பகுதி 52

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 52

நியூயார்க்

சத்தமில்லாமல் வந்த கிர்ஷ் காயுவின் பின்னால் இருந்து அவளை அனைக்க

அவனை தள்ளிவிடாமல் இவளும் அப்படியே நின்றிருந்தாள்.

என்ன ஒன்னும் சொல்லாம அடிக்காம சைலன்டா இருக்கா என்று நினைத்தவன். என்னடி உன்னை ஒருத்தன் பின்னாடி இருந்து கட்டி புடிக்கிறான் எதுவும் சொல்லாம சிலை மாதிரி நிக்கற

நீ ஆயிரம் பேருக்கே நடுவுல இருந்தாலும் உன் வாசத்தை வச்சே உன்னை கண்டுபிடிச்சுடுவேன்டா எருமை என் பின்னாடி இருக்கும்போது கண்டுபிடிக்க முடியாதா என்றவளின் மூக்கை பிடித்து ஆட்ட

என்ன மூக்கு டி இது சொன்னா கோச்சிக்க மாட்டியே டாக விட ஷார்ப்பா இருக்க டி என்று அவன் விளையாட்டாய் கூற

போடா குரங்கு உன்ன அவ்வளவு லவ் பண்றேன்னு சொல்றேன் என்ன டாகுன்னா சொல்ற முஞ்சிய பாரு என்று அவன் மார்பில் அடிக்க

ஏய் ஏய் என்று அவளின் கைகளை விளையாட்டாய் இருகைகளிலும் பிடித்தவன் என் செல்லம் நீ ரொம்ப ஸ்விட் டீ ஆனா என்னை கொஞ்சறத விட என் செல்லகுட்டி திட்டும்போதுதான் லவ் அதிகமாகுதுடி என்று அவளின் கன்னம் வருட

அவனின் செய்கையில் நாணத்தால் அவனை தள்ளிவிட்டு திரும்பி நிற்க கிர்ஷும் அவளின் பக்கத்தில் போய் நின்றான்.

மாமா

என்ன பேபி

நாம்ம ஸ்டடிஸ் முடியபோகுது இன்னும் ஒரு வாரத்துல இந்தியா போய்டுவோம் ரொம்ப கஷ்டமா இருக்குடா

ஹேய் பேபி என்ன இது நீயா இப்படி பீல் பண்றது என்று அவளது கண்களை துடைத்து விட்டவன் சீக்கிரமே நம்ம இரண்டு பேமிலியோட பிரச்சனையும் தீர்ந்துடும் செல்லம் நீயும் நானும் சேர்வோம் டியர் என்று அவளை சமதானபடுத்தினான்.

எப்படிடா அவ்வளவு கான்பிடன்டா சொல்ற

அது எல்லாம் அப்படித்தான்

அக்கா பெரிய மாமா வீட்டுக்கு போய் இருக்கா ஆனா சமதானம் ஆகலையே உங்க அம்மாவும் சமாதனம் ஆகலையே எதாவது மந்திரம் மாயம் பண்ணபோறியா டா என்று அவனிடம் குழந்தைதானமாய் கேட்க

அவளின் தலையில் செல்லமாய் தட்டியவன்.அட மண்டே மந்திரமும் இல்ல மாயமும் இல்ல எங்க அண்ணா ஏற்கனவே பாபி மேல செம லவ்வா இருக்கான்.பாபி இன்னும் அண்ணாவ மறக்காம தான் இருக்காங்க அவங்க அண்ணாவ வெறுத்திருந்தா இந்த நேரத்துக்கு அண்ணாகூட ஒரே ரூம்ல அவங்களால இருக்கமுடியுமா சொல்லு அதுவும் இல்லாம ஒருத்தர் ஒருத்தர் பக்கத்துல இருக்கும்போது கண்டிப்பா அவங்கள அறியமலேயே அவங்க மனசுல இருக்கறது வெளியே வர்றதுக்கு சென்ஸ் இருக்கு அப்போதான் நான் நினைச்சது நடக்கும் நம்ம கல்யாணமும் நடக்கும் என்று நம்பிக்கையாய் கூற

வருத்தமான முகத்துடன் அவன் கைகளை இறுக பற்றிக்கொண்ட காயூ அவன் தோல்களில் சாய்ந்து கொண்டாள்

ஹேய் பீயூட்டி சேடா இருக்காத டா நாம இங்க இருக்கப்போர ஒரு வாரம் நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணணும் நாம பிரிஞ்சி இருக்க போற நாட்களுக்கு இந்த நாட்களோட நினைவுகள் தான் நமக்கு மருந்தா இருக்க போகுது என்று கிர்ஷ் இடையில் கையிட்டு பக்கத்தில் இருத்திக்கொண்டான்.

அவர்களின் காதல் உலகத்தில் இருவரும் சஞ்சரித்து கொண்டிருக்க கிர்ஷின் மொபைலில் வாட்சப்பில் கால் வர இருவரும் நிகழுலகத்திற்க்கு திரும்பினர்.

போனை எடுத்து பார்த்தவன் என்ன இந்த நேரத்துல கால் பண்றா

யாரு டா

பிரண்டு டி

எடுத்து பேசேன் டா எவ்வளவு நேரம் அடிச்சிட்டே இருக்கு

ம் என்றவன் போனில் பேசிலானான்.

டேய் அறிவு கெட்டவனே என்னடா பண்ற என்றாள் நேகா காட்டமாக

என்ன பேபி ரொம்ப கூலா பேசுற போல இருக்கு என்று கிண்டலாக பேச

அதில் எரிச்சலுற்றவள் இருக்கும் டா இருக்கும் அடுத்த பிளைட் புடிச்சி அங்க வந்தேன் நீ செத்தடா நியாபகத்துல வைச்சிக்கோ ஃபூல் என்று நேக கோபமா கத்த

கூல் பேபி கூல் டா இப்படி கோவ பட்ட எப்புடி மா என்ன நடந்நதது எதுக்காக இந்த அர்சனனைன்னு சொன்ன நல்லா இருக்கும் தலையும் புரியாம வாலும் புரியாம நீ பாட்டுக்கு எரிஞ்சி விழுந்தா என்ன அர்த்தம் என்று அவன் கேட்க

ஐடியாவா கொடுக்குற ஐடியா இங்க என்னனென்ன நடந்ததுன்னு தெரியுமா கௌஷிக் என்ன அடிச்சிட்டான்டா

என்ன பையா அடிச்சிட்டாரா

ம் ஆமா அடிச்ச அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி இருந்துச்சி முடியல நைட்டு பிளைட்லயே ஊருக்கு கிளம்பி இருப்பேன் ஆனா வைஷு தீதி ஆஸ்பிட்டல்ல இருக்குறதால போக மனசு இல்லாம அவங்கள பாத்து மன்னிப்பு கேக்கதான் இந்தியாவிலேயே தங்கிட்டேன்

என்னடி சொல்ற பாபி ஆஸ்பிட்டல்ல இருக்காங்களா என்னடி ஆச்சி

அங்கு நடந்த வாக்குவாதத்தையும் இரவு நடந்ததையும் கூறியவள் மருத்துவர் கூறியதையும் கூறினாள் எல்லோரும் பயத்தோட இருக்கோம் டா கௌஷிக்க பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம் டா தீதி என்று கனத்த இதயத்துடன் கூறியதை கேட்ட கிர்ஷ் அதிர்ச்சிக்குள்ளானான்.

டேய் கிர்ஷ் இருக்கியா டா பேசுறது கேக்குதா டேய் இந்த நெட் வேற சதி பண்ணுது டேய் கேக்குதா நான் ஆஸ்பிட்டல் வெளியே வந்து பேசுறேன்

ஆங் கேக்குதுடி அம்மா மனசு மாறிட்டாங்கன்னு சந்தோஷபடுறதா இல்லை பாபி இப்படி இருக்காங்களேன்னு வருத்தபடுறதா எங்க பாபிக்கு ஒன்னும் ஆகாது டி என்று வருத்தமாய் பேச

கிர்ஷின் வார்த்தைகளை கேட்ட காயூ யாருக்கு மாமா என்ன ஆச்சி போன்ல யாரு ஆஸ்பிட்டல்ல யாரு இருக்கா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க இரு என்று சைகை செய்தவன் நேகாவிடம் பேசிவிட்டு வந்தான்.

மாமா என்ன ரொம்ப சோகமா இருக்க என்ன ஆச்சி என்று அவனின் தோள்களில் மறுபடியும் சாய்ந்தவள் அவன் மௌனமாய் இருக்கவும்

என்னடா அதிசயமா இருக்கு என் மாமா பேசாமா ரொம்ப மூடியா இருக்கான். என்று அவன் கன்னம் பற்றி ஆட்டியவள் டேய் அத்தான் பிரானநாதா என்னடா யாரு போன்ல என்ன ஆச்சி எனிதிங் சீரியஸ் என்று அவன் முகம் பார்த்து கேட்க

ம் கொஞ்சம் சீரியஸ் தான் அம்மா மனசு மாறிட்டாங்க

அத்தையா என்னால நம்பவே முடியல டா ஐய்யோ ரொம்ப ஹேப்பியா இருக்குடா எங்க அக்காவுக்கு இப்பவாச்சு கடவுள் கண் திறந்தாரே சரி எப்படி நடந்து இது என்ன ஆச்சி பிளீஸ் பீளீஸ் சொல்லுடா என்று அவனை செல்லம் கொஞ்சி கேட்க நான் என் பிரண்ட் நேகாவை என்று ஆரம்பித்து நடந்ததை காயூவிடம் கூறினான்.

அவனை ஓங்கி அறைந்தவள் என்ன நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல எதுக்கு இந்த மாதிரி வேல எல்லாம் செஞ்ச எங்க அக்காவ அசிங்கபடுத்தி தான் உங்க அம்மாவ திருப்த்தி படுத்துனமா அவங்க அப்பதான் எங்க அக்காவையும் அவ குழந்தையும் ஏத்துக்குவாங்களா அவ தனியா வாழ்ந்தாலும் நல்லா இருந்தா சேத்து வைக்கிறேன் அது இதுன்னு சொல்லி எங்க அக்கவோட உயிரிலியே விளையாடிட்டிங்களே டா நீங்களாம் மனுஷங்களா உயிர குடிக்கிற மிருகங்களா அவ எவ்வளவு டிப்ரஸா இருந்தா இதுபோல நடந்திருக்கும் நான் ஒரு முட்டாள் உன்ன போய் காதலிச்சேன் பாரு கூடவே இருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியாடா எப்படி சொல்லுவ பன்றது எல்லாம் பிராடு தனம் சின்ன குழந்தைய வைச்சி கேம் ஆடி இருக்கிங்க.

இது எதுக்கும் நாங்க காரணம் இல்லடி அந்த ஆக்ஸிடண்ட் என்று அவன் கூறினாலும் அதை காதில் வாங்காதவள்

சீ வாயமூடுடா வாய திறந்தா பொய் பித்தலாட்டம் வேஷம் இதுதான் உன் சுயரூபம் தெரியாம பழகிட்டேன் என்று நீர் நிறைந்த கண்களை துடைத்துக்கொண்டாள்.

ஹேய் என்ன நடந்துச்சின்னு கேளுடி ஏன் இப்படி அவசரப்பட்டு பேசுற எல்லாம் புரிஞ்சிகிட்டுதான் பேசுறியா இல்ல பேசனும்மேன்னு உளரிக்கிட்டு இருக்கியா

ஆமாடா நான் எங்க அக்காவ நினைச்சி அழுகறதும் கஷ்ட்டபடுறதும் உனக்கு உளறளா தெரியுதா டா உங்களுக்கு உங்க காரியம் மட்டும் நடந்தா போதும் அப்படித்தானே உங்க அண்ணனும் உங்க அம்மாவுக்காக எங்க அக்காவ வேனான்னு சொல்லிட்டு போயிட்டாரு இப்போ உனக்கு நான் வேனுன்னு இப்படி தரம் கெட்ட வேலைய பாத்திருக்கியே சரியான செல்ஃபிஷ்டா நீ

ஸ்டாபிட் என்று விரலால் எச்சரித்தவன் ஆமா நான் செல்ஃபிஷ் தான் எங்க குடும்பம் ஒன்னா இருக்கனும்ன்னு நினைக்கறது செல்ஃபிஷ்னா நான் செல்ஃபிஷ் தான் அப்படியே இருந்துட்டு போறேன் போடி என்று அவளை தள்ளிவிட

போடா அப்படியே போய்டு என் முகத்திலையே முழிக்காத உன்ன மாதிரி ஒரு ஆள லவ் பண்ணன்னு நினைக்கும்போது என்னை பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு நீ என் வாழ்க்கையில உன்னை சந்திக்கவே கூடாது என்று அழுதுகொண்டே பேசியவள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள் இனிமையாய் ஆரம்பித்த நாள் சோகமாய் முடிந்தது.
........................................................................

மருத்துவமனை வளாகத்தில் கார் நின்றதும் அதில் இருந்து இறங்கிய லலிதாவும் அருணாச்சலமும் கலங்கிய கண்களுடன் உள்ளே நுழைந்தனர்.

முந்தானையால் வாய்பொத்தி அழுத கண்களுடன் வந்த லலிதா மாதுரியை பார்த்ததும் மேலும் அழுதார். அவரை பார்த்த மாதுரி அண்ணி வைஷு என்று அவரும் கலங்கி லலிதாவை பற்றிக் கொண்டார் தான் கண்பது நிஜமா தன் மகளை மாதுரி ஏற்றுக்கொண்டாரா என்ற லலிதாவின் மனம் நினைக்க மாதுரியே அதை தெளிவுபடுத்தினார்.

அண்ணி என்னை மன்னிச்சிடுங்க நான் எவ்வளவு பெரிய கொடுமைகாரியா இருந்திருக்கேன் என் மருமக எவ்வளவு தங்கமானவன்னும் அவளோட நல்ல மனசும் இப்போதான் எனக்கு தெரியுது. என்றவர் அண்ணா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க என்று இருவரிடமும் மன்னிப்பு கேட்க

அவரின் கைகளை பற்றிய லலிதா நீங்க மன்னிப்பு கேட்டு என்ன பலன் அண்ணி என் பொண்ணு முடியாம படுத்து கிடக்காளே என் பொண்ண பத்தி புருஞ்சிக் கிட்டதே போதும் அவ ஒருபாவமும் அறியாதவ அவளாள ஒரு ஈ எரும்புக்கு கூட துரோகம் நினைக்க முடியாது என்ற லலிதா அவளுக்கு போய் இப்படி ஆண்டவன் ஒரு கொடுமைய செய்துட்டானே என்று அழுதார்.

அண்ணி அழாதிங்க என்று மாதுரி கூறினாலும் கண்களில் இருந்து நீர் வந்த வண்ணம் இருந்தது.

ம் இப்படியெல்லாம் நடக்கனுமுன்னு விதி இருக்கு என்று வேதனைபட்ட அருணாச்சலம் கௌஷிக்கிடம் சென்று என் பொண்ணு எப்படி இருக்கா என்றார் கரகரத்த குரலில்

அவரை பார்த்தவன் உணர்ச்சிகளற்ற குரலில் அவளுக்கு ஆப்ரேஷன் நடந்துகிட்டு இருக்கு அது முடிஞ்ச பிறகுதான் எதுவும் சொல்ல முடியுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க மாமா என்றான்.

இதை கேட்ட லலிதா மேலும் அழுதார் என்னங்க நம்ம பொண்ணுக்கு என்று அருணாச்சலத்திடம் கூறி அழ

உஷ் அழாதம்மா அழாத...... பீளிஸ் அவள பத்தி அபசகுனமா எதுவும் பேசிடாத நல்லது மட்டுமே நினை கண்டிப்பா அவ எழுந்து வருவா வைஷுக்கு ஒன்னும் ஆகாது நம்ம பொண்ணு நிச்சயம் நல்லபடியா வருவா என்று தோள் தட்டி சமாதனம் சொல்ல

அருணாச்சலத்தின் பக்கத்தில் விஜயபாஸ்கர் வந்து நின்றார். சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். விஜயபாஸ்கரின் அழைப்பில் அங்கிருந்து அமைதியாய் அங்கிருந்து வெளியே சென்றனர்.

கேக்கரேன்னு தப்பா எடுத்துக்குத டா என்னடா நடந்தது என் பொன்னு ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகி இருக்கா

அது வந்து என்று அங்கு நடந்த அனைத்தையும் தெளிவாய் கூறியவர் (வைஷாலி கூறியதையும் அதற்கு மாதுரியின் மாற்றத்தை மட்டும் கூறினார்) அவர்களின் அரையில் நடந்ததையும் விளக்கமாய் கூற கூற

இத்தனை வருஷம் கழித்து என் மகள் மேல இருந்த பழி போயிடுச்சி ஆனா அந்த சந்தோஷத்த கூட என் பொண்ணால அனுபவிக்க வாழ்க்கை சரியானதை நினைத்து சந்தோஷபடுவதா இல்லை அவளின் உடலின் நிலையில் கடைசி கட்டத்தில் இருப்பதை நினைத்து அழுவதா என்று கூறினார்.

டேய் அருண் இப்படி ஆகும்ன்னு நான் கனவுல கூட நினைச்சி பாக்கலடா என் மருமகளும் மகனும் இனிமேலயாவது சந்தோஷமா வாழ்வாங்கன்னே எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா என்று கனத்த குரலில் கூற

யார்மேல சொல்லி என்ன பிரோயோஜனம் டா அவ தலை எழுத்துன்னு ஒன்னு இருக்கே அதுதான்டா என்பொண்ண ஆட்டி படைக்குது என்று வேதனையுடன் அருணாச்சலம் கூற

அந்த சம்பவம் நடந்ததுல இருந்து உன் முகத்துல எப்படி முழிக்கருதுன்னு இத்தனை வருஷம் தவிச்சிட்டு இருந்தேன் என் மருமக என்வீட்டுக்கு வந்ததும் தான் கொஞ்சம் மனசு நிம்மதியாச்சி நம்ம பசங்களோட பிரச்சனை தீர்ந்திடும் அவங்க ஒன்னுக்குன்னா சந்தோஷமா குடும்பத்தை நடத்துவாங்கன்னு எவ்வளவு நம்பிக்கைய இருந்தேன் என்றார் வைஷுவின் நிலைமையை மனதில் வைத்து.

அவர் பேச பேச திடமாய் இருந்தாலும் மகளின் உடல் நிலையின் முழுவிவரத்தையும் அறிந்திருந்தவரின் உடல் குலுங்கியது.

டேய் திடமா எல்லாருக்கும் தைரியம் சொல்லவேண்டிய நீயே இப்படி அழலாமா...... அழாதடா அருண் அழாதடா என்று அருணாசலத்தை தேற்ற.

எப்படிடா அழாம இருக்கமுடியும் என் குழந்தை எவ்வளவு துவண்டு போய் படுத்திருக்கா பாத்தியா வலி ல எவ்வளவு துடிச்சி போய் இருப்பா இதுவரையும் கஷ்டத்தை கூட எங்களுக்கு காட்டம எங்கள விட்டு கண்காணாம எங்க கூட வராம இருந்தாடா என்று அருணாச்சலம் கூற என்ன கூறி அவரை தேற்றுவது என்று தெரியாமல் நண்பனின் நிலையை எண்ணி அமைதியாய் நின்றிருந்தார் விஜயபாஸ்கர்.
........................................................................

அறையின் வாசலில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு மணித்துளியும் மிக ஆமைப்போல் நகர்ந்தது பசி இல்லை தூக்கமில்லை நாவில் பச்சை தண்ணியும் படாமல் மருத்துவரிடம் இருந்து நல்ல தகவல் கிடைக்காதா என்று பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர்.

சிவாவும் காலை 11மணிபோல் வந்திருந்தான். உடனே கிளம்பி வரமுடியாத சூழ்நிலை என்பதால் அடுத்த நாள் வருவதாக நீலா கூற சத்தியனை பார்த்துக்கொள்ள உஷாவும் பெங்களூரில் இருந்துவிட்டார்.

நேரம் மதியம் 2 கடந்திருக்க லலிதாவின் அருகில் வந்த வைஷாலி அம்மா என்று குரல் கொடுக்க அவளை பார்த்தவர் அவரின் அருகில் அமர்ந்து அம்மா சாப்பிட வாங்கம்மா என்று அழைக்க

எனக்கு வேண்டாம் மா என்று கூறி கண்களை மூடிக்கொண்டார் லலிதா

அம்மா உங்க ஹெல்த்துக்கு நீங்க கண்டிப்பா மாத்திரை சாப்பிட்டே ஆகனும் நீங்க இவ்வளவு நேரம் சாப்பிடமா இருக்கிங்க வாங்கமா சாப்பிட்டு வந்து மாத்திரை போடுங்க

எனக்கு எதுவும் வேனாமா என் பொண்ணு கண்ணதொறந்து அம்மா ன்னு என்னை ஒரு முறை கூப்பிட்டா போதும் மா மலர்ந்த என் பொன்னு முகத்தை பார்த்துட்டே நான் போய்டுவேன் என்று அழ

காலைல இருந்து அழுதுகிட்டே இருந்தா எப்படிமா அப்படி அவ உங்கள கூப்பிட்டாலும் நீங்க அவகூட சந்தோஷமா பேச கொள்ள அவளுக்கு எல்லாம் செய்ய உங்க உடம்பு நல்லா இருக்க வேண்டாமா அப்பாவும் பாருங்க அவரும் சாப்பிடல வைஷு எழுந்தவுடனே எங்க அப்பாவையும் அம்மாவையும் ஏன்டி சாப்பிட வைக்கலன்னு என்கிட்ட சண்டை போட மாட்டாளா என்று வைஷுவை காரணம் காட்டி சாப்பிட அழைக்க

என்னால எப்படிம்மா சாப்பிட முடியும் ஒரு பொண்ண வாரி கொடுக்குற நிலைமையில இருக்கேனே என்று மறுகியவர் கடவுளே என் ஆயுசுயையும் எடுத்து என் பொன்னுக்கே கொடுத்துடுப்பா என்று கையெடுத்து கும்பிட

அம்மா அப்படியெல்லாம் சொல்லாதிங்க என்று அழுதவள் என்னாலதானே எல்லாம் வந்துச்சி நான் அவளுக்கு பிரண்டா இருக்கரதுனாலதான் அவளுக்கு பிரச்சனையே நான் ஒரு ராசிகெட்டவமா என்று மிகவும் வருந்தி பேச

இல்லமா இதுல உன் தப்பு எதுவும் இல்ல விடு என்று வைஷாலி பக்கத்தில் அமர்ந்திருக்க அவள் தலையை வருடி விட்டவர் எனக்கு சாப்பாடு இறங்காதுடா என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டார் மேலும் அவரை வாற்புறுத்தாமல் மாதுரியையும் அழைக்க அவரும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

நேரம் கடக்க கடக்க நெருப்பில் நிற்பதுபோல் தவித்து இருந்தான் கௌஷிக் எதிலும் மனம் ஒட்டாமல் மனைவியின் முகத்தை காண தவம் போல் அவளையே நினைத்திருந்தான்.

காலை 8 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை தொடர்ந்து 12மணிநேரம் வரை நடந்தது இரவு 8 மணிக்கு முடிந்தது சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார் மருத்துவர் .

டாக்டர் வைஷு என்று கௌஷிக் அருகில் வந்தான்

மிஸ்டர் கௌஷிக் நான் சொல்ல போறது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் பட் பொய்யான நம்பிக்கைய கொடுக்க நான் விரும்பல என்றார் வருத்தமாக

டாக்டர் என்ன சொல்றிங்க என்ன ஆச்சி என் வைஷுக்கு அவ என்கூட இருப்பால்ல என்று இவன் படபடப்புடன் கேட்க

கௌஷிக் காம் காம் எமோஷ்னல் ஆகாதிங்க நம்ம கைல எதுவும் இல்ல நாங்க கடவுளும் இல்ல இது ரொம்ப காம்ளிகேட்டானா கேஸ் சோ நம்பிக்கைய விட்டுடாதிங்க நாங்க எங்களோட முழு முயற்ச்சியோட பண்ணி இருக்கோம் கண்டிப்பா அவங்க ரெக்கவர் ஆவங்கன்னு சொல்ல முடியாது ஒரு நாள் முழுக்க அப்சர்வேஷன்ல வைச்ச பிறகுதான் அவங்கள பத்தி சொல்ல முடியும் ஏன்னா அவங்க பல்ஸ்ரேட் டவுனாகிட்டே வருது அதுக்கும் மானிட்டர் வைச்சி இருக்கோம் இவங்க icu தான் இருக்கனும் இன்னும் 2 அவர்ஸ்ல ஷிப் பண்ணிடுவாங்க பாருங்க என்று கூறினார்.

கௌஷிக்கின் தோலில் கைவைத்து சிவா தட்ட சிவாவின் தோலில் சாய்ந்தவன் என்ன நினைத்தானோ அங்கிருந்து வேகமாக வெளியேறினான் கௌஷிக் கௌஷிக் என்று சிவா அவனை அழைத்தும் காதில் வாங்காமல் காரை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.

மருத்துவரின் வார்த்தைகளை கேட்ட இருவரின் பெற்றோரும் மனதளவில் மிகவும் உடைந்தனர் வைஷாலி ஸ்வேதா நேகா மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்திருந்தனர். வைஷுவை icu விற்க்கு மாற்றினர் உடலில் எந்த அசைவும் இல்லை தலையில் பெரிய அளவு தலை பாகை சுற்றியதுபோல் கட்டு கட்டி இருந்தது.

ஒவ்வொருவராக அனுமதி பெற்று உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தனர்.
........................................................................

தாருமாறாக ஓடிய கார் பெரிய பாறையின் மேல் மோதியது மோதியதில் தலையில் அடியுடன் ஸ்டியரிங்கில் சாய்ந்தவன் மறுநாள் காலையில் தான் கண் விழித்தான். கண் மங்கலாக இருக்க விழிகளை இறுக்க மூடி திறந்தவன் சுற்றிலும் பார்வையை பதித்தான் இரவு நடந்த நிகழ்வுகள் மனைவியின் நிலை என அனைத்தும் அவன் கண்முன்னால் காட்சிகளாய் விரிய ஸ்டியெரிங்கிளேயே முட்டி அழுதான் எழுந்து வெளியில் வர கண்களில் ஒரு அனுமன் கோயில் தெரிந்தது அதை நோக்கி விரைந்தான்.

ஆள் உயர அனுமன் சிலை ஒரு கையில் கதாயுதம் மறுகையை இடுப்பில் வைத்தார் போன்று நின்றிருக்க அவரைக்கண்டவன் நீயெல்லாம் கடவுளா இல்ல கல்லா
உன் மனசு இளகவே இளகாதா என் வைஷுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமைய கொடுக்குற உன்னை என்ன கேட்டோம் வாழவைன்னு கேட்டது தப்பா எங்கள இவ்வளவு நாள் பிரிச்சி வைச்சது போததாதுன்னு நிரந்தரமா அவள எங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறியா அது மட்டும் நடக்கவே நடக்காது எப்படியாவது என் பொண்டாட்டிய நான் காப்பத்தியே தீருவேன் வாழ்ந்த என் கூட அவ வாழ்வா இல்ல அவகூடவே நான் சாகுறேன் எங்கள யாரலையும் பிரிக்க முடியாது நீ உண்மையிலேயே கடவுள்னா எங்க காதலையும் என் மனைவியையும் திருப்பி என்கிட்டயே தந்துடு என்று கடவுளிடம் சண்டையிட்டவன் நெற்றி ரத்தத்துடன் இந்த ரத்தத்துல கடைசி துளி இருக்க வரைக்கும் என் வைஷுக்கு எதுவும் ஆகாது ஆகவும் விடமாட்டேன்.என்று வெறித்தனமாய் பேசி காரை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

.......................................................................

அடித்து பிடித்து மருத்துவமனை வந்தவனை பார்த்த விஜயபாஸ்கரும் சிவாவும் என்ன கௌஷிக் நைட்லாம் எங்க போனா உனக்கு எத்தனை முறை போன் பண்ணோம் தெரியுமா சுவிட்ச் ஆப்ன்னு வந்தது எங்க போய்ட்ட என்றார்.

நெற்றியில் இருந்த இரத்தத்தை கவனித்த சிவா இது என்னடா காயம் என்ன ஆச்சி நெத்தியெல்லாம் இரத்தமா இருக்கு என்னடா கேட்டுக்கிட்டே இருக்கேன் எதுவும் சொல்லாம வெறிச்சி பாத்துட்டு இருக்க

என்னை விடு சிவா வைஷு எங்க என் வைஷுவ பாக்கனும் என்று அவனை விட்டு அறைக்குள் போக முயன்றான் இருடா இருடாஉனக்கு முதல்ல போய் பஸ்ட் எய்ட் பண்ணிட்டு வரலாம் வா என்று அழைக்க எனக்கு ஒன்னுமில்ல டா வைஷு எப்படி இருக்கா என்று கேட்டவனை வற்புருத்தி மருத்துவரிடம் அழைத்துச் சென்றான் சிவா

என்னடா என்ன நடந்தது இப்படி அடிபட்டு இருக்கு என்று கேட்டுக்கொண்டே கௌஷிக்கிற்க்கு முதலுதவி செய்தான் கௌஷிக்கின் மருத்துவ நண்பன்.

அவன் கேள்விக்கு எந்த பதிலையும் கூறாதவன் வைஷு எப்படி இருக்க அவள பார்க்கனும் என் வைஷுவ பாக்கனும் என்று மந்திரம் போல் அதையே கூற

அவங்க கண்டிஷன்ல எந்த முன்னேற்றமும் இல்ல இன்னும் சொல்லபோனா மோசமாதான் ஆகிட்டு வருது அவங்க மனசும் மூளையும் அவங்களோட செயல்திறனை இழக்க வைக்குது அவங்க மனசுல வாழனுமுன்னு ஆசைய விதைக்கனும் எதிலையும் பிடிப்பு இல்லாம இருக்காங்க கௌஷிக் இப்படியே விட்டா அவங்க கோமாக்கும் போகலாம் நம் எண்ணத்துக்கும் ஒரு சக்தி இருக்கு டா அது நம்மல வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டு போகும் அவங்களுக்கு அந்த நம்பிக்கைய உன்னாலதான் கொடுக்க முடியும்..... முயற்ச்சி பண்ணு.... இன்னும் அவங்க கண் திறக்கல என்று அவனிடம் கூறி வைஷு இருக்கும் அவசர சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தான்.

வைஷுவின் அருகில் போய் அமர்ந்தவன் ஒரு கையில் டிரிப்சும் மறுகையில் மானிட்டரின் ஒயர்களும் இருக்க அவளின் விரல்களை தொட்டான் எந்த வித உணர்ச்சியும் அற்று கிடந்தது.

குலாபி.....

பேசுமா குலாபி எழுந்து வாடா

உனக்கு என் மேல கோவம்தானே என்கூட வந்து சண்ட போடு

நம்ம குழந்தை நம்ம குழந்தைகிட்ட நேத்துல இருந்து நீ பேசல அவள நீ பாக்க வேண்டாமா நம்ம குழந்தைக்கு அம்மா வேணும் என்கிட்டயே வந்துடுடா என்றவன் எங்கே அவன் முத்தத்தால் அவளுக்கே வலிக்கும் என்று மிகவும் மென்மையாக விரல்களில் முத்தம் பதித்தான் அதற்க்கும் அவளிடம் அசைவில்லை

என் மனசுல இருக்கரது எல்லாம் சொல்றேன் இதுக்கு மேலேயேயும் என்ன தவிக்க விடாதடா என்றவன் ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தான்

உன்னை முதல்முதலா எப்போ பார்த்தேன் தெரியுமா நீங்க எல்லாம் நினைக்கராப்போல உங்க வீட்ல இல்ல சென்னைல ஆமா சென்னைல தான் உன்னை முதல் முதலா பார்த்தேன் பார்த்தவுடனே என் மனசுல ஆழமா பதிஞ்சிட்ட நான் கல்யாணம்ன்னு ஒன்னு பண்ணா உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்ற அளவுக்கு முதல் பார்வையிலயே என் மனச பறிகொடுத்துட்டேன் என்று அவள் கேட்டு கொண்டிருப்பதாக நினைத்து அவளை பார்த்த நாளை கூறிக்கொண்டிருந்தான்.

நான் சொன்னா நீ நம்ப மாட்ட நெத்தில குங்குமம் வச்சி தழைய தழைய பட்டுபுடவை புது தாலியுமா நம்ம ரூம்ல என்னை எழுப்புறதுபோல கனவு கண்டேன்.... என்னால உன்னை மறக்க முடியல..... ஸ்வேதா கல்யாணத்துல உன்னை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியா இருந்தது கனவுல பார்த்த அதே புடவையில் நேர்ல பார்க்க நீ எனக்கானவள்னு நான் முடிவே பண்ணிட்டேன். ஆனா உன்னை என்னால தனியா சந்திச்சி என்னோட காதல சொல்ல முடியல....

நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா நம்ம பஸ்ட் கல்யாண நாளுக்கு இதையெல்லாம் சொல்லி உன்னை சர்பிரைஸ் பண்ணலாமுன்னு பார்த்த இடையில என்னென்வோ நடந்துடுச்சி

உன்ன பிரிஞ்சி நான் எவ்வளவு வேதனைய அனுபவிச்சேன் தெரியுமா உன் கண்ணுல படாமா எவ்வளவு கேர்புல்லா உன்னை நான் பார்தேன் தெரியுமா அது பயத்துனால இல்ல உன்னோட ஒரு சொல்லுக்காக நீ எங்க இருந்தாலும் நல்லா இருந்தா அது போதுன்னு நினைச்சேன்.

நீ கர்பமா இருக்கேன்னு தெரிஞ்சதும் உன்னே விட்டு பிரியாமா உன் கூடவே இருந்து உன்னை பாத்துக்கனும் உன் கை பிடிச்சி காலார நடக்கனும் என் அம்மு நீ வயித்த சாச்சிகிட்டு நடக்கும்போது என் கைகொடுத்து உன்னை தாங்கனுமுன்னு நான் எவ்வளவு ஆசைபட்டேன் தெரியுமா தூரத்துல இருந்தே என் ஆசையெல்லாம் எனக்குள்ளயே மூடி மறச்சி உன்னை பார்த்து பார்த்து சந்தோஷபட்டேன் டி

என் அம்முக்குட்டி உனக்கு நான் டீ போட்டு கூப்புடுறதானே பிடிக்கும் ஒரு முறை என்னடி கோடி முறை கூப்பிறேன். வாடி எழுந்திருச்சி வாடி என்கூட என் வாழ்க்கை முழுதும் வாழனும் எழுந்து வா டீ என்று அவளை அழைத்தவன்.

மும்பைக்கு நீயா வரலடி நான்தான் உன்னை வரவெச்சேன் நீ என்ன சொன்ன என்னை யாரும் தேடி வரவேண்டாம்னு சொன்ன உன்னையே இங்க வரவெச்சு என் கூட பேசவைச்சேன். நீ என்னை விரும்புறடி அப்புறம் ஏன் என்னை ஏத்துக்க மாட்டுற உன்னை கல்யாணம் பண்ணிக்கிரன்னு சொன்ன ராகுல்கிட்ட நான்தான் உன் உலகம் வாழ்க்கை தாலி அது இதுன்னு பேசிட்டு வந்துட்டு ஏன்டி என்னை விட்டு தள்ளி தள்ளி ஒடுற என்று கை முஷ்டியில் தலையில் இடித்துக்கொண்டான்.

விழிகளின் இமை மெல்ல அசைய விரல்களில் அசைவு ஏற்பட்டது. பிரிக்க முடியாமல் கண்களை மெல்ல பிரித்தெடுத்தவளின் விழிகளில் நீர் கசிந்தது கௌஷிக் என்று வார்த்தைகளை கஷ்ட்டப்பட்டு கோர்த்தவள் அவன் கைகளை பிடித்து முத்தம் வைத்தாள்.

வைஷு வைஷு என்று உணர்ச்சி மிகுதியாய் அவளின் கைகளை பற்றிகொண்டவன் மண்டியிட்டு அமர்ந்து என் உயிரே இப்போதாண்டி வந்துச்சி என்று அவளின் கண்களை துடைத்துவிட்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro