தீண்டல் 27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


ஹாஸ்பிடலினுள் நுழையும் வரை அருண் எதுவும் பேசாமல் இருக்கவே,வசுந்ராவும் அவனின் மனநிலை அறிந்து எதுவும் பேசாமல் அமைதியாகவே அவனுடன் வர இருவரும் ரிசப்சனில் கேட்டுவிட்டு ICU பக்கம் சென்றனர்.அங்கு அதிதி அழுதுகொண்டு அருணை வந்து அணைத்தவள்

"அண்ணா ,அம்மாவ பாருண்ணா.இப்படி ஆகும்னு கொஞ்சம் கூட நினைக்கலண்ணா.பயம்மா இருக்குண்ணா"என்றவளை அருண்

"இங்க பாரு அதிதி.அம்மாக்கு ஒன்னும் ஆகல்ல.ஆமா அப்பா எங்க?"என்றவனை

"அப்பா மெடிசின் வாங்க கீழ போய் இருக்காங்க.அப்புறம் வருண் அண்ணாக்கு கால் பண்ணா நாட் ரீச்சபிள்னு வருதுண்ணா"என்று கவலையாக அவள் கூற

"நான் அவனுக்கு மெசேஜ் செண்ட் பண்ணிருக்கேன்"என்று கூறிய நேரம அவனின் மொபைல் அலற எடுத்தவன்

"ஹலோ வருண்"....

......................................

"அம்மாக்கு இது முதல் அட்டாக் சோ ப்ராப்ளம் ஏதுமில்ல.ஆமா நீ உடனே கிளம்பி வா"

......................................

"இல்ல எங்க கல்யாணாம் நடக்கல்ல.நீதான் நாங்க எப்போ கால் பண்ணாலும் ஆன்சர் பண்ணல்லயே.அப்புறமா எப்படி உனக்கு சொல்றது.சரி டாக்டர் வர்றாரு.நான் அப்புறமா கூப்பிடுறேன்.வேண்டாம் நீ அடுத்த ப்ளைட்ல வந்திடு ஓக்கே.பாய்"என்று காலை கட் செய்தவன் அதிதியை நோக்கி

"வருண் இப்போ கிளம்பி வர்றான்.சரி அம்மாக்கு எப்போ இப்படி ஆச்சு?"என்று கேட்க

"காலைல அம்மா குளிக்க போனவங்க ரொம்ப நேரமா வெளில வரல்லைன்னு அப்பா பார்க்க போய் இருக்காங்க.அந்த இடத்துல அம்மா மயக்கமா இருக்கவும் அப்பா உடனே அம்ப்யூலன்ஸ்கு கால் செய்ய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டோம்.அம்மாவ செக் பண்ண டாக்டர் அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்லிட்டாங்க.ஆனா இது முதல் தடவை எண்டதால கொஞ்சம் கவனமா இனி பார்த்துக்க சொல்லி இருக்காங்க"என்று கூறி முடிக்க அவ்விடத்துக்கு அசோகன் வந்து சேர அதே நேரம் உள்ளிருந்து வந்த நர்ஸ்

"பேசண்ட்கு இப்போ கான்சியஸ் வந்திருக்கு.ஆனா அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க"என்று கூற எல்லோரும் உள்ளே செல்ல வசுந்ரா மட்டும் தயங்கி நிட்க அசோகன் அவள் அருகில் வந்து

"அம்மாடி ,நீ ஒன்னும் மூணாவது ஆள் கிடையாதும்மா.எங்க வீட்டு மூத்த மருமகள்.நீயும் உள்ள வா"என்று அழைக்க அவளோ

"இல்ல ஆண்டி...."என்று இழுக்க அவரோ புன்னகைத்து

"அதெல்லாம அவ சும்மா..அடுத்த வாரம் அருணோட பேர்த்டே வருது.அன்னைக்கு அவனுக்கு சர்ப்ரைஸா அவ உங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலாம்னு இருந்தா.அதுக்குள்ள இப்படி ஆகிட்டு"என்றவரை அதிதி,அருண்,வசுந்ரா என மூவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

உள்ளே சென்றதும் பர்வதம் வசுந்ராவை அருகில் அழைத்து அவர் அருகில் இருக்கச்செய்தவர் அவளின் தலையை வருடி

"சாரிம்மா.உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்"என்று கண் கலங்க வசுந்ராவோ

"என்னம்மா இப்படி சொல்ரீங்க.எனக்கு அம்மா கிடையாது.என்னோட அம்மாகிட்ட கிடைக்கவேண்டிய அன்பு எல்லாத்தையும் நான் உங்க கிட்ட இருந்துதான் பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்.நீங்க என்னடான்னா என்கிட்ட மன்னிப்பு கேட்டு என்ன தூரமாக்குறீங்களே"என்றவளை பர்வதம் இழுத்து அணைத்துக்கொண்டார்.அருணோ வசுந்ராவா இப்படி எல்லாம் பேசுகிறாள் என ஆச்சரியமாக பார்க்க அங்கு இறுக்கம் குறைந்து அமைதியான ஒரு சூழல் ஏற்பட பர்வதம் அதிதியை பக்கத்தில் அழைத்து

"அதிதி,கொஞ்சம் நித்யாவ இங்க வந்துட்டு போக சொல்லேன்"என்று கேட்க மறுபடி அங்கிருந்த நால்வரும் ஆச்சரியமாகினர்.உடனே அதிதி நித்யாவுக்கு கால் செய்ய அவளோ அடுத்த 30வது நிமிடம் அங்கிருந்தால்.எல்லோரையும் வெளியே போக சொல்லிவிட்டு நித்யாவிடம் தனியாக பர்வதம்

"அம்மா நித்யா சாரிடா.என் வயசுக்கு தகுந்த மாதிரி அன்னைக்கு நான் நடந்துக்கில்ல.என்ன மன்னிச்சிடுடா"என்று கூற அவளோ

"அட என்னம்மா நீங்க.நானும் உங்க பொண்ணு மாதிரிதானே.நீங்க கோவத்துல பேசினீங்க அவ்வளவுதான்.அத நான் அன்னைக்கே மறந்துட்டேன்மா"என்று கூறியவளை பர்வதம்

"அம்மாடி நான் ஒன்னு கேட்டா நீ அக்சப்ட் பண்ணிக்குவியா?"என்று கேட்க அவளோ

"கண்டிப்பாமா"என்றாள்.

"இல்லடா எங்க குடும்பத்தாலதான் உன்னோட கல்யாணாம் தடைப்பட்டு போச்சு.உங்க அம்மா வேற எங்க மேல கோவத்துல இருப்பாங்க.நாங்க செய்த தவற நான் சரி பண்ணலாம்னு இருக்கேன்மா.என்னோட அக்கா பையன் கரணுக்கு உன்ன பொண்ணு கேட்கலாம்னு என் அக்காகிட்ட கேட்டேன்.அவளும் ஓக்கே சொல்லிட்டா.அத நான் அடுத்த வாரம் அருண் கல்யாணத்துக்கு அவனோட பர்த்டே பார்ட்டில வெச்சு பர்மிசன் கொடுத்துட்டு உங்கிட்ட இந்த விசயத்த பேசலாம்னு இருந்தேன்மா.நீ இப்போ என்ன சொல்ர?"என்று கேட்க

"அம்மா என் கல்யாணம் தடைபட்டதுக்கு உங்க குடும்பம்தான் காரணம்னு நீங்க நினைக்கிறது தப்புமா.அருண் என்கிட்ட ப்ரெண்ட்லியா பேசினத நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.அப்புறம் இதுக்கு அப்புறமா என்னோட மெரேஜ் சம்பந்தப்பட்ட எதுவா இருந்தாலும் எங்கம்மாதான் முடிவு செய்யட்டும்னு விட்டுட்டேன்.நீங்க ஏது எண்டாலும் எங்க அம்மாகிட்ட பேசுங்க.எனக்கு இதுல எந்த ஆட்சேபனையும் இல்ல "என்று கூற அவர் நித்யாவை அருகில் அழைத்து அவள் நெற்றியில் உச்சி முகர்ந்தவர்

"சரிடா நான் உங்க அம்மாகிட்ட பேசுறேன் சரியா"என்றார்.

2 மாதங்களாகியும் வருணால் இந்தியா திரும்ப முடியவில்லை.இந்த இரண்டு மாதத்தில் பர்வதம் நித்யாவின் அம்மாவிடம் பேசி அவரின் அனுமதியுடன் இன்று பெண் பார்க்கும் படலத்திற்கு செல்ல எல்லோரும் ஆயத்தமாகி இருந்தனர்.

பர்வதம் ஹாஸ்பிடலில் இருந்து வந்த நாள் முதல் அவர் வசுந்ராவை அவர்களுடனேயே தங்க சொல்லிவிட்டார்.ஆனால் அதை மறுத்த அவள் தனக்கு விவாகரத்து கிடைத்ததும் அருணை திருமணம் செய்த பின் மருமகள் என்ற முறையில் அவர்களின் வீட்டிற்கு வருவதாக கூறியவளை யாரும் வற்புறுத்தவில்லை.ஏனென்றால் ஆரம்பத்தில் டைவோர்ஸிற்கு அப்ளை செய்தவள் திடீரென்று கானாமல் போனதால் அந்த கேஸ் அப்படியே கிடப்பில் கிடந்தது.பல வருடங்களின் பின் கோர்ட் படியேறிய பர்வதம் அந்த கேசை எடுத்து நடத்த ஒரு வாரம் முதல்தான் டைவோர்ஸ் கிடைத்திருந்தது.

இன்று நித்யாவை பெண் பார்க்க செல்ல வசுந்ராவை எவ்வளவு அழைத்தும் அவள் அங்கு செல்ல மறுத்துவிட்டாள்.ஏனென்றால் அவளை யார் என்று அங்கு வந்திருக்கும் நித்யாவின் உறவினர்கள் எவரும் கேட்டால் அருணுக்கும் அவனின் தாய்க்கும் அவமானமாகி போய்விடும் என்று கருதியதால் அவளை பர்வதம் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் செல்லவில்லை.மற்ற எல்லோரும் செல்ல தயாராகி இருந்த வேலை வருண் திடீரென்று வீட்டிற்கு வந்தான்.வந்தவனது தோற்றத்தை கண்ட எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.கண்களில் ஒலி இழந்து ,உடல் மெலிந்து ஏதோ பல நாள் பட்டினி கிடந்தவனை போல இருந்தான்.அவனின் தோற்றத்தை கண்ட பர்வதம் உடனே அவனை அணைத்துக்கொண்டவர் கொஞ்சம் அவனை விட்டு விலகி செல்லக் கோவமாக

"டேய் என்னடா இது,இப்படி இருக்க.என்னாச்சி உனக்கு.போன இடத்துல ஒழுங்கா சாப்பிட மாட்டியா?"என்று கேட்டவர்

"சரி நாங்க எல்லோரும் இன்னைக்கு நித்யாவ பொண்ணு பார்க்க போறோம் நீயும் வரியா?"என்று கேட்க அவன்

"சரிமா.10 நிமிசம்.இதோ வந்துடுறேன்" என்று கூறி உடனே குளித்து ரெடியாகி வந்தவன் அப்போதுதான் வசுந்ராவை கவனித்தான்.

"யாரு இவங்க?"என்று அதிதியிடம் கேட்க அவளோ

"அது சரி.நீ எங்க கூட பேசினாதானே உனக்கு இங்க என்ன நடகுதுன்னு சொல்லமுடியும் "என்று வாரிய தன் தங்கையை அவன் எதுவுமே கூறாமல் காரில் போய் ஏறினான்.அருண் தன்னுடைய பைக்கில் வருவதாக கூறி அவன் முன்னே செல்ல பர்வதம் தன்னுடைய மொபைல எடுத்து

"அக்கா நாங்க எல்லோரும் ரெடியாகிட்டோம்.நீங்க நேரா அவங்க வீட்டுக்கு வந்துடுங்க"என்று கூறியவரை வருண்

"யாருக்கும்மா கால் பண்ணீங்க.பெரியம்மாக்கா? அவங்க எதுக்கு நித்யாவ பொண்ணு பார்க்க போக"என்று கேட்க அதிதி அம்மாவிடம் கண் ஜாடையால் எதுவும் கூற வேண்டாம் என்று கூற வருணும் வேறு ஏதோ யோசனையில்

"சாரிம்மா அன்னைக்கு நீங்க ஹாஸ்பிடல்ல இருந்தப்போ என்னால வர முடியாம போயிடுச்சு.இன்னைக்கும் வந்ததும் வராததுமா உங்க கூட சரியா பேச கூட முடியல.நான் இன்னும் 3 நாள்ள மறுபடி யூ எஸ் போகனும்"என்றவனை

"அட அதெல்லாம் விடுப்பா.அதென்ன இன்னும் மூணு நாள்ள போகனும்னு சொல்ர.ஒரு மாசம் இருந்துட்டு போ.இல்ல வேணாம் நீ இங்கயே இருந்துடு" என்றதற்கு

"இல்லம்மா நான் மூனு நாள் லீவ்லதான் உங்கள பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்"என்றவனை

"டேய் அடுத்த வாரம் அருணோட கல்யாணம் இருக்குடா.நீ இல்லாம எப்படி பண்றது.நீ நின்னு நடத்தி வெச்சிட்டு போ"என்று கூற அவனும் அமைதியாக இருந்தான்.ஆனால் வருணுக்கு தெரியவில்லை நித்யாவை பெண்பார்க்க செல்வது அருணுக்கு அல்ல அது தன்னுடைய பெரியம்மா பையன் கரணுக்கு என்று.

---------------

ஹாய்....

என்னுடைய கதையில் அல்லது எழுத்து மற்றும் மொழிநடையில் ஏதும் சிறிய தவறுகள் இருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள்.ஏதோ படிச்சோம் கொமண்ட் போடனும் என்பதற்காக சூப்பர்,நைஸ் அப்டேட் இப்படி என்று கொமண்ட் செய்தால் எனது தவறுகளை என்னால் கண்டுபிடித்து சரி செய்ய முடியாது.

சோ,சகோதர சகோதரிகளே.......

பிழைகளை சுட்டிக்காட்டுங்கள்...இனிவரும் ஒவ்வொரு எபிசோடிலும் எனது பிழைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு நன்றி லிஸ்ட் ஒன்று போட உள்ளேன்...பிழைகளை தேடி தேடி எடுங்கள்..சிறிய எழுத்து பிழையாக இருந்தாலும் சரியே...ள்,ல்,ன் ,ண் பிழைகளாக இருந்தாலும் சரி..........

குறைகளை எதிர்பார்த்து காத்திருப்பவனாக---

உங்கள் சகோதரன்
...நான்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro