அத்தியாயம் (27)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வண்டியை விட்டு இறங்கியவர்களால் தரையில் கால் பதிக்க முடியாத படிக்கு காற்று பலமாக இருந்தது. ஒருவரை ஒருவர் தாங்கிய வண்ணம் மிகவும் சிரமத்துடன் அவர்கள் மலை மேல் ஏறி ஒரு வழியாக ஊருக்குள் சென்றனர். ஊருக்குள்ளும் காற்றின் வீரியம் குறைந்த பாடில்லை. அணிந்திருந்த ஆடைகளும் தலை மயிரும் காற்றடித்த திக்கில் பறக்க தாமும் காற்றில் பறந்து விடுவோமோ என்று பயந்து ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கொண்டு அவர்கள் நின்றிருந்த நேரம் வண்டியும் ஒரு வழியாக மேலே வந்து சேர வண்டியின் சத்தம் கேட்டு இரண்டு வயதில் பெரியவர்கள் இவர்களை நோக்கி நடந்து வந்தனர்.

அந்த ஊர் பெரியவர்கள் இருவரும் இவர்களை அடியாளம் கண்டு தங்களை அறிமுகம் செய்து கொண்டு அவர்களை ஊருக்குள் அழைத்து சென்றனர். அந்த ஊர் பார்பதற்கே விசித்திரமானதாக இருந்தது. ஊருக்குள் மொத்தமே 30 - 35 குடில்களே காணப் பட அந்த குடில்கள் அனைத்தும் அரைவட்ட வடிவில் கருங்கல் கொண்டு கட்டப்பட்டு இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களும் விநோதமாக உடை அணிந்து இருந்தனர். அவர்கள் தங்களுக்குள் ஏதோ ஒரு மொழியை பேசிக் கொண்ட போதும் அனைவருக்கும் தமிழில் பேச தெரிந்து இருந்தது. கடைசியாக அந்த ஊர் பெரியவர்கள் இருவரும் ஒரு வீட்டின் முன்பதாக சென்று நின்றனர். அந்த ஊருக்குள் இருத்த ஒரே காங்க்ரீட் வீடு அது மாத்திரம் தான்.

சஞ்சனாவையும் மற்ற மாணவிகளையும் வரவேற்பரையில் காத்திருக்குமாறு கூறிவிட்டு ஷக்தி ஊர் பெரியவர்களுடன் சென்று வீட்டை சுற்றி பார்த்து விட்டு வந்தான். ஷக்தியிடம் அனைத்து விபரங்களையும் கூறி விட்டு அங்கு சமையல் மற்றும் ஏனைய உதவிகள் புரியவென இருந்த சோமனையும் அவன் மனைவி சம்பாவையும் ஷக்திக்கு அறிமுகம் செய்து கொடுத்து விட்டு மாலை வருவதாகக் கூறி அந்த பெரியவர்கள் இருவரும் விடை பெற்று சென்றனர். அந்த வீட்டில் மொத்தமே 3 அறைகள் தான் இருக்க அளவில் சற்று விஸ்தாரமாக இருந்த இரு அறைகளை மாணவிகளுக்கு கொடுத்து விட்டு சிறிய அறையை ஷக்தியும் சஞ்சனாவும் எடுத்துக் கொண்டனர்.

ஷக்தி அந்த மாணவிகளிடத்தில் சஞ்சனாவை தன் உறவுக்காரப் பெண் என்று மாத்திரமே அறிமுகம் செய்திருக்க ஷக்தியும் சஞ்சனாவும் ஒரே அறையில் தங்கிக் கொள்ள போவதை அந்த மாணவிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். ஷக்தியோடு அவள் அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்த பொழுது முதலில் கொஞ்சம் அதிர்ந்த பொழுதும் அதை சஞ்சனா வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஷக்தி அறைக்கதவை தள்ளி உள்ளே நுழைய சஞ்சனவும் கூடவே உள்ளே சென்றாள். அறை மிகவும் ஒடுக்கமாக இருந்தது. சுவரோரமாக ஒரு கட்டில் போடப்பட்டு இருக்க இருவர் நின்று கொள்ள மாத்திரமே இடம் இருந்தது.

அறைக்குள் நுழைந்ததுமே ஷக்தி தொப்பென்று கட்டிலில் விழுந்து சோம்பல் முரிப்பதைப் போல கை கால்களை முறுக்கிக் கொண்டான். ''கூட ஒரு பொண்ணு இருக்காலேங்கற விவஸ்தை கூட இல்லாமல் கையை காலை விரிச்சிட்டு கட்டில்ல பாயறதை பாரு'' என்று கோபப் பட்டவாறு சஞ்சனா தன் பெட்டியை கட்டிலின் மீது வைத்து விட்டு குளியலறைக் கதவைத் திறந்து பார்த்தாள். குளியலறையும் அளவில் சிறியதாக இருந்த பொழுதும் மிகவும் சுத்தமாகவே இருக்க சஞ்சனா தன் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

உடைகளைக் களைந்து விட்டு தண்ணீரை மொண்டு ஊற்றுவதற்கென தண்ணீர் வாலிக்குள் கையை விட்டவள் மின்சாரம் தாக்கியது போல ஆடி நின்றாள். கையை பனிக்கட்டியில் வைத்தது போல கை விரைத்துக் கொண்டது. அந்த சில்லென்ற உடலை ஊசியாய் துளைக்கும் நீரை தலைக்கு ஊற்றிக் கொள்வது ஆசாதாரணம் என்று புரிய சஞ்சனா பல்லைக் கடித்துக் கொண்டு வேக வேகமாக நீரை மொண்டு உடம்புக்கு மாத்திரம் ஊற்றிக் கொண்டாள். குளிர் தாங்க முடியாமல் அவள் வாய் மேலும் கீழுமாக தன்னால் அடித்துக் கொள்ளத் தொடங்க அதற்க்கு மேல் அந்த குளிரைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடலை உலர்த்தி விட்டு மாற்றுடை மாற்றிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு சென்று கட்டிலில் ஏறி தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

சஞ்சனா அறைக்குள் வந்த பொழுது ஷக்தி கட்டிலில் இருந்து எழுந்திருந்து அவனது மாற்றுடைகளை பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொண்டு இருந்தான். சஞ்சனா வெலவெலத்துப் போய் வெளியே வந்து கட்டிலில் ஏறி அமர்ந்து கொள்ளவும் அவள் அருகே சென்றவன் ''சஞ்சனா ஆர் யூ ஆல் ரைட்??'' என்றான். சஞ்சனா பதிலுக்கு தலையை மாத்திரமே ஆட்டினாள். அவள் பற்கள் இன்னும் கடகடவென அடித்துக் கொண்டே இருந்ததது. ஷக்தி சஞ்சனாவின் கையை தொட்டுப் பார்த்தான் அவளது கை பனிக்கட்டி போல சில்லிட்டுப் போய் இருக்க ஷக்தி அவளது உடலை சூடேற்றும் விதமாக அவள் கைகளை தன் கைகளுக்குள் வாங்கி வேகமாக தேய்த்து விட்டான். பின்னர் அவளது குதிகால்களையும் அவ்வாறே செய்தான்.

ஷக்தியின் கையின் சூடு அவளது உடலில் படவே தான் சஞ்சனாவுக்கு வெடவெடப்பு நின்றது. மழையில் நனைந்த வெள்ளைப் புறாவைப் போல இருந்தவளைக் காண ஷக்திக்கு பாவமாக இருந்தது. புறாக் குஞ்சைப் போல அவளது மிரண்ட கண்களைப் பார்த்தாள் யாருமே அவள் மீது கோபம் கொள்ள முடியாது எனத் தோன்றியது. இன்னும் தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தவளை நின்ற வண்ணம் அவன் லேசாக அணைத்துக் கொண்டான். ஷக்தி அவளை அவ்வாறு அணைத்துக் கொண்டதினால் உண்டான ஸ்பரிசம் அந்த நேரம் அவளுக்கு மிக இதமாய்த் தோன்ற சஞ்சனா அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள்.

ஷக்தியின் நெஞ்சில் சஞ்சனாவின் தலை புதைந்து இருக்க ஷக்தி மென்மையாக தன் இதழ்களை வைத்து அவள் உச்சந்தலையை முகர்ந்தான். ஷக்தியின் அருகாமை தந்த கதகதப்புக்காக மாத்திரமே அவன் அணைப்புக்கு கட்டுப்பட்டு இருந்தவளுக்குள் இப்பொழுது ஒரு ரசாயன மாற்றம் உண்டானது. அதை அதற்க்கு மேல் வளர்க்க விரும்பாதவள் மெதுவாக தன் கைகள் கொண்டு ஷக்தியை தள்ளினாள். ஷக்தியோ அவளை விட்டு நகர்வதாய் இல்லை. இப்பொழுது சஞ்சனா அவளை அணைத்து இருந்த அவனது கைகளை அவளாக பிரித்து விளக்க ஷக்திக்கு அப்பொழுது தான் சஞ்சனா அவனது பிடியை உதறி விட முயற்சி செய்கிறாள் என்பது புரிந்தது.

வெலவெலத்துப் போய் இருக்கின்றாளே என்று அவளை சேர்த்து அணைத்துக் கொன்டால் அவளை கற்பழிக்கப் போவதைப் போல அவனை உதாசீனப் படுத்தி விட்டாலே என்று ஷக்திக்கு ஆத்திரமாக வந்தது. அவளைப் பற்றி சற்று முன்பதாக எழுந்த நல்லெண்ணம் வந்த வழியே காணாமல் போக அவளை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்.

அதன் பின்னர் ஷக்தி அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் ஷக்தியின் பாராமுகம் சஞ்சனாவை தான் வாட்டி வதைத்தது.. ஷக்திக்கும் தனக்குமான உறவின் புனிதத் தன்மையை புரிந்து கொள்ளவும் முடியாமல் அவனை சேர்த்துக் கொள்ளவும் முடியாமல் அவனை விட்டு தள்ளி நிற்கவும் முடியாமல் அவள் தான் மிகவும் வேதனை பட்டுக் கொண்டு இருந்தாள். ஷக்தியின் அருகாமை அவனது ஆண்மை வாசத்தை அவள் மீது தெளித்து விட்டு சென்றிருக்க, சற்று முன்பு அவளை தன் பிடிக்குள் பாதுகாப்பாக உணர வைத்தவன் அவள் மீது கோபித்துக் கொண்டு சென்று விட்டானா என்பதை அவளால் இன்னுமும் நம்ப முடியாது இருந்தது.

ஆனால் அப்பொழுது சஞ்சனா ஒரு உண்மையை புரிந்து கொண்டாள். இந்த 25 வருடங்களில் அவள் என்றுமே உணர்ந்திராத ஒரு பாதுகாப்பு உணர்வை அவள் ஷக்தியின் கரங்களுக்குள் இருக்கையில் உணர்ந்து கொண்டாள். ஷக்தியின் வலுவான கரங்களின் அணைப்பும், அவன் மீது இருந்து வெளிப்பட்ட லேசான வியர்வை கலந்த வாசனையும் அவளுக்குக் கொடுத்த பாதுகாப்பு உணர்வை இது வரை வேறு ஒருவரின் அருகாமையும் அவளுக்கு அளித்ததில்லை. ஷக்தியின் கரங்களுக்குள் அடங்கி இருந்தது இந்த உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை அவளுக்கு அளித்தது.

இதற்க்கு மேல் அதைப் பற்றியே யோசனை செய்து கொண்டு இருந்தால் அவளுக்கு அழுகை வெடித்து விடும் போலிருக்க அறையை விட்டு வெளியேறி வரவேற்பரையை நோக்கி சென்றால் சஞ்சனா. குளிக்க சென்ற ஏனைய மாணவிகளும் வெலவெலத்துப் போய் வெளியே வந்து இருக்க அனைவருமாக வரவேற்பறையில் அமைக்கப் பட்டு இருந்த நெருப்பிடத்தின் அருகே போடப்பட்டு இருந்த கம்பளியில் அமர்ந்து தங்களை இதப்படுத்திக் கொண்டு இருக்க சஞ்சனாவும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள். மதிய உணவுக்கு கோதுமை ரொட்டியும் சிறு தானியங்களால் ஆன சாம்பாரும் தயாராக இருக்க அந்த குளிருக்கு அனைவரும் தாங்கள் சாதாரணமாக உண்பதைப் பார்க்கிலும் அதிகமாக உண்டனர்.

மதிய உணவுக்குப் பின்னர் டிரைவர் மற்றும் கிளீனரின் உதவியுடன் அந்த வீட்டின் முன்பதாக மருத்துவ முகாமுக்கு தேவையான டெண்ட்டுகள் அடிக்கப் பட்டு அதற்க்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. மதிய உணவு தந்த தெம்புடன் மாணவிகளும் தாங்கள் கொண்டு வந்து இருந்த மருத்துவ உபகரணங்களை எடுத்து வைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை செய்து கொண்டும் நாளைய நாளுக்காக தங்களை தயார் படுத்திக் கொண்டும் இருந்தனர். மருத்துவ முகாமுக்கான கொட்டகை முழுவதுமாக தயார் செய்யப்பட்ட பொழுது சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்து இருந்தது.

அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு தத்தம் அறைகளுக்கு செல்ல சஞ்சனாவும் தனக்கான அறைக்குள் சென்று களைப்பாக கட்டிலில் அமர்ந்து கொண்டாள். இப்பொழுது அவளுக்கு படபடப்பு கொஞ்சம் அதிகமானது. ஒருவர் மாத்திரமே வசதியாக படுத்துக் கொள்ள கூடிய அந்த சிறிய கட்டிலில் அவளும் ஷக்தியும் படுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் பதபதைப்பை சற்று அதிகரித்திருக்க கட்டிலில் அமர்ந்து தன் முழங்காலைக் கட்டிக் கொண்டு ஷக்தியின் வரவை யோசனையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள். சற்று நேரத்தில் ஷக்தி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று சஞ்சனா லப் டப் வேகமாக அடிக்க எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஷக்தியோ சஞ்சனா அந்த அறைக்குள் இருப்பதை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. உள்ளே வந்தவன் நேராக தன் பெட்டி வைக்கப் பட்டு இருந்த இடம் நோக்கி சென்றான். பெட்டிக்குள் கையை விட்டு தேடி ஒரு ஜர்க்கின்னை வெளியே எடுத்து அவன் அணிந்து இருந்த டீஷர்ட்டுக்கு மேலாக அதை அணிந்து கொண்டான். சஞ்சனா ஓரக்கண்ணால் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ஷக்தி மறுபடியும் பெட்டிக்குள் கையை விட்டு ஒரு ட்ராக்சை எடுத்துக் கொண்டான். விறுவிறுவென தான் அணிந்து இருந்த ஷார்ட்சை கலட்டி விட்டு ட்ராக்சை அணிந்து கொண்டான். சஞ்சனா தான் திணறிப் போய் கண்களோடு கூட காதையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.

உடை மாற்றிக் கொண்டவன் கட்டிலின் அருகில் வந்து அவனுக்கென்று வைக்கப்பட்டு இருந்த தலையணையையும் கம்பளியையும் கையில் எடுத்துக் கொண்டு கதவை நோக்கி திரும்பிய பொழுது தான் சஞ்சனாவுக்கு புரிந்தது ஷக்தி அவள் அருகே படுத்துக் கொள்ளப் போவதில்லை என்பது. அந்த கட்டிலில் இருவர் படுத்துக் கொள்வதென்றால் அது ஆபத்து தான். ஆனால் ஷக்தி வேறு எங்கு சென்று படுத்துக் கொள்ளப் போகிறான் என்ற கேள்வி கரிசனையாக எழ ஷக்தியை தடுத்து,

''ஷக்தி........ எங்க போய் படுத்துக்கப் போற??'' என்றாள்.

''திண்ணைல''

''வாட்???? ஆர் யூ ஜோக்கிங்??? ராத்திரி வெளியில போகாதிங்க. வெளில காட்டுப் பன்னி, சிறுத்தைலாம் சுத்தும்னு பெரியவரு சொன்னது உன் காதுல விழலியா???'' என்றாள் கோபமாக.

சஞ்சனாவை ஓரிரு நொடிகள் கண்ணிமைக்காமல் பார்த்துவிட்டு ''இங்க படுத்துகறதுக்கு அதுவே பரவால்லை'' என்று கூறிவிட்டு சஞ்சனாவின் பதிலை எதிர்பாராமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான் ஷக்தி.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro