பகுதி51

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 51

வைஷுவின் புறமிருந்து எதிர் புறம் திரும்பியவர் பிளிஸ் மா என்னை மன்னிச்சிடு.... உன்னை போல ஒரு நல்ல பொண்ணை புரிஞ்சிக்க முடியாத முட்டாளா இருந்திருக்கேன்.

எல்லாரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் தான் என்னும் அகம்பாவத்தால உன்னை உதாசினபடுத்தி நிறைய பாவத்தை சேத்துக்கிட்டேன். என்ற மாதுரி வைஷுவின் அருகில் வந்து அவளின் தலையை வருடி பிளிஸ் டா இந்த அத்தைய மன்னிச்சிடுடா நீ ஒரு அப்பழுக்கும் இல்லாதவ மா.... நீ சூரியனுக்கு சமமானவ அந்த சுட்டெரிக்கும் சூரியனுக்கு கலங்கம் சொன்னவ மா நான்..... என்னை மன்னிச்சிடுமா... என்று அவளின் கைகளை கண்களில் பொத்திக்கொண்டு அழுதார்.

மாதுரி பேச பேச அமைதியாய் இருந்தவள் இதுவரையிலும் தன்னை இழிவாய் பேசிய நாவால் தன்னை உயர்வாய் பேசும் வார்த்தையை கேட்டதும் ஏதோ தன் மனதில் இருந்த மொத்த பாரமும் வடிந்தது போல இருந்நது.... மனம் லேசாய் காற்றில் பறந்தது மூளையில் தேங்கிய அனைத்து முடிச்சிகளும் அவிழ்ந்தது போல் பிரம்மை... ஏதோ தன் தலையில் இருந்த பாரம் வெடித்து சின்னா பின்னமாய் மாறி தான் காற்றில் பறப்பது போன்ற ஒரு உணர்வு... இந்த நொடியே தன் உயிர் பிரிந்தாலும் ஆனந்தமாய் இருக்கும் என்று தோன்றியது.... அவளால் நிற்கமுடியவில்லை தலையில் ஒருவித வலி கண்கள் மெல்ல சொருகியது நேரம் கடக்க கடக்க தலைவலியின் தீவிரம் வாய் விட்டு அம்மா என்று அலறிவிட்டவள் வலியால் துடிக்க ஆரம்பித்து விட்டாள்

என்னம்மா.... என்னடா....... ரொம்ப வலிக்குதா வாடா வா ஆஸ்பிட்டல் போயிடலாம் பீளீஸ் மா கொஞ்சம் பொறுத்துக்கடா உனக்கு ஒன்னும் ஆகாதுடா நான் எதுவும் ஆகவிடமாட்டேன்... என்று அவளை கைகளில் தாங்கினான் கௌஷிக்.

என்னடா சொல்ற!?!..... என்ன ஆச்சி மருமகளுக்கு????.... சாதரண மயக்கம்னு சொன்ன இப்போ வலி அது இதுன்னு என்னன்னமோ சொலாற????..... என்னடா ஆச்சி அவளுக்கு???.... என்று விஜயபாஸ்கர் மகனை கேட்க.

அவளை ஏந்திய கைகளுடன் மனைவியை முகத்தை பார்த்த படியே அப்பா அது வைஷுக்கு என்று நா தழுதழுத்தான்...

கௌஷிக் என்ன டா சொல்லு கண்ணா நீ இப்படி கலங்கி போய் நிக்கிறதையும் என் மருமகளையும் பார்க்கும்போது பயமா இருக்குடா.... என் மருமகளுக்கு என்ன ஆச்சி??? என்று வைஷுவின் முகத்தினை கைகளில் தாங்கி மாதுரி கேட்க

அம்மா என்றவன் அடுத்த வார்த்தை கூறமுடியாமல் தவித்தான்.

என்னடா சொல்லுடா ஏன் டா இப்படி தடுமாறுற என்று விஜயபாஸ்கர் பதற அவரின் பதற்றத்தை பார்த்தவன்

நான் சொல்றேன் அப்பா..... ஆனா முதல்ல ஆஸ்பிட்டலுக்கு போலாம். அப்புறம் சொல்றேன் என் பிரண்ட்க்கு போன் பண்ணி டாக்டர வரசொல்லனும் அவனுக்கு தான் இவளோட ஹெல்த் பத்தி மொத்த டிட்டியல்சும் தெரியும் என்றவன் மின்னல் வேகத்தில் அனைத்தையும் செய்தான்.

தந்தை அனுப்பி வண்டியை தயராக வைக்க சொன்னவன் அவளை கைகளில் தாங்கி காரில் ஏற்றினான்.
கரணை கார் எடுக்க சொன்ன விஜயபாஸ்கரும் மாதுரியும் தாங்களும் மகன் கூடவே மருத்துவமனைக்கு விரைந்தனர்.

கீழே இறங்கிய வந்த நேகா ஸ்வேதா வைஷாலி என்று மூவரும்பரபரப்பாக வாயிலையே பார்த்திருந்த பூஜாவை பார்க்க அண்ணி என்ன ஆச்சி ஏன் வாசலையே பார்த்துட்டு இருக்கிங்க என்று ஸ்வேதா கேட்டாள்.

என்னன்னு தெரியல ஸ்வே வைஷுக்கு தலைல வலி அதிகமாகிடுச்சி ஆஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க அதான் பார்த்திட்டு இருக்கேன் இப்போ தான் ஒரு பெரிய பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தா மறுபடியும் இப்படி அவ அவதிபடுற மாதிரி ஆகிடுச்சே வரவர கடவுள் மேல இருக்க நம்பிக்கையே போயிடுது என்று பூஜா வருத்தமாக கூறினாள்

அய்யோ அக்கா என்னக்கா சொல்றிங்க ...... என்ன ஆச்சி ...... எப்ப போனாங்க ........ எந்த ஆஸ்பிட்டல்.... என்று விதித்திப்போய் வைஷாலி கேட்க

எப்படின்னு தெரியலமா அம்மா அப்பா கௌஷிக் எல்லாம் அவங்க அறையில இருந்தாங்க திடிர்ன்னு அப்பா வந்து கரனை கார் எடுக்க சொல்லும்போதுதான் வைஷுக்கு தலைவலின்னு தெரியும் என்று தகவல் கூறியவள் அவர்கள் போவதாக கூறிய மருத்துவமனையின் பெயரை கூறி எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஸ்வேதா வீட்டுல பசங்க இருக்காங்க இல்லனா நானும் கூட போவேன் என்னால இங்க இருக்க முடியல அவளுக்கு என்னச்சோ என்னவோன்னு படபடப்பா இருக்கு அவளுக்கு எதுவும் ஆககூடாது. கடவுள் அவளமட்டும் ஏன் இப்படி சோதிக்கிறார் என்று ஆற்றாமையுடன் கடவுளை நிந்தித்தபடி ஸ்வேதாவிடம் பூஜா வருத்தத்துடன் கூற

பீளிஸ் பூஜா தீதி அப்படி சொல்லிடாதிங்க இப்போதான் நாம கடவுள அதிகமா பிரார்த்திக்கனும் எப்பவும் அவங்களுக்கு கஷ்டத்த கொடுத்தாலும் கடைசில அவங்களுக்கு அல்ல அல்ல குறையாத சந்தோஷத்த கொடுக்கத்தான் போறான். நீங்க அவங்களுக்கு நல்லதே நடக்கனும்முன்னு வேண்டிக்குங்க நாங்க என்ன ஆச்சின்னு போய் பார்த்துட்டு வர்றோம் என்று நேகா கூறிவிட்டு மூவரும் வாசலை நோக்கி கிளம்பினர்

நேகா கூறிவிட்டு அவள் போவதையே எரிச்சலாக பார்த்த பூஜா அதை சொல்ற அறுகதை கூட உனக்கு இல்ல எங்க வைஷுவ பத்தி உனக்கு என்ன கவலை எப்போல இருந்து இந்த நல்ல குணம் வந்துச்சி என்று கோவமாய் கேட்டாள்.

அண்ணி பிளிஸ் அவள திட்டாதிங்க நேகாவ பத்தி நான் அப்புறம் சொல்றேன் இப்போ இவளை பத்தி சொல்றதுக்கு நேரம் இல்லை அவ நல்லவ அது மட்டும் நம்புங்க நாங்க வைஷுவ பார்க்க ஆஸ்பிட்டல் போறோம் நான் எல்லாத்தையும் வந்து சொல்றேன் என்றவள் நேகாவையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.
........................................................................

மருத்துவமனையில்

டேய் பிளிஸ் டா அவள எப்படியாவது கியூர் பண்ணுடா பீளிஸ் என் லைப்பே அவதான் டா தன் நண்பனிடம் கலங்கிக் கொண்டிருந்தான் கௌஷிக்

டேய் எனக்கு மட்டும் ஆசை இல்லையாட சிஸ்டரா உன் கூட சேர்த்து வைச்சி பார்க்க இப்போ நம்பிக்கைதான்டா நமக்கு வேணும்.

பாருடா எப்படி கதருறா பாருடா என்று உள்ளே வலியில் அனற்றி கொண்டிருந்த வைஷ்ணவியை பார்த்து கண்கலங்கினான்

டேய் என்னடா கண்கலங்குற என்று அனைத்த நண்பன் அந்த ஆக்ஸிடன்ட்ல அவங்க பின் மண்டைல பலத்த காயம் பட்டுருக்கு அதை அப்போ கிளியர் பண்ணி இருக்காங்கல

ஆமாடா ஆனா இது பூரணமா நீக்க முடியல பியூச்சர்ல இதனால வைஷுக்கு அதிகமா ஆனாலும் ஆகாலம்ன்னு சொல்லி இருந்தாங்க டா

ம் கரெக்ட் நான் நினைச்சதுதான் இந்த ஸ்கேன்னும் பார்த்தேன் இப்போ எடுத்த ஸ்கேனும் பார்த்தேன் அவங்களுக்கு பின்மண்டைல நரம்புக்கு இடையில பிலட் கிளாட்டாகி இருக்கு இத ஆப்ரேட் பண்ணி ரிமூவ் பண்ணிதான் எடுக்க முடியும்

அப்போ சீக்கிரம். ஆப்ரேஷன் பண்ணேன்ட ஏன்டா லேட் பண்ற

வைட் வைட் டா இதுல ஒரு பிராப்ளம் இருக்கு

என்னடா பிராப்ளம்

அது அது

டேய் சொல்லுடா என்று அவன் நண்பனை உலுக்க

என்னன்னா இந்த ஆப்ரேஷன் 50 பர்சண்ட் 50 பர்சண்ட் தான் சான்சஸ் இருக்கு இது நரம்பு சம்மந்தமா இருக்கரதுனால அவங்களுக்கு கோமா ஸ்டேஜ் போற அளவுக்கு கூட சேன்ஸ் உண்டு இது வரைக்கும் பாதிக்கு மேல சக்சஸ் ஆகலா பட் ஐ ஹோப் நிச்சயம் ஸ்பெஷலிஸிட் வரவைச்சி கண்டிப்பா சிஸ்டர காப்பாதிடலாம் நம்பிக்கையோட இரு என்று கூறிவிட்டு வைஷுவை பார்க்க சென்றார் மருத்துவர்.

தந்தையிடம் வந்தவன் அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றான்.

என்ன கௌஷிக் என்ன ஆச்சி என்று விஜயபாஸ்கர் கேட்க

அப்பா வைஷுக்கு ஆப்ரேஷன் பண்ணணுமாம்

என்னடா திடுதிப்புன்னு வந்து ஆப்பிரேஷன்னு சொல்ற வைஷுக்கு என்னாச்சி

அப்பா ..... அவளுக்கு சென்னையில் நடந்த ஆக்ஸிடன்ட்ல மூளைக்கு போற நரம்புல பாதிப்பு ஏற்பட்டுச்சி அந்த நேரத்துல அவளோட ஹெல்த் கண்டிஷன் பலகினமா இருந்ததால அடுத்தடுத்த அப்ரேஷன் தாங்கிக்கிர பலம் அவ உடம்புல இல்லாம போனதாலும் அந்த அந்த ஆப்ரேஷனில் இரண்டு மட்டும் பண்ணி இருந்தாங்க

என்னப்பா அந்த அப்ரேஷன் இப்போ பண்ணிடலாம்ல உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே என்று பதைபதப்புடன் மாதுரி கேட்க

அது தான் இப்போ பிரச்சனை ஆகிடுச்சி மூளைக்கு போற நரம்புல தான் இந்த பாதிப்பு வந்துச்சி அந்த நரம்புலயே பிளட் கிளாட்டாகி பெரிய சிக்கல்ல போயிடுச்சி

என்னப்பா சொல்ற

ம்..... 50 பர்ஸன்ட் தான் சேன்ஸ் இருக்காம் அவ கோமா ஸ்டேஜ் போகறத்துக்கும் வாய்ப்பு இருக்காம் எனக்கு என் குலாபி வேனும் மா என்கூட சண்டபோட்டுக்கிட்டு என்கிட்ட கோபபட்டுகிட்டு என் கூடவே இருக்கனும் மா என்று அன்னையின் மடியில் தலை வைத்து கண்ணீருடன் பேசினான்.

அவ எவ்வளவுதான் கோபபட்டுகிட்டு என்னை பேசினாலும் அதுல சின்னதா ஒரு காதல நான் பாத்திருக்கேன். அவ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது மா என்று துடிப்புடன் பேச

ஒன்னும் ஆகாது பா என் மருமகளுக்கு ஏன் இப்படி சோதனை மேல சோதனை வருது நீ தைரியத்தை விட்டுதபா இப்படி கலங்குரியே டா கண்ணா என்னால பார்க்க முடியலயேடா கண்டிப்பா என் மருமக உன் கூட வாழ்வா இது நிச்சயம் நடக்கும் கண்ணா கலங்காதடா என்று மகனின் கண்களை துடைத்து அவனுக்கு அறுதல் கூற

மாதுரி கௌஷிக்கிற்கு அறுதல் கூறினாலும் கண்களில் நீருடன் மனைவியின் துயரை கண்டு மனம் உடைந்திருக்கும் மகனின் முகத்தினை பார்த்து வருந்தினார்.

கௌஷிக் வைஷுக்கு ஒன்னும் ஆகாதுப்பா கண்டிப்பா அவ உனக்காக வருவாடா என்று விஜயபாஸ்கர் நம்பிக்கையுடன்வ கௌஷிக்கின் கைபிடித்து அவனை தேற்றினார்.

மறுநாள் ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்திருக்க விஜயபாஸ்கர் மாதுரியையும் நேகாவை வீட்டிற்க்கு செல்லுமாறு கூற

என் மருமக கண் முழிக்காம இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன் என்று உட்கார்ந்து விட்டார் பல்லில் பச்சை தண்ணியும் படாமல் கண் மூடி கடவுளை பிராத்தனை செய்தபடி அமர்ந்திருந்தார் மாதுரி

நேகாவும் ஸ்வேதா வைஷாலி என அனைவரும் வீட்டிற்க்கு செல்ல மறுத்துவிட்டு வைஷுவிற்க்காக மருத்துவமனையிலேயே இருந்தனர்.

பேமஸ் நீயுரோ சர்ஜின் காலை 7 மணி அளவில் மருத்துவ மனைக்கு வந்தார். அவரிடம் கௌஷிக்கை அறிமுகபடுத்தினான் கௌஷிக்கின் நண்பன்

டோன்ட் வொரி மிஸ்ட்ர் கௌஷிக் என்று கை குலுக்கியவர் இந்த ஆப்ரேஷன் சுமார் 12 மணிநேரம் வரையிலும் நடக்கும் உங்களோட மனோதிடத்தை அதிகபடுத்திகனும் நிச்சயம் பேஷன்டோட உயிர 100 பர்சன்ட் காப்பத்ததான் போராடுவோம். எங்களுக்கும் மேல ஒரு சக்தி இருக்கு
அதுதான் நம்பிக்கை நம்மோட நம்பிக்கைக்கும் ஒரு பவர் இருக்கு சோ டோன்ட் லுஸ் யுவர் கான்பிடன்ட் என்று கூறியவர் வைஷ்ணவியின் முழு தகவலையும் தெரிந்துக்கொண்டு அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்தார்.
........................................................................

ஏங்க நாமா ஏதும் சொல்லாம கிளம்பி வந்துட்டோமே அந்த அம்மா ஏதாவது சொல்லிடுச்சின்ன

நாம் அவங்க வீட்டுக்கா போக போறோம் நேரா ஹோட்டலுக்கே தானே

சிவா எவ்வளவு சொல்லியும் பொண்ணையும் பேத்தியையும் பார்க்கனுமுன்னு அடம்புடிச்சி கூட்டிட்டு வந்துட்டு இவ்வளவு பெரிய டவுட்டா சொல்லு என்று அருணாச்சலம் லலிதாவை கேட்க

அது என்னமோங்க நைட்ல இருந்த வைஷுவ பாக்கனும் பாக்கனுமுன்னு உள்ளுக்குள்ள அடிச்சிக்கிட்டே இருக்கு

ம் வைஷுக்கிட்ட சொல்லிட்டு வரலாம் சொன்ன கூட வேனா சொல்லிட்ட

வேனாங்க இன்ப அதிர்ச்சியா இருக்கும் நாம சொல்லிட்டு போனா குல்லு பொண்ணோட சந்தோஷத்தை பார்க்கமுடியுமா நம்மல பார்த்தவுடனே வந்து ஒட்டிகிட்டு எப்படி கொண்டாட போற பாருங்க சொல்லிட்டு வந்தா இதுபோல நடக்குமா என்று பேத்தியின் நினைவில் லலிதா கூற

அதுவும் சரிதான் என்று சிரித்த அருணாச்சலம் ஆங் டிரைவர் இங்க ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி இருக்கு என்று ஒரு அட்ரசை கொடுக்க அதை வாங்கிய டிரைவர் ஹோட்டலில் கொண்டு இருக்கினார்.

லலிதாவும் அருணாச்சலமும் மும்பையில் 5 நட்சத்திர ஹோட்டலில் இறங்கினர் பேத்தியின் 6வது பிறந்த நாள் வரவும் மகளையும் பேத்தியையும் பார்த்து விட்டு செல்ல மும்பை வந்திருந்தனர்.

அறைக்கு சென்று சிறிது ஓய்வு எடுத்தவர்கள் சிவாவிற்க்கும் நீலாவிற்க்கும் பேசிவிட்டு மகளுக்கு போன் செய்ய பேத்தி எடுத்து பேசினாள்.

ஹலோ யாரு

ஹலோ கண்ணு நான் லலிதா பாட்டி பேசுறேன் டா

ஐய் பாட்டி எப்படி இருக்கிங்க ஏன் இத்தனை நாள போன் பண்ணவே இல்லை

நான் நல்ல இருக்கேன் டா என் குல்லுமா எப்படி இருக்காங்க சாப்பிட்டாங்களா

நான் சாப்பிட்டேன் பாட்டி நீங்க

ம் சாப்பிட்டேன் டா சரி அம்மா எங்க டா அம்மா கிட்ட போனை கொடுங்க

பாட்டி அம்மா இல்ல பெரியம்மாவ கேட்டேன் அம்மா வெளிய போயிருக்காங்கன்னு சொன்னாங்க ஆனா நைட் அப்பா அம்மாவ மயக்கமா தூக்கிட்டு வந்தாரு காலைல பார்த்த அம்மாவ காணும்.

என்ன மயங்கமாவா சரி மா பக்கத்துல யாரு இருக்க உங்க பெரியம்மா இருக்காங்களா

ம் கிச்சன்ல இருக்காங்க இருங்க பாட்டி தரேன்

பெரியம்மா இந்தாங்க பாட்டி பேசனுமா

பாட்டியா

ம் பாட்டிதான்

ஹலோ

ஹலோ மா நான் பேசுறது புரியுதா

புரியுது மா சொல்லுங்க நான் பூஜா பேசுறேன்

ஓ தமிழ் நல்ல பேசுறியே மா

கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன் மா
எப்படி இருக்கிங்க

நான் நல்ல இருக்கேன் மா நீங்க எல்லாம் எப்படி இருக்கிங்க

நல்லா இருக்கோம் மா

குல்லு வைஷுவ காணும் சொல்ற வைஷு எங்க மா

அது அது அம்மா வீட்டுல யாரும் இல்ல

நாங்க வீட்டுல இல்லமா மும்பைல இருக்கோம் வைஷுவையும் குல்லுவையும் பாக்கத்தான் வந்தோம்

அப்படியாம்மா கூட யாரு இருக்காம்மா

ஏன்மா இது எல்லாம் கேக்குற என்னமா ஆச்சி வைஷுக்கு

ஒன்னுமில்லை மா நீங்க எங்க இருக்கிங்க எற்ற பூஜாவின் கேள்விக்கு அட்ரசை கூறியவர் அங்க கரண் வருவாரும்மா என்று கூறி போனை வைத்தாள்.

கரணுக்கு கால் செய்து விஷயத்தை பூஜா கூற அதை கௌஷிக்கிற்கு கூறினான். அவர்களுக்கு வைஷுவின் விஷயத்தை பக்குவமாய் கூறி அழைத்து வரும்படி கரணை அனுப்பிவைத்தான் கௌஷிக். சிவாவிற்க்கும் அலைபேசியின் மூலம் விஷயத்தை தெரிவித்தவனிடம் அடுத்த பிளைட்டில் வருவதாக கூறி போனை வைத்தான் சிவா....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro