11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என்ன விலையழகே...
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்....

(இது வரைக்கும் ஒரு பிரச்சினையும் இல்லாமல்தான் பாடினான் நம்ம ஹீரோ .பிரச்சினை ஆரம்பித்தது அடுத்த சரனத்தில்)
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே

(இதைப்பாடியவன் அப்படியே கண்மூடி மூச்சை இழுத்து அடுத்த வரியை பாட கண்களை திறந்தவன்.ப்ரியாவின் முகத்தில் அவன் கண்கள் பதிய மெய்மறந்து பாடலானான்)

அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு.

என்று முடிக்க ,உடனே எல்லோரும் கைதட்ட தன்னை சுதாகரித்துக்கொண்டவன் பாட்டை இடையில் நிறுத்திவிட்டான். அவன் வைத்த கண் வாங்காமல் ப்ரியாவை பார்த்து பாடியதால் ப்ரியாவுக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.ஆனால் ப்ரியாவுக்கு சரியாக பின்னே இருந்தால் ரேனு.அவளின் முகமும் வெட்கத்தால் சிவந்தது.காரணம் அவள் நினைத்தால் அர்விந்த் அவளை பார்த்துதான் பாடுகிறான் என்று.

உடனே சங்கீதா"மாப்பு செம பாட்டுடா.முழுசா பாடிருக்கலாம்.ஆமா ரொம்ப பீல் பன்னி பாடினியே யார நினைச்சு பாடின" என்று கேட்டதற்கு அவன்

"ஹேய் சும்மாதான் பாடினன்.யாரயும் நினைச்சுலாம் இல்ல" என்றான்.

"அடப்பாவி அப்போ நீ மைதிலய நினைச்சு கூட பாடலயா" என்று கேட்டவலை பதில் ஏதும் கூறாமல் ப்ரியாவிடம் இருந்த தன் மகள் நிஷாவை தூக்கிக் கொண்டு அவளுக்கு பால் கொடுக்க பேக்கை எடுக்க சென்றான்.அவன் பதில் ஏதும் கூறாமல் செல்வதை ப்ரியாவும் ,சங்கீதாவும் ஒருவர் முகத்தை மற்றவர் ஆச்சரியம் கலந்த குழப்பத்தால் பார்த்துக்கொண்டனர்.

அவன் நிஷாவுக்கு பால் கொடுக்க ஆரம்பித்தும் அவன் பக்கத்தில் வந்த ரேனு "அர்விந்த் உங்க பாட்டு சூப்பரா இருந்திச்சு.நல்ல வாய்ஸ்.அதவிட பீல் பன்னி பாடினீங்க பாருங்க.அது கேட்கவே ரொம்ப நல்லா இருந்தது" என்றால் வெட்கப்பட்டுக்கொண்டு.

"தாங்கஸ்" என்று அர்விந்த் கூற மறுபடி அங்கே எல்லோரும் ப்ரியாவை கம்பல் செய்து பாடல் ஒன்றை பாடசெய்தனர்.

அவளோ அலைபாயுதே கண்ணா பாடலை அர்விந்த் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு நன்றாகவே பாடினால். அவள் பாடுவதை கண்ட அர்விந்தும் ரேனுவும் பாட்டு பாடும் இடத்திற்கு சென்று அமர அர்விந்த் நிஷாவை மடியில் வைத்துக்கொண்டு பால் கொடுக்கலானான்.

ப்ரியாவோ "கதறிமனமுருகி நான் அழைக்கவோ ,இதரமாதருடன் நீ களிக்கவோ" என்ற வரியை ரொம்ப பீல் செய்து பாட அதில் மெய்மறந்தவனை நோக்கி ப்ரியா உடனே ஓடி வர ,ரேனு ப்ரியா ஏன் அர்விதை நோக்கி வருகிறாள் என்று அர்விந்தை பார்க்க அவன் கையில் இருந்த நிஷா கீழா விழப்போனால்.ரேனு உடனே நிஷாவை கைகளில் ஏந்திக்கொண்ட்டால்.ஆனால் ஓடி வந்த ப்ரியாவோ சாரியில் அவள் கால் சிக்குண்டு கீழா விழுந்து ,அப்போதுதான் யாரோ சாப்பிட்டு விட்டு போட்ட BBQ குச்சி கையில் குத்த அவள் கை எங்கும் இரத்தம் பரவி அவள் ஆடையை நனைத்து.உடனே பதறிய அர்விந்த் ப்ரியா அருகில் செல்ல அவளோ அதிர்ச்சியில் மயக்கமானாள்.உடனேஅவளை தூக்கியவன் ,அவளின் காரின் பின் இருக்கையில் அவளை கிடத்தி ரேனு கையில் இருந்த நிஷாவை தூக்கிக்கொண்டு காருக்கு அருகில் சென்று ப்ரியாவை ஹாஸ்பிடல் கொண்டு செல்ல ஆயத்தமானான்.உடனே அர்விந்த் அருகில் வந்த ரேனு

"நீங்க வண்டிய ஓட்டுங்க.நானும் கூடவே வரேன்.அப்பதான் நிஷாவ வெச்சுக்க முடியும் .அவ தனியா சீட்ல இருக்க மாட்டா "என்றவளை

"சரி"என்று ஒற்றை வார்த்தையில் கூறி அங்கிருப்பவர்களை பார்த்து " நான் உடனே ஹாஸ்பிடல் போறன் போய்ட்டு கால் பன்றன்"என்று சொல்லிவிட்டு காரில் பறந்தான்.

அவசரமாக அவன் காரில் செல்வதை உள்ளே அவளின் மாமனாருக்கு சாப்பாடு வைக்க சென்ற சங்கீதா பார்க்க ,உடனே வெளியில் வந்தவள் "என்ன சுரேஷ் என்னாச்சு.எங்க ரேனுவயும் ப்ரியாவையும் காணம்.அர்விந்த் ஏன் இவ்வளவு அவசரமா போறான்" என்றவளிடம் சுரேஷ் நடந்து விபரங்களை கூறினான்.அதற்கு உடனே அவள்

"சரி லீசா,வெங்கட், திரு நீங்க மூனு பேரும் வீட்ட போங்க.நாங்க ஹாஸ்பிடல் போய்ட்டு அப்டேட் பன்றம்"என்றவளை லீசா

"இல்ல சங்கீ நாங்களும் வருகிறோம் "என்றால்.

"இல்லைடி நீங்க போங்க லேட் ஆகுமோதெரில. Monday ஆபிஸ்ல பார்க்கலாம்.நான் ஹாஸ்பிடல் போய்ட்டு கண்டிப்பா போன் பன்றன்.சுரேஷ் கார எடுங்க போகலாம்" என்றால்.

சங்கீதா உடனே ரேனுவுக்கு போன் பன்னி எந்த ஹாஸ்பிடல் போகிறார்கள் என்று கேட்டு அங்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்தனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro