உறவு 40

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கதிரின் இந்த முடிவுக்கு துளசி என்ன சொல்வாள் என்று பயந்திருக்க, அவளோ சிரித்த முகமாகவே சம்மதித்தாள்.. கனிக்கு கூட அவளது படிப்புக்காகத் தான் தன் மீது கோபம் கொண்டு இந்த முடிவெடுத்திருக்கிறான் என நினைத்திருந்தாள். ஆனால் துளசிக்கு அங்கு கல்லூரியில் நடந்த விசயம் பேராசிரியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை வைத்து நன்றாகவே புரிந்தது..
கதிர் ஒருவேளை தனக்கும் இதேபோல் ஒரு பிரச்சனை வந்துவிடுமோ என்றுதான் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

ஐசு கூட அசோக்கிடம் கதிரை வெளிநாடு அனுப்ப சம்மதிக்க வேண்டாம் என வாதிட்டு பார்த்துவிட்டாள்.. ஆனால் கதிர் தன்னிடம் முதன்முறையாக வேண்டிக் கேட்டதை மறுக்க அவனாலும் முடியவில்லை.. மேலும் அவர்களது நிறுவனத்தை சரியான வகையில் வழிமுறைப்படுத்த கதிரின் உதவி அவனுக்கு உண்மையிலும் தேவைப்பட்டது..

கதிரை வழியனுப்ப அவனது மொத்தக் குடும்பமும் வந்தாலும் அவனது பார்வையும் பேச்சும் எழிலிடமே இருந்தது.. கல்லூரியில் கனியையும் துளசியையும் பார்த்துக் கொள்ள இத்தோடு நூறு முறைக்கும் மேல் சொல்லியிருப்பான்..

கடைசி நேரத்தில் கனி இதுவரை தேக்கிப்பிடித்த அழுகையை அவன் தோளில் சாய்ந்த வண்ணம் ஆரம்பிக்க உள்ளுக்குள் அவன் உடைந்துதான் போனான்.. ஆனால் தன்னை சமன்செய்தவன் அவளை தள்ளி நிறுத்தினான்.. என்ன தான் எழிலுக்கு கனிக்கும் கதிருக்குமான உறவைப் பற்றி தெரிந்திருந்தாலும் அவனைப் போலவே மற்றவர்களும் அவர்களது அன்பின் தூய்மையை புரிந்து கொள்வார்களா? இனி கனியை யாரும் குறை கூறுவதை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருக்கும் சக்தி அவனுக்கில்லை.. அதனால் அவனே அவளை தள்ளி நிறுத்தினான்.. ஆனால் அவள்மீதான பாசத்தை தள்ளி வைக்க முடியுமா அவனால்?

கனி " மாமா.. அடிக்கடி வருவதான " என கீழே குனிந்தவாறே கேட்க,
சிறிதும் யோசிக்காமல் " கண்டிப்பா " என்றான்.. அவள் சந்தோசத்தில் நிஜமா என்பதைப் போல விழி விரித்து
கேட்க, யாருக்கும் கேட்காதவாறு மெல்லிய குரலில் " நீ மட்டும் அந்த 4 அரியரையும் கிளியர் பண்ணு.. அடுத்த நாளே உன் முன்னாடி வந்து நிட்பேன்.. ஆனா அது நடக்காம நான் இந்தியாவுக்கு வரமாட்டேன் " என்றான்..

அவளுக்கும் அவன் பேசப் பேச கோபம் வந்தது
" நீ ஒன்னும் வரவே வேணாம்.. அங்கயே இரு.. 3 மாசத்துக்கு ஒருதடவை நானே வந்து உன்னைப் பார்த்துக்கறேன்.." என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அவனும் ' பேச்சுக்காச்சும் சரின்னு சொல்றாளா " என மனதில் திட்டிக் கொண்டே அவளைப் போலவே கோபம் கொண்டு அபியிடம் பேச சென்றுவிட்டான்..

அபியின் அருகே நின்றிருந்தாலும்
துளசியிடம் எந்த உரிமையில் அவன் பேசுவான்..பார்வதி தன் மகள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தான் சிதைக்க கூடாது என நினைத்தவன் அவளிடம் தன் பார்வையை கூட செலுத்தவில்லை.. ஆனால் மனதில் பாரம் கூடியதைப் போல உணர்ந்தான்..

தன் மண்ணின் மீது மாறாத பற்றுக் கொண்டவன், அயல்நாட்டின் பெரிய நிறுவனங்களிலிருந்து வந்த அழைப்பைக் கூட மறுத்திருந்தான்.. எனினும் தற்போது சந்தர்ப்ப வசத்தால் வேறு வழியில்லாமல் தானே நாடி செல்லும் தன் நிலையை நொந்து கொண்டே விமானத்தில் ஏறினான்..

விமானத்தில் இருக்கையில் அமர்ந்தவனது கன்னத்திலும் கண்ணீர் கோடுகள். ஆனால் கண்ணீரைத் துடைக்க அவனுக்குத் தோன்றவில்லை.அங்கே கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் இப்போது தயவு தாட்சண்யமின்றி வெளியேறியது. தான் இல்லாத சூழலில் தங்கள் குடும்பத்தினர் யாருக்கும் எந்த தீங்கும் நேராமல் இருக்க கடவுளை வேண்டிக் கொண்டவன் தனது வலப்புறம் திரும்ப அங்கே கண்கள் சிவந்தவாறு எதையோ வெறித்த வண்ணம் அமர்ந்திருந்த சியாமளாவைக் கண்டான்..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
அசோக் தனக்காக ஏற்பாடு செய்திருந்த பிளாட்டிற்கு வந்தவன் தனது உடமைகளை வெளியே எடுத்து வைக்க ஆரம்பித்தான்.. அவனுக்காக ஒவ்வொருவரும் அவர்களது நினைவாக பரிசுப் பொருளை அளித்திருந்தனர்..
கனி கைக்கடிகாரம் ஒன்றினை பரிசளித்திருந்தாள்.. அதில் அலாரமும் வைக்கலாம்.. அதனை ஆன் செய்தால்
' மாமா.. மாமா.. மாமா ' என கனி கத்தி அழைக்குமாறு குரலை பதிவு செய்திருந்தாள்.. அவளை எண்ணி சிரித்துக் கொண்டவன் அடுத்து துளசியின் பரிசினைப் பிரிக்க அதில்
அவளே பின்னிய கம்பளியை அளித்திருக்க,  குளிருக்கு அதனை உடுத்திக் கொண்டவன் அதனை ஆசையாக தடவிப் பார்த்தான்..

அதன் பாக்கெட்டில் ஏதோ ஒன்று உறுத்துவதைப் போலிருக்க  அதை எடுத்துப் பார்க்க சிறு காகிதம் ஒன்று இருந்தது..

வணக்கம் கனியோட கதிர் மாமா..

நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கிங்க.. நாம பாவப்பட்டுதான அவளுக்கு ஓகே சொன்னோம்.. அதனால என்ன செஞ்சாலும் தலை ஆட்டிடுவான்னு தப்பா நினைக்காதீங்க.. இனிமே இந்த மாறி முடிவெடுத்துப் பாருங்க.. அப்போ தெரியும் இந்த துளசி யாருன்னு..
நீங்க கேட்கலாம் நீ சரின்னு தான் அப்போ சொன்னேன்.. எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டு போகவான்னு கேட்டா வேற என்ன சொல்வாங்களாம்..
யாரக் கேட்டு இந்த முடிவெடுத்தீங்க..கேட்க ஆளில்லன்னுதான..ஆனா நான் இனி கேட்பேன்..
நான் உங்க மேல கோபமா இருக்கேன்..அதான் உங்க கிட்ட பேச எந்த முயற்சியும் எடுக்கல.

.ஒரு பிரச்சனைனா உடனே ஊர விட்டு ஓடிறனுமா.. நின்னு சால்வ் பண்ண தெரியாதா.. ஊர் உலகம் ஆயிரந்தான் பேசும்.. அதுக்காக நாம அடுத்தவுங்களுக்கு பயந்து வாழநினைச்சோம்னா கடைசில உயிர் இல்லா ஜடமாத்தான் வாழனும்..
சரி இதெல்லாம் இப்போ சொல்லி என்ன பிரயோஜனம்.. அதான் ஊரை விட்டு ஓடிட்டீங்களே..  உங்க கனிம்மாவ பத்திரமா பாத்துக்கறோம். நீங்க பயப்படாம இருங்க.. அப்ரோ எங்க படிப்பு முடியவரைக்கும் அங்க தான் இருப்பீங்கனு முடிவு பண்ணிருக்கிங்கல்ல.. அதை மட்டும் முடிஞ்சா  மாத்திக்க டிரைப் பண்ணுங்க.. பத்திரமா இருங்க.. ஆனா இங்க சியாமளா மாறி அங்க எந்த வெள்ளக்காரிய பிரண்ட் புடுச்சீங்கனு தெரிஞ்சது அவ்ளோதான் பார்த்துக்கோங்க.. டாடா

துளசியின் கடித்தத்தை படித்தவனுக்கு அவள் தன்மேல் கோபமாக உள்ளது புரிந்தது.. ஆனால் அந்தக் கடிதத்தில் ஆங்காங்கே சிந்திய கண்ணீர்த் துளியின் திட்டுக்கள் அவள் அழுதிருக்கிறாள் என்பதை உணர்த்தியது..
அவள் தான் வருந்தக்கூடாது எனத்தான் தன் சோகத்தை மறைத்திருக்கிறாள் என்பதும் புரிந்தது..

அவளது எண்ணிற்கு அழைக்க அது தொடர்பு எல்லைக்கு வெளியே என்று கூறியது.அவனுக்கு அவளை அப்போதே பார்த்துவிட வேண்டும் என ஆவல் தோன்றியது..  ஆனால் நேரில் சென்று பார்க்க முடியாதே..
இருந்தும்  அபியின் எண்ணிற்கு அழைத்து அவளிடம் கொடுக்கச் சொல்ல, " அண்ணா.. அவுங்க மூனு வருசம் கழிச்சு வரும்போதே நேர்ல பேசிக்கிறேன்னு சொல்லிடு" என அபியிடம் அவள் கூறியது மட்டுமே கேட்டது.. அணைப்பைத் துண்டித்தவனுக்கு அவள் பேச மாட்டேன் என்று கூறியது கோபத்தை வரவைத்திருக்க வேண்டும்..ஆனால் அவளிடம் கோபம் கொள்ள அவனால் முடியவில்லை.. அவளைச் சந்தித்து ஏழு மணி நேரம்தான் ஆனது...ஆனால் அதனையே அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.. இன்னும் அவளை நேரில் காண மூன்று வருடங்கள் காத்திருக்க, அவள் தாங்குவாள்..ஆனால் அவன் தாங்குவானா என்றுதான் தெரியவில்லை..

ஐசுவை காதலிக்கும் போது கூட பிரிவின் வலியை இவ்வளவு உணரவில்லை.. காதல் ஜோடிகளை விட, ஒருதலைக் காதலர்களுக்குத் தான் காதலின் அருமை முழுமையாகத் தெரியும்..அதனால்தான் அந்த வலியை துளசிக்கு தர விருப்பமின்றி காதலை ஏற்றுக் கொள்வதாக கூறினான்.. ஆனால் இன்று அவள் காதலினால் இவனும் காதலிக்க ஆரம்பித்திருந்தான் அவள் மனதை.. காதலின் இந்த செல்ல அவஸ்தையை அவனும் உணர ஆரம்பித்தான்.

இந்தப் பிரிவு கூட அவர்களின் காதலை அதிகப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்..

இங்கு துளசியோ அதைவிட பரிதாபமாக இருந்தாள்.. தங்களால்தான் அவனுக்கு பிடிக்காத இந்தப் பயணத்திற்கு சென்றிருக்கிறான் என்பதால் தன் காதலால்தானே அவனுக்கு இந்த நிலைமை என தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள அவனுடன் பேசுவதை தவிர்த்தாள்.. எங்கு அவன் குரலை கேட்டால் வெடித்துக் கதறி விடுவோமோ என்கிற பயம் வேறு.. நாட்கள் சீக்கிரம் கடந்து போக வேண்டுமென கடவுளிடம் பிராத்தனையை வைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை..
.
.
.
.
.
கல்லூரியில் எழிலும் தேவாவும் கனி மற்றும் துளசிக்கு துணையாக இருந்தனர்..அதேசமயம் ஒரு கோட்டோடு தங்களின் எல்லைகளை நிறுத்திக் கொண்டனர்.
கனி என்னதான் கதிரிடம் விளையாட்டாக சொன்னாலும் படிப்பில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருந்தாள்.. என்றும் வகுப்பில் தூங்கி வழிபவள் இப்போதெல்லாம் தனக்கு வரும் சின்னச் சின்ன சந்தேகங்களை கூட விட்டு வைக்காமல் அப்பொழுதே பேராசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்ற பின்னரே ஓய்கிறாள்... தனக்கு வராத கணிதத்தைக் கூட விட்டுவைக்கவில்லை..ஒரு முறைக்கு நான்கு முறை பார்க்காமல் எழுதிப் பார்த்தப் பின்னரே தேர்வுக்குச் செல்வாள்.. தன்னுடைய விளையாட்டுத் தனத்தையும் குறைத்துவிட்டு வீட்டிலும் புத்தகமும் கையுமாகவே இருந்தாள்..
கந்தனும் தேவியுமே இது தங்கள் மகள் தானா என வியந்து போயினர்.
எழிலிடம் கூட பேசுவதைக் குறைத்துக் கொண்டாள்..
திடிரென்று விழுந்து விழுந்து படிப்பதால் என்னவோ உணவுக்கு கூட அதிக முக்கயத்துவம் கொடுப்பதில்லை.. கதிரை வரும் செமஸ்டரில் வர வைத்து விட வேண்டுமென்று முழு மூச்சுடன் களத்தில் இறங்கினாள்..
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

அபி படித்து தேர்வெழுதி தேசிய வங்கியில் துணைநிலை மேலாளர் பதவியை வாங்கிவிட்டான்.. அதனால் தர்ஷுவின் தந்தைக்கு ஏக மகிழ்ச்சி..பார்வதிக்கும் தன்
மகன் தன்னை தலைநிமிரச் செய்துவிட்டான் என பெருமிதம் கொண்டார்.
சந்தோசமாக திருமண தேதி குறிக்கலாம் என கூறியவர்களிடம் தர்ஷூ எப்போது வேலை வாங்குகிறாளோ அப்போதுதான் தங்கள் திருமணம் என்ற குண்டைத் தூக்கிப் போட்டான்..
அது நடக்காத விசயம் என பெற்றவர்கள் மறுக்க, அபியோ அவள்மேல் தனக்கு நம்பிக்கை உள்ளது எனக் கூறி மறுத்துவிட்டான்..

அவனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் அவளது முயற்சிகளை.. என்னதான் வாய் நிறைய கதை பேசினாலும் படிக்கும் நேரத்தில் அவள் அமைதியாக கண்ணும் கருத்துமாகத் தான் படிப்பாள்.. அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளித்து விடுவாள்.. ஆனால் பரிட்சையில் எப்படி கோட்டை விடுகிறாள் என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை..
ஆனால் என்றாவது ஒருநாள் அவள் தேர்வடைவாள் என்பதில் உறுதியுடன் இருந்தான்..

கதிர் வெளிநாடு சென்று இன்றோடு நான்கு மாதங்களாகியது..
கனியின்  தேர்வு முடிந்து முடிவுக்காக பயத்துடன்  காத்திருந்தாள்..சென்ற முறையும் ஐசு மற்றும் துளசியின் முயற்சியால் அவள் ஓரளவுக்கு  நன்றாகத் தான் எழுதியிருந்தாள்..ஆனால் எப்படி 4 அரியர் வைத்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. கதிர் வெளிநாடு செல்லும் அமளி துமிளியில் அவள் மறுமதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கவில்லை..ஒருவேளை அவள் அதை முன்னவே செய்திருந்தாலோ இந்த முறையும் அவள் அதே தவறை செய்திருக்க மாட்டாளே என்னவோ..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro