கனவே - 6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அம்மா, அப்பா உறவு ஒரு வயசுக்கப்பரம் தூரம்
ஒளிவு மறைவு இல்ல நட்பு ஒன்னா தானே சேரும்
அட உசுர கூட குடுப்போம் அட ஓடி வந்தா அணைப்போம்
அர நெல்லிக்காய போல அத நெனச்சு பாத்தா இனிக்கு
நட்பு இல்லாம வாழுரவன் எப்போதுமே சீரோ
அட மாஹாபார கதையில் கூட கர்ணண் நம்ம ஹீரோ

அதிர்ந்த விழிகளுடன் தன்னை நோக்கி வருபவளைக் கண்டு மென்னகை புரிந்தவன் திரும்பி ரவியைப் பார்த்து "என் சனா வந்துட்டாள் உன்னை மாதிரியே அழகா இருக்கா பாரு " என்று புன்னகைப் புரிந்தவனைக் கண்டு ரவியும் புன்னகைத்தது.

அஞ்சு அவர்களருகில் வந்ததும்  தன் மலர்களை அவள் மேல் தூவி ரவி அவளை வரவேற்க
அவளோ கண்களை விரித்து அந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

" ரவி சூப்பர் சூப்பர் அவளையும் வெல்கம் பண்ணியாச்சா?" என்ற வருணின் குரலில் சுயநினைவுக்கு வந்தவள் அவனை விசித்திரமான பார்வை ஒன்று பார்க்க அவளைப் பார்த்து சிரித்தவன் " டேய் விஷ்வா ரவியைப் பிடிச்சுட்டு நின்னது போதும் இங்கே வா " என்று அழைத்தான்.

" போடா நான் என் ரவி பக்கத்துல தான் இருப்பேன்...அப்படி தான ரவி " என்றவனிடம் ஆமாம் என்பது போல் அதன் கிளைகள் காற்றில் அசைந்தது.

"யாருகிட்ட பேசுறீங்க? இவர் ஏன் மரத்தை கட்டிப்பிடிச்சுட்டு நிற்கிறாரு " என்றவளிடம் " எங்க ரவி கிட்ட பேசுறோம் " என்று கூறிய வருணை முறைத்தவள்

" ரவி யாருனு சொன்னா தானே தெரியும் " என்று கேட்டவள் மறுபடியும் முறைக்க

அவளைப் பார்த்து சிரித்தவன் "ரவி  எங்களுக்கு எல்லாமே அவ தான்...
அனாதையான எனக்கு அம்மா அப்பா எல்லாமே...பொறுக்கி மாதிரி சுத்திட்டு இருந்த என்னை மனிதனா மாத்துனவ,
அழகான தேவதை அவ...ஆனால் அவளை இப்படி மாத்துனது உன் கூட சுத்துறானே அந்த விக்ரம்" என்றவன் கண்கள் சிவப்பு நிறமேறி கனல்களை கக்கும் கதிரவனாக
காட்சியளிக்க அந்த டேபிளில் ஓங்கி குத்தி தன் கோபம் இன்னும் குறையாமல்  அந்த இடத்தை விட்டு சென்று விட

அவனின் கோபத்தில் சற்று பயந்தவள் "விக்ரம் என்ன பண்ணான் ? என்று கேட்டவளிடம் பதில் சொல்லத்தான் அங்கு ஒருவரும் இல்லை.

வருண் சென்ற அடுத்த நொடியே விஷ்வாவும் அவன் பின்னால் சென்று விட அஞ்சு மட்டும் தான் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

அவள் ரவியையேப் பார்த்துக் கொண்டிருக்க ஏனோ இத்தனை நேரம் புன்னகை முகமாய் பூக்களை தூவிக் கொண்டிருந்த ரவி இப்பொழுது வாடிய மலராய் காட்சியளித்தது.

அந்த மரபென்ச்சில்  கன்னத்திற்கு கை கொடுத்து அமர்ந்தவளின்  மனமோ தொடர்வண்டி போல ஓடிக்கொண்டிருந்தது.

" அஞ்சு " என்ற விக்ரமின் அழைப்பில் திரும்பியவள் என்னவென்று கேட்க
"சாரதி சார் கூப்பிடுறாரு கிளம்பலாமா ? " என்றவன் பார்வை அவள் முகத்தைக் காணாமல் வேறு எங்கோ இருக்க அவனின் நடவடிக்கையில் முழித்தவள் திரும்பி ரவியைப் பார்க்க அதுவோ தன்னை விட்டு தள்ளி நின்றிருந்தவனின் மீது பூக்களை தூவி புன்னகை செய்து கொண்டிருந்தது...

ரவியின் இந்த நிலைக்கு விக்ரம் தான் காரணம்னு வருண் சொன்னான் ஆனால் ரவி ஏன் இவனைப் பார்த்ததும் இப்படி இருக்கா என்ற குழப்பத்துடனே " விக்ரம் இங்கே வா " என்று அழைக்க

" ச்ச்சீ அவ பக்கத்துலயே நான் வரமாட்டேன்....நீ இப்போ இங்கே வரியா? இல்லை நான் போகவா " என்று கத்தியவனை அதிசயமாய் பார்த்தவள் " போயிட்டு வரேன் ரவி...சீக்கிரம் உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறேன் " என்று கூறி அவனுடன் சென்றாள்.

செந்நிறமாய் அவன் கை சிவந்திருக்க அந்த வலி கூட அவனுக்குத் தெரியாமல் விக்ரமின் மீது கொலை வெறியில் வெறிப்பிடித்தவன் போல் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்  வருண்.

"வருண் நீ கோபத்தை குறைச்சுக்கோ...
அந்த விக்ரம் எங்கே போயிட போறான்? நீ இப்படி இருக்காதே ...கை பாரு எப்படி சிவந்துருக்குனு வா ஹாஸ்பிட்டல் போகலாம் " என்று அழைத்தவனின் தோள்பட்டையைப் பிடித்தவன் " ரவி ஏன் டா அப்படி பண்ணா? விக்ரம் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டுடுவாளா? அந்த பொறுக்கிங்க ஏன் ரவிக்கு இப்படி பண்ணனும்...நான் அனாதை டா எனக்கு எல்லாமா இருந்தவ அவ தானே அந்த விக்ரம் அவனையும் நான் என் உயிரா தானே டா நினைச்சேன் " என்று மண்டியிட்டு அழ ஆரம்பிக்க விஷ்வாவும் பழைய நினைவுகளைப் பற்றி நினைக்க ஆரம்பித்தான்.

"ஹே...வருண் வருண் " என்று ஒரு கூட்டம் கத்திக் கொண்டிருக்க மறுபுறமோ " விக்ரம் விக்ரம் " என ஒரு கூட்டம் கத்திக் கொண்டிருந்தது...
கத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் ராஜஸ்தான் யுனிவர்சிட்டி மாணவர்கள்.
மற்ற யுனிவர்சிட்டியிலும் வருண் மற்றும் விக்ரமிற்கு தனி ரசிகர் மன்றமே இருக்க அவர்களும் கத்திக் கொண்டிருந்தனர்.
வழக்கறிஞர் படிக்கும் மாணவர்கள் ஒருபுறம் விஸ்காம் படிக்கும் மாணவர்கள் ஒருபுறம் வருண் மற்றும் விக்ரம் பெயர்களை தாங்கிய பலகையை ஏந்திய படி கத்திக் கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும் அந்த விளையாட்டு அரங்கத்தையே ஒரு வழிப் படுத்திக் கொண்டிருந்தனர்.

" வருண் தான் கோல் அடிப்பான் " என ஒருவன் கத்த " விக்ரம் தான் கோல் அடிப்பான் " என ஒருவன் கத்த இவர்களின் நாயகர்களோ கண்களின் வெறியுடன் அந்த பந்தை எப்படி தன் வெற்றிக்கனியாக மாற்ற என எண்ணி விளையாடிக் கொண்டிருந்தனர்.

வருணோ பந்தை வைத்து தன் கால்களுக்குள் நடனம் ஆடிக் கொண்டிருக்க விக்ரமோ அதை அவனிடம் இருந்து பிடுங்க நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான்.

மாற்றி மாற்றி இருவரும் பந்தை இடம் மாற்றிக் கொண்டிருக்க மற்ற ஆட்டக்காரர்களோ " எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க டா " என்பது போல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இறுதியில் பந்தை வருண் கோல் போட எட்டி உதைக்க சற்று எம்பி அதைப் பிடித்த விக்ரமோ அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்து விட்டு அவன் கோல் போடத் தயாராக கோபத்தில் கால்களை தரையில்  உதைத்தவனோ
விக்ரமிடம் இருந்து பிடுங்கி தன் கால்களுக்குள் வைத்துக் கொள்ள இருவரின் அணியினரோ " டைம் ஆச்சு கோல் போடுங்க டா " எனக் கத்த இருவர்கள் கால்களும் இணைந்து அந்த பந்தை தூக்கி வீச அதுவோ கோல் கீப்பரையும் இழுத்துக் கொண்டு வலையில் சென்று விழுந்தது.

இதுவரை எதிரிகளாய் அடித்துக் கொண்டவர்கள் இப்போது முறைத்துக் கொண்டே நெருங்கி அணைத்துக் கொண்டு " வீ வோன் டா " எனக் கத்திக் கொண்டே குதிக்க (அதுக்கு ஏன் டா முறைச்சீங்க😒)
அவர்களை சூழ்ந்து கொண்டனர் அவர்களின் ரசிகர்கள்.

நட்பிற்கு எடுத்துக்காட்டாய் அந்த யுனிவர்சிட்டியை வலம் வருபவர்கள் வருண் மற்றும் விக்ரம் ...
இவர்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்பது போல் இருக்க அனைத்திலும் தங்கள் முத்திரையை பதிப்பவர்களை படிப்பு மட்டும் தனித்தனியாக பிரித்துவிட்டது.
மற்றபடி எல்லா நேரமும் ஒன்றாக வலம் வருபவர்கள் அனைவரும் பொறாமைப்படும் அளவு ஒருவர்மேல் ஒருவர் வைத்த அசையாத நம்பிக்கை ஏனோ எளிதில் தகர்த்தெறியது போகிறது என அவர்களுக்கு தெரியவில்லை.

"ஏன் டா மரண பயத்தை காட்டுனீங்க ?
செத்துட்டோம் நீங்க இரண்டு பேரும் ஒரே டீம் ஆனாலும் மேட்ச் பார்க்கிறப்போலாம் ஏனோ எதிரெதிர் டீம் மாதிரி பீல் ஆகுது" என்று இருவரையும் அடித்துக் கொண்டே  விஷ்வா கூற அவனை அணைத்துக் கொண்ட இருவரும் "அப்போதான மேட்ச் செமையா இருக்கும்" என்று ஒரே மாதிரி கூறி கண்ணடிக்க மறுபடியும் அடிக்கத் தொடங்கினான் விஷ்வா.

யுனிவர்சிட்டியே அவர்களின் வெற்றியைக் கொண்டாட யாருக்கு மேன் ஆப் த மேட்ச் தருவது எனத் தெரியாத அளவு இருந்தது இருவரின் ஆட்டமும்..

வெற்றிக்கோப்பையை கைளில் ஏந்தியவாறு இருவரும் யுனிவர்சிட்டியினுள் நுழைய அவர்களை புன்னகை முகமாக வரவேற்றது ஒரு அழகிய நிலா.

அவளைக் கண்டதும் ஓடிச் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட வருண் அந்த கோப்பையைக் கொடுக்க அவளோ "வரு சூப்பர் கலக்கிட்டீங்க" என்று கூறியவளின் விழிகள் மட்டும் ஏனோ விக்ரமைத் தான் சுற்றி வந்தது.

"ரவி இன்னைக்காவது விக்ரம் வீட்டுக்கு வாயேன் அம்மா வரச் சொன்னாங்க " என்று விஷ்வா அழைக்க அவளோ தன் வீட்டு நிலையை எண்ணியவாறு அமைதி காத்தாள்.

"ரவி ப்ளீஸ் உன்னை சீக்கிரம் கொண்டு வந்து விட்டுடுறோம் " என்று பலவாறு கெஞ்சி அவளையும் இழுத்துக் கொண்டு அந்த நால்வர் அணி விக்ரமின் வீட்டை நோக்கி செல்ல ஆயத்தமாக விக்ரமுடன் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தவளை கண்டுகொள்ளாமல் விக்ரம் விஷ்வாவை அழைத்துக் கொண்டு பைக்கில் செல்ல வேறுவழியில்லாமல் ரவி வருணுடன் சென்றாள்.

"அம்மா " என்று கத்திக் கொண்டே ஓடி வந்த வருணை அணைத்துக் கொண்ட மாலினியோ அவன் கன்னத்தில் இதழ் பதித்து " கண்ணா நீ தானோ கோல் போட்ட ? " என்று கேட்க

"அந்த கதையை ஏன் மா கேட்குறீங்க" என்று புலம்ப ஆரம்பித்த விஷ்வாவோ மாலினியை கையோடு அழைத்துக் கொண்டு சமையலறைக்குச் செல்ல இங்கு இவர்களோ சோபாவில் அமர்ந்துக் கொண்டு அவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

முழுக்கதையையும் அவன் கூறி முடித்து காபியோடு வெளியே வர மாலினியோ வருணின் காதைப் பிடித்து திருகி "படவா ராஸ்கல் உன்னைத் தானே கோல் போட சொன்னேன் சரி சரினு தலையாட்டிட்டு... இரண்டு கூட்டுக் களவாணிகளையும் வெச்சுட்டு நான் என்ன தான் பண்ணுறதோ " என்று புலம்பிய படியே ரவியின் அருகில் சென்று அமர்ந்தார்.

அவள் புது இடம் என்பதால் கூச்சத்தில் நெளிந்துக் கொண்டிருக்க "இது உன் வீடு மாதிரி டா நீ எப்பவும் போல இரு சரியா " என மாலினி கூற சரியென்று தலையசைத்தவள் மனமோ " நம்ம மாமியார் நல்ல மாமியார்" என  கூறிக் கொண்டிருந்தது.

"உங்களுக்கு பிடிச்சதா பார்த்து சமைச்சிருக்கேன்...சாப்பிட்டுட்டு தான் போகணும் " என்று அவர் கூறி முடிப்பதற்குள் விஷ்வா மற்றும் வருண் மேசையில் ஆஜர் ஆகியிருக்க சிரித்தவாறே அவர்களுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தவர் அவர்கள் செய்யும் கேலிகளில் தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

"டேய் டேய் அவனை இங்கே கொண்டா...டேய் இவன் வேணாம் டா" என்று கூறிய விஷ்வாவை மாலினி கேள்வியாக நோக்க " இந்த எருமை சாப்பிடுற பொருளை அவன் இவன்னு தான் கூப்பிடுவான் மா " என்று விக்ரம் கூறியதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டவருக்கு சிரிப்பதைத் தவிர வேற வழி தெரியவில்லை..

சாப்பிட்டு முடித்தவர்கள் ஆளுக்கு ஒருபுறம் சாய ரவி மட்டும் மாலினிக்கு உதவியாய் அவர் பின்னாலே சுற்றிக் கொண்டிருக்க அவளைப் பார்த்து சிரித்தவர்  " நீ போய் ஓய்வு எடு டா கொஞ்ச நேரம் " எனக் கூறியும் மாட்டேன் என தலையசைத்தவள் சமையலறைத் திண்டில் ஏறி அமர அவளுக்கு சாப்பிட வாழைப்பழத்தை கொடுத்தவரோ பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தார்.

"அது என்ன டா ரவி ரவினு...உன்னோட முழுப்பெயர் என்ன ?" என்று கேட்டவரைப் பார்த்து புன்னகைத்தவள்
" நான் சௌரவி ஜாதவ் மா
அம்மா அப்பா அண்ணா அப்புறம் நான்...அப்பாக்கு ஜாதி தான் முக்கியம்...யாருக்கிட்டேயும் பேசக் கூடாது...யுனிவர்சிட்டி வந்த ஆரம்பத்தில் நான் யாருகிட்டேயும் பேச மாட்டேன் மா...இப்போதான் பேசுறேன்...என்னால மத்தவங்களுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுல " என்று புன்னகைத்தவளைப் பார்த்து அவரும் புன்னகைத்தார்.

அந்த நாளும் அழகாக கழிய கிளம்பும் போது மாலினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரவியை அணைத்தவர் அவளை அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் செல்ல
மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

குங்குமத்தை அவள் நெற்றியில் இட்டவர் "அழகா இந்து பொண்ணு மாதிரி இருக்க மா...எனக்கு வரப்போற மருமகளும் உன்னை மாதிரியே இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்..." என்றவரை முறைத்த விக்ரமோ அந்த இடத்தை விட்டு நகர மாலினியோ ரவி காதில் " மருமகளா வந்துடுறியா மா " என்று கேட்க கண்களில் தேங்கிய கண்ணீரை மறைத்தவாறே வெளியே ஓடிய ரவியை விசித்திரமாக பார்த்தனர் மற்ற இருவர்.

மன்னிச்சு பேபிஸ்😣😣அடுத்த பதிவு சீக்கிரம் தந்துடுறேன்🏃‍♀🏃‍♀🏃‍♀

அப்டேட் பத்தி சொல்லிட்டு போங்க🍭🍭🍭

உங்கள்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro