கலாய்க்கிற மாதிரி பொண்ணு வீட்டுக்காரங்க நடந்துக்கிறீங்க.. ஹான்.." என்றவள் துளசியிடம் பார்வையை திருப்ப, துளசிக்கு உள்ளுக்குள் திக்கென்றானது..

" என்ன மருமகளே.. நிச்சயம் முடிஞ்சதும் உன்னோட மாமியார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்னு தெரியாதா என்ன?
நீ மட்டும் வந்தா பத்தாது உன்னோட
அண்ணனுக்கு கூட இன்னைக்கு தான் நிச்சயம்னு கேள்விப் பட்டேன்.. எனக்கு பெரிய மனசு.. அதுனால அவனையும் கூட்டிட்டு வந்து ஆசிர்வாதம் வாங்கு.. போனாப் போகுதுனு வாழ்த்துறேன் " என்று அவள் அபியையும் வார, அருகிலிருந்த தர்ஷு அவள் சொன்னதெல்லாம் நடப்பது போல கற்பனை செய்தவள்
அபியை பார்த்து சிரித்து விட்டு கனிக்கு ஹைபை கொடுத்தாள்..

அதில் காண்டானவர்கள் அங்கே மூலையில் கிடந்த சாமியார்கள் வைத்திருக்கும் பிரம்பு குச்சிகளை ஆளுக்கொன்றாய் எடுத்து இவர்கள் இருவரையும் துரத்த ஆரம்பித்தனர்..
அவர்களுக்கு இன்றுதான் நிச்சயம் என்று சொன்னால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள்.. அந்தளவுக்கு சிறுபிள்ளை போல ஓடி விளையாடினர்..

பார்வதிதான் முகத்தை தூக்கி வைத்திருந்த தேவியிடம் " விடுங்க தேவி.. இதோ இவ்ளோ சந்தோசத்தோட விளையாடுறாங்களே
இதான் அவுங்க..
அவுங்க அவுங்களா இருந்தாதான் வாழ்க்கை இனிக்கும்.. "என்று அவரை ஆறுதல் படுத்தினார்.

தர்ஷுவும் கனியும் அங்கிருந்த அனைவர் பின்னாடியும் மறைந்து அனைவருக்கும் தங்களால் முடிந்த அடியை வாங்கிக் கொடுத்துவிட்டே ஓய்ந்தனர்.

நிச்சயம் முடிந்து ஊர்க்காரர்கள் அனைவரும் சென்றுவிட, பெரியவர்கள் சிறியவர்களுக்கு தனியே  இடமளித்து விட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்..

கனி எழிலை ஊரைச் சுற்றிக் காண்பிக்க அவனை மீண்டும் அழைத்து சென்றுவிட, ஐசுவும் அசோக்கும் தனியாக ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்து பேசத் துவங்கியிருந்தனர்..

தர்ஷு மாங்காய் பறிக்க வேண்டும் என்று அபியை வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுவிட,கதிரும் துளசியும் தனித்து விடப்பட்டனர்..
துளசி புடவையிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்தாள்...

துளசி என்கிற கதிரின் அழைப்பில் இதுவரை தலை குனிந்து நின்றவள் அவனை நேராகப் பார்க்க, அவனது பார்வையில் என்றும் இல்லாத வகையில் ஒரு உரிமையும் மகிழ்ச்சியும் தெரிந்தது.தனது பள்ளிப் பருவத்தில் தான் ஆசையாக காதல் கொண்ட கனியின் கன்னக்குழி கதிர்மாமா தன் முன்னே அழகாக மந்தகாசப் புன்னகையுடன் நின்றிருந்தான்.

அவனது சந்தோசமான முகமே அவள் நெஞ்சை நிறைக்க, ஆவலுடன் அவனை நோக்கினாள்..

" நான் இன்னும் ரெண்டு நாளுல வேலைக்கு கிளம்பிடுவேன்..முழுசா திரும்பி வர ஆறு மாசமாச்சும் கண்டிப்பா ஆகும்.. அப்டியே திரும்பி வந்தாலும் புதுக் கம்பெனி விசயமா நிறைய அலைய வேண்டியதா இருக்கும்.கண்டிப்பா நான் உனக்கு அடிக்கடி போன் பேச டிரை பண்றேன்." என்றதுமே அவள் முகம் சுருங்கி விட்டது..,

."இதெல்லாம் உனக்கு எதுக்கு சொல்றேனா நீ உன் கூட பேசலை..உனக்காகநேரம் ஒதுக்கலனு  நினைப்பல அதுக்குது தான்.. இப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டாதான் பின்னாடி சந்தோசமா இருக்க முடியும்.. நீ இதை புரிஞ்சிப்பனு எனக்குத் தெரியும்டா..
. படிப்பு விசயத்துல உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்குலா நான் படிப்பாளி இல்லதான்.. இருந்தாலும் சொல்றேன்.நல்லா படி..வேணானு சொல்லல.ஆனா படிப்பு படிப்புன்னு உன் உடம்ப கெடுத்துக்காத.. நல்லா சாப்புடு.. அப்பப்ப ரெஸ்ட் எடுத்துக்கோ.. இன்னும் பல்லி மிட்டாயாவே இருக்காத..அதுக்காக இதை நான் உன்னோட குறையா சொல்லல. இந்த வயசுல தான் பொண்ணுங்க சத்தான உணவஅதிகம் எடுத்துக்கனும்.. சுவர் இருந்ததான் சித்திரம் வரைய முடியும்..
புரியுதா" என்க , அவன் அக்கறைப் பேச்சில் தலை தானாக ஆடியது..

அடுத்து அவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.. அவள் படிப்பில் கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக காதல் பேச்சுகளை தற்போது தள்ளி வைத்திருந்தான்.. ( இதுக்கு முன்னாடி காதல்ல டாக்டர் பட்டம் வாங்குன மாதிரி..தற்போது தள்ளி வைக்குறானாக்கும்)

" அப்போ அண்ணா கல்யாணத்துக்கு வர முடியாதா.. இன்னும் ஒரு மாசந்தான இருக்கு " என அவள் அவனை பார்க்க முடியாது என்கிற எண்ணத்தில்  ஏக்கமாக சொல்ல

அதைப் புரிந்து கொண்டும்
"  தர்ஷுக்கு இதுவரை நான் எதுமே பண்ணதுல்ல.. கண்டிப்பா அவளுக்கு நான் எதாச்சும் செஞ்சே ஆகனும்.. முடிஞ்சளவுக்கு அங்க இருக்குற வேலைய எல்லார்க்கும் பிரிச்சு கொடுத்துட்டு பத்து நாளுக்கு முன்னாடியே  வர டிரை பண்றேன் என் தங்கச்சிக்காக" என்று அவன் பாச மலர் படம் ஓட்ட ஆரம்பித்தான்..

'  உனக்காகவும்னு ஒரு வார்த்தையாச்சும் சொல்றாரா ' என உள்ளுக்குள் புகைந்தவள்
அவள் அவனைத் திட்டி பேச வாயெடுக்கும் முன்னமே அவனருகில் வந்த தர்ஷு " ரொம்ப நன்றிண்ணா " என அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கூற, புன்னகைத்தவன்
"இந்த அண்ணனுக்குப் போய் நன்றி சொல்லுவியா" என செல்லமாக தலையில் தட்ட, அதில் முகம் சுளித்தவள் கதிரைக் கொட்டுவதற்கு அவனது உயரம் தடையாக இருந்ததால் அவன் மூக்கைப் பிடித்து இட வலமாக அவன் தலையை சுற்றி விட்டு அவன் வாயில் மாங்காயினை திணிக்க முயற்சிக்க அவன் அவளிடம்
போக்கு காட்டிக் கொண்டிருந்தான். இருவரும் அந்த தோப்பையே வலம் வர,
அவர்கள் இருவருக்கும் திடீரென கருகிய வாசம் அதிகமடிக்க துவங்கியது..
வாசம் வந்த இடத்தினை நோக்கி திரும்பிப் பார்க்க, அங்கே அவர்கள் ஜோடியான அண்ணனும் தங்கையும்
அவர்களைப் பார்த்து பார்வையால் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தனர்..

அவன் ஊருக்குப் போக போகிறான் என ஏக்கத்தில் அவனுடன் பேச நின்றிருக்க, அவனோ அதனை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் சந்தோசமாக சுற்றித் திறிகிறான் என்பதில் கோபம் கொண்டு துளசி அவனை முரைக்க, தன்னை மரத்தில் ஏற்றிவிட்டு மாயமாய் மறைந்து போன
தர்ஷுவைக் காணாது தேடிக் கொண்டிருந்த அபி தனது தங்கையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை பார்த்து என்னவாக இருக்கும் என நெருங்கி வந்தான். தர்ஷுவும் கதிரும் பாச மழை பொழிந்து கொண்டிருப்பதைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வேண்டுமென்றே முகத்தை கோபமாக வைத்துக் கொண்டான் தன் தங்கைக்காக..

இருவரும் அவர்களைப் பார்த்து பயந்து  நிற்க,கதிர் தர்ஷுவின் காதில்
" தங்காய்" என அழைக்க,
அவளும் அதேபோல்
" சொல்லுங்க அண்ணாய் " என்று இரகசியமாய் கூற,

" எஸ்கேப் ஆகிடு..ஒன்..டூ " என கதிர் எண்ண ஆரம்பித்தான்.., தர்ஷு த்திரி சொல்லுமுன்னரே ஓடத் துவங்கியிருக்க, அய்யோ இவகிட்ட போய் கூட்டு சேர்ந்தோமே என தலையிலடித்துக் கொண்டவன் இருவரிடமும் மாட்டிக் கொண்டான்.

" ஏன்டா . இங்க  எந்தங்கச்சி சோகமா நின்னுட்டு இருக்கும் போது
நீங்க என்னடா படம் ஓட்டிட்டு இருக்கிங்க.. " என கோபமாக மிரட்ட

" என்னடா.. அதிகாரம்லா தூள்
பறக்குது.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட எப்படி பேசனும்னு தெரியாதா" அவனும் அதே தொனியில் பேச

" அடேங்கப்பா.. போடா டேய்.. உன்ற பாசமலர் தங்கச்சிய கட்டிக்க போறவராக்கும் நான்.. அப்போ நாங்களும் மாப்பிள்ளை வீடுதான்.. " என இருவரும் மாப்பிள்ளை கெத்தைக் காட்ட முறுக்கிக் கொண்டு நிற்க, துளசி தான் இவர்கள் போடும் பொய்ச் சண்டையை கண்டு ' ரெண்டு பேரும் ஓரமாய் போயி விளையாடுங்கப்பா ' என்பது போல முகத்தை சுளித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.. அவள் சென்றதும் இருவரும் தோள்மேல் கைப் போட்டுக்கொண்டு  சிரித்தனர்..

" ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா..உன்னை இப்படி பார்க்க.. உங்கோட இப்படி செல்ல சண்டை போட்டு எத்தனை நாளாச்சு .. எங்க அந்தக் குடி பக்கம் போனதுமே திரும்பி பழைய மாறி வர மாட்டியோனு பயந்துட்டேன்.. இப்போ நான் ரொம்ப ஹேப்பி..அதும் என் தங்கச்சியோட காதலையும் ஏத்துக்கிட்ட பாரு.. எனக்கு வேற என்ன வேணும்" என கூறும் போதே சந்தோசத்தில் அவன் கண்கள் மின்னியது..

நண்பனின் உற்சாகம் தனக்கும் தொற்றிக் கொள்ள " நீ சொல்றதும் நிஜம் தான்டா.. அப்போ எனக்கு பெரிய விசயமாத் தெரிஞ்சது..இப்போ ரொம்ப சில்லியா இருக்கு.. அதும் நானே திரும்ப லவ் பண்ணி மேரேஜ் பண்ணிப்பேனு நினைச்சுக் கூட பார்க்கல.. இதுக்கெலாம் என்னைச் சுத்தி இருந்த நீ .. என் கனிம்மா..உன் தங்கச்சியோட அழுத்தமான காதல் எல்லாந்தான் காரணம்.. நீங்கலாம் இல்லைனா இந்நேரம் என் வாழ்க்கை என்னாகியிருக்குமோனு கூட நினைச்சு பார்க்க முடியல..எல்லாம் கனவு மாதிரி இருக்குல்ல..என்னை யாராச்சும் குறை சொன்னா அதை காதுல வாங்காம ஈசியா தூக்கிப் போட்டு போயிட்டே இருப்பேன்..அசோக் விசயத்துல கூட அப்படி தான் இருந்தேன்.. ஆனா எனக்காக உன் தங்கச்சி அந்தம்மாகிட்ட சண்டை போடும் போது ஏன்னே தெரியல எனக்கு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு.. எனக்காக என்னையவே நினைச்சிட்டு ஒருத்தி இருக்கிறப்ப எனக்கும் அவளுக்காகவாது இனி எல்லோர் மாதிரியும் சந்தோசமா வாழனும்னு தோணுதுடா மாப்பிள்ளை..
உங்க அம்மா எந்த நம்பிக்கைல படிக்கிற பொண்ண எனக்கு நிச்சயம் பண்ணாங்களோ அந்த நம்பிக்கைய நான் காப்பாத்தி துளசிய அவளோட கனவு இலட்சியம் எல்லாத்தையும் நிறைவேத்தனும்டா.." என அழகான புன்னகையுடன் கூறினான்..

" ஆமா திடீர்னு என்ன புதுக் கம்பெனி
தொடங்க நினைக்குற..இதுக்கு முன்னாடி அந்த டுபாக்கூர் கம்பெனிய விட நல்ல கம்பெனிலா விலைக்கு வரும் போதெல்லாம்.. இது என் சொந்த உழைப்புல உருவாக்குன என் குழந்தை..அதை விட்டு போக முடியாதுன்னு டயலாக் விடுவ.. இப்போ என்ன? " என தன் மண்டைக்கள் இத்தனை நாள் குடைந்த கேள்வியை அவனிடம் கேட்டான் அபி.

" என்னதான் அசோக் திருந்தனாலும் அன்னைக்கு துளசிய அடிச்ச அடிய என்னால மறக்க முடியல மாப்பிள்ளை.. அவன் மனைவி அவனுக்கு பெருசா தெரியலாம்.. ஆனா அதுக்காக துளசிய
அடிச்சத என்னால ஏத்துக்க முடியல.. அவ என்மேல இருக்க பாசத்தால தான் ஐசுவ அன்னைக்கு திட்டுனா.. ஆனா அப்போ இருந்த சூழ்நிலைல துளசிக்கு நான் நம்பிக்கை தரக் கூடாதுங்கற காரணத்தால எதுவுமே பண்ணல..ஆனா எப்போ துளசிய நான் விரும்ப ஆரம்பிச்சனோ அப்ப இருந்து மனசுக்கு ரொம்ப உறுத்தலா இருந்துச்சு..உன்னையும் துளசியையும் அவமானப் படுத்தனதுனால
அசோக் இப்போ முழுசா மாறியிருந்தாலும் உங்களுக்குள்ள நல்ல அன்டர்ஸ்டேன்டிங் வர மாட்டிங்குதுனு எனக்கும் தெரியும்.. நானும் அங்கேயே அவனுக்கு கீழ வேலை செஞ்சிட்டு இருந்தா என் நண்பனுக்கு என்னடா மரியாதை.. என் நட்பை விட என் அக்கா பொண்ணோட புருசன் எனக்கு முக்கியமில்ல.. எல்லோரும் எல்லார்க்கும் நல்லவனா இருக்க முடியாதுல்ல.. அதான் நாசுக்கா விலகிட்டேன்... மத்தபடி அவன் மேல எனக்கு எந்த விரோதமும் இல்ல.. சொந்தத்துக்குள்ள வேலை செஞ்சா அது சரிபட்டும் வராது மாப்பிள்ளை.. அவுங்களுக்கு
கீழ வேலைப் பாத்துட்டு இருந்தா
நாளைக்கு கனிம்மாவுக்கும் நான் உரிமையா எதும் செய்ய முடியாது.. அங்க சொந்தக் காரன்கிறது விட அவுங்க வொர்க்கர்ங்கிறது தான் பர்ஸ்ட் தோணும்.. இப்படி நிறைய காரணம் சொல்லிட்டே போலாம்.. அதுவுமில்லாம என்னை கேவலமா நினைச்சவுங்க..இவன் எதுக்குமே லாயக்கில்ல என ஏளனமா பேசுனவுங்க முன்ன பெரிய ஆள வரனும்னு ஆசைடா..அப்போதான் துளசி என்மேல வெச்சிருக்க நம்பிக்கை பொய் கிடையாதுன்னு எல்லோருக்கும் தெரியனும்.. நாங்க நல்லா வாழ்றதுதான்டா நாங்க அவுங்களுக்கு திருப்புத் தர நல்ல பதிலடியா இருக்கும்.. "
என்று கூறும்போதே குரல் சற்று கரகரத்தது..

" ஏன்டா எமோசனல் ஆகுற..நீயும் துளசியும் இந்த ஊரே மெச்சும் படி வாழத்தான் போறிங்க.. அப்ப உன்னை கேவலமா பேசுனவங்க எல்லாம் உங்களப் பாத்து அசந்துதான் போவாங்க..நம்பிக்கையோட உன் தோழில ஸ்டார்ட் பண்ணுடா..
நீ முழு மூச்சோடு களத்துல இறங்குனா துளசி படிப்ப முடிக்கறதுக்கும் உன் கம்பெனிய நல்ல நிலைக்கு கொண்டு வரதுக்கும் சரியா இருக்கும்..சரியா "

" சரிதான்டா.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.நீ புது மாப்பிள்ளை மாதிரி என் தங்கச்சியோட சந்தோசமா என்ஜாய் பண்ணு.. இத்தனை வருசம் கழிச்சு கூட தர்ஷுவும் நீயும் இன்னும் அதே காதலோட இருந்ததுனால தான் அவுங்க அப்பா மனசாற பொண்ண கட்டிக் கொடுக்குறாரு.." என அவன் தொடங்கும் போதே

" அதான்ன எங்க சார் இன்னும் அட்வைஸ் மழைய ஸ்டார்ட் பண்ணலனு நினைச்சேன்..நீ தொடங்கிட்ட..போடா போடா..முதல்ல என் தங்கச்சிக்கி்ட்ட எப்படி சிரிச்சு பேசறதுன்னு கத்துக்கோடா" என  ஏளனமாக கூறியவன் கண்களில் தர்ஷு அவள் அப்பாவிடம் வழக்கம் போல எதற்கோ திட்டு வாங்குவது தெரிந்ததும் அவளைக் காப்பாற்ற தானே பலியாடாய் தந்தைக்கும் மகளுக்கும் நடுவே
மாட்டிக் கொள்ள துணிந்தே சென்றுவிட்டான்.கதிரும் இது அடிக்கடி நடப்பதால்  கண்டு கொள்ளாமல் இருந்தான்..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
இஇஇஇஇஇஇஇஇ செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கறவன் மனுசன்..அதை மன்னிக்கறவன் பெரிய மனுசன்..அதுனால எல்லோரும் பெரிய மனசோட மன்னிச்சிருங்க மக்களே.. அடுத்த பதிவும் முடிவுரையும் சீக்கிரமா வந்துடும்.. வழக்கம் போல உங்க ஆதரவ கொடுப்பீங்கனு நம்பறேன்..
  🙋🙋🙋🙋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro