சிந்தனை சிதறாதே

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

புது வருட வாழ்த்து,ஆசிரியர் தினம், தந்தைகள் தினம், தாய்மார் தினம், காதலர் தினம், நண்பர்கள் தினம்...... இப்படி எதற்கெடுத்தாலும் ஒரு தினம். இத்தனை தினங்கள் எதற்காக நாம் யோசித்து உண்டா?
என்பார்வையில்...
இன்றைய உலகில் எல்லாமே வியாபாரமாகி போய்விட்டது.தாய்ப்பாலை கூட விற்கும் நிலமையிலேயே இந்த உலகம் இன்று இயங்கிக்கொண்டிருக்கின்றது.அதில் ஒரு அங்கமே இந்த தினங்களும் அதற்கான கொண்டாட்டங்களும்.
இந்த தினங்கள் மூலம் அப்படி என்ன வியாபாரம் இருக்கின்றது என்று என்னுபர்களுக்கு,
1.இத்தனை தினங்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரிப்பது.
2.கொண்டாட்டங்களுக்கு அனுசரனை வழங்குவது.
3.சலுகை அடிப்படையில் கட்டனம் அறவிடுதல்.( குறிப்பாக ஹோட்டல் மற்றும் இதர இடங்களில்).
இந்த சிறிய காரணங்களே போதும் லட்சாதிபதியாக.
இதை சரியாக உனர்ந்த காப்ர்பரேட் கம்பனிகள் மிகத் துல்லியமாக திட்டமிட்டு இவற்றை செய்வதாக நான் உனருகிறேன். உதாரனத்துக்கு    i respect teachers, i love my father, my mother is everythink, Love is life life is you இது போன்ற
வாசகங்களை அச்சடித்து ஆடைகளை வெளியிட்டால் அந்தந்த தினங்களில் வியாபாரம் கொடிகட்டி பறக்கும்.இது மட்டுமல்ல வாழ்த்தட்டை , தேனீர் கோப்பைகள், பேனாக்கள், குடை,தொப்பி, பை( பேக்குகள்) போன்ற வியாபாரமும் அந்தந்த காலகட்டத்தில் மிக அதிகமாக விற்கக்கூடிய பொருட்களாகும்.
குறிப்பாக சில நாட்களாக ஆசிரியர் தின கொண்டாட்டம் கொடிகட்டி பறக்கின்றது. ஒரு வகுப்பில் ஒரு பிள்ளை ஏதும் பரிசில் ஆசிரியருக்கு வாங்கி வந்தால் எல்லாப் பிள்ளைகளும் வாங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எல்லா பிள்ளையின் உள்ளத்திலும் உண்டாகின்றது. இதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இப்படியான போலி கெளரவிப்பு தினங்களில் இருந்து வெளிவர நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்பதே உசிதம் என் நான் கருதுகிறேன்.
பெற்றோரை கெளரவப்படுத்த சான்றோன் என்ற பெயர் எடுத்தால் போதும் , இப்படியான போலி கொண்டாட்டங்கள் தேவையில்லை.
ஆசிரியரை கெளரவிக்க நாம் ஒழுங்கான முறையில் கல்வி கற்று அவர் முன் நல்ல நிலமையில் இருந்தாலே போதும். அதுவே அவர் எதிர்பார்க்கும் பெரிய கெளரவிப்பு.
காதலி/ மனைவியை சந்தோசப்படுத்த உண்மையான அன்பை வெளிப்படுத்தினாலே போதும்.
இவை எல்லாம் நாம் செய்யும் போதும் போலிகள் தானாக மறைய வாய்ப்புகள் அதிகம் .
(ஆசிரியர் தினத்தின் போது எழுதிய ஆக்கம்)..

வாழ்த்துக்கூறுவது கூறாமல் விடுவதும் அவரவர் விருப்பம்....
எனது தனிப்பட்ட கருத்தானது ,இத்தகைய தினங்களும் வாழ்த்துக்களும் நாமே நமது கலாச்சாரத்தை அழித்துக்கொள்வதற்கு வழிவகை செய்கின்றது என்பதாகும்.
இறுதியாக எனக்கு புது வருட வாழ்த்து செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றிகள். நம் எல்லோருக்கும் இன்று மட்டுமில்லாது எல்லா நாட்களும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

----ஆஷிக்----

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro