காதல் 20

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

❤️ ஒரு மணி நேரத்தில் சாதனாவை பார்க்க ஜீவன் வீட்டிலிருந்து வரவிருக்க....மாதவியும் அனுவும் அவளை கல்யாணத்தையே வெறுக்கும் அளவிற்கு தொந்தரவுப்படுத்திக் கொண்டுருந்தனர்...

ஏய் இந்த சாரி கேவலமா இருக்கு,எப்பவும் நம்பதா பையனை ரிஜக்ட் பண்ணுவோ!இந்த சாரில உன்னை பார்த்தானா அவனே உன்னை ரிஜக்ட் பண்ணிடுவா...இதை சொல்லியபடி சாதனாவின் வார்ட்ரோப்பில் இருந்து அடுத்த சாரியை எடுத்தால் மாதவி...

என்ன மொறைக்கிற!!பேக்ட சொன்னா இப்படிதா...மாதவி சாதனாவை பார்த்து கூற அவளை காப்பாற்றும் வண்ணம் அனு, ஆமாடி அவ சொல்றது....என துவங்கும் முன்பே மாதவியும் சாதனாவும் அவளை முறைக்க...

ஏய் என்னடி சும்மா ஓவராதா மொறைக்கிறங்க...நான் அப்படி பெருசா என்ன பண்ணிட்ட??என அனு கேட்க..

ஏதாவது செஞ்சுருந்த கூட மன்னிச்சிருப்போமே😬நீ செஞ்ச காரியத்துக்கு உன்ன👿சாதனா பற்களை கடித்தபடி கூற

கொஞ்சம் நர்வெஸா இருந்துச்சு அதான் என்ற அனுவை இருவரும் எரிக்கும் பார்வையில் பார்த்தனர்....

சில மணி நேரத்திற்கு முன்😋

ஹலோ மிஸ்டர்!!டர்ன் பண்ணும் போது ஹார்ன் கூட அடிக்க மாட்டீங்களா??

அவன் ஏதும் பேசாமல் ஹெல்மெட்டை கழட்டி...நீங்க கூட ஹார்ன் அடிச்சுட்டு டர்ன் பண்ணிருக்கலாமே மிஸ் அனுஷியா...என்று அவன் குறும்பாக சொல்ல

ஏதும் சொல்லாமல் அவனையே அதிர்ச்சியாக பார்த்தபடி இருந்தால் அனு!!😉

என்ன டார்லிங் டே டரீமிங்கா??அவன் கண் சிமிட்டியபடி கேட்க....

தன்னிலை அடைந்தவளாய் அவன் பெயரை ஒவ்வொறு வார்த்தையாக உச்சரித்தாள்...வ..ரு..ண்??

எஸ் பேபி ஐம் யுவர் வருண்...என்றபடி அழகாக சிரித்தவனை பார்த்து தடுமாறி போனாள் அனு

அவள் ஏதும் பேசாமல் இருக்க,அவனே தொடர்ந்தான்

இட் வாஸ் எ ப்ளஸன்ட் கோ-இன்ஸிடன்ஸ்னா??என்றவனிற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தால்....

அந்த நேரம் சரியாக சாதனா அவளை கைப்பேசியில் அழைக்க மானசீகமாய் கடவுளுக்கு ஆயிரம் நன்றி கூறியவள்...

வருண் ஒரு எமர்ஜென்ஸி என் ப்ரண்டுக்கு ஃபீவர்..சோ இப்போ உடனே ஹாஸ்பிட்டல் போகனும் சோ..?!என்றாள்

அவளின் முழுமை பெறாத வாக்கியத்தை உணர்ந்தவனாய்...ஓ தட்ஸ் மை பேட் லக்😕உன் கூட பக்கத்துல காபி ஷாப் போலானு நினைச்ச என்றான்...

மனம் அவனுடன் போ என்று சொல்ல... சாரி வருண், அதான் டே அப்டர் டுமாரோ மீட் பண்ண போறோம்ல என்றவளை பார்த்து சிறு புன்னகையுடன் விடைப் பெற்றுக் கொண்டான் வருண்....

            ❤️❤️❤️❤️

இப்போ எங்களுக்கு என்ன உடம்பு முடியல😬👿??-மாதவி

அவனை எவ்வளோ கஷ்டபட்டு ட்ரக் பண்ணோனு உனக்கே தெரியும்ல அனு??இப்போ எதுக்கு இவ்வளோ தயக்கம்??-சாதனா

எனக்கு தெரியலடி,நான் யாருனு தெரிஞ்சா வெறுத்துடவனோனு பயமா இருக்கு...கண்கள் கலங்க கூறிய அனுவின் தோள்களில் கைப் போட்டு அணைத்தபடி அவளை சமாதானம் படுத்திய இருவரும் ஞாயிறு அவனை காண செல்லும் போது தாங்களும் உடன் வருவதாக வாக்களித்தனர்.....

💕💕💕💕💕💕

தன் குடும்பத்துடன் ஜீவன் சாதனாவின் வீட்டிற்குள் நுழைய அவனை மரியாதையுடன் வரவேற்று ஜூஸ் மற்றும் ஸ்நாக்ஸை கொடுத்து உபசரித்தனர்...

சிறிது நேரத்தில் சாதனாவை வெளியே அழைக்க, மாதவியும் அனுவும் பிஸியாக சாப்பிட்டு கொண்டிருந்ததால் சாதனாவை மட்டும் அவள் தாயுடன் அனுப்பி வைத்தனர்

அங்கே ஜீவன் தன் தாய் மற்றும் அக்காவின் மத்தியில் அமர்ந்தபடி சாதனாவை பார்த்து மெல்லிய புன்னகை செய்ய...

சாதனாவிற்கு முதல் முறையாய்...ஹீ இஸ் நாட் பேட் (அழகா இருக்கான்றத ஒத்துக்க மனசு இல்ல😂😋)என்று தோன்றியது...

பட் கேரக்டர்??என்று யோசித்தவளுக்கு தன் தோழிகளின் உதவி தேவைப்பட்டது...

ஜீவனின் அம்மா சாதனாவிடம் பொதுபடையாக சில கேள்வுகள் கேட்க,அவள் மென்மையாக பதில் அளித்தாள்....

அப்பொழுது தன் பெண்ணின் சமையல் கலையை பற்றி தெரியப்படுத்த,சாதனாவிற்கு சமையல்ல ஆர்வம் ரொம்ப அதிகம்...அவ சமைச்சா ஒரு நாள் முழுக்க சாப்பிட்டுட்டே இருக்கலாம் எனக் கூற

அதை உள்ளறையில் இருந்து கேட்ட மாதவி தான் குடித்துக் கொண்டிருந்த ஜூஸை கீழே துப்பினாள்...

அதை பார்த்த அனு அதே முக பாவனையுடன் "ஆண்ட்டி ஏன்டி இப்படி பச்சையா பொய் பேசுறாங்க??"😨😂

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro