பகுதி 21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


ஏய் என்னடி இது Table முழுக்க ஒரே குப்பையா இருக்கு?

அத பாத்தா ஒனக்கு குப்ப மாதிரி தெரியுதா ? எல்லாம் Applications, job க்கு Apply பண்லாம்னு இருக்கேன்.

ம்ம் நல்ல விஷயமாச்சே, But அதுக்கெதுக்கு Application லாம் போட்டுக்கிட்டு? பேசாம என் Office க்கு வா.

ஹும் வீட்ல தான் உன் மூஞ்சிய பாத்துட்டு இருக்கேன். வேலைக்கு போயும் அத தான் பண்ணனுமா? என்னால முடியாது.

ஓஹ் அப்ப Madam க்கு இந்த மூஞ்சிய பாக்குறது அவ்ளோ கஷ்டமா இருக்கு.

ஹஹா அதெல்லாம் இல்ல, worry பண்ணிக்காத. நீ ரொம்ப Cute ஆ தான் இருக்க. Degree முடிச்சதும் எங்க ஊர் Schoolல கொஞ்ச நாள் Work பண்ணேன். எனக்கு குட்டிப் பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்குறது ரொம்ப புடிச்சிருக்கு. அதான் இங்கையும் எதாவது School லயே Join பண்ணலாம்னு ...

"ம்ம் But இது சென்னை, உங்க Village மாதிரி இல்ல. இங்க குட்டீஸ் எல்லாம் செம்ம Sharp ஆஹ் இருப்பாங்க. So கொஞ்சம் கவனமா இருங்க டீச்சர் Madam. " அருண் கண்களை அகல விரித்து அவளுக்கு எச்சரிக்கை செய்ய, "Ok sir , நான் கவனமா இருக்கேன் " இவளும் குழந்தை போல் தலை ஆட்டினாள்.


அந்த Weekend ஒரு Outing Plan செய்தார்கள் அருணும் விக்கியும் . அனு தாத்தாவிடம் கெஞ்சிக் கூத்தாடியும் " நீங்க வயசுப் பசங்க, போய் Enjoy பண்ணிட்டு வாங்க. நான் அங்க வந்து என்ன பண்ணப் போறேன் " என்று மறுத்து விட்டார் தாத்தா.

"அப்பாடா, நான் கூட ரொம்ப பயந்துட்டேன். நா Romantic ஆ ஒரு Trip plan பண்ணா இந்த தத்தி தாத்தாவ கூப்டு அடம் புடிக்குது. நல்ல வேல அவரே வர மாட்டேன்னு சொல்லிட்டாரு." அனு இல்லாத நேரம் பார்த்து அருணிடம் ரகசியமாய் சொன்னான் விக்கி.

"Long drive, அப்டியே போய் எறங்கினா அழகான Beach, அதுக்கு பக்கத்துலயே ஒரு Resort, Candle light dinner ... " விக்கி சொல்லி முடிக்க முன்னமே போதும் போதும் என்று அவனை நிறுத்தினான் அருண்.

இந்த Romance பண்ற வேலையெல்லாம் நீயும் சிந்துவும் தனியா போறப்போ நடத்திக்கோ. இங்க நான், அனு எல்லாம் இருக்கோம்.

"ஆமாமா, நீ Love Failure ஆகிட்டு எங்களையும் Romance பண்ண விடாதே. " அருணுக்கு கேட்காமல் முணுமுணுத்தான் விக்னேஷ்.

எதாவது சொன்னியா?

இல்லையே ..


திட்டமிட்ட படியே நால்வரும் கிளம்பினார்கள். கடற்கரையை அடைந்ததுமே அனுவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கடலை நோக்கி ஓடினாள் சிந்து. இருவரும் உற்சாகமாய் கால் நனைத்து விளையாடத் தொடங்கினார்கள்.

அருண், விக்கி இருவரும் காரை Park செய்து விட்டு அங்கே போன பின்னும் இருவரும் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை பெண்கள் இருவரும். இதில் அருணை விட விக்கியின் நிலை தான் பரிதாபமாய் இருந்தது. விக்கி Romantic outing பற்றி கூறியது ஞாபகத்துக்கு வரவே வேண்டுமென்றே அவனைப் பார்த்து நக்கலாய் சிரித்தான்.

அதில் கடுப்பானவன் அங்கே அனுவும் சிந்துவும் கட்டிய மணல் வீட்டுக்கு ஒரு உதை விட்டான். அவர்கள் இருவரும் கொலைவெறியோடு அவனைத் துரத்த, அவனை காப்பாற்றப் போன அப்பாவி அருணையும் சேர்த்து கடலில் தள்ளிவிட்டார்கள். முழுமையாய் நனைந்திருந்த அருண் அனுவை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தண்ணீரில் போட்டான். அங்கே இன்னொரு புறம் விக்கி சிந்துவை துரத்த, அவளோ அவனுக்கு பிடி கொடுக்காமல் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தாள்.

விளையாட்டும், குதூகலமுமாய் அவர்கள் எதிர்பார்த்ததை விட ஒரு மடங்கு அதிகமாகவே Enjoy செய்தார்கள் அன்றைய தினம்.




Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro