10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சங்கீதாவின் வீட்டிற்கு 15 நிமிடம் முன்பாகவே வந்துவிட்டனர் ப்ரியாவும் அர்விந்தும். இவர்களை வரவேற்க சென்ற சங்கீதாவுக்கு ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம்.ப்ரியாவும் நிஷாவும் சொல்லி வெச்சது போல ஒரே கலரில் டிறஸ் போட்டிருக்க அர்விந்தும் ப்ரியாவின் சாரிக்கு மேட்ச்சாக டிசர்ட் போட்டிருந்தது சும்மா இருந்த வாய்க்கு ஸ்வீட்ஸ் கிடைத்தது போல் ஆகிவிட்டது.

"என்ன தம்பி குடும்பமா வந்திருக்கீங்க போல" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக சங்கீதா கூற
அதை கண்ட ப்ரியா "என்னடி அவரு கிட்ட ரகசியம். காது கிட்ட போய் முனு முனுக்குற" என்றதற்கு

உடனே அர்விந்த் "அதெல்லாம் ஒன்னுமில்லை .இந்த லூசு சும்மா உளருது" என்றான்.

ஒஹ்ஹ் நான் உளர்ரனா.இன்னைக்கு நீ செத்தடி மாப்பு என்று மனதுக்குள் என்னியவள் "ஒன்னுமில்லடி இன்னும் டைம் இருக்கே,போகப் போக உனக்கே தெரிய வரும்." என்று அர்விந்தை பார்த்துக்கொண்டே கூறினால்.அர்விந்தோ கண்களாம் அவளிடம் கெஞ்சியவனாக சங்கீதாவை பார்க்க அவளோ ஏதுமே தெரியாதவள் போல் சென்றால்.

எல்லோரும் வீட்டிற்கு வந்திருக்க பெண்களை சங்கீதாவும் ஆண்களை சங்கீதாவின் கணவன் சுரேசும் வரவேற்று இரவு விருந்தை ஆரம்பித்தனர்.

உணவு உண்ணும் போது கையில் நிஷாவை வைத்துக்கொண்டு எப்படி உண்ணுவது என்று தடுமாறியவனை கண்ட ரேனு "ஹேய் அர்விந்த் .பாப்பா பேரு என்ன?" என்றால்.

"ஹாய் ரேனு.என் மகளோட பேரு நிஷா என்றான்."

"நைஸ் நேம்.நிஷாவ என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போய் சாப்டுங்க "என்றவலை

"பரவாயில்லை.நான் சமாளித்துக்கொள்வேன்" என்றான்.

"இட்ஸ் ஒக்கே நீங்க கொடுங்க நான் பார்த்துக்கிரன்" என்றாள் ரேனு.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த ப்ரியா அர்விந்திடம் வந்து "ஹேய் அர்விந்த் எனக்கு இப்போ பசி இல்ல.நீங்க வாங்கி கொடுத்த மூன்று ஐஸ்கிறீமும் என்ன சாப்ட விடமாட்டேங்குது.நீங்க நிஷாவ கொடுத்துட்டு போய் சாப்டுங்க" என்றவளிடம் நிஷாவை கொடுத்துவிட்டு சாப்பாட்டின் பக்கம் சென்றவனை ரேனு

"ஏன் உங்க பொண்ணை நாங்கலாம் பார்த்துக்க மாட்டமா.ப்ரியா கேட்டதும் தூக்கி கொடுத்துட்டீங்க" என்று ரேனு ஏக்கமாக கேட்டாள்.

"இல்ல ரேனு.அவன் நிஜமாலுமே ஐஸ்கிறீம் சாப்டா.எனக்கு தெரியும்.எனக்காக நீ சாப்டாம இருக்குறது ஒரு மாதிரி கஷ்டமா இருந்திச்சி" என்றான்.

"இதுல என்னங்க கஷ்டம் இருக்கு.ஒரு 15 நிமிசம் வெச்சுக்க போறன்.நானும் குட்டி பாப்பாவுன் நல்லா மிங்கிள் ஆகலாம் என்று பார்த்தன். எனக்கு அவள தெரியவே தெரியாது.அதான் தெரிஞ்சிக்கலாம்" என்றால்.

"ஆமா இவ பெரிய ஒபாமா , அவ விளாடிமிர் புட்டின் . புரிஞ்சிக்கிட்டு என்ன பன்ன போறிங்க தலைவிகளே."என்றவன் அவள் முகம் அஷ்ட கோனலாகா மாறுவதை கவனித்து

"ஏய் இதுக்கு ஏன் இப்போ இவ்லோ பீல் பன்ற.ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு வா.வந்து நாள் முழுக்க விளையாடு ஒக்கே.அப்டியே அந்த சிரியா வார் மேட்டரயும் பேசி முடிங்க"என்றான் நக்கலாக.

"கண்டிப்பா வரேன்.உங்க பொண்ணு கூட டைம் பன்ன ஸ்பெண்ட் பன்ன எனக்கும் ஆசயா இருக்கு.லீவ் கிடைக்கும் போது வருகிறேன்"என்றாள்.

எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் ஒவ்வொருத்தராக வீடு செல்ல கடைசியில் மிஞ்சியது சங்கீதா,சுரேஷ்,ப்ரியா,அர்விந்த்,ரேனு,லீசா,லீசாவின் பாய் ப்ரெண்ட் வெங்கட்,ஆபிஸ் கொலீக் திரு.

"சரி எல்லோரும் போயாச்சு.நம்ம இருக்குறவங்க சரி ,சாப்டு கிளம்பாம சும்மா ஏதும் கேம் ஆடலாம்"என்றால் சங்கீதா.

திருவோ " கேம்லாம் வேண்டாம்.அதான் நம்ம பையன் அர்விந்த் நல்லா பாடுவானே.அவனையே ஒரு பாட்டு பாட சொல்லுவோம் " என்றான். திருவும் அவர்கள் படித்த காலேஜ் என்பதால் அவனுக்கு அர்விந்த் பற்றி தெரியும்.காலேஜ் கல்ச்சரல்சில் ஒரு கலக்கு கலக்குவான்.அவ்ளோ அழகாக பாடுவான்.

இன்று எப்படியும் தப்ப முடியாது என்று என்னிய அர்விந்த் "சரி என்ன பாட்டு பாட" என்றான்.

உடனே சங்கீதா" என்ன விலை அழகே" என்றால்.

அர்விந்தும் பாட ஆரம்பித்தான்.

அவன் பாடலை பாடிய விதமும் அவன் காட்டிய முக பாவனையும் அங்கிருந்த இருவரின் உள்ளத்தை அப்படியே கொள்ளை கொண்டது.அதில் ஒரு உள்ளம் வெளிப்படையாகவே தன் கொள்ளை போவதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.

அப்படி அந்த பாட்டில் என்னதான் நடந்தது என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro