தாரகை 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


"இல்லை வேண்டாம் ஜானு கார்லயே போகலாம்" என்றவன் காரை ஸ்டார்ட் செய்தான்..
அவள் மியூசிக்கை ஆன் செய்ய இருவரும் பாடலை கேட்டு கொண்டே செல்ல...

"அபி..எங்க டா போறோம்" என்றாள் ஜானவி..

"வெயிட் அன்ட் சீ... " எனவும் அவளும் "ம்ம்" என்று தலையை அசைத்தாள்.

அபிநயன் ஒரு காபி ஷாப் முன்பு காரை நிறுத்த காரில் இருந்து கீழே இறங்கியவள் காபி ஷாப்பை பார்க்க அவன் அவளிடம் வந்தவன் அவள் கரத்தை பற்றி கொண்டு காபி ஷாப் உள்ளே அழைத்து சென்றான்..

இருவரும் ஒரு டேபிளில் எதிரெதிரே அமர அபிநயன் இரண்டு கோல்டு காபி ஆர்டர் செய்தான்..

எதிரில் அமர்ந்தவளின் கையை பிடித்து கொண்டு அவள் விரல்களின் இடையே விளையாடி கொண்டிருந்தான் அவள் மேல் இருந்து கண்களை விளக்காமல்...

"அபி.. " என சிணுங்கியவள் சுற்றும் முற்றிலும் பார்த்தவள் "எல்லாரும் பாக்குறாங்க விடு டா" என முனு முனுத்தவளை முறைத்து பார்க்க அவளோ பயத்துடன் தலையை குனிந்து கொண்டாள்..

அவள் செயலில் சிரிப்பை அடக்கி கொண்டவன் "ஜானு... எனக்கு மத்தவங்கள பத்திலாம் கவலை இல்லை..நீ என் ஒய்ப்.. எனக்கு உன் மேல எல்லா உரிமையும் இருக்கு...யாரும் என்ன கேள்வி கேட்க முடியாது.."

"ஆமா அபி ஆனா இது பப்ளிக் பிளேஸ் ஆச்சே எனக்கு ஒருமாதிரியா இருக்கு.."என்றவள் ஒரு கையை பின் கழுத்தில் வைத்தவள் "அதோ அந்த ஆண்டி இருக்காங்கள அவங்க என்ன தான் பாத்துட்டுருக்காங்க" என அவனிடம் முனுமுனுக்க சட்டென பின்னால் திரும்பியவன் அந்த பெண்மணியை முறைக்க அவர் வேறு புறம் திரும்பி கொண்டார்..

"அபி.. நீ ஏன் அவங்கள முறைக்கிற.." என்றவளை பார்த்தவன் "லூசா நீ அவங்களலாம் பார்த்து எதுக்கு பயந்துட்டுருக்க.. நமக்கு இருக்கிறது ஒரு லைப்... அத சந்தோசமா வாழறத விட்டுடு மத்தவங்களுக்கு பயந்து வாழ சொல்றியா..நாம நாமாவே இருப்போம் ஜானு.."

"சரி ஏதோ சொல்ற கேட்டுக்கிறேன்" ஜானவி புன்னகை மலர்ந்தாள்..

இருவரும் காபியை குடித்து முடித்தனர்.."ஓகே போலாமா..."

"அபி அடுத்து எங்க போறோம்" என்று அவள் வினவ..

"வா சொல்றேன்" என அவளை அழைத்து சென்று காரில் ஏற்றியவன் ஒரு பூங்காவின் முன் நிறுத்தினான்..

"ரொம்ப அழகா இருக்கு.. " என்றவள் அங்கிருந்த குழந்தைகளை காண அவர்கள் அழகாக விளையாடி கொண்டிருந்தனர்..

"ரொம்பவே அழகா இருக்கு இந்த பார்க்" என்றவள் காரில் இருந்து கீழே இறங்கினாள்...

அபிநயன் காரை ஓரமாக பார்க் செய்து விட்டு கீழே இறங்கியவன் ஜானவியின் கைகளை பற்றி கொண்டு பூங்காவின் உள்ளே நுழைந்தான்...

"நீ இங்கயே இரு இதோ வந்துறேன்" என்றவன் அங்கிருந்து சென்று விட ஜானவி அங்கேயே நின்றிருந்தாள்..

சில நிமிடங்களுக்கு பின் அவள் கைபேசி சிணுங்க அதை அட்டன் செய்து காதில் வைத்தவள் "ஹெலோ" என்க..

"ஹலோ ஜானு நான் தான் அபிநயன்..."

"ஹலோ அபி நீ எங்கடா இருக்க.." என்று அவள் சுற்றும் முற்றும் தேட

தேடுறத விட்டு கொஞ்சம் மேல பாரு என்றவன் போன் அழைப்பை துண்டித்து விட்டான்..

"ஹலோ அபி.. அபி என்ன இவன்" என்றவாறு அவள் வானை நோக்க..

"ஐ லவ் யூ ஜானவி....🎈🎈🎈🎈என்று பலூன்கள் வரிசையாக பறப்பதை பார்த்து விழி விரித்தவள் அகன்ற சிரிப்பை உதிர்த்து நிற்க சட்டென பின்னால் இருந்து இரு கரங்கள் அவள் இடையை வளைத்து கொண்டது..

அக்கரங்களுக்கு சொந்தகாரன் யாரென்பதை அறிந்தவள் அவன் புறம் திரும்பி அவனை இருக்கமாக கட்டி கொண்டாள்...

"ஐ லவ் யூ டூ அபி" என்று கண்ணீரால் கூறியவளின் நெற்றியில் இதழ் பதித்தான் அவளின் கணவன்.

"ஓகே வா போலாம்" என்று அவளை அழைத்து கொண்டு சிறிது தூரம் செல்ல .....

அந்த பூங்காவில் காணும் இடமெல்லாம் வண்ண மலர்கள் பூத்து குலுங்க குழந்தைகள் அனந்தமாய் ஓடி ஆடி விளையாடி கொண்டிருந்தனர்..

அபிநயன் ஜானவியை அழைத்து கொண்டு சென்றவன் "இது ரொம்ப பெரிய பார்க் இப்போ நம்ம உள்ள போனா வர நைட் ஆகிடும்...ம்ம் சீக்கிரம் போய்ட்டு வர நம்ம சைக்கிள் ரைடு போகலாம்" என்றவன் ஒரு மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து கொண்டான்..

"அபி என்ன ஒரு சைக்கிள் மட்டும்... அப்போ எனக்கு" என்று ஜானவி பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்..

"வா சொல்றேன்" என்றவாறு சைக்கிளில் ஏறி அமர்ந்தவன் "ஏறு" என்க அவளும் சென்று பின்னால் அமர அவளை இழுத்து அவன் முன் நிறுத்தியவன் "இங்க உட்காரு" என்று அவன் முன்புறத்தை காண்பிக்க அவளும் அமரந்தாள்..

அவனும் சைக்கிளை ஒட்டி சென்றான்..

பூங்காவின் உள்ளே நுழைய நுழைய ஆள்நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது...

அவன் முகத்தை அவள் தோளின் மீது வைத்து கொண்டு மிதி வண்டியை ஓட்ட அவளோ புன்னகையுடன் மௌனித்திருந்தாள்...
"அபி நேரா பாத்து வண்டிய ஓட்டு யாராவது பாக்க போறாங்க..."

அவள் கூறுவதை காதில் வாங்கிகொள்ளாதவன் அவள் கழுத்தில் இதழ் பதிக்க...

"அபி" என்று சிணுங்கினாள் அவள்..

"இன்னைக்கு முழுக்க நம்ம செமயா என்ஜாய் பண்ணனும் ஓகே" என்றவனின் சொல்லிற்கு தலையை அசைத்தவள் "அபி அபி ஸ்டாப்" என்று கத்த அவளை புரியாமல் பார்த்தவன் "என்ன" என்று வினவ "ஐஸ்கிரீம் வேணும் டா ப்ளீஸ்" என்றாள் ஜானவி..

"ம்ம் என்று தலையை அசைத்தவன் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு
அவளை அழைத்து கொண்டு ஐஸ்கிரீம் கடைக்கு செல்ல அங்கு மட்டும் கூட்டம் கூடியிருந்தது..

அபிநயன் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்தான்..

இருவரும் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர் ...

அவள் ஐஸ்கிரீமை சாப்பிட்டு கொண்டிருக்க அபிநயன் கைபேசி சிணுங்கியது..

"ஒன் மினிட்" என்றவன் அங்கிருந்து சற்று தொலைவில் சென்று கைபேசியில் பேச தொடங்க சில பெண்கள் அபிநயனை கண்கள் ஆகலாமல் பார்த்து கொண்டு நின்றனர்..

"ஏய் அவன் அந்த ஒய்ட் ஷர்ட்ல செம ஹேண்ட்ஸமா இருக்கான்ல.."என்றாள் ஒரு பெண்.

"ஏய் ஆமா டி... அவன் எனக்கு பாய் பிரண்ட்டா கிடைச்சா சூப்பரா இருக்கும்..." என்று மற்றோரு பெண் கூற..

"நோ நோ.. அவன் எனக்கு தான்...நம்ம இங்கிருந்து கிளம்பறதுக்குள்ள அவன நான் கரெக்ட் பண்ணி காட்றேன்" என்றாள் இன்னொருத்தி....

இது அனைத்தையும் கேட்டு கொண்டு நின்றிருந்த ஜானவி எரிச்சலடைந்தாள்..

ஜானவி அவர்களை முறைத்து நின்றவள் நேராக கைபேசியில் பேசிகொண்டிருப்பவன் முன் சென்று நின்றாள்..

அந்த பெண்கள் அவளை குழப்பமுடன் பார்த்து கொண்டு நின்றனர்...

"ஏய் யாரு டி அவ" என்று அவர்களுக்குள் பேசி கொள்ள...

"தெரியல டி" என்றாள் மற்றொரு பெண்..

பேசி முடித்தவன் அவள் மீது புன்னகையை வீசினான்..

"சரி நான் போய்ட்டு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்..எனக்கும் ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு...உனக்கு ஏதாவது வேணுமா"

"இல்லை நீ சீக்கிரம் வா" என்றாள் ஜானவி..

"ஓகே நீ இங்கேயே இரு" என்றவன் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி வர சென்று விட்டான்..

அங்கு நின்று கொண்டிருக்கும் பெண்களை ஏளனமாக பார்த்து நின்றவள் அங்கிருந்த மர பெஞ்சில் அமர அந்த பெண்கள் ஜானவியின் அருகில் வந்து நின்றனர்...

"என்ன டி யாரு டி நீ...எங்க முன்னாடி சீன் போடுறியா..". என்று ஒரு பெண் கேட்கவும் ஜானவி அவர்களை முகம் சுருக்கி பார்த்தவள் பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டாள்...

அவர்களை முறைத்தவள் "ஏய் நீங்க யாரு என்ன கேக்க... சீன் போடுறது நானா இல்லை நீங்களா?." என்றாள் ஜானவி சினத்துடன்..

"உனக்கு என்ன ப்ரோப்லேம் நீ எதுக்கு இவ்வளவு கோபப்படுற இப்போ..." என்றாள் ஒருவள்..

"அத உங்க கிட்ட சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை" என்று ஜானவி கூறவும்

"ஓ அப்படியா...இதுலயே தெரியுது நீ எப்படி பட்டவனு.. அவன் பாக்க எவ்வளவு ஹாண்ட்ஸமா இருக்கான்.. நீயோ கிராமத்துகாரி மாதிரி இருக்க..பொறாமை பிடிச்சவ..உனக்கு என்ன தகுதி இருக்கு அவனுக்கு பிரண்ட் ஆக கூட" என்று அவர்கள் ஜானவியை கேலி செய்ய அவளோ கண்கலங்கி நின்றாள்...

அந்த நான்கு பெண்களும் சிரிக்க "ஏய் அழுமூஞ்சி பாத்திருக்கிங்களா டி பாருங்க" என்றவள் சத்தமாக சிரித்த அந்த நொடி....அவள் கண்ணம் சிவந்திருந்தது...

அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க
அபிநயன் கோபமாக நின்று கொண்டிருந்தான்..

ஜானவியை இழுத்து அணைத்து கொண்டு நின்றவன் நெருப்பு கணலாய் அந்த பெண்கள் மீது பார்வையை வீசினான்.

அந்த பெண்கள் அவனை புரியாமல் பார்த்து நின்றனர்..

"ஏய் என்ன தைரியம் இருந்தா என் ஜானவியையே அழ வைப்பீங்க..

என்ன சொன்ன நீ இவ சீன் போடுறாளா... அப்போ நீங்க பண்றதுக்கு என்ன அர்த்தம்..
நீங்களாம் பொண்ணுங்க தானா இப்படி தான் பப்ளிக் பிளேஸ்ல பெஹவ் பண்ண உங்க வீட்ல சொல்லி கொடுத்துருக்காங்களா.."
என்றவனை பார்த்த அப்பெண்கள் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றனர்...

"உங்களுக்கு அறிவுனு ஒன்னு இல்லை..அவ எப்படி டிரஸ்  பண்ணிருந்தா உங்களுக்கு என்ன.. அது என் ப்ரோப்லேம்... அத பத்தி நானே கவலை படல அவள விலேஜ் கேர்ள்னு சொல்ல நீங்க யாரு.."

"அபி வேண்டாம் வா போய்டலாம்" ஜானவி அவன் கரம் பற்றி இழுக்க...

"நீ அமைதியா இரு கொஞ்ச நேரம்" என்றவன் "நான் அவள் தோற்றத்த நேசிக்கல அவ இதயத்தில இருக்க சுத்தமான அன்ப  தான் நேசிக்கிறேன்..அதுக்காக அவ ஒன்னும் அசிங்கமா இருக்கானு அர்த்தம் இல்லை......உங்கள எல்லாரையும் விட அவ தான் ரொம்ப அழகாவே இருக்கா.. உங்களுக்கு தான் அவ மேல பொறாமை.." என்று கத்தியவன் ஜானவியை அழ வைத்த அந்த பெண்ணை நோக்கியவன் "ஏய் நீ என்ன சொன்ன அவளுக்கு தகுதி இல்லையா..உங்களுக்கு தான் எந்த தகுதியும் இல்லை.. இவ என் ஜானு.. என் ஒய்ப்....

என் லவ் என் லைப் எல்லாம் இவ தான்..ஹேய் பர்ஸ்ட் யாரு நீங்களாம்...இப்போ என்ன ப்ரோப்லேம் உங்களுக்கு... பார்க்குக்கு வந்தோமா சுத்தி பாத்தோமா போனோமானு இருக்கனும் அத விட்டு அவன் அழகா இருக்கான் இவன் அழகா இருக்கான்னு... ச்சி.. என்ன ஜென்மங்களோ நீங்களாம் ஆத்திரமுடன் கூறியவன் ஜானவியின் புறம் திரும்பி "இவளுங்க இப்படி பேசுனா நீ அழுதுட்டு தான் நிப்பியா..
இவளுங்கள ஓங்கி ஒரு அரை விட்டுருக்க வேணாம்..." என்றவன் அந்த பெண்களை நெருப்பு பார்வை பார்த்து விட்டு ஜானவியை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி நுழைவாயிலை சென்றடைந்தான்...

அவளை அழைத்து கொண்டு சென்று காரில் அமர வைத்தவன் அவனும் சென்று காரில் அமர்ந்தான். அப்போதும் கோபம் தனியாமல் அமரந்திருப்பவனை மறுதவிப்பாய் பார்த்தவள் "அபி ப்ளீஸ் டா.. கோபப்படாத" என்று அவள் அவன் தோளில் கையை வைக்க அவனோ அவளை இழுத்து அவள் இதழில் இதழ் பதித்தான்...

அவன் கோபத்தை அவன் முத்தத்தில் உணர்ந்தவள் அவன் இதழ் யுத்தத்தில் ஆழ்ந்தாள் ...

நீண்ட நேரத்திற்கு பின் அவள் இதழை விடுவித்தவன் காரை ஆன் செய்ய அவளோ நாணத்தில் மூழ்கி போனாள்...

நேராக ஒரு ஹோட்டலுக்கு சென்றவர்கள் இரவு உணவை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல அவளோ உறங்கி போயிருந்தாள்...

வீட்டிற்கு சென்றவன் அவளை எழுப்பாமல் அவளை தூக்கி கொண்டு சென்று அவன் அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் கிடத்தினான் அபிநயன்...

அவனும் அவள் அருகில் சென்று அவளை கட்டி கொண்டு படுத்து கொண்டான்...

மறுநாள் ஆதவன் வானெங்கும் செம்மை நிற ஒளியை பரப்பியவாரு பூலோகம் வந்திருந்தான்...

ஜானவி உறக்கம் களைந்து எழுந்தவளுக்கு உடல் பலவீனமாகி இருக்க கண்களை பொறுமையாக திறந்தவள் பக்கத்தில் பார்க்க அபிநயன் அங்கு இல்லை..

எழுந்து அமர முயன்றவள் முடியாமல் மீண்டும் படுக்கையில் சரிந்தாள்...

தொடரும்....



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro