அத்தியாயம் (26)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனா ஃபாக்டரிக்கு சென்றது ஐயாவை காண்பதற்க்கு ஆனால் அவளால் அங்கு அவரை பார்க்க முடியவில்லை. ஷக்தி பேசிய வார்த்தைகள் வேறு அவளை வாட்டி வதைத்தது. அவன் முன்னிலையில் அழவும் முடியாமல், தன்னிலையை அவனுக்கு விளக்கவும் முடியாமல் உள்ளுக்குள் துடித்தாள் அவள். ஆனால் அதன் பின்னர் ஷக்தி வெகு சாதாரணமாக இருந்தான். வேலை நேரம் முடிய சஞ்சனாவையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான். வீட்டில் சஞ்சனாவின் வருகைக்காக ஐயா காத்திருந்தார். ஐயாவை கண்டவுடன் ஷக்தியும் சஞ்சனாவும் சோபாவில் அவரோடு கூட சேர்ந்து அமர்ந்து கொண்டனர்.

''உன்னை வரச் சொல்லி சொன்னதையே நான் சுத்தமா மறந்துட்டேன்ம்மா..'' சஞ்சனாவைக் கண்டதும் வருந்தினார் ஐயா.

''பரவாயில்லை மாமா. அதுக்கென்ன...''

''அது உன்னை எதுக்கு வரச்சொல்லி சொன்னேன்னா, கோயமுத்தூர் ஜீஹெச்சோட சீஃப் டாக்டர் தனபாலன் உன்னை அவரை வந்து சந்திக்கும் படி சொன்னாரும்மா. நாளை காலைல முதல் வேலையா ஷக்தி கூட போய் அவரை பார்த்து என்னன்னு விசாரிச்சிட்டு வந்துரு.''

''சரிங்க மாமா''

மறு நாள் காலை சஞ்சனா கோயமுத்தூர் மருத்துவமனைக்கு செல்ல தயார் ஆனால். ஷக்தி சரியாக காலை 8 மணிக்கு வண்டியில் ஏறி தயாராக இருக்க சஞ்சனா அவனுடன் கூட புறப்பட்டு கோயமுத்தூர் நோக்கி பயணமானாள். கோயமுத்தூர் அரசாங்க வைத்தியசாலையை அடைந்தவர்கள் அங்கு சீஃப் டாக்டரின் அறையை விசாரத்துக் கொண்டு செல்ல அவரது தனிப்பட்ட அறையில் டாக்டர் தனபாலன் அமர்ந்து இருந்தார்.

ஷக்தியையும் சஞ்ச்னாவையும் எதிர்பார்த்து காத்திருந்தவர் அவர்கள் இருவரையும் அன்பாக வரவேற்றார். சஞ்சனா க்ளினிக் ஆரம்பித்த பொழுதில் இருந்தே டாக்டர் தனபாலன் சஞ்சனாவுக்கும் ஷக்திக்கும் நன்கு அறிமுகம். ஐயாவுடனான நட்பு காரணமாக சஞ்சனா க்ளினிக் ஆரம்பிக்க உதவியதும் அவர் தான். ஆகவே தான் அவர் அழைத்திருக்கிறார் என்றதும் சஞ்சனாவும் ஷக்தியும் உடனடியாக கிளம்பி வந்து இருந்தனர்.

''அப்புறம் சஞ்சனா க்ளினிக்லாம் எப்படி போயிட்டு இருக்கு...??''

''நாட் பாட் டாக்டர்..''

''நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே வந்தது கூட ஒரு வகைல நல்லதா போச்சு. அது என்னன்னா நம்ம மெடிக்கல் காலேஜ் பசங்க 8 பொண்ணுங்க கொண்ட ஒரு டீம் ஒரு ப்ராஜெக்ட்காக உச்சிமலைங்கற கிராமத்துக்கு போறாங்க. அது ஒரு ரூரல் வில்லேஜ். அங்க உள்ள மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் அமைச்சு குடுக்கறது தான் அவங்களோட ப்ராஜெக்ட். இது ஒரு 3 நாள் கேம்ப். ஸ்டூடன்ட்ஸ் கூட போய் அவங்களை கைட் பண்றதுக்கு ஒரு லேடி டாக்டர் கூட இருந்தா நல்லா இருக்கும்னு அவங்க அபிப்ராயப் படறாங்க. அவங்க கூட இந்த ப்ராஜெக்ட்க்கு போறதுக்கு உனக்கு சம்மதமான்னு கேட்கறதுக்கு தான் உன்னை கூப்பிட்டு அனுப்புனேன்'' என்று விஷயத்தை கூறி முடித்தார்.

சஞ்சனாவுக்கு இது போன்ற காரியங்களில் ஆர்வம் அதிகம் அதை அறிந்திருந்த படியினால் தான் டாக்டர் தனபாலன் இதற்க்கு சஞ்சனாவை தெரிவு செய்திருந்தார். டாக்டர் விஷயத்தை கூறி முடிக்கும் முன்பே சஞ்சனாவை ஆர்வம் தொற்றிக்கொள்ள அவர் பேசி முடித்தவுடனேயே தன் சம்மதத்தை தெரிவித்தாள் சஞ்சனா. சஞ்சனா இதற்க்கு நிச்சயம் சம்மதிப்பாள் என்று டாக்டர் அறிந்து இருந்தார். ஆனால் இதில் இன்னுமொரு சிக்கல் இருந்தது. இப்பொழுது அதைப் பற்றி அவர் ஷக்தியுடன் கூட கலந்தாலோசித்தார்.

உச்சிமலை கோத்தகிரிலே இருந்து 9கீமீ தள்ளி இருக்கு. அது ஒரு கம்ப்ளீட் ட்ரைபில் வில்லேஜ். அதனால கோத்தகிரில எனக்கு வேண்டிய ஒரூ டாக்டர் கிட்டே தான் நம்ம டீம் கிளம்பி வரதா சொல்லி உச்சிமலையில இவங்க தங்கறதுக்கான ஏற்பாடுகளை பண்ணி தரும் படி சொல்லி இருக்கேன். அவரும் அப்போலருதே வரவங்களுக்கு வசதிகள் பண்ணி கொடுக்க தேவையான ஏற்பாடுகளைலாம் பண்ணிடே இருக்கார். ஆனால் லேடீஸ் மாத்திரம் கிளம்பி போறது எவ்வளவு தூரம் பாதுகாப்பானதுன்னு நினைச்சிட்டு இருக்கேன்'' என்று கூறி ஷக்தியிடம் ஆலோசனை கேட்டார் அவர்.

''இதுல யோசனை பண்றதுக்கு என்ன டாக்டர் இருக்கு?? சஞ்சனா போறதுன்னா நான் கூட போறேன்'' என்று கூறி சஞ்சனாவுக்கும் டாக்டருக்கும் ஒரு சிறு அதிர்ச்சியை கொடுத்தான் ஷக்தி.

இதை டாக்டரும் சஞ்சனாவும் சற்றும் கூட எதிர்பார்க்கவில்லை. டாக்டர் தனபாலன் ஐயாவின் குடும்பத்தை பல வருடங்களாக அறிவார். ஷக்தி எவ்வளவு பிஸியானவன் என்று அவருக்குத் தெரியும். ஷக்தியிடம் அவர் ஆலோசனை தான் கேட்டாரே தவிர ஷக்தி தானாக முன்வது இதை ஏற்றுக்கொள்வான் என்று அவர் நினைக்கவே இல்லை. ஆனால் எது எப்படியோ அவருக்கு அந்த பிரச்சினை தீர்ந்ததில் நிம்மதியாக இருந்தது. ஷக்தி கூட செல்வதானால் அந்த 5 நாட்களில் அங்கு செல்லும் அனைவருக்கும் தேவையான அனைத்தையும் அவன் பார்த்து செய்து கொடுப்பான் என்பது அவருக்கு நிச்சயம்.

சஞ்சனாவுக்குத் தான் இப்பொழுது சங்கோஜமாக இருந்தது. ஷக்தி கூறியதை டாக்டர் எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு இருப்பாரோ என்று அவள் மனம் கணக்குப் போட்டது. ஆனால் அவர் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. சரியாக ஒரு வாரத்தில் செல்ல வேண்டும் என்பதையும் அதற்க்கு முன்னர் சஞ்சனா சென்று அந்த மாணவிகளை பார்த்து விட்டு வந்தால் நல்லது என்றும் கூறி இருந்தார். டாக்டர் கூறிய தகவல்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டு சஞ்சனாவும் ஷக்தியும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர்.

மதிய உணவை வெளியே முடித்துவிட்டு ஷக்தியும் சஞ்சனாவும் பூம்பொழில் நோக்கி புறப்பட்டனர். சஞ்சனா எதிர்பார்த்தது போல ஷக்தி ஒன்றும் அவளிடம் அவ்வளவு கண்டிப்பாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் அவன் அவளை ஒரு சராசரிப் பெண்ணாக நடத்த ஆரம்பித்து இருந்தான். சஞ்சனாவுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் ஷக்தி அவன் இல்லை.

நம்மை நேசிக்கும் ஒருவர் நம்மை நோகடிக்கும் பொழுது கூட நம் மனது அவ்வளவு ரணப்பதில்லை ஆனால் அவர்கள் இதயத்தில் நமக்கென்று கொடுக்கப்பட்டிருந்த ஸ்தானத்தில் இருந்து நாம் இறக்கி வைக்கப் பட்டு விட்டோம் என்ற உண்மை தெரிய வரும் பொழுது உண்டாகும் வலியானது மிகவும் கொடுமையானது. ஷக்தியின் வாழ்க்கையில் சஞ்சனாவுக்கு இருத்த முக்கியத்துவம் இப்பொழுது இல்லை என்பதை உணர்ந்த பொழுது சஞ்சனாவுக்கும் அப்படித் தான் இருந்தது.

ஆனால் விஷயம் கை மீறி போய் விட்டது இதற்க்கு மேல் இதற்காக வருந்தி பயன் இல்லை என்று தோன்றவும் தனக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கையை ஏற்று வாழ அவள் தன்னை பழக்கப் படுத்திக் கொண்டாள். தொடர்ந்து வந்த வாரத்தில் ஒரு நாள் சஞ்சனா மருத்துவக் கல்லூரிக்கு சென்று அந்த மாணவிகளை சந்தித்து விட்டு அவர்களுடன் அவர்கள் செல்ல இருக்கும் ப்ராஜெக்ட் பற்றி கலந்தாலோசித்து விட்டு வந்தாள். ஷக்திக்கும் ஐயாவுக்கும் முக்கியமான ஒரு மீட்டிங் ஃபாக்டரியில் இருந்த படியினால் ஷக்தியால் அன்று அவளுடன் செல்ல முடியவில்லை. ஆகவே இம்முறை சஞ்சனா டிரைவருடன் சென்று வந்தாள்.

சஞ்சனாவுடன் கேம்ப்புக்கு ஷக்தியும் கிளம்பிப் போகிறான் என்ற பொழுது ஐயாவுக்கும் வாசுகிக்குமே கூட ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஷக்திக்கும் சஞ்சனாவுக்கும் இடையே ஏதோவொன்று இருக்கின்றது என்பதை அவர்கள் இருவருமே நன்கு அறிவர். ஆனால் அது இன்னதென்று தான் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே தோளுக்கு மேல் வளர்ந்த, சொந்தக் காலில் நிற்கின்ற, அந்த படித்த பிள்ளைகள் இருவரையும் அவர்கள் அனாவசியமாக கேள்வி கேட்கவில்லை என்பது ஒரு புறம் என்றால், ஷக்தியும் சஞ்சனாவும் வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என அவர்கள் இருவரும் உள்ளுக்குள் ஆசை கொண்டிருந்ததும் அதற்க்கு ஒரு மேலதிகக் காரணம்.

கேம்ப் செல்ல வேண்டிய நாளும் நெருங்கி வர ஐந்து நாட்களுக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து கொண்டு ஷக்தியும் சஞ்சனாவும் மருத்துவக் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு இவர்கள் இருவரின் வருகைக்காக மாணவிகளும், கேம்ப்புக்கு பொறுப்பான பேராசிரியரும், கூடவே டாக்டர் தனபாலனும் காத்துக் கொண்டு இருந்தனர். சஞ்சனாவுடன் கூட ஒரு ஆணும் தங்களுடன் இந்த கேம்ப்புக்கு வருவதாக கேள்வி பட்ட பொழுது அந்த மாணவிகளை ஒரு இனம் புரியாத ஆர்வம் தொற்றிக் கொண்டது. வெறும் சேவை நோக்குடன் செல்லவிருந்த கேம்புக்கு இப்பொழுது தான் கொஞ்சம் மசாலா தூவி சுவாரசியப் படுத்தியது போல இருந்தது.

தங்களோடு கூட வரப்போகும் ஆண் யாரென அவர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர் ஆயினும் அவன் இப்படி ஆணழகனாய் இருப்பான் என்று அந்த பெண்கள் கற்பனை செய்தும் பார்த்திருக்கவில்லை. ஷக்தியை கண்ட மாத்திரத்தில் அந்த மாணவிகளுக்கு புது உற்சாகம் பிறந்தது. மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான வண்டி அங்கு வந்து தயாராகக் காத்திருக்க அனைவரும் அதில் ஏறிக் கொண்டு பிரயாணமாயினர்.

டிரைவரும் கிளீனரும் முன் இருக்கையில் அமர்ந்திருக்க, சஞ்சனாவும் ஷக்தியும் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரை தொடர்ந்து மற்ற மாணவிகள் அமர்ந்து கொண்டனர். வண்டி புறப்பட ஆரம்பித்ததுமே சஞ்சனா ஹான்ட்ஸ்ப்ரீயை காதில் மாட்டிக் கொள்ள ஷக்தி தன் பார்வையை ஜன்னலுக்கு வெளியே மேய விட்டான். வண்டியில் ஏறியது முதல் சஞ்சனாவும் ஷக்தியும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாத நிலையில் அந்த இருவருக்குள்ளும் உள்ள சொந்தம் என்ன என்பதை, கூட இருந்த மாணவிகளால் யூகிக்க முடியாமல் போனது. இறுதியில் அதை கண்டு பிடித்தே தீருவது என்று அந்த குறும்புப் பெண்கள் போட்டி வைத்துக் கொண்டனர்.

அதில் ஒரு வாயாடிப் பெண் ''என்ன டாக்டர் எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி கம்முன்னு வரீங்க? எதாச்சு பேசுங்க?'' என்று பின் இருக்கையில் இருந்து குரலை உயர்த்தி சத்தம் வைத்தாள்.

ஆனால் காதில் ஹான்ட்ஸ்ப்ரீயை மாட்டிக் கொண்டு இருந்த சஞ்சனாவின் காதில் அது விழுகாது போக ஷக்தி தான் திரும்பி அந்த பெண்ணைப் பார்த்து சஞ்சனா காதில் ஹான்ட்ஸ்ப்ரீ வைத்து இருப்பதாக சைகை காட்டினான்.

''டாக்டர் தானே ஹான்ட்ஸ்ப்ரீ வச்சு இருக்காங்க. சார் எதுக்கு ஊமை பாஷை பேசுறிங்க??'' என்று கேட்டுவிட்டு க்ளுக் என்று சிரித்தாள் இன்னொருத்தி.

ஷக்தி சாதாரணமாகவே பெண்கள் என்றால் ஒதுங்கி சென்று விடும் ரகம், ஒரு பெண்ணை ஏறெடுத்துப் பார்த்ததற்கே அவன் பாடு பெரும் பாடாய் ஆகி இருக்க இந்த வாயாடிப் பெண்கள் அவனை வம்புக்கு இழுக்கிறார்கள் என்பது புரிய சில வினாடிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். ஆனால் அவன் இந்த பெண்களுடன் சிரித்துப் பேசினால் சஞ்சனாவின் மனம் பொறாமை கொள்ளுமோ என ஒரு திடீர் எண்ணம் அவனுக்குள் எழ வெகு சாதாரணமாக அந்த பெண்களுடன் சிரித்துப் பேசத் தொடங்கினான் அவன்.

ஆனால் ஷக்தி நினைத்ததைப் போல சஞ்சனா பொறாமை கொண்டதாகத் தான் தெரியவில்லை. கடலை விட்டு நதி எங்கு செல்லும் என்று நினைத்தாலோ என்னவோ. ஏன் என்றால் அப்பொழுது அவள் கவிதையாகத் தான் சிந்தித்துக் கொண்டு இருந்தாள். காதுக்குள் இளையராஜாவின் மெல்லிசையும் கண்களுக்கு விருந்தாக ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மார்கழியின் மரகதப் பச்சையும், பனி வாடை வீசும் காற்றும் சேர்த்து அவள் தன் கவலைகளை மறந்து வேறு ஒரு உலகுக்குள் பிரவேசித்துக் கொண்டு இருந்தாள்.

மதியம் 12 மணியளவில் வண்டி உச்சிமலையை சென்று அடைந்தது. பேருக்கேற்றார் போல உச்சிமலை ஒரு மலை உச்சியில் அமைந்திருக்க அந்த உயரத்திற்கு வண்டியை இயக்கி செல்ல பெரும் பாடு பட வேண்டி இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் வண்டியை மேற்கொண்டு மேலே செலுத்த முடியாது போக வண்டியின் சுமையைக் குறைக்கும் படியாக அனைவரும் இறங்கி நடந்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. டிரைவரும் கிளீனரும் மறுபடியும் வண்டியை மேலே கொண்டு செல்ல முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro