தாரகை 18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இல்லை என்ற ஜானவி அபிநயனை பார்க்கவும் அபிநயன் முகம் கடுகடுந்து நின்று கொண்டிருந்தான்...

ஓ ரியலி உங்க வாய்ஸ் வெரி ஸ்வீட்...நிக்கில் அவளை பார்த்து புன்னகைக்க

ஜானவி தயக்கமுடன் தேங்க் யூ எனவும் அபிநயன் வேறொருவர் அவள் அருகில் நிற்பதில் தயக்கமுடன் நின்ற அவளின் அசௌகரியத்தை உணர்ந்தவனுக்கு மேலும் அங்கு நடப்பதை பொறுத்து கொண்டு பார்க்க முடியவில்லை...

சார்... அபிநயன் மீண்டும் நிக்கிலை அழைக்க அபிநயன் அழைப்பில் எரிச்சல் அடைந்த நிக்கில் இப்போ என்ன என்று வினவவும்

சார் இது ப்ரீ பிரியட் தான இதுல நோ ரூல்ஸ்..அதனால நாங்க லைப்ரரி பிளே கிரௌண்ட் லேப் ன்னு எங்க வேணா போலாம் எனக்கு கொஞ்சம் பேஸ்கட்பால் பிராக்டிஸ் இருக்கு... என்றவன் ஜானவியை நோக்கினான்...

அவளுக்கு புரியும்படி சைகை மொழியில் ஏதோ கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்...

அப்பாடா தொல்ல ஒழிஞ்சது என்று உள்ளுக்குள் நினைத்து கொண்ட நிக்கில் புன்னகையுடன் ஜானவி புறம் திரும்ப அவ்ளோ அவள் பையை எடுத்து கொண்டு வெளியில் செல்ல தயாரானாள்..

ஜானவி நீ இப்போ எங்க கிளம்பிட்ட.... நிக்கில் வினவவும் சார் எனக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும் சோ நான் லைப்ரரி போறேன் எனவும் ஜானவி உனக்கு எந்த ஹெல்ப்னாளும் என் கிட்ட சொல்லு நான் பண்றேன் என்றான் நிக்கில்.

அவனை முறைத்த ஜானவியோ போலி சிரிப்புடன் நோ தேங்க்ஸ் சார் நான் பாத்துக்கிறேன் என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்...

தன் கணவனை தேடிக்கொண்டு பேஸ்கட் பால் கஃரவுண்டிற்கு அவள் செல்லவும் யாருமில்லாத மைதானத்தில் தனியாக விளையாடி கொண்டிருப்பவன் அவனது மொத்த கோபத்தையும் அந்த பந்தின் மேல் காட்டி கொண்டிருந்தான்...

ஜானவி அபி அபி என்று கத்தவும் அவள் குரலை துளியும் காதில் வாங்காதவனுக்கு உச்சக்கட்ட கோபம் கண்களை மறைத்தது...

ஜானவி அவன் கோபத்தை புரிந்து கொண்டவள் அபி அபி நான் ஜானவி வந்துருக்கேன் என்று கூறவும் அப்போதும் அவன் அவளை கவனிக்காமல் தன் முழு கோபத்தையும் பந்தின் மீது காட்டி கொண்டிருந்தான் அபிநயன்...

இனிமேலும் இங்க நின்னா எதுவும் ஆகாது என்றவள் அவன் பின்னால் சென்று நிற்கவும் அபிநயன் தன் முழு கோபத்தையும் திரட்டி பந்தை கூடைக்குள் பந்தை போட முயல அது தற்சயலாக கூடை மேல் பட்டு மீண்டும் அவன் புறம் திரும்ப அபிநயன் சட்டென குனிந்து கொண்டான்...

பந்து வேகமாக வந்து பின்னால் நின்று கொண்டிருந்த ஜானவியின் முகத்தில் விழுந்தது...

ஆஹ்... என்று கத்திய ஜானவி சட்டென மயங்கி விழுந்தாள்...

அவளின் குரல் கேட்டு நிஜ உலகிற்கு வந்த அபிநயன் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க அவனின் அவளோ அங்கு தரையில் மயங்கி கிடந்தாள்..

அவன் சற்றே விழிவிரித்து பார்த்தவன் ஜானு என்று கத்திய அடுத்த நொடி அவள் அருகில் ஓடி அவளை அள்ளி தன் மடியில் போட்டு கொண்டான்..

ஜானு டியர் கண்ண தொற ப்ளீஸ் ஓபன் யூவர் ஐஸ்..... என்று அவள் கண்ணத்தை தட்ட அவளிடம் எந்த அசைவும் இல்லை...

அவன் நீர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளிக்க ஓரிரு நிமிடத்தில் கண்விழித்த ஜானவியின் நெற்றியில் லேசான கீறல் ஏற்பட்டிருந்தது...

ஜானு ஐ அம் ரியலி சாரி ஜானு என்று கண்கலங்கியவன் அவள் முகத்தை பற்றி அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் சத்தியமா நான் உன்ன கவனிக்கல..சாரி ஜானு என்று அவன் அழவும்

அபி... என்று அவள் முனகவும் அவன் அவளை இழுத்து கட்டி கொண்டவன் ஐ யம் சாரி டியர் நான் வேணும்னே பண்ணல... இது எல்லாமே என் கோவத்தால தான் நடந்தது ஐயம் ரியலி சாரி ஜானவி... என்றான் அவன் கண்ணீர் கண்களுடன்...

ஐயோ..அபி ப்ளீஸ் உன் மேலயே தப்பு சொல்லாத ப்ளீஸ் நீ என்ன வேணும்னா பண்ண... இது ஜஸ்ட் ஆக்சிடெண்ட்.. அதே மாதிரி எனக்கு நல்லாவே தெரியும் உன்னால உன் கனவுல கூட என்ன எப்பவும் ஹர்ட் பண்ண முடியாது... சோ ப்ளீஸ் சாரி சொல்றத நிறுத்து... என்றவள் அவளும் தன்னவனை இருக்கமாக அணைத்து கொண்டாள்...

அவன் அவள் முகத்தை பற்றியவன் என்னால உனக்கு இப்போ காயம் ஏற்பட்டுருக்கு... உனக்கு வலிக்குது தான.. என்ன மன்னிச்சுரு டார்லிங்... நீ பின்னாடி நின்னத நான் பாக்கல...

அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தவள் அபி எனக்கு என்ன ஆனாலும் எனக்கு அத பத்தி கவலை இல்லை... ஆனா உனக்கு ஏதாவது ஆகிடுமோனு எனக்கு ரொம்ப பயமா இருக்கு... உன்னுடைய இந்த கோபம் தான் அதுக்கு காரணமாவே இருக்கும்...

அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தவள் அபி எனக்கு என்ன ஆனாலும் எனக்கு அத பத்தி கவலை இல்லை... ஆனா உனக்கு ஏதாவது ஆகிடுமோனு எனக்கு ரொம்ப பயமா இருக்கு... உன்னுடைய இந்த கோபம் தான் அதுக்கு காரணமாவே இருக்கும்...எனக்கு இந்த காயத்தை விட நீ இப்போ இப்படி நடந்து கிட்டது தான் ரொம்ப வலிக்குது..அபி ப்ளீஸ் உன் கோபத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு உன் கோபத்தால இப்போ என்ன நடந்ததுனு பாத்தியா... நீ ஏன் இப்படி நடந்துக்கிற எதுக்கு இப்படி கோவப்படுற...

ஐயோ ஜானு எனக்கு அந்த நிக்கில பாத்தாலே பிடிக்கல.. அதுவும் அவன் உன் கிட்ட அப்படி பேசுறது எனக்கு மேலும் மேலும் கோபத்தை தான் உண்டாக்குது....என் கண்முன்னாடியே என் பொண்டாட்டிகிட்ட அவன் வழிஞ்சு வழிஞ்சு பேசுறான் அத பாத்துட்டு எப்படி நான் சாதாரணமா போக முடியும்... என்னால முடியல ஜானு எனக்கு உன் கிட்ட அவன் பேசுறத பாக்கும் போது எனக்கு ரொம்ப ஜெலசா பீல் ஆகுது...நாளுக்கு நாள் உன் மேல இருக்க போசசிவ்னஸ் அதிகமாகிட்டே போகுது அதனால தான் என்னால என் கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியல...

அவள் அவனை பார்த்து எனக்கும் தான் அந்த சார் பேசுறது பிடிக்கல தான் ஆனா நம்மளால என்ன அபி பண்ண முடியும்....இதுக்கு ஒரே சொல்யூஷன் நமக்கு கல்யாணம் ஆகிருச்சுனு காலேஜ்ல சொல்லிடலாம் என்றவளை பார்த்து பெருமூச்சு விட்டவன் ஜானு... நமக்கு மேரேஜ் ஆகிருச்சுனு காலேஜ்ல சொல்ல எனக்கு டென் செக் ஆகாது ஆனா அதுக்கு பின்னாடி எவ்வளவு ப்ரோப்லேம்ஸ் இருக்குனு தெரியுமா... இந்த காலேஜ்ல விக்கி மாதிரி நிறைய எனிமிஸ் எனக்கு இருக்காங்க...நான் யூனியன் லீடரா இருக்கிறது அவங்களுக்கு சுத்தமா பிடிக்கல...எப்போ என்ன பழி வாங்கலாம்னு வெயிட் பண்ணிட்டுருக்காங்க.. இப்போ மட்டும் எனக்கு மேரேஜ் ஆகிருச்சு என் ஒய்ப் தான் நீ னு தெரிஞ்சா என் மேல இருக்க கோவத்தை உன் மேல தான் காட்டுவாங்க....தேவையில்லாத பல பிரச்சனைகள் உண்டாகும் அதனால நம்ம ரெண்டு பேரோட படிப்பு தான் ஸ்பாயில் ஆகும்...இன்னும் சிக்ஸ் மந்த் தான சீக்கிரமா போய்டும் அதுக்கப்புறம் நம்ம எதுக்காகவும் யாருக்காகவும் பயப்பட தேவையில்லை... அபிநயன் கூறவும்

அவன் வார்த்தைகள் அவளுக்கும் சரி என்பது போல் இருக்கவும் அவள் வேறு எதுவும் பேசவில்லை...

சரி வீட்டுக்கு போலாம் ஜானவி அவனை அழைக்கவும் சரி என்றவன் அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்..

நிக்கில் ஜானவியை நூலகத்தில் தேட அவள் எங்கும் இல்லை...

என்ன ஆச்சு எனக்கு நான் ஏன் அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டுருக்கேன்...அந்த பொண்ண பாத்ததுமே எனக்குள்ள ஒரு ஹாப்பினஸ்... நான் இப்படிலாம் யாரு கிட்டயும் பேசாதவன் அவ கிட்ட மட்டும் இன்னைக்கு கிளாஸ்ல அப்படி பேசியிருக்கேன்னா அதுக்கு என்ன அர்த்தம்... அவ மேல இருக்கிறது க்ரஷா இல்லை லவ்வா... ஆனா சும்மா சொல்ல கூடாது அவ என்ன ஒரு அழகு... அவளோட வாய்ஸ் அதுக்கு மேல ஸ்வீட்... இந்த மாதிரி ஒரு பொண்ண லைப்ல மிஸ் பண்ணா அந்த லைப்பே வேஸ்ட்... என்று உள்ளுக்குள் ஜானவியை எண்ணி சிரித்து கொண்டிருந்தான் நிக்கில்...

அபிநயன் ஜானவி இருவரும் வீட்டிற்கு சென்றிருக்க அபிநயன் அவள் காயத்திற்கு மருந்து போட்டு விட்டான்..

அபி நீ போய்ட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா நான் உனக்கு காபி கொண்டு வரேன்... என்ற ஜானவி அங்கிருந்து நகரும் முன் அவள் கரம் பற்றி நிறுத்தியவன் ஜானு அதெல்லாம் வேண்டாம் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.. நான் தனம்மாவ கொண்டு வர சொல்றேன்... நான் பிரெஷ் ஆகிட்டு வந்துறேன் என்றவன் உடைகளை எடுத்து கொண்டு குளியல் அறைக்கு சென்று விட்டான்..

ஜானவி சென்று கட்டிலில் அமர்ந்தவளுக்கு அவள் தந்தை கூறியது அவள் நினைவுக்கு வரவும் தன்னவனிடம் அதை எப்படி கூறுவது என்று தயக்கமுடன் அமர்ந்திருந்தாள்..

சில நிமிடங்களில் அபிநயன் குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு வந்தவன் ஜானு என்ன யோசிச்சுட்டுருக்க என்று வினவிக்கொண்டே அவளருகில் சென்று அமர்ந்தான் அவன்...

அவள் சட்டென நோக்கி அபி உன் கிட்ட நான் ஒன்னு சொல்லணும் என்று அவள் தயங்கவும் ம்ம் சொல்லு ஜானு என்றான் அபிநயன்..

அபி அது...

ம்ம் என்ன அது... ஜானு எதுவா இருந்தாலும் பரவாயில்ல தயங்காம சொல்லு...

அப்பா...

அங்கிள்க்கு என்ன..

அபி அது என்னனா என்று அவள் அவனை பார்த்தவள் அபி... அப்பா ரொம்ப பயப்படுறாரு மறுபடியும் அவருக்கு எதனா ஆகிடுமோனு... அப்படி எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி அவர் பேர கொழந்தைய பாக்கணும்னு ஆசைப்படுறாரு... என்று அவள் கூறி முடிக்க அவன் அவளையே பார்க்கவும் அவள் பார்வை வேறு புறம் திருப்பி கொண்டவள் எனக்கு என்ன சொல்றதுனே தெரியல டா... அவர் ஆசைப்படுறதும் நியாயம் தான... ஏன் நம்ம ஒரு கொழந்தைய பெத்துக்க கூடாது... என்று ஜானவி கூறவும் அவன் சற்று யோசித்தவன் பொறுமையாக அவள் கரங்களை பற்றினான்...

ஜானு.. நான் சொல்றனேனு தப்பா நினைக்காத....இப்போ தான நமக்கு மெரேஜே ஆச்சு அதுக்குள்ள கொழந்தயா...அதுவும் நம்ம இன்னும் ஸ்டடிஸ் கூட கம்ப்ளீட் பண்ணல...கொழந்த வேண்டாம்னு நான் சொல்லல... ஆனா இவ்வளவு சீக்கிரம் வேண்டாமே கொஞ்ச நாள் போகட்டுமே...ப்ளீஸ்...

அபி ஆனா...அப்பா எவ்வளவு பயப்படுறாரு தெரியுமா.... அவர் என் கிட்ட எதையுமே இதுவரைக்கும் கேட்டது இல்லை ஆனா இப்போ அவர் அவருக்கு ஏதாவது ஆகுறதுக்குள்ள பேர குழந்தையை பாக்க ஆசை படுறாரு.. அவர் பேரகொழந்தய பாக்கணும்னு ஆசை படுறதும் ஒன்னும் தப்பில்ல தான...

ஆமா ஜானு அங்கிள் ஆசை படுறதுலாம் கரக்ட் தான் ஆனால் நீ ஏன் நெகட்டிவாவே நினைக்கிற.... அங்கிள்க்கு எதுவும் ஆகாது அவர் நல்லா தான் இருப்பாரு.. இன்னும் ஒரு ஆறு மாசம் தான நம்ம படிப்ப முடிச்சடலாம் அப்புறம் நிம்மதியா நம்ம லைப்ப ஸ்டார்ட் பண்ணலாம்..கொஞ்சம் வெயிட் பண்ணேன் ப்ளீஸ்... அவன் அவளை நோக்கி கெஞ்சலுடன் கேட்கவும் அவள் லேசான புன்னகையுடன் தலை அசைத்தவள் சரி...அபி நீ என்ன டிசிஷன் எடுத்தாலும் எனக்கு ஓகே தான்... அப்பா ஆசை பட்டாரேனு தான் நான் உன் கிட்ட கேட்டேன்... எனக்கும் பஸ்ட் ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ணனும்... என்றாள் ஜானவி...

ஓ ஓ அப்படியா மேடம் அவன் கேலியாக வினவவும் ஆமாம் என்று தலை அசைத்தாள் ஜானவி..

ஆனா எனக்கு அப்படி தெரியலயே....ம்ம்.. இது எல்லாம் உன் ஐடியா மாதிரி தான் இருக்கு... உனக்கு வெயிட் பண்ண முடியாதுனா சொல்லிடு எனக்கும் ஓகே தான் என்று அவன் ஒரு கண்ணை சிமிட்ட அவள் அவன் வார்த்தையில் கண்ணம் சிவந்தவள் அபி சீ போடா என்று லேசாக அவனை அடித்து விட்டு அங்கிருந்து எழுந்து வெளியில் ஓடிவிட்டாள்...

மறுநாள் கல்லூரியில் ஜானவி அபிநயனுக்காக காத்திருக்க பைக்கை  நிறுத்தி விட்டு வர தாமதமானது..

திடீரென நிக்கில் வகுப்பிற்குள் நுழைய அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தி விட்டு அமர்ந்தனர்...

நிக்கிலின் பார்வை ஜானவியின் மீது நிலைத்திருக்க ஜானவி தலை குனிந்து அமர்ந்திருந்தவள் முகம் கடுகடுந்தது.... என்ன இந்த அபிய இன்னும் காணும் இவன் வேற பாக்குறானே ச்ச... என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருந்தாள்...

அந்த நிமிடம் எக்ஸ்யூஸ்மி சார் என்று குரல் கேட்கவும் அனைவரின் பார்வையும் வகுப்பு வாயிலை நோக்கவும் அபிநயன் நின்று கொண்டிருந்தான்..

நிக்கில் அபிநயனை பார்த்து விட்டு அவன் அருகில் சென்று கைகளை கட்டி கொண்டு நின்றவன் ஜானவியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே...

அபிநயன் ரொம்ப சீக்கிரமா காலேஜ் வந்துட்டீங்க போல... சூப்பர் இப்படி தான் இருக்கனும்..நீங்களே இப்படி இருந்தா எப்படி...மத்தவங்களும் உங்கள மாதிரி தான நடந்துக்குவாங்க...ஸ்டுடென்ட்ஸ்க்கு டிசிப்ளின் ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட்...

ஜானவி நிக்கிலின் பார்வையை அறிந்து முகத்தை திருப்பி கொண்டாள்....

சொல்லுங்க அபிநயன்... பாத்தா நல்லா படிக்கிற பையன் மாதிரி இருக்கீங்க ஆனா இப்படி கிளாஸ்க்கு லேட்டா வரீங்க... மோஸ்ட்லி நீங்க கிளாஸ்லயே இருக்க மாட்றிங்க இப்படியே போனா நீங்க பெயில் ஆகிடுவீங்க...

என்ன திமிர் இருந்தா இவன் என் அபி கிட்டயே இப்படி பேசுவான்...ஜனாவி நிக்கிலை முறைத்தாள்..

எக்ஸ்யூஸ்மி சார்.... என்ற அபிநயன் உங்க அட்வைஸ்க்கு ரொம்ப தேங்க்ஸ் பெயில் ஆகுறனோ பாஸ் ஆகுறனோ அது என் ப்ரோப்லேம் யூ டோன்ட் வரி... உங்க வேலை கிளாஸ் எடுக்கிறது நீங்க அத மட்டும் பாருங்க.... நான் கிளாஸ்க்கு லேட்டா வரல நீங்க தான் கிளாஸ்க்கு ரொம்ப சீக்கிரம் வந்துருக்கிங்க....உங்க ஆர்வத்தை வெட்டி கதை பேசுறதுல இல்லாம கிளாஸ் எடுக்கிறதுல காட்டினா ரொம்ப நல்லா இருக்கும்...உங்களுக்கு டைம் பாக்குற பழக்கம்லாம் இல்லையோ... சரி பழக்கம் இல்லனா கூட பரவாயில்லை பட் யாரையும் ப்ளேம் பண்றதுக்கு முன்னாடி நீங்க ஏன் உங்க வாட்ச்ச பாக்க கூடாது.... வாட்ச் ஓடலனா பரவாயில்ல இப்போ நானே டைம் சொல்றேன்... டைம் இப்போ 9.50.. உங்க கிளாஸ் 10 கிளாக் தான் ஸ்டார்ட் ஆகுது டென் மினிட்ஸ் நீங்க சீக்கிரம் வந்துட்டு என்ன திட்டி உங்க டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்களே... சோ சேட் என்று அவன் நக்கலாக சிரிக்கவும்..மற்ற மாணவர்களும் கேலியாக சிரித்தனர்...

ஐயோ அபி என் செல்லம் டா நீ ... என்று எண்ணிகொண்ட ஜானவி தன்னவனை நோக்கி புன்னகைக்கவும் அபிநயனும் அவளை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தினான்..

ச்ச...எல்லார் முன்னாடியும் இவ்வளவு அசிங்கமா போச்சே....டேய் நிக்கில் கொஞ்சம் சீக்கிரம் வந்த சரி கொஞ்சம் டைம பாத்து பேச கூடாது இப்போ பாரு இவன் எவ்வளவு கேவலமா பேசிட்டானு என்று நிக்கில் உள்ளுக்குள் முனகி கொண்டு நின்றான்...

அபிநயன் நேராக சென்று அவன் இருக்கையில் அமர ஜானவி அவன் புறம் திரும்பிப்பார்க்க அவனோ நிக்கிலை முறைத்து கொண்டிருந்தான்...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro