அத்தியாயம் (32)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆச்சி தவறி விட்டார் என்ற வார்த்தையை கேட்டதும் ஷக்திக்கும் சஞ்சனாவுக்கும் தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது. குடும்பத்தில் ஒரு மரணம் என்ற சோகம் ஒரு புறம் இருக்க அதையும் தாண்டி ஒரு நல்ல விஷயம் பேசுவதற்காக வந்த இடத்தில் இப்படி அசம்பாவிதம் நடந்து விட்டதே என்ற அதிர்ச்சியே இருவருக்கும் மேலோங்கி இருந்தது. ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ள முடியாத இருவரும் மௌனமாக வண்டியில் ஏறி சுந்தரத்தின் வீடு நோக்கி விரைந்தனர்.

வண்டி சுந்தரத்தின் வீட்டை நெருங்கிய போது வீட்டை சுற்றிலும் காணப்பட்ட வெள்ளை வேஷ்ட்டிகளும், முற்ற்த்தில் போடப்பட்டு இருந்த பந்தலும், வாசலில் கலட்டி வைக்கப் பட்டு இருந்த செருப்புகளின் எண்ணிக்கையும் வீட்டில் ஒரு துக்கம் நடந்து இருப்பதை வீட்டினுள் நுழையும் முன்னரே அவர்களுக்கு உணர்த்தியது. ஏதோ ஒரு இனம் புரியாத பயம் தொண்டயை அடைக்க, துக்க வீட்டை சென்றடையும் வரை ஷக்தியும் சஞ்சனாவும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவோ பேசிக் கொள்ளவோ இல்லை. வாழ்க்கையில் ஒன்றினையும் படியாக ஷக்தியும் சஞ்சனாவும் முனோக்கி ஒரு அடி எடுத்து வைக்க எத்தனிக்கையில் விதியோ அவர்களை விட்டு தள்ளி பத்து அடி எடுத்து வைத்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது.

வண்டியை வீட்டின் முன் நிறுத்தியவன் இறங்கிக் கொள்ளுமாறு சஞ்சனாவை நோக்கிப் பார்க்க, சஞ்சனா என்ன நினைத்தாலோ தன் ஒரு கரத்தால்  ஷக்தியின் ஒரு கரத்தை ஒரு நொடி இருக்கிப் பிடித்து பின் கையை விடுவித்துக் கொண்டு வண்டியை விட்டிறங்கிக் கொண்டாள். அந்த பிடியின் மூலமாக அவள் சொல்ல நினைத்தது, சொல்லாமல் தவிர்த்தது அத்தனையும் புரிந்தது ஷக்திக்கு. வண்டியை விட்டு இறங்கி இருவரும் வீடு நோக்கி செல்ல அவ்விருவரையும் ஒன்றாகக் கண்ட கண்கள் எல்லாம் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டது. ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாத இருவரும் நிமிர்ந்த நடையுடன் வீட்டிற்க்குள் நுழைந்தனர்.

சோகம் அப்பிய முகத்துடன் ஒட்டு மொத்த சொந்தமும் தரையில் அமர்ந்து இருக்க, நடு நாயகமாக வைக்கப் பட்டு இருக்க வேண்டிய ஆச்சியின் உடலுக்கு பதிலாக அங்கு ஆச்சியின் பெரிய புகைப்படம் ஒன்றுக்கு மாலையிடப் பட்டு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு  முன்னால் அகல் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. ஆச்சியின் உடல் அவர்கள் அங்கு வரும் முன்னரே மயானத்திற்க்கு எடுத்து செல்லப் பட்டு விட்டதை எண்ணி ஷக்தியின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் சட்டென்று வெளி வர அது தரையில் விழுந்து சிதறும் முன்னர் ஷக்தியின் முன்னால் புயல் வேகத்தில் வந்து நின்றார் சுந்தரம்.

"எங்கடா வந்த?? எதுக்காக வந்த?? உயிர் மேல ஆசை இருந்தா இந்த ஓடுகாளி சிறுக்கியையும் இழுத்துக்கிட்டு இப்பவே ஓடிப் போயிரு...." பாம்பாய் சீறி விட்டு மறு புறம் திரும்பி நின்று கொண்டார் சுந்தரம்.

சுந்தரம் சத்தமாக பேசிக் கூட கேட்டிராதவனும், சஞ்சனாவை நோக்கி கூறப் பட்ட தரங்கெட்ட வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவனும், சுற்றி வர நடப்பது ஒன்றும் சரிவர புரியாதவனாய் சிலையய் நின்றான் ஷக்தி. எதற்காக தனக்கு இந்த வசை மொழி என புரியாத சஞ்சனாவோ ஊர் முன்னிலையில் கூனிக்குறுகி சுவரோடு அப்பிக் கொள்ள, ஓடி வந்து அவளை தன் கைகளில் தாங்கினாள் வாசுகி. இவை அனைத்தும் கண் இமைக்கும் பொழுதில் நடந்து முடிய,

கோபம் கொப்பளிக்கும் கண்களுடன் "சுந்தரம்!!!!!...... நாக்கை அடக்கி பேசு. நீ துக்கத்துல இருக்கன்ற ஒரே காரணத்தால உன்னை சும்மா விடுறேன் ஆமா..... மறுபடி பொம்பளை புள்ளையைப் பத்தி தப்பா பேசின அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன் ஜாக்கிரதை!!!! கர்ஜித்தார் ஐயா.

"வந்துட்டாருடேய் தங்கச்சி பெத்த ரத்தினத்துக்கு வக்காளத்து வாங்கறதுக்கு.... அது சரி உங்க பேச்சும் நியாயம் தான். பொட்டச்சி கிட்ட எனக்கு என்ன பேச்சு... உங்க மகன் தானே என் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்தி விட்டுட்டு இப்போ இந்த வெள்ளைத் தோள் காரியை கண்டதும் அவ முந்தானியை புடிச்சிக்கிட்டு என் பொண்ணை கை வுட்டுட்டான். இந்த கூத்தை எல்லாம் தாங்கிக்க முடியாமல் தானே அநியாயமா கிழவி உசுரையே வுட்டுரிச்சு......" கண்கள் சிவக்க கூறினார் சுந்தரம்.

"ஏண்டா நாக்குல நரம்பில்லாமல் கொலை பழியைத் தூக்கி என் பையன் மேலப் போடுற??? ஆச்சி செத்ததுக்கும் சக்திக்கும் என்னடா சம்பந்தம்????........" அதிர்ச்சியாக கேட்டார் ஐயா.

அதுவரை ஆச்சியின் படத்துக்கு முன் தலை விரி கோலமாக அமர்ந்து இருந்த கனகா, தலை முடியை வாரி சுருட்டி கொண்டையாக முடிந்துக் கொண்டு நடுக்கூடத்திற்க்குள் பாய்ந்து வந்தாள்.

"என் ஆத்தா உசுரை விட்டதுக்கு இந்த சக்திப்பய தான்யா காரணம். அபியை எப்படியாச்சும் இவன் கைல புடிச்சுக் குடுத்து அதைக் கண்ணாரப் பார்த்துட்டு உசுரை விட்டுரனும்னு தான் கிழவி உசுரை கைல புடிச்சிக்கிட்டு இருந்திச்சு. இவன் அபி கையைப் புடிப்பான்னு இங்க நாங்கல்லாம் கனவு கண்டுட்டு கிடக்க, இவன் என்னனா இந்த டாக்டர் பொண்ணு கூட தேனிலவு போயிருக்கான்னு தெரிஞ்சதும் தான் அதுக்கு நெஞ்சு வலியே வந்திச்சு. என்ன செய்ய? எங்க பொறப்பு அப்படி... எங்களுக்கு உசுரு போறதும் ஒன்னு தான் மானம் போறதும் ஒன்னு தான்!!! வார்தையில் விஷம் வைத்து ஐய்யாவை ஏளனமாக பார்த்தாள் கனகா.

"நீயுமாம்மா இப்படி எல்லாம் பேசுற???...... நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒன்னும் கிடையாது. சஞ்சனா மெடிக்கல் கேம்ப்புகாக தான் வெளியூர் போனாள். அவ கூட மொத்தம் 10 மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க கூடப் போனாங்க. பொண்ணுங்க தனியா போறாங்களேன்னு நான் தான் பாதுகாப்புக்காக சக்தியை துணைக்கி அனுப்பி வச்சேன். இந்த எல்லா குழப்பத்துக்கும் காரணம் நான் தான், நீங்க தப்பு சொல்றதுன்னா என்னை தப்பு சொல்லுங்க, தண்டனை கொடுக்குறதுன்னா எனக்கு குடுங்க. எந்த பாவமும் அறியாத அந்த பசங்களை விட்றுங்க......." சபையை பார்த்து கை கூப்பி நின்றார் ஐயா.

இப்பொழுது தான் ஷக்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினை என்ன என்பதே புரிந்தது. ஐயா சபையில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இடையே பேசி அறியாதவன் சரியான சமயம் வரும் வரை மௌனமாக காத்திருந்தான். ஆனால் ஐயா அடங்கிப் போவதை சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த சுந்தரமோ வேறு திட்டம் தீட்டினார்.

"சரிங்கையா உங்க பையன் உத்தமனா இருந்தால் சக்திக்கு அபி, அபிக்கு சக்தின்னு சின்ன புள்ளைலயே நம்ம பேசிக்கிட்டது தானே?? இழவு விழுந்த வீட்டுல ஒரு நல்லது நடக்கட்டும். கிழவியோட கடைசி ஆசையை இங்கயே இப்பவே நிறைவேத்திருவோம். சபை கூடி இருக்கு, இங்கனையே சக்தி, அபி கல்யாணத்துக்கு நாளை குறிச்சிடலாம். என்ன நான் சொல்றது?? ஐயாவை கேட்டார் சுந்தரம்.

சுந்தரத்தின் அதிரடி முடிவால் எல்லோரும் ஆடிப் போய் ஐயாவின் பதிலுக்காக ஐயாவை பார்த்தனர். சஞ்சனாவோ உடலிலோ, மனதிலோ இதற்க்கு மேல் கொஞ்சம் கூட பெலனற்றவளாக கொஞ்சம் கொஞ்சமாக துவண்டு கீழே சரிந்து கொண்டு இருக்க வாசுகி தான் அவளை பற்றிப் பிடித்து தன்னோடு கூட சேர்த்து அனைத்து பிடித்துக் கொண்டாள்.இதே போன்றதொரு சபையில் தான் சஞ்சனா முன்பும் அவமதிக்கப் பட்டு காதலிலும், வாழ்க்கையிலும் தோற்க்கடிக்கப் பட்டாள். அந்த சாபம் தன்னை இன்னுமும் விட்ட பாடு இல்லையா என்று அவள் தன்னைத் தானே நொந்து கொண்டாள். ஷக்தி நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு மௌனமாய் நின்றது அவளுக்கு சமர்த்தை நினைவு படுத்தியது. படபடத்த இதயத்துடன் நடைபிணமாக நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தாள் அவள்.

ஐயா என்ற பேரைக் கேட்டால் ஊரே கையெடுத்துக் கும்பிடும். சக மனிதனை மனிதனாக மதித்த, சாதிகளுக்கும் மதங்களுக்கும் இன்னும் பிற ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட மாமனிதன் என்று பேர் சொல்லும். ஐயா முன்பு கைக்கட்டி பதில் பேசியே சுந்தரத்திற்கு பழக்கம். அப்பேர்ப்பட்ட ஐயாவை இன்று ஊரே கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதும், தலை இருக்க வால் ஆடிய கதையாக சுந்தரத்தின் ஆட்டமும், ஆச்சியை இழந்து உண்மையிலேயே வாடிய ஒரே உயிரான அபிக்கு அங்கு அரங்கேறிக் கொண்டு இருந்த நாடகம் அளவில்லா ஆத்திரத்தைக் கொடுத்தது.

ஷக்தி, சஞ்சனா காதல் பற்றி உண்மையிலேயே அறிந்த ஒரே ஜீவனும் அவளே. தன் தந்தையின் நாகரீகமற்ற பேச்சும், கொஞ்சம் கூட முறை அற்ற கோரிக்கையும், ஆச்சி உயிர் விட்டதை எண்ணி உண்டான கண்களின் ஈரம் கூட காயும் முன்னர் வேரொருத்திக்கு சொந்தமான ஒருவனை யார் சம்மதமும் இன்றி தனக்கு திருமணம் முடிப்பது பற்றி பேசிய தந்தையை கண்களால் சுட்ட படி ஐயாவுக்கு சார்பாக பேச எழுந்து வந்தாள் அபி.

"நிறுத்துங்கப்பா!!!! ஆச்சியை கொன்னது ஷக்தி கிடையாது நீங்க தான்!!!! அன்னைக்கு ராத்திரி இதே மாதிரி நீங்க போட்ட பேயாட்டம் தான்... எப்போ பாரு எனக்கும் ஷக்திக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடணும்ற பேராசைலயே இருக்கிங்களே தவிர என் மனசுல என்ன இருக்கு, ஷக்தி மனசுல என்ன இருக்குன்றத பத்தி உங்களுக்கு கவலையே இல்லை. எனக்கு ஷக்தியை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலை, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். இதுக்கு மேல என்னை கல்யாணம் பண்ணிக்க வற்புருத்தினிங்க அப்புறம் அடுத்த காரியம் நீங்க உங்க பொண்ணுக்கு தான் பண்ண வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்!!!!" சுந்தரத்தின் முகத்திற்கு முன்னால் தன் விரலைக் காட்டி எச்சரித்தாள் அபிராமி.

ஊரே கைகட்டி வேடிக்கை பார்க்க தன் மகள் தன்னை கை நீட்டி பேசிய கோபமும், வெண்ணை திரண்டு வரும் பொழுது பானையை போட்டு உடைத்த கதையாய் அவள் நடு சபையில் ஷக்தியை நிராகரித்த கோபமும் ஒன்று சேர்ந்து கண்கள் இரத்தம் கக்க அபியை நோக்கி சீறிப் பாய்ந்த சுந்தரம் அவள் கன்னத்தில் கை வைத்து அடித்த அடி அவள் சுவற்றில் முட்டி அவளது மண்டை உடைந்து இருக்க வேண்டியது ஆனால் இடையில் புகுந்த ஷக்தி அபியை இழுத்து பிடித்து தன் நெஞ்சின் மேல் போட்டுக் கொண்டான்.

"ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா

விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா....

விழியிலே விழியிலே கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தளும்புதே

கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே

முத்தமிட்ட உதடுகள் உளருதே...."

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro