பகுதி 53

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 53

விழிகளின் இமை மெல்ல அசைய விரல்களில் அசைவு ஏற்பட்டது. பிரிக்க முடியாமல் கண்களை மெல்ல பிரித்தெடுத்தவளின் விழிகளில் நீர் கசிந்தது கௌஷிக் என்று வார்த்தைகளை கஷ்ட்டப்பட்டு கோர்த்தவள் அவன் கைகளை பிடித்து முத்தம் வைத்தாள்.

வைஷு வைஷு என்று உணர்ச்சி மிகுதியாய் அவளின் கைகளை பற்றிகொண்டவன் மண்டியிட்டு அமர்ந்து என் உயிரே இப்போதாண்டி வந்துச்சி என்று அவளின் கண்களை துடைத்துவிட்டான்.

ம்..ஹு..ம்....  என்று முனங்கியவள் கௌஷிக்கின் கலங்கிய கண்களை துடைத்துவிட்டாள் . அவனிடம் பேச துடித்த அதரங்கள் ஸ்.... ஆ.....என்று வலியில்  முனங்க 

அவள் வலியில் முனங்குவதை கேட்டவன் என்னமா என்ன செய்யுது ரொம்ப வலிக்குதா இரு நான் டாக்டர கூப்பிடுகிறேன் என்று எழுந்தவனின் பேண்ட் மட்டுமே அவள் கைகளில் பட அதை பிடித்தவள் அவனை  பார்வையால் அமரவைத்தாள்.

அவனின் காயத்தை பார்த்து பார்வையால் கேட்க

அது அது ஒன்னுமில்ல ஒரு சின்ன அடி இப்போ  ஒன்னும்மில்லமா  கொஞ்சம் இருடா நான் இப்போ வந்துடுறேன் என்று கூற

இ..ரு.....ங்க....

உன் கூடதான் இருப்பேன்டா  உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன் டா ..... உனக்கு நினைவு திரும்பிடுச்சி என்றத மட்டுமாவது டாக்டர்க்கிட்ட சொல்லனும் இல்ல அதை சொல்லிட்டு வந்துறேன் டா என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்தான்...

உ..ங்..ககிட்ட நான் பேசனும் என்றாள் கஷ்டபட்டு

அவனுக்கு அவள் கஷ்ட்டபட்டு பேசுவது வருத்தமாக இருந்தாலும் வைஷு அவனிடத்தில் பேசுவது மகழ்ச்சியாகவே  இருந்தது.

இப்போதான் எழுந்திருச்சி இருக்க  கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கமா உன்னோட உடம்ப நீ ரொம்ப பலகீனபடுத்திக்க கூடாதுடா என்று அவளிடம் பக்குவமாக கூற

ம்...ஹு...ம்... என் மனச உறுத்துற விஷயத்தை நான் உங்ககிட்ட பேசனும்

அவளின் கைகளை விடுவித்து கன்னங்களில் கைவைத்து இந்த முகத்தை நான் மறுபடியும் பார்பேனான்னு இருந்தது  நீ எனக்கு திரும்பி கிடைச்சிட்ட அது போதும் உன்னை உறுத்துற எந்த விஷயமும் மனசுல வைச்சிக்காம என்கிட்ட கேட்டுடு என்று கூறினான்.

மறுகையால் அவன் கைகளை பிடித்தவள் அன்னைக்கு என்ன நடந்துதுன்னு உங்களுக்கு தெரியுமா??  என்று வார்த்தைகளை கஷ்டபட்டு உருவாக்கினாள்.

ம்.... தெரியும்.....

என்னை ஏன் காப்பதினிங்க??

என்னடி கேக்குற!!! இதுதான் உன் கேள்வியா?

நான் கேட்டதுக்குக்கு பதில்...

நீ கேக்குற கேள்வியே நான்சென்ஸ் என்று கோபமாய் கூற அவளின் உடல்நிலையை மனதில் கொண்டு என் உயிர் டீ நீ என் உயிர காப்பத்த யாரோட பர்மிஷனும் எனக்கு தேவையும் இல்லை அதுக்கு அவசியமும் இல்லை

நான் உங்களோட உயிரா …? எனக்கு புரியல உங்களுக்கு முக்கியமில்லாததும்  உங்களுக்கு  தகுதியானவ இல்லன்னும்போது  நான் எப்படி உங்களோட உயிர் ஆனேன்?? என்று வார்த்தைகள் மென்று முழுங்கி வெளிவர

அவள் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை உள் வாங்கியவன் சிரித்த முகமாக அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து அன்னைக்கு நடந்தத மனசுல வைச்சிக்கிட்டு கேக்குறிங்களா மேடம்? சரி இதுக்கு நானே பதில் சொல்றேன். ஆனா அன்னைக்கு நடந்த விஷயத்துக்கு நீயும் விளக்கம் சொல்ல வேண்டி வரும் ஞாபகம் வச்சிக்கோ.... என்றே சிறு புன்னகையுடன் கூறியவன்.

சரி நாம எது செய்தாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்ன்னு என் மனைவிக்கு   நான் சொல்லிதான் புரியனுமுன்னு அவசியம் வராதுன்னு நினைச்சேன்...  அதுவும் அம்மா ரொம்பவும் அட்வென்சரா போனதுனால அவங்கள முக்கியம்ன்னு சொன்னேன். இப்பவும் சொல்றேன் நீ  நான் இரண்டு பேரும் உருவத்தால வேறா இருக்கலாம் ஆனா இதயத்தால ஒன்னுதான் இது நீ மறுக்க முடியுமா சொல்லு???? எனக்கு பிடிச்சது நீயும் உனக்கு பிடிச்சத நானும்  இப்பவரையிலும்  செய்துகிட்டுதான் இருக்கோம் அதை இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா?????  நீ தாம்மா முக்கியம்னு ஒரு வார்த்தை அன்னைக்கு நான் சொல்லலனா என்ன நடந்து இருக்கும் கொஞ்சம் நினைச்சி பாரு ..... சரி இப்படியோரு நிலமையில நீ இருந்தா என்ன முடிவு எடுத்து இருப்ப அவங்களோட எமோஷனல குறைக்கதானே பார்த்திருப்ப இல்ல சாகட்டும்ன்னு விட்டு இருப்பியா பதில் சொல்லு???  வைஷு பதில்  சொல்லு???என்றான்.... 

அவளை பிரித்து பார்க்கவில்லை என்றும் அவளின் மனதில் என்றும் அவன்தான் சிம்மாசனமிட்டு அமர்ந்தவன் என்று கௌஷிக் தெரிந்து வைத்திருந்தான்  அவனின் வார்த்தைகள்  அவளை திக்குமுக்காட வைக்க ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது.

நான் இதை கேக்கூடாதுன்னு இருந்தேன் ஆனா இப்போ கேக்குறேன் ஏன்டி என் கூட வாழ விருப்பம் இல்லன்னு சொன்ன??? ...... என்னை தேடி வரக்கூடாதுன்னு சொன்ன????  என்னை பாக்க பிடிக்கல??? பேச பிடிக்கல வாழ பிடிக்கல??? என்னென்ன சொல்லிட்ட டீ உன் மேல பைத்தியமா இருந்தேன்  நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வலிச்சுது டீ???? அவங்க பேசின எல்லாவற்றிற்க்கும் சேர்த்து எனக்கு  தண்டனை கொடுத்து இத்தனை வருஷம் கலங்க  வைச்சிட்டியே டீ என்று அவளை கேட்க.....

மௌனமாய் படுத்திருந்தவள்  கௌஷிக்கின் ஆவேசம் வெளிப்படுவதையே இமைக்காமல் பார்த்திருந்தாள். தன் மேல் இத்தனை அன்பா என்று அவனின் கோபத்தில் உணர்ந்துகொண்டவள் மனதில் அவன் மேல் இத்தனை வருடம்  வைத்திருந்த அன்பை  மறைத்து வெறுப்பையும் கோவத்தையும் ஒருதிரைபோல காட்டியபடி நடந்து கொண்டவளுக்கு அவனின் ஒவ்வொரு கேள்வியுமே வைஷ்ணவிக்கு  சாட்டையாய் வலித்தது தான் அனுபவித்த வலியை விட தன் கௌஷிக்கிற்க்கு ஆயிரம் மடங்கு வலித்திருக்கும் என்பதை அவளால் உணர முடிந்தது.

சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் உணர முடியாமல் கூட போய் இருக்காலாம் அவனின் காதல். ஆனால் இந்த பிரிவு அவனின் காதலை வைஷ்ணவிக்கு தெள்ளதெளிவாய் புரியவைத்தது.  கடவுளின் சக்தியோ அல்லது  அவள் மேல் கௌஷிக் வைத்துள்ள காதலின் சக்தியோ வைஷ்ணவியை அவனிடம் சேர்த்தது

கௌஷி என்ற அவளின் அழைப்பு அவனின் ஆவேசத்தை குறைத்தது.... திரும்பி  அவளின் முகம் பார்த்தவனை வா என்று கண்களால் அழைத்தாள் அருகில் சென்றான். அவள் விரலில் இருந்த ஒயர்களையும் விடுத்து அவன் கைகளை பிடித்தாள் என்னை மன்னிச்சிடுங்க கௌஷி.... பீளிஸ் என்னை மன்னிச்சிடுங்க....  என் கோவத்தால உங்கள தவிக்கவிட்டுடேன்...  என் மேல நம்பிக்கை வைக்க வேண்டியவங்களே என் ஒழுக்கத்து மேல கலங்கம் இருக்குன்னு சொன்னத என்னால தாங்கிக்கவே முடியல கௌஷி தாங்கிக்க முடியல  நீங்களும் எனக்காக உங்களோட தன்மானத்தை  விட்டு கீழே இறங்கி கெஞ்சரதும் பாக்க பிடிக்கல . எனக்கு இந்த உலகமே சூனியமா தெரிஞ்சிச்சி இனி அங்க வந்தாலும்  எடுத்த பேரும் மறைஞ்சுடாதே என்ற விரக்தி எதுவும் வேனான்னு என்னை சொல்ல வைச்சிடுச்சிங்க நான் சொன்னது தப்புதான் உங்கள வேண்டான்னு சொன்னது தப்புதான் என் உடம்புல உள்ள ஒவ்வொரு அணுக்களையும் நீங்க அறிஞ்சி இருக்கிங்க என்னை மன்னிச்சிடுங்க என் உடம்புதான் உங்கள விட்டு ரொம்ப தூரம் போயிட்டுதே தவிர என் மனசு நீங்க எங்க இருக்கிங்கன்னு உங்கள சுத்தி சுத்தி தேடிட்டுதான் இருந்தது  என்று கேவ அவள் அழுவதை தாங்கிகொள்ளாதவன்.

இங்க பாரு  இங்க பாருட நீ இவ்வளவு உணர்ச்சிவச படக்கூடாது மா பீளிஸ் அழதடா உன் மேல எந்த தப்பு இல்ல நீ பேசினதும் தப்பு இல்ல அன்னைக்கு சந்தர்ப்ப சூழ்நிலை அந்தமாதிரி அமைஞ்சிடுச்சி அத நினைச்சி நான் வேதனைபடாத  நாளே இல்ல மா  பீளிஸ்டா என்னையும் மன்னிச்சிடுடா அழாதடா  என்று அவளை சமாதனபடுத்தினான்.

அவள் கேவ கேவ வைஷுவின் உடல்நிலைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயந்த கௌஷிக்  இங்க பாரு என்னை பாரேன்  அய்யய்யா என் பொண்டாட்டியா இது எதுக்கும் பயப்படாம எதிர்த்து நின்னு வாழ்ந்த வைஷு தான் எனக்கு பிடிக்கும் இப்படி அழுகுற அழுமுஞ்சி பொண்ணு எனக்கு வேணாம்பா  என்று அவளை வம்புக்கு இழுக்க

அவனின் கூற்றில் சூழல் மறந்து ஹோ.... எங்க அந்த லண்டன் அரை லுச வேண கல்யாணம் பண்ணி வைச்சிடவா உனக்கு

அய்யோ அதுக்கு நீயே பெட்டர் டீ என் ராசாத்தி

ம்....அந்த பயம் இருக்கட்டும் என்று அவனிடம் வம்பாய் பேசியவள் குல்லு குல்லு எங்கங்க என்று குழந்தையை கேட்க

அப்போதுதான் இருநாட்களாக குழந்தைய  பார்க்கமால் இருந்தது நினைவு வர நானும் பாக்கல மா இரு குழந்தைய கூட்டிட்டு வரேன் என்று கூறி வெளியே சென்றவன் வானதியும் நின்றிருக்க அவளை அணைத்து இருநாட்களாக காணாத குழந்தையின் முக வாட்டத்தை கண்டவன்  பேபிமா உங்க வைஷு அம்மா நல்லா ஆகிட்டாங்கடா டாக்டர் செக் பண்ணதும் நம்ம போய் பாக்கலாம் என்று கூறியவன்  நான் டாக்டர பாத்துட்டு வந்துடேறேன் என்றவன் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியாய் விஷயத்தை பகிர்ந்துக்கொண்டு  டாக்டரிடம் சென்று விஷயத்தை கூறினான்.

வைஷுவின் மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த மருத்துவர் கௌஷிக் இனி சிஸ்டருக்கு எந்த பிராப்ளமும் இல்லடா அவங்கள நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம் இன்னும் ஒன் வீக்ல டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கே நீங்க அழைச்சிட்டு போயிடலாம் என்றார்.

ரொம்ப தேங்க்ஸ் டா எனக்கு என் வைஷுவ திரும்பி கொடுத்ததுக்கு  என்று கௌஷிக் அவனிடம் நன்றி கூற

டேய் என்னடா இது தெங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு நான் என்னோட கடமைய தானே செய்தேன்  பட் ரொம்ப லவ் பண்ணற டா சிஸ்டர அதுதான் அவங்கள உன் கூட சேத்து வைச்சிருக்கு god is great but love is also great டா மாப்பிள உன் வாழ்க்கையில நான் ரியலா பாத்துட்டேன் டா

கௌஷிக் அதற்க்கும் சிரித்திட

சிரிக்காதடா நான் உண்மையதான் சொல்றேன் உன்னை பாக்கும்போது  இதை போல என் வொய்ப் மேலயும் நான் அன்பா  இருக்கனும்ன்னு நினைக்கிறேன் டா என்றவன்.  உங்க லவ்வ பாத்தா கல்யாணமான எனக்கே கூட பொறாமையா இருக்கு  இனி எந்த பிரச்சைனையும் இல்லாம ஹேப்பியா லைஃப்ப என்ஜாய் பண்ணு டா என்று வாழ்த்தி கைகுலுக்கி ஓகே டா நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன் என்று சென்றான் மருத்துவ நண்பன்.
........................................................................
அறைக்கு மாற்றியதும் அனைவரும் சென்று பார்க்க லலிதாவுடன் இருந்த வானதியை அருகில் வர அழைத்த வைஷு

தலையில் கைவைத்து கோத

அவளை அணைத்துக்கொண்ட குல்லு, மா எப்படிம்மா இருக்கிங்க என்ன ஆச்சிமா உங்களுக்கு என்று பாவமாய் கேட்டாள்.

அம்மாவுக்கு ஒன்னுமில்லடா தலைவலியா அதான் டாக்டர் கட்டு போட்டு இருக்காங்க இப்போ  அம்மா நல்லா ஆகிட்டேன்...? குட்டி என்ன சாப்பிடிங்க.....  அம்மா இல்லன்னு அடம்பிடிச்சிங்களா செல்லம்.....

ம்ஹும் இல்லமா நான் குட்கேர்ள்லா பெரியம்மா  ஜெஷ்வின் அப்புறம் மீரா  கூட தான் இருந்தேன்... அம்மா தலைவலின்னா இவ்வளவு பெரிய கட்டு போடுவாங்களா உங்களுக்கு வெய்ட்டா கஷ்டமா இல்ல என்று குழந்தை கேட்க

இல்லடா அம்மாவுக்கு கஷ்டமா இல்ல  இதெல்லாம் பண்ணாதான் சீக்கிரம் காயம் சரியாகி  வீட்டுக்கு போக முடியும்

நீங்க இல்லன்னு உங்கள கேட்டேனா உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க அப்புறம் பாட்டி தாத்தாலாம் வந்தாங்க என்று லலிதா அருணாச்சலத்தை பற்றியும் கூறியது  குழந்தை. நீங்க இல்லாமா ரொம்ப போர் மா எனக்கு உங்கள பாக்கனும் பாக்கனும் போல இருந்தது நாம சீக்கிரமா வீட்டுக்கு போய்டலாம் என்றாள் குல்லு

என் சமத்து பொண்ணு என்று முத்தம் வைத்தவள் அவளுடைய தாய் தந்தையை பார்க்க அம்மா என்று கூறவும் அருகில் சென்ற லலிதா   என் கண்ணு  நீ திரும்பி வந்து பெத்த வயிற குளிர வைச்சிட்டம்மா என்று அவளை நெஞ்சில் அணைத்துகொள்ள

அம்மா வைஷு இப்போ எப்படிடா இருக்கு  என் பொண்ணுக்கு வந்த சோதனை இதோட விலகிடனும் என்று மனதார சொல்லிக்கொண்டார் அருணாச்சலம்.

பரவயில்லை பா என்று கண்களை மூடிக்கொண்டு   மகளை அருகில் அமரவைத்துக் கொண்டு  அவளின் கைகளை பிடித்து வருடிக் கொண்டிருந்தாள்.

கதவை  தட்டி திறந்துகொண்டு  மாதுரி உள்ளே வர அவரை பார்த்ததும் வாங்க அண்ணி வாங்க என்று அழைத்த லலிதாவின் அழைப்பிற்க்கு தலையை அசைத்தவர் வைஷுவை பார்த்து அவள் அருகில் சென்றார்.

அவளின் கைகளில் கைவைத்து உன்னை ரொம்ப நோகடிச்சிட்டேன் ல என்று வருந்தி கூறியவர்  என் வார்த்தையால உன் உயிருக்கே ஆத்தை கொடுத்துட்டேன் மா  என்னை மன்னிச்சிடுன்னு கேக்கக்கூட அசிங்கமா இருக்கு  வைஷு என்றார்

ஒரு பெண்ணா பிறந்துட்டு என் வீட்டுக்கு  வாழவந்த உன்னை என்னென்ன கேவலமான வார்த்தைகளால காயபடுத்திட்டேன்... என்னால  உன் முகத்தை கூட பாக்கமுடியல நான் பேசிய வார்த்தைகள் என்னை கொள்ளுது வைஷு என்று வயது வித்தியாசம் இன்றி செய்த தவறுக்கு மாதுரி மன்னிப்பு கேட்க

வைஷுவின் கண்கள் குளமாக  அத்தை என்ன மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்க நீங்க பெரியவங்க என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டு என்னை கஷ்ட்டபடுத்தாதிங்க என்னை நீங்க புரிஞ்சிக்கிட்டதே எனக்கு பெரிய நிம்மதி இனி எந்த மன உளைச்சலும் இல்லாம இருப்பேன் நீங்க மனசு  மாறி வந்து இவ்வளவு தூரம் என்கிட்ட பேசுறதே போதும் அத்த என்று கூற

நீ கேட்ட பார் உங்க மகளா இருந்தா இப்படியோரு பழிய நம்புவிங்களான்னு நான் நம்பிட்டேன் நான் நம்பிட்டேன் என் பிள்ளைகளோட வாழ்க்கைய நானே தீய வைச்சிட்டேனே தனிமரமா தவிக்கவைச்சி உன்னை சேக்கவே கூடாதுன்னு  சொன்ன என்னையே மன்னிச்சிட்டேன்னு சொல்றியே உனக்கு ரொம்ப பெரிய மனசும்மா என்னை மன்னிச்சிட்ட ஆனா உன்ன குத்தம் சொன்ன போது நீ கேட்ட கேள்வி எனக்கு இப்போ உரைக்குதும்மா சாட்டையால அடிச்சால போல இருக்குமா  என்று கண்ணீர் விட

அத்தை  நீங்க இப்படி பேசுறது தான் என்னை ரொம்ப கஷ்டபடுத்துது நடந்தத பத்தி பேச வேண்டாம்.. இனி யாரவது அதை பத்தி பேசினா நான் ரொம்ப பொல்லாதவளா மாறிடுவேன் அப்புறம் இந்த வைஷ்ணவியோட இன்னொரு முகத்தை காட்டிடுவேன் என்று மிரட்டும் தொணியில் கூற

அவள் பேச்சில் சிரிப்பு வந்திட கண்களை துடைத்துக்கொண்டவர் சரிமா சரி... முடிஞ்சத பத்தி  இனி யாரும்  பேச மாட்டோம்  உங்க வாழ்க்கையில் நடந்த  கசப்பான நிகழ்ச்சி அதை கெட்ட கனவா நினைச்சி மறந்துட்டு இனி ஆரம்பிக்கிறத  புதுசா சந்தோஷமா ஆரம்பிக்கலாம்  என்ன சரியா என்று மாதுரி கேட்க

சரிங்க அத்த நான் ரெடிதான் என்று வைஷ்ணவி கூறி மகளின் கைகளை பிடித்துக்கொண்டாள்.

________________________________________

சென்னை

அம்மா உன் மருமக பேசினால மா  அவ ஊருக்கு போய் இரண்டு என்பதை இழுத்து இரண்டு  நாளாச்சி ஒரு போன் பண்ணி பேச கூட முடியாதா  மேடத்துக்கு என்று  இரண்டு நாள் பிரிவை கூட மாதக்கணக்கில் பிரிந்திருப்பதை போல் வருத்தம் கலந்த கோபமாக தாயிடம் கூறிக் கொண்டிருந்தான் வைபவ்

ஏன்டா நீ பேசலியா என் மருமககிட்ட என்று ஆச்சர்யமாய் தாரா வைபவிடம் கேட்க

மகாராணி நான் போன் பண்ணும்போது எல்லாம் பிசியாதான் இருப்பாங்க அப்படியே என் போனை எடுத்துட்டாலும் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிச்சிடாது அதான் நான் பண்றதே இல்ல நீ சொல்லு மா மேடம் பேசினாங்களா என்ன சொன்னாங்க எப்போ வர்றாங்களாம் என்றான் கிண்டலாய்

உனக்கு கொழுப்புதாண்டா என் மருமக வரட்டும் டா எல்லாத்தையும் குறைக்க சொல்றேன் என்று பதிலுக்கு வாரியவர் இன்னைக்கு தான்டா பேசினா வைஷு ஆப்ரேஷன் முடிஞ்சி icu ல இருக்காலாம் இன்னும் ஒரு நாள் அப்ஸர்வேஷன்ல வைக்கணுமாம்  என்றவர்  பாவம் டா அந்த பொண்ணு  அவ பெத்த குழந்தைக்காகவாச்சும் நல்லபடியா திரும்பி வரனும் என்றார் தாரா...

எனக்கு நம்பிக்கை இருக்கு வைஷ்ணவி வருவாங்கமா  ரொம்ப தைரியமான பொண்ணு  போனமுறை மும்பை போனப்ப அவங்கள மீட் பண்ணேன் she is everything for kowshick அவங்க கௌஷிக்காகவாது பிழைச்சி வருவாங்க  என்றவன் நான் இன்னைக்கு ஈவினிங் கிளம்பி மும்பை போறேன் இப்போதான் டிக்கட் புக் பண்ணேன் ஈவினிங் 5.30 பிளைட்  ஏர்போர்ட்டுக்கு அப்படியே போய்டுறேன் நிகில் டிராப் பண்ணிடுவான் நான் நாளைக்குதான் வருவேன் நைட் துணைக்கு பக்கத்துவீட்டு லட்சுமி அக்காவ வைச்சிக்குங்க என்று கூறிக்கொண்டு வந்த வைபவ் இருந்துடுவிங்களா என்று அக்கறையாய் கேட்க அவனை  முறைத்த தாரா டேய் என்னை என்ன கூன்போட்ட கிழவியாட்டம் தள்ளாடிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சியா நான் யங்கர் டா  போய் வைஷ்ணவிய பாத்துட்டு அப்படியே மருமககிட்டயும் சமாதனமா பேசிட்டு வா என்ன புரியுதா என்று கூறியவர்  லட்சுமிய என்கூட தங்க வைச்சிக்கிறேன் என்ன பத்தி கவலை படமா இரு என்றார் தாரா....

ஓகே யங் லேடி ..... என் செல்ல அம்மா என்று கொஞ்சியவன் வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

ஏய் நீயும் வாடி

இல்ல இல்ல நான் வரலை இங்கிருந்தே பாத்துக்கறேன்

அவ எதுவும் சொல்ல மாட்டா வாடி

இல்லடி அவ சொல்றத்துக்கு இல்லை என்னை பார்த்தா டென்ஷன் தான் ஏறும் இப்போதான் தெம்பா உட்கார்ந்து இருக்கா அதுக்குள்ள அவளுக்கு பிபி ஏத்த வேண்டாம்

நீ என்னைக்குதான் சொல்ற பேச்சை கேப்பியோ இதுக்கு என் பையன் ஆதியே ரொம்ப மேல் நீ ரொம்ப படுத்தரடி

பேசினது போதும் உள்ள போய் பாத்துட்டு வந்து சொல்லு என்று வைஷாலி  ஸ்வேதாவை உள்ளே போய்வர சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.

உன்னையெல்லாம் திருத்தவே முடியாது என்னவோ போ என்று சலித்துக்கொண்டு வைஷ்ணவியின் அறைக்குள் நுழைந்தாள் ஸ்வேதா.

அவளை பார்த்ததும்  படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தவள் ம்... என்று தொண்டையை சரிசெய்து வா ஸ்வே வா என்று அழைக்க

அவளை பார்த்து சிரித்த  ஸ்வே படுடி படு ஏன் ஏந்திரிக்கிற   என்று அவளிடம் சொல்லிக்கொண்டே வாசலில் இருந்த வைஷாலியை   திரும்பி திரும்பி பார்க்க

எவ்வளவு நேரம் படுத்துகிட்டே இருக்கரது எனக்கு பிடிக்கவே இல்ல ஸ்வே எனக்கு வீட்டுக்கு போகனும் போல இருக்கு என்று தோழியிடம் கூறியவள் வாசலின் ஓரத்தில் நிற்க்கின்ற வைஷாலியை பார்த்துவிட்டவள்  அவளாகவே வரட்டும் என்று ஸ்வேதாவிடம் பேசியபடி இருந்தாள்.

பேச்சு முழுவதும் வைஷ்ணவியிடம் இருந்தாலும் அடிக்கடி வாசலை திரும்பி பார்த்தபடியே இருந்த ஸ்வேதா என்ன பீவர் வந்து உன்னை அட்மிட் பண்ணி டார்ச்சர் பண்றாப்போல இருக்கு உனக்கு செய்து இருக்கரது ஆப்ரேஷன் அதுவும் தலைல… ஒரு வாரத்துல அனுப்புராங்களேன்னு நானே கவலை படுறேன் உடனே வீட்டுக்கு போகனுமா நான் வேனா டாக்டர்கிட்ட பேசி ஒரு 20 25 நாள் உன்னை இங்கேயே அட்மிட் பண்ணசொல்றேன் டாக்டர் கூட அண்ணாவோட பிரண்ட் தான்  நான்  சொன்னா சரின்னு சொல்லிடுவாரு என்று அவளிடம் வேண்டுமேன்றே கூற

என்னடி யார் இருக்கா வெளியே திரும்பி திரும்பி பார்த்துகிட்டே இருக்க

யார் இருக்கா யாரும் இல்லையே என்ன ஒரு 20 வது நாள் பெட் ரெஸ்ட் எடுத்துக்கிறியா என்று மறுபடியும் கேட்க

ஹோ.....  ஏன்டி இருபது நாள் பர்மனெண்ட்டா இங்கயே செட்டில் பண்ணிடு மூஞ்சியபாரு ஆஸ்பிட்டல் மருந்து ஊசி இது எல்லாம் பாத்தாலே பயமா இருக்குடி நானா இவ்வளவு பெரிய ஆப்ரேஷன் செய்துகிட்டேன்னு  நெனைக்கும்போது நெஞ்சு பதறுது இதுல 20 25 நாளா என்று அவளை திட்ட

மறுபடியும் ஸ்வேதாவின் கண்கள் தன்னிச்சையாக வெளியே சென்று மீள  அதை பார்த்த வைஷ்ணவி உன் பிரண்ட என் முன்னாடி கொஞ்சம் வந்து நிக்க சொல்றியா நான் ஒன்னும் பேயோ பூதமோ இல்லை அவங்கள கடிச்சி முழுங்க

இல்லடி அது வந்து அவ

வந்தவங்க ஏன் வாசல் வரையும் வந்து நிற்க்கனும்  உள்ள வரவேண்டியதுதானே. முதல்ல உன் பிரண்ட உள்ள வரசொல்லு என்றதும் ஸ்வேதாவின் அழைப்பில் வைஷாலி அறைக்குள் வந்தாள்.

அவ உனக்கும் தான்டி பிரண்ட்

அப்படியா எனக்கு தெரியாதே

ஏன்டி கோவமாவே இருக்க

இங்க பாரு  ஸ்வே என் பிரண்ட் நா நான் என்ன சொல்றேன் எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சிப்பாங்க நான் செய்றதுல நல்லது இருக்குன்னு தெரிஞ்சிக்குவாங்க ஆனா இவங்க நீ சொல்றத சொல்லு நான் செய்றத தான்  செய்வேன்  எனக்கு எதுவும் புரியவும் வேனா தெரியவும் வேனான்னு சிங்கபூர் கிளம்பி போய்கிட்டே இருப்பாங்க ஆனா என்ன பாத்துட்டு  கோவபடமா பேச சொல்ற என்ற ஸ்வேவிடம் பேசி முகத்தை திருப்பி கொள்ள

அமைதியாக நின்ற வைஷாலி ஸ்வேதாவை பார்க்க அவள் எதுவும் செய்யமுடியாமல் மாறி மாறி இருவரையும் பார்த்தாள்.

இங்க பாரு ஸ்வே உன்னை ஊர்ல இருந்து யார் கூப்பிட்டது

அமைதியாக ஸ்வேதா இருக்க யாரு கூப்பிட்டது ஸ்வே என்று உரக்க பேச

ஷாலு கூப்பிட்டா 

என்னன்ன சொன்னா

நான்னும் நீயும் வைஷு கிட்ட பேசனும் எனக்கு சிங்கபூர்ல வேலை கிடைச்சிருக்கு அங்க தனியா போக வைஷு சம்மதிக்க  மாட்ட நீ வந்தா அதை பேசிட்டு அப்படியே கௌஷிக் அண்ணா விஷயமும் பேசலான்னு சொன்ன

ம் சரி வந்தவ என் விஷயத்தை மட்டும் தான் பேசினா ஆனா அவ விஷயத்தை பத்தி ஒரு மூச்சும் விடல ஏன்டி இப்படி இருக்க என்னை மட்டும் உங்க நொண்ண கூட சேரு சேரு சொல்றிங்க இவளுக்காக ஒருத்தர் அங்க இத்தனை வருஷமா கல்யாணமே வேணாண்ணு இருக்காரே அத பத்தி மூச்சி விட்டாலா

வைஷு உனக்கு என்று இருவரும் கோரசாய் கேட்க

ஏன் உனக்குள்ளயே புதச்சிக்கலாமுன்னு பாத்தியா உனக்கு ஒரு லைப் இருக்குன்னே நியாபகத்துல இல்லையா சொல்லு  இவ்வளவு நாள் உனக்காக வைட் பண்றாரு ரொம்ப திமிர் தாண்டி உனக்கு அவரால வேற கவ்யாணம் பண்ணிக்க முடியாம  இல்ல நீதான் இந்த உலகத்து இருக்கருதுல கடைசி பொண்ணா சொல்லுடி அவர் உன் உருவத்த பாக்கல அழக பாக்கல மனச பாத்தாருடி  நீ வேனான்னு ஒதுக்கரது  அவரோட மனச அதை புரிஞ்சிக்கோ  என்று கூற

பீளிஸ் வைஷு பீளிஸ்  நீயாவது என்னை புரிஞ்சிக்கோ எனக்கும் வைபவ்வ பிடிக்கும் என்று கூறும்போது கௌஷிக் மற்றும் வைபவ் அறையினுள் நுழைய கதவை திறக்க முயல அறைக்குள் இருந்து பேசும் சத்தம் கேட்டு அப்படியே நின்றனர்.

ஸ்வேதாவை தவிர அனைவரும் அதிர்ச்சியாய்  இருக்க வைஷாலியை பார்த்தாள் வைஷ்ணவி ஆமா வைஷு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் இன்ஃபேக்ட் இப்பவரையும் என் மனசுக்குள்ள நான் அவர்கூட வாழ்ந்துகிட்டுதான் இருக்கேன்

அப்புறேன் ஏன்டி இப்படி வைபவ அலைகழிக்கிற

என் நிலைமை டி  என் மனச அவர்கிட்ட சொல்லவிடாம தடுக்குது  என்னோட கெட்ட நேரமோ என்னமோ எனக்கு பிரண்டா இருந்த ஒரே காரணத்தால உன் வாழ்க்கையில எவ்வளவு பெரிய பிரச்சனை நீ தனியா இருக்கும்போது நான் காதல் கத்திரிக்காய்ன்னு போகமுடியல டி அதுவுமில்லாம என்னதான் தாரா அம்மாவுக்கு எனக்கு நடந்தது ஒரு விஷயமே இல்லனாலும் எந்த ஒரு ஆணுக்கும் தனக்கு வரும் மனைவிய பத்தி ஆயிரம் கனவு இருக்கும்  தன் மனைவியா வரப்போர பொண்ண  ஒருத்தன்  தப்பான கண்ணோட்டத்துல  பாத்தா கூட கோவம் வரும் அது வரனும் அப்பதான் அவன்  ஆம்பள  ஆனா என்னையே ஒருத்தன் அந்த நிலைமைக்கு தள்ளி அவருக்கு தகுதி இல்லாதவளா ஆக்கிட்டானே எப்பவாவது ஒரு நாள் அவர் மனசுல ஒரு சின்ன குண்டுமணி அளவு நினைப்பு விழுந்துட்டாகூட என் உயிர் என்னவிட்டு போய்டும் டீ இதுக்குதான் இந்த  காரணத்துகாகுத்தான் அவரை விட்டு ஓடிக்கிட்டே இருந்தேன்.... காதலும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டான்னு ஆனா என்னை எல்லாரும் இப்படி கார்னர் பண்ணா நான் என்ன செய்ய அவர பாக்க பாக்க என் மனசுல இருக்கரத என்னை அறியாமலே எங்க அவர்கிட்ட சொல்லிடுவேனோன்னு ஒரு பயம் வந்துடுச்சி அதான் அவரவிட்டு ரொம்ப தூரம் போறேன் என்று அழுக

இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.... வெளியே நின்றிருந்தவனுக்கோ தரையில் கால் பதியவில்லை ஆகாயத்தில் மிதந்துக்கொண்டிருந்தவனை பூலோகத்திற்க்கு வரவழைத்தது வைஷுவின் குரல்.

ஏய் அறிவுகெட்ட சோடாபுட்டி 

நான் ஒன்னும் சோடாபுட்டி இல்ல

காணடாக்ட் லென்ஸ் யூஸ்பண்ணா நீ சோடாபுட்டி இல்லியா சரி அந்த கதைய அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல உன் மேட்டர முடிச்சிடுறேன்  இந்த உலகத்துல நீ எந்த மூலைக்கு ஓடி ஒளிஞ்சாலும் வைபவ் உன்னை விட்டுதர மாட்டாரு இத என்னால ஆணித்தரமா சொல்லமுடியும்.....  இங்க இருக்க சிங்கபூருக்குதானே  அது ஒன்னும் மனுஷன் போக முடியாத தூரம் இல்லையே அங்க அவரால வரமுடியாதா ... அப்புறம் என் விஷயம் ஆயிரம் முறை சொல்றேன் என் லைப்ல நடந்ததுக்கு நீ காரணம் இல்ல புரியுதா என்றாள் வைஷ்ணவி

நீ அவர் உங்கிட்ட லவ் பிரபோசல் பண்ண அன்னைக்கு நீ சொல்லாம கொள்ளாம ஓடினதுல இருந்து பாத்துரும்ல போய் அழுதது எல்லாம் எனக்கும் தெரியும்..... மறுநாள் தாரா ஆண்டி கூட்டிட்டு போய் பாத்துகிட்டது  எல்லாம் தெரியும் உன்னை தப்பா நினைப்பாங்க தப்பா நினைப்பாங்கன்னு நீதான் அதையே நினைச்சிட்டு இருக்க அதுல இருந்து வெளியே வா ஒரு வட்டத்துல போய் உட்காந்துகிட்டு வரமாட்டேன்னு அடம்பிடிச்சி எல்லோரையும் ரொம்ப நோக அடிக்கிர இது நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன் என்று  அவளுக்கு புரிய வைக்க

ஸ்வேதா வைஷ்ணவியை பார்க்க என் முகத்துல ஏதாவது எழுதி இருக்கா அவளுக்கு புரியவைடி என் எனர்ஜியே போகுது இவகிட்ட கத்தி  கத்திஎன்று அலுத்துக்கொள்வதுபோல் முகத்தை திருப்பி  சரி எவ்வளவு தூரம்தான் போறான்னு பாத்தா ஊரவிட்ட ஓட ரெடியாகிட்டு மும்பை வந்து நீ அண்ணாகூட வாழு ஆட்டிகுட்டிகூட வாழுன்னு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க.... 

இங்க பாரு ஷாலு அவ சொல்றது எல்லாமே கரெக்ட்டா தானே இருக்கு சும்மா சும்மா நிலைமை  தகுதி தாராதரம் அது இதுன்னு ஏன் இப்படி பேசிட்டு இருக்க இப்படி பேசுரதால அவரோட இமேஜ் தான் டவுன் ஆகுது அது தெரியுமா உனக்கு  அவர் அப்படித்தானோன்ற ஒரு மைன்ட் செட் வந்துடுது என்று ஸ்வேதா கூற

ஷாலு சொல்றத சொல்லிட்டேன் இனி உன் இஷ்டம் நாங்க யாரும் கட்டாயபடுத்த விரும்பல சரி எனக்கு ரொம்ப பசிக்குது டி கௌஷிக்  எங்க போனாரு என்று சொல்லிக்கொண்டிருக்க.....

மனைவியின் பசி என்ற வார்ததையை கேட்டதும் திருகியை திறந்துகொண்டு உள்ளே வந்தான் கூடவே  வைபவும் வர  மூவருக்கும் அதிர்வென்றால் வைஷாலிக்கோ பேரதிர்வு....

வாங்க வைபவ் வாங்க என்று வைஷு அழைக்க

சிநேகமாய் சிரித்தவன் எப்படி இருக்கிங்க

இப்போ பரவயில்லை வீட்ல அம்மா எப்படி இருக்காங்க என்று இவளும் பதிலுக்கு விசாரிக்க சம்பரதாயபாக பேசியபின்பு என்னங்க வைபவ்வ வீட்டுக்கு  கூட்டிட்டு போங்க பிரெஷ் ஆகட்டும் ரூம் அரெஞ்ச் பண்ண சொல்லுங்க என்று வைஷ்ணவி கூற

அய்யோ வேண்டாம் வேண்டாம் நான் நைட் பிளைட்லயே ஊருக்கு கிளம்புறேன்..... முக்கியமான வேலை இருக்கு அம்மா பொண்ணு பாக்க நாளைக்கு தேனீ போறாங்க  சோ கூட போகனும்

மூவரும் முகம் சோர்ந்து போக இதுவரையிலும் இதை பற்றி வைபவ் கௌஷிக்கிடம் கூறாததாலும் இந்த காதல் கதை இப்போதுதான் அவனுக்கு தெரிய வந்ததாலும் குழம்பிய முகத்துடன் வைபவை பார்க்க

ஹோ..... அப்படியா ம்... சரி உங்களுக்கு இதுல சம்மதமா வைபவ்

வேற என்னங்க பண்றது எனக்காக இல்லனாலும் எங்க அம்மாவுக்காகவாச்சும் கல்யாணம் பண்ணிதானே ஆகனும் அவங்களையும் இந்த 3 வருஷமா ஏமாத்திட்டு இதுவரையிலும் வந்துட்டேன் ஒருமுடிவும் தெரியல காதல் நம்ம கட்டாயத்தால வரக்கூடாது அது மனசுல இருந்து வரனும் என்னை இந்த அளவுக்கு மாத்தினவங்கள என்னால இம்பிரஸ் பண்ண முடியல இதுக்கு அவங்கள குறை சொல்ல முடியாது  என் மேல நம்பிக்கை வைக்கிற அளவுக்கு நா அவங்களுக்கு பெருசா எதுவும் செய்யல என்பதுதானே உண்மை  என்று வருத்தமாய் பேசினாலும் அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவளுக்கான பதிலை மறைத்து வைத்திருந்தான்.

வைபவ் நீங்க கொஞ்சம் பொருமையா என்று வைஷ்ணவி பேச இதோ அதோ தளும்பிய கண்ணீர்  கண்களில்  முட்டியபடி பார்வையை மறைத்து நின்றது.

இதுக்கு மேல பொருமையா இருந்தாலும் நமக்கு கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு  ஏன் அதையே நினைச்சி நினைச்சி ஏங்கி தவிக்கனும் என்று கூறியவன் மொபைலை எடுத்து  கேலரியில் இருந்த படத்தை காட்டி இந்த பொண்ணதான் பேசி முடிக்க போறாங்களாம் நீங்களாம் தான் என் கூட இருந்து இந்த கல்யாணத்தை முடிச்சி வைக்கனும் என்று கூறிமுதலில் கௌஷிக்கிடம் காட்டினான். குழப்பமான மனநிலையிலுடனே பார்வையை செலுத்தினான் கௌஷிக்.

அடுத்தது ஸ்வேதா வைஷ்ணவி என்று வந்தவன் கடைசியாக வைஷாலியிடம் மொபைலை கொடுத்து இவங்க தான் என் வருங்கால மனைவி பாருங்க உங்க அளவுக்கு இல்லானாலும் ஒரளவுக்கு இருப்பாங்க நீங்கதான் கூட இருந்து எல்லாம் செய்யனும் என்று கூறினான். வேண்டா வெறுப்பாய் மொபைலை வாங்கியவளின்  கரங்களில் இருந்ததை 
பார்க்கமுடியாமல்  தளும்பிய  கண்ணீர் அவள் இமைகளைவிட்டு இரு சொட்டு உருண்டு கண்ணத்தில் இருந்து இறங்கியது. இப்போது தெளிவாய் புகைபடம் தெரிய அழுகையினுடேயே இதழ்களில் புன்னகை மலர கண்களை    துடைத்து விட்டுக்கொண்டவள் அந்த மொபைலில் அவன் காட்டிய தன் புகைப்படத்தையே பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டு வைபவின் கைகளை பற்றிக்கொண்டாள்.  என்ன ஷாலு போட்டோ பாத்தியா பொண்ணு எப்படி கடைசி வரையிலும் கூட இருந்து நீதான் எல்லா செய்யனும் என்று மறுபடியும் கூற

அவனின் கூற்றில் மகிழ்ச்சியாய் இருந்தவள் என்னை அழ வைச்சிட்டிங்கல்ல உங்கள…. போட்டோ கமிக்கிறேன் பொண்ணு பிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு ஒரு நிமிஷம் என் உயிரே போறமாதிரி இருந்துச்சி ஏன் இப்படி பண்ணிங்க என்று கோபம் கொள்ள

இங்க பாருங்க மேடம் ஒரு நாள் உன்னை அழவச்சதுக்கே கோவமா? ஒவ்வொரு நாளும் உன் பதில் தெரியாம  இருந்தவருக்கு எப்படி அவஸ்தயா இருந்திருக்கும் சரி சரி கோவத்தையெல்லாம் மூட்டைகட்டி வைச்சிட்டு  கல்யாணசாப்பாடு போடுற வழிய பாருங்க என்று   அவர்களிடம் கிண்டலாய் கூறிய வைஷ்ணவி தொடர்ந்து

ஹலோ ஹலோ லவ் பேர்ட்ஸ் கொஞ்சம் எங்களையும் சுத்தி பாருங்க நாங்கெல்லாம் இருக்கோம்.... உங்க லவ்வ சொல்ல  இது நல்ல இடம் இல்ல சோ வெளியே கூட்டிட்டு போங்க வைபவ் என்று கௌஷிக்  கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro