ரமழான்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நோன்பு வைப்பதன் நோக்கம்

நோன்பு பற்றி பார்க்க முன் இஸ்லாமியன் என்பவன் யார் என்பதை பார்ப்போம்.முன் சென்ற இறை தூதர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்),யாக்கூப் (ஜேகொப்),மூசா (மோசஸ்),ஈசா (ஜீசஸ்) (அலைஹிஸ்ஸலாம்)இவர்களை நம்பிக்கை கொண்டு இறுதித்தூதர் முகம்மத் (Peace Be upon Him) அவர்களை இறைவனின் அடிமைகள் என்றும், இவர்கள் யாரும் வணங்கப்பட தகுதி அற்றவர்கள் என்றும் படைப்புகளுக்கு அப்பாற்பட்ட ,யாராலும் பெறப்படாத ,யாரையும் தன் வாரிசாக ஏற்படுத்திக்கொள்ளாத ஒரே இறைவனுக்கு மட்டும் சிரம் தாழ்த்தி வணக்கத்தை செலுத்துபவன் இஸ்லாமியன் ஆவான்.இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களை முஸ்லிம்கள என்று கூறுவோம்.

இனி விடயத்துக்குள்.....

ரமழான் மாதம் வந்துவிட்டால் நம் எல்லோருக்கும் முதலில் தெரிவது நோன்பு கஞ்சி.ஆனால் இந்த ரமழான் மாதா நோன்பு ஏன் வந்தது?பல காரணங்கள் இருக்கலாம்.அதில் எல்லோரும் அதிகம் பேசுவது ஏழைகளின் பசியை உணரத்தான் இந்த ரமழான் என்று.இருக்கலாம் ஆனால் ......

தூதர் மூசாவும் அவரது கூட்டத்தினரும் கொடுங்கோல் அரசனான பிர் அவ்னிடம்(Pharoh) முன்னால் கடலாலும பின்னால் பிர் அவ்னின் படையாலும் சூழ்ந்த வேலை இறைவன் மூசாவின் தடியை கடலை நோக்கி அடிக்க செய்து கடல் பல வழிகளாக பிளவுபட்டு மூசாவும் அவரது கூட்டத்தாரும் காப்பாற்றப்பட்டது நம் எல்லோருக்கும் தெரியும்.
அந்த நாளை நினைபடுத்த யூதர்கள் இஸ்லாமிய காலண்டர் படி முஹர்ரம் மாதம் பிறை 10 இல் நோன்பு இருப்பார்கள்.

நம் எல்லோரும் ஒரு விடயத்தை நன்றாக உணர வேண்டிய தருணம் இது.ஏனென்றால் எதிரிகளால் மூன்று பக்கமும் சூழப்பட, போக வழி இன்றி கடலை நோக்கி செல்லும் ஒரு கூட்டத்தை இறைவன் கடலில் ஒரு வழியை ஏற்படுத்தி காப்பாற்றுவது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விடயம்.
அந்த நாளை நினைவுபடுத்த யூதர்களை இறைவன் ஒரு நாள் நோன்பு இருக்க சொன்னான்.

இனி முஸ்லிம்களின் நோன்பு எதற்கு.....

முஸ்லிம்களின் வாழ்க்கை வழிகாட்டியான புனித அல்குர் ஆன் ரமழான் மாதத்திலேயே இறைவனால் தூதர் முகம்மத்துக்கு அருளப்பட்டது.இதை சிறப்பிக்கவே இறைவன் ரமழான் மாதம் முழுவதும் முஸ்லிம்களை நோன்பு வைக்க சொல்கின்றான்.இதில் நாம் படிப்பினை கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் இறைவன் மூசாவுக்கும் அவரது கூட்டத்தையும் காப்பாற்ற செய்த பேரதிசயத்திற்கு ஒரு நாள் நோன்பு இருக்க சொன்ன இறைவன் ,புனித வேதம் அல்குர் ஆன் அருளப்பட்டதற்கு ஒரு மாதம் நோன்பு வைக்க சொன்னான் என்றால் மூசாவுக்கு நடந்த அந்த அதிசய நிகழ்வைவிட பல மடங்கு இந்த புனித நூல் அதிசயங்களால் நிறைந்துள்ளது என்பதே உணமை.

ஆனால் இன்றைய பல முஸ்லிம்கள் அல்குர் ஆனை வெறுமனே அர்த்தம் தெரியாமல்(என்னையும் சேர்த்து) வாசிக்க பயன்படுத்துகிறோமே அன்றி அறிவை வளர்க்க, அதிசயங்களை கண்டுபிடிக்க பயன்படுத்துவதில்லை.ஆனால் இறைவனோ காலத்துக்கு காலம் அவனது புனித வேதத்தில் உள்ள வசனங்களை மெய்ப்பிக்கும் முகமாக பல நிகழ்வுகளையும் கண்டுபிடிப்புக்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றான்.

இந்த புனித நூலானது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.மாறாக இது முழு மனித குலத்துக்குமே சொந்தமானது.யார் வேண்டுமானாலும் இதில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்ள முடியும்.வானவியல்,அறிவியல்,குடும்ப வாழ்க்கை,சட்டங்கள்,பிள்ளை பராமரிப்பு,பெண்களை கண்ணியப்படுத்துதல் ,சொத்து பிரிவினை என பல விடயங்களை முன்னுக்கு பின் முரனில்லாமல் பேசும் இந்த நூலை நேரம் கிடைக்கும் போது படித்து வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோசத்தையும் அடைய நம் எல்லோரையும் படைத்தவன் அருள்பாளிக்க வேண்டி பிரார்த்திக்கின்றேன்.

இதில் தவறுகள் இருந்தால் முழுப்பொறுப்பும் என்னையே சாரும்.தவறுகளை சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக ஏற்று மாற்றிக்கொள்கின்றேன்.

ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கொமண்டில் கேளுங்கள். என் அறிவுக்கு உட்பட்ட வகையில் கூற முயலுகின்றேன். இல்லை என்றால் தேடிப்படித்து பதில் அளிக்க முயற்சிக்கின்றேன்.

இப்படிக்கு

அபூ மர்யம் (மர்யமின் தந்தை)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro