அத்தியாயம் (8)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனா தன் வாழ்க்கையில் சந்தித்த நபர்களில் ஷக்தி வித்தியாசமானவன்.

தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடத்தில் தனது ஆளுமையை பயன் படுத்தி, அவர்களிடத்தில் தன்னைக் குறித்த ஒரு பயத்தை ஏற்படுத்துவது இலகு. ஆனால் ஷக்தி சம்பாதித்து இருந்தது மரியாதையை. ஷக்தி மரியாதை செலுத்தி மரியாதை பெற்றுக் கொள்பவனாக காணப்பட்டான். ஷக்தியிடம் ஒவ்வொருவரையும் கையாள ஒரு அணுகுமுறை இருந்தது. அவன் குறைவாக பேசினான் ஆனால் அந்த குறைவான சொற்களை வைத்தே பேசுபவர் மனதில் இடம் பிடித்தான்.

ஷக்தி சஞ்சனாவை அணுகிய விதம் கூட வித்தியாசமாக இருந்தது. ஷக்தியின் மனதுக்குள் காதல் இருந்தது ஆனால் ஷக்தி சஞ்சனாவினிடத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டான். சஞ்சனாவை ஒரு டாக்டராக பலர் மதித்ததுண்டு. ஆனால் சஞ்சனா ஷக்தியினிடத்தில் கண்டது, அவன் அவளுக்கு அவள் ஒரு பெண் என்ற மரியாதையை செலுத்தினான். ஒரு பெண்ணை மதிக்கவும் ஒரு பெண்ணை மென்மையாக அணுகவும் அவனுக்கு தெரிந்து இருந்தது.

சின்னா ஷக்தியை பற்றி சஞ்சனாவிடம் கூறியதன் பின்னர் அவள் ஷக்தியிடம் அவதானித்தவற்றை சஞ்சனா அசை போட்டுப் பார்த்தாள். இவ்வண்ணம் ஷக்தி சஞ்சனாவையும், சஞ்சனா ஷக்தியையும் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பிக்க அவர்களுக்கிடையேயான நட்பு வலுவுரத் தொடங்கியது. இடைவெளி காணாமற் போனது.

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் எனும் விதிக்கிணங்க ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நட்பு பாராட்டுவதைப் பார்க்கிலும், ஒரு ஆணோடு நட்பு பாராட்டுவது மிக இலகுவாக இருக்கின்றது. இது ஆண்களுக்கும் பொருந்தும்.

சஞ்சனா நர்சிங் ஹோமுக்கு தேவையான பொருட்களின் பட்டியலைத் தாயார்செய்து கொடுக்க ஷக்தி அவற்றை வரவழைத்துக் கொடுக்கும் பணியில் ஈடு பட்டு இருந்தான். சஞ்சனா அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைக்கண்ட வாசுகி ஷக்தியையும் சஞ்சனாவையும் கடைத் தெருவுக்கு அனுப்பி வைத்தால்.  வாசுகியின் வார்த்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாத்திரமே கிளம்பி சென்ற சஞ்சனா கடைத்தெருவில் கால் வைத்த மறு கணம் குதூகலமானால்.

வஞ்சகம் இல்லாமல் எல்லா கடைகளுக்கும் ஏறி இறங்கினால். பாவம்.... வாசுகியைக் கூட இது வரையில் கடைத்தெருவுக்கு அழைத்து சென்றிராத ஷக்திக்குத் தான் கண்ணைக் கட்டியது.
கையைக் கட்டிக்கொண்டு அவள் பின்னால் நடந்தான். பூம்பொழில் கடைத் தெருவில் சற்று பெரிய, பேர் சொல்லும் படியான ஜவுளிக் கடை ராசி சில்க்ஸ். அதன் உரிமையாளர் கனகாவின் கணவன் சுந்தர பாண்டியன். ஷக்தியும் சஞ்சனாவும் கடைக்குள் நுழைந்த நேரம் அவர் கல்லாவில் அமர்ந்து இருந்தார். பட்டுக் கரை வேட்டி சட்டை அணிந்து நெற்றியில் விபூதி பட்டைத் தீட்டி கையில் கழுத்தில் தங்கம் அணிந்து பெரிய மனிதர் என்ற தோற்றத்தில் இருந்தார் சுந்தர பாண்டியன்.

''வாப்பா ஷக்தி, வாம்மா..'' என்று கல்லாவில் இருந்த வண்ணமே வரவேற்றார் சுந்தர பாண்டி.

''சஞ்சனா..... இது நம்ம மாமா. அபியோட அப்பா'' என்று அறிமுகம் செய்து வைத்தான் ஷக்தி.

''வணக்கங்க'' என்று கை கூப்பினாள் சஞ்சனா.

''என்னப்பா இவ்வளவு தூரம்??'' என்று ஷக்தியை சம்பிரதாயமாக கேட்டார் சுந்தர பாண்டி.

''சஞ்சனாவுக்கு கடைத் தெருவை சுத்தி காட்டலாமேன்னு கூட்டியாந்தேன் மாமா''

''ஒஹ்......... சரிம்மா நீ உள்ள போய் பாரு'' என்று இருவருக்கும் விடை கொடுத்தார் அவர்.

சஞ்சனா அந்த கடையையே திருப்பிப் போட்டால். எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தால் ஒன்றையும் வாங்கிய பாடில்லை. பொறுமையை இழந்த ஷக்தி கடைசியில் சொல்லியே விட்டான்.

''என்ன சஞ்சனா ஒன்னும் வாங்கிக்கலையா நீ? நம்ம கடை தான் உனக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் வாங்கிக்கோ''

''இல்லை ஷக்தி எனக்கு எல்லாத்தையும் வாங்கிக்கரத்தை விட இப்படி எல்லாத்தையும் எடுத்து பார்க்கறது தான் ரொம்ப பிடிக்கும்'' என்று சீரியஸ் ஆக சொன்னவள் தொடர்ந்து ஒரு புடவையை பிரித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் பதிலைக் கேட்டவன் அதற்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை அவளை. ஒருவாராக எல்லாவற்றையும் பார்த்து முடித்தவள் தனக்கு ஒரு ஜோடி காலணிகளையும் சில ரப்பர் வளையல்களையும் மட்டும் வாங்கிக் கொண்டாள். கடைப் பையன் அவற்றை கல்லாவுக்கு கொண்டு செல்ல,

''என்னம்மா துணிமணி ஒன்னும் பிடிக்கலையா உனக்கு'' என்று கேட்டு சிரித்த வண்ணம் பொருட்களுக்கான விலைப்பட்டியலை தயார் செய்து அதை ஷக்தியின்
கையில் கொடுத்தார் சுந்தர பாண்டி.

ஷக்தி பொருட்களுக்கான பணத்தை எடுத்துக் கொடுக்க,சஞ்சனா ஷக்தியின் கையை பற்றித் தடுத்து தானே பணத்தை செலுத்தி பொருட்களைப் பெற்றுக் கொண்டாள். சஞ்சனாவை பற்றி நன்கு அறிந்து இருந்ததால் ஷக்தி அவளை தடுக்க முயலவில்லை. சஞ்சனா சகஜமாக ஷக்தியின் கை பற்றி தடுத்ததை பார்க்கத் தவறவில்லை சுந்தர பாண்டி. கடையை விட்டு வெளியேறும் தருவாயில் தான் அது சஞ்சனாவின் கண்ணில் பட்டது. அது ஒரு சாம்பல் நிற waist coat வடிவிலான ஸ்வெட்டர். கண்டவுடன் அது ஷக்திக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்ற வேகமாக சென்று அதை எடுத்துக் கொண்டு வந்தாள் சஞ்சனா.

ஷக்தி கல்லாவுக்கு முன்னாள் நின்று தன் மாமாவுடன் பேசிக்கொண்டு நின்றான். சஞ்சனா அருகில் இருந்து நகர்ந்ததை அவன் கவனிக்கவில்லை. ஸ்வெட்டரை எடுத்து வந்தவள் அதை ஷக்தியின் முதுகில் வைத்து அளவு பார்த்தாள். சஞ்சனாவின் கை பட்டு திரும்பிப் பார்த்தான் ஷக்தி. ஷக்தி திரும்பியது வசதியாக இருக்க ஸ்வெட்டரை ஷக்திக்கு முன் புறமாகவும் வைத்துப் பார்த்து திருப்த்தி அடைந்தவள்,

''இது உனக்கு சூப்பரா இருக்கு ஷக்தி. இதை உனக்கு வாங்கிக்கலாம்'' என அவளே கேள்வி கேட்டு அவளே பதிலும் சொல்லி அதை கவுண்ட்டரில் வைத்தாள் விலை இடும் படியாக.

சுந்தர பாண்டி இவ்வளவு நெருக்கத்தை அவர் முன்னிலையில் எதிர்பார்க்கவில்லை போலும். சங்கோஜப்பட்டு தலையை சொரிந்து கொண்டவர் நான் எதையும் பார்க்கவில்லை என்பது போல் ஸ்வெட்டருக்கும் விலையிட்டு சஞ்சனாவிடம் கொடுத்து அதற்குண்டான பணத்தை பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் முகம் பார்த்து விடை பெற்றுக் கொள்வது ஷக்திக்கும் சுந்தர பாண்டிக்கும் தான் பெரும் அவஸ்தையாக இருந்தது. தான் செய்த காரியத்தின் தீவிரத்தை அறியாத சஞ்சனா மட்டும் சந்தோஷமாக அவரிடத்தில் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். மிகவும் நாகரீகமாக நடந்து கொண்ட சுந்தர பாண்டியை அபிக்கு அடுத்த படியாக அவளுக்கு பிடித்து இருந்தது. அந்த கடையை விட்டு வெளியே வந்த பின்னர் தான் சஞ்சனா தன் மீது உரிமை எடுத்து செய்த முதல் காரியத்தை ஷக்தியால் ரசிக்க முடிந்தது. நடையில் துள்ளலுடன் சஞ்சனாவோடு சேர்ந்து ஒட்டி நடந்தான் ஷக்தி.

''கடைத் தெருவுல டீயும் மிளகாய் பஜ்ஜியும் சூப்பரா இருக்கும்னு சின்னா சொன்னான். சின்னாக்கு ரெண்டு மிளகாய் பஜ்ஜி வாங்கிட்டு போகலாமா???'' என்று சிறு பிள்ளை போல் கேட்டால் சஞ்சனா.

சரி என தலை ஆட்டியவன் முதன் முறையாக ரோட்டுக்கடையில் டீக்காக காத்து இருந்தான். ஷக்தியை அறிந்தவர்கள் அவனை கடந்து செல்லும் போது இது நிஜத்திலும் ஷக்தி தானா என பார்த்துவிட்டு சென்றனர். அவன் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து இருப்பது ஒரு அதிசயம் என்றால், அவன் அருகே அமர்ந்து இருந்த அழகி எட்டாவது அதிசயமாக அந்த ஊர் மக்களுக்கு தோன்றினாள்.

டீக்கடை பெஞ்சிலேயே தங்கள் பாதி வாழ்வை கழித்து வந்த ஒரு இளைஞர் கூட்டம் சஞ்சனாவை தங்கள் கண்களாலேயே துகில் உரிக்க, பரபரப்பானான் ஷக்தி. அந்த இடத்தில் அதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவன் அவசர அவசரமாக சஞ்சனாவுக்கு மட்டும் ஒரு கிளாஸ் டீயை வாங்கிக் கொடுத்து, பஜ்ஜியை பார்சல் கட்டிக் கொண்டு சஞ்சனாவை அந்த இடத்தை விட்டு கிளப்பினான். சஞ்சனா எப்பொழுது கடைக்கு சென்றாலும் தனக்கு பிடித்தவர்களுக்கென்று எதையாவது வாங்கி வருவது வழக்கம். அவளது இது போன்ற சிறு சிறு நடவடிக்கைகளை ஷக்தி மிகவும் ரசித்தான். அவை அவனிடத்தில் அவளை இன்னும் அதிகமாக ஈர்த்தது. ஆன போதிலும் டீக்கடை பெஞ்சில் அந்த இளைஞர்கள் சஞ்சனாவை அப்படி உற்று உற்று பார்த்தது ஷக்திக்கு எரிச்சலாக இருந்தது.

வண்டியில் செல்லும் போது நாசூக்காக சஞ்சனாவிடம் கேட்டே விட்டான்.

''ஏன் சஞ்சனா முன்னலாம் இந்த சுடிதாருக்கெல்லாம் கூடவே ஒரு துப்பட்டா வருமே... இப்போலாம் அப்படி வர்ரதில்லையா??''

ஷக்தி இப்படி திடீரென கேட்டதும் சஞ்சனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

''இல்லையே எல்லா சுடிதாருக்கும் கூடவே துப்பட்டாவும் வருமே...''

''ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்'' என்று இழுத்து தலையை ஆட்டினான் ஷக்தி''

''ஏன் திடீர்னு சுடிதார் பத்திலாம் கேக்கற??''

''இல்ல நீ சுடிதாருக்கு துப்பட்டா போட்டு நான் பாத்ததே இல்ல. அது தான் சும்மா கேட்டேன்''

ஷக்தி அப்படி சொல்லவும் தான் இவன் எங்கே வருகிறான் என்பது சஞ்சனாவுக்கு புரிந்தது. அந்த இளைஞர்கள் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்ததையும் சஞ்சனா பார்த்தாள், அதற்கு ஷக்தி டென்ஷன் ஆனதையும் சஞ்சனா பார்த்தாள்.

ஆனால் ஷக்தியோடு விளையாடிப் பார்க்க ஆசை கொண்டவள், ''ஏன் துப்பட்டா போடாம நல்லா இல்லையா ஷக்தி?? என்றாள்.

அதுற்கு மேல் அவளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் ''ச்சே.. ச்சே.. அப்படிலாம் ஒன்னும் கிடயாது'' என்று சொல்லி மழுப்பினான் ஷக்தி.

ஒரு பெண்ணின் உடலைப் பற்றி அவளிடமே விவாதிக்கும் அளவு ஷக்தி வளர்ந்துஇருக்கவில்லை. ஒரு பெண்ணின் ஆடை சுதந்திரத்தில் தலையிடுபவதும் அவன் சுபாவம் இல்லை. ஆகவே அதற்கு மேல் அது பற்றி அவன் பேச விரும்பவில்லை. ஷக்தி தன்னை ஒரு இளவரசி போல நடத்துவதை சஞ்சனா பெரிதும் ரசித்தாள். ஷக்தி கூட இருந்த நேரங்களில் அவளைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்பு அரண் இருப்பதை அவள் உணர்ந்தாள். சஞ்சனாவுக்காக ஷக்தி எப்பொழுதுமே வண்டி கதவை திறந்து கொடுப்பான்.அவள் ஏறி அமர்ந்ததும் கதவை அவனே சாத்தி விட்டான். சஞ்சனாவுக்காக நாற்காலிகளை இழுத்துப் போட்டான். அவள் சௌகர்யமாக அமர்ந்து கொண்டாள் என்று தெரிந்த பின்னரே அவன் அமர்ந்தான்.

டெல்லி போன்ற பெரு நகரங்களில் வாழும் ஆண்கள் கூட பெண்களை ஒரு கட்டத்துக்கு மேல் அடக்கியே வைக்க விரும்பும் இந்த காலத்தில், ஒரு பின் தங்கிய கிராமத்து தாயால் வளர்க்கப் பட்ட ஷக்தி தன்னை ஒரு இளவரசி போல உணர வைப்பது சஞ்சனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro