பகுதி - 15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சுதா கூறிய வார்த்தைகள் மட்டுமே
யுவா மனம், மூளை என அனைத்திலும் நிறைந்திருக்க
முதன் முறை அவளைப் பற்றி நினைக்கையில் பயம் எழுந்தது.

"வேணாம் யுவா அவளைப் பற்றி நினைக்காதே! ச்ச்ச சரியான இம்சை , இத்தனை நாள் பிடிக்கல சொல்லிட்டு இருந்தா இப்போ பிடிக்குதுனு சொல்லுறா! அன்னைக்கு அந்த ஒரு நாள் வராமலே இருந்திருக்கலாம், டேய் யுவா உனக்கு இது நல்லா வேணும் டா " என புலம்பிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு அவளின் பதிலில் அவனையும் மீறி இதழ்கள் புன்னகைத்தது என்னவோ உண்மை தான்...
அந்த புன்னகை எதற்கு என்பதை அறிய தான் யுவா முற்படவில்லை.

தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்ற யுவாவை நினைத்து வருந்திய சுதா அழைப்பைத் துண்டித்து விட
அதிர்ந்து நின்றிருந்த அன்புவிடம் பேச சிவராமன் அவனருகில் சென்றார்.

"இங்க பாருங்க தம்பி!சுதா பேசுனதை கேட்டுருப்பீங்கனு நினைக்கிறேன், இதுக்கப்புறமும் அவளுக்கு பிடிக்கலைனு சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யாதீங்க. சுதாவுக்கு யுவா தான் அதை மாற்ற முடியாது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் "என்றவரிடம் ஆமாம் என்பதாய் தலையசைத்தவன் அவரைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை வீசினான்.

"சுதா நல்லாருக்கணும்னு தான் நானும் நினைப்பேன் அங்கிள் , அப்படி தான் நினைச்சேன் அதுனால தான் யுவாக்கிட்ட பேசவும் முடிவு பண்ணேன் இப்போ சுதாவுக்கே அவரைப் பிடிச்சிருக்குனு சொன்னதுக்கப்புறம் எனக்கு என்ன கவலை ? அவ சந்தோஷமா இருந்தாலே   போதும் எனக்கு , கல்யாண வேலை நிறைய இருக்கும் என்கிட்டேயும் கொடுங்க நானும் உதவி பண்ணுறேன் " என்றவனைப் பார்த்து புன்னகைத்தவர் "சரிங்க தம்பி நான் கிளம்புறேன் " என்றவர் அன்புவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

"ச்ச்ச எவ்ளோ பெரிய வேலையைப் பார்த்து வெச்சிருக்கேன் " தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டவனுக்கு ஏனோ மனது வலித்தது.
சுதா அவன் வாழ்வில் இல்லை தான் ஆனால் அவள் வாயாலேயே அவளுக்கு வேற ஒரு பையனை பிடித்திருக்கிறது என்பதைக் கேட்டதும் அவன் எண்ண உணர்கிறான் என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை ஒரு கையால் சுண்டி விட்டவன் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான்.

யுவாவின் குரலைக் கேட்டதும் அதற்கு மேல் சுதாவால் கல்லூரியில் இருக்க முடியவில்லை.
உடனே வீட்டிற்கு கிளம்பி வந்தவள் "ப்பா " எனக் கத்திக் கொண்டே உள்ளே நுழைய பார்வதி அவளை கேள்வியாக நோக்கினார்.

"பாரு அப்பா எங்கே ?" என்று கேட்டவள் விழிகள் அவரைத் தேட
அவள் தலையில் கொட்டிய பாருவோ கேள்வி கேட்டுட்டு அங்கே என்ன டி பார்வை எனக் கூற
அவரை முறைத்தவள் "பாரு ப்ளீஸ் " எனக் கெஞ்சினாள்.

"இன்னும் வரல " என்றவர் சுதாவின்  முகத்தை ஆராய்ந்தார்.
" ஓஓ " என்றவள்  அவளின் அறைக்கு செல்ல எத்தணிக்க "சுதா அழுதியா ?" என்று கேட்டதும் அப்படியே அதிர்ந்து  நின்றவள் "இல்லையே பாரு " எனக் கூற

"என் முகத்தைப் பார்த்து சொல்லு " என்றவரின் பதிலில் திரும்பியவள்
"பாரு "  என அழுதுகொண்டே அவர் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.

அவள் அழுகையில் பதறியவர் "என்னாச்சு டா  ஏன் அழுகுற" எனக் கேட்க
சிவராமனிடம் பேசியது, யுவா தன்னுடன் பேசாமல் இருப்பது என அனைத்தையும் கூறியவள்  "யுவி என்ன அவாய்ட் பண்ணுறானா பாரு ? ஆனால் ஏன் ? நான்தான் எந்த தப்பும் பண்ணலையே !! அப்படி ஏதாவது பண்ணியிருந்தா கூட சாரி கேட்கிறேன் பாரு , அவனை மட்டும் என் கூட பேச சொல்லுறியா ?யுவா கூட பேசாம என்னால ஒருநாள் கூட இருக்க முடியல... நீ கூட நேத்து கேட்டியே ஏன் டி மூஞ்சை இப்படி வெச்சிருக்கேனு அவன் தான் பாரு காரணம் , அவனை என் கூட பேச சொல்லுறியா ப்ளீஷ் " என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதே சுதாதானே கொஞ்ச நாட்களுக்கு முன் அம்மா அப்பா மாதிரி வராது , எனக்கு பயமாயிருக்கு என்றெல்லாம் அழுதது.

வாய் மேல் கை வைத்து ஆஆ என்று பார்த்துக் கொண்டிருந்தவரை முறைத்தவள் பாரு மொபைலை எடுத்து யுவாவிற்கு அழைக்க சொல்ல

"யுவாக்கு ஏதாவது வேலை இருக்கும் சுதா அவரை தொந்தரவு பண்ண வேணாம் " என்றவரை கெஞ்சி கொஞ்சி யுவாவிற்கு அழைக்க செய்துவிட்டாள்.

"சொல்லுங்க ஆன்டி " என்றவனின் குரலைக் கேட்டதும் முகத்தை சுழித்தவள் "நம்ம கிட்ட ஒரு வார்த்தை பேச மட்டும் காசு கேட்பான் போல இருக்கு " என மனதில் நினைத்தவள் அட்லீஸ்ட் அவன் குரலையாவது கேட்க முடிகிறதே என மகிழ்ந்து கன்னத்தில் கை வைத்து அவன் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள்.

"எப்படி இருக்க யுவா? வீட்டுல எல்லாரும் நல்லாருக்கங்களா? சுதா கிட்ட பேசுனியா?" என்றவர் லவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அவன் பதிலுக்குக் காத்திருக்க

"ஆல் குட் ஆன்டி , அங்க எல்லாரும் நல்லாருக்காங்களா ? நான் கொஞ்சம் பிஸி , அதுனால சுதாகிட்ட பேச முடியல ஆன்டி. நான் அப்புறமா அவகிட்ட பேசிடுறேன்"என்றவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எப்படியும் பேசுனேன் என்று பொய் சொல்லுவான் அப்போ பேசவே இல்லை பொய் சொல்லுறியா " எனக் கேட்டு அவனிடம் சண்டை போடலாம் என நினைத்தவள் அவன் மிகப் பெரிய உண்மை விளம்பியாக இருப்பான் என கனவா கண்டாள்!!!

"சுதா இப்போதான் வந்தா , நீ பேசலனு பீல் பண்ணிட்டு இருந்தா அவகிட்ட பேசிடுறியா ? பக்கத்துல தான் இருக்கா இரு கொடுக்கிறேன்" அவன் பதில் கூறுவதற்கு முன் மொபைல் சுதாவின் கைகளுக்கு வந்துவிட

"ஹலோ யுவி எப்படி இருக்க ? ஏன் என்கூட பேசல , உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா !" என்றவள் அடுத்த நொடி தலையை தேய்த்துக் கொண்டே பாருவை முறைத்தாள்.

"அதென்ன டி மாப்பிள்ளையை அவன் இவன்னு பேசிட்டு , மரியாதையா  பேசு " என்றவருக்கு பழிப்புக் காட்டியவள்

"சொல்லுங்க யுவா சார் , என்ன பண்ணுறீங்க? சாப்பிட்டீங்களா?" என்று கேட்டவள்

"இந்த மரியாதை போதுமா பாரு" எனக் கத்த மறுபடியும் அவள் தலையில் கொட்டியவர் முறைத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார்.

"யுவி யுவி ஒன் செகண்ட் " என்று கூறியவள் தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டு மறுபடியும் ஏன் கால் பண்ணல என்ற பழைய சங்கதியை ஆரம்பித்தாள்.

"சுதா பீ மெச்சூர்ட் ! நீ என்ன குழந்தையா ? எல்லாருக்கிட்டேயும் நான் பேசலனு சொல்லிட்டு இருக்க விட்டா ஊருக்கோ தண்டூரம் போடுவ போல! ஆர் யு மேட் , உன் கூட பேசிட்டு இருக்கிறது மட்டுமே  என் வேலை இல்லை, பேசலைனா எனக்கு வேலை இருக்கு நான் பிஸினு புரிஞ்சுக்கணும் ! ஐ ஹேட் திஸ் பிஹேவியர் , தயுவு செய்து இனிமேல் இப்படி பண்ணாத " என்றவனின் கோபமான குரலில் முட்டிக் கொண்டு வந்த அழுகையைக் கட்டுப்படுத்தியவள்

"இனிமேல் பண்ணமாட்டேன் யுவா , நீ வேணா நான் பண்ண தப்புக்கு பனிஸ்மெண்ட் கொடுத்துக்கோ? பட் ப்ளீஸ் பேசு " கெஞ்சுபவளை நினைத்து இன்னும் கோபம் தான் வந்தது யுவாவிற்கு.

"ஓஓஓ...பனிஸ்மெண்ட் தானே கொடுத்திடலாம் " என்று இழுத்தவன்
"நம்ம கல்யாணம் முடியுற வரைக்கும் நீ என் கூட பேசக் கூடாது...  டாட்" எனக் கூறி கட் செய்து விட

"சரியான ஹிட்லர் " என முணுமுணுத்தவள் "எள்ளு வய பூக்கலையே லைப் பார்ட்னருனு கூட பாக்கலையே " எனப் பாடிக் கொண்டே அப்படியே மெத்தையில் விழுந்தவளுக்கு இந்த உணர்வு மிகவும் பிடித்தது.

யாரையேனும் பிடித்து விட்டால் கெஞ்சியாவது அவர்களுடன் பேசி ஒன்று சேர்ந்து விடுவாள், பிடிக்கவில்லை என்றால் டோன்ட் கேர் என்ற பாலிசி தான்.

இப்போது தான் யுவி அவள் மனதில்
சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டானே!

உன்னை பார்த்ததும் அன்னாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்

பாடல்கள் வரிகளை இதழ்கள் தானாக முணுமுணுக்க தன் தலையணை இறுக்கிப் பிடித்தவள்
"மிஸ் யூ யுவி " எனக் கூறிய படியே கண்களை மூடிக் கொண்டாள்.

"என்ன சுதாப்பா சொல்லுறீங்க இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம்னு சொன்னா எப்படி ? சொந்த காரங்களுக்கெல்லாம் பத்தரிக்கை கொடுத்தாச்சே" என்ற பார்வதியை

"அதெல்லாம் பார்த்துக்கலாம் பாரு...அடுத்த வாரத்திலேயே நல்ல நாள் பார்த்து முடிவு பண்ணியாச்சு நம்ம மருதமலை கோவிலில் கல்யாணம் ,ரிஷப்ஷன் வேணா இன்விடேஷன்ல இருக்க தேதில நடக்கட்டும் " என்றவர் அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.

எதற்கு இவ்வளவு சீக்கிரம் என நினைத்த யுவாவும் நடக்கிறது நடக்கட்டும் அந்த தொல்லை ஒரு வாரத்திற்கு பேசாது அது போதும் என நினைத்து அமைதியாகி விட்டான்.
(நான் அப்படி விட்டுடுவேனா🚶‍♀)

இரவில் சாப்பிட கூட வராமல் யுவி தன்னிடம் பேசியதில் வானத்தில் பறந்தவள் காலையில் தான் எழுந்து வந்தாள்.

"சுதாம்மா சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பு , இன்னைக்கு கல்யாணத்திற்கு ட்ரெஸ் எடுக்கப் போகணும் " என்ற பாருவை விசித்திரமாக நோக்கியவள்

"பாரு அதுக்கு தான் ரொம்ப நாள் இருக்கே, ஒரு காபி தா பாரு " என்றபடியே  சோபாவில் அமர

"அடுத்த வாரம் உனக்கு கல்யாணம் , இன்னைக்கு டிரெஸ் எடுத்தா தான் எல்லாம் தையல் கடைல கொடுத்து ஸ்டிச் பண்ணி வாங்க முடியும் " என்றவரைப் பார்த்து சிரித்தவள் "காமெடியா சிரிச்சுட்டேன் பாரு , பட் இன்னும் கொஞ்சம் நல்லா டிரை பண்ணியிருக்கலாம் " என்றவள் தலையில் கொட்டியவர்

"தயவு செய்து வளரு டி , குழந்தை மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காதே! அடுத்த வாரம் இந்நேரம் நீ யுவா கூட இருப்ப " என்றவரை திகிலுடன் நோக்கினாள்.

"பாரு அப்போ இன்னும் ஒன் வீக்ல மேரேஜ் , ஹே ஜாலி அப்போ யுவி சீக்கிரமே பேசிடுவான் " எனக் கூறி துள்ளிக் குதித்து ஓடியவளைப் பார்த்துச் சிரித்தவர் "விளையாட்டுப் பிள்ளை " என்றபடியே கடைக்குச் செல்ல கிளம்ப ஆரம்பித்தார்.

"யுவி வந்தா நல்லாருக்குமே" என்று எண்ணியவள் பற்களைக் கடித்துக் கொண்டே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல புடவை எடுத்துக் கொண்டிருக்கும்  தாய்மார்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யுவாவின் தங்கை மானுவும் வந்திருக்க கிருஷ்ணாவும், சிவராமனும் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர்.

"மானு நல்லாருக்கியா? படிப்பு எல்லாம் எப்படி போகுது?"  என ஆரம்பித்தவள் யுவியைப் பற்றி எப்படிக் கேட்பது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

"அப்புறம் மானு எல்லாரும் வந்துருக்கீங்களா ?" என்றவளுக்கே அபத்தமாக இருந்தது அந்த கேள்வி.
யாரு வரலைனு நல்லா தெரிஞ்சும் நேரடியா ஏன் வரலனு கேட்காம இப்படி சொதப்புறியே சுதா என நினைத்தவள் மானுவின் பதிலுக்குக் காத்திருக்க  "ஆமா அண்ணி நானு ,அப்பா ,அம்மா எல்லாரும் வந்திருக்கோம்" என்ற பதிலில் கடுப்பானவள்

"மானு செல்லம் நான் தான் டியூப் லைட்டுனு நினைச்சேன் நீ என்னை விட டியூப் லைட்டா இருக்கியே! உங்க அண்ணன் வருவாரா மாட்டாரா அதை மட்டும் சொல்லு ?" என்ற சுதாவைப் பார்த்து அனைத்துப் பற்களையும் காட்டிய மானு "வர மாட்டாருனு நினைக்கிறேன் " எனக் கூற

"ஓஓஓ" என்றவள் படத்தில் வருவது போல் ஹூரோ ஹூரோயினுக்கும் புடவை தேர்ந்தெடுக்கும் படலமெல்லாம் நமக்கு நடக்காது போல என மனதில் நினைத்துக் கொண்டு மறுபடியும் அந்த பாழாய்ப்போன நகங்களைக் கடிக்க ஆரம்பித்தாள்.

சுதா இங்கே வா உனக்கு யுவா புடவை செலக்ட் பண்ணனுமாம் என்ற ராதாவின் குரலில் மகிழ்ந்தவள் அவர்களிடம் ஓடிச் சென்று யுவாவைத் தேட

"என்ன டா தேடுற பாரு யுவா வீடியோ கால் பண்ணியிருக்கான் " எனக் கூற

அவன் முகத்தை வீடியோ காலில் கண்டவள் ஒரு புறம் அவன் நேரில் வராததைக் கண்டு வருந்தினாலும் அட்லீஸ்ட் வீடியோ காலிலாவது வந்தானே என நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டாள்.

வாடியிருந்த அவள் முகத்தை கண்டவனுக்கும் சிறிதளவு கஷ்டமாகத் தான் இருந்தது.
கல்லிலும் ஈரம் போல!!!

ஒவ்வொரு புடவையாக அவள் மேல் வைத்து அவனுக்கு காட்ட "வேண்டாம் வேண்டாம் " என்று கூறிக் கொண்டே வந்தவன்

"இருந்த புடவையெல்லாம் காட்டியாச்சு டா ஆனால் நீ ஒன்னு கூட செலக்ட் பண்ணல " என்ற ராதாவின் மனக்குமறலில் "ஒரு அர்ஜெண்ட் வொர்க்  டென் மினிட்ஸ்ல நான் கால் பண்ணுறேன்" என்றவன் அவர்கள் பேச இடமளிக்காமல் வைத்து விட அதில் இன்னும் சோர்ந்தவள் தான் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்தில் மறுபடியும் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro