27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"என்னங்க எதுவும் பதில் சொல்ல மாட்டேன்றிங்க?" என்றான் ஜீவா.

நடந்து கொண்டிருந்தவள் பட்டென்று நின்றாள்.

"இங்க பாருங்க நீங்க எனக்கு ப்ராஜெக்ட் முடிக்க ஹெல்ப் பண்ணிங்க. நான் அதுக்கு பதில் உங்களுக்கும் சேர்த்து முடிச்சு கொடுத்துட்டேன். தேங்க்ஸ்சும் சொல்லிட்டேன். அவ்ளோ தான் முடிஞ்சுது. அதோட நீங்க உங்க வழிய பாருங்க. என் வழில குறுக்க வராதிங்க. அடுத்த தடவை இது மாதிரி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன். ப்ளீஸ்... உங்களை திட்டவும் கஷ்டமா இருக்கு. விலகி இருங்க." என்றவளின் பார்வை ஒரு இடத்தில் நிலைத்து நின்றது.

சுற்றுப்புறம் பாராமல் திட்ட போகிறாள் என்று நினைத்திருக்க, இவ்வளவு பொறுமையாய் அவள் கூறியது ஜீவாவுக்கு வியப்பளித்தது.

அவளின் பார்வை சென்ற இடத்தை அவனும் பார்த்தான்.

அங்கே பைக்கின் மீது ஒருவன் அமர்ந்திருக்க, அவனை சுற்றி நாலைந்து பேர் நின்றிருந்தனர்.

ஒரு சிலர் வந்து அவனிடம் சாக்கலேட் வாங்கி சென்றனர்.

அவள் நினைப்பது சரியா என்று ஒரு நொடி யோசிக்கவும் அழகியின் போன் அடித்தது.

"ஹலோ!" என்றாள் அறிவு.

"அழகி... உன்னோட துப்பறியும் மூளை சொல்றதை கேட்கிறேன்னு அவங்களை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக்க கூடாது. சொல்லிட்டேன்." என்றவுடன் பட்டென பார்வையை தன்னை சுற்றி சுழற்றினாள்.

"என்னை தேடாதடி. உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆமா கூட ஒருத்தன் நிக்குறான் யாரு?" என்றான் சற்று பொறாமையாக.

அவளின் பார்வைக்கு ஷிவா கிடைக்காததால், "கிளாஸ்மேட்." என்றாள் ஒற்றை வார்த்தையில்.

"ஹ்ம்.. அந்த ஹெல்மெட்டையும் கூட்டிட்டு க்ளாஸ்க்கு போ." என்றான் ஷிவா.

புன்னகை உதிக்க ஜீவாவை பார்க்கவும் அவனும் ஆர்வமாய் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

"சரி." என்று வைத்தாள்.

"பர்த்டே போலங்க. டைரிமில்க் சாக்லேட் தராங்க. இருங்க நான் போய் சாக்லேட் வாங்கிட்டு வரேன்." என்று அவர்களை நோக்கி நடக்க போகவும் பட்டென ஜீவாவின் கரத்தை பிடித்தவள், அவனை இழுத்து கொண்டு முன்னோக்கி நடந்தாள்.

"பேசாம வாங்க. நாம ஒன்னும் சின்ன பசங்க இல்ல. ங்க போக கூடாது. அது உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்." என்று நடக்க, அவன் பதிலளிகாததால் திரும்பி பார்க்கவும் அவனும் ஆச்சரியமாய் அவர்களின் கரத்தை பார்த்து கொண்டிருந்தான்.

'அய்யோ இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கான்.'

அவனின் கரத்தை உடனே விட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

"ஏங்க என்னங்க இப்படி உடனே கைய விட்டுட்டீங்க?" என்று கேள்வி கேட்டு பின்னே வேகமாய் நடந்தான்.

திரும்பி நின்று ஜீவாவை முறைக்கவும், 'ஆத்தாடி.. ஜீவா உனக்கு நேரம் சரி இல்லை.. இப்போ தான் கொஞ்சம் இறங்கி வந்தா. அதுக்குள்ள மரத்திலே ஏறிருவா போல இருக்கே?' என்று பேச்சை மாற்றும் விதமாக, "யாருங்க அது போன்ல?" என்றான்.

"அதை சொல்ற அளவுக்கு நீங்களும் நானும் பிரென்ட்ஸ் இன்னும் ஆகலை." என்று நடந்தாள்.

"சரி. நீங்க போங்க. நா போய் அந்த சாக்லேட் வாங்கிட்டு வரேன்." என்றான் அவளை வம்பிழுக்க, திரும்பி அவனை முறைத்தவள்.

"உனக்கென்ன சாகிலேட் தானே வேணும். நாளைக்கு வாங்கிட்டு வரேன். இப்போ ஒழுங்கா வந்துரு. இல்லை அவ்ளோ தான்." என்று நடந்தாள்.

அவளின் பேச்சில் மகிழ்ந்த ஜீவா, "அப்போ சரி. நாளைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வரணும்." என்று கூறியபடி பின்னே சிரித்து கொண்டே நடந்தான்.

*****

"கண்ணா ஸ்பாட்ல தான் நிக்கிறேன். வீடியோ அனுப்பிருக்கேன். பாரு. அவனை தான் நீ பாலோவ் பண்ணனும்." என்றான் ஷிவா.

"ஓகே டா. நான் பார்த்துக்குறேன். நீயும் ஜாக்கிரதையா இரு." என்று வைத்தான் கண்ணன்.

இருவரும் வெவ்வேறு ஆட்களை பின் தொடர்ந்து சென்றனர்.

நீண்ட தூரம் அவர்களை பின் தொடர்ந்தவன் அவன் வந்து நின்ற இடத்தை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து போனான்.

கோபம் தலைக்கேற அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாமல் மறைவாக நின்று கண்காணிக்கத் தொடங்கினான்.

ஷிவா தலையில் ஹெல்மெட் போட்டு கொண்டு காதில் போன் வைத்திருக்கவும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

"டேய்! ஏன்டா இவ்ளோ லேட்டு? பாதி பேர் போய்ட்டாங்க. நீ என்னடான்னா வியாபார நேரத்துல ஆடி அசைஞ்சு வர?" என்று திட்டிக்கொண்டே தன் தள்ளுவண்டி கடையை சற்று தள்ளி நிறுத்தினான்.

"சரிடா திட்டாத அங்க காலேஜ்ல லேட் ஆகிடுச்சு. வர வழில டிராபிக் வேற... சரி இந்தா இன்னைக்கு பார்ஸல்." என்று தன் பையில் இருந்து ஒரு பெரிய கவரை எடுத்து கொடுத்தான்.

வண்டியில் வைத்திருந்த கூலிங் பாக்ஸை எடுத்து கொடுத்தான்.

"சரி நீ ஆரம்பி. நான் அடுத்த இடத்துக்கு போகணும்." என்றான்.

"இதான் இன்னைக்கு ஸ்பெசலா?" என்று கேட்டபடி அந்த கவரில் இருந்த குட்டி குட்டி சோன் பப்டி பாக்கட்டுகளை பாட்டிலினுள் போட்டு கொண்டான்.

கூலிங் பாக்சில் இருந்த குச்சி ஐஸ் களை ஐஸ்க்ரீம் பாக்சில் போட்டு கொண்டான்.

"சரி நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்." என்று பள்ளிக்கூட வாசலின் அருகில் சென்று நின்றான்.

"சரி நா வரேன்." என்று வந்தவனும் கிளம்ப.

"ரெடியா இருக்கீங்களா? சந்தேகம் வராத மாதிரி அவனை பாலோ பண்ணுங்க." என்று மப்ட்டியில் இருந்த சான்ஸ்டபிலிடம் கூறிவிட்டு, இன்னொரு கான்ஸ்டபிலிடம், "காரை ஸ்கூல் வாசலில் நிறுத்துங்க. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. குய்க்." என்று ஸ்கூல் வாசலின் அருகே வண்டியை நிறுத்தினான்.

வண்டியை விட்டு இறங்கி அங்கிருந்த ஒரு குழந்தையிடம் பேச்சு கொடுத்தான்.

அதற்குள் கார் வந்து நிற்கவும், காரில் இருந்து இறங்கி வந்த ட்ரைவர், ஐஸ் விற்பவனிடம் "தம்பி எங்க அய்யா குழந்தைக்கு உடம்பு முடியலை. ஸ்கூலுக்கு வரலை. ஆனா பாப்பா  உங்க சோன் பப்டி தான் வேணும்னு அழுதுட்டே இருக்காங்க. எங்க அய்யாக்கும் உங்களை தெரியுமாம் அதான் கொஞ்சம் கூப்பிடறாங்க." என்றார்.

எல்லோரும் மப்டியில் இருக்க, வண்டியும் வேறு வண்டி, அதனால் சந்தேகம் வராமல், "என்னை தெரியுமா? அய்யோ குழந்தை அழறாங்களா? இதோ வந்துட்டேன் சார்." என்று கைகளில் நிறைய சோன் பப்டி பாக்கெட்டுகளை அள்ளி கொண்டு வேகமாய் காரின் கதவருகே சென்றான்.

அதே நேரம் ஒரு தண்ணீர் லாரி காரின் பக்கவாட்டில் வந்து நின்றது.

திறந்திருந்த கதவருகே நின்று, "இந்தாங்க சார்." என்று நீட்டவும். அவனை அள்ளி காரில் போட்டுகொண்டு பறந்தனர்.

நொடி பொழுதில் நடந்துவிட்ட சம்பவம் ஸ்கூல் பெல் அடிக்க நேரமானதால் யாரும் இதை கவனிக்கும் நிலையில் இல்லை.

அவன் வைத்திருந்த சோன் பப்டி பாட்டிலும் ஐஸ்களும் சேகரித்து எடுத்து சென்றனர்.

"ஓகே நெஸ்ட் டார்கெட் எங்க? போய்ட்டீங்களா?" என்று கேட்டான் வண்டியை பாலோவ் செய்து சென்ற கான்ஸ்டபிலிடம்.

"சார்! இது ஒரு மகளிர் விடுதி அங்க தான் தள்ளு வண்டில குச்சி ஐஸ் வியாபாரம் நடக்குது. வந்தவன் கொடுத்துட்டு கிளம்பிட்டாங்க. அவனை நம்ம ஏட்டு பாலோவ் பண்றார்." என்றார்.

"ஓகே. நீங்க அங்கயே இருங்க. ஒரு ஐஸ் கூட யாருக்கும் போக கூடாது. ஜாக்கிரதையா இருங்க.நான் டென் மினிட்ஸ்ல அங்க வந்துருவேன்." என்று போனை வைத்துவிட்டு அவசரமாக கிளம்பினான்.

*****

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro