தாரகை 17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சில நிமிடங்களில் வகுப்பு முடிந்து நிக்கில் அங்கிருந்து சென்று விட அந்த வகுப்பு பெண்கள் நிக்கிளுக்காக சண்டையிட்டு கொண்டனர்....

அபிநயன் அவர்கள் பேச்சில் எரிச்சல் அடைந்தவன் டேய் தீபக் அவன் என்ன நல்லாவா இருக்கான்.. இவங்க அவனுக்காக இப்படி சண்டை போட்டுக்குறாங்க... தன் தோழனிடம் அவன் கேட்கவும்..

"ஆமா டா" என்றான் அவன் நண்பன்..

அபிநயனின் வார்த்தையை கேட்டவள் சற்று சத்தமாக தன் தோழி நிக்கித்தாவிடம் "ஏய் நிக்கி நிக்கில் சார் ரொம்ப ஹேண்ட்ஸமா இருக்காருல..." என்று கேட்கவும் "ஆமா டி" என்றாள் நிக்கித்தா..

அபிநயன் ஜானவியை முறைக்க.. அவளோ அவன் பார்வையை அறிந்தவள் "அவர் செமயா கிளாஸ் எடுக்குறாருல... பாக்கவும் அழகா இருக்காருல நிக்கி" என்றாள் ஜானவி அபிநயனின் மீதிருந்து பார்வையை அகற்றாமல்...

அபிநயன் பொறாமையை உணர்ந்தவன் அவளையே பார்க்க...

அவளோ அபிநயனை கண்டும் காணாதது போல் பார்த்து "எனக்கு தோணுது அவர் சிங்கிள்னு தான்னு" ஜானவி கூறவும்

"எனக்கு அப்படி தோணல" என்றாள் நிக்கித்தா...

"எனக்கு அவர் சிங்கிளா இல்லையானு தெரிஞ்சிக்கணும்" ஜானவி கூறவும்

அபிநயன் அவள் பேச்சில் கோபம் கொண்டவன் "அவன பத்தி இவ எதுக்கு தெரிஞ்சிக்கணும் என்று எண்ணியவன் அவன் கைபேசியை எடுத்து உனக்கு ஏன் ஜானு அவன் கமிட்டடா இல்லையானு தெரிஞ்சிக்கணும் அவளுக்கு அவன் மெசேஜ் அனுப்ப..."

ஜானவி அதை படித்து பார்த்தவள் கைபேசியை சைலண்டில் போட்டு விட அபிநயன் மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்ப அவளோ எதையும் பார்க்காமல் தன் தோழியிடம் பேசிகொண்டிருந்தாள்..

அபிநயன் கோபமடைந்தவன் டெஸ்க்கை வேகமாக கீழே தள்ளிவிட ஜானவி சட்டென திரும்பி அபிநயனை நோக்கினாள்...

அவன் கைபேசியை சைகை காண்பித்து விட்டு அவன் வகுப்பிலிருந்து வெளியில் சென்று விட ஜானவி அவன் அனுப்பிய மெசேஜ்களை படிக்க தொடங்கினாள்...

"மிஸ்டர் ஹப்பி இஸ் ஜெலாஸ்..." என்று சிரிக்க அவளுக்கு அவனிடமிருந்து மற்றொரு மெசேஜ் வந்திருந்து...

"கம் டு மீட் மீ ஜானவி.." அவன் மெசேஜ்ஜை படித்தவள் அவள் தோழிகளிடம் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்...

சட்டென யாரோ அவளை யாருமில்லா வகுப்பிற்குள் இழுக்க ஜானவி முதலில் பயந்தவள் பின் பெருமூச்சு விட்டு நின்றாள்...

"அபி ஏன் இப்படி என்ன இழுத்த நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா..." என்றவளை முறைத்து கொண்டு நின்றான் அபிநயன்...

"அபி ஏன் என்ன வர சொன்ன..."என்ன விஷயம்னு சொல்லு...

"அவன எதுக்கு நீ அப்படி புகழ்ற... அதெல்லாம் கேக்கவே எரிச்சலா இருக்கு..."

"ஏன் அபி அவர் நல்லா தான இருக்காரு அதான் சொன்னேன்..."

அவன் மீண்டும் சினந்தவன் என்ன அவசியம் அவன பத்தி பேச..

அபி உனக்கு என்ன பிரச்சனை இப்போ...எனக்கு தோணுனத தான சொன்னேன்.. என்றாள் ஜானவி..

அவன் கண்களை மூடி பெருமூச்சு விட்டவன் சரி நான் ஓப்பனாவே சொல்றேன் இன்னொரு முறை அவன் அப்படி இருக்கான் இப்படி இருக்கானு என் முன்னாடி பேசாத...எரிச்சல் கலந்த குரலில் அவன் கூறவும்

அவள் குறுநகைப்பை வெளிப்படுத்தி சரி உன் முன்னாடி எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் உனக்கு பின்னாடி சொல்லுவேன் என்று அவள் சிரிக்கவும் அவன் அவளை சுவற்றில் தள்ளி நிற்க வைத்தவன் ஏய் நீ எப்பவும் அவன பத்தி பேச கூடாது... அவன் கூறவும்

ஏன் என்று கேள்வி எழுப்பினாள் ஜானவி...

எனக்கு அவன பிடிக்கல...என்று கத்தினான் அபிநயன்..

ஆனால் எனக்கு பிடிச்சிருக்கே... ஜானவி கூறவும் அபிநயன் முகம் சட்டென மாறியது... அவன் அங்கிருந்து நகரவும் ஜானவியோ அவன் நகரும் முன் அவள் கரங்களால் அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டாள்..

எஸ் ஐ லைக் ஹிம்... ஐ மீண் அவரால தான என் ஹஸ்பண்ட்க்கு என் மேல இவ்வளவு ஜெலாஸ் இருக்குனு தெரிஞ்சிருக்கு...என்று அவள் நகைக்கவும்..

அவன் கண்களை உருட்டி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாளித்தான் அபிநயன்...

பொய் சொல்லாத... எனக்கு தெரியும்...

அபிநயன் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு நிற்க ஜானவி அவன் முகத்தை பற்றி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்...

அவன் அவளை ஆச்சர்யமுடன் பார்க்கவும் ஐ லவ் யூ அபி....நான் சும்மா உன் கிட்ட விளையாடுனேன் நாட் பேட்... இட்ஸ் ஒர்கிங்...ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ என் இதயத்துல உன்ன தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது அபி..என் பார்வை எப்பவும் உன் மேல மட்டும் தான் இருக்கும்... என் இதயம் உனக்காக மட்டும் தான் துடிக்கும்.. அபிநயன் முகத்தில் புன்னகை மலர அவனோ அவளை இழுத்து தன் மார்போடு சாய்த்து கொண்டான்...

இப்போ சொல்லு யாரு ஹேண்ட்சம்னு .. என்றவனின் மூக்கை செல்லமாக கிள்ளியவள் ஐயோ அபி நீ தான் டா... அவள் கூறி முடிக்க அவனோ அவள் இதழை சிறை செய்திருந்தான்...

அவள் அவனை அணைத்து கொள்ளவும் அவனும் அவளை அணைத்து கொண்டான்... இருவரும் நீண்ட நேரத்திற்கு பின் தங்கள் நிலை அறிந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்து நிற்க கல்லூரி மணி அடித்தது அந்த நிமிடம்...

ஜானவி சட்டென விலகி நின்று அபி நம்ம இன்னும் கேம்பஸ்ல தான் இருக்கும்.. நம்ம கிளாஸ்க்கு போகலாம் என்றவள் அங்கிருந்து நகரும் முன் அவன் அவள் கரம் பற்றி இழுத்தான்..

அவளோ முகம் சுருக்கி அபி விளையாடதடா... கிளாஸ்க்கு டைம் ஆச்சு... யாராவது பாக்க போறாங்க ப்ளீஸ் அவள் கெஞ்சவும் அவன் ஆனால் ஒரு கண்டிஷன் எனவும் என்ன என்பது போல் அவனை பார்த்து நின்றாள் ஜானவி...

நான் உன்ன விடணும்னா எனக்கு ஒரு கிஸ் கொடு நான் விடுறேன் என்றவனை உதட்டை சுழித்து பார்த்தவள் மிஸ்டர் அபிநயன் நம்ம இருக்கிறது காலேஜ் நம்ம வீடு இல்லை... என்ன விடு நான் போறேன் என்றவள் அவனிடமிருந்து தப்பி செல்ல முயன்றாள்...

ஓ அப்படியா ஓகே நீ இப்போ போகலாம் ஆனா வீட்ல நான் என் லிமிட்ஸ கிராஸ் பண்ணா நீ கேக்க கூடாது என்றவனை புரியாமல் பார்த்தவள் சட்டென விழி விரித்து நீ என்ன சொன்ன லிமிட்ஸ கிராஸ் பண்ணுவியா அபி நீ ரொம்ப மோசம் நீ இப்படிலாம் பேசுவனு நான் நினைக்கவே இல்லை...

அப்போ வேற என்ன நினச்ச..

அபி ப்ளீஸ் உனக்கு என்ன கிஸ் தான வேணும்... இன்னொரு முறை இப்படி பேசாத எனக்கு வெக்கமா இருக்கு...

ஓ மேடம்கு வெட்கமெல்லாம் வருமோ... அவன் முடிப்பதற்குள் அவன் இதழை சிறை செய்திருந்தாள் ஜானவி...

அவன் அவள் செயலில் திகைத்து நின்றவன் அவளை அணைக்கும் முன் அவனை லேசாக தள்ளி விட்டு அங்கிருந்து வேகமாக ஓடி விட்டாள் ஜானவி..

ஏய் ஜானு என்று கத்தியவன் அங்கு நடந்ததை நினைவு படுத்தி சிரித்து கொண்டே அங்கிருந்து அவன் வகுப்பிற்கு சென்று விட்டான்...

அவன் வகுப்பிற்குள் நுழைய அனைவரின் பார்வையும் அவன் மீதே படர்ந்திருக்க அவனது பார்வை மட்டும் அவனின் அவள் மேல் நிலைத்திருந்தது...

ஜானவி அவன் பார்வையை அறிந்தவள் உதட்டை சுழித்து கொண்டு வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டாள்...அவன் அவள் செயலில் எரிச்சல் அடைந்தவன் எழுந்து நின்று கைஸ் இது பிரீ பிரியட் வாங்க ஏதாவது இன்ட்ரெஸ்ட்டிங்கா விளையாடலாம் என்று அவன் வகுப்பு மாணவர்களிடம் கூறவும் ஜானவி அவனை புரியாமல் பார்க்கவும் மற்ற மாணவர்கள் அனைவரும் விளையாடுவோம் என்று கத்தினர்..

ஓகே லெட்ஸ் பிளே ஸ்டோரி டெல்லிங் அபிநயன் கூறவும் அவன் வகுப்பு மாணவிகள் அது போரிங் என்றனர் ஒன்று சேர்ந்து...

அபிநயன் ஜானவியை பார்த்தவன் இது ரொமேண்டிக் ஸ்டோரி எனவும்

வாவ் என்றனர் அதே பெண்கள்...

ஜானவி அபிநயனை பார்க்க அவனோ கதை கூற தொடங்கினான்..

"ஒரு ஊர்ல ரெண்டு கப்புல்ஸ் இருந்தாங்க..."

"ஓ கப்புல்ஸ்..."

"எஸ்....அவங்களுக்கு ஒருத்தர் ஒருத்தர் பிடிக்கவே பிடிக்காது..பட் அவங்க பேரென்ட்ஸ் அவங்களுக்கு போர்ஸ் பண்ணி மேரேஜ் பண்ணி வெச்சுட்டாங்க.."

ஜானவி அந்த கதை யாரை பற்றி என்பதை அறிந்து கொண்டவள் அவனை முறைக்க அவனோ வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டான்..

"அவங்க....அவங்க லைப்ப குட்டி குட்டி சண்டைல தான் ஸ்டார்ட் பண்ணாங்க......அந்த பையன் பாக்கவே அவ்ளோ ஹாண்ட்சம்...ஆனா அந்த பொண்ணுக்கு அவன பிடிக்கவே பிடிக்காது..."

"ஓ....."

"அவன் அவனுக்கு மேரேஜ் ஆனது யாருக்கும் தெரிய கூடாதுனு நினைச்சான்... அதனால காலேஜ்ல யாருக்கும் தெரியாது அந்த பொண்ணும் அவன் காலேஜ்லயே ஜாயின்ட் பண்ணா...அவன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க..."

சோ சேட் என்றனர் அனைவரும்...

ஜானவி அனைவரையும் சுற்றி முற்றி பார்த்தவள் அவனை சினத்துடன் முறைக்க அபிநயன் அவள் பார்வையில் சற்றே பயந்தவன்

"ஆனால் அவங்க சீக்கிரமே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டு பிரண்ட் ஆகிட அவங்களுக்குள்ள லவ்வும் ஸ்டார்ட் ஆகிருச்சு..."

ஜானவி தன் கடந்த காலத்திற்கு சென்று விடவும் அவன் தொடர்ந்து கதையை கூறிக் கொண்டிருந்தான்...

அவள் அவன் கூறியதை எதையும் முழுவதும் கேட்காதவள் தன் நினைவிற்கு வந்து சேர்ந்தாள்...

அவன் காலையில் நடந்ததை கூறிக்கொண்டிருக்க அவள் திகைப்புடன் விழி விரித்து பார்த்தவள் அபி என்று பொறுமையாக அழைக்க அவன் அவளை திரும்பி பார்த்தவன் "என்ன" என்று வினவவும் "ப்ளீஸ் சொல்லாத" என்று கண்களில் கெஞ்சினாள் ஜானவி...

"அந்த பொண்ணு அவன ரொம்ப வெறுப்பேத்துறா...
அவனுக்கு ஒரு கிஸ கூட ஒழுங்கா கொடுக்கல நீங்களே சொல்லுங்க இது நியாயமானு...."

"ஆமா நியாயமே இல்லை..." என்று அனைவரும் கத்த...

"ஆமா கண்டிப்பா அந்த பொண்ணு பண்ணது சரி இல்லை" என்று ஒரு குரல் வரவும் அனைவரும் அந்த நபரை திரும்பி பார்க்க ப்ரொபோஸர் நிக்கில் நின்று கொண்டிருந்தார்...

ஐயோ இவன் வேற வந்துட்டானே என்று நினைத்த அபிநயன் பின் கழுத்தில் கை வைத்து கொண்டு அங்கிருந்து அவன் இடத்திற்கு சென்று விட்டான்..

அனைவரும் எழுந்து நிக்கிளுக்கு மரியாதை செலுத்த சிட் டவுன் என்றவன் மேசை அருகில் சென்றான்...

நான் உன்னுடைய ரோமேண்டிக் ஸ்டோரிய கேட்டேன் அபிநயன்... என்றவன் அபிநயனை நோக்க அவனோ போலியான சிரிப்பை உதிர்த்தான்...

ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங் ஸ்டோரி தான் நீ ஏன் கன்டினியூ பண்ணல நான் உனக்கு டைம் கொடுக்குறேன்...

நோ சார்...

ஓகே ஓகே..பட் ஐ அம் இம்ப்ரெஸட்..ஆனால் உன் கதைய கேட்டதுக்கு அப்புறம் அந்த பையனோட ஒய்ப்ப அப்படி பாக்குற அந்த ப்ரோபோஸர ஒரு அறை விடனும்னு தோணுது...

அபிநயன் நிக்கிலை பார்த்து சிரித்தவன் கண்ணாடிய பாத்து உன்னையே அடிச்சிக்கோ என்று அவன் முனகவும்..

நீ இப்போ எதனா சொன்னியா என்றான் நிக்கில்...

ஆமா சார் அந்த ப்ரொபோஸர்க்கு ஏதாவது கிடைக்கணும் என்ன பிரண்ட்ஸ் நான் சொல்றது சரி தான.... அபிநயன் சொல்லவும் ஆமா ஆமா என்று கத்தினர் அனைவரும்...

இதை பார்த்து கொண்டிருந்த ஜானவி சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கவும் அனைவரின் பார்வையும் அவள் மீது விழுந்தது அபிநயனை தவிர...

அனைவரும் அவள் எதற்கு சிரிக்கிறாள் என்பதை புரியாமல் பார்க்க அபிநயன் மட்டும் அவள் சிரிப்பின் காரணத்தை அறிந்திருந்தான்...

நிக்கில் ஜானவியை பார்த்தாவன் அவளையே பார்த்து கொண்டிருக்க அபிநயனும் தன்னவளை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தவன் பார்வை நிக்கில் மேல் விழுந்தது...

நிக்கில் ஜானவி அருகில் செல்ல இவன் எதுக்கு என் ஜானு கிட்ட போறான் என்று எண்ணிய அபிநயன் அவர்களை பார்க்கவும்...

நிக்கில் ஜானவி அருகில் சென்றவன் அவள் மேசை மேல் கைவைத்து முன்னால் சாயவும் ஜானவி நிக்கிலை அருகாமையில் பார்த்து பயந்தவள் சட்டென சிரிப்பை நிறுத்தினாள்...

அவள் முகம் அச்சத்தில் மாறியது..அவள் பின்னால் சாய்ந்து அமர அபிநயன் நிக்கிலை முறைத்து கொண்டு நின்றான்..

ஏன் ஜானவி சிரிச்ச... நிக்கில் வினவவும்...

ந.. நத்திங் சார் நான் வேற ஏதோ யோசனையில... என்றவள் குரல் சற்றே நடுங்கியது....

பை த வே நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கீங்க...நிக்கில் கூற ஜானவி அவன் பேச்சை விரும்பாதவள் தயங்கி கொண்டு அமர்ந்திருந்தாள்..

அபிநயன் கோபத்தில் சினந்தவன் என்ன தைரியம் இருந்தா என் பொண்டாட்டிகிட்ட இவன் இப்படி பேசுவான்...

உங்க வாய்ஸ் ஆல்சோ ஸ்வீட்...

அபிநயன் கோபத்தில் கொந்தளித்தவன் சார் என்று கத்த...

அனைவரும் அபிநயனை பார்க்க..

என்ன அபிநயன் என்றான் நிக்கில்..

சார் இது உங்க பீரியட் இல்லை அப்புறம் எதுக்கு நீங்க இங்க இருக்கீங்க...

இல்லை கிளாஸ்ல யாருமே இல்லை அதான் நான் எடுத்துக்கலாம்னு நினச்சேன்.. ஏன்னா இந்த கிளாஸ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றவனின் பார்வை ஜானவியின் மீது விழுந்தது...

ஜானவி முகம் சுழித்து நிற்க அபிநயனோ நிக்கிலை முறைத்து கொண்டு நின்றான்...

அவள் நிக்கிலின் பார்வையில் தலை குனிந்து நிற்க..

மிஸ் ஜானவி நீங்க சிங்கரா என்றான் நிக்கில்..

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro