52. ஹசி இனியவள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


"மயங்கும் கண்ணைப் பாராமல்
கலங்கும் நெஞ்சைக் கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே
என் பார்வை உனக்கு ரகசியமா
என் பாடல் உனக்கு அதிசயமா
உன் வானத்தில் நான் ஒரு நிலவில்லையா..
உன் வாசல் தேடி வரவில்லையா...!!"

தொற்றிக் கொண்ட பரபரப்புடன் எறும்புக் கூட்டங்களின் சுறுசுறுப்போடு வீடு  முழுக்க மனித நடமாட்டம்.
எழிலழகியின் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் திவ்யாவின் உறவினர்கள்.

பாரினில் வசித்த அவர்களிடம் பேசி மணமக்களின் தொந்தரவின்றி தனிமைக்காக அந்த வீட்டிலேயே அவர்களின் வாழ்க்கையை தொடங்க ஏற்பாடாகியிருந்தது.

"டேய்!  தம்பி அத்தான்  இருக்காருன்னு வெட்கப்படாத நிஜமாவே... இதான் உனக்கு பர்ஸ்ட் நைட்டா?" பாலாஜி படு சீரியஸாக சந்தேகம் கேட்டான்.

"ஆமாப்பா! நான் உன் அக்காட்டல்லாம் சொல்லமாட்டேன்.. எங்ககிட்ட மட்டும் சொல்லிடு.." ஷியாமளாவின் கணவரும் ஒத்து ஊத...

"அட என்னங்க நீங்க? ஆளாளுக்கு வறுத்தெடுக்குறீங்களே...?மாமா பாவம்ல என்கிட்ட மட்டும் சொல்லுங்க மாமா நான் யார்கிட்டயுமே சொல்ல மாட்டேன்.." என அபினவும் காலை வாரினான். 

"ஆமா அடிச்சி கேட்டா கூட சொல்ல மாட்டோம்.." மாறனும் இணைந்துகொள்ள அங்கே  கொல்லென சிரிப்பு வெடித்தது.

திருமண வீட்டின் ஒதுக்குப் புறமாய் அமர்ந்து அன்றைய விழா நாயகனை எல்லோருமாய் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

அங்கே தெளிவற்ற குழம்பிய முகத்துடன் வேக வேகமாய் அகரன் வரவும்  அனைவரின் சிரிப்பும் நின்று போக,  "என்னாச்சு அகரன்? ஏன் ஒரு மாதிரி இருக்க? என்று அபினவ் கேட்டான். 

"அக்..அக்காவ காணோம்.. எங்க போனான்னு தெரில.. அங்க அப்பா அம்மா மாமா எல்லாருமே தேடிட்டிருக்காங்க.." அவனின் பதிலில் அங்கே ஒரு திடீர் பதட்ட நிலை உருவாக எழிலை அழைத்தபடி ஆளுக்கொரு பக்கமாய் சென்றனர்.

கதிர் ஏற்கனவே ஒரு மாதிரி குழப்ப நிலையில் தான் இருந்தான் ஏனெனில் காலையில் இருந்து எழிலின் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை அவனால் உணர முடிந்தது.  மற்றவர்களுடன் பேசிச் சிரித்த போதும் கூட அவன் மனதில் அழகி பற்றிய எண்ணங்களே நிரம்பி இருந்தது.

எல்லோருமாய் இணைந்து வீட்டை சுற்றிலும் முன்பக்கம் பின்புறம் வீதி என பல இடங்களிலும் தேட தொடங்கினார்கள்.

எந்த அறையிலுமே அவளை காணாது  திகைத்துப் போன திவ்யாவுக்கு "இங்கதான் சம்பந்தி எங்கேயாச்சும் இருப்பா. சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க..." என்ற மீனாட்சி அவர் கரங்களைப் பற்றி ஆறுதலாய் தடவிக் கொடுத்தார்.

கலைவாணன் எழிலின் அப்பாவோடு இணைந்து தேடினார்.

"அண்ணா.. அண்ணா.." என கத்திக்கொண்டே காயத்ரி கதிரிடம் ஓடி வந்தாள்.

"என்னாச்சும்மா..?" என்றபடி கதிர் அவளை நெருங்க அங்கே... "அண்ணி.. மேல..."  கோர்வையாக கூற முடியாமல் காயத்ரி தடுமாற..

  "எங்கே.. காட்டு" என கதிர் அவளின் பின்னால் செல்ல வீட்டின் கொல்லைப் புறத்தின்  கும்மிருட்டில் தலையை உயர்த்தி வானத்தை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்த எழிலழகியை காண அவன் மனம் துணுக்குற்றது.

"அழகி..அழகி.." அவன் அழைப்பிற்கு பதில் இல்லாது போக அருகே சென்று "எழில்..." என அவள் தோளைத் தொட்டான்.

திடுக்கிட்டுத் திரும்பியவள் "கதிர்.." என முகம் மலர்ந்தாள்.

"வந்துட்டீங்களா கதிர்.. எங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சேன்.. இவங்க எல்லாருமே எனக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்கறாங்க கதிர்.." அவளின் பேச்சில் அதிர்ந்தவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

இவனை அழைத்து வந்து எழிலிடம் விட்டுவிட்டு காயத்ரி ஓடிச்சென்று மற்றவர்களையும் அழைத்து வர எல்லோருமாய் வந்து அவளை சூழ்ந்து கொண்டனர்.. "என்னாச்சு எழில்... இங்க என்ன பண்ற..? எதுக்கு இங்க வந்த..? நாங்க எங்கேயெல்லாம் உன்னை தேடுறது..?" வந்தவர்கள் கேள்விகளை அடுக்க கதிரைப் புரியாது பார்த்தவள்.. அவர்களை குழப்பமாய் பார்த்தாள்.. நெற்றிப் பொட்டில் விரல்களை வைத்து அழுத்தி யோசிக்க முயன்ற எழில் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த எழிலையே பார்த்தபடி அவளருகில் சரிந்து படுத்திருந்தான் கதிர்.

சற்று நேரத்திற்கெல்லாம் வீடே அமளிதுமளிப் பட்டுப்போனது. அவள் மயங்கியதும் திவ்யா எழில்.. என அலற கூட்டத்தை நகர்த்தி அவளை தூக்கி  வந்து கதிர் கட்டிலில் கிடத்தினான்.

ஷியாமளா அவள் உடையின் இறுக்கத்தை தளர்த்தி விட மீனாட்சி முகத்தில் நீர் தெளித்தார். அப்போதும் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்த எழிலை அங்கேயே உறவினர்களில் இருந்த வைத்தியர் ஒருவர் பரிசோதித்து "நத்திங்க் டு வொர்ரி... கல்யாணத்தால சரியான தூக்கமில்ல... அலைச்சல்னு ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணியிருக்காங்க தூங்கறத்துக்கு டாப்ளட்ஸ் தர்ரேன்.. நல்லா தூங்கி எழும்பினா சரியாகிடும்" என்றார்.

திவ்யா உணவூட்டி மாத்திரைகளையும் கொடுக்க எழில் உறங்கிப் போனாள். "மாப்ள.. உங்க இரண்டு பேரையுமே தனியா இங்க தூங்க விடறதுக்கு திவ்யா கவலைப் படறா... வீட்டுக்கே வந்துடுங்களேன்.." தயங்கியபடியே தயாளன் கூற.. "அட என்ன சம்பந்தி இதுக்குப் போய் சும்மா அலட்டிக்கிட்டு... அவன் பாத்துப்பான் எல்லாத்தையும்... என்ன கதிர்..!?" என்ற கலைவாணனை ஒத்தே "ஆமா மாமா.. நீங்க கவலைப்படாம போய் தூங்குங்க.. அத்தைக்கிட்டயும் சொல்லுங்க.." என்றான் கதிர் தைரியம் அளிக்கும் விதமாய்.

கவலைப் பேச்சுக்களும் தேற்றுதலுமாய் மற்றவர்கள் கலைய கதிர் எழிலோடு தனித்து விடப்பட்டான்.

அமைதியாய் உறங்கும் மனைவியையே பார்த்தவனின் மனத் திரையில் எழிலினியாள் வந்து சிரித்தாள். ஏன் அழகியின் செய்கை பேச்சு ஒவ்வொன்றும் அவனுக்கு எழிலினியாளையே நினைவூட்டுகிறது... போதாததற்கு அவள் ஏன் அவனைப் பார்த்து அப்படிக் கேட்டாள்.. அவனுக்கு இதை எப்படிக் கையாள்வதென்றே தெரியவில்லை.. காலையில் இருந்து அவன் சந்தித்த பிரச்சனைகளும் திருமணத்தின் பின் எழிலின் நடவடிக்கைகளும் இனியாளின் எண்ணங்களுமாய்... கதிரும் மனதாலும் உடலாலும் சோர்ந்து போயிருக்க நித்ராதேவி அவனையும் தழுவிக் கொண்டாள்.

புரண்டு படுத்தபோது கஸகஸவென்ற வியர்வையை உணர்ந்தவன் கண்களை பிரித்தான்.. அணைந்திருந்த இரவு விளக்கால் கும்மிருட்டு பரவியிருக்க ஏசியும் ஆப் ஆகியிருந்தது. அறை எங்கும் வியாபித்திருந்த அசாத்திய அமைதியும் இணைந்து மின்சாரம் தடைப்பட்டிருப்பதை உணர்த்தின.

நேரம் என்னவாய் இருக்கும்... நினைத்தபடியே கைகளால் தடவித்தடவி செல்லை எடுத்தால் அதுவும் போதிய சார்ஜ் இன்றி உயிர் விட்டிருந்தது. உப்ப்... என்று அலுத்துக் கொண்டபடி எழிலின் புறம் திரும்பியவன் நெஞ்சுக் கூடு காலியானது...

"எழில்... எழில்.." அவசரமாய் அழைத்தபடி அவள் உறங்கிய இடத்தை தடவினான்... ஆனால் அங்கிருந்த வெறுமையில் உள்ளம் திடுக்கிட கட்டிலில் இருந்து இறங்க கால்களை கீழே வைத்தான்.

"கதிர்..." அந்த அறை முழுக்க நிலவிய நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அவனை அழைத்தது சந்தேகத்துக்கிடமின்றி எழிலினியாளின் குரல்.

உள்ளே சில்லிட உறைந்து போய் கை கால்களை அசைக்கக் கூடத் திராணியற்று அவன் அப்படியே அமர்ந்திருக்க, "வந்துட்டீங்களா கதிர்.. எங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சேன்.. இவங்க எல்லாருமே எனக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்கறாங்க கதிர்.." அச்சுப் பிசகாமல் இதே வார்த்தைகளைத்தான் முன்னிரவில் அழகி கூறியது... கதிர் திகைக்க
"கதிர்... கதிர்.." இனியாளின் குரல் மெல்ல அழுகைக்குப் போனது.

"கதிர்... என்ன விட்டுட்டு போய்டாதீங்க கதிர்... எனக்கு பயமாருக்கு... தனியா இருக்க முடில... ப்ளீஸ் கதிர்... எங்கிட்ட வந்துடுங்க..." கும்மிருட்டும் அழுகுரலும் உடல் சிலிர்த்தது அனுக்கு. 

கூடவே அருகே படுத்திருந்த அழகி.. அவள் எங்கே போனாள். நடக்க முடியாமல் கனத்த கால்களை சிரமப்பட்டு நகர்த்தி எழுந்தவன் அறைக்கதவை நோக்கி நடக்க அழுகுரல் அவனைத் தொடர்ந்தது.  அவன் அறைக் கதவைத் திறக்க மீண்டும் அங்கே கனத்த அமைதி.

"எழில்... எழிலழகி..." காய்ந்த தொண்டையை கனைத்து சரிப்படுத்தி அழைத்தான். பூட்டிய வீட்டை விட்டு அவள் எங்கே போயிருப்பாள்...

தவிப்புடன் மீண்டும் மீண்டும் அவளை அழைத்தான். இவர்களுக்காய் ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையறை மேல் தளத்தில் இருக்க கீழ்தளம் முழுவதுமாய் யாருமற்ற வெறுமை நிறைந்திருந்தது. பேசாமல் தயாளன் அழைத்த போதே சென்றிருந்தால்.. கீழே செல்வதற்காய் மாடிப்படிகளில் கால் வைக்கப் போன போது இவர்களின் அறையின் அருகிலிருந்த அறையில் கேட்ட படபடவென்ற ஒலியில் அங்கே சென்றான். காற்றில் திறந்திருந்த ஜன்னல் படபடத்துக் கொண்டிருக்க திரைச்சீலைகள் அங்கும் இங்குமாய் அலைய ஜன்னலை மூட எண்ணி நகர்ந்தவன் கால்கள் அங்கே கண்ட காட்சியில் ஆணி அடித்தாற் போல் நகர மறுத்தது.

ஒரு பெண்... இருளின் வரி வடிவமாய் ஜன்னலின் அருகில் நின்று கொண்டிருந்தாள். ஆனால்... நிச்சயமாய் அவள் எழிலழகி இல்லை.. அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே அவள் அவனை அழைத்தாள்..

"கதிர்.."

"எ... எ.... எழிலினியாள்..." அவன் குரல் குழறியது. கால்கள் வெடவெடக்க தலையினுள்ளே ஆங்காங்கே வெப்பப் புகைச்சல்.

மீண்டும் ஜன்னல் படபடக்க திரைச்சீலைகள் அசைய அந்த வரிவடிவம் மறைந்து கரைந்து போனது. சட்டெனத் திரும்பி வெளியே வந்தவன் வேக வேகமாய் மாடிப் படிகளில் இறங்கி ஹாலுக்கு ஓடி வந்து  யாரிலோ மோதிக் கொண்டான்.

"மாமா... என்னாச்சு மாமா.." எதிரே அகரன் நின்றிருந்தான்.

"நீ... நீ.. எப்டி இங்க..?" என்றான் கதிர்.

"அம்மாதான் உங்க ரெண்டு பேரையுமே தனியா விட மனசில்லாம என்னை கீழ போய் படுக்க சொல்லி சாவியையும் கொடுத்தமிச்சாங்க. நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணாம கீழ ரூம்ல வந்து படுத்துக்கிட்டேன்.. இப்ப படபடன்னு சத்தம் கேட்டுட்டே இருந்துச்சா கரன்ட் வேற கட்டாச்சு அதான் என்னன்னு பாக்கலாம்னு வந்தனா உங்க கூட மோதிக்கிட்டேன்.. ஆமா அக்கா எங்க தூங்கிட்டிருக்காளா...? அவ உலகம் கவுந்தாலே தொடைச்சு விட்டுட்டு தூங்கிட்டிருப்பா.. கரன்ட்லாம் பிசாத்து மேட்டர்..." என்று சிரித்தான்.

இவனிடம் எழிலைக் காணவில்லை என எப்படி சொல்வது.. அவன் சொல்வதறியாமல் விழிக்கும் போது மேலே "கலீர்" என்ற சத்தத்துடன் ஜன்னலின் படபடப்பும் இணைந்து கேட்க ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் வேகமாய் மேலே ஓடினார்கள்.

ஜன்னலின் அருகே உயரமாய் நின்றிருந்த கண்ணாடிக் குவளை உடைந்து சிதறியிருந்தது. அகரன் சென்று ஜன்னலை அடைத்து விட்டு வந்தான்.

"நாளைக்கு காலையில இதெல்லாம்  எடுத்துக்கலாம் மாமா.. ஜன்னல் அடைக்காம விட்டதால காத்துல விழுந்திருக்கு.. நீங்க போய் தூங்குங்க" என்றபடி அவன் படிகளில் இறங்கிச் செல்ல எழில்... அவளைக் காணவில்லையே உள்ளத் தவிப்புடன் அவன் தங்களின் அறைக் கதவைத் திறந்தான்.

சட்டென உயிர்பெற்று இரவு விளக்கு எரிய அங்கே கட்டிலில் சீரான சுவாசத்துடன் அமைதியாய் எழிலழகி உறங்கிக் கொண்டிருந்தாள்.

**********

Watpad id: hassyiniyaval

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro