தீண்டல் 28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எல்லோரும் பெண் வீட்டை அடைந்திருக்க வாசுகியும் அவளது தாயும் எல்லோரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.ஆனால் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்த விடயம் நித்யாவின் வீட்டில் அவர்கள் உறவினர்கள் என்று கூறிக்கொள்ள யாருமே இருக்கவில்லை.பர்வதம்

"என்ன அமிர்தம் ,சொந்தக்காரங்க யாரையும் சொல்லலயா ?"என்று கேட்க அவரோ

"இல்லக்கா.இவங்க அப்பா எங்கள எல்லாம் விட்டு போனதுக்கு அப்புறம் சொந்தக்காரங்க யாருமே வர்றது இல்ல.அவரோட சொத்து ஒன்ன பாகப்பிரிவினை பண்றதுல வந்த பிரச்சினைல எல்லா சொந்தங்களும் விட்டு போயிட்டாங்க.நானும் அதோட விட்டுட்டேன்கா"என்றவரை பர்வதம் அணைத்து

"இனிமே அப்படி எல்லாம் யோசிக்க கூடாது.அதான் இப்போ நாங்க எல்லாம் இருக்கமே.மனச போட்டு குழப்பிக்க வேணாம்"என்றவரை அமிர்தம் உணர்ச்சி மேலிட பார்த்தார்.எல்லோரும் அமர்ந்திருக்க நித்யாவின் தாய் நித்யாவை அழைத்து எல்லோருக்கும் ஜூஸ் கொடுக்க சொன்னார்.உடனே பர்வதத்தின் அக்கா

"அதெல்லாம் தேவல்லம்மா,முதல்ல எங்க மருமகள வர சொல்லுங்க.போட்டோல பார்த்தது.நேர்ல பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு"என்று கூற நித்யாவோ கையில் ஜூஸுடன் வந்து எல்லோருக்கும் கொடுத்த போது பர்வதம்

"நித்யா,மாப்பிள்ளைய நல்லா பார்த்துக்கோமா"என்றார்.நித்யாவை பர்வதத்தின் அக்கா அவரின் அருகில் அமர்த்தி கதை பேச கரணோ இங்கு நிலை கொள்ளாது நித்யாவின் அழகை பார்த்து வழிந்துகொண்டிருந்தான்.அவன் அதிதியை பாவமாக பார்க்க அவளோ

"நாம பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டு இருப்போம்.பொண்ணும் மாப்பிளையும் தனியா பேசட்டுமே "என்று கூற எல்லோரும் ஒரே அடியாக சிரித்தனர்.அருண் உடனே

"அதென்ன நம்ம பெரியவங்க எல்லாம்.உன்ன யாரு ,குட்டிச்சாத்தான் லிஸ்ட்ல இருந்து பெரியவங்க லிஸ்ட்ல சேர்த்தது.சரி மாப்பிள சார் போதும் வழிஞ்சது போய் பொண்ணுகிட்ட ஏதும் தனியா பேசனும்னா பேசுங்க"என்று கரனை பார்த்து கூற வருணுக்கு என்ன நடக்கின்றது என்று ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை.கரண் எழுந்து நித்யாவுடன் அவளின் அறைக்கு செல்ல வருண் அதிதியிடம் அடிக்குரலில்

"what the hell is happening here? கரண் ஏன் நித்யா கூட போறான்? "என்று கேட்க அதிதியோ

"கரண் அண்ணாக்குதான் நித்யாவ பொண்ணு பார்க்க வந்தோம்"என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறியவளை

"அப்போ அருண்......"என்று கேட்க அதிதி யாருக்கும் விளங்காத மாதிரி அவனை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தவள் நடந்த எல்லாவற்றையும் கூறினால்.உடனே வருண் தன் தலையை பிடித்துக்கொண்டு

"oh shit..."என்று ஏதோ புலம்ப ஆரம்பித்தவன் அதிதி இருப்பதை உணர்ந்து என்ன செய்வது என்று புரியாமல் முழித்தான்.ஆனால் அதிதிக்கோ வருணின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தோன்றியது.அப்போது அவனின் அணிந்திருந்த முழுக்கை சேர்ட் கொஞ்சம் உயர்ந்ததும் அவனின் கையில் அம்மை வந்த்தது போல தழும்புகள் நிறையவே காணப்பட்டது.உடனே அதிதி

"என்னண்ணா இது தழும்பு,உனக்கு அமெரிக்கால வெச்சு சிக்கன் பாக்ஸ் ஏதும் வந்துச்சா?"என்றளை வருண்

"ஹ்ம்ம் வந்திச்சி வந்திச்சு"என்று கூறி உள்ளே சென்றேன்.

இங்கு வருண் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டிருந்தவன் தனக்கு ஆரம்பத்தில் அதிதி கால் செய்த போது எடுத்து பேசியிருக்கலாமே என்று ரொம்பவும் வேதனைப்பட்டான்.அங்கிருந்த சந்தோசமான சூழ்நிலையில் வருணின் முகமாற்றத்தை யாரும் கவனிக்கவில்லை.

தனிமையில் பேச சென்ற கரணும் நித்யாவும் வெளியில் வந்த போதே எல்லோருக்கும் புரிந்துவிட்டது இருவருக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் என்று.என்றுமில்லாத அளவு நித்யா மிகவும் வெட்கப்பட்டுக்கொண்டிருக்க அவளின் கன்னங்கள் இரண்டும் பேபி பிங்க் நிறத்திற்கு மாறி இருந்தது.கரணின் தாய் அவனிடம் சம்மதமா என்று கண் ஜாடையால் கேட்க கண்களாலேயே கரண் சம்மதம் தெரிவித்தவுடன் இரு வீட்டாரும் தாம்பூழத்தட்டை தட்டை மாற்றிக்கொண்டனர்.

நித்யாவின் வெட்கத்தை பார்த்த அதிதி

"ஆமா இங்க நித்யா நித்யானு ஒரு வாயாடி இருப்பாலே.அவ எங்க ஆளயே கானோம் "என்று கலாய்க்க எல்லோரும் வாய்விட்டு சிரிக்க வருணோ தன்னுடய தவறால் தன் வாழ்க்கையே முடிந்தது என்று நினைத்து மிகவும் வருந்திக்கொண்டிருந்தான்.

மூன்று மாதம் கழித்து நிச்சயதார்த்தத்தை உறவினர் எல்லோரையும அழைத்து செய்யலாம் என முடிவெடுத்து எல்லோரும் வீடு சென்றனர்.

வீடு வந்ததும் வருண் தன் தாயிடம் சென்று

"அம்மா எனக்கு நாளைக்கே US போகனும்மா"என்றவனை அவர்

"டேய் என்னடா சொல்ர.அடுத்த வாரம் அருணோட மேரேஜ் இருக்குடா.முடிச்சிட்டு போ"என்றவரை

"இல்லம்மா ரொம்ப க்ரிடிக்கலான ஒரு பிரச்சினை கம்பனில.இப்பதான் வாட்சப் பண்ணாங்கம்மா.என்னால ஒன்னும் பண்ண முடியல.ரிமோட் அக்சஸ் கூட செய்ய முடியாது.நான் போய்தான் ஆகனும்"என்று கூறியவனை பர்வதம்

"என்னமோ செய் வருண்.நீ வர வர ரொம்ப மாறிட்ட"என்று கூற வருண் அமைதியாக இருந்தான்.எல்லோரும் எவ்வளவு கூறியும் வருண் கேட்காமல் US செல்ல ஆயத்தமானவன் வசுந்ராவை ஒரு தடவை சந்திக்க நினைத்து அவளின் அபார்ட்மண்டுக்கு சென்றான்.

"வாங்க.எப்படி இருக்கீங்க வருண்"என்று வசுந்ரா கேட்க அவன் சுரத்தே இல்லாமல்

"சூப்பரா இருக்கேன் அண்ணி "

என்று கூறி புன்னகைக்க சிரமப்பட்டு புன்னகைத்தவனை வசுந்ரா இலகுவில் அடையாளம் கண்டு கொண்டால்.ஏனென்றால் இந்த நிலை அவளுக்கு ஒன்றும் புதியது கிடையாது.அதனால் மிகவும் இலகுவாக அவனின் மன ஓட்டத்தை புரிந்து மேலும் எதுவும் கேட்காமல் வேலை சம்பந்தமாக சில பொது விடயங்களை பேசிய பின் அவன் நாளை US செல்வதாக அவளிடம் கூற அவள் பெரிதாக ஒன்றும் ஆச்சரியப்படவில்லை.திடீரென்று அருணுக்கு கால் வர அவன் வெளியில் சென்றதும் வருண் வசுந்ராவிடம்

"அண்ணி நான் எப்பவுமே Chess ல என் ராணிய பலி கொடுத்து விளையாட மாட்டேன்.ஏன்னா எனக்கு என் ராணிய பலிகொடுத்து ஜெயிக்கிற எந்த விளையாட்டும் பிடிக்காது.ஆனா அருண் எப்போமே முதல்ல பலிகொடுக்கிறது ராணியத்தான்.ஆனால் இன்னைக்கு நான் புரிஞ்சிக்கிட்டது என்னன்னா , கேம்ல எப்படி வேணா விளையாடலாம்.ஆனா லைப்ல ஆடுற கேம்தான் எப்பவும் முக்கியம்.அண்ணன் உங்கள எவ்வளவு காதலிச்சிருந்தா இவ்வளவு போராடி உங்கள அடைஞ்சிருப்பாரு.ஆனா நான் chess ல ஒழுங்கா விளையாடி லைப்ல செஞ்ச சில சின்ன தவறுகலால எல்லாமே இழந்துட்டேன்.ஏதோ உங்கள பார்த்ததும் உங்க கிட்ட சொல்லனும்னு தோனிச்சி.ஏன்னா எனக்கு அக்கான்னு யாருமே இல்ல.உங்கள பார்த்ததும் மனசுல உள்ள கவலைகள உங்க கிட்ட சொல்லனும்னு தோனிச்சி.ப்ளீஸ் நான் இப்போ பேசினத யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.நான் போரேன் அண்ணி"என்று கூறி சென்றான்.

அருணும் போன் பேசிவிட்டு உள்ளே வர வருணும் வெளியேறுவதற்கு சரியாக இருந்தது.அருணும் வசுந்ராவிடம் விடைபெற்று இருவரும் வீடு சென்றனர்.

சரியாக ஒரு வாரம் கழித்து அருண் வசுந்ராவின் திருமணம் சிறப்பாக நடந்திருக்க திருமண வேலைகளை அதிதி,நித்யா இருவரும் மிகவும் நேர்த்தியாக செய்து முடித்தனர்.ஆபிசில் இருந்த முக்கியாமன க்ளையண்ட் மீட்டிங்க் காரணமாக கரணால் திருமணத்திற்கு வர முடியவில்லை.

இந்த நாட்களில் கரணும் நித்யாவும் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாச்சும் போனில் அரட்டை அடித்துக்கொள்வார்கள்.அவர்களிடையே காதல் வளர்ந்ததா என்று தெரியவில்லை ஆனால் நல்ல நண்பர்கள் என்ற உறவு உருவாகி இருந்தது.

மூன்று மாதங்களின் பின் ....

நித்யாவின் வீடு அவளது உறவினர்கள் எல்லாம் வந்திருக்க வீடே திருவிழாக்கோலம் பூண்டிருந்த்தது.மாப்பிளை வீட்டாரும் வந்து சேர அவ்விடமே ஒரு அமளி துமளியாக ஒரு மினி கல்யான வீடு போன்றே கானப்பட்டது.

எல்லோரும் வந்திருக்க அதிதி கரணிடம்

"டேய் கரண் அண்ணா..எப்படியோ கடைசில நித்யாவே எனக்கு அண்ணியா வர போறா.உன் வீட்ல நீ மட்டும்தானே ..சோ, இனிமே அடிக்கடி நான் உன் வீட்டுக்கு வந்து நாத்தனார் கொடுமை எல்லாம் அவளுக்கு பண்ணனும்.நீ எதுமே கண்டுக்க கூடாது.பய புள்ள எங்க வீட்டுக்கு வந்திருக்க வேண்டியது .கொஞ்சத்துல மிஸ் ஆகிட்டா" என்று கூற கரண்

"என்னது உங்க வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதா?என்ன சொல்ர.புரியல எனக்கு"என்று கரண் கூற அவளும் எதார்த்தமாக நடந்தவைகளை சாதாரனமாக கூறினால்.திடீரென்று கரணின் முகத்தை பார்த்த அதிதி

"அண்ணா உனக்கு அப்போ முன்னாடி நடந்த எதுவுமே தெரியாதா?"என்று சந்தேகமாக கேட்க அவன் உடனே தன் அம்மாவிடம் சென்று தனியாக ஏதோ பேச அவர் அங்குமிங்கும் திரு திரு வென முழித்துக்கொண்டிருந்தார்.உடனே அவ்விடத்திற்கு சென்ற பர்வதம் என்ன வென்று கேட்க அவன் நித்யா, அருண் கதையை ஏன் யாரும் தன்னிடம் ஆரம்பத்தில் கூறவில்லை என்று கேட்டபோது பர்வதமோ

"அக்கா ,நான் அன்னைக்கு கேட்டப்போ நீங்க எல்லாமே கரணுக்கு தெரியும்னு சொன்னீங்களேக்கா.இப்ப என்ன இவன் இப்படி பேசுறான்"என்று கேட்க

"இல்ல பர்வு.இந்த காலத்துல இது ஒரு பெரிய விசயமான்னு நான் இவன் கிட்ட சொல்லல"என்றவரை பர்வதம் தலையில் கை வைத்து அமர்ந்தார்.ஏனென்றால் கரணை பற்றி சிறு வயதில் இருந்தே நன்றாக தெரிந்திருந்த பர்வதம் இவன் இப்போது கோபத்தில் என்ன முடிவெடுக்க போகின்றானோ என்று குழம்பி இருந்தார்.ஏனென்றால் கரண் சிறு வயது முதலே கோபம் கொண்டால் தாறு மாறாக மற்றவர் மனது புண்படும் படியே முடிவுகளை எடுப்பான்.அதனாலேயே அவனுக்கு நண்பர்கள் என்று யாருமில்லை.அவர் எதிர்பார்த்தது போலவே கரண்

"இந்த கல்யாணம் இனிமே நடக்காது.ப்ளீஸ் எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணுங்க"என்று கூற பர்வதம் திடீரென்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே கீழே சரிந்தார்.எல்லோரும் என்னவோ ஏதோவென்று பதறி பர்வதத்தை தூக்க அப்போது அவ்விடத்துக்கு வந்த அருண் உடனே அம்ப்யூலன்ஸ்கு கால் செய்து பர்வதத்தை அழைத்து ஹாஸ்பிடல் சென்றான்.இங்கு பர்வததின் அக்கா என்ன செய்வது என்று தடுமாறி நிட்க நித்யா ஏதோ சரியில்லை என உணர்ந்ரவள்

"ஆண்டி இன்னைக்கு நிச்சயத்த வெச்சிக்காம இன்னொரு நாளைக்கு வெச்சிக்கலாம்"என்று கூறிய வேளை எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

ஹாஸ்பிடல் அழைத்து சென்ற பர்வதத்தின் நிலமை மிகவும் சீரியசாக இருந்தது.ஏனென்றால் இவருக்கு இது 2வது ஹார்ட் அட்டாக்.உடனே அருண்,வருணுக்கு கால் செய்ய அவன் அதிசயமாக பிக் பண்ணியதும் இங்கு அம்மாவின் நிலையை எடுத்துக்கூற அவன் அடுத்த ப்ளைட்டில் இந்தியா வந்தான்.

-------------
எழுத்து , சொல், வசன நடைகளில் காணப்பட்ட பெரிய தவறுகளை இலகுவாக எனக்கு விளங்கப்படுத்தி சரி செய்ய உதவிய krishnanthamira shaju821 நன்றிகள்...

டாக்டர் narmathasenthilkumar இன் கதை முதலவாது இடத்தை பிடித்திருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது....ஹ்ம்ம்ம் நம்மலும்தான் எழுதுறம் ஹிஹி😜😜
Keep rocking and Continue....
புது எழுத்தாளர்களுக்கு ஒரு motivation ஆக இது இருக்கும்.


Niranj4794  வின் சமூகத்துக்கான சாட்டையடி கவியை ஒன்று...கண்டிப்பாக படிக்கவும்.
https://my.w.tt/8ZysSHFAvM

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro