பகுதி 20

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அடுத்த நாள் காலை அனு Unpack பண்ணும் வேலையில் Busy ஆக இருக்க, அவள் துணிகளை அடுக்க Cupboard இல் இடம் ஒதுக்கிக் கொண்டிருந்தான்.

என் Dress எல்லாம் அந்த பக்கம் அடுக்கிட்டேன். நீ உன் thingsலாம் இங்க வெச்சிக்கோ.

அவளிடம் பதிலேதும் இல்லாது போகவே அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான்.

தன் பெற்றொரின் புகைப்படத்தைப் பார்த்து மௌனமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.

சிறு வயதிலேயே தன் அம்மா அப்பாவை பறிகொடுத்த அருணுக்கு அதன் வலி நன்றாவே தெரியும்.

Lifeல நமக்கு எல்லாமே இருந்தாலும், Parents இல்லாம போய்ட்டா அந்த Feel எப்டி இருக்கும்னு எனக்கும் தெரியும் அனு. ஆனா life long இப்டியேஇருக்க முடியாது. இதுலருந்து நீ கொஞ்சம் கொஞ்சமா வெளில வரணும். எதுக்கும் அவசரம் இல்ல. Time எடுத்துக்கோ. ஒனக்கு புடிச்ச மாதிரி உன் Lifeஅ அமச்சிக்கோ. And உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம். அத மறந்துடாத.

அவன் சொன்னதற்கு மௌனமாய் தலையாட்டினாள் அவள். நிலைமையை சுமுகமாக்க எண்ணி அவளை சமையலறைக்குக் கூட்டிப் போய் சமையல் கார அம்மாவிடம் நிறுத்தினான்.

அம்மா இன்னைல இருந்து அனுவும் சேந்து சமைப்பா, அவளுக்கு ஏதாச்சும் தெரியலைனா சொல்லிக் குடுங்க சரியா.

அதுக்கு என்னய்யா, நா பாத்து சொல்லிக் குடுக்குறேன்.

அடுத்தடுத்த நாட்களில் சமையல் முதல் வீட்டு நிர்வாகம் வரை எல்லாவற்றிலும் அனுவின் பங்கு தான் அதிகமாக இருந்தது.

சிறு வயது முதலே அருண் மற்றும் தாத்தாவிடம் நெருங்கிப் பழகியவளுக்கு அவ்வீட்டில் ஒன்றிப் போவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்கவில்லை.



அருண் Lawyer பாக்க போக நானும் வரனுமா ?

காலையில் Office போகத் தயாராகிக் கொண்டிருந்தவனை பார்த்து கேட்டாள்.

Lawyer ஆஹ், எதுக்கு ?

"இல்ல ... நாம Divorce பண்ணனும்ல. " Coffee குடித்துக் கொண்டே அப்பாவியாய் கேட்டாள்.

"கல்யாணம் பண்ணி 5 நாள்ளெல்லாம் Divorce தர மாட்டாங்க அனு. " சிரித்துக் கொண்டே அவன் பதிலளித்தான்.

அது சரி ஸ்வேதா Marriage முடிஞ்சி தானே Divorce பண்றதுன்னு பேசினோம். அந்த Time க்கு பண்ணிக்கலாம். Mutual divorce ரொம்ப Late பண்ணாம கெடச்சிடும்.

எனக்கு No problem . நீ தான் ரொம்ப நாளைக்கி என் தொல்லையெல்லாம் பொறுத்துக்கனும்.

நீ தொல்ல பண்றது எனக்கென்ன புதுசா? அத தான் 8 வயசுல இருந்து அனுபவிக்கிறேனே. சரி வா சாப்ட போலாம்.

அவளையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கினான். அங்கே இவர்கள் வரும் வரை காத்திருந்தார் தாத்தா.

நான் தான் உங்களுக்கு அப்பவே சாப்பிட சொன்னேன்ல. பாரு அருண் Morning Tea, coffee எதுவும் குடிக்க மாட்டாரு. அப்ப Breakfast கொஞ்சம் Early ஆஹ் சாப்புடனும்ல. சொன்னா கேக்கவே மாட்டேங்குறாரு. வர வர ரொம்ப கெட்ட பையன் ஆகிட்டீங்க தாத்தா!!

ஆமா தாத்தா பையன் ஆகுற Magic எல்லாம் இந்த வீட்ல தான் நடக்கும்.

"டேய், நா Serious ஆஹ் பேசிட்டு இருக்கேன், நீ என்ன கிண்டல் பண்றியா ??!! பாருங்க தாத்தா இவன் எப்பவுமே இப்டி தான். " அவ்வளவு நேரம் தாத்தாவை திட்டியவள் இப்போது அவரிடமே உதவி கேட்டாள்.

"அருண் நீ என்ன, என் பொண்ண கிண்டல் பண்ற "அருண் எதிர்பார்த்தது போலவே அனுவுக்கு Support பண்ணினார் தாத்தா.

"I'm பாவம். ரெண்டு பேரும் தயவு செஞ்சி என்ன சாப்பிட விட்றீங்களா" அருண் அழாக்குறையாக கேட்க சிரித்துக் கொண்டே இருவருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தாள் அனு.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro