28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என் விடியலே நீ தானடி! 28

வகுப்பறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

அமைதியாக தன் இடத்தில் போய் அமர்ந்தவ அழகியின் சிந்தனை அங்கே, தான் கண்ட காட்சியில் இருந்தது.

ஜீவா அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

தன்னை யாரோ உற்று நோக்குவது போல் தெரியவே திரும்பி பார்த்தவள், ஜீவாவை முறைத்தாள்.

"இப்போ எதுக்கு என்னை இப்படி முழுங்குற மாதிரி பார்க்கிற?" என்றாள் முகத்தை சுழித்தபடி எரிச்சலாய்.

"உங்க அழகுல மயங்கி பார்க்கிறேன்னு தப்பா நினைக்காதிங்க... இல்லாத மூளையை யூஸ் செஞ்சு அப்படி ரொம்ப நேரமா என்ன யோசிக்கிறீங்கன்னு தான் பார்த்துட்டு இருக்கேன்." என்றான் மிகவும் கடினப்பட்டு சிரிக்காமல்.

அவனும் ஏதோ சொல்கிறானே என்று கேட்டு கொண்டிருந்தவள் தன்னை  கிண்டல் செய்கிறானென்று உணர்ந்து திரும்பி முறைத்தாள்.

"ஹ்ம்ம்.. உங்களுக்கு கடவுள் அதே மூளையை கொடுத்திருக்காறான்னு தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்." என்றாள் அழகியும் விடாமல்.

"ஏன்? எனக்கென்ன?" என்றான் அவனும் பொய்யாய் முறைத்து.

"பின்ன காலேஜ் படிக்கிற... இன்னும் கூட வளராம சின்ன புள்ள மாதிரி தெரியாதவாங்க கிட்ட போய் சாக்லேட் வாங்கி சாப்பிட போறேன்னு போற? மூளை இல்லையா?" என்று தலையில் அடித்து கொண்டாள்.

அழகி தன்னை உரிமையாய் ஒருமையில் அழைத்ததை குறித்து கொண்டவன்.

"யாரு சொன்னா எனக்கு அங்க யாரையும் தெரியாதுன்னு?" என்று ஜீவா கேட்டவுடன் அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது அழகிக்கு.

*****

அந்த மகளிர் விடுதிக்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்திய ஷிவா அங்கு நின்றிருந்த ஏட்டை உற்று கவனித்தான்.

அவரின் பதட்டம் ஏதோ தவறாய் பட, "என்னாச்சு ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க?" என்றான்.

"ஓ... ஒன்னுமில்லை சார்." என்றார் ஜீவாவை பார்த்ததும் தடுமாறியபடி.

"என்னாச்சு எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கிங்க?" என்று ஆறுதலாக கேட்டான்.

"இல்ல சார். எங்க ஊர்ல தூரத்து சொந்தம் அண்ணன் முறை வேணும். அவர் பொண்ணு இந்த ஹாஸ்டல்ல தான் தங்கிருக்கிறதா சொன்னார். அதுவுமில்லாம புள்ளை ஏனோ ரெண்டு நாளா ஒழுங்காவே பேசலைன்னு வருத்த பட்டாரு. நான் தான் ஒண்ணும் இருக்காது. நான் நேர்ல போய் பார்த்துட்டு வரேன்னு நேத்து நைட் கூட சொன்னேன். இங்க பார்த்தா இப்படி இருக்கு. ஒரு வேளை அந்த புள்ளை இதுல ஏதாவது பாதிச்சுருக்குமோன்னு மனசு கிடந்து அடிக்குது சார்." என்றார் பதட்டமாய்.

சில நொடிகள் யோசித்தவன்.

"நீங்க எதுவும் பயப்படாதீங்க. அப்படி எதுவும் இருக்காது. ஒண்ணு பண்ணுங்க. எதுவும் சொல்லாம இன்னைக்கு சாயந்திரம் அந்த பெண்ணை உங்க வீட்ல ஹெல்த் சரி இல்லை ஹெல்ப் வேணும்னு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க." என்று கூறி கொண்டிருக்கும் போதே இரண்டு பெண்கள் விடுதியில் இருந்து வெளியே வந்து அந்த ஐஸை வாங்கி சென்றனர்.

இதை பார்த்த ஏட்டு பதறினார்.

"சார். அங்க பாருங்க ரெண்டு பொண்ணுங்க ஐஸ் வாங்கிட்டு போறாங்க." என்றார்.

"ஹ்ம்ம்... பார்த்துட்டு தான் இருக்கேன். பொறுமையா இருங்க." என்றவன் தொடர்ந்து கவனித்தான்.

"இப்போ நீங்க நடந்து போற மாதிரி போய்ட்டு உங்களுக்கு ஐஸ் கேளுங்க. அதே ஐஸை கொடுத்தா ஓகே.. இல்ல வேற தந்தான்னா அடுத்து நான் பார்த்துக்குறேன்." என்றான் ஷிவா.

ஏட்டும் நடந்து செல்பவர் போல் சென்று ஐஸ் கேட்டார்.

திடுக்கிட்ட ஐஸ் வியாபாரி உடனே சுதாரித்து வேறு பாக்சில் இருந்து ஒரு ஐஸை எடுத்து கொடுத்தான்.

அமைதியாக வாங்கி கொண்டு சென்றார் ஏட்டு.

அப்பொழுது வாசலின் அருகேயே ஒரு பெண் நின்று வெளியே வராமல் பதட்டத்தோடு போன் பேசி கொண்டிருப்பது போல் தோன்றியது. அவளின் முகமே அவள் கெஞ்சி அழுவது போல் காட்டியது. உடனே அங்கு சென்று என்ன விஷயம் என்று கேட்க தோன்றியது.

இருந்தும் அவசரமாக ஏதாவது செய்தால் எதிராளி உஷாராகி விடுவான் என்று கடினப்பட்டு பொறுமை காத்தான்.

முடிவில் அழுது கொண்டே அந்த பெண் வந்து ஐஸை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.

சிறிது நேரம் அங்கேயே நின்றவன்.

"போலாம்." என்று ஏட்டுடன் கிளம்பினான்.

"என்ன சார் அப்டியே விட்டுட்டு வந்துட்டோம்? இவனுங்களை ஐஸ் விக்காம பண்ணலாம்ல.." ஆதங்கமாய்.

"போகாம பின்னே என்ன பண்ணனும்? இப்பவே போய் இவனுங்களை புடிக்க சொல்றிங்களா?" என்று கேட்டான்.

"ஆமா சார். இப்பவே பிடிச்சா அந்த பொண்ணுங்களை காப்பாதலாம்ல்..?" என்றார் ஏட்டு பரிதவிப்போடு.

"கரெக்ட். இப்போ போனா இந்த பொண்ணுங்களை மட்டும் தான் காப்பாத்தலாம். ஆனா இன்னும் இவர்களால் யார் பாதிச்சிருக்காங்க, என்ன ஆபத்துல இருக்காங்க... எதுவுமே தெரியாம போய்டும். அதுக்கு இன்னைக்கு ஒரு நாள் அவங்க கஷ்ட படட்டும். அந்த பெண்ணை இன்னைக்கு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க. அதை வச்சு தான் நம்மோட நெக்ஸ்ட் மூவ்." என்றான் ஷிவா.

"சரி சார்." என்று மனமே இல்லாமல் கிளம்பினார்.

ஒரு முறை ஏட்டு கிளம்பி விட்டாரா என்று பார்த்த பின், “ஓகே! இப்போ நீங்க உள்ள போகலாம். பட் எந்த சந்தேகமும் வர கூடாது. நீங்க கண்காணிக்கிறீங்கன்னு யாருக்கும் தெரிய கூடாது. போன் பண்ண வேண்டாம். மெஸ்ஸேஜ் போடுங்க. எமெர்ஜென்சின்னா போன் பண்ணுங்க. பி‌ கேர்புல் அண்ட் பி சேப்.” என்று போனை துண்டித்து விட்டு கிளம்பினான்.

“கண்ணா! எங்க இருக்க? முடிஞ்சுதா?” என்றான் சிவா.

“முடிஞ்சுது. இப்போ தான் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்.” என்றான் கண்ணன்.

“அப்போ நம்ம பிளான் ஸ்டார்ட் பண்ணியாச்சு. இன்னும் டூ த்ரீ டேஸ். பட், அவங்களுக்கு டவுட் வந்துச்சு. ரொம்ப டெஞ்சர். அதுவும் உன் தங்கச்சிய வச்சிக்கிட்டு என்னால ஒண்ணும் செய்ய முடியலை. அவளுக்கு மனசுல பெரிய ஜேம்ஸ் பாண்டுன்னு நினைப்பு. என்ன எது எதுவும் தெரியாது. ஆனா நேரா போய் நெருப்புல குதிக்கிறேன்றா.” என்று புலம்பினான்.

“என் தங்கச்சில அப்படி தான் இருப்பா. நீ பொறாமைல பொங்காத.” என்றான் கண்ணன்.

“போடா.. அப்புறம் எதாவது திட்டிற போறேன். நம்ம மீட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து தொலை.” என்று கடுப்பாக வைத்தான்.

"நம்ம சொன்ன ஒரே வார்தைக்காக அமைதியா இருப்பான்னு நினைக்கிற? ஹுஹும்ம் ... நம்ம சொன்ன பிறகு தான் என்ன பண்ணலாம்னு தீவிரமா யோசிப்பா. இவளை கண்காணிக்கவே ஒரு ஆளை தனியா போடணும் போல.." என்று புலம்பியபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

*****

“என்னது?” என்றாள் அழகி.

அவளின் ஆர்வத்தை பார்த்தவன், “சொல்றேன். அதுக்கு முன்ன ப்ரெண்ட்ஸ்.” என்று ஜீவா கரம் நீட்ட, அவனை முறைத்தாள்.

“இங்க பாரு ப்ரெண்ட்ஸ்ன்ற பேர்ல நம்பிக்கை துரோகத்தை பார்த்து ரொம்ப கஷ்ட்டபட்டு இன்னும் கூட அதிலிருந்து மீள முடியாம இருக்கேன். உன்கூட மட்டும் இல்ல யார்கூடவும் ஃப்ரெண்ட் ஆகி மறுபடியும் கஷ்ட்டபட விரும்பலை.” என்றாள் அழகி கண்ணீர் எட்டி பார்க்க.

அவளின் வருத்தம் அவனை பலமாக தாக்கியது.

“ஹூம்.. நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்றான் ஜீவா. 

“என்ன?” என்றாள் அழகி.

“நீங்க நம்ம கிளாஸ்ல யார்க்கிட்டயும் பேசுறதில்லைன்னு எங்க காங்ல டாப் லிஸ்ட்ல நீங்க தான் இருந்தீங்க. யாராலையும் உங்ககிட்ட ஃப்ரெண்ட் ஆக முடியலை. சோ, நான்...” என்று முடிக்க முடியாமல் தடுமாறினான் ஜீவா.

“நீ” என்றாள் கலவரமாய் அழகி.

“நான் எங்க பசங்ககிட்ட பெட் போட்டேன். உங்கக்கூட நான் பிரெண்டாகி காட்றேன்னு..” என்று நிறுத்தினான்.

“ஓஹ்... நீயும் ஃப்பேக்கா..?” என்றாள் அடிபட்ட குரலில்.

“ஒரு நிமிஷம் நான் பேசிட்றேன். அப்படி தான் உங்ககிட்ட பிரெண்டாகணும்னு உங்ககிட்ட வந்து பேசினேன். ஆனா நீங்க என்னை திட்டினிங்க பாருங்க. உன்கூட மட்டும் இல்ல யாரு கூடவும் நான் ஃப்ரெண்ட் ஆக விரும்பலைன்னு அப்ப தோணுச்சு. ஏற்கனவே உங்களை யாரோ ஃப்ரெண்ட் பேரை சொல்லி ஏமாத்திருக்காங்கன்னு. அப்பத்துலர்ந்து உங்கக்கூட உண்மையான பிரெண்டா நான் இருக்கணும்னு உங்கக்கூட பிரெண்டாக ட்ரை பண்ணிட்டு இருக்கேன். என்னை உங்க பிரெண்டா ஏத்துகிட்டா இந்த உலகத்துலேயே நான் ரொம்ப மதிக்கிற எங்க மேல சத்யமா என் உயிர் இருக்க வரைக்கும் உனக்கு பிரெண்டாவே இருப்பேன்.” என்றான் ஜீவா.

அவன் பேசியதில் வாயடைத்து போனவள் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தாள்.அவனின் வார்த்தைகள் பொய் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவள்.

“உன்னை நம்பலாமா? கண்டிப்பா என் நம்பிக்கையை உடைக்க மாட்டியே?” என்றாள் ஒரு விட ஏக்கதோடு.

“பிராமிஸ்.” என்று தன் தலை மீது கை வைத்து பாவமாய் பார்த்தான்.

ஒரு நொடி பாவமாய் முழிப்பத்தை பார்த்து சிரித்தவள்.

“சரி. இப்போதிலர்ந்து நீ என் ஃப்ரெண்ட். ஆனா ஒரு விஷயம் ஏடாகூடமா நடந்தா கூட அதோட அவ்ளோ தான்.” என்றாள் அழகி.

“சரி.” என்றான் ஜீவா அழகாய் சிரித்து.

“சரி. யாரு அதுல உனக்கு தெரிஞ்சவங்க?” என்றாள். அவர்களை பற்றி விபரம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.                                                         
“அதுல இருக்க ஒரு பையன் எங்க வீட்டு பக்கத்துல தான் இருக்கான்.” என்றான் ஜீவா.

“சும்மா எதையாவது உளறிட்டு இருக்காத.” என்று முறைத்தாள்.

“அட நான் ஏன்மா பொய் சொல்லணும்? அவன் அங்க இருந்ததால தான் நான் அங்க போக பார்த்தேன். நீ வேற என்னை கூட்டிட்டு வந்துட்ட. போங்க உங்களால ரெண்டு சாக்லேட் வேஸ்ட்டா போச்சு.” என்றான் ஜீவா.

“முட்டாள். நல்ல வேலை உன்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டேன். எவ்ளோ பெரிய ரிஸ்க்ல இருந்து நான் உன்னை காப்பாத்திருக்கேன்னு உனக்கு தெரியாது.” என்றாள் அழகி கோபமாய்.  

அவளின் கோபத்தில் பெரிய உண்மை மறைந்திருப்பது போல் தோன்றியது ஜீவாவிற்கு.

“நீ என்ன சொல்ற? எனக்கு எதுவும் புரியலை. நீ சொல்றதை பார்த்தா அங்க ஏதோ தப்பு நடக்கிற மாதிரி இருக்கு. என்ன ஆச்சு?” என்றான் ஜீவா ஒன்றும் புரியாமல்.       

*****

இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிவாவை எழுப்பியது அவனின் அலைபேசி ஒலி.

"ஹுக்கும்... " என்று சிணுங்கியபடி உறங்கினாள் அழகி.

அவளின் சிணுங்களில் எழுந்தவன்.

"இப்போ தான் ரெண்டு வயசு சிணுங்கறதை பாரு. நான் எங்கேயோ இருக்கேன். அவ எங்கேயோ  இருக்கா. இப்போ எதுக்கு சிணுங்குனா?" என்று தூக்கம் கலைந்ததில் தலையில் அடித்துக் கொண்டான் ஷிவா.   

மீண்டும் அடித்தது அவனின் போன்.

மணியை பார்க்க, இரவு இரண்டு மணி.
              

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro