உறவு 28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சுற்றியிருக்கும் அனைவரும் அவனை சிரிக்க வைக்க முயல அவனோ அவர்கள் கூறும் எந்த மொக்கை காமெடிக்கும் செவி மடுக்காமல் முகத்தை சோகமாகவே வைத்திருந்தான்..  அவனை அந்நிலையில் காண சகிக்காத தர்ஷு
அவர்களை கடந்து அவனருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

அவள் வந்ததும் அவர்கள் பேசி சமாதானமாகட்டும் என எண்ணி அவர்கள் இடத்தைக் காலி பண்ண, மெதுவாக பேச்சினைத் துவங்கினாள்.

" அபி "

" "

" அபி "

" "

" ஹேய் மூட்டைப் பூச்சி.. இப்போ பேசறியா இல்லை எங்கிட்ட அடி வாங்கிறியா " என்று அவளை உலுக்க ஆரம்பிக்க அவள் தோளில் சாய்ந்தவன் " சாரிடி.. என்னாலதான நீ இப்படி ஆகிட்ட.. அதான் உன்னை பழைய மாறி பார்க்க முடிலைனு கோபம்... வேற ஒன்னும் இல்ல.. உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டனா.. நீ ரொம்ப காண்டான மாறி தெரிஞ்சுது.. அதான் உன்னை பார்த்தாலே போதும்னு உன் பின்னாடியே ஓடி வந்துட்டேன்.. " என்றதும்
அவள் " ஹூக்கும் " என்று உதட்டைச் சுழிக்க " எத்தனை தடவை சொல்றது இந்த சப்பு கொட்றது.. முகத்தை தூக்கி வெக்கிறது எதுவும் பண்ணாத.. தமிழ்ல எத்தனை வார்த்தைங்க இருக்கு.. அதுல எதாச்சும் சொல்றதுதான " என அவள் என்றும் கூறுவதை போல  இன்று அவன்கூற,

" ஐயகோ தமிழ்புலவரே.. தங்கள் ஆணைப்படியே ஆகட்டும் " என தலைவணங்கியவள் " சரி வா நாம நம்ம பிரண்ட்ஸ்ட போலாம்..அச்சச்சோ உன் ஆளு பிரித்தி வேற வரலியே.. " என யோசிக்க,

" ஓய் ரொம்ப பண்ணாத.. என் ரேன்ஜே வேற. அவளும் அவ ஓட்டை வாயும்.. எனக்கு வாய் அதிகமா பேசற பொண்ணுங்களே பிடிக்காது தெரியுமா " என்று காலரை இழுத்துவிட, அவன் தன்னைத் தான் சொல்கிறான் என்பதை அறிந்தவள் அவனை முறைத்துக் கொண்டே அவர்களிடம் இழுத்துச் சென்றாள்.

அவன் தன் காதலை ஏற்க மாட்டான் எனத் தெரிந்ததால் அவனுக்குப் பிடித்த அவனது சோன்பப்டியாகவே மாறினால் போதும் அவளது காதலியாக வேண்டாம் என்று முடிவெடுத்தவள் அவனுக்காக நடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவள் அவனிடம் ஒதுங்கவில்லை.. அவன்தான் அவளிடம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறான்... அவனது இரகசியத்தை கண்டுபிடிக்கவே அவனுக்குப் பிடித்தவள் போல தைரியமாக மாற ஆரம்பித்தாள்.

தான் தனக்குள்ளே உறைந்து புதுப்பிக்க நினைக்கும் தங்கள் உறவை மேலும் மேலும் பட்டு போனதாய் மாற்றிக்கொண்டிருப்பதை மாற்ற விரும்பியவள் அவனிற்கு பிடித்த பழைய சோன் பப்டியாய் மாற வேண்டும் என்று நினைத்துக்கொண்டே பஸ்ஸின் இருக்கையில் தன் தலையை சாய்த்தாள் .

இரவில் தண்ணீர் தாகம் எடுக்க சட்டென்று கண்விழித்தவள் இருக்கையிலிருந்து எழ எழுந்த வேகத்தில் மீண்டும் சீட்டில் விழுந்தாள் .என்ன என்று திரும்பி பார்க்க அபியோ அவளது ஷாலை தன் ஒற்றைக்கையில் சுற்றிக்கொண்டே இருகைகளையும் குழந்தையை போல் குறுக்கிக்கொண்டு வாயை லேசாய் பிளந்தவாறு  தூங்கிக்கொண்டிருந்தான் .

அவன் உறங்கும் அழகையே கண்ணிமைக்காமல்  பார்த்துக்கொண்டிருந்தவளின் கரங்கள் அனிச்சையாய் அவன் தலை முடியை கோத எழுந்துவிட தன் கையை சிரமப்பட்டு அடக்கியவளின் கண்ணில் பட்டது காற்றில் அசைந்தாடும் அவனது கேசத்தின் உள்ளே மறைந்திருந்த ஒரு சிறு தழும்பு.

அதை பிறந்த குழந்தையை வருடுவதை போல் மிருதுவாய்  வருடியவளின் நினைவலைகள் அந்த தழும்பு ஏற்பட்ட சம்பவம் அழகாய் விரிய அவளது இதழும் புன்னகையில் விரிந்தது "மூட்டைப்பூச்சி "என்று தனக்குள்ளேயே முனங்கியவள் அவனது தலைமுடியை ஒருமுறை லேசாய் வருடிவிட்டு தண்ணீர் தாகம் மறக்க அவன் அருகிலேயே அமர்ந்துகொண்டவள் உறங்கும் அவனையே கண்கொட்டாது பார்த்துக்கொண்டே நித்திராதேவியின் அணைப்பிற்குள் மெல்ல மெல்ல அடங்கினாள்.பலவருடங்களிற்கு பின் நிம்மதியான உறக்கம் அவளை ஆட்கொண்டது .

காலை கதிரவன் மெது மெதுவாய் அந்த ஜன்னலின் வழியே உள்ளே நுழைய கண்ணை கசக்கி கொண்டு எழுந்தவள் கண்ணில் பட்டதோ அவர்களையே ஆஆஆ என்று வாயை பிளந்த படி பார்த்துக்கொண்டிருந்த அவர்களுடன் பணிபுரிபவர்களை தான்

.இவனுங்க என்ன இப்டி பாக்குறானுங்க என்று நினைத்தவள் அப்பொழுதே கவனித்தாள் தாங்கள் இருவரும் உறங்கிக்கிகொண்டிருக்கும் தோரணையை .அவன் மார்பில் அவள் முகத்தை பதித்திருக்க அவனோ ஏதோ தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்குவதை போல் அவளை கட்டிபிடித்திருக்க அவள் போட்டிருந்த ஷால் இருவரையும் கம்பளியாய் போர்த்தி இருந்தது .

அவர்கள் இருந்த நிலையை கண்டு அவள் கன்னத்தில் சற்றே செந்தாமரை  பூவாய் செம்மை நிறம் பூக்க அதில் அபியை தொட்டு எழுப்பியவள் "அபி அபி டேய்ய் மூட்டை பூச்சி எழுந்திரிடா "என்க 

அவனோ "அடேய்ய் கதிர் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடேண்டா என்னைய "என்று அவளை மேலும் இறுக்கமாய் கட்டிபிடித்துக்கொள்ள அவளோ மானத்தை வாங்குறானே என்று தலையில் அடித்தவள் அவன் கையை நறுக்கென்று கிள்ளி வைக்க ஆஆ என்று அலறிக்கொண்டே எழுந்தவன் அப்பொழுதே தான் அவளை பிடித்திருந்த கோலத்தை கவனிக்க அவன் மனதோ "போச்சு போச்சு பக்கம் பக்கமா மனப்பாடம் பண்ணி பேசின டயலாக் எல்லாம் வீணா போச்சு.. மங்கம்மா என்ன பண்ண போறாளோ சேரி சமாளி அபி "என்று நினைத்தவன் ஈஈஈ என்று இளித்தவாறே அவளை நோக்க

 அவளோ அவன் நினைத்ததற்கு மாறாய் சிரித்துக்கொண்டிருந்தவள் மற்றவர்களிடம் திரும்பி "ஹலோ அதான் பாத்து முடுச்சாச்சுல்ல இன்னும் என்ன சிலுக்கு காலுல சுளுக்கு புடுச்சுகிட்டா மாறி இங்கயே பாக்குறீங்க "என்று சிரித்துக்கொண்டே கேட்க அங்கிருந்த பணியாளர்களுக்கோ இது என்ன கனவா இல்லாய் நனவா என்ற நிலை தான் .

அவர்கள் தன்னையே வித்தியாசமாய் பார்ப்பதை உணர்ந்தவள் "ஹலோ மை டியர் நண்பர்களே நா நல்லாருக்கேன்னு தெரியும் அதுக்குன்னு இப்டியாயா என்னையவே பாத்துட்ருப்பீங்க நேக்கு வெக்கம் வருமோன்னோ "என்றவள் தாங்கள் தங்கும் இடம் வந்துவிட்டதை உணர்ந்து "ஒருவழியா வந்து செந்துட்டோம் சோ கைஸ் இந்த மூணு நாளும் ஆடுறோம் கொண்டாட்டத்தை போடுறோம் வாங்க வாங்க lugageah  எடுத்துட்டு வாங்க "என்றுவிட்டு முன்னாடி நடக்க அபியின் இதழ்களில் தனது சோன் பப்டியை மீண்டும் கொண்டதற்கான நிறைவான புன்னகை குடிகொண்டது 

பின் அவர்கள் அனைவரும் தங்கள் luggageai  எடுத்துக்கொண்டு இறங்க அபி அவனது லக்கேஜை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி ஒரு கள்ளப்பார்வை வீசியவன் முன்னே நடக்க தன் luggageay  எடுத்தவள் அவனின் பின்னே நடந்து வந்தவள் திடீரென்று என்ன நினைத்தாளோ அவனிற்கு பிடித்தாற்போல் பழைய சோன்பப்டியை மாற நினைத்தவள் அதன் முதல் படியாக சிறுவயதில் என்றும் அவன் முன்னே செல்கையில் பின்னிருந்து ஓடிப்போய் அவனது தலையில் கொட்டிவிட்டு செல்வதை போல் முன்னே சென்றிருந்தவனிடம் ஓடியவள் அவன் தலையில் கொட்டு வைத்துவிட்டு நாக்கை துருத்தி காட்டிவிட்டு ஓடினாள் 

அவள் கொட்டிய இடத்தை தேய்த்தவன் "ஆஆ ராட்சசி ஆரம்பிச்சுட்டாயா ஆரம்பிச்சுட்டா "என்று அவளை நோக்கி  கதியவனின் வாய் அவ்வாறு கூற அவன் கண்களோ நேர்மாறாய் ஆனந்தத்தை பிரதிபலித்துக்கொண்டிருந்தது

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

கதிரின்
கனிமொழி என்ற வார்த்தையில் உறைந்து நின்றவள் கண்களில் தானாக கண்ணீர் வந்தது...
தான் மாட்டிக் கொண்டதையும் தாண்டி அவனது குரலில் உள்ள கடுமையும் அவன் அழைத்த விதமும் அவளுக்கு பயத்தில் மனதைப் பிழிய, அவன் கண்களை நேராகப் பார்க்கும் தைரியத்தை இழந்து " மாமா " என வாய்க்குள்ளே முனங்கினாள்.

அவளது கண்ணீரைப் பார்த்த அவனால் மேற்கொண்டு அவளைத் திட்ட முடியாமல் " உள்ள போ " என்று சொல்லி  பின்புறம் திரும்பிக் கொண்டான். அவளிடம் தற்போதே பேசியிருந்தால் அவள் சொல்வதை கேட்டிருந்தால் வரப் போகும் துன்பத்தை தவிர்த்திருக்கலாம்.ஆனால்....

அவள் சென்றிருப்பாள் என நினைத்து அவன் திரும்ப அவள் ஓடி வந்து என்றும் போல அவன் தோளினில் சாய்ந்து கொண்டு " நான் ஏதும் தப்பு பண்ணிட்டனா... அப்படி இருந்தா எங்கிட்ட சொல்லு மாமா..நான் பொறுமையா எடுத்துச் சொன்னா கேட்டுப்பேன்.. ஆனா எங்கிட்ட பேசாம இருக்காத.. எனக்கொரு மாதிரி இருக்கு. " என்று அவள் தொண்டை அடைக்க கூற,
அவள் தலையை ஆதரவாக தடவியவன் " உன்மேல இருக்குற நம்பிக்கைய என்னைக்கும் உடைச்சிடாத கனிம்மா.. அதை மட்டும் என்னால தாங்க முடியாது.. நான் என்ன சொல்ல வரேனு உனக்கே புரியும்னு நினைக்கிறேன்.. உங்க அக்கா மாதிரி தைரியமான பொண்ணே இப்போ எப்படி ஏமாந்துட்டு அழுதுகிட்டு இருக்கப்ப, நீ எப்படி இந்தக் கொடூரமான உலகத்துல இருப்ப கண்ணம்மா.. பயமா இருக்கும்மா " என அவனும் அதேக் குரலில் கூறினான்..

" எல்லாமே சரியாகிடும்.. என்னைப் பார்த்து நீ பெருமைதான் படறமாறி இனிமே நடந்துக்குவேன்.. என்னை பண்ணாலும் உங்கிட்ட சொல்லிட்டுதான் செய்வேன் போதுமா.. இப்போ சிரி... " என அவன் கண்ணத்தை கிள்ள அவனும் அவளுக்காக மட்டும் பொய்யாக சிரித்தான்..

அவள் கூறும் வாக்கை நாளையே மீறப் போகிறாள் என்பதை அவளுமே அறிந்திருக்க வாய்ப்பில்லை..

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

கல்லூரி மரத்தடியில் அருகருகே அமர்ந்திருந்தும் எப்படி ஆரம்பிப்பது என புரியாமல் தயங்கிக் கொண்டிருந்தனர் கனியும் எழிலும்..

தனது தந்தையின் பேச்சும் அசோக்கின் நடவடிக்கையையும் நேரில் கண்டவனால் தந்தையின் வார்த்தையயினை மீற முடியவில்லை..  தனது காதலை தானே இன்னும் முழுவமாக அனுபவிப்பதற்கு முன்னால் அதனை மறந்துவிட திம்ஸிடம் எப்படிச் சொல்வது, அவளது காதல் கொண்ட இளமனது அதனைத் தாங்குமா? தன்னை அடியோடு வெறுத்துவிடுவாளா? என்கிற பயத்தோடு மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்..

" திம்ஸு... "

" ஹூம் "

" அது.வந்து நா.ம கொ.ஞ்.ச நாளு.க்கு பிரி.ஞ்சிட.லாமா " எனத் தயங்கியவாரே கேட்க,
முதலில் தானேதும் தவறாக கேட்டுவிட்டேனோ எனப் புாியாமல் விழித்தவள் " புரியல என்ன சொன்னீங்க " என இன்னொரு முறை சொல்ல கேட்க,

கண்களில் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்தியவன் " நாம பிரிஞ்சிடலாமா திம்ஸு.. என்னால உன் பேமிலில்ல சண்டை வேணா... " என்று கூறவும் " சரி பிரிஞ்சிடலாம்.. " என விட்டோத்தியாக கூறினாள்..

" கோபப்படத திம்ஸு "

" நான் உண்மையாவே கோபப்படலைங்க.. இதத்தான் நானும் சொல்லாம்னு நினைச்சேன்.. ஆனா அதெல்லாம் கொஞ்ச நாளுக்குதான்.. அதும் உங்க அண்ணன் ஐசுவோட சேர வரையும்தான்..அதுக்கப்ரோ நம்மள யாரும் குறை சொல்ல மாட்டாங்க..." என பொறுமையாக கூறியவள்
" அடுத்து எம்மாமாவுக்கிட்ட நானே நம்ம விசயத்த சொல்லிட்டா அவரும் ஏத்துப்பாரு.. அதைவிட்டுட்டு என்னை கழட்டி விட டிரைப் பண்ணீங்க கைமாதான்.. " என்று அவனை மிரட்ட ஆரம்பித்தாள்..

" உங்க மாமா என்னை ஏத்துப்பாரா? எனக்கு அவரப் பார்த்தாலே கைகால் எல்லாம் நடுங்குது.. எப்போ பாரு முரைச்சிகிட்டே இருக்காரு..சரியான சிடுமூஞ்சி " என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொல்ல அவன் தலையில் வேகமாக கொட்டியவள்

" எம்மாமா ரொம்ப நல்லவரு.. அவரக் குறை சொல்லாதீங்க..  என்னால தாங்க முடியாது. உங்கண்ணா மட்டும்தான் சிடுமூஞ்சி.. மொதல்ல அவரை நம்ம பிளான் படி மாத்தனும்.. " என்று சொல்லும் போதுதான் தான் எவ்வளவு பெரிய விசயத்தை மறந்துவிட்டோம் என தன்னையே திட்டிக் கொண்டவள் அதை எழிலிடம் கூறலானாள்.

அவர்கள் இருவரும் நேற்று போலவே இன்றும் தங்களது திட்டத்தின்படி அசோக்கின் அலுவலகம் நோக்கி சென்றனர். அதுவும் இன்றோடு அசோக்கை சமாதானம் செய்தபின்பு  இருவரும் பேசக்கூடாது என்று முடிவும் செய்திருந்தனர்.

இதற்கிடையே அவர்கள் தற்போது சிரித்தபடி இருந்த புகைப்படத்தை இரதி அன்று துளசியின் மதிப்பெண்களை அனுப்பியதைப் போலவே கதிருக்கு அனுப்பி வைத்தாள்.. அத்துடன் அன்று எழிலுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த திவ்யாவின் கூற்றையும் இந்த உண்மையெல்லாம் துளசிக்கு தெரியும் என்பதையும் ஆதாரங்களோடு அனுப்பினாள்.. தெரிந்தே தான் துளசியின் காதலுக்கு நல்லது செய்தது போல ஆகிவிட்டது என விரக்தியில் இருந்தவள் கதிரிடம் துளசியை கெட்டவளாக காண்பிக்கவே இந்தத் திட்டம்..

கனி என்னதான் கதிருக்கு ஆறுதல் சொல்லியிருந்தாலும் எங்கே அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்கிற பயத்தில் இருந்த நேரத்தில்தான் சரியாக வந்து சேர்ந்தது இரதியின் பிரம்மாஸ்திரம்.

கனியின் போதாத நேரமோ என்னவோ கதிர் இன்று அசோக்கின் மெயின் பிரான்சிக்கு அலுவலக வேலையாக வந்திருந்தான்.

பாசத்தினை சூழ்ச்சி வெல்லுமா? இல்லை காதல் போதையில் மூழ்கிவிடுமோ ? என்பது யாருக்குத் தெரியும்

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
Hi friends..
Intha udla oru secret iruku.atha  correct ah kandupidinga..elorkum easya tha iurkum..  Athu enna secretnu next epila soldren. Tata
😍😍😍

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro